Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிசயம் ஆனால் உண்மை.......

Featured Replies

அதிசயம் ஆனால் உண்மை.......

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும்,அபூர்வமான நிகழ்வுகள் சில !!

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3.இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6.ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7.இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10.லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

553520_251006158350937_1413787014_n.jpg

- மூலம்: முகநூல் -

Edited by துளசி

?????????????????????????????????? :icon_mrgreen:

  • தொடங்கியவர்

?????????????????????????????????? :icon_mrgreen:

2 ஜனாதிபதிகளுக்கு ஒரே மாதிரி நடந்தது அதிசயம் தானே? :icon_mrgreen: இதனை எங்கு இணைப்பதென்று தெரியவில்லை. இங்கு இணைத்து விட்டேன். :)

பல ஒற்றுமையாக இருந்தாலும் சில வேற்றுமைகளும் இருக்கிறது.

கென்னடி போரிலும், கப்பல் உடைந்த பின்னும் பல வீரச்செயல்களை செய்தாலும் மனத்தால் கோளை.

லிங்கன் ஒருதடவை சில ஆயுதம் தாங்கிய திருடர்களை கையில் இருந்த சவளால் அடித்து விரட்டினார் என்பது மட்டும் தான் கேள்விப்படிருக்கிறேன். ஆனால் மனத்தால் ஒரு வீரன்.

கென்னடி எளிதில் விட்டுக்கொடுக்கும் ஜெனநாயக வாதி. லிங்கன் பிடிவாதக்கார சர்வாதிகாரி.

கென்னடி அழகிய மனைவி இருந்தும் அங்கலாத்துக்கொண்டு திரிந்தவர். லிங்கனின் மனைவி சரியாக "இருந்து முகந்திருத்தி" என்ற பாட்டில் வரும் பெண்ணாயிருந்தும் அவருடன் ஒத்து வாழ்ந்தவர்.

திருட்டுக்குண கட்சி குடியரசுக்கட்சியில் இருந்தாலும் லிங்கன், வெளிப்படையான நேர்மையான குணங்கள் படைத்தவர்.

வெளிப்படையான ஜெனநாயகட்டிசியிலிருந்தாலும் கென்னடி திருட்டுக்குணங்கள் படைத்தவர்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

1860 ஆண்டிருந்து, கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை....

ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதிகளும் 20 வருடத்துக்கு ஒரு முறை சுட்டுக்கொல்லப் பட்டார்கள், என்று எங்கோ வாசித்தேன்.

அடுத்தது.... நிக்ஸனின் முறை. அவர், தப்பிவிட்டார். அதன் பிறகு அந்தக் கொலைகள் தொடரவில்லை என்பது சந்தோசம்.

எனக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதிகள்.. லிங்கனும், கிளின்ரனும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

1860 ஆண்டிருந்து, கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை....

ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதிகளும் 20 வருடத்துக்கு ஒரு முறை சுட்டுக்கொல்லப் பட்டார்கள், என்று எங்கோ வாசித்தேன்.

அடுத்தது.... நிக்ஸனின் முறை. அவர், தப்பிவிட்டார். அதன் பிறகு அந்தக் கொலைகள் தொடரவில்லை என்பது சந்தோசம்.

எனக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதிகள்.. லிங்கனும், கிளின்ரனும். :wub:

லிங்கன் முயற்ச்சிக்காக, :icon_idea:

கிளின்ரன்............??? :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கன் முயற்ச்சிக்காக, :icon_idea:

கிளின்ரன்............??? :wub: :wub:

கிளர்ச்சிக்காக....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D
  • தொடங்கியவர்

1860 ஆண்டிருந்து, கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை....

ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதிகளும் 20 வருடத்துக்கு ஒரு முறை சுட்டுக்கொல்லப் பட்டார்கள், என்று எங்கோ வாசித்தேன்.

அட இதுகூட அதிசயம் தான். :rolleyes:

Abraham Lincoln 1 Franklin D. Roosevelt 2 George Washington 3 Thomas Jefferson 4 Theodore Roosevelt 5 Woodrow Wilson 6 Harry S. Truman 7 Andrew Jackson 8 Dwight D. Eisenhower 8 James K. Polk 10 John F. Kennedy 11 John Adams 12 James Madison 13 James Monroe 14 Lyndon B. Johnson 14 Barack Obama 14 Ronald Reagan 17 John Quincy Adams 18 Grover Cleveland 19 William McKinley 20 Bill Clinton 20 William Howard Taft 22 George H. W. Bush 22 Martin Van Buren 24 Rutherford B. Hayes 25 Gerald Ford 26 Jimmy Carter 27 Chester A. Arthur 28 James A. Garfield 29 Herbert Hoover 29 Calvin Coolidge 31 Richard Nixon 32 Benjamin Harrison 33 George W. Bush 34 Zachary Taylor 35 John Tyler 36 Ulysses S. Grant 37 William Henry Harrison 38 Millard Fillmore 38 Franklin Pierce 40 Andrew Johnson 41 James Buchanan 42 Warren G. Harding 43

கருத்து கணிப்புகளின் படி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கிளின்ரன்............??? :wub: :wub:

கிளின்ரன் பெண் விடயத்தில் சபல புத்தி கொண்டவராக இருந்தது உண்மையே.ஆனாலும் அவருடைய 8 வருட பதவி காலம் பொருளாதாரத்தின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவரது கட்சி செயற்பட்டது.அத்தோடு எந்த ஒரு நாட்டுடனும் படையெடுப்போ ஆக்கிரமிப்போ நடாத்தவில்லை(கென்யாவில் ஒரு தாக்குதல் தவிர)

.

கென்னடி அழகிய மனைவி இருந்தும் அங்கலாத்துக்கொண்டு திரிந்தவர்.

கென்னடிக்கே எனது வாக்கு.... :D

  • கருத்துக்கள உறவுகள்

கென்னடிக்கே எனது வாக்கு.... :D

இந்த நிழலியை, என்ன பண்ணலாம்? :D

thinking+man.jpg

  • தொடங்கியவர்

கென்னடிக்கே எனது வாக்கு.... :D

என்ன செய்ய,

நீங்களும் உங்களுக்கு மனைவி இருந்தும், வேறு பெண்களை சைட் அடிக்கிறதுக்காக வேணுமெண்டு பல்வலியை வரவழைத்து, நேஸிடம் தான் காட்ட போவேன் என்று அடம்பிடிச்சு போனவர் தானே??? :lol: :lol:

அப்ப நீங்களும் அவருக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்கள். :D

இந்த நிழலியை, என்ன பண்ணலாம்? :D

பெண்களை கொண்டு தான் நிழலி அண்ணாவை கவிழ்க்கலாம். :lol: அதை வைத்து ஏதாவது திட்டம் போடுங்கோ. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை கொண்டு தான் நிழலி அண்ணாவை கவிழ்க்கலாம். :lol: அதை வைத்து ஏதாவது திட்டம் போடுங்கோ. :icon_idea:

அப்படியில்லை, துளசி!

நிழலி, நெருப்பின் அழகையும், அதன் வளைவுகளையும் மட்டுமேதூரத்திலிருந்து ரசிப்பவர்!

அவர், யதார்த்தவாதி!

தொட்டால் சுடும், என்று அவருக்கு நன்றாகவே தெரியும்! :D

பெண்களை கொண்டு தான் நிழலி அண்ணாவை கவிழ்க்கலாம்.

யாழில் ஒரு ஜடியில் இப்படி எத்தனைபேர் கிளம்பி இருக்கிறார்கள்

என்று எல்லாம் எங்களுக்கு தெரியும்.பூனை கண்ணைமூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம்.இதை பொதுவாக சொன்னன்.

  • தொடங்கியவர்

அப்படியில்லை, துளசி!

நிழலி, நெருப்பின் அழகையும், அதன் வளைவுகளையும் மட்டுமேதூரத்திலிருந்து ரசிப்பவர்!

அவர், யதார்த்தவாதி!

தொட்டால் சுடும், என்று அவருக்கு நன்றாகவே தெரியும்! :D

:lol: :lol: அப்ப ஆளுக்கு வைன் போத்தல் கொடுத்து மடக்கும்படி திட்டம் போடுங்கோ. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: அப்ப ஆளுக்கு வைன் போத்தல் கொடுத்து மடக்கும்படி திட்டம் போடுங்கோ. :icon_idea:

இந்த வேலை எப்ப இருந்து. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.