Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருந்தவே திருந்தாது நம்ம இனம்...

Featured Replies

நாரதர்

உதற்கு அற்புதமான தீர்வு அஜிவன் எழுதியுள்ளார். அது உங்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா??

  • Replies 74
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இலங்கை தமிழர் நடத்தும் டிடின் ல் ..வரும் விளம்பரங்களைப்பார்த்தால்..கூ

ன் கருத்திலிருந்து..

"பாருங்க கனடாவில புலிகளை தடை செய்திட்டாங்கஇ இவ்வளவு நாளும் தூங்கீட்டு இருந்த நம்ம இனம் இப்ப என்ன செய்தெண்டுஇ இப்பதான் முழிச்சு எழுந்தமாதிரி கூட்டம்இ ஒற்றுமை வாரம் எண்டு திண்டாடினம்இ 3 லட்சம் பேர் இருக்கிற கனடாவில சில ஆயிரம் சிங்களவன் வந்து பொய் பிரச்சாரம் செய்து புலிகளை தடை செய்யப்பண்ணிட்டாங்கஇ எங்க மக்கள் என்ன செய்திச்சினம்? அண்மை நாட்களாக அங்க இருக்கிற தமிழர் அலுவலங்கள்இ ரீயுசனுகள் எண்டு பாரபட்சம் இல்லாமல் கனடியன் பொலிஸ் பொலிஸ் நாய்கள் கூட தேடுதல் நடாத்தினமாம்இ உப்படியான நிலை வந்துமுடியத்தான் நம்ம மக்கள் விழிப்பு அடைச்சிருக்கினம்இ (கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம்)"

ஏன் நண்பனே விடுதலைப்புலிகளைச் கனடாவில் தடைசெய்ய முக்கிய காரணம் சிங்களவன் என்று கூறுகின்றீர்கள்..............

உங்களுக்கு யாரொங்கோ அதைச் சொன்னது........கனடியத் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பார்ப்பது குறைவுபோல.......

ஓஓஓஓ நீங்கள் சோமாலியாவில் இருக்கின்றபடியால் கனடியப் பத்திரிகை பார்ப்பது கஸ்ரம் தானே.........

தமிழனே தமிழனுக்குப் போட்ட ஆப்புத் தான் கனடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்ய முக்கிய காரணம்.

இங்கு சற்றுப்படித்து எம் சில தமிழர் கனடிய அரசியலில் உள்ளிடவே பார்க்கினமே ஒழிய தமிழரைப்பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. அத்துடன் தமிழ் வர்த்தகர் ஒருவர் கனடிய காவல்துறைக்கு கொடுத்த முறையீட்டின் காரணமே அதற்கு சான்றாக அமைந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

ஆமாங்கண்ண,, இப்படி ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருந்தால் யார் தான் அப்ப செய்யிறாங்க அதை??

இப்படியே பழமொழி முதுமொழி சொல்லி சொல்லியே நம்ம காலத்தை ஓட்டியாச்சு, எதிர்கால சந்ததிக்கும் இப்படி பழமொழிகளை சொல்லிட்டு சிவனே எண்டு போய் சேர்ந்திட்டம் எண்டால் பிரச்சினை இல்லை, அட்வைஸ் பன்னுறது சுலபம், அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஸ்ரம்,

2 வரியில பழமொழியை சொல்லி அந்த பழமொழிக்க இருக்கிற அடங்கிற விடயங்களை மறைச்சிட்டுறீங்க, 2 வரில பழமொழி சொல்லுறதைவிட சில உதாரணங்களை எடுத்து சொல்லி இருந்தால் அதை பார்த்து 10ல ஒருத்தன் திருந்த வாய்ப்பு இருக்கு,,

பி.கு: இதுக்கும் பழமொழி ஒண்டும் சொல்லிடாதேங்க, பிறந்ததில இருந்து சாகும் வரை இதை கேட்டு கேட்டு புழிச்சுப்போச்சு,, நம்மட முப்பாட்டான் மார் தேடிவைச்ச சொத்துக்களீல இந்த பழமொழியும் ஒண்டு, வேலை வெட்டி ஏதாவது செய்திருந்தால், இப்படியான பழமொழிகள் இயற்றுவதற்கு அவங்களுக்கு ரைம் இருந்துக்காது, அந்த நேரத்தில சும்மா வேலை வெட்டி இல்லாமல் இருந்த நேரம் யோசிச்சு கண்டுபிடிச்ச பழமொழிகளை சொல்லிக்கொண்டு இருக்க,, :evil: :wink: :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நண்பனே விடுதலைப்புலிகளைச் கனடாவில் தடைசெய்ய முக்கிய காரணம் சிங்களவன் என்று கூறுகின்றீர்கள்..............

உங்களுக்கு யாரொங்கோ அதைச் சொன்னது........கனடியத் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பார்ப்பது குறைவுபோல.......

ஓஓஓஓ நீங்கள் சோமாலியாவில் இருக்கின்றபடியால் கனடியப் பத்திரிகை பார்ப்பது கஸ்ரம் தானே.........

தமிழனே தமிழனுக்குப் போட்ட ஆப்புத் தான் கனடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்ய முக்கிய காரணம்.

இங்கு சற்றுப்படித்து எம் சில தமிழர் கனடிய அரசியலில் உள்ளிடவே பார்க்கினமே ஒழிய தமிழரைப்பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. அத்துடன் தமிழ் வர்த்தகர் ஒருவர் கனடிய காவல்துறைக்கு கொடுத்த முறையீட்டின் காரணமே அதற்கு சான்றாக அமைந்தது.

அட அப்ப பதில் அளிக்க என்னம் சுகமா போச்சு, சரி எத்தனை லட்சம் தமீழீழ மக்கள் கனடாவில இருக்கினம்? அதில எத்தனை லட்சம் தமிழீழ பற்றாளர்கள் இருந்தினம்? எத்த்தனை நூறு எட்டப்பர் கூட்டம் இருந்திச்சு? இத்தனை லட்சம் பேரை சில நூறு எட்டப்பர் கூட்டம் மும்மூரமா செயற்பட்டு முகத்தில கரி பூசி இருக்கிறாங்களே, அப்ப அதுக்கு யார் காரணம்? பல நூறு எட்டப்பருடைய கதையை கனடியன் அரசாங்கம் கேட்டிருக்கெண்டால் மற்றாக்கள் வாயே திறக்கல்ல எண்டுதானே அர்த்தம்?

இன்று பதிவு இணையத்தளத்தில் போட்டிருக்கு சிறுவர் தமிழ் ரியுசனில எல்லாம் கேட்டுக்கேள்வி இல்லாமல் நாய்களோட உள்ளடுதுகள் பொலிஸ் நாய்கள் எண்டு, அந்த ரியுசனுக்கும் அந்த முதலாளியின் வேண்டுகோள்தான் காரணமோ? எட்டப்பர் கூட்டம் செயற்பட்டமாதிரி நம்ம மக்கள் செயற்பட்டு இருந்தினம் எண்டால் இது வந்து இருக்குமா? வருடத்துக்கு ஒரு முறை பொங்குதமிழ் நடாத்தினால் மட்டும் போதுமா? :roll: :? :evil:

Danklas wrote:

மு.கு: வசம்பர் உமக்கு நோர்மலா கருத்து எழுதத்தெரியாதோ? அது எதற்கு எழுத்தை சரிச்சு எழுதி கலர் பூசி வேடிக்கை காட்டுறீர்? எல்லோரும் எழுதுறமாதிரி சாதரணமாக எழுதினால் எழுதுபடாதோ?? அடம்பிடிக்கிறிங்களய்யா... சாக்.. :evil:

அப்பு டண் உம்மடை மு.கு, பி.கு எல்லாம் இருக்கட்டும். நான் எழுத்தை சரித்தெழுதுவதும் நிமித்தி எழுதுவதும் எனது சொந்த விடயம். அதைப்பற்றி நீர் புலம்ப வேண்டாம். எல்லாரினதும் கருத்துக்கும் பதில்ப் புலம்பல் புலம்பிய நீர் ஏன் எனது கருத்துக்கு ஒன்றும் புலம்பவில்லை. உம் போன்றவர்கள் எமமவர் திறைமைகளை ஊக்குவித்து வளர்க்கவும் மாட்டீர்கள் அடுத்தவன் செய்வதை கிண்டல் செய்வதை நிறுத்தவும் மாட்டீர்கள். ஒரு விடயத்தை தவறென்று விமர்சித்தால் அதற்குரிய மாற்று வழியையும் சொல்ல வேண்டும்.. வெற்றுப் புலம்பல்களால் எதையும் சாதித்து விட முடியாது :?: :idea: :arrow: :roll:

மேற்கோள்:

வெற்றுப் புலம்பல்களால் எதையும் சாதித்து விட முடியாது.

வேறு எந்த புலம்பலால் எல்லாத்தையும் சாதிக்கலாம் வசம்பு - அண்ணா?

நீங்க செய்வது போலவா?

இல்லை வேறுவழியிலயா?

சொல்லுங்கோ தெரிஞ்சுக்கிறம்! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா வந்துட்டாங்க சொல்ல, அதுக்கு சிலர் பக்கவாத்தியம் வேற,, ஒய் பிரியசகி என்ன லொள்ளா?

வேறு ஒன்றுமில்லை டண். படத்தை எடுத்து, இணைத்தவர் கூடப்பிறந்தவராம். அது தான் அக்காவிற்கு............. இப்படித் திட்ட கோபம் வந்திட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு டண் உம்மடை மு.கு, பி.கு எல்லாம் இருக்கட்டும். நான் எழுத்தை சரித்தெழுதுவதும் நிமித்தி எழுதுவதும் எனது சொந்த விடயம். அதைப்பற்றி நீர் புலம்ப வேண்டாம். எல்லாரினதும் கருத்துக்கும் பதில்ப் புலம்பல் புலம்பிய நீர் ஏன் எனது கருத்துக்கு ஒன்றும் புலம்பவில்லை. உம் போன்றவர்கள் எமமவர் திறைமைகளை ஊக்குவித்து வளர்க்கவும் மாட்டீர்கள் அடுத்தவன் செய்வதை கிண்டல் செய்வதை நிறுத்தவும் மாட்டீர்கள்.

இதோடா!! இவரின் திறமைகளாம். றேடியோவில் லொள்ளு விடுவதைச் சொல்கின்றீரா? கட்டாயம் ஊக்குவிக்கத்தான் வேண்டும்.

மாற்றுவழி எப்படிப்பட்டது என்பது எமக்குத் தெரியாதா? அதை வேறு நீங்கள் சொல்லும்போது!!

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா நடிகர் என்ற செய்தியினைப்பார்த்தபோது தான் சிட்னியில் நடந்த சம்பவம் யாபகத்துக்கு வருகிறது. சிட்னியில் பலதமிழர்கள் இருக்கும் இடங்களில் ஒன்று கோம்புஸ். 3 வருடங்களுக்கு முன்பு கோம்புஸ் தேவலாயம் ஒன்று பொட்டு வைத்த வயோதிபப் தமிழ் பெண்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. எட எல்லோரும் ஒரே நேரத்தில் மதமமாறி விட்டார்களா என்று நினைச்சு விசாரிக்க தேவலாயத்துக்கு வந்த நடிகர் எ.வி.எம்.ராஜனை பார்க்கவந்த கூட்டம் என்று அறிந்தேன். அந்த தேவாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில் எத்தனையோ பிரமுகர்களின் கூட்டங்கள், அஞ்சலிகள் நடைபெற்று வந்தன. ஆனால் குறைவான மக்களே கலந்து கொள்வது வழக்கம். திருமாவளவன்,ஜோசப் பராராஜாசிங்கம், ரவிராஜ், கஜேந்திரன், சிவாஜி லிங்கம் போன்ற பிரமுகர்களுக்கு வராத கூட்டம் எ.வி.எம்.ராஜனைப்பாக்க வருகிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்கிதில்லையே, இந்த கேடு கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பல தாயகத்துக்கு உதவி செய்யும் அமைப்புக்கள், வானொலிகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கிடையே போட்டிகள் உள்ளன. ஒரு அமைப்பு விழா வைத்தால் மற்றைய அமைப்பினர் போட்டி காரணமாகச் அவ்விழாவுக்குச் செல்லமாட்டார்கள். 3 கிழமைக்கு முன்பு தாயகத்துக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்க ஒரு அமைப்பினர் தமிழகப்பாடகர்களினை அழைத்திருந்தார்கள். நிதி சேகரிப்பு நல்லவிடயம் என்றாலும், அப்பாடகர்களுக்கு 2 கிழமைக்குமுன்பு விருந்துபசாரம் செய்தார்கள். அந்த அமைப்பினர் கலந்து கொண்டார்கள். ஆனால் விருந்துபசாரம் நடைபெற்ற தினத்தில், நேரத்தில் இன்னொரு அமைப்பினர் நாட்டுப்பற்றாளர் தினத்தினைக் கொண்டாடினார்கள். அன்னை பூபதி கலைனிகழ்ச்சிகள் நடந்தன. அன்னை பூபதி சாப்பிடமால் இந்திய அரசின் கோரமுகத்தினை உலகத்துக்குக் காட்டி உயிர் நீத்தார். அவரது நினைவு நாளில் இந்தியாவில் இருந்து வந்த பாடகர்களுக்கு விருந்துபசாரம் தேவையா?.

வை.கோ ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறைச்சாலைக்கு சென்றார். வை.கோவுக்கு ஆதாரவாக வானொலி1னைச் சேர்ந்தவர்களினால் ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. வானொலி1னால் கூட்டம் ஒழுங்கு செய்ததினால் போட்டி வானொலி2னிர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அய்யா தாயகத்துக்கு தொண்டு என்று வந்தபின் உங்களுக்கு போட்டி தேவையா?

மாவீரர் தினத்துக்குச் செல்லும் மக்களினை விட சிட்னியில் ரகுமானின் நிகழ்ச்சி சென்ற ஈழத்தமிழர்கள் தான் அதிகம். மொழி புரியாத கிந்தி, தெழுங்குப்பாடல்களினைக் கேட்டு விட்டு கடைசியாக வந்தேமாதரத்தினைக் கேக்க 60,70 டொலர் பணங்களினை செலவிடுகிறார்கள். நடிகர்களினைப் பாக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, பிறந்த மண்ணில் உள்ளவர்களினையும் பாருங்கள்

இதோடா!! இவரின் திறமைகளாம். றேடியோவில் லொள்ளு விடுவதைச் சொல்கின்றீரா? கட்டாயம் ஊக்குவிக்கத்தான் வேண்டும்.

மாற்றுவழி எப்படிப்பட்டது என்பது எமக்குத் தெரியாதா? அதை வேறு நீங்கள் சொல்லும்போது!!மதனராசா

அது மட்டுமில்லை மதனராசா வசம்பு றெடியொவிலை லௌ;ளு மட்டும் விடுறேல்லை அவரது ரசிகைகளை சுவிசுக்கு கூப்பிட்டு சுவிசும் சுத்தி காட்டுறவரர் அவரின்ரை செலவிலை இப்பிடித்தான் ராமராயனின்ரை வானெலியிலை உலகசாதனை செய் த அம்மணியையும் கூப்பிட்டு சுத்தி சுத்தி காட்டினவர்

தனிப்பட எந்தத் தாக்குதலும் வேண்டாம்,இது எங்களுக்க இருக்கும் ஒரு பிரச்சினை, நாங்கள் ஆளமாகச் சிந்தித்து ,தீர்வு காண வேணும்.அதை விட்டுட்டு ஆள் ஆளுக்கு திட்டித் தீர்ப்பதால் இங்குள்ள எட்டப்பர்களுக்கு சந்தில் சிந்து பாட இலகுவாக இருக்கும்.

முதலில இது விஸ்ணு,சகி இல்லை டிடிஎன் சம்பந்தமான பிரச்சினை இல்லை,இது ஈழத் தமிழர் எல்லாருக்குள்ளும் இருக்கும் பிரச்சினை.

முதலில நிதர்சனமான உண்மைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேணும்.எந்த தீர்வுக்கும் இது அவசியம்.

தமிழ் நாட்டில் சினிமா என்பது ஒரு தொழில் துறை .இது பன்னெடுங்காலமாக இருக்கும் ஒரு முன் நேறிய தொழில் துறை.இதற்கு அவர்களுக்கு திரைப்படக் கல்லூரிகள்,தமிழ் நாட்டு அரசின் அரவணைப்பு, மற்றது பல லட்சம் மக்களைக் கொண்ட சந்தை இருக்கிறது.இதில் அவர்களின் முதலீடு என்பது பல கோடிகளைத் தொடும்.இதற்கு ஆதரவாக அவர்களின் வளர்ச்சி அடைந்த ஊடகத்துறையும் இருக்கிறது.

நாமோ இப்போது தான் சில சுயமான முயற்ச்சிகளை எடுத்துவருகிறோம்.எம்மிடம் இப்படி ஒரு முன் நேறிய தொழில் துறை இல்லை.ஆகவே நாம் எவ்வாறான செயற்பாடுகளினால் எமது தமிழ் சினிமாவை வளர்க்கலாம் என்று யோசிக்க வேணும்.

அண்மையில் தீபம் தொலைக் காட்சியில் ,மண் திரைப் படத்தை எடுத்த சண்ணின் நேர்காணலைக் காண நேர்ந்தது.

அதில் இருந்து சில சுவையான தகவல்கள்.சண் அந்தப் படத்தை எடுக்க அவருக்கு 175 ஆயிரம் பவுண்ஸ்கள் செலவானது. அவர் இந்தியாவில் அந்தப் படத்தை எடுத்திருந்தார்.அவர் அங்கு எடுத்தபடியால் அந்தப் படத்தின் தொழில் நுட்பத் திறன் மிகச் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறினர்.அங்கு படம் எடுப்பதற்கான சாதனங்களில் இருந்து, தொழில் துறை சிறப்புப் பயிற்ச்சி, தொழில் நுட்ப பங்கீடு இருக்கிறது.இதயே அவர் இங்கிலாந்தில் செய்ய எத்தனித்தார் எனெனில் அவரின் செலவு பன் மடங்காக இருந்திருக்கும்.காரணம் தமிழ் நாட்டில் முதலிடப்படும் உபகரணங்களின் பாவனை என்பது பல படங்களிற்கு பங்கிடப் படுவதால், அங்கிருக்கும் முதலீடானது பல வாறாகப் பங்கிடப் பட்டு செலவுகள் குறைவாக்கப் படுகின்றன.அதோடு படமும் தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக இருகின்றது.அவர்களுக்கு இது தான் முழு நேரத் தொழில்.

அந்த வகையில் சண்ணின் முயற்சியானது ஒரு முன் நேற்றகராமான விடயம்.இனி புலத்தில் உள்ள ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் குடுத்து இதனை ஊக்குவிக்க வேணும்.அஜீவன் போன்றோரும் வெறும் குறும் படங்கள் என்ற நிலையில் இருந்து சண்ணைப் போல் முழு நீள படங்களை எடுக்க வேணும்.

மேற்குறிப்பிட்ட பிரச்சினை ஈழப்படங்களுக்கு மட்டும் அல்ல, பிரித்தானிய ஆங்கிலப் படங்களுக்கும் இருகின்றது.இவை கொலி வூட் படங்களுடன் போட்டி போடாமல் தமக்கென ஒரு சந்தையை உருவாக்கி அதற் கேற்றவகையில் முதலீட்டுடன் அல்லது கூட்டு முயற்சியில் படங்களை எடுகின்றன.பிரான்ச்சிலும் சிறிலங்க்காவிலும் உள்ளூர் திரைப்படத் துறைக்கு அரச ஆதரவு,திரைப்படக் கூட்டுத் தாபனங்கள் உள்ளன.

மேலும் பிரித்தானியாவில் வெற்றியீட்டிய பென்டிற் லைக் பெக்கம்,பஜ்ஜி ஒன் த பீச் மற்றும் ப்ரிட்ஜட் ஜோன்ஸ் டையரி போன்ற படங்களை ஒத்த புலத் தமிழர்களின் சந்தையை நோக்கிய படங்களை நாம் உருவாக்க வேணும்.குறிப்பாக இளந் தலைமுறையைக் கவரும் வண்ணம் படங்களை எடுக்க வேணும்.இதை விடுத்து பழ மொழிகளைச் சொல்வதாலோ அல்லது தனி நபர்களின் மேல் குறை சொல்வதாலோ நாம் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

வேறு ஒன்றுமில்லை டண். படத்தை எடுத்து, இணைத்தவர் கூடப்பிறந்தவராம். அது தான் அக்காவிற்கு............. இப்படித் திட்ட கோபம் வந்திட்டுது.

மதனராசா...இது இதில் தேவை இல்லாத ஒரு விடயம் ..நான் சொல்ல வந்தது வேற..நீங்கள் ஒன்றையே பிடித்து தொங்கிண்டு இருந்தால்..அதற்கு நான் ஒன்றும் செய்ய ஏலாது..இதுவே எத்தனை தடவை..எனது சொந்தமோ பந்தமோ இணைக்காத கதைகளுக்கு நான் கதைத்திருக்கின்றேன்..அது மட்டுமில்லை..இதில் மற்றவைக்காக நான் கதைக்க வேண்டிய அவசியமே இல்லை..ஏனென்றால் டண் அண்ணா சொல்ல வந் தது..நம்ம தமிழ் மக்களை பற்றி...படம் போட்டவரைப்பற்றி அல்ல!!!!!!!! அதை முதலில் புரிந்து கொண்டு கதையுங்கள்.. :evil: :evil: மற்றவர்களின் குறைகளையும்..பிழைகளையும் சொல்லி பழகிய நமது மக்கள்..அந்த நேரத்தை மற்றவரை கொஞ்சம் ஊக்கப்படுத்தினால்..கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்..உங்கள் கருத்தை சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்..அதை விட்டு விட்டு..கருத்து சொல்ல வந்த என்னை குற்றம் கண்டு பிடிக்காதீர்கள்..நான் என்னோட கருத்தை வைத்தேன்..டண் அண்ணா..நேராக அதற்கு பதில் தந்தார்..இப்படி நேராக கதையுங்கள்..!!!

பி.கு:அப்படியே நீங்கள் சொல்வது போல் அண்ணருக்காகவோ..நண்பிக்காகவோ கதைத்தேன் என்றால்..அதிலும் தப்பேதும் இல்லையே..ஏதோ நடக்காததையா செய்து விட்டேன்..? வேறு பெயரில் வந்து..தனக்காகவே தான் கதைக்கும்போது..இது ஒன்றும் பெரீய குற்றம் ஏதுமில்லயே :evil: :P

இதை விடுத்து பழ மொழிகளைச் சொல்வதாலோ அல்லது தனி நபர்களின் மேல் குறை சொல்வதாலோ நாம் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

ம்..இதை தானே நானும் சொன்னேன்..அதற்கு இப்படி குதிக்கிறார்கள்..நானும் ஒன்றும் படம் எடுத்ததை சரியோ பிழையோ என்று சொல்ல வரவில்லையே.. விளம்பரங்களிலும் மற்ற படங்களிலும் வருபவர்களை பார்த்தவர்கள்..ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டு..இப்போ இதற்கு ஏன் சொல்கிறீர்கள் என்று தானே கேட்டேன்..

ஏன்..அதை ஏற்று கொள்கிறீர்கள் இல்லை :?: ..ஏன் நான் சொன்ன தமிழ் வேறயா..இல்லை நான் ஒரு பெண் என்றதாலா? (புது பிரச்சனை ஆரம்பிக்கவில்லை.. உண்மையாக தான் கேட்கிறேன்.. :roll: )

ரொம்ப முக்கியம்!!

தூயா

ரொம்ப முக்கியம்!!!

:roll: :roll:

ஆமாங்கண்ண,, இப்படி ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருந்தால் யார் தான் அப்ப செய்யிறாங்க அதை??

இப்படியே பழமொழி முதுமொழி சொல்லி சொல்லியே நம்ம காலத்தை ஓட்டியாச்சு, எதிர்கால சந்ததிக்கும் இப்படி பழமொழிகளை சொல்லிட்டு சிவனே எண்டு போய் சேர்ந்திட்டம் எண்டால் பிரச்சினை இல்லை, அட்வைஸ் பன்னுறது சுலபம், அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஸ்ரம்,

2 வரியில பழமொழியை சொல்லி அந்த பழமொழிக்க இருக்கிற அடங்கிற விடயங்களை மறைச்சிட்டுறீங்க, 2 வரில பழமொழி சொல்லுறதைவிட சில உதாரணங்களை எடுத்து சொல்லி இருந்தால் அதை பார்த்து 10ல ஒருத்தன் திருந்த வாய்ப்பு இருக்கு,,

பி.கு: இதுக்கும் பழமொழி ஒண்டும் சொல்லிடாதேங்க, பிறந்ததில இருந்து சாகும் வரை இதை கேட்டு கேட்டு புழிச்சுப்போச்சு,, நம்மட முப்பாட்டான் மார் தேடிவைச்ச சொத்துக்களீல இந்த பழமொழியும் ஒண்டு, வேலை வெட்டி ஏதாவது செய்திருந்தால், இப்படியான பழமொழிகள் இயற்றுவதற்கு அவங்களுக்கு ரைம் இருந்துக்காது, அந்த நேரத்தில சும்மா வேலை வெட்டி இல்லாமல் இருந்த நேரம் யோசிச்சு கண்டுபிடிச்ச பழமொழிகளை சொல்லிக்கொண்டு இருக்க,, :evil: :wink: :P :P

"அட்வைஸ் பன்னுறது சுலபம், அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஸ்ரம்,"

-Danklas

இதைத்தான் உங்களுக்கும் சொல்ல இருக்கு.

இங்க வந்து எழுதுறதுக்கு அவ்வளவு நேரமெடுக்காது.

இலங்கை மற்றும் சுவிஸில படப்பிடிப்பு நடத்தும்

எனது படமொன்றுக்கு இரண்டு நடிகைகள் தேவை.

மார்கழி 2006 வரை காலமிருக்கு...........

இது உங்களுக்கு நான் தரும் காலம்.

உங்கள் பணிக்கு 1000 பிராங் வேற சன்மானம்.

முடிந்தால் தேடித் தாங்க ராசா

உங்களுக்கு கோடி புண்ணியம்.

மேலதிக தகவல்:

இவங்க எங்கட தமிழர்களா இருக்க வேணும்.

ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்த

ஐரோப்பிய அக்ஸன் கலந்தவராகவும் 17-20 வயதிற்குட்பட வேண்டும்.

காரணம் ஐரோப்பாவில் வாழும் ஒரு பெண்ணுக்கு

இலங்கையில் நடைபெறும் ஒரு விபத்தை

ஒட்டியே கதை நகர்கிறது.

ஐரோப்பிய நடை முறை பாவனைகள்

புலம் பெயராமல் வாழும் இலங்கையரிடமோ

இந்தியரிடமோ வராது.

இலங்கை மற்றும் சுவிஸில் படப்பிடிப்பு

இலங்கையின் கொழும்பு அண்டிய பகுதியில்

2 வாரம் படப்பிடிப்பு.

இலங்கைக்கு வரும் போது தாய் - தந்தை அல்லது

அவரது பொறுப்புக்காக வரும் ஒரு உறவினருக்கான செலவுகளும் வசதிகளும் கொடுக்கப்படும்.

நான் தேடிக் களச்சுப் போய்

இப்போது இலங்கையில சிலரை

தற்காலிகமாக தேர்வு செய்திருக்கிறன்.

அவங்கள விட்டு விட்டு நல்ல திறமைசாலிகளாக இருந்தால் நிச்சயம் பிரயோசனப்படுத்துவேன்....

இங்க கன பேர் சொன்னாங்க இங்க விளம்பரம் எண்டால் இந்தியனைத்தான் கூப்பிடுறாங்க எண்டு, டிடிஎன்னில கூட இந்திய விளம்பரம் தான் அதிகம் எண்டு, உண்மைதான், நம்ம ஆக்களிட்ட திறமை இருந்தும் என்ன பிரியோசனம்? ஒரு 1 நிமிச விளம்பரத்தை நம்ம ஆக்களைக்கொண்டே எடுங்கபார்ப்பம், உதாரணத்துக்கு ஒரு அங்கிளும் அன்ரியும் கடன் எடுக்கிற (சுவிஸ் செல்வா சுக்கோ மக்கோ) விளம்பரம் ஒண்டில நடிச்சிருப்பினம், என்னமாதிரி அந்த விளம்பரத்தில நடிச்சிருப்பாங்க எண்டு பார்த்தியளா? அதுவிளம்பரமா? அதில சொல்லுவா அந்த அன்ரி, நாங்கள் இப்ப சந்தோசமா இருக்கிறம் எண்டு, அப்படி சொல்லக்கை அவங்கட முக பாவனையை பாருங்க எப்படி இருக்கெண்டு, (தாங்கள் ரொம்ப கஸ்ரப்பட்டம் எண்டு சொல்லக்கை இருக்கிற முக அக்ஷனுக்கும், இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறமெண்டு சொல்லுறதுக்குமிடையில ஒரு வித்தியாசமும் தெரியல்லை) அதை ரசிக்க முடிதா? என்னொமொண்டு ஜவுளிக்கடை விளம்பரம் கத்தரித்தோட்டத்து வெருளிக்கு ஏதோ கட்டிவிட்டமாதிரி ஒரு பொண்ணு நடந்துவருவா, வரக்கை வெட்கம் வேற, அப்படிப்பட்ட விளம்பரங்களால டிடிஎன்னுக்கும், கடைக்கும் தான் நஸ்ரம், அப்படியான விளம்பரங்களை பார்க்கிறவர்களுக்கு போர் அடிக்கும், விளம்பரம் எண்டால் கவரக்கூடியதா எடுக்கனும், ஐரோப்பிய தொலைக்காட்சிகளில பாருங்க என்னமாதிரி ஒரு விளம்பரம் எடுக்கிறாங்க எண்டு, அதை மாதிரி ஒரு விளம்பரத்தை இந்தியாவில எடுத்தாங்க எண்டால் நிச்சயமாக கவருற மாதிரித்தான் எடுப்பாங்க, எங்க ஆக்களை கொண்டே ஒரு விளம்பரத்தை நன்றாக எடுத்து அது நல்லா இருந்து அதற்கு வரவேற்பு கிடைச்சுதெண்டால் இந்தியனை கூப்பிட்டு எடுக்கமாட்டாங்க, கண்டிப்பா எங்க மக்களிடம் திறமை இருக்கு, ஆனால் அதை வெளிக்காட்ட தயங்குறாங்க,

:evil:

எங்க ஆக்களை கொண்டே

ஒரு விளம்பரத்தை நன்றாக எடுத்து

அது நல்லா இருந்து அதற்கு வரவேற்பு கிடைச்சுதெண்டால் இந்தியனை கூப்பிட்டு எடுக்கமாட்டாங்க, கண்டிப்பா எங்க மக்களிடம் திறமை இருக்கு, ஆனால் அதை வெளிக்காட்ட தயங்குறாங்க,

- "Danklas"

ஒரு விளம்பரத்தை நன்றாக எடுத்து

இந்த ஒன்றுதான் ராசா பிரச்சனை.

அதுக்குத்தான் யாரும் வாரதில்லை.

மேலே உள்ள விளம்பரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ல.

ஆனால் தமிழ் தொலைக் காட்சி விளம்பரங்களை செய்கின்ற படைப்பாளிகளுக்கு உள்ள பிரச்சனைகள் உங்களுக்கு தெரியாது ராசா.........

காரணம் அது பற்றி கொஞ்சமில்ல அதிக அனுபவமிருக்கு...........

அதைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்தற்கு முதல் நன்றி ராசா.

ஐரோப்பியரோடு வேலை செய்யும் போதைய உள்ள அனுபவம்:-

சுவிஸ் மொழித் தொலைக் காட்சிகளுக்கு பணியாற்றும் போது

ஒரு நிறுவனம் தமது விளம்பரம் எதைப் பற்றியது எனக் கூறி

அங்கே முக்கியமாக மக்களுக்கு எந்த செய்தி போய் சேர வேண்டுமோ

அது குறித்த ஒரு புளொட்

அதாவது கருப்பொருள் பற்றி தருவார்கள்.

அதை நாங்கள் குழுவாக சேர்ந்து யோசித்து

பலவிதமான

காட்சிகளோடு 4-5 விதமான யோசனைகளை

முன் வைப்போம்.

அதிலிருந்து ஏதாவது ஒன்று அவர்களுக்கு பிடிக்கலாம்

அல்லது

அதில் கொஞ்சம் மாற்றம் செய்யும் படி சொல்லலாம்.

அல்லது

இதை விட வேறு விதமாக இருந்தால் என்று

மீண்டும் பல யோசனைகளைக் கேட்கலாம்.

அதில் அவர்களால் இறுதியாக ஏற்றுக் கொண்ட

கருத்தை முன் வைத்து வேலை தொடங்குவோம்.

ஆரம்பத்திலலேயே இவர்கள் ஒரு குறிப்பிட்ட (பட்ஜட்) தொகைக்குள் இருக்க வேண்டுமென்போரும் உண்டு.

இல்லை எவ்வளவு செலவாகும் என்று சொல்லி ஏற்றுக் கொள்வோரும் உண்டு.

ஒளிப்பதிவு - தொகுப்பு - ஒலியமைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னர் (மாற்றல் செய்யக் கூடிய பகுதியை)

அவர்களிடம் காண்பிப்போம்.

அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதை நிறைவு செய்து

அவர்களிடம் கொடுத்தால் மிகுதி பணம் உடனே கைக்கு வரும்.

அல்லது மாற்றம் தேவைப்படின் அதை செய்து முடிப்போம்.

அதன் பின் எமக்கும் அதற்கும் தொடர்பில்லை.

அடுத்து நம்ம விளம்பர சமாச்சாரத்துக்கு வாரன் ராசா........ :D

நம்ம கூட்டத்தில பல பிரிவுகள்............

ஒரு சிலரை மட்டும் சொல்றன்.

என் அனுபவத்தின் ஊடாக........ :P

ஐரோப்பிய விளம்பரத்தில ஏதோ ஒரு கருப் பொருள்தான் இருக்கும்...........

ஆனால் நம்ம ஆட்கள் :shock:

வாகனக் காப்புறுதி -

வெளிநாடு வருவோருக்கான காப்புறுதி -

மருத்துவக் காப்புறுதி -

கடன் வசதி -

வீடு வாங்க மற்றும் விற்க -

வாடகைக்கு வாகனம் பெற -

இலங்கையில் வீடு வாங்க - - - - - - -

இப்படி ஒரு அடுக்கோடு 4 பக்கத்துக்கான கே.எஸ்.ராஜா வேகத்தில கூட வாசிக்கக் முடியாத

ரேடியோ விளம்பரத்துக்கு போல் உள்ள

விளம்பர நோட்டீஸ்களோடு வருவார்கள்.

இதில வேற காட்சிகள் -

லோகோக்கள் சுத்தி வரவேணும் -

எபெக்டுகள் வேற வேணும் -

அதோடு மேலயும் கீழேயும் எழுத்திலயும் ஓட விட வேணும் -

வானோலி விளம்பரம் போல வாசிக்கவும் வேணும் -

நல்லா டாம் டூம் என்று சத்தம் வார மாதிரி மியுஸிக்கும் போட வேணும்...................

இதெல்லாத்தையும் 200-300 பிரங்குக்குள்ள செய்து

2 நாளுக்குள்ள கைக்கும் வேணும்.

இதை விட

4-5 டீவீடி மற்றும்

டீவிக்கு அனுப்ப டிஜிடல் வீடீயோ கொப்பி 2-3

தவிர வீட்டில பார்க்க ஊருக்கு அனுப்ப 2 வீஎச்எஸ் கொப்பியும் வேணும்...........

முக்கியமா தனக்கு தெரிஞ்ச சிலரைத்தான் வீடியோல நடிக்க வைக்க வேணும்

அவங்கதான் பிசினஸுக்கு உதவியாம்.........

அடுத்து நானும் முக்கியமா தெரிய வேணும்..............

இப்பிடி சில நண்பர்கள்.

அடுத்தவங்க இந்தியாவுக்கு போய்

அங்க யாராவது எடுத்த சில விளம்பரங்கள்ள

உள்ள பல காட்சிகளை ஒன்றுக்குள்ள மசாலாவாக்கி

உல்டாவாக்கிக் கொண்டு வந்து போடுற

ஒரு சில துணி - நகை விளம்பரங்கள்.........

40 செக்கனுக்குள்ள ஒரு இராஜாங்கமே நடத்த வேணும்.

அதுக்குள்ள நம்ம தொலைக் காட்சிக் காரங்கட தொல்லைகள்.......

யாரெடுத்தது.........

அவரா?

அந்த போர்மாட் சரி வராது.

ஒரு சிலர் இதில் விதி விலக்கு.

அவர்களுக்கு நன்றி!

என்ன ராசா

இது போதுமா இன்னும் வேணுமா?

நான் செய்த தமிழ் விளம்பரங்களில்

சுவிஸ்கேன் (கைக் கடிகார விளம்பரம்)

எயார்வே கிங் (விமான பயண விளம்பரம்)

யாராவது பார்த்திருந்தால் மிகவும் வாதாடி செய்த

என் தகுதிக்கு பரவாயில்லை என்று

கிடைத்த பணத்தை முழுமையாகச் செலவழித்து

பெயர் சொல்லவும் மனம் மகிழவும் செய்த தமிழ் விளம்பரம்.

ஐரோப்பிய விளம்பரங்கள் செய்யும் போது கிடைக்கும்

மன மகிழ்வே தனி......

நமது தொலைக் காட்சிகளைப் பற்றி சொல்லிப் பிரயோசனமில்லை.

அவங்க தேர்வுகளில் உண்மையான தொலைக் காட்சிக்கான கலைஞர்கள் இல்ல..............

அது நடக்குமோ நடக்காதோ தெரியாது?

போற போக்கைபார்த்தால்

நம்ம மக்களிண்ட காதுக்க ஆட்லறி அடிக்கிற வேலை எல்லாம் சரிவராது,

பேசாமல் மெல்ரிபெரல்ல 40 குண்டைவைச்சு

ஸ்ரைட்டா காதுக்க அடிச்சால்த்தான் முழிப்பாங்க,, :evil:

-Danklas"]

மறுலோகத்திலதான் முழிப்பாங்க,,

கடைசியாக இதுதான் தமிழனுடைய விதியெண்டால் அதை யாரால மாற்ற முடியும்.

ப்ரியசகி

நீங்கள் ஏன் விளம்பரம் பற்றிச் சொல்கின்றீர்கள். தேசியத் தொலைக்காட்சியே விசேட நிகழ்ச்சிகளுக்கு கங்கைஅமரன் மணிவண்ணன் போன்றவர்களைத் தானே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர்.

மணிவண்ணன் கங்கையமரன்... உமக்கு நடிகர்கள் கலஞர்கள் எண்ற ரீதியில் மட்டும்தான் உமக்கு தெரியுமாக்கும்....

திருமாவளவன் எண்று ஒருவர்.... அரசியலின் நிரந்தரமான தேர்தல் சின்னம்கூட இல்லாத தலைவர்... அவரும்... தேனிசை செல்லப்பா போண்ற அதிகம் பிரசித்தி இல்லாதவரும் இன்னும் பலரும் வருவது உமது கண்ணுக்கு தெரியாது...!

தேசியம் சம்பந்தமாய் எதுவந்தாலும் சந்தில சிந்துபாடுற உமது குணம் மாறாதோ...??? :roll: :roll: :roll:

உம் போன்றவர்கள் எமமவர் திறைமைகளை ஊக்குவித்து வளர்க்கவும் மாட்டீர்கள் அடுத்தவன் செய்வதை கிண்டல் செய்வதை நிறுத்தவும் மாட்டீர்கள். ஒரு விடயத்தை தவறென்று விமர்சித்தால் அதற்குரிய மாற்று வழியையும் சொல்ல வேண்டும்.. வெற்றுப் புலம்பல்களால் எதையும் சாதித்து விட முடியாது

சரித்து எழுதுறது திறமையாங்கண்ணா....???

பொழுதுபோக்கிற நிலைக்கு ஈழத்தமிழன் வரும்போது பயன்பட என கிளிநொச்சியில் திரைப்படத்துறை ஆரம்பித்து இருக்கிறார்களாம்... அதை வளர்க்க பாடுபடுவம்... அது இப்ப பிரச்சினை இல்லை... அஜீவன் அண்ணா போல பலர் பாடுபடுகிறார்கள்... அவர்களை வளர்க்கலாம்... யாழ்களத்தில் அவரை நிறையத்தரம் பாராட்டியும் இருக்கின்றோம்.... அவரை அவரால் அறிமுகப்படுத்தப்படுபவரை புறந்தளீட்டு ஆர்யாவை கூப்பிட்டு ஆட்டம் போடுறது உமக்கு உடன்பாடானது ஆனால் எல்லாரும் அப்படி அல்ல அப்பனே...!

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பல தாயகத்துக்கு உதவி செய்யும் அமைப்புக்கள், வானொலிகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கிடையே போட்டிகள் உள்ளன. ஒரு அமைப்பு விழா வைத்தால் மற்றைய அமைப்பினர் போட்டி காரணமாகச் அவ்விழாவுக்குச் செல்லமாட்டார்கள். 3 கிழமைக்கு முன்பு தாயகத்துக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்க ஒரு அமைப்பினர் தமிழகப்பாடகர்களினை அழைத்திருந்தார்கள். நிதி சேகரிப்பு நல்லவிடயம் என்றாலும், அப்பாடகர்களுக்கு 2 கிழமைக்குமுன்பு விருந்துபசாரம் செய்தார்கள். அந்த அமைப்பினர் கலந்து கொண்டார்கள். ஆனால் விருந்துபசாரம் நடைபெற்ற தினத்தில், நேரத்தில் இன்னொரு அமைப்பினர் நாட்டுப்பற்றாளர் தினத்தினைக் கொண்டாடினார்கள். அன்னை பூபதி கலைனிகழ்ச்சிகள் நடந்தன. அன்னை பூபதி சாப்பிடமால் இந்திய அரசின் கோரமுகத்தினை உலகத்துக்குக் காட்டி உயிர் நீத்தார். அவரது நினைவு நாளில் இந்தியாவில் இருந்து வந்த பாடகர்களுக்கு விருந்துபசாரம் தேவையா?.

வை.கோ ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறைச்சாலைக்கு சென்றார். வை.கோவுக்கு ஆதாரவாக வானொலி1னைச் சேர்ந்தவர்களினால் ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. வானொலி1னால் கூட்டம் ஒழுங்கு செய்ததினால் போட்டி வானொலி2னிர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அய்யா தாயகத்துக்கு தொண்டு என்று வந்தபின் உங்களுக்கு போட்டி தேவையா?

மாவீரர் தினத்துக்குச் செல்லும் மக்களினை விட சிட்னியில் ரகுமானின் நிகழ்ச்சி சென்ற ஈழத்தமிழர்கள் தான் அதிகம். மொழி புரியாத கிந்தி, தெழுங்குப்பாடல்களினைக் கேட்டு விட்டு கடைசியாக வந்தேமாதரத்தினைக் கேக்க 60,70 டொலர் பணங்களினை செலவிடுகிறார்கள். நடிகர்களினைப் பாக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, பிறந்த மண்ணில் உள்ளவர்களினையும் பாருங்கள்

:):D:D:D :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யாவ பத்தி தப்பா பேசி எல்லாரும் பாப்ஸ் கிட்டநல்லா வாங்கி கட்ட போறிங்க ......

சுண்டல் என்ன நக்கல் சிரிப்பு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:):D ம்ம்... இந்த அளவுக்கு இங்கே இந்த விடயத்தை பெரிது பண்ணத்தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு இந்திய கடைக்காரர் தனது கடை விளம்பரத்துக்காக, முதல் நாளே கடையின் பெயர் எல்லோர்மனதிலும் சென்றடையணும் என்கிறதுக்காக ஒரு நடிகரை கூப்பிட்டு இருக்கிறார். கடை உரிமையாளர் ஒரு இந்தியராக இருப்பதால் இதைப்பற்றி நாம் பெரிது பண்ணத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.

லாசப்பெள் பகுதி எப்போதும் தமிழ் மக்களால் நிறைந்து காணப்படுவது. ஒரு நடிகர் வருகிறார் என்றதும் வந்து கூச்சல் பொட்டார்கள். இதை ஆர்யாவுக்கு வரவேற்பு வழங்கினார்கள் என்று கூறுவது தவறானது. வேடிக்கை பார்க்க வந்தனர் என்பதுதான் உண்மை.

20 சிடி வாங்கினால் ஆர்யாவுடன் படம் எடுக்கலாம் என்று கூறப்பட்டது உண்மை. அதற்கு பதிலாக 20 சிடியை ஆர்யாவுக்கு கொடுத்துவிட்ட என்னுடன் போட்டோ எடுக்கசொல்லுங்கள் என்று ஒருவர் கூறியதுதான் உண்மை. ஆர்யாவுடன் யாருமே சிடி வாங்கி போட்டோ எடுக்கவில்லை. கடை உரிமையாளருக்கு நெருக்கமான சிலர் போட்டோ எடுத்தனர் என்று நினைக்கிறேன்.

இன்னுமொருவிடயம் இப்படியான ஒருவரை அழைப்பதற்கான செலவை வருட இறுதியில் வரியில் இருந்து கழித்து செலுத்தலாம். அப்படிப்பார்க்கும் போது ஒரு கடை விளம்பரத்துக்கு இப்படி செய்வதில் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு சினிமா சம்பந்தப்பட்ட கடையை ஈழத்து போராளியை அழைத்து திறந்துவைத்தால் அதுதான் தேசியத்தை கேவலப்படுத்துவது என்று நான் நினைக்கிறேன்.

இன்னும் ஒரு விடயத்தை நான் இங்கு சொல்லவிரும்புகிறேன். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அதற்கான சரியான வழிமுறையை கையாழுங்கள். எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், வேறு பெயர்களில் வந்து கோழைத்தனமாக கதைப்பதும்,கருத்துக்கு கருத்து மோதாமல் ஒருவரின் தனிப்பட்டவிடயங்களை, அதுவும் உண்மையற்ற விடயங்களை கூறுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்திவிடாது.

லண்டனில் சினிமா நடிகர்கள் நிகழ்ச்சி செய்தபோது அங்கே உள்ள தமிழர்கள் குழம்பியது அனைவரும் அறிந்ததே, சுவிஸில் ரஜனி வந்தபோது கிடைத்த வரவேற்பு தெரியாதோ?? விசு வின் பட்டிமன்றத்தை புறக்கணித்த தமிழ்மக்களைப்பற்றி கேள்விப்படவில்லையா?? எதற்காக எப்போதும் மக்கள் மீது குறை காணுகிறீர்கள்??????

டி டி என் கலைஞர்கள் கூட ஆர்யா வந்தபோது அந்த கூட்டத்தில் நின்றார்கள். சிலவேளைகளில் இன்னும் சில நாட்களில் ஆர்யாவின் பேட்டி ஏதாவது டி டி எனில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆர்யாவைப்பார்க்க நான் வேலைமினக்கட்டு இங்கே இருந்து போகவில்லை ( துயவன் அங்கே எதோ சொன்னார். அதுதான் சொல்கிறேன் ) போன இடத்தில் வேடிக்கை பார்க்கப்போனேன். அவளவும் தான். அங்கே எடுத்த போட்டோவை களத்தில் போட்டேன். அதன்பிறகு சில நண்பர்கள் இது பற்றி எம் எஸ் எனில் கேட்டார்கள். அப்போதும் தான் ஒரு சிறிய வீடியோ கிளிப்பை பகிந்துகொண்டேன். ஒரு சில கதைகளையும் சொன்னேன். அந்தகதைகள் கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்காக திரிபு படுத்தப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நான் ஆர்யாவுக்காக இங்கு கதைக்கவுமில்லை. ஈழத்துக்கு எதிரான எக்கருத்தையும் இங்கு வைக்கவில்லை. பிழைகளை சுட்டிக்காட்ட சரியான வழியை தெரிவு செய்யுங்கள். மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் எந்தபயனும் இல்லை.

உன்னை நீ திருத்தினால் உலகம் தானாக திருந்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்யாவுக்கு வரவேற்ப்புக்கொடுத்து தமிழ் அகதி மக்கள் உணர்ச்சி வசப்படுவதாக கூறப்பட்டது. அந்த விடியோகிளிப் இதுதான்

http://rapidshare.de/files/19677704/MOV02427.MPG.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.