Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

உலகில் நடைபெறும் பாரிய மனித அழிவுகளுக்கு உலகின் பலம் மிக்க நாடான அமெரிக்காவின் தலைவர் ஒபாமா எப்போதாவது பொறுப்பு எடுத்திருக்கிறாரா? கோலாயத்துக்களான உலக ரவுடியும் பேட்டை ரவுடியும் பொறுப்பு எடுக்க வேண்டிய அழிவுகளுக்கு ஒரு `தாவீதைப்` பொறுப்பெடுக்கச் சொல்லுவத்தில் என்ன நியாயம் இருக்க முடியுமதார்க

புலிகள் ஒரு இரத்தக் களரி ஏற்படும் என்று எத்தினை முறை எச்சரித்திருப்பார்கள்? எத்தினை முறை போர் நிறுத்த அறிவிப்பை அறிவித்தார்கள்? இவை எல்லாவற்றியும் உதாசீனம் செய்த்து முற்று முழுதான அழித்து ஒழிப்பைச் செய்து மக்களைப் பலி கொண்ட பின் அழிக்கப்பட்டவர்களையே பொறுப்பெடுக்கச் சொல்வதில் எதாவது நியாயம் இருக்கிறதா?

உலகில் மக்கள் தலைவர்களின் விருப்பக்களை மீறுத்தானே உலக ரவுடிகள் செயற்படுகிறார்கள்.

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் நடைபெறும் பாரிய மனித அழிவுகளுக்கு உலகின் பலம் மிக்க நாடான அமெரிக்காவின் தலைவர் ஒபாமா எப்போதாவது பொறுப்பு எடுத்திருக்கிறாரா?

தமது நாட்டுக்கு தலைவராக அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் ஒபாமா. அவர் அமெரிக்காவில் ஏற்படக்கூடிய வரலாற்று தவறுகளுக்கு பொறுப்பாகின்றார்.

தமிழீழம் ஒபாமாவை தெரிவு செய்யவும் இல்லை. ஒபாமா தமிழீழத்துக்கு பொறுப்பான தலைவராக தாம் தெரிவு செய்யப்பட ஒப்புதல் அளிக்கவும் இல்லை. தமிழீழத்துக்கு தாம் தலைவராக வர விரும்பிய மற்றவர்களை ஒபாமா எதிர்க்கவும் இல்லை அழிக்கவும் இல்லை. தமிழீழ மக்கள் ஒபாமாவின் ஆலோசனைப்படியே தமது நாடு இயங்க வேண்டும் என்று கேட்கவும் இல்லை அதற்காக போராடவும் இல்லை. ஆகவே எப்படி நீங்கள் ஒபாமாவை பொறுப்பேற்கும்படி கேட்க முடியும்?

அமெரிக்க மக்களும் தலைவர்களும் அமெரிக்காவை பலம்பொருந்திய நாடக்கி இருக்கிறார்கள். தமிழீழ மக்களும் தலைவர்களும் தமிழீழத்தை இந்த பிற்போக்கான சிறி லங்காவுக்கு கூட தாக்குபிடிக்க கூடிய நாடாக்க முடியவில்லை. இதற்காக அமெரிக்காவையும், உலகையும், அண்டசராசரங்களைளயும், பிரபஞ்சத்தையும், காணாத கடவுளையும் பொறுப்பாக்கி, விதியே என்று விடலாம் என்கிறீர்களா?

கோலாயத்துக்களான உலக ரவுடியும் பேட்டை ரவுடியும் பொறுப்பு எடுக்க வேண்டிய அழிவுகளுக்கு ஒரு `தாவீதைப்` பொறுப்பெடுக்கச் சொல்லுவத்தில் என்ன நியாயம் இருக்க முடியுமதார்

ரவுடிகள் செய்திருந்தால் சந்தோசமாக பொறுப்பெடுப்பார்கள். அப்படி பொறுப்பெடுப்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. காரணம் இந்த ரவுடிகளுக்கு மற்றவர்கள் மேலும் பயப்படுவார்கள். அல்பிரட் துரையப்பாவை கொலை செய்தவர்கள் அதற்கு பொறுப்பெடுத்தார்கள் இல்லையா? இவ்வாறான பொறுப்பெடுப்புகள் பயங்கரவாதம் என் கொள்ளப்படுகிறது.

பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள் தலைவர்களாக உள்ள நாடுகள் சிறப்பான நாடுகளாக இருக்கின்றன. காரணம் இந்த தலைவர்கள் தமது தவறுகளுக்கு வருந்தி மீண்டும் தவறுகள் இடம் பெறாமல் இருக்க அனைத்தையும் செய்கிறார்கள். பொறுப்பெடுக்க மறுக்கும் தலைவர்கள் ஆளும் நாடுகள் அழிந்து போகின்றன. மக்கள் கோரமாக மாண்டு போகிறார்கள்.

புலிகள் ஒரு இரத்தக் களரி ஏற்படும் என்று எத்தினை முறை எச்சரித்திருப்பார்கள்? எத்தினை முறை போர் நிறுத்த அறிவிப்பை அறிவித்தார்கள்? இவை எல்லாவற்றியும் உதாசீனம் செய்த்து முற்று முழுதான அழித்து ஒழிப்பைச் செய்து மக்களைப் பலி கொண்ட பின் அழிக்கப்பட்டவர்களையே பொறுப்பெடுக்கச் சொல்வதில் எதாவது நியாயம் இருக்கிறதா?

அவர்களுக்கு இரத்தகளரி ஏற்படும் என்று எச்சரிக்கும் ஆற்றல் இருந்திருக்கிறதே தவிர அந்த இரத்தக்களரியில் இருந்து தம்மை நம்பி வந்த மக்களை காப்பற்றும் ஆற்றல் இருக்கவில்லை. ஆகவே அவர்களின் தலைமைத்துவம் தோற்றுப்போன தலைமைத்துவமாக இருக்கிறது.

பொறுப்பானவர்களை நாம் அடையாளம் காண வேண்டியது அவசியமானது. காரணம் மீண்டும் இதே தலைமைத்துவத்திடம் மக்களின் பாதுகாப்பு ஒப்படைக்கப்படாமல் இருக்க இந்த பொறுப்பானவர்களை அடையாளம் காணும் செயற்பாடு தேவையாக இருக்கிறது.

உலகில் மக்கள் தலைவர்களின் விருப்பக்களை மீறுத்தானே உலக ரவுடிகள் செயற்படுகிறார்கள்.

ரவுடிகளிடம் இருந்து தமது மக்களை பாதுகாக்க முடியாமல் பலிகொடுத்து விட்டு பிறகு இதற்கு நாம் பொறுப்பல்ல என்று சொல்பவர்களிடம் அதே மக்களை பாதுகாக்க வேண்டிய தலைமைத்துவம் மீண்டும் கொடுக்கப்படக்கூடாது. இதற்காக அந்த அழிவுக்கு பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

இவை அளவு கடக்க பொது நிலைப்படுத்த பட்ட வசன்ங்கள்.

தீர்வு கிடைத்த பின் ஒவ்வோரு விசையமாக எடுத்து ஆராயபடவேண்டிய விடயங்களை "பொறுப்பில்லாமல் எதிரியின் கையில் மக்களை கொடுத்த தலைமை" என்று கூறுவது சரியாகாது.

சில விசையங்கள் தலைமையின் கட்டுப் பாட்டுக்கு மேலானது. பற்றியக் மான், சிங்கத்திடமிருந்து தனது அங்கத்தவர்களை காப்பதில்லை. வீரபாண்டியகட்ட பொம்பமன் தமிழருக்கு பீரங்கியும், துவக்கும் செய்ய தெரிந்திருக்காமைக்கு பொறுப்பெடுக்க முடியாது. மக்களிடம் வரியை வாங்கிய மன்னன் என்ற வரையில் தனது மக்கள் அடிமைப்படுவதை தடுக்க முயன்றான். மாமன்னர்கள் சுயநலத்திற்காக சரண் அடைந்த பின்னர் வெல்ல என்று நினைத்து போராடினான். அந்த உதாரணம் என்றும் நிலைத்திருந்து, மக்கள், எளிதில் தம்மை யாரும் அடிமை ஆக்க விட்டுக்கொடுக்காமல் போராடுவார்கள்.

தலைமை, போராளிகளுக்கு வெற்றி கிடைத்தால், அரசு பொது மக்களை தாக்குவார்கள் என்று தெரிந்திருந்ததால் பொது மக்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சிகள் கொடுத்திருந்தார்கள். ஆனால் ICRC யிடம் ஆள்கூறுகளை எடுத்து இலங்கை அரசு வைத்திய சாலைகளை தாக்கியது. இதற்கு தலைமையை எந்த உபயோகமான முறையில் பொறுப்பு கூற வைக்க முடியும்? கப்பலில் வெளியே காத்திருந்த ICRC, சரண் அடைந்த போராளிகளை காப்பாற்றவில்லை என்று மேரி கொலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விடையம் விசாரணைகளில் வருவதற்கு மேரி கொலினை யார் ஏன் காப்பாற்றவில்லை?

எது நடந்தாலும் முகாமைத்துவம் தான் பொறுப்பு என்று சாட்டுவது கொலிவூட் படங்களில் வரும் வெற்று வசனம். நடந்ததை உண்மையான, நேரடி இருகரை சாட்சியங்களையும் வைத்து விசாரித்து திருத்திக் கொள்வது பகுத்தறிவு

Edited by மல்லையூரான்

இயற்கையால் உண்டான அழிவு தவிர வேறு பாரிய அழிவு வரலாற்றில் இடம் பெறும் போது, அதற்கு வரலாற்று தவறு காரணமாகிறது. இந்த தவறும் அழிவும் இடம்பெறும் நாட்டின் தலைவர் அவற்றிற்கு பொறுப்பானவராகிறார்.

ஆமா அவர் தான் பொறுப்பானவர். அதுக்கு இப்ப என்ன பண்ணப் போறீங்க? முடிஞ்சுதில்ல? வேணுமெண்டா அவர் இறந்த நந்திக் கடல் ஒரமா நிண்டு கெட்ட வார்தையில நாலு திட்டு வேணுமெண்டாலும் திட்டீற்று வாங்க.

ஆனா ஒண்டை மட்டும் உணருங்க. அந்தாள் தான் வாழவேணும் தன்ர குடும்பம் வாழவேணும் உலகம் முழுக்க தன் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கவேணும் எண்டு வாழவில்லை.

எளிமையான மனுசன். சரியோ பிழையோ கடைசி வரை தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தை தன்ர மனசாட்சிக்கு சரி என்ற வகையில் கடைசி வரை போராடிய போராளி. அந்த களத்திலேயே வீரச்சாவும் அடைந்து விட்டார். இனி அந்தாள திட்டி ஆகப்போறது என்ன?

அவரின் போராட்ட வழிமுறையில் 1000 பிழைகள் இருந்தாலும் 30 வருசத்துக்கும் மேலால தன் இனத்துக்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கி எடுத்துக் கொண்ட கொள்கைக்காக விசுவாசமாகப் போராடி வீரச்சாவும் அடைந்து விட்ட ஒருவரை எல்லாத்துக்கும் குற்றம் சாட்டுறது முறையில்லை.

அது ...............

தமது நாட்டுக்கு தலைவராக அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் ஒபாமா. அவர் அமெரிக்காவில் ஏற்படக்கூடிய வரலாற்று தவறுகளுக்கு பொறுப்பாகின்றார்.

தமிழீழம் ஒபாமாவை தெரிவு செய்யவும் இல்லை. ஒபாமா தமிழீழத்துக்கு பொறுப்பான தலைவராக தாம் தெரிவு செய்யப்பட ஒப்புதல் அளிக்கவும் இல்லை. தமிழீழத்துக்கு தாம் தலைவராக வர விரும்பிய மற்றவர்களை ஒபாமா எதிர்க்கவும் இல்லை அழிக்கவும் இல்லை. தமிழீழ மக்கள் ஒபாமாவின் ஆலோசனைப்படியே தமது நாடு இயங்க வேண்டும் என்று கேட்கவும் இல்லை அதற்காக போராடவும் இல்லை. ஆகவே எப்படி நீங்கள் ஒபாமாவை பொறுப்பேற்கும்படி கேட்க முடியும்?

ஒபாமைவத் தெரிவு செய்யாத மக்கள் வாழும் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் ஏன் நிலை கொண்டுள்ளது? அது ஏன் அங்கெல்லாம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது? இவற்றிற்கெல்லாம் அந்த அந்த நாட்டு மக்கள் எப்போது அதிகாரம் வழங்கினார்கள்? அங்குள்ள மக்களைக் கேட்டா அமெரிக்கா செயற்படுகிறது?

தமீழப் போரை நாடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடாத்த ஆயுதங்கள்,பணம் ,பயிற்ச்சி வழங்கியது அமெரிக்கா, இதனை தமீழழ மக்களிடம் கேட்டு விட்டா அமெரிக்கா செய்தது? அமெரிக்கா உளவுத் தகவல்களை வ்ழங்கியது, புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவுடன் சேர்ந்து சிறிலங்கா கடற்படைக்குக் காட்டிக் கொடுத்தது.உலகெங்கும் தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வளவும் செய்து விட்டு அமெரிக்காவுக்குப் பொறுப்பில்லை என்றால், நாங்கள் எல்லாம் என்ன விரல் சூப்பிகளா?

அமெரிக்க மக்களும் தலைவர்களும் அமெரிக்காவை பலம்பொருந்திய நாடக்கி இருக்கிறார்கள். தமிழீழ மக்களும் தலைவர்களும் தமிழீழத்தை இந்த பிற்போக்கான சிறி லங்காவுக்கு கூட தாக்குபிடிக்க கூடிய நாடாக்க முடியவில்லை. இதற்காக அமெரிக்காவையும், உலகையும், அண்டசராசரங்களைளயும், பிரபஞ்சத்தையும், காணாத கடவுளையும் பொறுப்பாக்கி, விதியே என்று விடலாம் என்கிறீர்களா??

எல்லா ஏகாதிபத்தியங்களும் ஒரு நாள் மண்ணைக் கவ்வும் தான்.சிறிலங்கா தனித்துப் போரிடவில்லை என்பதைத் தானே சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.சிறிலஙாவுடன் மட்டுமே போர் என்றால் அதனை நாம் எப்போதோ வென்றுவிட்டோமே? தோல்வி அடைந்த படியால் எவரும் போராட்டத்தை விடவில்லையே, வெவ்வேறு வடிவங்களில் போராட்டாம் தொடரவே செய்யும்.

எல்ரவுடிகள் செய்திருந்தால் சந்தோசமாக பொறுப்பெடுப்பார்கள். அப்படி பொறுப்பெடுப்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. காரணம் இந்த ரவுடிகளுக்கு மற்றவர்கள் மேலும் பயப்படுவார்கள். அல்பிரட் துரையப்பாவை கொலை செய்தவர்கள் அதற்கு பொறுப்பெடுத்தார்கள் இல்லையா? இவ்வாறான பொறுப்பெடுப்புகள் பயங்கரவாதம் என் கொள்ளப்படுகிறது.??

உலகம் முழுக்க அமெரிக்கா கொன்ற உயிர்களுக்கு எப்போதாவது பொறுப்பு எடுத்திருக்கிறதா? அமெரிக்காவின் கொலைகள் பயங்கரவாதாம் இல்லையா?

பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள் தலைவர்களாக உள்ள நாடுகள் சிறப்பான நாடுகளாக இருக்கின்றன. காரணம் இந்த தலைவர்கள் தமது தவறுகளுக்கு வருந்தி மீண்டும் தவறுகள் இடம் பெறாமல் இருக்க அனைத்தையும் செய்கிறார்கள். பொறுப்பெடுக்க மறுக்கும் தலைவர்கள் ஆளும் நாடுகள் அழிந்து போகின்றன. மக்கள் கோரமாக மாண்டு போகிறார்கள்.

அவர்களுக்கு இரத்தகளரி ஏற்படும் என்று எச்சரிக்கும் ஆற்றல் இருந்திருக்கிறதே தவிர அந்த இரத்தக்களரியில் இருந்து தம்மை நம்பி வந்த மக்களை காப்பற்றும் ஆற்றல் இருக்கவில்லை. ஆகவே அவர்களின் தலைமைத்துவம் தோற்றுப்போன தலைமைத்துவமாக இருக்கிறது.

பொறுப்பானவர்களை நாம் அடையாளம் காண வேண்டியது அவசியமானது. காரணம் மீண்டும் இதே தலைமைத்துவத்திடம் மக்களின் பாதுகாப்பு ஒப்படைக்கப்படாமல் இருக்க இந்த பொறுப்பானவர்களை அடையாளம் காணும் செயற்பாடு தேவையாக இருக்கிறது.

.??

பொறுப்பானவர்கள் டில்லியிலும், ஒஸ்லோவிலும், வொசிங்டனிலும் அல்லவா இருக்கிறார்கள்.துயரம் என்னவெனில் இவர்களை நாங்கள் தெரிந்து எடுக்கவில்லை, இவர்கள் எமது தலைவர்களும் இல்லை , ஆனால் இவர்கள் தான் எமது தலைவிதியைத் தீர்மானிக்கிறார்கள்.

ரவுடிகளிடம் இருந்து தமது மக்களை பாதுகாக்க முடியாமல் பலிகொடுத்து விட்டு பிறகு இதற்கு நாம் பொறுப்பல்ல என்று சொல்பவர்களிடம் அதே மக்களை பாதுகாக்க வேண்டிய தலைமைத்துவம் மீண்டும் கொடுக்கப்படக்கூடாது. இதற்காக அந்த அழிவுக்கு பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

நிச்சயமாக மக்களுக்குத் தெரியும் தமக்கு அழிவை ஏற்படுதியவர்கள் யார் என்று.லண்டனில் ஒருவர் நன்றாக வாங்கிக் கட்டினார்.பதில் சொல்ல முடியாமல் ஒரு புழுவைப் போல் நெழிந்தார். வாசிங்கடனில் நிருபாமாவிடம் விகடன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர் திணறினார்.என்றோ ஓர் நாள் இவர்கள் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும்.

ஆமா அவர் தான் பொறுப்பானவர். அதுக்கு இப்ப என்ன பண்ணப் போறீங்க? முடிஞ்சுதில்ல? வேணுமெண்டா அவர் இறந்த நந்திக் கடல் ஒரமா நிண்டு கெட்ட வார்தையில நாலு திட்டு வேணுமெண்டாலும் திட்டீற்று வாங்க.

ஆனா ஒண்டை மட்டும் உணருங்க. அந்தாள் தான் வாழவேணும் தன்ர குடும்பம் வாழவேணும் உலகம் முழுக்க தன் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கவேணும் எண்டு வாழவில்லை.

எளிமையான மனுசன். சரியோ பிழையோ கடைசி வரை தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தை தன்ர மனசாட்சிக்கு சரி என்ற வகையில் கடைசி வரை போராடிய போராளி. அந்த களத்திலேயே வீரச்சாவும் அடைந்து விட்டார். இனி அந்தாள திட்டி ஆகப்போறது என்ன?

அவரின் போராட்ட வழிமுறையில் 1000 பிழைகள் இருந்தாலும் 30 வருசத்துக்கும் மேலால தன் இனத்துக்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கி எடுத்துக் கொண்ட கொள்கைக்காக விசுவாசமாகப் போராடி வீரச்சாவும் அடைந்து விட்ட ஒருவரை எல்லாத்துக்கும் குற்றம் சாட்டுறது முறையில்லை.

அப்படி ஏழு பரம்பரைக்கு தானும் சேர்த்து மக்களுக்கும் விடுதலையை எடுத்து கொடுத்திருந்தா ஏன் திட்ட போகின்றோம் .தனக்கும் இல்லாமல் மக்களையும் நடுரோட்டில விட்ட படியாத்தானே திட்டுகின்றோம் .

ஆள் நல்ல ஆள்தான் ஆனால் உலகம் தெரியாது .

வாயில வருது ............... தலைவரை தவிர்த்து வேறு ஏதாவது இருந்தால் வாருங்கள் பேசுவோம்

Edited by நந்தன்26

வாயில வருது

மட்டுக்களின் பெயரா பாஸ் :D

அப்படி ஏழு பரம்பரைக்கு தானும் சேர்த்து மக்களுக்கும் விடுதலையை எடுத்து கொடுத்திருந்தா ஏன் திட்ட போகின்றோம் .தனக்கும் இல்லாமல் மக்களையும் நடுரோட்டில விட்ட படியாத்தானே திட்டுகின்றோம் .

ஆள் நல்ல ஆள்தான் ஆனால் உலகம் தெரியாது .

நீங்கள் கேட்கிற அன்ன ஊஞ்சால் PLOT தான் கடை விரிச்சு வைத்திருந்த நாட்களில் செய்து விற்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

வீரபாண்டியகட்ட பொம்பமன் தமிழருக்கு பீரங்கியும், துவக்கும் செய்ய தெரிந்திருக்காமைக்கு பொறுப்பெடுக்க முடியாது.

ICRC யிடம் ஆள்கூறுகளை எடுத்து இலங்கை அரசு வைத்திய சாலைகளை தாக்கியது. இதற்கு தலைமையை எந்த உபயோகமான முறையில் பொறுப்பு கூற வைக்க முடியும்?

தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் இவ்வாறாக பொறுப்பேற்க முடியாத தலைவர்கள் தமிழ் மக்களின் அரசுகளை அமைத்திருந்தது என்பது புரிகிறது. இதே பாணியில் இனி வரும் தலைவர்களும் "நாமும் முடிந்ததை செய்வோம் பிழைத்து போனால் அழிந்து போகிறார்கள். நாம் அதற்கு பொறுப்பல்ல." என்ற எண்ணத்துடன் தான் தலைமை ஏற்க போகிறார்கள். இந்த தமிழ் மக்களுக்கு அழிவு தவிர வேறு எதிர்காலத்தை இவ்வாறாக பொறுப்புணர்வு குறைந்த தலைவர்கள் தரப்போவதில்லை. அது சம்பந்தனாகவும் இருக்கலாம், ருத்திரகுமாரனாகவும் இருக்கலாம்.

வாயில வருது ............... தலைவரை தவிர்த்து வேறு ஏதாவது இருந்தால் வாருங்கள் பேசுவோம்

நல்ல கொள்கை .

ஒபாமா காப்பிலி,சோனியா எருமை,கருணாநிதி கிழட்டு நாய் , கருணா ,டக்கிலஸ் ,இப்ப புதிதாய் எரிக் சொல்கேயும் நரியன் இப்படியே பட்டியல் ரொம்ப நீளம் ஆனால் தலைவரை தவிர்த்து வேறு எதுவும் பேச வாருங்கள் பேசுவோம் என்கின்றீர்கள் .நல்ல ஜனநாயகம் .

உங்களுக்கு உங்கள் தலைவரில் இருக்கும் மதிப்புத்தான் மற்றவர்களுக்கும் அவரவர் தலைவர்களில் இருக்கும் ,அதே போல் மற்ற தலைவர்களில் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை போலத்தான் மற்றவர்களுக்கும் உங்கள் தலைவர் மேல் இருக்கும் .

எனக்கு இன்றைய ஈழதமிழனின் பேரழிவிற்கும் கையறு நிலைக்கும் ஒரே காரணம் புலிகள் என்று முற்றுமுழுதாக நம்புகின்றேன் .என்னை பொறுத்தவரை அதுதான் உண்மையும் கூட.சிங்கள அரசை இலகுவாக நாம் வென்றிருக்கலாம் எமக்கு ராஜதந்திரம் இருந்திருந்தால் என்பது எனக்கு முடிவு .

எமது அழிவிற்கு காரணம் இந்தியாவோ ,சர்வதேசமோ அல்ல .

தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் இவ்வாறாக பொறுப்பேற்க முடியாத தலைவர்கள் தமிழ் மக்களின் அரசுகளை அமைத்திருந்தது என்பது புரிகிறது. இதே பாணியில் இனி வரும் தலைவர்களும் "நாமும் முடிந்ததை செய்வோம் பிழைத்து போனால் அழிந்து போகிறார்கள். நாம் அதற்கு பொறுப்பல்ல." என்ற எண்ணத்துடன் தான் தலைமை ஏற்க போகிறார்கள். இந்த தமிழ் மக்களுக்கு அழிவு தவிர வேறு எதிர்காலத்தை இவ்வாறாக பொறுப்புணர்வு குறைந்த தலைவர்கள் தரப்போவதில்லை. அது சம்பந்தனாகவும் இருக்கலாம், ருத்திரகுமாரனாகவும் இருக்கலாம்.

பொறுப்புக் கூறுவது பற்றிய கருத்துகளில் அடிப்படையற்ற பொறுப்பின்மை தெளிவாகிறது!

உங்கள் வீட்டில் ஒரு பெரும் கொள்ளைக் கூட்டம் புகுந்து மிரட்டி, கொள்ளையடிப்பதை தடுத்த ஒருவரை கொலை செய்து, பெரும் கொள்ளை அடித்துச் சென்றால் - அதற்கு வீட்டுத் தலைவன் என்ற முறையில் நீங்கள் பொறுப்பு எடுப்பீர்களா?

உங்கள் வீட்டில் புகுந்து சகோதரியை, மகளை, அல்லது மனைவியை சிங்கள அல்லது இந்திய ராணுவப் பயங்கரவாதிகள் அல்லது கயவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினால் - அதற்கு வீட்டுத் தலைவன் என்ற முறையில் நீங்கள் பொறுப்பு எடுப்பீர்களா?

அல்லது மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ இவ்வாறு நடந்தால் என்னால் தடுக்க வலுவில்லை - அதனால் நான் கல்யாணம் செய்யவே மாட்டேன், அல்லது பிள்ளைகளே பெற மாட்டேன் என்று "மிகுந்த பொறுப்புணர்வுடன்" இப்போதும் கல்யாணம் செய்யாமல் பிரமச்சாரியாக இருந்து வருகிறீர்களா?

தலைவரை வைத்து பெரும் சுயநலப் பிழைப்பு நடத்த எண்ணி பின்னர் ஏமாந்து போன சிலர் - அது நிறைவேறாத போது இவ்வாறு கருத்துக்கள் சொன்னதை நான் கேட்டுள்ளேன். ஆனால் நீங்கள் இவ்வாறு எழுதுவது ஏன் என்று விளங்கவில்லை?

எதுகை, மோனை அலங்காரம் கருப்பொருளை விற்றா?

முக மூடியை நன்றாக கிழித்துள்ளீர்கள்!

கம்பன்கழக ஜெயராஜ் போன்ற, நோர்வே தரகராக உள்ள தமிழ் இலக்கியவாதிகள் பெரும்பாலனாவர்களின் பிழைப்பு இப்படித்தான் உள்ளது.

தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் இவ்வாறாக பொறுப்பேற்க முடியாத தலைவர்கள் தமிழ் மக்களின் அரசுகளை அமைத்திருந்தது என்பது புரிகிறது. இதே பாணியில் இனி வரும் தலைவர்களும் "நாமும் முடிந்ததை செய்வோம் பிழைத்து போனால் அழிந்து போகிறார்கள். நாம் அதற்கு பொறுப்பல்ல." என்ற எண்ணத்துடன் தான் தலைமை ஏற்க போகிறார்கள். இந்த தமிழ் மக்களுக்கு அழிவு தவிர வேறு எதிர்காலத்தை இவ்வாறாக பொறுப்புணர்வு குறைந்த தலைவர்கள் தரப்போவதில்லை. அது சம்பந்தனாகவும் இருக்கலாம், ருத்திரகுமாரனாகவும் இருக்கலாம்.

தொடர்ந்து, சூழ்நிலைகளையும், முடிவுகளையும் விருப்பத்திற்கேற்ப வரையறுப்பதால் புதிதாக எதுவும் வராது.

1. இன்றைய நிலைமை என்றால் அது என்ன?

2 இதை விட எதிர்வு கூறியிருந்த நிலைமை என்ன?

3. இதை விட வேறு பாதை என்ன?

4. அந்த பாதையால் வந்திருக்க தக்க நிலை என்ன?

1956ல் 65% வீதமாக இருந்த அரசாங்க உத்தியோகம் 1970 கலில் 5% வீதத்திற்கு கீழ் போய்விட்டது. 1958 ல் தமிழரின் முதுகில் தாரால் சிங்கள சிறி எழுதப்பட்டது. 1977 இல் நடந்த கலம்பகத்திற்கு எல்லாம் இழந்து யாழ்ப்பாணம் போனோம். திரும்பி வந்து புது வேலை தேடி மேசை கதிரை வரையும் எல்லாம் புதுக்க தேடிமுடிய 1983 ல் திரும்ப முழுவதும். 1983 ல் 13 இராணுவம் இறந்ததற்கு முழு இலங்கைத்தமிழரும் தாக்கப்பட்டார்கள். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது இராணுவத்தால் தாக்கபட்ட போது ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. நமது சொத்துபத்தும் உயிர்களும் எல்லா இனக்கலவரத்திற்கும் போனதுதானே. இதில் எந்த தலைவர் பொறுப்பு எடுத்தார்?. இது எந்த வழியால் தடுக்க பட்டிருக்கலாம். எப்படி நாம் எமது 65% அரசாங்க உத்தியோகத்தையும் தொடர்ந்து தக்க வைத்திருந்திருக்கலாம்?

1947ல், J.R அரகரும பாவிப்பு மொழி சிங்களமாக வேண்டும் என்றவர். 1956 ல் கண்டி பாதயாத்திரை போனவர். பண்டாரநாயக்க, டட்லி இருவருமே எழுத்தில் போட்ட உடன்படிக்கை களை இல்லை என் மறுத்து ஏமாற்றினார்கள். 1977 கூட்டணி சுயாட்சிக்கு தீர்மானம் நிறை வேற்றி அது பாராளுமன்றத்தில் தடுக்க பட்டுவிட்டது. தடுக்கப்பட்டு விட்டது. அமிர்தலிங்கம் எதிர்க்கடசி தலைவராக இருக்கும் போது உலகின் எங்கும் இல்லாதவாறு நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து பதவி இழந்தார். ரஜீவ் காந்தியின் 1987ல் 13ம் திருத்தம் இன்றுவரை நடை முறைபடுதபடவில்லை.

இன்றைய நிலை என்று எதை நாம் குறிப்பிடுகிறோம்?. எந்த ஆயுத போராட்டத்தில் இறங்கி இந்த நிலை மலைநாட்டு தமிழருக்கு? அவர்கள் பிழை சாட்ட, தாம் பிறந்த இனம், "இலங்கையில் இருக்கும் இந்திய தமிழர்" என்ற பெயரை விட யாராவது தலைவர் அவர்களின் இன்றைய நிலைக்கான பிழையை வாங்கிகொள்ள தக்க தலைவர் ஒருவர் பிறந்தாரா?

லிபியாவில் இறந்த தூதுவரால் ஒபாமா பதையை கூட இழந்திருப்பார் இல்லையா? இன்னமும் தேர்தலில் தோற்ககூட முடியும் இல்லையா? ரஜீவ் காந்தி இலங்கையில் வைத்து தக்கபட்டர். தாக்கியவருக்கு இந்திய அரசால் ஏதாவது செய்ய முடிந்ததா? ஒருவருடத்திற்குள் இரண்டு முறை பிரதமர் மன்மோகன் சிங் இலனகி அரசு தன்னை ஏமாற்றியது என்றார். ஏதாவது செய்தாரா. தனக்கு மூக்கு போனாலும் எதிர்க்கு சகுனப்பிழையக்கட்டும் என்று புலிகளை பழிவாங்கி இலங்கையை சீனாவுக்கு கொடுத்தார் என்பதுதானே உண்மை. இதற்கு யார் பொறுப்பு?

இன்றைய நிலை என்பதை நம்மால் சரியாக வரையறுக்க முடியாவிட்டால் நாம் ஆகப்படும் ஒருவர் மீது பிழை போடுவது தானே. இதற்கேன் பிரபாகரன்? பிராபாகரன் ஆயுதப்போராடடம் நடத்தியவர். அது இப்போது இல்லை. அதன் தோல்வியைமட்டும் ஆராய்ந்தால் தான் இன்றைய அரசியல் போராட்டங்களை முன்னால் கொண்டு செல்லலாம் என்று பிடிவாதம் பிட்டிப்பவர்கள் நமக்கும் அரசியல் தோல்விகளும் வந்ததையும், அதை ஆராய்ந்தால் இனிமேலைய அரசியல் போராட்டங்களை நன்றாக நடத்தலாம் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? சம்பந்தன் ஏன் பிரபாகரன் பாதையை இனி திருத்த போவான்?

சேர் பட்டம் எடுத்த இராமந்தன் தனது தோல்விகளுக்கு பொறுப்பெடுத்தாரா?

சேர் பட்டம் எடுத்து சிவில் சேர்விஸ்சை. பாஸ்பண்ணி முதன் முதலாக இலங்கையருக்கும் அது தரவேண்டும் என்று கேட்டு வாங்கி பலசாதனைகளை நடத்திய அரூணாசலம் தனது தோவிகளுக்கு பொறுப்பெடுத்தாரா?

Q.C. பட்டம் எடுத்து பெரிய அரசியல் தீக்கதரிசியாக வர்ணிக்கப்படும் SJV தனது தோல்விகளுக்கு பொறுப்பெடுத்தாரா?

பெயரே மூளை நவரத்தினம் என்று அழைக்கப்படும் மூளை கூடிய நவரத்தினம் தனது தோல்விகளுக்கு பொறுப்பெடுத்தாரா?

22 வயதில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் உரையாற்றிகொண்டு பாரளுமன்றம் போய் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த அமிர்தலிங்கம் தனது தோல்விகளுக்கு பொறுப்பெடுத்தாரா?

சிவசிதமபரம் பொறுப்பெடுத்தாரா?

நிறைய அரசியல் தெரியாததாலா, அல்லது இவர்களும் பள்ளிகுடம் போகாத்தாலா அரசியல் தோல்விகண்டார்கள்.

இவர்களின் தோல்விகளை ஆராய்ந்தால் நமக்கு புதிய அரசியல் பாதை பிறக்கமாட்டதா?

ஆயுத போராட்டம் நடத்திய, பள்ளிக்குடம் போகதவர் என்று அரிசுன்னால் யாழில் வருணிக்க படும் பிராபாகரனின் பிழைகளை ஆராய்ந்து எப்படி புதிய அரசியல் பாதை ஒன்று அமைக்கலாம்? நீங்கள் என்ன ஆயுத போராடத்திற்கா பாதை வகுக்க முயல்கிறீர்கள்.

சம்பந்தன், உருத்திரா தங்களின் பதையில் எது பிராபாகரன் சென்ற பாதையுடன் சமாந்தரமாக இருக்கென்று கூறுகிறர்கள்?

தலைவரை வைத்து பெரும் சுயநலப் பிழைப்பு நடத்த எண்ணி பின்னர் ஏமாந்து போன சிலர் - அது நிறைவேறாத போது இவ்வாறு கருத்துக்கள் சொன்னதை நான் கேட்டுள்ளேன். ஆனால் நீங்கள் இவ்வாறு எழுதுவது ஏன் என்று விளங்கவில்லை

இதே கேள்வி என் மனத்திலும் தான்

Edited by மல்லையூரான்

நல்ல கொள்கை .

ஒபாமா காப்பிலி,சோனியா எருமை,கருணாநிதி கிழட்டு நாய் , கருணா ,டக்கிலஸ் ,இப்ப புதிதாய் எரிக் சொல்கேயும் நரியன் இப்படியே பட்டியல் ரொம்ப நீளம் ஆனால் தலைவரை தவிர்த்து வேறு எதுவும் பேச வாருங்கள் பேசுவோம் என்கின்றீர்கள் .நல்ல ஜனநாயகம் .

உங்களுக்கு உங்கள் தலைவரில் இருக்கும் மதிப்புத்தான் மற்றவர்களுக்கும் அவரவர் தலைவர்களில் இருக்கும் ,அதே போல் மற்ற தலைவர்களில் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை போலத்தான் மற்றவர்களுக்கும் உங்கள் தலைவர் மேல் இருக்கும் .

எனக்கு இன்றைய ஈழதமிழனின் பேரழிவிற்கும் கையறு நிலைக்கும் ஒரே காரணம் புலிகள் என்று முற்றுமுழுதாக நம்புகின்றேன் .என்னை பொறுத்தவரை அதுதான் உண்மையும் கூட.சிங்கள அரசை இலகுவாக நாம் வென்றிருக்கலாம் எமக்கு ராஜதந்திரம் இருந்திருந்தால் என்பது எனக்கு முடிவு .

எமது அழிவிற்கு காரணம் இந்தியாவோ ,சர்வதேசமோ அல்ல .

அதை எங்கை புளட்டோடை திரியேக்கை பொக்கெற்றுக்குள் வைத்திருந்து விட்டு தொலைத்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், உருத்திரா தங்களின் பதையில் எது பிராபாகரன் சென்ற பாதையுடன் சமாந்தரமாக இருக்கென்று கூறுகிறர்கள்?

.................

இதே கேள்வி என் மனத்திலும் தான்

சம்பந்தனும் ருத்திராவும் பிரபாகரன் போல, ஈழத்தமிழ் மக்களிற்கு தாம் தலைமை தாங்கி அவர்கள் விடிவுக்கு வழி காட்டுகிறோம் என்கிறார்கள். தவறான பாதையில் ஈழத்தமிழ் மக்களை இவர்கள் வழி நடத்தி சென்று மக்கள் இன்னமும் மோசமான நிலைக்கு போனால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் சொல்லுவது போல, நாம் பொறுப்பல்ல என்று கையை விரிப்பது. பிரபாகரன் காட்டிய வழியில் சம்பந்தனும் ருத்திராவும் போக வேண்டியது தானே? ஆயுதப் போராட்டமானாலும் இராஜதந்திரமானாலும் பொறுப்பற்ற தலைமை அழிவுக்கே வழி வகுக்கும். எவரும் வந்து நான் வழி காட்டுகிறேன் என்று தலைமை ஏற்று மீண்டும் மீண்டும் அழிவிற்குள் கொண்டு செல்ல இழிந்த இனம் ஈழத்தமிழர்.

அதை எங்கை புளட்டோடை திரியேக்கை பொக்கெற்றுக்குள் வைத்திருந்து விட்டு தொலைத்து விட்டீர்களா?

அவர்கள் நினைத்தது போல தான் நீங்களும் நினைக்கின்றீர்கள் அது பொக்கெட்டுக்குள் வைக்கும் சாமானாக்கும் என்று ,நீங்களும் எட்டோடு நின்றாச்சு போல .

எது சரியான வழி என்பதை உங்களால் காட்ட முடியுமா? பொறுப்புக் கூறுவது பற்றிக் கூறும் நீங்களே உங்கள் உடைமைகள் உறவுகளைத் துறந்து நாட்டிற்க்குச் சென்று ஒரு சரியான போராட்டத்துக்கு தலமை தாங்கலாமே?

இவை எல்லாம் சொல்வது இலகு செய்வது கடினம்.

மேலும் பொறுப்பெடுத்தவர் தனது குடும்பத்தையே கொடுத்துவிட்டார், ஒரு மனிதன், தலைவன் உலகில் இதனை விட வேறு எதனைத் தான் செய்ய முடியும்.

ஒரு சிலர் போன்ற நன்றிகெட்ட ஈனப் பிறவிகள் அல்ல ஈழத் தமிழ் இனம். எம் இனம் இருக்கும் வரை பிரபாகரன் என்னும் பெயர் உலகத் தமிழர் மனங்கள் எல்லாம் சந்ததி சந்ததி ஆக நிலைத்து இருக்கும். எந்தப் பெரிய சக்தியாலும் எமது மனக்களை அழிக்க முடியாது.

போராட்டத்தின் ஆணிவேரை ,ஆன்மாவை ,உங்களைப் போன்றவர்களால் என்றும் அழிக்க முடியாது.

[size=1]நியானி: ஒரு சொல் தணிக்கை/திருத்தம்[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

எது சரியான வழி என்பதை உங்களால் காட்ட முடியுமா? பொறுப்புக் கூறுவது பற்றிக் கூறும் நீங்களே உங்கள் உடைமைகள் உறவுகளைத் துறந்து நாட்டிற்க்குச் சென்று ஒரு சரியான போராட்டத்துக்கு தலமை தாங்கலாமே?

இவை எல்லாம் சொல்வது இலகு செய்வது கடினம்.

விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி இருந்த காலத்தில் சாத்தியமில்லாத இந்த மாற்றுத்தiமையை இன்று நீங்களே கேட்குமளவுக்கு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல அது கடினமானது. ஆனால் இந்தியாவும், நோர்வேயும், ஐரோப்பிய யுனியனும், அமெரிக்காவும் இவ்வாறான மாற்றுத்தலைமைகள் மக்கள் முன் வைக்கப்பட்டு மக்கள் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்க முயற்சி செய்கின்றன. அந்த முயற்சி இனியாவது வெற்றி பெற வேண்டும்.

சரியான வழியை கண்டுபிடிக்க, முதலில் பிழையான வழிகளை நாம் உறுதியாக தவிர்க்க வேண்டும்.

  1. ஆயுதப்போராட்டம் பிழையான வழி. அது வேண்டாம்.
  2. பயங்கரவாதம் பிழையான வழி. அதுவும் வேண்டாம்.
  3. துரோகி பட்டம் வழங்குவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.
  4. மாற்று தலைமைகளை கொல்லுவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.

சரியான வழியை காண, முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதில் தேவை:

  1. ஏன் சிங்கள மக்கள் இவ்வளவு மூர்க்கமாக போராடுகிறார்கள்? அவர்கள் கூலிக்கு போராடுகிறார்கள் அல்லது இன வெறி என்பதெல்லாம் இலகுவாக கூறப்படக்கூடிய போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத பதில்கள். அவர்கள் போராட மறுத்தால் தமிழ் மக்களின் விடுதலை இலகுவாகும்.
  2. ஏன் முழூ உலகும் சிங்கள மக்களை ஆதரிக்கிறது? நாம் உலகிலேயே சிறந்த மூளைசாலிகள் அதனால் எல்லாருக்கும் பொறாமை போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விடுத்து ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் ஆய்வு மூலம் இதற்கான பதில் காணப்பட வேண்டும். இந்த பதிலில் தான் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி இருந்த காலத்தில் சாத்தியமில்லாத இந்த மாற்றுத்தiமையை இன்று நீங்களே கேட்குமளவுக்கு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல அது கடினமானது. ஆனால் இந்தியாவும், நோர்வேயும், ஐரோப்பிய யுனியனும், அமெரிக்காவும் இவ்வாறான மாற்றுத்தலைமைகள் மக்கள் முன் வைக்கப்பட்டு மக்கள் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்க முயற்சி செய்கின்றன. அந்த முயற்சி இனியாவது வெற்றி பெற வேண்டும்.

சரியான வழியை கண்டுபிடிக்க, முதலில் பிழையான வழிகளை நாம் உறுதியாக தவிர்க்க வேண்டும்.

  1. ஆயுதப்போராட்டம் பிழையான வழி. அது வேண்டாம்.
  2. பயங்கரவாதம் பிழையான வழி. அதுவும் வேண்டாம்.
  3. துரோகி பட்டம் வழங்குவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.
  4. மாற்று தலைமைகளை கொல்லுவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.

சரியான வழியை காண, முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதில் தேவை:

  1. ஏன் சிங்கள மக்கள் இவ்வளவு மூர்க்கமாக போராடுகிறார்கள்? அவர்கள் கூலிக்கு போராடுகிறார்கள் அல்லது இன வெறி என்பதெல்லாம் இலகுவாக கூறப்படக்கூடிய போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத பதில்கள். அவர்கள் போராட மறுத்தால் தமிழ் மக்களின் விடுதலை இலகுவாகும்.

சிங்களவர்கள் நினைக்கிறார்கள் இது அவர்களுடைய நாடு [அவர்கள் பெரும்பான்மையினர் நாங்கள் சிறுபான்மையினர்]அவர்களுடைய சின்ன நாட்டை நாங்கள் பிரிக்க பார்க்கிறோம் அல்லது முழு நாட்டையும் அபகரிக்க பார்க்கிறோம் என நினைக்கிறார்கள் அப்படி இல்லை என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்

  1. ஏன் முழூ உலகும் சிங்கள மக்களை ஆதரிக்கிறது? நாம் உலகிலேயே சிறந்த மூளைசாலிகள் அதனால் எல்லாருக்கும் பொறாமை போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விடுத்து ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் ஆய்வு மூலம் இதற்கான பதில் காணப்பட வேண்டும். இந்த பதிலில் தான் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது.

இலங்கை அரசுக்கு எதிராக போராடியவர்கள் தீவிரவாதிகள் என்று உலகம் நினைக்குது...எப்பவும் மற்ற அரசுகளுக்கு ஆதரவாகத் தான் ஒரு நாட்டின் அரசு இயங்கும் ஆனால் களவாக தீவிர‌வாதிகளுக்கு உதவி செய்யும் ஆனால் எங்கட விடயத்தில் அப்படி இல்லை...இராஜ தந்திர விடயத்தில் சிங்களவர்கள் பெஸ்ட்.அவர்களுக்கு எதை வைத்து மற்ற நாடுகளை தங்கள் கைக்குள் வைத்திருக்கலாம் என்ட விசயம் தெரிந்திருக்குது...புலிகள் ஆரம்பத்தில் செய்த சில அரசியல் பிழைகள்[கதிர்காமர் உயிரோடு இருந்திருந்தால் தற்போது நிலைமை சில நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும்]...பாம்புக்கு தலையையும்,கீரிக்கு வாலையும் ஆட்ட சிங்களவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது அது புலிகளுக்கு இல்லவே இல்லை...சுருக்கமாக சொல்லப் போனால் ஏன் முழு உலகமும் சிங்களவனை ஆதரிக்குது என்டால் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதால் எல்லா நாடுகளுக்கும் இலங்கை தேவை அதை விட மொத்த உலகமுமே புலிகளை பயங்கரவாதிகளாகப் பார்ப்பதால் இந்த உலகம் தற்போதைக்கு சிங்கள் அரசையும்,மக்களையும் ஆதரிக்குது ஆனால் இந்த நிலைமை ஒரு நாள் மாறி முழு உலகமே சேர்ந்து எங்கட பக்க நியாயத்தை புரிந்து நாட்டை பிரிச்சு எங்களுக்கு தருகின்ற காலம் ஒன்று வரும்/வர வைப்போம்

உங்கட சுவாரசியமான விவாதத்தில் இடையில் புகுந்து குட்டையை குழப்பியதற்காக மல்லையும்,யூட்டும் என்னை மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் ருத்திராவும் பிரபாகரன் போல, ஈழத்தமிழ் மக்களிற்கு தாம் தலைமை தாங்கி அவர்கள் விடிவுக்கு வழி காட்டுகிறோம் என்கிறார்கள். தவறான பாதையில் ஈழத்தமிழ் மக்களை இவர்கள் வழி நடத்தி சென்று மக்கள் இன்னமும் மோசமான நிலைக்கு போனால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் சொல்லுவது போல, நாம் பொறுப்பல்ல என்று கையை விரிப்பது. பிரபாகரன் காட்டிய வழியில் சம்பந்தனும் ருத்திராவும் போக வேண்டியது தானே? ஆயுதப் போராட்டமானாலும் இராஜதந்திரமானாலும் பொறுப்பற்ற தலைமை அழிவுக்கே வழி வகுக்கும். எவரும் வந்து நான் வழி காட்டுகிறேன் என்று தலைமை ஏற்று மீண்டும் மீண்டும் அழிவிற்குள் கொண்டு செல்ல இழிந்த இனம் ஈழத்தமிழர்.

சரி... பிரபாகரனின் தலைமை பிழைச்சுப் போச்சுது. எதனையும் சாதிக்கல்ல...!

அதேபோல்.. தந்தை செல்வாவின் தலைமையும் எதனையும் சாதிக்கல்ல. போட்ட ஒப்பந்தங்களைக் கூட அவரால சிங்களவனைக் கொண்டு நடைமுறைப்படுத்த முடியல்ல. கடைசியில அவரும் கடவுளை இழுத்துவிட்டிட்டு.. ஓய்ந்திட்டார்.

அப்புறமா வந்த அமிர்தலிங்கம் பாட்டி.. வீரத் திலகம்.. தமிழீழம் அது இதெண்டு மேடையில பேசிட்டு.. எதிர்க்கட்சி வரிசையில அமர்ந்திட்டு வெற்றிகரமா போய் சேர்ந்திட்டினம்.

இதோ பிரபாகரன்..பங்கர் திருமகன்.. போற வழி தவறு.. நான் போறன் சரியான வழி என்று டக்கிளஸ் கிளம்பினார். மத்தியில் கூட்டாட்சி வடக்கிக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி என்றார். இப்போ பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையில் வடக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் பதவி வேணும் என்று கெஞ்சிக்கிட்டு கிடக்கிறார். அவரின் வீணையும் வெற்றிலையும் ஒன்றாக் கிடந்து நசுங்குப் படுகுது..!!! அவரால பாதுகாப்பு வலயங்களைக் கூட நகர்த்த முடியல்ல. சிங்களவனாப் பார்த்து வாக்கு வாங்க திறந்து விட்டால் ஒழிய..!

பிரபாகரன் மட்டுமல்ல.. இத்தனை பேரும் தான் தோத்திருக்கிறாங்க. சரி.. எல்லாருமே ஏறின குதிரையில சக்கடத்தார் வரிசையில்.. சம்பந்தர்.. உருத்திரகுமாரன் ஆக்களும் ஏறி விழத்தான் வேணுமா.. என்று கேட்கிறீங்க.. நியாயம்..!!

ஒருத்தருக்குமே.. ஒரு வழியும் சரியாப் புடிபடல்ல. நீங்களும் யாழில இப்ப ஒரு 6.. 7 வருசமா இருக்கிறீங்க. கணக்கப் புத்திமதி எல்லாம் அவிட்டுவிடுறீங்க. அப்ப ஏன் நீங்க இன்னொரு புதிய குதிரையில ஏறிப் பயணித்து மக்களுக்கு அழிவில்லாத..அரசியல் சுபீட்சம் பெற்றுத் தாற வழியைக் காட்டக் கூடாது. இப்ப புலிகளும் இல்ல. நீங்கள் அடிக்கடி சொல்லிக்கிற.. அரசியல் செய்ய அச்சுறுத்தல் அதுவும் இல்ல..!

உங்களுக்கு வலது கையா நம்ம அர்ஜீன் அண்ணா இருக்கிறார். ஏன் நீங்கள் தந்தை செல்வா.. பிரபாகரன்.. சம்பந்தன்.. உருத்திரகுமாரன்.. போன்ற தோற்றுப்போன அல்லது தோற்றுப் போகின்ற அரசியல் தலைமைகளுக்கு மாற்றீடாக வெல்லப் போற தலைமை ஒன்றை மக்களுக்கு வழங்கக் கூடாது..???! இவ்வளவு கதைக்கிற நீங்க அதைச் செய்ய முன் வரலாமே..????! அதன் மூலம் சிங்களவட்ட இருந்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிற அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுத்து நீங்க இரண்டு பேரும் தமிழ் மக்களின் மனங்களில் ஒரு உன்னத இடத்தையும் வரலாற்றில் பெரும் வெற்றி பெற்ற அரசியல் தலைமையாளர்கள் என்ற நிலையையும் தக்க வைத்துக் கொள்ளலாமே...??!

ஏன் சிக்கலான ஒரு பிரச்சனைக்கு தகுந்த தலைமைத்துவத்தின் ஊடாக அமைதி வழியில் சன நாய் அக வழியில் தீர்வு பெற்றுக் கொடுத்த பெரும் தலைகள் என்று அமைதிக்கான நோபல் பரிசைக் கூட பெற்றுக் கொள்ளலாமே...???! அதுக்கான ரூட் எல்லாம் கிளியராத்தானே இருக்குது..!!

ஏன் இன்னும் தயங்கி நிற்கிறீங்க..........????????????????????????????!

நிஜம் என்னன்னா..

யூட் அண்ணா.. எதையும் ஆராயலாம்.. எழுதலாம். செயற்படுத்திறத்திற்கு.. தனித்திறமை வேணும். என்னைப் பொறுத்தவரை நீங்கள்.. அதுக்கு சரி வரமாட்டீங்க..! ஜஸ்ட் எழுத்தோட.. அடுத்தவனைக் குழப்பி விடுறது மட்டும் தான்.. உங்களாலும் சரி அர்ஜீன் அண்ணா போன்றவர்களாலும் முடியக் கூடியது. இதை விட சம்பந்தன்.. உருத்திரா செய்யுற அரசியல் பறுவாயில்லை.. என்றே தோணுது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி இருந்த காலத்தில் சாத்தியமில்லாத இந்த மாற்றுத்தiமையை இன்று நீங்களே கேட்குமளவுக்கு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல அது கடினமானது. ஆனால் இந்தியாவும், நோர்வேயும், ஐரோப்பிய யுனியனும், அமெரிக்காவும் இவ்வாறான மாற்றுத்தலைமைகள் மக்கள் முன் வைக்கப்பட்டு மக்கள் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்க முயற்சி செய்கின்றன. அந்த முயற்சி இனியாவது வெற்றி பெற வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் நோர்வேயும் எங்கனம் ஒரு மாற்றுத் தலமையை முன் வைக்கலாம்? யார் இவர்கள் முன் வைப்பதற்க்கு? எமது மக்கள் இவர்களைத் தெரிவு செய்யவில்லையே? மாற்றுத் தலமை என்பது மக்கள் தெரிவு செய்வது அது மக்களிடம் இருந்து தான் வர வேண்டும், வரும்.புலிகளும் அதன் தலமையும் மக்களிடம் இருந்து தான் வந்தனர். இந்தியா நியமித்த மாற்றுத் தலமைகள் வரதர் முதல் டக்கிளசு வரை மக்களால் நிராகரிக்கப்பட்டனர்.

சரியான வழியை கண்டுபிடிக்க, முதலில் பிழையான வழிகளை நாம் உறுதியாக தவிர்க்க வேண்டும்.

ஆயுதப்போராட்டம் பிழையான வழி. அது வேண்டாம்.

இதனைப் போராடும் மக்களே தீர்மானிப்பர், போராட்ட வழி முறை அந்த வழியால் செல்லும் மக்களுக்கானது.

பயங்கரவாதம் பிழையான வழி. அதுவும் வேண்டாம்.

நிச்சயமாக பயங்கரவாதச் செயல்களை அமெரிக்காவும் இந்தியாவும் சிறிலங்காவும் இனி நிறுத்தினால் நலம்.

துரோகி பட்டம் வழங்குவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.

எவரும் எவருக்கும் பயங்கரவாதி எனப் பட்டம் இட முடியாதோ அவ்வாறே துரோகிப் பட்டமும் இட முடியாது.

மாற்று தலைமைகளை கொல்லுவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.

சே முதல் பிரபாகரன் வரை கொன்றது தவறான வழி என்பதை அமெரிக்கா உணர வேண்டும்.மக்களின் தலைவர்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்.

சரியான வழியை காண, முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதேண்டுல் தேவை:

ஏன் சிங்கள மக்கள் இவ்வளவு மூர்க்கமாக போராடுகிறார்கள்? அவர்கள் கூலிக்கு போராடுகிறார்கள் அல்லது இன வெறி என்பதெல்லாம் இலகுவாக கூறப்படக்கூடிய போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத பதில்கள். அவர்கள் போராட மறுத்தால் தமிழ் மக்களின் விடுதலை இலகுவாகும்.

சிங்கள மக்கள் மாகவம்ச பவுத்த பேரினவாதாத்தால் பீடிக்கப்பட்டவர்கள்.இது தான் சிறிலங்காவின் வரலாறு.இதனை அன்னிய சக்திகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கின்றன.

ஏன் முழூ உலகும் சிங்கள மக்களை ஆதரிக்கிறது? நாம் உலகிலேயே சிறந்த மூளைசாலிகள் அதனால் எல்லாருக்கும் பொறாமை போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விடுத்து ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் ஆய்வு மூலம் இதற்கான பதில் காணப்பட வேண்டும். இந்த பதிலில் தான் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது.

தற்போதைய அமெரிக்க அதிகார பீடம் என்பது முழு உலகு அல்ல. உலகில் பலர் தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்தை ஏற்கின்றனர்.ஆனால் ஒரு சதவிகிதம் ஆன ஆனால் பலம் பொருந்திய அதிகார பீடங்கள் தமது இராணுவ பலத்தால் உலகின் போக்கைத் தீர்மானிக்கின்றன. எமது நியாயமான போராட்டத்தை நாம் உலக மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம், இந்த ஒரு சத விகிததினரின் புவி சார் பொருளாதார நலனின் பாற்பட்ட சதுரங்க விளயாட்டை தோற்கடிக்க முடியும்.மேலும் இன்று வளர்ந்து வரும் சீன அதிகார பீடத்துடனான அதிகாரப் போட்டியை மையமாக வைத்தே அமெரிக்கா இதில் தலையிடுகிறது. இந்த அதிகாரப் போட்டியையும் நாம் பயன் படுத்த முடியும்.எமக்குப் போராடுவதற்கான வெளிகள் பல இருக்கின்றன.அவை எல்லாவற்றியும் நாம் பயன் படுத்த வேண்டும்.எமது எதிரிகள் யார் என்னும் தெளிவுடன் போராட வேண்டும்.

அவர்கள் நினைத்தது போல தான் நீங்களும் நினைக்கின்றீர்கள் அது பொக்கெட்டுக்குள் வைக்கும் சாமானாக்கும் என்று ,நீங்களும் எட்டோடு நின்றாச்சு போல .

நான் நினைக்கிறது வந்து புளொட் நினைச்சதை. அதாவது நீங்கள் நினைக்கிறதை.

சித்தார்தன் UNP, SLFP இரண்டுக்கும் ஆதரவு கொடுத்துவிட்டு அவர்களை வைத்து எதையாவது உருப்படியாய் செய்வதற்கு நீங்கள் சொல்கிற பற்றரியை தேடிக்கொண்டு திரிகிறார். கண்டு பிடிக்கிற அன்று அதை தன்ரை மூளைக்கு போட்டர் என்றால் அன்று தமிழருக்கு விடுதலை.

Edited by மல்லையூரான்

நான் நினைக்கிறது வந்து புளொட் நினைச்சதை. அதாவது நீங்கள் நினைக்கிறதை.

சித்தார்தன் UNP, SLFP இரண்டுக்கும் ஆதரவு கொடுத்துவிட்டு அவர்களை வைத்து எதையாவது உருப்படியாய் செய்வதற்கு நீங்கள் சொல்கிற பாற்றரியை தேடிக்கொண்டு திரிகிறார். கண்டு பிடிக்கிற திருப்பி தன்ரை மூளைக்கு போட்டர் என்றால் அன்று தமிழருக்கு விடுதலை.

உயிர் வாழ்தலே முதல் மனித சுதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.