Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான்:

கொள்கை இல்லாத அரசியல் என்பது பாவம்’ எனச் சொன்னவர் தேசப்பிதா காந்தி. ‘உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்’ எனச் சொல்லி புலால் உண்ணுவதையே மகாத்மா மறுத்தார். அவர் பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் நீங்கள் அவரைக் கொன்றவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் காலக்கொடுவினையை எங்கே போய்ச் சொல்வது பெருந்தகையே?

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை இறைவனுக்கு நிகராக நினைத்துப் போற்றுபவர் நீங்கள். ஆனால், பெருந்தலைவரை உயிரோடு எரித்துக் கொல்லக் கிளம்பியவர்களோடு கூட்டணி அமைக்க உங்களின் இதயம் எப்படி ஐயா துணிந்தது? ‘உயிர் நிகர் கொள்கை’ என்கிற சத்தியத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் எப்படி ஐயா இவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறினீர்கள்?

தமிழருவி மணியனைப்பற்றி சீமான்

சுண்டல்: அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் கூட்டணி வைத்து போய் சேர்ந்திருக்கும் இடமும் இதே மாதிரி தான் தொகுதி தொகுதியாக பிரச்சாரம் செய்து கொண்டு திரியும் இடமும் இதே மாதிரி தான் மற்றவர்களை விமர்சிக்க முதல் நீங்கள் போய் சேர்ந்திருக்கும் இடத்தை கொஞ்சம் திரும்பி பாருங்கள்.....

நாளை நீங்கள் போய் சேர்ந்திருக்கும் இடம் இதே பா ஜ க அமைச்சரவையில் இடம்பெற்றால் அடுத்த தேர்தலில் தி மு க விற்கும் பிரச்சாரம் செய்வீர்களா நீங்கள் மொதல்ல உங்க முதுக பாத்திட்டு அடுத்தவன் முதுகுல இருக்கிற ஊத்தைய சுட்டிக்காட்டுங்க.....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பாஜக கூட்டணிக்குப் போனால் எதிர்ப்போம் என்று இப்பவே பிரசசாரத்தில் சொல்லிவிட்டார்கள். அதமட்டுமில்லாமல், இந்த ஒரு தேர்தலில் மட்டும்தான் அதிமுகவுக்கு வாக்கு கேட்கப்போகிறார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் தனியாகப் போட்டியில் இறங்கப்போவதால் அதிமுகவுக்கு வாக்கு கேட்கப் போவது கிடையாது என இப்பவே சொல்லிவிட்டார்கள்.

இந்தத் தேர்தலில் அவர்களது நோக்கம் மிக எளிதானது. முன்பு எப்படியாகினும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தில் அதிமுக சட்டசபையில் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சில நல்ல விடயங்களைச் செய்து கொடுத்துள்ளது. அவையாவன: :D

1) தனித்தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்கிற தீர்மானம்.

2) ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்த தீர்மானம்.

3) செங்கொடியின் தியாகத்துக்கு மதிப்பளித்தமை.

4) மூவர் தூக்கை மாற்றவும், எழுவர் விடுதலையை முன்னிட்டும் தனது சட்டசபை அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட தீர்மானங்கள்.. நடவடிக்கைகள்.

இவற்றில் பலவற்றை போன தேர்தல் பிரச்சாரத்தில் கோரிக்கைகளாக வைத்தது நாம் தமிழர் இயக்கம். அவற்றை நிறைவேற்றியிருப்பது அதிமுக ஆட்சி.

கேட்டதை நிறைவேற்றிக் கொடுத்தால் அடுத்தமுறை ஆதரிக்க வேண்டும். அதுதான் ஒரு நல்லபிள்ளைக்கு அழகு. :D நல்லது செய்தால் பயன் உண்டு என்கிற செய்தி சொல்லப்பட வேண்டும்.

காமராஜர் எவ்வளவு நேர்மையான ஒரு அரசியல்வாதி..! என்ன ஒரு சிறப்பான நிர்வாகி..! அவரது கட்சியைத் தோற்கடித்த மக்கள் அவரையும் சேர்த்தே தோற்கடித்தார்கள். ஒரு நேர்மையான அரசியல்வாதியை தண்டித்து தங்கள் தலையிலேயே மண்ணள்ளிப் போட்டார்கள். விளைவு இன்றுள்ள கேடுகெட்ட அரசியல்வாதிகளின் பெருக்கம். ஏனென்றால், "நேர்மையாக நடந்தால் சொந்த தொகுதிகூட மிஞ்சாது..!" இது மக்கள் அன்று சொன்ன சேதி..! அதன் பலாபலனே கலைஞர் வகை அரசியல்வாதிகள்..!

ஆகவே இந்தத் தேர்தலில் நல்லது செய்த அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பது நல்ல கொள்கை முடிவு. தமிழருக்கு நல்லது செய்தால் நிச்சயம் வாக்கு உண்டு என்கிற செய்தி சொல்லப்படவேண்டும்.

நாளை அதிமுக தடம் மாறினால் எதிர்ப்பு நிலை எடுக்க வேண்டும். 2016 தேர்தலில் தடம் மாறும் கட்சிகளுக்குப் படிப்பினை இருக்க வேண்டும். இதுதான் தமிழகத்தின் வருங்கால அரசியலுக்கு நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னை ஏமாற்ற மாட்டாய்

என்று நான் நினைத்து ஏமாந்து

போனேன் .......

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னை ஏமாற்றுவாய் என்ற நம்பிக்கையுடன் உன்னைக் காதலித்தேனே ,

 

அடிப்பாவி ,

 

மணைவியாக வந்து ஏமாற்றி விட்டாயே...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னை ஏமாற்றுவாய் என்ற நம்பிக்கையுடன் உன்னைக் காதலித்தேனே ,

 

அடிப்பாவி ,

 

மணைவியாக வந்து ஏமாற்றி விட்டாயே...! :lol::)

 

"நீங்கள் என்னை ஏமாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களை காதலித்தேனே..

அடப்பாவி மனுசா ,

கணவனாய் வந்து கழுத்தறுத்துவிட்டீர்களே..!"

 

 

-இது எப்படி இருக்கு? console.gif:lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலில் தோற்றவனுக்கு

...

...

...

கல்லறை ..

காதலில் ஜெயித்தவனுக்கு

..

...

...

...

...

...

...

...

...

...

...

சமையல் அறை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமரை அவர்களின் தனித்துவம் இந்த பாடலில் இருக்கும். இதில் சில வரிகள் எனை கட்டிப்போடும்... அவை

"என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்"

பாசத்தின் வெளிப்பாடு...

முடிந்தால் நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்களன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான்: விஜயகாந்த் ஓர் அரசியல் வியாபாரி

சுண்டல்: அவரு ஜஸ்ட் வியாபாரி பட் அ தி மு கவிற்கு அடிமையாகி விட்ட நீங்க ஒரு அரசியல் வியாதி.......

காதலில் தோற்றவனுக்கு

...

...

...

...

...

...

...

...

...

....

 

பல பெண்கள்

 

காதலில் ஜெயித்தவனுக்கு

..

...

...

...

...

...

...

...

...

...

...

 

ஒரு பெண்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் எப்பொழுதும் இல்லாதவகையில் ஈழத்தமிழர்களும் தமிழ் நாடு தமிழர்களும் இப்பொழுது எல்லா விடையங்களை பற்றி பேசுவதற்கும் , பழகுவதற்கும் சமூகத்தளங்கள் ஊடாக வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன...... இந்திய தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லாவிட்டாலும் கூட நாங்கள் வாக்குப்போடபோவதில்லை என்றாலும் கூட எங்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருக்க கூடிய தமிழக உறவுகள் தங்கள் தொகுதிப்பிரச்சனை தங்கள் மாநிலப்பிரச்சனைகளுடன் இப்பொழுது ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் பார்கத்தொடங்கி விட்டார்கள் அந்த வகையில் தங்கள் பிரச்சனைகளுடன் இந்த கட்சிக்கு வாக்குப்போட்டால் ஓரளவுக்கு ஈழத்தமிழர்களுக்கும் நன்மை ஆகலாம் என்ற சிந்தனைகள் இன்றைய படித்த தமிழ் நாட்டு இளைஞர்களிடம் ஏற்பட்டு இருகின்றது....... அந்த வகையில் அவர்களுக்கு நாங்கள் சொல்கின்ற கருத்துகளும் அவர்களுடைய முடிவுகளில் மாற்றங்கள் ஏற்ப்படுத்த உதவும் இந்திய தேர்தல் தானே எமக்கு என்ன என்றுவிட்டு இருக்காமல் இந்தியாவின் செல்வாக்கு தான் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் மத்தியில் செலுத்தப்பட போகின்றது என்பதனை மறந்துவிடாது உங்கள் முகநூல் வழியாக மற்றும் இணையம் வழியாக நீங்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் அவர்களையும் போய் சேரட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலிவர் கலிஞர் அடித்த மிகப்பெரிய காமடி......

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இலங்கைப் போருக்கும் என்ன சம்மந்தம் என்று யாராவது கேட்டால், அந்த இலங்கைப் போரிலே உயிர் நீத்த உத்தமர்கள், பிரபாகரன் போன்றவர்கள், அவர்களெல்லாம் பட்ட பாட்டிற்கு, அவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுக்கு நாம் சிந்திய கண்ணீர் பரிகாரம். நாம் விடுத்த பெருமூச்சு, அந்த மக்களுக்காக நாம் விட்ட மூச்சு என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழன் இலங்கையிலே இன்னுமும் வாடிக் கொண்டிருக்கின்றான். இலங்கையிலே இன்னமும் அவனை நசுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட தமிழனைக் காப்பாற்ற நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அவனைக் காப்பாற்ற நம்மைத் தவிர, தமிழகத்திலே வேறு யாரும் நாதியில்லை.

மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் அரசும் அங்கே உள்ள தமிழர்களைக் கைவிட்டுவிட்டது. நாம் அதற்காகவே நம்முடைய வெறுப்பைக் காட்ட, நம்முடைய கண்டனத்தைக் காட்ட காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து நம்மை விலக்கிக் கொண்டோம். நாம் இன்றைக்கு தனித்து தமிழகத்திலே ஒரு சில தோழமைக் கட்சிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு நாம் போட்டியிடுவதற்குக் காரணமே, காங்கிரஸ் பேரியக்கத்தை நம்மால் நம்ப முடியவில்லை. அவர்கள் தங்களுடைய காரியத்தைப் பார்த்துக் கொண்டார்களே தவிர, நம்முடைய தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த பரிசுத்தமான எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆகவேதான் நம்மை நாம் அந்தக் கட்டை அவிழ்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குரிய சில தோழமைக் கட்சிகளோடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கானாலும், நம்முடைய தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற எந்தக் கட்சியானாலும், அந்தக் கட்சிகளோடு இங்கேயுள்ள இஸ்லாமிய இயக்கங்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு, ஒரு சிறிய கூட்டணிதான்;

ஆனாலும், நம்முடைய எண்ணங்கள் சிறியவை அல்ல; பெரியவை. இந்த சிறியக் கூட்டணியின் மூலமாக நம்மை அகில உலகத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற அந்தப் பெருமையோடு, அந்த நினைப்போடு வாழ்ந்தால், அந்த வாழ்க்கைதான் வீர வாழ்க்கை. அந்த வீர வாழ்க்கையை நாம் என்றைக்கும் மறக்கமாட்டோம்.

அந்த வாழ்க்கையைத் தொடருவதற்காகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நம்முடைய இந்தியத் திருநாட்டிலே நடைபெறுகின்ற இந்தத் தேர்தலைக் கூட நாம் அணுகுகிறோம். நாம் பெரும் பதவிகளிலே அமர வேண்டும் என்பதற்காக அல்ல. நம்முடைய எண்ணங்களை வலுப்படுத்த, நம்முடைய குறிக்கோளை வென்றெடுக்க நாம் ஈடுபட்டிருக்கின்ற இந்தக் காரியத்தில் நிச்சயமாக இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் வெற்றி அடைவோம். அந்த வெற்றியின் குறிக்கோள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையிலே ஏதோ சிறு சிறு லாபங்களுக்காக அல்ல, சிறு சிறு பயன்களுக்காக அல்ல. பெரும் பயன். இலங்கையிலே தமிழனுடைய வாழ்க்கை உத்தரவாதம் பெற்று விட்டது என்ற அளவிற்கு இலங்கைத் தமிழர்களை வாழ வைக்கின்ற அந்த நிலையும், அதற்கு இடையூறாக வருகின்ற எந்தச் சக்தியானாலும் அதை முறியடிக்கின்ற நிலையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. நாம் அதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

22-1398142832-10154792-441316586014126-7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DD அவர்களை லண்டனில் அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு குருவிகளார் சந்திக்க பறந்து சென்றதாகவும் ஆனால் காவலாளிகள் அவரை உள்ளே விட மறுத்ததனால் அவர் விடுதிக்கு முன்னாடியே உண்ணா விரதம் இருப்பதாகவும் பறந்து வந்த பட்சி ஓன்று காதில் வந்து சொல்லி சென்றது..... லண்டன் வாழ் உறவுகள் இந்தக்காட்சியை கண்டால் கல்லால் எடுத்து எறியவும் .....

ஒரு இந்திய ஜோடி படுக்கையில் அமைதியாக இருக்கிறது.

 

 

மனைவி நினைக்கிறா..

 

அவர் ஏன் என்னிடம் பேசவில்லை?..

 

அவர் வேறு ஒரு  பெண்ணை நினைக்கிறாரோ?...

 

அவர் வேறு யாரையும் பார்த்து விட்டாறோ?...

 

நான் இனி அவரை கேட்பதில்லை....

 

எனது முகத்தில் சுருக்கங்கள் வந்து விட்டதோ?...

 

அவர் என்னை விட்டு விலக போகிறாறோ?...

 

எனக்கு தவறான இடங்களில் எடை போட்டு விட்டதோ?...

 

எனது ஒப்பனை இந்நாட்களில் சரி இல்லையோ?...

 

எனது நச்சரிப்பால் கோபம் அடைந்து விட்டாரோ?...

 

ஏன்?  ஏன்?  ஏன்?

.......

 

???

 

 

???

 

 

???

 

 

???

 

 

???

 

 

???

 

 

 

 

கணவர் நினைக்கிறார்....

 

ஏன் டோனி ... ரெய்னா பதிலாக பேட்டிங் செய்ய யுவராஜ்சிங்கை  அனுப்பினார்?

 

 

நன்றி fb :D

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும், திமுக இன்றி தமிழக அரசியல் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஜெயலலிதாவின், அதீத அரசியலால், திமுக எதிர்ப்பார்பதை விட அதிக இடங்களைப்பெறும் என்பதை தேர்தல் முடிவுகள் உண்மையாக்கலாம்

ஜெயலலிதா தன்னுடைய பிடிவாதப்போக்கை விட்டுவிட்டு பா ஜ க ,ம தி மு க,ப ம க ஆகிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நிச்சயம் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி இருக்கலாம் என்பதை தேர்தல் முடிவுகளை அடுத்து உணர்ந்து கொள்ளுவார்.....அது காலம் கடந்த பாடமாக இருக்கும் அவருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ போட்டியிடும் தொகுதியில் மட்டும் இரண்டு கட்சிகள் ஊடாகவும் வைக்கோவை தோற்கடிக்க குடும்பத்திற்கு 5000 ரூபாய்கள் தொடக்கம் 8000 ரூபாய்கள் வழங்கப்படுகின்றதாம் .....இதையும் தாண்டி வைக்கோ வெற்றி பெற்றால் அது அரசியல் அதியம் தான் இல்லா விட்டாலும் கூட வைக்கோவை தோற்கடிக்க வழங்கப்படும் நிதியின் ஊடாக வைக்கோவின் பெயரால் பல ஏழை குடும்பங்கள் சில வேளை வயிறார உண்டார்கள் என்ற பெருமையும் வைக்கோவிற்கு போய் சேரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

23-1398231754-funny-images19.jpg

 

என்ன... இருந்தாலும், விளக்குமாத்தால்..... றோட்டுக் கூட்டுவது போல் வருமா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் செம்புகள் திருமுருகன் அண்ணா எழுதிய இதை படிக்கவும்

பாஜக, காங்கிரஸ்,திமுக எனும் பகைவரை வீழ்த்த அதிமுக என்றுமே ஆயுதமாக எனக்கு தோன்றியதில்லை.

கடந்த தேர்தலில் அதிமுக நமது எதிர்ப்பினை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினையே அது தொடர்ச்சியாக எடுத்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதே கிடையாது. மாறாக தமிழின ஆதரவாளர்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகள் நடத்தப்படவே செய்தன. கடந்த வருடம் மே மாத இனப்படுகொலை நினைவேந்தல் தமிழகத்தில் எங்குமே நடத்த அனுமதிக்கப்படவில்லை..

இலங்கை மீது பொருளாதாரத்தடை , சிறப்பு சித்திரவதை முகாம் அகற்றல் என எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை... ஆனால் பிரபாகரன் படம் வைக்கப்படக் கூடாது என்பது முதல் முல்லைப்பெரியாற்று போராட்டத்தில் தாக்குதல், இடிந்தகரை மக்கள் மீதான தாக்குதல், பரமகுடி கொலைகள், கெயில் குழாய் எதிர்ப்பு மக்கள் மீது தாக்குதல்

மற்றும் மீத்தேன் எதிர்ப்பில் “மக்கள் அச்சம்” என்றே பேசுகிறார், கூடன்குளம் போன்று “ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, அதில் எம்.எஸ் சாமிநாதன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் குறித்தான நிலைப்பாடு எதிராகவே இருக்கிறது. இவ்வாறு தமிழின வாழ்வுரிமைக்கு எதிரான நிலைப்பாடுடனேயே அதிமுக (திமுகவும்) இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே பல்வேறு விடயங்களில் தமிழினக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகிறார்.

கரசேவையில் இருந்து, மதமாற்ற தடுப்புச் சட்டம், இடஒதுக்கீடு எதிர்ப்பு என பெரும்பாலனவற்றில் பாஜகவிற்கு இணையாக இருக்கிறது அதிமுகவின் நிலைப்பாடு. இந்துத்துவத்திற்கும் அதிமுகவிற்கும் வித்தியாசம் இருப்பதாக அவர்கள் என்றுமே காட்டியது கிடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மந்திரக்கோல் முதல் கன்னக்கோல்வரை....

1977 - எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே...பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.

அடுத்த நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சி தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. ‘உடன் பிறப்பே. பார்த்தாயா. நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்) ? இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்.

மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்.

அடுத்த நாள் முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்கவில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்கு வீட்டை’ என்று எழுதி முடிக்கிறார்.

அடுத்த நாளிலிருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது. ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை.

கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்துவிடுகறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். மைக்கை பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா’ என்கிறார். கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.

தொண்டன் தொண்டாவே இருக்கின்றான்.

தலைவன் தலைவனாகவே இருக்கிறான்.

படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளை கடந்த சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த தொண்டனும் கேட்கவில்லை.

அன்று நடிகரின் கட்சி ஊழலை பார்த்து கொதித்தவர்

இன்று நாடே பார்த்ததிர்ந்த ஊழலைப்ற்றி பேசவில்லையே என்று எந்த தொண்டனும் கேட்கவில்லை.

இதுதான் தொண்டர்களின் தியாகம்.

இந்த தேர்தலிலும் தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்.

(படித்ததில் பிடித்தது - Sai Ramasamy)

Thanks - Anbalagan .V

  • கருத்துக்கள உறவுகள்
1503883_261271194054672_1862074964_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தினமலர் காரங்க புதுசா வந்த எல்லா படத்தையும் நஷ்டம் நஷ்டம் எண்டு செய்தியா போடுறான் நல்ல லாபமா போய்க்கொண்டு இருக்கின்ற படங்களையும்........ நான் நினைக்கிறன் புதுசா வந்த படங்கள் எல்லாம் தமிழர்கள் எடுத்தது தமிழர்கள் நடித்து என்ற காரணத்தால் தான் செய்தியை இப்பிடி போடுறான் போல? இதுவே ஐயர் ஆத்து பையன் யாரவது நடிச்சு இல்லது எடுத்திருந்தால் மொக்கை படமா இருந்து ஊத்திக்கிட்டாலும் பேஷ் பேஷ் படம் ரொம்ப நன்னா இருக்கு வசூல்ல சாதனையாமேடா அம்பி எண்டு நன்னா செய்தி போடுவா..... செய்யிறது தமிழர நம்பி வியாபாரம் ..... போடுகின்ற செய்திகள் எல்லாம் தமிழருக்கு எதிரா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா மலசியாக்கு பறக்கிறத பார்த்தா விழுந்த மலேசியா விமானத்தோட சம்மந்தப்பட்ட எதோ விடையங்களை பேச தான் போய் இருக்கிறார் போல.... போக வேண்டிய முக்கியமான நாடுகள் எத்தனயோ இருக்க எதுக்கு அண்ணாச்சி மலேசியாக்கு போய் இருக்கார்....

என்னமோ...நடந்திருக்கு என்னமோ நடக்குது.... நமக்கு தான் புரியமாட்டேங்கிது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் பதவி என்றால் டெல்லிக்கு காவடி எடுக்கும் கருணாநிதிக்கு ஒரு நினைவூட்டல்

26 ஜூலை 1987 . உடல் நிலை பாதிக்கப் பட்டு இருந்த நிலையிலும் , மக்கள் திலகத்திற்கு டெல்லியிலிருந்து அழைப்பு வருகிறது , செல்கிறார் .... தமிழ் நாடு இல்லத்தில் தான் முக்கிய சந்திப்பு நடக்கிறது , இலங்கைக்கான இந்திய தூதர் ஜே என் தீட்சித் , மக்கள் திலகத்தை சந்தித்து இந்திய இலங்கை உறவு குறித்து ஒரு முக்கிய விஷயத்தை முன் வைக்கிறார் ...

இந்தியா இலங்கை இடையிலான ஒப்பந்தம் குறித்தது தான் அது , அதாவது , இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் படும் , அங்கே தேர்தல் நடத்தப் படும் என்றும் , அப்படி உருவாகும் மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் இலங்கை அதிபருக்கு மட்டுமே உண்டு என்றும் , ஆனால் ஒப்பந்தம் போடப் பட்ட 72 மணி நேரத்திற்குள் போராளிகள் தங்களது ஆயுதத் தளவாடங்களை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் தீட்சித் ....

அப்பொழுது அறையில் இருந்தவர்கள் , மக்கள் திலகம் , ஜே என் தீட்ஷித் , பிரபாகரன் , பால சிங்கம் , யோகரத்தினம் , ஆகியோர் தான் , விடுதலைப் புலிகளைத் தவிர மற்ற அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கும் , அதற்கான நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டு விட்ட நிலையில் , இவர்களை சம்மதிக்க வைக்க மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும் என்று நம்பியது மத்திய அரசாங்கம் .

ஜே என் தீட்ஷித்தை , சற்று நேரம் அறையை விட்டு வெளியே இருக்கச் சொன்னார் மக்கள் திலகம் .... அவரை வெளியே அனுப்பி விட்டு , பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளின் மற்ற தலைவர்களிடம் அவர்களது கருத்து குறித்து கேட்டார் . பிரபாகரன் , பாலசிங்கம் , யோகரத்தினம் , மூவரும் ஒரே குரலில் , அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்தனர் ...

தீட்ஷித்தை மறுபடியும் உள்ளே அழைத்தார் மக்கள் திலகம் ... " பிரபாகரன் எடுப்பது தான் இறுதி முடிவு , அதற்கு எனது ஆதரவு உண்டு " என்று கூறி , அங்கிருந்து அவரும் கிளம்பினார் ....

இது தான் தெளிவு ... ஆதரவோ எதிர்போ .. தெளிவான பார்வை கொண்டவன் தான் தலைவன் ... கருணாநிதியால் அது கண்டிப்பாக முடியாது , அவர் தலைவரே கிடையாது , அவர் ஒரு சுயநல கிருமி அவ்வளவே

Thanks

Kishore swamy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரை உலகில் எத்தனை காமடியன்கள் இருந்தாலும் எத்தனை பிரபலமான காமடி வசனங்கள் இருந்தாலும் எல்லா தலைமுறையினரும் முகப்புத்தகம் மற்றும் சமூகத்தளங்களில் அதிகமாக பயன்படுத்துவது கவுண்டமணி அவர்களுடைய காமடி வசனங்களை தான் கூடவே செந்திலும் வந்து போவார்.......தமிழ் திரை உலகம் அப்பிடி ஒரு காமடி ஜோடியை கண்டதும் இல்லை காணப்போவதும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
10177444_337669886357934_679200520315905

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.