Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணங்களை நினைவு கூர்தல்

Featured Replies

431448_10151149885966253_922617810_n.jpg

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]இதில் ஒருவரை உடனடியாக தெரிகின்றது. மற்றையவர்கள் யார்? [/size][/size][size=1]

[size=4]இவர்கள் மூவர் மட்டுமா நினைவுகொள்ளப்பட உள்ளார்கள்? [/size][/size]

[size=1]

[size=4]நன்றி. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]நேற்றோ இல்லை அதற்கு முதல் நாளோ சில நல்ல கருத்துக்கள் முன்வைத்திருந்த்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதாவது பழையனவற்றை விட்டு புதிய பாதையில் பயணிக்கவேண்டும் என. அதேவேளை சிலரை 'வியாபாரிகள்' எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒதுக்கப்படல்வேண்டும் எனவும் கூறி இருந்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]எனவே இவர்களின் நினைவுகூறல் நிகழ்வானது மேலே உங்களால் கூறப்பட்ட கருத்துகளுடன் முரண்படுகின்றதே?[/size][/size]

  • தொடங்கியவர்

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

[size=4]சரி இவர்களை நினைவு கூ[/size]ரு[size=4]வதற்கும் புதிய பாதையில் பயணிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே வைப்போம். [/size][size=1]

[size=4]இதை யார் ஒழுங்கு செய்வது? இவர்கள் வேறு என்ன ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை செய்துள்ளார்கள்? [/size]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

[size=4]நீங்கள் எதை வைத்து 'அப்படி செய்யாதே' என எழுதியதாக புரிந்துகொண்டீர்கள்? :D[/size]

[size=4]பொதுவாக அர்யுன் அண்ணா ஒரு சில திரிகளில் 'நாம் பழைய நடைமுறைகள் மறந்து, பழைய ஏமாற்றுகாரர்கள் / வியாபாரிகளை விட்டு' புதிய சிந்தனையில் பயணிக்கவேண்டும் என புரட்சிகரமாக எழுதினார். ஆனால், இந்த திரியில் அதற்கு எதிராக செய்வது போன்று இருந்தது. அதனால் அவரின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன என அறிய சில கேள்விகளை கேட்கலாம் எனவும் அதன் மூலம் எல்லோரும் தெளிவுபடலாம் என்ற எண்ணமும் தான். [/size]

[size=1]

[size=4]மற்றும்படி மாற்றுக்கருத்துக்கள் எமது களத்தினதும் சமூகத்தினதும் பலமே ![/size][/size]

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

இவருக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன!

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

இவர் புளோட்டில் இருந்தவர்.தனது இயக்கத்தைப் பற்றி தானே விமர்சித்து எழுதின நூல் தான் புதிய பாதை[நுணா அதை இணைத்திருந்தார்].பிறகு இவர் அதிலிருந்து விலகி தீப்பொறி அமைப்பில் இருந்தார்.கிட்டுவுக்கு குண்டு எறிந்தது தீப்பொறி அமைப்பு அதில் இவருக்கும் சம்மந்தம் இருந்ததோ தெரியாது[குண்டு எறிந்ததில்].இவர் யாரால் கொல்லப்பட்டார் என மறந்து போய் விட்டது அநேகமாக அவர‌து இயக்கத்தாலே கொல்லப்பட்டு இருக்கலாம்...எது எப்படி இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

ஈழத்தமிழர் போராட்டவழியில் தமிழருக்கு ஏதுவாக எதைச்செய்திருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களே.

அந்தவகையில் இதை நீங்கள் இணைக்கமுன்

இதுவரை அதை நீங்கள் இங்கு செய்திருக்கின்றீர்களா என்பதை சரி பார்த்திருப்பின் இக்கேள்விகள் இங்கு எழுந்திரா. :( :( :(

இந்த மூவரின் எழுத்துக்களும் ஈழத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள். இவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார்கள்

[size=5]இன்று பத்திரிகையாளர் நிமலராஜனின் மரணத்தை நினைவுகூருவோம்[/size]

[size=4]பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து [size=5]12 [/size]வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை.

மயில்வாகனம் நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் [size=6]19, ஒக்டோபர், 2000 [/size]அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார். [/size]

[size=4]மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்சியே கொலோச்சுக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

"இந்த படுகொலையை செய்தவர்கள் இப்போது அரசில் இருக்கிறார்கள். அதனால் அரசும் ஒருத்தரையும் கண்டுபிடிக்காது" என்று கூறினார்.

போரால் சீரழிந்த யாழில் இரண்டாயிரமாம் ஆண்டில் சுதந்திரமான பத்திரிகையாளராக இருந்தவர்களில் ஒருவர் நிமலராஜன். அவர் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி எழுதி பிரபலமானவர். [/size]

[size=4]இரண்டாயிரம் ஆண்டில் யாழில் பதட்ட நிலைமை நிலவினாலும் அவர் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் அரசியல் குறைபாடுகள் பற்றியும் எழுதினார்.[/size]

  • தொடங்கியவர்

நேற்று இந்த மூவரினதும் நினைவு கூரல் நிகழ்விற்கு போயிருந்தேன் .அங்கு உரையாற்றிய மூவரும் (ஜேம்ஸ் ,சுபமங்களா,சுல்பிகா) நிறைய விடயங்களை சொன்னார்கள் .ஜேம்ஸ் ராஜனியின் வாழ்க்கையையும் அவர் மரணத்தையும் மிக விபரமாக பேசினார் .இவரும் யாழ் பல்கலை கழக மாணவர் ,பின்னர் பிரபல கணித ஆசிரியர் .தன்னிடம் பயின்ற தர்மேந்திராவும் இவர் கொலையில் உளவு பார்த்ததாக சொன்னார் .

சுபமங்களா இவர் பேராசிரியர் கைலாசபதியின் மகள் .இப்போ அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் அண்மையில் கவுன்சிலராக தெரிவுசெய்ய பட்டவர் .இவர் தான் ,செல்வி ,சிவரமணி ,ரஜனி எல்லோருமே யாழ் பல்கலை கழக பெண்கள் அமைப்பில் இருந்தது ,இலக்கியம் ,நாடகம் ,அரசியல் இவற்றில் இவர்களது பங்கு அதற்கு மேலாக மனித உரிமையில் இவர்கள் கொண்டிருந்த அக்கறை பற்றி மிக தெளிவாக பேசினார் .பூரணி பெண்கள் அமைப்பு அதன் செயற்பாடுகள் பற்றி எல்லாம் விபரமாக சொன்னார்.

கோவிந்தனின் புதியதோர் உலகத்தின் இலக்கிய தரத்தை பலரும் மெச்சி அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவேண்டிய தேவையையும் கூறினார்கள்.

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

நானும் சில குறிப்புகள் சொன்னேன் குறிப்பாக ரஜனி பற்றி .

நினைவு கூரலுக்கு போனதில் மிக திருப்தியாக வீடு திரும்பினேன் .

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

திருப்பி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

எங்களுக்கு கேள்வி கேட்கவும்

பிரசங்கம் நடாத்தவும் மட்டும்தான் தெரியும்.

[size=4]எந்த இலக்கியவாதியும்; மனித உரிமை ஆர்வலரும்; இனப்பற்று உள்ளவனவும்; நிகழ்காலந்தை உணர்ந்து பழைய வரலாற்றை கற்று எதிர்கால திட்டங்களை போட்டு செயல்படுவதே சமுதாய தேவை.[/size]

[size=4]பழையதை மனத்திருப்திக்காக மட்டுமே அலசுவதில் எனதப்பயனும் இல்லை.[/size]

  • தொடங்கியவர்

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

[size=4]நான் அந்த இணைப்பை இணைத்தமைக்கு உங்களின் இந்த கூற்றே காரணம்: [/size]

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

[size=4]இன்று அதே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாம் என்ன செய்தோம்?, என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவானது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

யாழ் பல்கலை கழகத்தில் அன்று அதை புடிங்கினோம் எதை புடிங்கினோம் என்று எல்லோரும் ஒன்று கூடி பினாத்தினோம் என்று எழுதினீர்கள்.

இதுக்குள்ள மனித உரிமை பற்றியும் அக்கறையுடன் இருந்தார்களாம்,,,,,,,,,,,,,,

இப்போதைய யாழ் பல்கலை கழக நிலை இப்படி இருக்கிறது.

இதற்கு இந்த மனித உரிமை ஆவலர்களால் எதையாவது புடுங்க முடியாதா?

என்று கேட்டால்.............

ஆடு மாதிரி தெரிந்த அதே இடம்

மாடு மாதிரி தெரியுது...

இதில எது ஆடு எது மாடு?

மனித உரிமை என்ற போர்வைக்குள் ஒரு எருமை மாட்டு கூட்டம் படுத்திருப்பதாகவே பார்பவர்களுக்கு தெரிகிறது.

  • தொடங்கியவர்

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

இது முன்பு நாங்கள் எழுதுறது உங்களுக்கு புரியவில்லை. தக்க தருணத்தில் உங்களுக்கு கொப்பியடிக்க ஆவது உதவி இருக்கிறது.

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

கருணாவும் டக்கிளசும் எமது நாடுக்காகத்தானாம் கஷ்ட படுகிறார்கள். என்று மேடைகளில் பேசுகிறார்கள்.

சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இந்த விடயத்தை நேற்று நினைவு கூற வந்தவர்களுக்கு எடுத்து சொன்னீர்களா?

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.

விட்டா உலக அரசியலில் நான்தான் பல மாற்றங்களை அவப்போது தேவைக்கு ஏற்றால்போல் செய்து வருகிறேன் என்று எழுதுவீர்கள்.

இது என்ன சின்ன பிள்ள தனமாக இருக்கு?

அரசபடைகளால் அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை

இங்கு உள்ள அரசியல் வாதிகள் ...... பலகலை கழக மாணவர்கள் ஆசிரியைர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மனித உரிமையில் அவர்கள் ஊறி வளந்தவர்களாமே? (நீங்கள் எழுதிதானே நாங்களே வாசிச்சோம்) மனித உரிமை அமைப்புக்களின் ஒரு நேரடி கண்காணிப்பை அங்கே நிலை நிறுத்த முயற்சிகள் செய்யலாம்.

அங்கே அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வியை இடை நிறுத்துகிறார்கள் அவர்களுக்கு நேரடியாக உதவலாம். (இறந்து போனவர்களை எமக்கு தெரியும் ஆதலால் எங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று செய்யும் விளம்பரத்திற்கு செலவிடுவதில் கொஞ்சத்தை அதற்கு பயன்படுத்தலாம்)

அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

ஆகா !

அற்புதம் பின்னிடிங்கள்!

பிரச்சனை வருபவர்களே அதை பார்த்துகொள்வார்கள்.

புலிகளால் பிரச்சனைகளை எதிர்கொண்ட அங்கிருக்கும் மக்களே அதை பார்ப்பார்கள் என்று புலிவாந்தி எடுக்கும் போது தெரியவில்லை. மக்களுக்காகவும் மானவர்களுக்காவும் கடந்த முப்பது வருடமாக புல்லு புடுங்குகிறோம் என்று ஒரு வாந்தியை எடுப்பீர்கள். இப்போ வயலை காட்டி அதில் இருக்கும் புல்லையும் காட்டி ஓரணு இரண்டை புடுங்கலாமே? என்றால் அதை அவர்களே செய்யவேண்டும் என்கிறீர்கள்.

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

இனி வாறமாதம் ஊர்மிளா அக்காவின் நினைவுநாள் வருது.

டொரோண்டோ ...

மொன்றியல்..

நியூ யோர்கிலும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்து. புலிகளால்தான் அவர் கொல்லபட்டார் என்று புளிச்சுப்போன அதே வாந்தியையும் எடுத்துவிட்டு அசத்திவிடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.