Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள்.

Featured Replies

வணக்கம் உறவுகளே.

எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது.

அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம்.

துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக like பண்ணுங்கள்.

இதனால் பிரயோசனம் இருக்கிறதா இல்லையா தெரியாது. :unsure: ஆனால் like போடுவதால் எமக்கொரு நட்டமும் இல்லை தானே. எனவே அனைவரும் like போடுங்கள். உங்கள் முகநூல், twitter, மின்னஞ்சல் மூலமும் பல மக்களை like பண்ண சொல்லுங்கள்.

வீடியோவின் கீழ் கருத்துகளையும் வையுங்கள்.

youtube account இல்லாதவர்கள் புதிதாக open பண்ணுங்கள். மக்களுக்கு, channel 4 இற்கு உதவி செய்ததாகவும் ஆகும். அதே நேரம் விருப்ப தெரிவுகளில் நீங்கள் பாடல்களையும் சேமித்து வைக்கலாம். வேறு பிரயோசனங்களும் கிடைக்கும்.

சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம். (Sri Lanka's Killing Fields)

தற்போதைய நிலை

like - 1344

dislike - 1326

சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம் 2- தண்டிக்கப்படாத போர் குற்றங்கள். (Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes)

தற்போதைய நிலை

like - 1448

dislike - 4376 :(

ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவரும் channel 4 இன் இந்த இணைப்பில் சென்று அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். எம்மக்களின் அவலங்களை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கேளுங்கள்.

http://www.channel4....ies-1/episode-1

பி.கு:- இதனை கலைஞன் அண்ணா வேறொரு திரியில் முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இது விடயத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக அவருக்கு அப்பொழுது வாக்குறுதி கொடுத்திருந்தேன். எனவே இப்பொழுது இத்திரியை ஆரம்பித்தேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இல்லை இனிதான், விரைவில் லைக் போடுகிறேன்

நல்ல முயற்சி துளசி.

இன்னும் இல்லை. விரைவில் போடுவேன். முயற்சிக்கு நன்றி.

இன்னும் இல்லை. வேலை இடத்தில் youtube access செய்ய முடியாது. ஆகவே வீட்டுக்கு போனதும் செய்கிறேன். நன்றி.

  • தொடங்கியவர்

அனைவருக்கும் நன்றி. வேலையிடத்தில் நிற்பவர்கள் உங்களுடன் வேலை செய்யும் நபர்களுக்கும் கூறுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதனை லைக் பண்ணுவதில் ஒரு சிக்கல் பிற நாட்டவர்கள் இந்த காணொளியில் வரும் விடயங்கள் பிடிக்காமல் அதாவது படுகொலைகள் பிடிக்காமல் dislike பண்ணக்கூடிய சாத்தியமே அதிகம் முகப்புத்தகத்திலும் இது போன்ற சிக்கல் உள்ளது .லைக் பண்ணினால் படுகொலைகளை ஆதரித்தது பேன்றும் கருத்துப்படும். எனவே கருத்துக்களை பதிவிடுவதே பிரயோசனம் தரும் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

இதனை லைக் பண்ணுவதில் ஒரு சிக்கல் பிற நாட்டவர்கள் இந்த காணொளியில் வரும் விடயங்கள் பிடிக்காமல் அதாவது படுகொலைகள் பிடிக்காமல் dislike பண்ணக்கூடிய சாத்தியமே அதிகம் முகப்புத்தகத்திலும் இது போன்ற சிக்கல் உள்ளது .லைக் பண்ணினால் படுகொலைகளை ஆதரித்தது பேன்றும் கருத்துப்படும். எனவே கருத்துக்களை பதிவிடுவதே பிரயோசனம் தரும் என்று நினைக்கிறேன்.

oh. நன்றி. ஆனால் dislike எண்ணிக்கை அதிகமாக உள்ள போது அது அரசாங்கத்திற்கு துணைபோகும் என்றும் நினைக்கிறேன். நீங்களும் கருத்துகளை பதிவிடுங்கள்.

இதனை லைக் பண்ணுவதில் ஒரு சிக்கல் பிற நாட்டவர்கள் இந்த காணொளியில் வரும் விடயங்கள் பிடிக்காமல் அதாவது படுகொலைகள் பிடிக்காமல் dislike பண்ணக்கூடிய சாத்தியமே அதிகம் முகப்புத்தகத்திலும் இது போன்ற சிக்கல் உள்ளது .லைக் பண்ணினால் படுகொலைகளை ஆதரித்தது பேன்றும் கருத்துப்படும். எனவே கருத்துக்களை பதிவிடுவதே பிரயோசனம் தரும் என்று நினைக்கிறேன்.

[size=4]ஆம் கருத்துக்களை பதிவது மிக நல்ல விடயம். குறிப்பாக இன்றைய நிலவரங்களை (நீதிபதி மிரட்டல், தாக்குதல், சிறையில் கொலைகள்,அரச கடத்தல்கள், ....) என்பனவற்றை பதியலாம்.[/size]

[size=4]ஆனால் பார்ப்பதில் அதிகமானவர்கள் டிஸ்லைக் பண்ணுவார்கள் என்பதை ஏற்கமுடியாமல் உள்ளது. காரணம்,ஆவணத்தில் முதலிலேயே ஒரு 'எச்சரிக்கை உள்ளது' எனவே தெரிந்துதான் கொடூரங்களை பார்ப்பார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இல்லை. விரைவில் போடுவேன். முயற்சிக்கு நன்றி ..

  • தொடங்கியவர்

channel 4 இன் இணைப்பில் சென்று கருத்து எழுதிய ராஜவன்னியன் அண்ணாவுக்கு நன்றி.

Rajavannian on 25 July 2012 at 18:13

Thank you very much for exposing the real face of Srilankan Government to the international community. Likewise more detailed report on other massacres of innocent lives in Tamil Ealam may be shown to the world.

Edited by துளசி

  • தொடங்கியவர்

சில நாடுகளில் காணொளி தடை செய்யப்பட்டிருக்கிறதாம். :( அவர்கள் எப்படி like போடுவது? :(

[size=4] like செய்துள்ளேன்.[/size][size=4]முகப்புத்தகத்திலும் share [/size][size=4]செய்துள்ளேன்.[/size]

  • தொடங்கியவர்

like போட்ட அனைவருக்கும் நன்றி. 697 பேர் இந்த திரியை பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் முதல் காணொளிக்கு 20 பேரும் இரண்டாவது காணொளிக்கு 12 பேரும் தான் like போட்டிருக்கிறார்கள். :( ஏனைய அனைவரும் ஏற்கனவே like போட்டவர்களா? இருக்கவே இருக்காது. ஒரு சிறு பகுதியினர் மட்டும் தான் ஏற்கனவே like போட்டிருப்பார்கள். :(

[size=5]உங்கள் தளராத முயற்சிக்கு ... பாராட்டுக்கள். [/size]


சில நாடுகளில் காணொளி தடை செய்யப்பட்டிருக்கிறதாம். :( அவர்கள் எப்படி like போடுவது? :(


நான் வசிக்கும் நாட்டில் youtube தளத்திற்கு சென்று இந்த காணொளியை பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது இதனையிட்டு மனம் வருந்துகின்றேன் :( .
http://youtu.be/Rz_eCLcp1Mc
  • தொடங்கியவர்

இங்கே like பண்ணிய, கருத்தூட்டமிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

[size=5]உங்கள் தளராத முயற்சிக்கு ... பாராட்டுக்கள். [/size]

அகூதா அண்ணா,

உங்கள் பாராட்டுக்கு நன்றி. இருந்தாலும் தேசிய விடுதலைக்காக நீங்கள் ஆற்றும் பணிகளுடன் ஒப்பிடுகையில், இந்த முயற்சி ஒரு சாதாரணமானது. உங்கள் பாராட்டுகளை ஏற்று கொள்ளும் அளவுக்கு நான் இன்னும் பணிகளை ஆற்றவில்லை என்றே எண்ணுகிறேன்.

ஆனால் உங்கள் பாராட்டுகள் என்னை மட்டுமல்ல, யாழ் களத்தில் இருக்கும் ஏனைய உறவுகளுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இது போன்ற கவனிக்கபடாமல் இருக்கும் எத்தனையோ பிரச்சார விடயங்களை நாங்கள் கையில் எடுப்பதன் மூலம், உலகின் ஏனைய சமூகத்திடம் எங்கள் போராட்டத்தையும், எம் மக்கள் பட்ட துன்பத்தையும் கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.

உங்களினதும் ஏனைய உறவுகளினதும் பங்களிப்பை வேண்டிநிற்கிறேன். நன்றி. :)

நான் வசிக்கும் நாட்டில் youtube தளத்திற்கு சென்று இந்த காணொளியை பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது இதனையிட்டு மனம் வருந்துகின்றேன் :( .

http://www.youtube.c...player_embedded

உங்கள் முயற்சிக்கு நன்றி. :) "i understand and wish to proceed" என்பதை கொடுத்து பாருங்கள். பின்னரும் வராவிட்டால் எனக்கு தெரியாது. :(

Edited by துளசி

  • தொடங்கியவர்

[size=4]சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம். (Sri Lanka's Killing Fields)[/size]

[size=4]தற்போதைய நிலை[/size]

[size=4]like - 1365[/size]

[size=4]dislike - 1327[/size]

[size=4]total view - 287, 031[/size]

[size=4]சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம் [/size][size=4]2[/size][size=4]- தண்டிக்கப்படாத போர் குற்றங்கள். (Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes)[/size]

[size=4]தற்போதைய நிலை[/size]

[size=4]like - 1460[/size]

[size=4]dislike - 4380 [/size]

[size=4]​total view - 579, 113[/size]

  • தொடங்கியவர்

கண்ணீர் அண்ணாவை இடைக்கிட தான் யாழில் கண்டிருக்கிறேன். ஆனால் தமிழீழத்திற்காக தன் பங்களிப்பை வழங்குபவர். வாக்களிப்பு நேரத்தில் கூட எம்முடன் பங்கெடுத்திருந்தார்.

எப்பொழுதும் எம்மக்களின் அவலங்களை மக்களிடம் பரப்புரை செய்துகொண்டிருப்பவர். காணொளிகளை பல தடவைகளாக முகநூலில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது எம்மக்களின் அவலங்களை cd அடித்து மக்களுக்கு விநியோகிக்க இருப்பதாக கூறியுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகள் உரித்தாகட்டும். :) இதே முயற்சியை முடிந்தவர்கள் அனைவரும் மேற்கொள்ளுங்கள்.

துளசி நானும் கருத்தெழுதியுள்ளென்.உங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கருத்தெழுதியமைக்கு நன்றி. உங்களுக்கு தெரிந்த நபர்களையும் கருத்தெழுதும்படி கூறுங்கள். :)

  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் அண்ணா, மற்றும் உதயம் அண்ணாவுக்கு பாராட்டுக்கள். :)

Eelapirean on 28 July 2012 at 18:44

Channel 4, thank you for your presentation. It has been 3 years since the conclusion of the war however Tamils are still dying due to "ethnic cleansing." If this continues for another 50 years, will not not be any more Tamils in Sri Lanka. Please continue to be our voice and help stop the genocide of Tamils.

uthayam on 28 July 2012 at 19:10

Thank you CH4 for the presentation. you are the only hope to us.please don't stop it here. We tamils had our voices cut off and suppressed brutally by srilankan government by force .

Edited by துளசி

  • தொடங்கியவர்

கருத்து எழுதிய சாத்திரி அண்ணாவுக்கு பாராட்டுகள்.

sri on 30 July 2012 at 15:52

Dear Mr. Jon Snow Thanks,for broadcast as You have done a great service humanity. continue your efforts for the helpless people who deserve justice.International community must punish srilankan government for war crime.Thank you very much again

  • 5 months later...

தகவலுக்கு மிக்க  நன்றி சகோதரி 

இவைகளை 10 தரத்துக்கு மேல்  பார்த்துள்ளேன்.இக்கோரங்களுக்குள் ஒவ்வோர் முறையும் நான் என்னைத் தொலைத்து விடுவதால் like போடும் சிந்தனை இல்லாமல் போய் விட்டது .
கடைசி முறை பார்க்கும் போது like போடத் தூண்டியது . ஆனாலும் like போட்டு இனவழிப்புக்குத் துணை போய் விடுவேனோஎன்ற தவறான சிந்தனையால் போட்டிருக்கவில்லை .
உங்களின் தகவலைப்பார்த்த உடனேயே 2 காணொளிகளுக்கும் like போட்டுவிட்டன்.  நன்றி. முகனூலினூடாக மற்றவர்களுக்கும் தகவலைப் பகிர்வேன்.

தகவலுக்கு மிக்க  நன்றி சகோதரி 

இவைகளை 10 தரத்துக்கு மேல்  பார்த்துள்ளேன்.இக்கோரங்களுக்குள் ஒவ்வோர் முறையும் நான் என்னைத் தொலைத்து விடுவதால் like போடும் சிந்தனை இல்லாமல் போய் விட்டது .
கடைசி முறை பார்க்கும் போது like போடத் தூண்டியது . ஆனாலும் like போட்டு இனவழிப்புக்குத் துணை போய் விடுவேனோஎன்ற தவறான சிந்தனையால் போட்டிருக்கவில்லை .
உங்களின் தகவலைப்பார்த்த உடனேயே 2 காணொளிகளுக்கும் like போட்டுவிட்டன்.  நன்றி. முகனூலினூடாக மற்றவர்களுக்கும் தகவலைப் பகிர்வேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.