Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ராஜபக்ஷேவைக்கூட நம்புவோம்... கருணாநிதியை நம்ப மாட்டோம்!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம.அருளினியன்

காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

சேசுராஜ், முன்னாள் போராளி.

(பெயர் மாற்றப்பட்டு உள்ளது)

''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர். அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

p84.jpg

நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்துகொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு. ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட் டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!''

ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

p84a.jpg''நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்த கைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர் களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக் குக் கொண்டுசெல்ல முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத் திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத் தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார் மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பைபுலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப் பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டது’ என அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்க ளுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''

p85.jpg

யோ.கர்ணன், இறுதிப் போரில் பங்கெடுத்த போராளி

p84b.jpg'' 'தமிழகத் தேர்தல் அரசியல் இழுபறிக்குள் எமது ரத்தத்தை விற்பனைப் பொருளாக்கிவிடாதீர் கள்’ என்பதே எமது வேண்டுகோள். 'தயவுசெய்து எங்களை விட்டிடுங் கடா’ என ஈழத் தமிழர்கள் கை கூப்பிக் கதறி அழுதாலும், இந்த விற்பனையாளர்கள் விட மாட்டார் கள்போல் உள்ளதே.

கருணாநிதியையும் ஒரு மீட்பராக ஈழத் தமிழர்கள் துதித்த காலம் ஒன்று இருந்ததுதான். நாங்கள் வேர் கள் அறுபட்டு அகதியாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில், பற்றுவதற்கு ஒரு சிறு துரும்பாவது கிட்டாதா என இந்தப் பூமிப் பந்தின் திசைகள் எல்லாம் கைகளை அளைந்து அந்தரித்துக்கொண்டு இருந்த நாட்களில் அவர் எங்கள் கண்களில் தென் பட்டார்தான். மனிதச் சங்கிலிப் போராட் டம் உள்ளிட்ட அவரது செயற்பாடுகள்தான் அந்த நாட்களில் பெரும்பாலானவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. யுத்த வளையத்தில் அதிகமும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகவும் அவரது பெயர் இருந்தது. ஆனால், நாங்கள் வருந்தியழைத்த அந்தப் பொழுதுகளில் எல்லாம் அவர் வரவே இல்லை. இப்போது மீண்டும் வந்திருக்கிறார், எல்லாம் முடிந்த பின், நாங்கள் அழைக்காமலேயே. இதைப் பார்த்து நாம் அழுவதா, இல்லை சிரிப்பதா, இல்லை சிரித்துக்கொண்டே அழுவதா?

கருணாநிதிக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஈழத்தில் மகிந்தராஜ பக்ஷேவை நம்புவதற்குத் தயாராக உள்ள தமிழர்கள்கூட கருணாநிதியை நம்புவதற் குத் தயாராக இல்லை!''

சயந்தன், ஈழ எழுத்தாளர்: ''ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த் தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்ட வர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.

ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க் கப்படுவதால், அவரவர் வசதிப்படிநடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோ’வும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக் கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது

'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ ''

ஆனந்த விகடன்

கருணாநிதியை நம்பாததுமட்டுமல்ல, கருணாநிதிமீது மிக கடுமையான வெறுப்பாகத்தான் ஈழத்தமிழர் இன்றுள்ளார்கள். கருணாநிதி உண்ணாவிரதமிருந்து ஏமாற்றிய போது கருணாநிதி மீது ஈழத்தமிழர்கள் கோபப்பட்டார்கள். இருந்தாலும் அவர்கள் ஒன்றை ஒத்துகொள்ள வேண்டியிருந்தது. அது "தமிழ் நாட்டவர் ஈழத்தவரின் உறவுகளாக இருந்தாலும் அவர்களுக்கென்று இன்னொரு அரசியல் இருக்கிறது; அவர்கள் இந்தியாவின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். ஆகவே மத்திய கட்சியான காங்கிரசின் மனதை முறிக்காமல் பயணிக்கிறார்கள்" என்பது. தத்துவார்த்தமாக இது சரியாக இருந்தாலும் இதை வைத்து கருணாநிதி தனது அரசியல் வண்டியை செலுத்துவதையும், இது தமிழ் நாட்டு தமிழரின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரான போக்கென்பதையும் பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதேநேரம் அவர்கள் நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற தலைவர்களும், முத்துக்குமாரு போன்ற தொண்டர்களும் அங்கிருப்பதை அறியாமலிருக்கவும் இல்லை. அடிமட்ட அடிப்படை நிலையாக கருணாநிதி ஆடிய உண்னாவிரதத்தை மட்டும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கருணாநிதி மௌனமாக காங்கிரசை ஆதரித்திருந்த்திருந்தால் வேறுகரைக்கு உதவிக்கு திரும்பியிருப்பார்கள். உண்ணாவிரத நாடகம்தான் அவர்களுக்கு கருணாநிதி மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஜேர்மனியில் யூதர்கள் தாக்கப்பட்டபோது அவர்கள் மற்றய நாட்டு யூதர்களிடம் தமது எதிர்பார்ப்பை எடுத்து சென்றார்கள். இதனால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்த யூத இளைஞர்கள் தாமாக தமது நாட்டு படைகளில் இணைந்து ஐரோப்பாவுக்கு போரில் ஈடுபட சென்றார்கள். போருக்கு முதல் யூதர்களுக்கிடையில் அப்படி நாடுகள் கடந்த உறவு ஒன்றும் பெரிதாக இருக்கஇல்லை.

தமிழ்நாடும், ஈழமும் எந்தக்காலமும் யூதர்கள் தொடர்பறுந்திருந்த மாதிரி தொடர்பு அறுந்திருக்கவில்லை. அந்நியர் ஆட்சிக்காலத்திலுமே தாமோதரம் பிள்ளை, ஆறுமுகநாவலர், விஸ்வநாதன் போன்றோர் தமது தமிழ்த் தொண்டுகளை தமிழ்நாட்டை மையமாகவைத்துதுதான் ஆற்றியிருந்தார்கள். அதே மாதிரியே யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, மலையகம் எங்கும் தமிழ் நாட்டுத்தமிழர் மருத்துவம், பொறியியல், கல்வி, நகை-புடவை வியாபாரம், வாத்தி வேலை, கணக்கு பரிசோதனை, உணவு விடுதிகள், தோட்டக் கூலி என்று சகல துறைகளிலும் தொழில் செய்து வந்தார்கள். இதை குழப்பியது இலங்கையின் இந்தியர்-பாகிஸ்த்தானியர் பிரஜாவுரிமை சட்டமே.(இதில் பாகிஸ்த்தானியர் என்ற பதம் தேவையற்றே சேர்க்கப்படிருந்தது) இருந்தும் இருவருக்குமிடையில் பழைய உறவுகள் எப்படி இருந்திருந்தாலும், முள்ளி வாய்க்கால் போன்ற ஒரு அவலம் ஏற்படும் போது ஈழத்தமிழர் இயல்பாக தமிழ்நாட்டிடம் எதிர்பார்ப்பை வைத்து எந்த வகையிலும் தப்பில்லை. அப்போது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை ஆடி கோபத்தை மட்டுமே வாரிக்கட்டிக்கொண்டார்.

இன்று கருணாநிதி மீது அருவெறுப்பான வெறுப்பை ஏற்படுத்தியது இந்த டெசோ மகாநாடே. அவர் தனது வாரிசுகளை தமிழ்நாட்டு தமிழர்மீது மான-மரியாதை உணர்வின்றித் திணிப்பதை எதிர்த்து போராடவேண்டியது தமிழ்நாட்டு தமிழரின் பொறுப்பு மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு தமிழரின் இளகிய உணர்வுகளை வைத்து ஈழத்தமிழரை தனது பகடைக்காய்களாக பாவித்து திரும்ப தமிழ் நாட்டு அரங்கில் வந்து தனது வாரிசுகளை அரசகட்டில் ஏற்ற கருணாநிதி முயன்றாராகில் இதில் தமிழ் நாட்டு உறவுகளுடன் இணந்து கருணாநிதியின் தந்திரங்களை உடைத்து தமிழ்நாட்டு தமிழரை இவரின் வாரிசுகளிடமிருந்து காப்பாற்றுவதில் ஈழத்தமிழர் தங்கள் பங்கை அவ்வளவு இலகுவாக உதாசீனம் செய்ய முடியாது. இதனால்த்தான் கருணாநிதி ஈழத்தமிழரை பாதுகாக்கும் அமைப்பென்ற டெசோ என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்தவுடன் ஈழத்தமிழர் அவர்மீது தமது வெறுப்பை காட்ட தலைபட்டிருக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

269709_3520285852182_512068020_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை நம்பலாம் ஆனால் துரோகியை எப்படி நம்புவது?

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை நம்பலாம் ஆனால் துரோகியை எப்படி நம்புவது?

எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட அரசியல் வியாதிகள், ஈழத்தமிழனை பற்றி சிந்திக்காமல் இருப்பதே நல்லது.

டெசோ மாராடு கூப்பிட‌ எவ‌னாவ‌து, க‌ருமாநிதியைக் கேட்டானா?

பிற‌கேன்... இந்த‌, இழ‌வு விழுந்த‌வ‌ன் வெந்த‌ புண்ணிலை... வேலைப் பாச்சுறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து ஈழத்தமிழர்களுக்காக குரல் தாருங்கள்.

தயவுசெய்து ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

நாங்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தோம்?

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு, அரசியலில்... சுதி குறைந்தால், ஈழத்தமிழனா.... சம்பல்.

இந்த, வயோதிப மனிதனுக்கு.... என்னத்தில் அரசியல் செய்வது என்று, விவஸ்தை இல்லாது... அறளை பெயர்ந்த ஆளா...?

நிறுத்து... உன்,நாடகத்தை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.