Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருந்து காத்திருந்து காலத்தைக் கடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]sampanthans.jpg

[size=4]தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையை, இன்றை தலைவர்கள் பெருமெடுப்போடு முன்னெடுக்கின்றனர். இந்தியா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு தமது அரசியல் செல்வாக்கைக் காண்பிப்பதற்காக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு குறைந்தளவிலான ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறுபான்மை இனமான முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியமைப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

எனினும், அந்த முயற்சியும் இறுதி நேரத்தில் கைவிட்டுப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு 7.00 மணியளவில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை 8.30 மணியாகியும் முஸ்லிம் காங்கிரஸி தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்கவில்லை. இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் அரசதரப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள காரணத்தினால் சமூகமளிக்க மாட்டார் என்பதால் கைவிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்தையில் முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வது குறித்தும் பேசப்படவிருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் GTV இல் தோன்றிய சரவணபவன் சொன்னதும் சம்பந்தன் ஊரில் சொல்வதும் வேறு வேறானவை. சரவணபவன் சொன்னார் மு.கா இதுவரை எந்த பேச்சு வார்த்தைகளையும் கி.மா சபை தொடர்பில் த.தே.கூ வுடன் நடத்தவில்லை என்றும்.. அதன் முக்கிய தலைவர்களை த.தே.கூ தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதே சிரமமாக இருந்ததாகவும்.

இந்த நிலையில் சம்பந்தனும்.. சுமந்திரனும்.. தாங்களா ஊடகங்கள் வாயிலாக.. மு.கா விற்கு வலிந்து.. ஆதரவும்.. முதலமைச்சர் பதவிகளும் வழங்கினது தான்.. ஏன் என்று புரியவில்லை..! ஒருவேளை சர்வதேசத்துக்குச் சொல்லிச்சினமோ..???! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய தினம் GTV இல் தோன்றிய சரவணபவன் சொன்னதும் சம்பந்தன் ஊரில் சொல்வதும் வேறு வேறானவை. சரவணபவன் சொன்னார் மு.கா இதுவரை எந்த பேச்சு வார்த்தைகளையும் கி.மா சபை தொடர்பில் த.தே.கூ வுடன் நடத்தவில்லை என்றும்.. அதன் முக்கிய தலைவர்களை த.தே.கூ தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதே சிரமமாக இருந்ததாகவும்.

இந்த நிலையில் சம்பந்தனும்.. சுமந்திரனும்.. தாங்களா ஊடகங்கள் வாயிலாக.. மு.கா விற்கு வலிந்து.. ஆதரவும்.. முதலமைச்சர் பதவிகளும் வழங்கினது தான்.. ஏன் என்று புரியவில்லை..! ஒருவேளை சர்வதேசத்துக்குச் சொல்லிச்சினமோ..???! :lol::icon_idea:

நெடுக்ஸ் அண்ணா,

நீங்கள் அவங்களோடை பிழைப்பிலை மண்ணள்ளிப் போட்டுடுவியள் போலக் கிடக்கு.

இப்படி இடத்துக்கிடம் கதைச்சால் தானே சுருட்டவும், இருப்பைத்தக்க வைக்கவும் முடியும்.

ஏமாளிகள் நீங்கள் (நாம்) தான் அவர்கள் அல்ல.. :o

அரசியல்லை இதெல்லாம் சகஜமப்பா.. <_<:wub:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக் கூத்தமைப்பாக மாறிக் கனகாலம்

இவர் சம்பந்தரும் சுமந்திரனும் கூட்டமைப்பை அழிப்பதில் மும்மரமாக ஈடுபடுவது

மெல்ல மெல்ல மக்களுக்குப் புரியும். அப்போது கூத்தமைப்பும் அழிந்துவிடும்

நேற்றைய தினம் GTV இல் தோன்றிய சரவணபவன் சொன்னதும் சம்பந்தன் ஊரில் சொல்வதும் வேறு வேறானவை. சரவணபவன் சொன்னார் மு.கா இதுவரை எந்த பேச்சு வார்த்தைகளையும் கி.மா சபை தொடர்பில் த.தே.கூ வுடன் நடத்தவில்லை என்றும்.. அதன் முக்கிய தலைவர்களை த.தே.கூ தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதே சிரமமாக இருந்ததாகவும்.

இந்த நிலையில் சம்பந்தனும்.. சுமந்திரனும்.. தாங்களா ஊடகங்கள் வாயிலாக.. மு.கா விற்கு வலிந்து.. ஆதரவும்.. முதலமைச்சர் பதவிகளும் வழங்கினது தான்.. ஏன் என்று புரியவில்லை..! ஒருவேளை சர்வதேசத்துக்குச் சொல்லிச்சினமோ..???! :lol::icon_idea:

இதைபற்றி கிழக்கில் அரசொன்றை நிறுவ முதல் கதைப்பது தமிழரின் நிலைகளுக்கு சேதமாக முடியலாம். ஆனல் ஏற்கனவே அரசு எடுத்திருக்கும் ஒரு ஆயுதத்தால் மு.கா பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது அதாவது அரசு தேசிய அரசை அமைக்க முடியும் என்ற உண்மை மு.காவின் பேரம் பேசும் நிலையை கிட்டத்தட்ட முற்றாக அழித்துவிட்டது . இது .மு.கா எந்தக்கரைக்கும் போக முடியாது;ஆனால் அரசுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருக்கு. இதனால் அங்கே மட்டும்தான அவர் கதைப்பார்.

இதில் அவர் எதை அரசுக்கு,விட்டுக்கொடுத்தாலும், அல்லது அரசு எதை தான் இவர்களுக்கு விட்டுக்கொடுத்து அரசை அமைத்தாலும் அரசு நிச்சயமாக தான் ஆட்சியக்கைபற்றியவுடன் மு.கா, ஐ.தே.க ஆகியவற்றில் இருந்து பல உறுப்பினர்களை உள்வாங்கிவிடலாம் என்ற துணிசலுடன் இருக்கிறது. இது வரையில் இது அரசுக்கு பாரளுமன்ற தேர்தலில் பெரிய சிரமமாக இருக்கவில்லை. அரசுக்கு கூட்டமைப்பு முழுவதாகா இருந்தால் எதிர்க்கட்சியில் இருந்து பலவற்றை எதிர்த்து அறிக்கைகள் விடப்போகிறது; எனவே தொலைத்து கட்டி எதிர்த்து சின்னா பின்னப்படுத்திவிட வேண்டியது கூட்டமைப்பு மட்டுமே; என்று நினைக்கிறது. இதனால்தான் அவர்கள் கூட்டமைப்பில் முதலில் கைவைத்தது. அவர்கள் மு.காவின் நிரந்தரமில்லாத நிலையைப்பற்றி எந்த சந்தேகமும் கொள்ளவில்லை. சிலநாட்களுக்குள் அரசு கிழக்கில் ஆட்சி அமைத்தால் ஐ.தே.க தானாகவே உடைந்து அரசில் சேர்ந்துவிடும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மு.கா பற்றி நீங்கள் சொல்வது நியாயமாக இருந்தாலும்.. இன்று ரம்புக்வல சொன்ன இன்னொன்று என்னைத் தூக்கிவாரிப் போட்டுள்ளது. தங்கட கட்சி திறந்த சலூனாம். யாரும் வரலாமாம் போகலாமாம். அந்த வகையில் கூட்டமைப்பினரும் வந்து போகினமாம்..!

எங்கையோ இடிக்குதே..???! :icon_idea:

மு.கா. இன்றி கிழக்கில் ஐ.ம.சு.மு.வினால் ஆட்சியமைக்க முடியாது என்றில்லை: கெஹெலிய

அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவைப் போன்றதாகும். அக் கதவினூடாக எவர் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் சென்றுவிடலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் வந்துசெல்வர்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் ௭ன்பதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை ௭ன்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விருப்பு வாக்குமுறைத் தேர்தல் ௭ன்பதனால் பேரப்பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆட்சியமைப்பதாயின் யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காகக் கேட்டதை ௭ல்லாம் கொடுக்கவும் முடியாது ௭ன்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ௭ழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக ஊடகவியலாளர்கள் மூன்று மாகாண சபைகளுக்குமான முதலமைச்சர்கள் யார்? கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சியமைக்குமா? முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதே? அதன் பெறுபேறு ௭ன்ன? தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதா? ஒரு சிலவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு நல்காவிடின் ௭ன்ன நடக்கும்? கிழக்கில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட கேள்விகளை கேட்டனர்.

அக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மூன்று மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் அதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை. முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவு ௭ன்பதனால் யாரும் வரலாம் ௭வர் வேண்டுமானாலும் செல்லலாம்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் வந்து சென்றுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியும் ௭ன்று கூறவில்லை. ஆட்சியமைக்க முடியாது ௭ன்றுமில்லை. கிழக்கில் நிச்சயம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும். அதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை? யாருடன் ௭ப்படி? ௭ன்று விரைவில் தீர்மானிப்போம். கிழக்கில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்தோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவருமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். விருப்பு வாக்குமுறைமை ௭ன்பதனால் வெற்றியீட்டிய ஒவ்வொரு உறுப்பினருக்கும் அச்சுறுத்தல் இருக்கும்.

அரசாங்கம் பணம்கொடுத்து ௭வரையும் ௭மது பக்கம் இழுக்கவேண்டிய தேவையில்லை. பேரப்பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. கேட்பதை ௭ல்லாம் கொடுக்க முடியாது சும்மாவும் வரமாட்டார்கள். இதேவேளை விருப்பு வாக்குமுறை தேர்தலில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏகாதிபத்திய ரீதியில் செயற்படமுடியாது. சிறு கட்சிகளின் மீது கவனம் செலுத்தவேண்டும். தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தெரிவுக்குழுவின் ஊடாகக் கலந்துரையாடப்பட்டது.

விருப்பு வாக்குமுறைத் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது பாதகங்களை ஏற்படுத்தும் ௭ன்று ஒருசாராரும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் ௭ன்று சில பிரிவினரும் ௭டுத்துரைத்துள்ளனர்.சில விடயங்களை மறுக்கமுடியாது. சிலவற்றை விலக்கிவிடவும் முடியாது ௭ன்பதனால் சகலரும் இணக்கத்துக்கு வரும்வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்தவேண்டும்.

http://www.virakesari.lk/article/local.php?vid=627

  • கருத்துக்கள உறவுகள்

sambanthan.jpg

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..

5012 ஆம் ஆண்டு வரை...

டிஸ்கி:

ஜன நாய்கதிடம் கலந்தால் இதல்லாம் ஜகஜம்...

ரைமிங்க் கரெக்டா இருக்கணும் அதற்குத்தான் இந்த சாங்கு

<_< <_<

வீரகேசரி எல்லாவற்றையும் குமைத்துவிட்டது. ஆனால் சில ஊடகங்கள்

கிழக்கில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட [size=4]கேள்விகளை கேட்டனர்.
என்ற கேள்விக்ந்த்தான்[/size]

அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவு ௭ன்பதனால் யாரும் வரலாம் ௭வர் வேண்டுமானாலும் செல்லலாம்.[size=4] [/size][size=4]தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் வந்து சென்றுள்ளனர். [/size]
என்பதை பதிலாக வழங்கியுள்ளார் என்று கூறியிருந்தன.

இது தெளிவாக மகிந்தாவின் three stooges ஆக இருக்கும் விமல் வீரவன்சா, சம்பிக்க ரணவாக்க, கெகெலிய ரம்புக்கவெல ஆகியவர்களில் ஒருவரான இவர் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமால் கூட்டமைபை உடைப்பதற்கு தனது சேவையையும் அருள இந்த மாதிரி மானம் கெட்ட பதிலை அளித்திருக்கிறார் என்பதை வெளிகொணர்ந்திருக்கிறது. கெகெலிய நிபந்தனைகள் இல்லாமல் "கூட்டமைப்பு உறுப்பினர்களை மிரட்டி வாங்க முயலவில்லை" என்று மறுக்கவில்லை. ஏனெனில் இந்த நாட்களில் வீடியோ வரை பல தடையங்களை அவரகள் சேகரித்திருக்கலாம். அத்துடன் அவர்கள் பயத்தல் வீடுகளை விட்டும் வெளியேறிவிட்டார்கள். இதனால் கொமேடியன் கெகெலிய இப்படி ஒரு கோமாளித்தனமான பதிலை அளித்திருந்தார். இது பலருக்கு இவரின் உள்நோக்கத்தை தெளிவாக காட்டியிருக்கிறது.

கூட்டமைப்புக் கூத்தமைப்பாக மாறிக் கனகாலம்

இவர் சம்பந்தரும் சுமந்திரனும் கூட்டமைப்பை அழிப்பதில் மும்மரமாக ஈடுபடுவது

மெல்ல மெல்ல மக்களுக்குப் புரியும். அப்போது கூத்தமைப்பும் அழிந்துவிடும்

[size=4]கூட்டமைப்பு அழிவதற்கு முன்னர் இன்னுமொரு அமைப்பு நம்பிக்கை பெற்றதாயும் பலமானதாயும் இருக்கவேண்டும். [/size][size=1]

[size=4]இல்லை என்றால் மக்கள் நிலைமை மேலும் மோசமாகிவிடும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.