Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

559251_273070466130206_285649825_n.jpg

"தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012"

கொண்ட கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் களங்கமின்றி பயணித்த, மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் நல்லதம்பி ஐயா அவர்கள் 06 .08 .2012 அன்று சாவடைந்து விட்டார். இவரின் இழப்பு தமிழ்த் தேசியப் பற்றளார்களை தாக்கியுள்ளது.

எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டவர்களான நாம் இதையும் தாங்கிக் கொண்ட போதும் இவருடைய நினைவுகளில் மூழ்கி, அழியாத பதிவாக எமது நெஞ்சினில் உறைந்துள்ள சிலவரலாற்று நிகழ்வுகளை எமது மக்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றோம்.

கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட G3ஐயா, சு.ம என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1930.04.18 நாள் அன்று வாழைச்சேனையில் பிறந்தார்.

தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து சுயமரியாதைக்கழகம் என்னும் பகுத்தறிவு அமைப்பை தோற்றுவித்தார். இதனால் இவரை மக்கள் சு.ம. நல்லதம்பி என்று அழைக்கக் தொடங்கினர்.

1960களில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் வாழைச்சேனை காகித ஆலையில் பணியிலிருந்துகொண்டு தமிழரசுக் கட்சி சார்ந்த தொழிற்சங்க வளர்ச்சியில் முக்கிய பங்காளராக செயல்பட்டதனால் பணிநீக்கம் செயப்பட்டார் .அப்போதும் மனம் தளராது தனது வழியில் தொடந்து தேசியத்தை காத்துநின்றார்.

தாய்த்தமிழகத்தின் தமிழ்த்தலைவர்களான அறிஞர் அண்ணா அவர்களையும், கலைஞர் கருணாநிதி அவர்களின் அன்றையதமிழ் உணர்வையும் நேசித்ததனால் தனது மூத்த மகனுக்கு கருணாநிதி எனப் பெயர்வைத்தார். இதேபோல் தனது பிள்ளைகளான இளங்செழியன், தயாளு, மேகலா, முத்தழகு ஆகியோருக்கும் தமிழில் பெயர் சூட்டி அழகு பார்த்தார்.

இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழ் தேசிய உணர்வுமிக்க மூத்தமகன் கருணாநிதி தமிழ் தேசிய விரோதிகளாக செயற்பட்ட EPRLF குழுவினரால் கொல்லப்பட்டார். இக் காலத்தில் G3 ஐயா இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படை எமது மண்ணை விட்டு வெளியேறிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்தபோது போராட்டத்திற்கு தம்பிள்ளைகளை போராளியாக ஈந்து 1984ம் ஆண்டிலிருந்து இறுதிவரை தேசிய விடுதலை இயக்கத்தோடு பயணித்து முள்ளிவாய்க்கால்வரை சென்று திரும்பிய தீரர் G 3 ஐயா அவர்களாகும்.

G3என்பது எமது போராளிகள் ஏந்திய போர்க்கருவிகளில் ஒன்றாகும். இதன் பெயர் கொண்டுஅழைக்கப்பட்ட நல்லதம்பி ஐயா போராளிகளோடு ஒன்றித்து நின்றதற்கான அடையாள அழைப்பாக இதனை எடுத்துக்கொள்ளமுடிகிறது.

``முத்தழகு`` இவரின் மகன்களில் ஒருவர். 24 . 10 .1987 அன்று கப்டன். ரதீஷ் ஆக களத்தில் வீழ்ந்தார். மட்டக்களப்பின் முதல் பாசறையில் பயிற்சி பெற்றவர். தன் மகனின் பயணத்தில் பாதம் பதித்த நல்லதம்பி ஐயா தளம்பாது, தடம்புரளாது தொடந்தார். இவரைத் தேசியத் தலைவரும் நன்றாக அறிந்திருந்தார். தளபதிகளும் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்,போராட்ட வரலாற்றில் பல குடும்பங்கள் தங்களை அர்பணித்து விடுதலையில் செயல்பட்டிருக்கின்றது. இக்குடும்பங்களில் ஒரு குடும்பமாக இவர் குடும்பமும் உள்ளடங்கியிருந்தது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தின் முதல் மாவீரர் லெப். பரமதேவா இனங்கண்ட இனப்பற்றாளர் . இவருடன் இணைந்ததாக விடுதலைப் போராளிகளுக்கு வழிகாட்டியாக மாறி பணிசெய்த பற்றாளன். இவரை அறியாத நிலையில் மட்டு -அம்பாறை மாவட்டத்தில் செயல்பட்ட ஆரம்பகால போராளிகள் எவரும் இருந்ததில்லை. ஏனெனில் வாகரை மண்ணில் கிருமிச்சை என்ற ஊரில் இவரைக் கடந்துதான் இவரின் உதவியுடன் போராளிகள் பயணத்தை மேற்கொண்டனர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப வளர்ச்சியில் மட்டக்களப்பில் இவரின் பங்கு முக்கியமாக இருந்ததைக் குறிப்பிடமுடியும்.

தமிழை நேசித்தார், தமிழீழ மண்ணை நேசித்தார், அந்த மண்ணின் விடுதலையை நேசித்தார், இதனால் விடுதலைப் புலிகளோடு சங்கமித்தார். மனைவியோடு மறைவிடம் தேடி விடுதலைப் புலிகளோடு இணைந்து பல காலம் வாழ்ந்து இறுதிவரை பயணித்தார். எண்ணற்ற வீரமறவர்களை இழந்து, ஏங்கி நிற்கின்ற எமது மண்ணின் வீரத் தமிழ்ப் பெற்றோர்கள் என்ற நிலையிலும் இவரைப் பார்க்கமுடிகின்றது.

ஆயிரமாயிரம் போராளிகளிகளால் அன்பாக G3 ஐயா என்று அழைக்கப்பட்ட இவரைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் இவருடைய உணர்வை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர் .இவர் பிறந்த மண்ணில் இன்று அந்நிய ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது. எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்றிருந்த காலம் மாறிப்போகின்றது. தள்ளாத வயதில் இதை எண்ணி வேதனை கொண்டிருந்தார். தாய் மண்ணின் விடுதலைக்கு வித்தாக வீழ்ந்த மகனின் வீரத்தை எண்ணி கடைசி நேரத்திலும் கலங்காமல் விழி மூடியுள்ளார் என்பது உறவினர்கள் மூலமாக நாம் அறிந்த உண்மையாகும்.

அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் வேளையில் அவர் இழப்பால் தவிர்க்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கின்றோம்.

ஒருநிமிடம் கண்முடி, தலைதாழ்த்தி ,வணங்குகின்றோம்.

எமதுதேசிய விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் இவரின் சாவு நிகழ்ந்துள்ளதால் தேசியப் பற்றாளரான இவருடைய சேவைகளை தேசிய விடுதலை இயக்கத்தால் நினைவுகூர முடியவில்லை. என்றாலும் போராட்டத்தோடு இணைந்திருந்த பலரால் இவர் நினைவுபடுத்தப்படுகின்றார்.

காலத்தின் மாறுபாட்டால், களத்தில் பயணித்த பலர் மறைக்கப்படுகின்ற நிலையில் இவரை நாம் நினைவு படுத்துகின்றோம். எண்ணற்ற தேசியப்பற்றாளர்களுடன் இவரையும் இணைத்துக்கொள்வோம். இவருடைய மகன்களின் அர்ப்பணிப்பும், இவருடையதமிழ் தேசிய செயல்பாடும் என்று வீண் போகாது என்று நம்புவோம். நம்பிக்கையுடன் எமதுபணியைத் தொடர்வோம்

Posted

G3 ஐயாவுக்கு வீரவணக்கங்கள்.

நல்லதம்பி ஐயா தனக்கு G3 தரவேண்டும் என்று அடம்பிடித்ததனால், அவரை G3 ஐயா எனவும் அவரின் துணைவியாரை G3 அம்மா எனவும் போராளிகள் செல்லமாக அழைத்துவந்தார்கள். மட்டக்களப்பில் போராட்டம் முகிழ்ந்த காலப்பகுதியில் இருந்து தமிழின விடுதலைக்காகவும் தமிழீழவிடுதலைப்புலிகளுடன் ஒன்றிவாழ்ந்துவந்தவர்கள் இவர்கள். வட தமிழீழம் செல்லும்வரை காட்டிலேயே போராளிகளுடனேயே வாழ்ந்து விடுதலைப்பணியைச்சுமந்தவர்களில் இந்த மாவீரர்கள் பெற்றோரும்....

Posted

ஐயாவுக்கு வீர வணக்கங்கள் ...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் வேளையில் அவர் இழப்பால் தவிர்க்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கின்றோம்.

ஒருநிமிடம் கண்முடி, தலைதாழ்த்தி ,வணங்குகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆத்மா சாந்தி அடையட்டும்

Posted

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]ஆழ்ந்த இரங்கல்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயாவுக்கு வீரவணக்கங்கள்

Posted

ஐயாவுக்கு வணக்கங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Posted

கண்ணீர் அஞ்சலிகள், ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயாவின் ஆத்மா சாந்ந்தியடைய எல்லாம் வல்ல இறையனை பிரார்த்திக்கின்றேன்.

Posted

[size=4]இப்படித்தான் வாழுவோம் என்று ஒரு இலட்சிய வீர வாழ்வு![/size]

[size=1]

[size=4]சிரம் தாழ்த்திய வணக்கங்கள்!! [/size][/size]



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து       மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • பிரிவுகள்   புலிகளின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் தேவைக்காக 'மருத்துவப் பிரிவும் மக்களின் தேவைக்காக 'தமிழீழ சுகாதார பிரிவும்' செயற்பட்டன.   விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு: தமிழீழ சுகாதார பிரிவு: தமிழீழச் சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு மருத்துவ பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது... தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்) தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள் படையணிப்பிரிவு மருத்துவமனைகள் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.) முல்லை மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.