Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடியல் கூழ்

Featured Replies

சுட்டு தின்று பாரும், இங்கு என்னுடன் வேலை பார்ப்பவர் தினமும் வீட்டில் இருந்து எடுத்து வர கேட்டுக்கொண்டுள்ளேன். சந்தையில் 15 கிழங்கு 20 ரூபாய்.

இப்ப பனங்கிழங்குக் காலமா

அப்ப கண்டிப்பா கடையளில காணலாம். என்ன இங்கு உங்கள் இடம் போல 15 கிழங்கு 20ரூபாய்க்குத் தரமாட்டார்கள் :D

  • Replies 59
  • Views 21.3k
  • Created
  • Last Reply

வாங்கி அனுப்பவா?

வாங்கி அனுப்பினா உதவியா இருக்கும். அனுப்பும் போது நிறைய அனுப்புங்க வெறும் 15 அனுப்பாமல். :P :P :wink:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று சொன்னால் தான் ஓடுவன் :evil:

ஆனா எனக்கு மூன்று தெரியாது :wink: :oops:

ஆமாம். மூன்றை உமக்குத் தெரியாதது தான்!!

:evil: :evil: :evil:

ஆகா இது வேற நடக்குதா எனக்கு சரியான சலிபிடிச்சிற்று மருந்துகள் எல்லாம் குடித்து நிக்கவில்லை ? ஒடியல் Üழ் குடித்தால் சலி பறந்திடுமாம் ? யாரும் காச்சி தனி மடல்முலம் அனுப்புங்களன் இந்:த புறா பாவம் தானே :P

வாங்கி அனுப்பினா உதவியா இருக்கும். அனுப்பும் போது நிறைய அனுப்புங்க வெறும் 15 அனுப்பாமல். :P :P :wink:

அதானே வெறும் 15 அனுப்பிஎதுக்க கானும் ? இல்லையயா அருவி

அப்படியேஎனக்கும் ஒரு 10 பனங்கிழங்கை நல்லமனசாக அனுப்பி விடுங்கள் கிழங்கை கண்டு கன வருசமாச்சு :cry:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒடியல்மாக் கூழ்

squash_soup.jpg

தேவையான பொருட்கள்

ஒடியல்மா : 1 சுண்டு

பயிற்றங்காய்: 100 கிராம்

மரவள்ளிக்கிழங்கு: 100 கிராம்

கத்தரிக்காய்: 100 கிராம்

பலாக்கொட்டை: 100 கிராம்

கடலை: 100 கிராம்

செத்தல்மிளகாய்: 20 உங்கள் அளவிற்க்கு

மிளகு: 1 தே.கரண்டி

மஞ்சள்: 1 தே,கரண்டி

உள்ளி: 6 பல்லு

பழப்புளி: சிறு உருண்டை

புழுங்கலரிசி: ஒரு பிடி விரும்பினால்

முள்ளில்லாத மீன்வகை: 200 கிராம்

றால்: 100 கிராம்

கணவாய்: 100 கிராம்

நண்டு : 1 அல்லது 2 விருப்பிய அளவு

முருங்கை இலை / முசுட்டை இலை/ பசலி இலை - அளவாக 20 கிராம்

பல்லுப்போல வெட்டப்பட்ட தேங்காய்ச் சொட்டு - 15 அளவாக

உப்பு : அளவிற்க்கு

செய்முறை

- கடலையைக்கழுவி மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். செத்தல்மிள்காய், மிளகு, உள்ளி, மஞ்சள் என்பவற்றிற்கு ஓரளவு நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்

- மீன்வகைகளைத் துப்பரவாக்கி கழுவிவைத்துக் கொள்க.

- நண்டைத் துப்பரவுசெய்து இயலுமானவரை கோதை நீக்கி சதைப்பகுதியை எடுத்துக் கொள்க.

-மரவள்ளிக்கிழங்கு, பயிற்றங்காய், கத்தரிக்காய், பாலக்கொட்டை என்பவற்றைத் துப்பரவாக்கி சிறுதுண்டுகளாக வெட்டிக் கழுவி வைத்துக் கொள்க.

- பாத்திரத்தில் பழப்புளியையிட்டு ஒரு தம்ளர் தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்க.

- ஒடியல்மாவைப் வேறு ஒர் பாத்திரத்தில் இட்டு, அளவிற்கு நீர் சேர்த்துக் கூழ்ப்பதமாகக் கரைத்து அரைமணிநேரம் வைத்த பின் எடுத்து ஒரு துணியில் இட்டுப்ப்ழிந்து எடுத்து பிறிதொரு பாத்திரத்தில் போட்டு, அரைத்த கூட்டையும் சேர்த்து, கரைத்துவைத்துள்ள 1 தம்ளர் பழப்புளியையும் விட்டு, அளவிற்கு தண்ணீரும் விட்டு நீர்ப்பதமாக கரைத்து வைக்க்குக.

-சோஸ்பானில் (அளவாக அவியக் கூடிய பாத்திரம்) அதன் அரைவாசிக்கு தண்ணீரைவிட்டுக் கொதிக்கவைத்து, கழுவிவைத்துள்ள மரக்கறிவகைகளை இட்டு அவியவிடவும், 3/4 பதம் அவிந்த பின்பு கடல் உணவு வகைகளை இடவும் ( மீன், இறால்........)

-இரண்டும் நன்றாக அவிந்த பின்பு ஒடியல்மாக்கரைசலை ஊற்றி நன்றாக கரண்டியால்க் கலக்கி

அளவிற்கு உப்பு சேர்த்து தேங்காய்ச் சொட்டும் கலந்து இறக்கவும் ( 8 பேருக்கு இந்த அளவு)

  • 11 years later...

 ருசியான ஒடியல் கூழ் செய்வது எப்படி?

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒடியல் கூழ் உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகும்.

இந்த ஒடியல் கூழை அசைவ உணவாகவும் சைவ உணவாகவும் தயாரிக்கலாம்.

ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை.

ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள்

ஒடியல் மாவு - ஒரு கப்
பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம்
மரவள்ளி கிழங்கு 100 கிராம்
பலா (கொட்டை) விதை - 100 கிராம்
காய்ந்த மிளாகாய் - 20
மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு
மஞ்சள் ஒரு துண்டு
பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள்
புளி போதுமான அளவு
புழுங்கல் அரிசி ஒரு பிடி
சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய் அரை கப்
முருங்கை இலை 10 நெட்டு
உப்பு போதுமான அளவு
சைவ கூழ் தயாரிக்க தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் 100 கிராம்
கடலை 100 கிராம்
பெரிய வாழைக்காய் ஒன்று
அசைவ கூழ் தயாரிக்க
இறால் அல்லது நெத்தலி மீன் 500 கிராம்
இரண்டு நண்டு
பாரை மீன் தலை ஒன்று
சிறிய கருவாடு 50 கிராம்
செய்முறை

காய்ந்த மிளகாய், மிளவு, வெள்ளை பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு மிருவதாக அரைத்து கொள்ள வேண்டும்.

மீன், கருவாடு ஆகியவற்றை கழுவி துப்பரவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

மரவள்ளி கிழங்கு, பயிற்றங்காய், பலா விதை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கழுவி வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் புளியை இட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

ஒடியல் மாவை பாத்திரத்தில் இட்டு அளவுக்கு தண்ணீர் சேர்த்து கூழ் பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு துணியில் இட்டு பிழிந்து மற்றுமொரு பாத்திரத்தில் போட்டு அரைத்தை கூட்டை சேர்த்து, ஒரு கப் புளி கரைசலை இட்டு அளவாக தண்ணீர் கரைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் அளவான அரிசி வேக கூடிய பானையில் அரைவாசி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின்னர், கழுவி வைத்துள்ள காய்கறி, முருங்கை இலை, கழுவிய அரிசி ஆகியவற்றை போட்டு அவிய விட வேண்டும்.

இவை முக்கால் பதமாக அவிந்த பின்னர், மீன்,நண்டு, கருவாடு ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விட வேண்டும்.

காய்கறி நன்றாக அவிந்த பின்னர், ஒடியல் மா கரைசலை ஊற்றி நன்றாக அகப்பையால் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வெட்டி வைத்த தேங்காய் கலந்து இறக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஒடியல் கூழ் சூடாக இருக்கும்போது குடித்தால் நன்றாக இருக்கும்.

ஒடியல் கூழை சைவமாக தயாரிக்க வேண்டுமாயின் மீன், நண்டு, கருவாடு ஆகியவற்றை தவிர்த்து விட்டு, கடலை, கத்தரிக்காய், வெட்டிய வாழைக்காய், ஏனைய காய்கறிகளுடன் சேர்த்து அவித்து ஒடியல் கூழ் செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். அதாவது கூழில் சேர்க்கப்படும் பொருட்கள், அவை பின் வருமாறு :

முக்கிய குறிப்பு: நீங்கள் கூழ் வைப்பதற்காக தேவைப் படும் பொருள்கள் 1 கி.கிராம் மாவுக்கு, இரண்டு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி சரியான அளவில் இரண்டும் இருந்தால்தான் கூழ் சரியான பதத்துக்கு வரும்.

ஒடியல் கூழ் அருந்தும் முறை:

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும்.

அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்

.Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: Essen
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

உண்மையான ஒழுங்கான ஒடியல்கூழ் குடிக்கோணுமெண்டால் கிராமத்தான் வீட்டிலைதான் குடிக்கலாம். ஏனெண்டால் அவனிட்டை தான் எல்லாமரக்கறியளும் தட்டுமுட்டு சாமான் எல்லாம் இருக்கும்.
ஆபீசர்மாருக்கு கூழுக்கு தேள்வையான எல்லா சில்லறைச்சாமான்களும் வாங்க வெளிக்கிட்டால் அவ்வளவுதான் :grin:

சாப்பாட்டு விசயத்திலை கிராமத்தான் அனுபவிக்கிற சந்தோசம் இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உண்மையான ஒழுங்கான ஒடியல்கூழ் குடிக்கோணுமெண்டால் கிராமத்தான் வீட்டிலைதான் குடிக்கலாம். ஏனெண்டால் அவனிட்டை தான் எல்லாமரக்கறியளும் தட்டுமுட்டு சாமான் எல்லாம் இருக்கும்.
ஆபீசர்மாருக்கு கூழுக்கு தேள்வையான எல்லா சில்லறைச்சாமான்களும் வாங்க வெளிக்கிட்டால் அவ்வளவுதான் :grin:

சாப்பாட்டு விசயத்திலை கிராமத்தான் அனுபவிக்கிற சந்தோசம் இருக்கெல்லே....சொல்லி வேலையில்லை.:cool:

முல்லை இலையும், முசிட்டை இலையும் போடாத....கூழெல்லாம் ஒரு கூழா?:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.