Jump to content

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..


Recommended Posts

Posted

ம்...நல்லாத்தான் போகுது... நான் நல்லபிள்ளை அடி வாங்கலை என்று இருப்பம் என்றால்...? எல்லாரும் சொல்றதை பார்க்கும் போது எனக்கும் சொல்லணும் போல இருக்கு...

அப்போது...நான் நான்காம் வகுப்பு என நினைக்கிறேன்...

ஒரே குளப்படி... அதனால் என்னை வகுப்பாசிரியர் முன் மேசையில்தான் வைத்திருப்பா...

ஒவ்வொருநாளும் மதிய இடைவேளையின் பின்னர் ஆங்கிலப் பாடம் தான் நடக்கும். வழமை போல ஆங்கிலப் பாடமெடுக்க வந்த வகுப்பாசிரியர் எங்களை படிக்கச் சொல்லிவிட்டு நாடியில் கையக் கொடுத்தபடி தூங்கி வழிய ஆரம்பித்தா....

வழமை போல் நாம் விளையாடத் தொடங்கினோம்....

அன்று றபர் பாண்டால் பூவரசம் இலைத் தண்டை வைத்து ஆளுக்காள் அடித்து விளையாடினோம்...தவறுதலாக..ஒரு பூவரசமிலைத் தண்டு தூங்கிக்கொண்டிருந்த வகுப்பாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டது.... துடித்துக்கொண்டு எழும்பிய வகுப்பாசிரியர் பார்த்தது முதலில் என்னைத்தான்...கையில் றபர் பாண்டுடன் அசடு வழிய நின்றேன்.. இழுத்து வைத்து நல்ல அடி ..அது மட்டும் இல்லை அதிபரிடம் ஒப்படைச்சாச்சு... தான் படிப்பிக்கும் போது நான் விளையாடி றபர் பாண்டால் அடித்ததாகச் சொல்லி.

அதிபர் மேசைக்குக் கீழே குனியச்சொல்லிப் போட்டு ...எனக்கு நல்ல அடி... அது மட்டுமில்லை என்னை கூட்ட வந்த அப்பாவிமும் சொல்ல அப்பா வீட்டை கூட்டிக்கொண்டு போய்...அடியோ அடி அப்படியொரு அடி...இரண்டு நாளா என்னால் கதிரையில் இருக்கக் கூட முடியவில்லை.

நான் பாவம் இல்லையா..?ஒரு தப்புக்கு எத்தனை பேரிடம் அடி வாங்குவது...? அதன் பின்னர் றபர் பாண்ட் கையில் தொடுவதே இல்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ப்ரியசகி என்ன றோட்ல நிண்டு பெடியனோட மல்லுக்கட்டினன் எண்டு சொல்லிப்போட்டு அதே பெடியனுக்காக வாத்தியிடம் அடியும் வாங்கியிருக்கிறீங்க...என்ன அந்த வயசிலயே லவுசா :(

வாத்தியை பற்றி கதைக்கும் போது நான் படித்த வாத்தியும் நினைவுக்கு வருகிறார்.

"கா.." என்னும் வாத்தியாருக்கு கோபம் வந்தா போதும்....கண்ணாடி, வோச் எல்லாம் கழட்டி வைச்சுட்டு, சட்டை மேல் பட்டனையும் துறந்து விட்டுட்டு, கை 'ஸ்லீவ்ஸ்'ஐ மடிச்சு விட்டுட்டு ஏறி இருந்து கும்முவான் பாவி. அம்பிட்ட ஆசாமி அண்டைய நாள் பூர மலைச்சு போய் திரிவார். :cry:

'பஞ்சுவாலிடி பஞ்சுவாலிடி' என்றே பலரது தோலை உரித்து பெயர் போன வாத்தியார் படிப்பிப்பதில் மட்டும் சூரன் தான். தமிழ் இலக்கியங்களை ரசித்து படிப்பிப்பார். நல்லா தேவாரம் பாடுவார்.

அவரின் ஆஸ்தான மாணவன் என்னும் முறையில் என் முதுகுத் தோல் அவரிடம் இருந்து உரிபடாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டது. :oops:

Posted

ஆகா எல்லோருடைய அனுபவங்களும் நல்லாய் இருக்கு

இப்படியெல்லாம் எல்லோரும் அடிவாங்கியிருக்கிறோம் ஆனால் இப்ப நினைக்கும் போது சிரிப்பாகக் கூட இருக்குது அடி வாங்கினாலும் அது சந்தோசம் தான்.

நானும் அம்மாவிடம் நல்லாய் வாங்கியிருக்கிறேன். ஒரு நாள் டான்ஸ் வகுப்புக்கு என் மச்சாள் வீட்டுக்கு போய்விட்டு (அவாதான் எனது ஆசிரியர்) அங்கு வகுப்பு முடிந்து தானும் எனது நண்பி மற்றும் எனது அன்ரியின் மகள் எல்லோரும் வந்து கொண்டிருந்தோம் அப்ப எங்கள் சுட்டித் தனதில் வழியில் உள்ள கோவில் கிணற்றில் தண்ணி கிள்ளி விளையாடினோம் அந்த நேரம் பார்த்து எங்கள் மச்சாள் வந்திருக்கிறா நான் தண்ணி கிள்ளினதை கண்டுவிட்டா எனக்கு இதுவொன்றும் தெரியாது வீட்டை நல்ல பிள்ளை மாதிரி சிரித்திக்கொண்டு போய் அம்மா என்றேன் அம்மா ஏன் லேட் என்றா? எனக்கு என்ன சொல்வதென்றுதெரியாது திரு திருவென முழிசினேன் அதற்கிடையிலை அம்மா அகப்பைக் காம்போடை வந்தா சளார் சளார் என்று விழுந்திச்சு மச்சாள், அக்கா எல்லோரும் பிடிக்க பிடிக்க விழுந்திச்சு இப்ப நினைத்தால் கூட நடுங்கும். :cry: :cry: :cry: :cry:

எங்க பாடசாலை கணித பாட சேர்றென்றால் எல்லோருக்கும் சரியான பயம் அவரே 9ம் வகுப்பு படிக்கும் போது வகுப்பாசியராய் வந்தார் முதல் பாடம் அவருடையது தான் வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் ஒவ்வொருநாளும் பூசை விழும் நானும் ஒருநாள் செய்யாமல் போய் வாங்கிகட்டினே; அதுவும் பிறங்கையை திருப்பச் சொல்லிப் போட்டு மள மளவென்று அடி நடந்திச்சு (2 or :cry: 3 ஆம் பாடமாய் இருந்திருந்தால் எல்லாம் ஈ என்றாலும் அடித்திருப்பேன்) அடிச்சதும் பத்தாமல் சித்தி கிட்டையும் போட்டுக் கொடுத்தார் அன்று இரவு சித்தி என்னை 01.00க்கு தான் படுக்கவே விட்டா அது மட்டும் இருந்து எல்லாம் செய்து முடி என்று. அதுக்கப்புறம் அவரை எப்ப மாட்டலாம் என்று பார்த்து வைத்து மாட்டியும் விட்டேன். :cry: :evil: :evil: :evil: :evil:

Posted

:P :P எல்லோரும் வாங்கி இருக்கோம் என்ன.. :P இப்ப நினைச்சால் சிரிப்பா இருக்கு..ஆனால் அப்போ..வரும் கோவத்துக்கு திருப்பி ஏதும் செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்றிருக்கும் இல்லையா? :P

ப்ரியசகி என்ன றோட்ல நிண்டு பெடியனோட மல்லுக்கட்டினன் எண்டு சொல்லிப்போட்டு அதே பெடியனுக்காக வாத்தியிடம் அடியும் வாங்கியிருக்கிறீங்க...என்ன அந்த வயசிலயே லவுசா :(

சீ சீ..அப்படி எதுவுமில்லை..புதிரவன்..என் கூட நேசறியில் இருந்து படிச்சவன் அவன்..தூரத்து சொந்தமும் கூட..நாங்கள் அடிச்சு பிடிச்சு என்னவும் செய்வோம்..ஆனால் வேறு யாரும்...நம்மளில ஒராளை பேசினால்..அவ்ளோ தான்..ஒண்டாக சேர்ந்திடுவோம் :P :P :lol: அப்படித்தான் அவனுக்காக கதைத்து அடி வாங்கினேன்.. :?

Posted

ம்...நல்லாத்தான் போகுது... நான் நல்லபிள்ளை அடி வாங்கலை என்று இருப்பம் என்றால்...? எல்லாரும் சொல்றதை பார்க்கும் போது எனக்கும் சொல்லணும் போல இருக்கு...

அப்போது...நான் நான்காம் வகுப்பு என நினைக்கிறேன்...

ஒரே குளப்படி... அதனால் என்னை வகுப்பாசிரியர் முன் மேசையில்தான் வைத்திருப்பா...

ஒவ்வொருநாளும் மதிய இடைவேளையின் பின்னர் ஆங்கிலப் பாடம் தான் நடக்கும். வழமை போல ஆங்கிலப் பாடமெடுக்க வந்த வகுப்பாசிரியர் எங்களை படிக்கச் சொல்லிவிட்டு நாடியில் கையக் கொடுத்தபடி தூங்கி வழிய ஆரம்பித்தா....

வழமை போல் நாம் விளையாடத் தொடங்கினோம்....

அன்று றபர் பாண்டால் பூவரசம் இலைத் தண்டை வைத்து ஆளுக்காள் அடித்து விளையாடினோம்...தவறுதலாக..ஒரு பூவரசமிலைத் தண்டு தூங்கிக்கொண்டிருந்த வகுப்பாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டது.... துடித்துக்கொண்டு எழும்பிய வகுப்பாசிரியர் பார்த்தது முதலில் என்னைத்தான்...கையில் றபர் பாண்டுடன் அசடு வழிய நின்றேன்.. இழுத்து வைத்து நல்ல அடி ..அது மட்டும் இல்லை அதிபரிடம் ஒப்படைச்சாச்சு... தான் படிப்பிக்கும் போது நான் விளையாடி றபர் பாண்டால் அடித்ததாகச் சொல்லி.

அதிபர் மேசைக்குக் கீழே குனியச்சொல்லிப் போட்டு ...எனக்கு நல்ல அடி... அது மட்டுமில்லை என்னை கூட்ட வந்த அப்பாவிமும் சொல்ல அப்பா வீட்டை கூட்டிக்கொண்டு போய்...அடியோ அடி அப்படியொரு அடி...இரண்டு நாளா என்னால் கதிரையில் இருக்கக் கூட முடியவில்லை.

நான் பாவம் இல்லையா..?ஒரு தப்புக்கு எத்தனை பேரிடம் அடி வாங்குவது...? அதன் பின்னர் றபர் பாண்ட் கையில் தொடுவதே இல்லை....

:(:lol::lol: :P :P :P :lol::lol::D:lol::lol::lol:

Posted

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?  

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அடடா என்ன வேலை எல்லாம் செய்திருக்குறீங்க..... :(:lol::lol: பாவம் ஆடு என்ன பாடு பட்டிச்சோ.... :wink: :lol:

எல்லாரும் நல்லாத்தான் அடி வாங்கிருக்குறீங்க... எழுதுங்க.... பார்க்க சிரிப்பாத்தான் இருக்கு... :lol::lol: 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த என்னைக் கண்டதும் எனது தம்பி முற்றத்தில் அன்று பெய்த மழை வெள்ளத்துள் ஓரிடத்தைக் காட்டி "அண்ணா, அந்த இடத்திற்கு மட்டும் போகவேண்டாம். சின்னம்மாவின் தம்பி அந்த இடத்தில் சென்றபோது வழுக்கி வீழ்ந்துவிட்டான்." என்று எச்சரிக்கை செய்தான்.

அந்த இடத்திலே அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்ற ஒரு துணிச்சலில் எழுந்து மெதுவாக அவ்விடத்திற்குச் சென்றேன். மறுகணம் படார் என்று கன்னம் நிலத்தில் அடிபட வழுக்கி வீழ்ந்துவிட்டேன். வெட்கம் ஒருபுறம் துரத்த, விழுந்ததால் ஏற்பட்ட வலி ஒருபுறம் வருத்த, பீறிட்டு வந்த அழுகையை மறைத்தபடி திரும்பவும் தம்பியின் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.

அதனை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.

Posted

ஆகா எல்லோரும் நல்லாய் தான் செல்லம் பொழிந்து வேண்டிக்கட்டி இருக்கின்றீர்கள் :( . நானும் நிறைய அடி வேண்டி இருக்கின்றேன். :cry: அந்த நேரத்தில் அகப்பை காம்பு தான் எனது எதிரி :twisted: . அந்த அடி மட்டும் தான் கையில் படும். தடி முறிக்க முதல் நாம் வீட்டை சுற்ற தொடங்கி விடுவோம். அக்காவுடன் சண்டை பிடித்து விட்டு றோட்டுக்கு ஒடி விடுவோம். ஏன்என்றால் றோட்டுக்கு அவா ஒடி வரமாட்டா என்றா நினைப்பு தான் :wink: .

ஒரு அனுபவம். இப்போதும் மறக்க முடியாது.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இயக்க அண்ணாக்கள் இருந்தவர்கள். அவர்கள் பெரிய பங்கர் வைத்திருந்தவர்கள். நானும் பக்கத்து வீட்டு நண்பியும் அதற்குள் போய் ஒரே விளையாட்டு தான். ஒரு முறை விளையாட்டு கூடி புழுதியும் நாமும் ஒரு நிறம் ஆகிவிட்டோம். வீட்டை வந்து இருவரும் வேண்டிய அடிக்கு அளவு கணக்கு இல்லை. :cry: :cry: இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும்.

பின்னொரு காலம் வீட்டில் புளி உப்பு மிளகாய்தூள் களவாய் எடுத்து கொண்டு வீட்டு கூட்டில் ஏறி மாங்காய் பிடுங்கி சாப்பிடுவது. யாரவது வந்தால் அப்படி படுத்து கிடப்பது. என்ன இனிமையான காலங்கள் அது :cry: :cry: .

எங்கள் பழைய நினைவுகளை மீட்டு தந்த சிநேகிதிக்கு நன்றிகள்.

Posted

என்ன தாரணிக்கும் அனிக்கும் உங்கட குழப்படிகளை எழுதுற ஐடியா இல்லைப்போல? வாசிச்சு சிரிச்சா சரியாப்போச்சா?நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று எழுதுங்கோ இரண்டு பேரும்.

Posted

செல்வமுத்து ஆசிரியர் வெள்ளத்தில விழுந்தெழும்பினத வாசிக்க எனக்கு நாங்கள் படிச்ச ஒரு பழைய பாடல் ஞாபகம் வருது : வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம் வீண் சண்டை..அங்கால என்ன? மிச்சம் தெரியேல்ல.

Posted

றமாக்கா நீங்கள் சொல்ற விளையாட்டுத்தான் நாங்களும் விட்டிருக்கிறம்.அண்ணாமார் எங்கட ஆய்க்கினை தாங்காமல் மதிலால தூக்கி விட்டிடுவினம் வீட்ட போகச் சொல்லி.அவை கொண்டு வந்து வைச்சிருக்கிற மயிலோட விளையாடுறது எங்களுக்கு நல்ல விருப்பம். மாங்காயும் தூளும் நல்லாயிருக்கும்.வாயூறுது.பச்

Posted

சினேகிதி - நல்லதொரு தொடக்கம் - வாங்கின அர்ச்சனைகளையும் - வஞ்சகமில்லாம சொல்லிட்டிங்க!

சரி என் பங்குக்கும் ஒண்டு எடுத்து விடுறன்!

அப்போ- அஞ்சாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேனா........

பள்ளிகூடம் முடிய - பக்கதில ஒரு கொன்றைமரம்...

மரத்தில பொன்வண்டு.......

பிடிச்சு நெருப்பு பெட்டியுக்க வைச்சு அடுத்தநாள் - பொடியளுக்கு பீலா காட்டலாம் என்னு ஏறினனாம்.......

அரைவாசி தூரம் ஏறிட்டு கீழபார்த்தா.....

மேயகட்டியிருந்த மாடொண்டின்ற வாயுக்க என்ர - இரண்டு 20 ஒற்றை கொப்பி! :shock:

விடுவேனா........ குதிச்சு மாடா நானா எண்டு ஒரு கை பார்த்து இழுத்தன் கொப்பியை ......

நான் யாரு ...... வந்திருச்சு ....கொப்பி இல்ல ......

கொப்பிக்கு போட்டிருந்த மட்டைகள் மட்டும்.......

அதோட விசுக்கி கொண்டு வீட்ட போனேனா......

ம்ம்... அப்புறம் நடந்ததை சொல்ல - கொள்கை விளக்கம் தேவையா?

உங்க தலைப்பே போதுமே!

அந்த வரலாற்று சோகத்துக்கு பிறகு -ஊரில எந்த மாடு அடிவாங்கினாலும்-

அல்பமா ஒரு பழிதீர்க்கிற சந்தோசம்!

அடிக்கிறவன் -மகராசன் -நல்லாயிருக்கணும்னு! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கள உறவுகளின் சுட்டித்தனங்கள் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கின்றன. எல்லோரும் தொடருங்கள்.

சினேகிதி, இதுதான் அந்தப் பாடல்.

குடை பிடித்துச் செருப்புமிட்டு புத்தகமுங் கொண்டு

குடுகுடென நடந்துவரும் குழந்தைகளே கேளீர்

மழைகாலம் வழிவழுக்கும் மிகக்கவனம் மக்காள்

வழியருகே வெள்ளமுண்டு விலகிவர வேண்டும்

வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம்

வீண்சண்டையால் வழுக்கி விழுந்தெழும்ப வேண்டாம்

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு காலில்வரும் கவனம்

கண்ணுறக்கம் இல்லாமல் கதறியழ நேரும்

அம்மாசொல் தட்டாமல் ஆசிரியர்க்கு அடங்கி

ஆசையுடன் பள்ளியிலே படித்துவர வேண்டும்.

இப்படி அருமையான பல பாடல்கள் தமிழில் இருக்கின்றன.

அதற்கென ஒரு பகுதியைத் தொடங்கி அனைவருக்கும் அவைகளை அறியத்தந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

Posted

அந்தாநாட்களில் அம்மாட்ட பெரும்பாலும் ஒவ்வொருநாளும் அடிவேண்டிய அநுபவம் எனக்கு நிரம்பவே உண்டு. மாதத்தின் சிலநாட்களில் நான் அம்மாவின் அடியிலிருந்த தப்ப சாமியறைக்குள் அடைக்கலம் புகுவதுண்டு காரணம் 'அந்த' நாட்களில் சாமியறைக்குள் அவா வரமாட்டா 8) 8) 8)

Posted

"அந்த வரலாற்று சோகத்துக்கு பிறகு -ஊரில எந்த மாடு அடிவாங்கினாலும்-

அல்பமா ஒரு பழிதீர்க்கிற சந்தோசம்!

அடிக்கிறவன் -மகராசன் -நல்லாயிருக்கணும்னு"

வர்ணன் சிரிக்கிறதா அழுறதா இதைப்பார்த்து.உங்கட வகுப்பில நல்லா கொப்பி புத்தகங்களை வைச்சிருக்கிற மாணவருக்குப் பரிசு தாறதில்லையா?வெறும் மட்டையை ரீச்சருக்கும் விசுக்கிக் காட்டியிருக்கலாம்:-)இந்தப் பொன்வண்டு பிடிச்சு நெருப்பட்டிக்க வைக்கிறது கூடுதலாக பெடியங்கள்தான் செய்யிறவை.ஒராளுக்குப் பொன்வண்டு என்று அடைமொழிஇருக்கு.

Posted

மணிமாறன் ஊரில வைச்ச சில கட்டுப்பாடுகள் உங்களுக்கு நல்ல வசதியாப்போட்டுது.அடுத்தடுத்

Posted

தமிழ் ஈழத்தில் வசிக்கும் போது ஒரு நாள் நானும், தங்கையும், மச்சாளும், என் நண்பியும் சேர்ந்து எங்கள் சின்ன தங்கையை(4 வயது) இறந்தவர்களை குளிப்பாட்டுவது போல் ஒவருவரும் அவளுக்கு சீயாக்காய் வைத்து குளிப்பாட்டி 2 கிடுகை(தென்னம் ஓலை)எடுத்து அதன் மேல் அவளை படுக்கவைத்து (அவளுக்கு மரணவீடு செய்வதாக கற்பனை பண்ணி பாடையாக கிடுகு)நாங்கள் நாலுபேரும் சேர்ந்து பெரியவர்கள் கட்டியணைத்து அழுவதைப்போல் நாங்களும் அழுதோம்.

தேவாரம் பாடினோம். வெளியால் போன அம்மா திரும்பி வர எங்கள் அழுகைச்சத்தத்தையும், கிடுகின்மேல் நித்திரையாய் படுத்திருந்த 4 வயது தங்கையையும் பார்த்து அம்மாவும் பயந்து அழுது கொண்டு கிட்ட வர என் நண்பி சிரித்துக் கொண்டு சொன்னாள் அன்ரி இவளுக்கு நாங்கள் செத்தவீடு கொண்டாடினாங்கள் என்று, அம்மாவுக்கு கோவம் வந்து தடி எடுத்துக் கொண்டு என்னையும் தங்கையையும் அடிக்க வர என் நண்பியும், மச்சாளும் ஓடிவிட்டார்கள்.

அதற்குப்புறகு அம்மா எங்கள் இருவருக்கும் அடிக்க எங்கள் சின்னத்தங்கை நித்திரையால் எழும்பி பயத்தில் அவளும் அழத்தொடங்கிவிட்டாள். நாங்கள் இருவரும் அம்மா அடித்த அடியையும், தழும்புகளையும் நினைத்து நினைத்து அழுது சாப்பிடாமல் நித்திரையாகி விட்டோம்.

இரவு போல் அம்மா எங்களை எழுப்பி சாப்பிட வைக்க நாங்கள் விக்கி விக்கி அம்மாவைக் கட்டிப்பிடித்து அழ அம்மாவுக்கும் தான் அடித்ததை நினைத்து அழுது எங்கள் இருவருக்கும் தழும்புகளுக்கு மருந்து போட்டுவிட அம்மாவில் இருந்த கோவம் போய் விட்டது. அடுத்தநாள் எங்கள் சின்னத்தங்கைக்கு காய்ச்சலும், தடிமனும் வந்து விட்டது. அவள் காய்ச்சலில் அழ நாங்களும் அவளுக்கு செய்ததை நினைத்து அழுதுவிட்டோம். அம்மாவும் புத்திமதியும் கூறினா. இப்படியான விபரிதமான செயல்களை செய்யவேண்டாம் என்று. அன்றிலிந்து இப்படியான மோசமான செயல்களை செய்யவில்லை.

(அப்போது எங்களுக்கு 11, 10, 9 11 வயது) :shock:

பிறகு நாங்கள் எல்லோரும் நல்லபிள்ளைகளாக மாறிவிட்டோம். :(:D :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறகு நாங்கள் எல்லோரும் நல்லபிள்ளைகளாக மாறிவிட்டோம். :(:D :P

யாருக்கு றீல் விடுகின்றியள்? நான் நம்ப மாட்டேன் :evil: :evil:

Posted

யாருக்கு றீல் விடுகின்றியள்? நான் நம்ப மாட்டேன் :evil: :evil:

"பிறகு நாங்கள் எல்லோரும் நல்லபிள்ளைகளாக மாறிவிட்டோம். "

சின்னப்புள்ளத்தனமால்லே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

KATPUKKARASAN

யாரையப்பு சொல்கின்றீர்கள்? என்னையா?? :evil: :evil:

Posted

தாரணி தாரணி :-) நல்லாத்தான் விளையாடியிருக்கிறீங்கள்.செத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன தூயாண்ணா லொள்ளா? நீங்கள் விடுற றீலையே நாங்கள் நம்புறம் தாரணி உண்மையைச் சொன்னா றீல் என்றீங்கள் என்ன?

நான் றீல் விடுகின்றேனா? அபச்சாரம்! அபச்சாரம்!! :oops:

ஒரு நல்ல பையனின் கருத்தையா இப்படி ஏளனம் செய்வது? :wink:

Posted

நான் றீல் விடுகின்றேனா? அபச்சாரம்! அபச்சாரம்!! :oops:

ஒரு நல்ல பையனின்

:roll: :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.