Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது!

Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012)

aseem-trivedi.jpgமும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார்.

அதில் ஒன்றில் நான்கு சிங்கங்களின் முகங்களுக்கு பதில் வாயில் ரத்தம் வடியும் ஓநாய்கள் இருப்பதுபோல் வரையப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் தேசிய சின்னத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.,

national-toilet.jpg

அத்துடன் நாடாளுமன்ற கட்டிடத்தை கழிப்பறை போலவும், பாரத மாதாவை மானபங்கம் செய்வது போலவும் வேறு இரு கார்ட்டூன்கள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக அசீம் திரிவேதி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து மும்பை போலீசார் அவரை நேற்று முன் தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவரை தங்கள் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

aseem-cartoon.jpg

அத்துடன், அசீம் திரிவேதியின் இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

cartoon-bharat-mata.jpg

இந்நிலையில்,திரிவேதி கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரிவேதி வரைந்த கார்ட்டூனில் சட்டவிரோதமாக எதுவும் இல்லை என்றும், ஜனநாயகத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.இதில் சில உண்மையாகவும், பல தவராகவும் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

விகடன்

[size=4]அசீம் திரிவேதி அரசுக்கெதிராக எதிர்வழக்காக நூறு கோடிக்கு தேசத்துரோகியாக சித்தரித்தமைக்கு மான நட்ட வழக்கு தொடரவேண்டும். அவர் இலங்கை லக்பீமாவின் படங்களையும் கோட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும்.[/size]

223826_4503961235382_1999113413_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எப்போதும் கசக்கும் அதுவும் இந்தியாவில் ?

இன்று ரொரன்டோ ஸ்ராரிலும் முக்கிய செய்தியாக வந்துள்ளது. அகிம்சை நாடு, உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்று தவறாக அழைக்கப்படும் இந்தியாவின் உண்மை முகத்தை காங்கிரஸ் மிக நன்றாக உலகிற்கு காட்டுகின்றது. அடுத்த முறையும் காங்கிரசே ஆட்சிக்கு வர வேண்டும் !!

Indian cartoonist’s arrest on sedition charges sparks outcry

Published on Monday September 10, 2012

dea76d434accac8ce61edc731a92.jpg

AP Indian political cartoonist Aseem Trivedi gestures after he is arrested by police on charges of mocking the Indian constitution in his drawings, in Mumbai, India, Sept. 9.

http://www.thestar.c...rruption-jailed

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இவரைப் பேசாமல் விட்டிருக்கலாம்!

இவரைக் கைது, செய்ததன் மூலம், தனது தலையில், தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டுள்ளது!

ஒரு உண்மையான ஜனநாயகத்திற்கு, இவரைப் போன்றவர்கள் தேவை!

முதுகெலும்புள்ள, ஒரு இந்தியனைக் கண்டதில், மகிழ்ச்சியடைகிறேன்!

சம்பிரதாய சடங்குகளில் முன்னோடியாக இருக்கும் இடங்களில் ஆளும் வர்க்கத்திற்கு சவால்விட சென்றால் இப்படியான நொண்டிச்சாட்டு சம்பிரதாயங்களை வைத்துதான் தமது எதிரிகளை வீழ்த்துவார்கள். கருணாநிதியோ, டாடாவோ, ரோபேட் ரவுதாவோ இந்த குற்றங்கள் செய்ய நேரத்தை வீணாக்கமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.