Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மக்களின் அனுமதியின்றி கூட்டமைப்பு எதையும் பெறமுடியாது இந்தியாவை நாடினால் கிளர்ந்தெழுவோம் என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் அனுமதியின்றி கூட்டமைப்பு எதையும் பெறமுடியாது இந்தியாவை நாடினால் கிளர்ந்தெழுவோம் என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

images%20%2841%29.jpg

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கொக்கரித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளும் வழிமுறைகள் நாட்டுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. அது சர்வதீர்வையே எதிர்பார்க்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுப்பதற்குக் கூட்டமைப்பினருக்கு அக்கறையிருந்தால், அவர்கள் தெரிவுக்குழுவுக்குச் செல்லவேண்டும். அதை விடுத்து இனவாதம் பேசுவதால் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து தீர்வு தொடர்பில் பேசுவது அரசை வெறுப்படையச் செய்யும். இதுவே யதார்த்தபூர்வமான உண்மையுமாகும்.

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் நோக்கமாகும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர்.

இந்தியாவுக்கு கூட்டமைப்பு செல்வதால் தீர்வு முயற்சிகள் உள்நாட்டில் பாதிக்கப்படுவதுடன், மேலும் காலதாமதம் ஏற்படும். இதைக் கூட்டமைப்பு உணரவேண்டும். அதேவேளை, சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறானதொரு தீர்வைக் கூட்டமைப்பால் பெறமுடியாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=821471470229771876

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள், சிலவேளை... அனுமதி கொடுப்பார்கள்.

எங்கடை... ஒட்டுக்குழுக்கள், அனுமதி கொடுக்கவே... மாட்டார்கள்.

அவர்கள், ந‌ரகத்தின்... முள்ளுகள்.

எப்போதும்.. அந்த பண்டிகளுக்கு, பீய்... வாசம் அடிச்சுக் கொண்டே... இருக்க வேண்டும், விரும்புவார்கள்.

என்ன... செய்வது, தமிழனாய்ப் பிறந்தது... தலைவிதி.

" தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கொக்கரித்துள்ளது."

இப்படியெல்லாம் ஏன் செய்தியாக எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை. அது கொக்கரிப்பல்ல அதுதான் உண்மை. சிங்கள மக்களென்பது தேசியப்பற்றுள்ள இயக்கம் என்பதல்ல.

இந்த இயக்கம் குறிப்பது பேரினவாதத்தை. அந்தப் பேரினவாதத்தை அசட்டை செய்யக் கூடிய எந்தக் கட்சிகளும் சிறிலங்காவில் இல்லை.சிங்களக் கட்சிகள் அனைத்தும் பேரினவாதத்தையே சார்ந்துள்ளன.

ஆகவே கலாநிதி வசந்த பண்டார கூறியவிடயம் உண்மையானதுதான். சிங்கள மக்கள் என்ற விடயம் பேரினவாதம் என்று சாயம் பூசி வைத்துள்ளார்கள் சிங்கள அரசியற் கட்சியினர்.

கட்சிகள் பேரினவாதத்தை சார்ந்திருக்கக் காரணம் என்ன? அதுசார்ந்து நடக்காவிட்டால் சிங்களவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்..!! உதாரணம் விக்கிரமபாகு..

இவ்வளவு தமிழர் அழிவுக்கும் காரணம் மகிந்தவோ, சந்திரிகாவோ, ஜே.ஆரோ அல்லது அவர்கள் சாந்த கட்சிகள் அல்ல.. சிங்கள மக்களே.. பெரும்பான்மை சிங்கள மக்கள் நினைத்ததைத்தான் கட்சிகளும், அதன் தலைவர்களும் செய்து முடித்தார்கள்..!

சிங்கள மக்களின் அனுமதியின்றி கூட்டமைப்பு எதையும் பெறமுடியாது இந்தியாவை நாடினால் கிளர்ந்தெழுவோம் என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

images%20%2841%29.jpg

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கொக்கரித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளும் வழிமுறைகள் நாட்டுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. அது சர்வதீர்வையே எதிர்பார்க்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுப்பதற்குக் கூட்டமைப்பினருக்கு அக்கறையிருந்தால், அவர்கள் தெரிவுக்குழுவுக்குச் செல்லவேண்டும். அதை விடுத்து இனவாதம் பேசுவதால் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து தீர்வு தொடர்பில் பேசுவது அரசை வெறுப்படையச் செய்யும். இதுவே யதார்த்தபூர்வமான உண்மையுமாகும்.

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் நோக்கமாகும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர்.

இந்தியாவுக்கு கூட்டமைப்பு செல்வதால் தீர்வு முயற்சிகள் உள்நாட்டில் பாதிக்கப்படுவதுடன், மேலும் காலதாமதம் ஏற்படும். இதைக் கூட்டமைப்பு உணரவேண்டும். அதேவேளை, சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறானதொரு தீர்வைக் கூட்டமைப்பால் பெறமுடியாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் என்றார்.

http://onlineuthayan...471470229771876

இந்த முட்டாள்களின் கதைகளை இங்கு செய்தியாகப் போடுவதே "வேஸ்ட்" என்பேன் நான்...

D31058046.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]"The US Department of Defense would love to strengthen ties (which are already quite good) with the Sri Lankan military because the island nation is one piece of a bigger geostrategic puzzle that will become more important in the coming years. Accordingly, people should prepare themselves for the possibility that the US will, in the medium-term, ease diplomatic pressure on the Sri Lankan regime for its human rights record and its apathy toward national reconciliation.[/size]

[size=3]While advocacy is important and international assistance should be encouraged, Sri Lanka’s problems ultimately require Sri Lankan solutions. The way forward will not be easy, but that’s no reason for inaction. The administration in Colombo should show more leadership — continued prevarication is unhelpful.":[/size]

www.eastasiaforum.org/2012/09/28/human-rights-in-sri-lanka-between-the-un-and-the-us/

கட்சிகள் பேரினவாதத்தை சார்ந்திருக்கக் காரணம் என்ன? அதுசார்ந்து நடக்காவிட்டால் சிங்களவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்..!! உதாரணம் விக்கிரமபாகு..

இவ்வளவு தமிழர் அழிவுக்கும் காரணம் மகிந்தவோ, சந்திரிகாவோ, ஜே.ஆரோ அல்லது அவர்கள் சாந்த கட்சிகள் அல்ல.. சிங்கள மக்களே.. பெரும்பான்மை சிங்கள மக்கள் நினைத்ததைத்தான் கட்சிகளும், அதன் தலைவர்களும் செய்து முடித்தார்கள்..!

இசை , சாதாரண சிங்கள மக்களின் எண்ணம்தான் தமிழரின் அழிவிற்குக் காரணம் என்ற முடிவிற்கு வராதீர்கள். பேரினவாதக் கருத்துக்களின் வல்வளைப்பு இந்த சிங்கள மக்களைச் சூழ்ந்திருக்கிறது.சிங்களப் பேரினவாதத்தைக் கையிலெடுத்த தலைவர்கள்தான் இத்தகைய அழிவுகளுக்குக் காரணம். தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு தலைவர்கள் இப்படியான சங்கதிகளைக் கையிலெடுத்துக் கொள்கிறார்கள்.சிங்களம் மட்டும் அழிவை ஏற்படுத்தியது.போரென்றால் போர் அழிவைத் தந்தது.இவை பேரினவாதமே

[size=4]சிங்கள பேரினவாதம் : பத்து சிங்களவன் ஒரு தமிழனை அடிக்கும்பொழுது புதியாய் பதினோராவது ஆளும் சேர்ந்து அடிப்பான்!

இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்ல முடியாது. படித்தவர்கள், முன்னை நாள் சட்டமா அதிபர்கள், இராஜாங்க தூதுவர்கள், பொருளாதார நிபுணர்கள் என பலதரப்பட்ட சிங்களவர்களும் கூட இனவாத அரசியலில் உள்ளார்கள்.[/size]

ஆனால் ஒரு தமிழனுக்கு எங்காவது அடிவிழுந்தால் பத்துத் தமிழன் அதைக் காரணம் காட்டி நாட்டை விட்டு ஓடத் தயாராகும் நிலையில் தமிழர் இன்றுள்ளனர். இதற்கு போர்ச்சூழலில் புலம் பெயர்ந்த மக்களின் பணம் பெரும் உதவியாய் உள்ளது.

இது ஒரு கசப்பான யதார்த்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் என்பது அரசியல்வாதிகளுக்கு மக்களை திசை திருப்ப பாவிக்கும் மிக இலகுவான ஆயுதம். இதனை 24 மணி நேரத்தில் சிங்களத்தை அரச மொழியாக்குவதன் மூலம் தொடக்கி வைத்தார்.அன்று தொடக்கம் வெற்றி பெறும் எந்த சிங்கள அரசியவாதியும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிங்களவர்களில் படித்த எ.எம் பெரேராவானும் சரி ஒக்ஸ்வேட்டில் படித்த லலித் அத்துலத் முதலியானாலும் சரி அல்லது சாதாரண பாமர பண்டாவானாலும் சரி இனவாதம் பேசாமல் விட்டதில்லை.

இன்று சிங்களவர்களுக்கான பொது விதி என்பது யார் இனவாதம் பேசுகிறானோ அவன் தேர்த்தலில் வெற்றி பெறுகிறான்.இதன் மூலம் ஒன்று தெரிய வரும்.அதாவது சிங்கள மக்கள் தமிழர்களுக்கு உரிமை என வரும் போது எந்த அனுமதியையும் தரவே மாட்டார்கள்.

தமிழர்களுக்கான இப்போதைய தெரிவு உலக நாடுகளினால் சிறிலங்காவுக்கு கொடுக்கும் அழுத்தங்களினால் ஏதாவது பெற வேண்டும்.கூட்டமைப்பும் அதை தான் செய்கிறது.ஆனால் ஆமை வேகத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை , சாதாரண சிங்கள மக்களின் எண்ணம்தான் தமிழரின் அழிவிற்குக் காரணம் என்ற முடிவிற்கு வராதீர்கள். பேரினவாதக் கருத்துக்களின் வல்வளைப்பு இந்த சிங்கள மக்களைச் சூழ்ந்திருக்கிறது.சிங்களப் பேரினவாதத்தைக் கையிலெடுத்த தலைவர்கள்தான் இத்தகைய அழிவுகளுக்குக் காரணம். தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு தலைவர்கள் இப்படியான சங்கதிகளைக் கையிலெடுத்துக் கொள்கிறார்கள்.சிங்களம் மட்டும் அழிவை ஏற்படுத்தியது.போரென்றால் போர் அழிவைத் தந்தது.இவை பேரினவாதமே

நீங்கள் சொல்லும் அந்த அப்பாவிகளின் ஆதரவில்லாமல் பேரினவாதம் நிலைபெற முடியாது.. இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நடைபெறுவது இது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.