Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

சம்பந்தனும் ருத்திராவும் பிரபாகரன் போல, ஈழத்தமிழ் மக்களிற்கு தாம் தலைமை தாங்கி அவர்கள் விடிவுக்கு வழி காட்டுகிறோம் என்கிறார்கள். தவறான பாதையில் ஈழத்தமிழ் மக்களை இவர்கள் வழி நடத்தி சென்று மக்கள் இன்னமும் மோசமான நிலைக்கு போனால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் சொல்லுவது போல, நாம் பொறுப்பல்ல என்று கையை விரிப்பது. பிரபாகரன் காட்டிய வழியில் சம்பந்தனும் ருத்திராவும் போக வேண்டியது தானே? ஆயுதப் போராட்டமானாலும் இராஜதந்திரமானாலும் பொறுப்பற்ற தலைமை அழிவுக்கே வழி வகுக்கும். எவரும் வந்து நான் வழி காட்டுகிறேன் என்று தலைமை ஏற்று மீண்டும் மீண்டும் அழிவிற்குள் கொண்டு செல்ல இழிந்த இனம் ஈழத்தமிழர்.

நீங்கள் உங்கள் மனதுக்குள் "இந்த நிலைமை", "பொறுப்பு கூறல்" போன்ற பதங்களை சரியான இடங்களின், ஈழத்தமிழர் வாழ்க்கையுடன் வைத்து ஆராயவேண்டும்.

சம்பந்தர் 2009 இல் தனது உயிருக்கு பயந்து இந்தியாவை தங்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும்படி கேட்டவர். நீங்கள், உங்களின் கடமைக்கு பொறுப்பு கூற விரும்பாதவரை பொறுப்பு கூறல் என்றபதம் அடுத்தவரை பிழை சாட்டல் மட்டுமே. ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட "தலைவரின் பொறுப்பு கூறல்" என்பதை கருத்தை கொஞ்ச நேரம் கண்ணை மூடி சிந்தியுங்கள்.

ஜனநாய தலைவர்- ஆயுத தாங்கிய தலைவர் இருவருக்கு தாம் தலைமை தாங்குபவர்கள் மீது என்ன பொறுப்பு இருக்கிறது?

ஒரு தலைவருக்கு:

சட்டப்படி, மனச்சாட்சிப்படி என்ன பொறுப்பு இருக்கிறது என்று சிந்தியுங்கள்.

நீங்கள் எதையாவதை நினத்தால் அது தான் தலைவரின் பொறுப்பு என்று நினக்கிறீகள்.

சம்பந்தர் அல்லது உருத்திரா எந்த எதிர்தலைமைகளையும் துவக்கு எடுத்து சுடப்போவதிலை (அது கட்டாயம் செய்ய வேண்டியதா இல்லையா என்ற விவாதம் வேறு). எனவே புதிய பாதை ஆரம்பித்துவிட்டதை அறியாதவர் மாதிரி ஆயுதபோராட்டம், பயங்கரவாதம், துரோகம், எதிர்த் தலைமை என்றெல்லாம் எழுதுவது சும்மா எதையோ புதிதாக கண்டு பிடித்திருப்பதாக காட்ட மட்டுமே உதவும். இவற்றால் யாரும் பலனடைய போவதிலை.

ஆனால் இலங்கையில் இருக்கும் எதிர் தமிழ் கட்சிகளுக்கு நாம் இதை படிப்பிக்க முடியாது. கருணாவோ, பிள்ளையானோ அல்லது தேவானந்தாவோ தமக்கு தேவை இல்லாதவர்களை போட்டுக்கொண்டுதான் இருப்பர்கள். சம்பந்தர் இதை அறிந்து தனது பாதுகாப்புடன் தான் இருக்க வேண்டும். நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பெடுக்க வேண்டும். அவர் மேர்வின் சில்வாவுடன் "நான் உன்னைச்சுட மாட்டேன் நீ என்னை ஒன்றும் செய்தாதே" என்று உத்தரவாதம் வங்க முடியாது.

எனவே இந்த குழந்தை பிள்ளை கதைகளை பெரிய சொல்லுகளை போட்டு பெரிய விடயமாக காட்டாமல் உண்மையான முறைகளை சொல்ல வேண்டும். எப்படி சிங்கள தலைமையை எமக்கு இலங்கையில் இருக்க உரிமை உண்டு என்று நம்ப வைக்கலாம்?

இதில் சிங்கள மக்களை "போராடுகிறார்கள்" என்று வரையறுப்பது அடுத்த தேவை இல்லாத கருத்து. அவர்கள் அல்ல போராடுவது. சிங்கள தலைவர்கள் அவர்களை உபயோகிக்கிறார்கள். இதில் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க வழி இல்லை. லிங்கனுக்கு ஒரு கறுப்பர் தன்னும் வாக்கு அளிக்கவிலை. வாக்கு அளித்தவர்கள் வெள்ளையர்கள் மட்டுமே. அவர் வெள்ளையர்களுக்கு எதிராக உள்நாட்டு போரை தொடக்கிவைத்துவிட்டு திரும்பவும் அதே வெள்ளையர்களிடம் சென்று வாக்கு கேட்டார். தனது உயிரையும் இழந்தார். சிங்கள மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த சரித்திரம் தெரிய வேண்டியத்திலை. ஆனால் ராஜபக்சா வரையும் இதை அறிந்திருக்கிறார்கள். எனவே சிங்கள மக்கள் போராடினால், அதற்கு மற்றைய உலகத்தலைவர்கள் என்ன செய்து சரித்திரம் படைத்தார்கள் என்பது அவர்கள் எல்லோருக்கும் எப்போதும் தெரிந்தே இருந்தது.

புத்த சமையத்தை மறந்து சிங்களவர் பெரும்தொகையில் கிரிஸ்தவர்களாக மாறிய போது அநாகரிக தர்மபாலா அதை தடுத்து நிறுத்தினார் என்றுதான் சிங்கள சரித்திரம் சொல்ல்கிறது. இதனால்த்தான் சேனநாயக்கா, பண்டாயநாயகா, ராஜபக்சா. குணதிலகா, ஜெயவார்தான, விக்கிரமசிங்கா, பொன்சேக்கா என்று சிங்கள ஆட்டிசியில் இருந்தவர்கள் எல்லோருமே கிறிஸ்தவர்கள். இது வரையில் தர்மபால கேட்டபடி ஒரு ஒழுங்கான பௌத்தன் பதவிக்கு வரவில்லை. JR தான் கண்டி யாத்திரை போய் கலவரம் தொடக்கினார். பண்டாராநாயக்க ஒக்ஸ்போட்டில் படித்துவிட்டு வந்துதான் சமயம் மாறி கால்சட்டையை கொளுத்தினார். இதில் மோடைய சிங்கள மக்கள் சுயமாக சிந்தியாமல் "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்று வாழ்கிறார்கள். அவர்களில் 1/10000 ஒன்று தன்னும் பாளியில் இருக்கும் மகாவம்சத்தை படித்து உண்மையை ஆராய்ந்தவர்கள் அல்ல. அவர்களை இனி படித்துதான் நாம் தெரிய வேண்டும் அறிவுரை கூறும் ஒருவர் எப்படி சம்பந்தருக்கும் பொறுப்பு கூறுவது பற்றி ஆலோசனை கூற முடியும்?

ஐரோப்பா, அமெரிக்கா எதையும் புதிதாக தரவரவில்லை. இந்த முறை ஒபாமா தோற்று ரோமினி வந்தால் அமெரிக்கா ஐ.நா. பிரேரணையை கைவிட்டுவிட்டு பிளேக் விரும்பிய மாதிரி திரும்ப இலங்கையில் எப்படி அமெரிக்க கம்பனிகள் முதலிடலாம் என்பதை ஆராய தொடங்கு வார்கள் என்பதை மறக்க வேண்டாம். இந்த முடிவில் சமபந்தருக்கும், உருத்திராவுக்கும் பொறுப்பு கூறவேண்டிய பங்கு இருக்க முடியாது.

,

Edited by மல்லையூரான்

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனும் ருத்திராவும் பிரபாகரன் போல, ஈழத்தமிழ் மக்களிற்கு தாம் தலைமை தாங்கி அவர்கள் விடிவுக்கு வழி காட்டுகிறோம் என்கிறார்கள். தவறான பாதையில் ஈழத்தமிழ் மக்களை இவர்கள் வழி நடத்தி சென்று மக்கள் இன்னமும் மோசமான நிலைக்கு போனால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் சொல்லுவது போல, நாம் பொறுப்பல்ல என்று கையை விரிப்பது. பிரபாகரன் காட்டிய வழியில் சம்பந்தனும் ருத்திராவும் போக வேண்டியது தானே? ஆயுதப் போராட்டமானாலும் இராஜதந்திரமானாலும் பொறுப்பற்ற தலைமை அழிவுக்கே வழி வகுக்கும். எவரும் வந்து நான் வழி காட்டுகிறேன் என்று தலைமை ஏற்று மீண்டும் மீண்டும் அழிவிற்குள் கொண்டு செல்ல இழிந்த இனம் ஈழத்தமிழர்.

புலிக்கு எதிரான பாதையில் நிற்பதை மட்டும் புத்திசாலித்தனத்தின் உச்சபட்ச அளவாக தங்களால் கருதப்படுவது ஆரம்ப கால விவாதங்களில் ஜீவன்கூலுக்காக தலையால் நின்று தாங்கள் விவாதித்ததை இன்னும் நான் மறக்கவில்லை. அந்த ஜீவன்கூலே இன்று பச்சையாக சிங்களத்துடன் கலந்து உங்கள் வெள்ளை அடிக்கும் கரங்களை கறப்படுத்திவிட்டார் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோழிக்குஞ்சுகளின் பாதுகாப்பு ஆன தாய்க் கோழி ஓநாயின் தேவைக்கு எதிரி!

இந்திய ஓநாயின் தேவைக்கு பிரபாகரன் எதிரி! உலக ஓநாய்களின் தேவைகளுக்கும் பிரபாரன் எதிரி!

எம்மினத்தின் தேவைகளுக்கு தோள் தருகின்ற ஒருவன் பிரபாகரனை விமர்சிக்கட்டும் அப்போது தேவையான நியாயத்தை பெறுவதற்கு நாம் தயாராகின்றோம்!

எம்முடைய உரிமைக்காக தன் உயிரைக் கொடுத்தவனை எமது கையால் கல்லால் அடிக்க வைத்து அந்தக் கொலையின் பாவத்தைக் கழுவ உலக அரசுகள் நடிக்கின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி இருந்த காலத்தில் சாத்தியமில்லாத இந்த மாற்றுத்தiமையை இன்று நீங்களே கேட்குமளவுக்கு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல அது கடினமானது. ஆனால் இந்தியாவும், நோர்வேயும், ஐரோப்பிய யுனியனும், அமெரிக்காவும் இவ்வாறான மாற்றுத்தலைமைகள் மக்கள் முன் வைக்கப்பட்டு மக்கள் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்க முயற்சி செய்கின்றன. அந்த முயற்சி இனியாவது வெற்றி பெற வேண்டும்.

சரியான வழியை கண்டுபிடிக்க, முதலில் பிழையான வழிகளை நாம் உறுதியாக தவிர்க்க வேண்டும்.

  1. ஆயுதப்போராட்டம் பிழையான வழி. அது வேண்டாம்.
  2. பயங்கரவாதம் பிழையான வழி. அதுவும் வேண்டாம்.
  3. துரோகி பட்டம் வழங்குவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.
  4. மாற்று தலைமைகளை கொல்லுவதும் தவறான வழி. அதுவும் வேண்டாம்.

சரியான வழியை காண, முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதில் தேவை:

  1. ஏன் சிங்கள மக்கள் இவ்வளவு மூர்க்கமாக போராடுகிறார்கள்? அவர்கள் கூலிக்கு போராடுகிறார்கள் அல்லது இன வெறி என்பதெல்லாம் இலகுவாக கூறப்படக்கூடிய போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத பதில்கள். அவர்கள் போராட மறுத்தால் தமிழ் மக்களின் விடுதலை இலகுவாகும்.
  2. ஏன் முழூ உலகும் சிங்கள மக்களை ஆதரிக்கிறது? நாம் உலகிலேயே சிறந்த மூளைசாலிகள் அதனால் எல்லாருக்கும் பொறாமை போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விடுத்து ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் ஆய்வு மூலம் இதற்கான பதில் காணப்பட வேண்டும். இந்த பதிலில் தான் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது.

போன கிழமை

பரிசில் மாற்றுக்கருத்தாளர்கள் முழுவதுமாக கூடி சில விடயங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனராம்.

அது பிரபாகரனை விட தற்பொழுதுள்ள மாற்றுக்கருத்துக்குழுக்களே ஏகபிரதிநதித்துவம் மற்றும் எதேச்சதிகாரத்தில் முன்னணியில் உள்ளனராம். அதாவது பிரபாகரன் இவர்களைவிட நல்லவராம்.

வந்து சொன்னவர் சொன்னார் இது ஒரு நல்ல வவிடயம். வரவேற்கப்படவேண்டிய விடயம் என்று.

அடிக்கத குறையாக பேசி கலைத்துவிட்டேன்

போங்கடா போய் பிரபாகரனுக்கு செய்தியை அனுப்புங்கோ. வந்து போராடு என்று. வருவார்.

நாசமாப்போவார். உதவி செய்யாட்டியும் உபத்திரம் தராமல் ஒதுங்கி இருங்கடா என காலில் விழுந்து கெஞ்சியும் கேளாது உலகமெல்லாம் திரிந்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு

இன்றைக்கு நல்லவராம்............

யூட்

இப்ப இருப்பவர்களில் ஒரு தலைவரை நீங்களே காட்டுங்கள்

அவர் தலைமை தாங்கி முன் செல்ல தயாரா என்றும் சொல்லுங்கள்

யூட்

இப்ப இருப்பவர்களில் ஒரு தலைவரை நீங்களே காட்டுங்கள்

அவர் தலைமை தாங்கி முன் செல்ல தயாரா என்றும் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குப் பல தலைவர்கள் இருந்தார்கள். தந்தை செல்வா, பின்னர் அமிர்தலிங்கம், அதன் பின்னர் தலைவர் பிரபாகரன். ஆனால் தற்போது தலைவர் என்ற ஆளுமையோடு யாரும் இல்லாததால்தான் மேய்ப்பன் இல்லாத ஆடுகள் மேய்ப்பனைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மேய்ப்பன் என்று தம்மைத் தாமே சொல்லுபவர்கள் எல்லாம் ஒன்றில் கழுதைகளாக இருக்கின்றார்கள் இல்லை நரியாக இருக்கின்றார்கள்.

மக்களின் விருப்பமும் ஒப்புதலும் இன்றி யாரும் தன்னைத்தானே தலைவன் என்று சொல்லி தமிழர்களின் தலைவராக முடியாது.

சரியான வழியை காண, முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதில் தேவை:

1,ஏன் சிங்கள மக்கள் இவ்வளவு மூர்க்கமாக போராடுகிறார்கள்? அவர்கள் கூலிக்கு போராடுகிறார்கள் அல்லது இன வெறி என்பதெல்லாம் இலகுவாக கூறப்படக்கூடிய போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத பதில்கள். அவர்கள் போராட மறுத்தால் தமிழ் மக்களின் விடுதலை இலகுவாகும்.

1/25 விகிதாசாரம்... ஆயுத பண பலம்..

2.ஏன் முழூ உலகும் சிங்கள மக்களை ஆதரிக்கிறது? நாம் உலகிலேயே சிறந்த மூளைசாலிகள் அதனால் எல்லாருக்கும் பொறாமை போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விடுத்து ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் ஆய்வு மூலம் இதற்கான பதில் காணப்பட வேண்டும். இந்த பதிலில் தான் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது.

கேள்வியில் பிழை, சிங்களவனுக்கு பதிலாக இந்தியன் எண்டு வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. எல்லாருமே ஏறின குதிரையில சக்கடத்தார் வரிசையில்.. சம்பந்தர்.. உருத்திரகுமாரன் ஆக்களும் ஏறி விழத்தான் வேணுமா.. என்று கேட்கிறீங்க.. நியாயம்..!!

ருத்திராவும் சம்பந்தரும் இன்னமும் தோற்கவும் இல்லை, அப்படி நான் எழுதவும் இல்லை. எனது கருத்து: இவர்கள் மக்களை வழிநடத்தி செல்லும் பாதை, மக்களை அழிவுக்கு கொண்டு சென்றால் அதற்கு இவர்களே பொறுப்பானவர்கள் என்பதாகும். அப்படியான அழிவு வந்த பிறகு "அதற்கு நாம் பொறுப்பல்ல" என்று இவர்கள் கூறுவதற்கு இடம் இருக்ககூடாது. இன்று ஈழத்தமிழரை பொறுத்தளவில் அவர்களை வழிநடத்துபவர்கள், தாம் மக்களை எப்படியும் வழிநடத்தலாம் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல என்ற வகையிலான நிலைப்பாடு இருக்கிறது. இந்த களத்திலேயே அவ்வாறான நிலைப்பாட்டுக்கே பெருமளவு ஆதரவு இருக்கிறது. தமது தலைமையினால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்கும் தலைவர்களையே ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான தலைவர்களே பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என்பதே எனது கருத்து.

ஒருத்தருக்குமே.. ஒரு வழியும் சரியாப் புடிபடல்ல. நீங்களும் யாழில இப்ப ஒரு 6.. 7 வருசமா இருக்கிறீங்க. கணக்கப் புத்திமதி எல்லாம் அவிட்டுவிடுறீங்க. அப்ப ஏன் நீங்க இன்னொரு புதிய குதிரையில ஏறிப் பயணித்து மக்களுக்கு அழிவில்லாத..அரசியல் சுபீட்சம் பெற்றுத் தாற வழியைக் காட்டக் கூடாது. இப்ப புலிகளும் இல்ல. நீங்கள் அடிக்கடி சொல்லிக்கிற.. அரசியல் செய்ய அச்சுறுத்தல் அதுவும் இல்ல..!

எனக்கு தலைமைத்துவ ஆற்றல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி நினைப்பதற்கு எதுவித ஆதாரமும் எனது வரலாற்றில் இல்லை.

ஈழத்தமிழர்களுக்கு நான் தலைமை வகிக்கிறேன் என்று இந்த வெற்றிடத்தை நிரப்ப நானும் போய் பின்னர் மக்கள் எனது வழியில் சென்று அழிந்து போனால் "நான் அதற்கு பொறுப்பல்ல" என்று இந்த யாழ் களத்தில் உள்ள பலர் எனக்காக வாதிடுவார்கள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் எனக்கு இல்லாத ஆற்றலை இருப்பதாக கருதி அந்த மக்களை ஆபத்துக்குள் மீண்டும் கொண்டு செல்வது சரியாக அமையாது. என்னால் செய்ய முடிந்த செயல்களுக்கு பொறுப்பெடுப்பதே எனது கொள்கை.

இந்தியாவும் அமெரிக்காவும் நோர்வேயும் எங்கனம் ஒரு மாற்றுத் தலமையை முன் வைக்கலாம்? யார் இவர்கள் முன் வைப்பதற்க்கு? எமது மக்கள் இவர்களைத் தெரிவு செய்யவில்லையே? மாற்றுத் தலமை என்பது மக்கள் தெரிவு செய்வது அது மக்களிடம் இருந்து தான் வர வேண்டும்

உங்களது கருத்தே எனது கருத்தும். நோர்வேயும், இந்தியாவும், அமெரிக்காவும் இவ்வாறாக மக்கள் மாற்றுத்தலைமையை தெரிவு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பதாகவே நான் எழுதியிருந்தேன். இன்று அந்த சூழ்நிலை இருக்கிறதே? மக்கள் சம்பந்தரின் கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கிறார்களே? என்று பலர் சொல்லக்கூடும். அதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது. ஆனால் வாக்களித்த மக்கள் மிகவும் குறைவான தொகையினர். மாற்றுத் தலைமையை அமைத்து போட்டியிட பலரும் பயப்படும் இராணுவ மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது. அவை அகல வேண்டும். அதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் நோர்வேயும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

யூட்

இப்ப இருப்பவர்களில் ஒரு தலைவரை நீங்களே காட்டுங்கள்

அவர் தலைமை தாங்கி முன் செல்ல தயாரா என்றும் சொல்லுங்கள்

இப்போது அறியப்பட்டவர்கள் மட்டும்தான் தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் என்று நாம் கருதக்கூடாது. அறிப்படாத ஆற்றல் உள்ளவர்கள் இருக்கக்கூடும். அவர்களை கண்டறிந்து அவர்களின் தலைமைத்துவத்தையும் கருத்தில் கொள்ள தயங்கக்கூடாது.

நான் முன்னரே குறிப்பிட்டபடி இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதிலை புரிந்து கொள்வது வெற்றி பெறக்கூடிய தலைவருக்கு அடிப்படையானது.

  1. ஏன் சிங்களவர்கள் மூர்க்கமாக எதிர்த்து போராடுகிறார்கள்?

  2. ஏன் உலகநாடுகள் முழுவதும் சிங்களவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன?

எனது அபிப்பிராயப்படி இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலை இன்று அறியப்பட்ட இரண்டு தலைவர்கள் ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் பிதா இம்மானுவலும் ஆகும்.

ஏன் சிங்களவர்கள் மூர்க்கமாக எதிர்த்து போராடுகிறார்கள்?

இதற்கு இங்கு சிலர் பதிலளித்திருந்தார்கள். ஒருவர் குறிப்பிட்டடிருந்தார்: அவர்கள் முழு தீவும் தமது நாடு என்று நினைக்கிறார்கள் அதனால் மூர்க்கமாக போராடுகிறார்கள் என்று. இன்னும் ஒருவர்: அவர்கள் 25 மடங்கு அதிகமானவர்கள் அதோடு ஆயுத பலமும் உள்ளது. அதனால் போரடுகிறார்கள் என்று. இவை இரண்டும் உண்மையானவை. ஆனால் இவை அவர்கள் மூர்க்கமாக போராட காரணமல்ல.

1990ல் பிரேமதாசா காலத்தில், பிரேமதாசாவுக்கு விஞ்ஞானத்துறை ஆலோசகராக இருந்த ஒருவரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருந்தார். அவர் இதற்கான காரணத்தை சொன்னார். "தமிழர்கள் மிகவும் சிறப்பான போராட்ட ஆற்றல் கொண்டவர்கள். உலகம் முழுவதும் பரந்துள்ள தமிழினம் ஒன்றுபட்டு சிங்களவருக்கு எதிராக செயற்படுகிறது. தமிழ்நாட்டிலும் பெருமளவு தமிழர்கள் ஆதரவளிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்களை தனியான நாடு அமைக்கவிட்டால் எங்களை முற்றுமுழுதாக அழித்துவிடுவார்கள். உங்களுக்காவது நாங்கள் அடித்தால் படகில் ஏறி ஓட தமிழ்நாடு இருக்கிறது. நாங்கள் எங்கே போவோம்? எமது இனம் பிறந்து வளர்ந்தது இந்த தீவுதான். எங்களை அழித்துவிடுவீர்கள்." இப்படி அவர் சொன்னார். இதனை உறுதி செய்ய பல சிங்களவர்களுடன் தமிழீழம் பற்றி கேட்டதற்கு இதையே சொன்னார்கள். ஆகவே 1998ல் கனடாவில் ஒட்டாவாவில் நடந்த ஒரு தமிழீழம் பற்றிய மாநாட்டில் "இப்படியான பயம் சிங்களவருக்கு இருக்கிறது. ஆகவே அப்படி சிங்களவரை தமிழர்கள் அழிக்க மாட்டார்கள் என்பதை எப்படி உத்தரவாதம் செய்வீர்கள்?" என்று ருத்திரகுமாரனை கேட்டேன். "நாம் தான் சொல்கிறோமே நாம் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்று" என்பதே அவரின் பதிலாக இருந்தது. தாம் அழிந்து விடுவோம் என்ற அபரீதமான மரணபயமே சிங்களவரை மூர்க்கமாக போராட வைக்கிறது என்பதே எனது கருத்து. இந்த பயம் போகாதவரை அவர்கள் ஈழத்தமிழர்களை ஒரு தடியை கூட ஆயுதமாக கொள்ள விடப்போவதில்லை.

ஏன் உலகநாடுகள் முழுவதும் சிங்களவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன?

சிங்களவர்களுக்கல்ல இந்தியாவுக்கே உலகநாடுகள் ஆதரவு என்பது ஒருவரின் கருத்து. இன்னும் ஒருவர் அவர்கள் ஒரு நாடு. நாங்கள் நாடற்றவர்கள் என்றார். நாடற்ற யூதருக்கும், நாட்டை இழந்த கிழக்கு தீமோரியருக்கும் உலகநாடுகள் ஆதரவளிக்கவில்லையா? இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு என்பது உண்மைதான். ஆனால் இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும், சீனாவும் கூட சிங்களவருக்கே ஆதரவு,

ஏன்?

  1. சிங்களவரின் பயத்தையும் அதற்கான காரணத்தையும் உலகநாடுகள் புரிந்துள்ளன என்பதே எனது கருத்து. இந்த பயத்தை தமிழர்கள் கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை என உலகநாடுகள் கவனித்திருக்க வேண்டும்.

  2. மேலும் தமிழர்கள் தனிநாடு அல்லது அழிவு என்று பிடிவாதமாக இருப்பதையும், சிங்களவர்கள் மாவட்ட சபை,, மாகாண சபை என பலவிதமான தீர்வுகளை முன்வைத்ததையும் உலகநாடுகள் கவனித்திருக்கின்றன. இந்த தீர்வுகள் தோற்றுப்போனவை. நேர்மையாக முன்வைக்கப்பட்டவையல்ல என்ற தமிழரின் வாதம் அறியப்பட்டதே. ஆனால் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு தமிழர்கள் தனிநாடு தவிர வேறு எதையும் முன்வைக்கவில்லை என்பதையும் உலகறியும். உதாரணமாக சீன இராஜதந்திரியை சந்தித்த கூட்டமைப்பு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டிருப்பது சீனாவின் வெளிநாட்டு கொள்கையை அறியாமல் செய்த செயல்போல தெரிகிறது. மாறாக ஹொங்கொங் சீனாவுடன் இருப்பது போன்ற அரசமைப்பு நமக்கு தீர்வாக அமையலாம், இது பற்றி எங்களுக்கு மேலும் அறிய உதவ முடியுமா என்று கேட்டிருந்தால் சீனா மறுத்திருக்க முடியாது. இவ்வாறான எத்தனையோ மாற்று கட்டமைப்புகள் இருக்க தனிநாடு என்று நெகிழ்வற்று இருப்பதை உலகநாடுகள் விரும்பவில்லை.

சம்பந்தனும், பிதா இம்மானுவலும் இப்போது ஓரளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் தலைமை வகிப்பது தெரிகிறது. அது வரவேற்கப்பட வேண்டிய அணுகுமுறை. சம்பந்தனே இன்று ஈழத்தமிழ் மக்கள் தெரிந்து கொண்ட தலைவராக இருக்கிறார். ஆனால் மற்றவர்களும் போட்டியிட்டு மாற்று தலைமையை வழங்க முன்வரக்கூடிய, ஆயுதங்களும் பயமுமற்ற, சூழ்நிலை உருவாக வேண்டும். சம்பந்தனுக்கு இந்தியாவின் பாதுகாப்பு இருப்பது போல எல்லோருக்கும் அமைந்திருக்கவில்லை. உதாரணமாக நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் அங்கு சம்பந்தனுக்கு எதிராக போட்டியிடும் சந்தர்ப்பம் உருவாக வேண்டும். இதனை நோர்வேயும், இந்தியாவும், அமெரிக்க அரசும் ஏற்படுத்தி கொடுத்தால் மக்களுக்கு மாற்றுத்தலைமைக்கான தெரிவுகள் இருக்கும்.

வெளிநாடுகள் சிங்களவர்களுக்குக் கொடுக்கும் காரணமாக நீங்கள் குறிப்பிடுவது முழுமையானதா?

வெள்ளைக்காரர்கள் இலங்கை இந்தியாவை ஆண்டபோது சுரண்டினார்கள். அவர்கள் வெளியேறியபின்பும் தொடர்ந்து சுரண்டக்கூடியவகையில் ஆட்சியை கைமாற்றிவிட்டுச் சென்றார்கள்.

சிங்களவர்களை விட தமிழர்களே வெள்ளைகார ஆட்சியின் கீழ் நிர்வாக வேலையில் ஈடுப்ட்டார்கள். வெள்ளைக்காரருடன் அதிக நெருக்கத்தை கொண்டிருந்தார்கள். தேசம் குறித்த சிந்தனையுடன் வெள்ளைகளை எதிர்த்துப்போராடும் நிலையில் தமிழர்கள் இருக்கவில்லை. சிங்களவர்கள் அப்படி இருந்தார்கள். இந்தியாவில் உயர்வர்க்கம் அவ்வாறு இருந்தது. தமிழர்கள் கவனம் தமிழர்களுக்குள்ளாகவே முரண்படுவதில் நசுக்குவதில் இருந்தது குறித்து வெள்ளைகாரர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். வெள்ளைகளுக்கு எதிராக இந்தியாவில் காந்தி தலமையிலான காங்கிரஸ்போராடும்பொது அதற்கு ஆதரவளித்த தமிழ்நாட்டில் பெரியார் சற்றுக் காலத்திலேயே சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உள்ளகமாக போராடினார். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சிங்களவர்கள் தம் நாடு என்ற நிலைப்பாட்டில் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டுவதில் குறியாய் இருந்தார்கள். வன்முறைகளும் நடந்தது.

ஏற்கனவே சமூக முரண்பாடுகளை ஆன்மீகத்தூடாக உருவாக்கி அவற்றில் குளிர்காய்ந்துகொண்டிருந்து மிகச் சொற்ப வீதத்தினரான பார்ப்பனர்கைகளிலேயே இந்திய ஆட்சி பிரித்தானியாவிடம் இருந்து கைமாறியது. இலங்கை பெளத்தர்களுக்கே சொந்தம் பெளத்தர்கள் சிங்களவர்கள் மற்றவர்கள் வந்தேறு குடிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்த சிங்களத்தலமைகளின் கைகளிலேயே இலங்கை ஆட்சி கைமாறியது. யாரொருவன் தொடர்ந்து ஒடுக்குமுறையை உள்ளகமாக செய்யக் கூடியவனோ அவனிடம் ஆட்சியை மாற்றிவிட்டதே வெள்ளைகள் கொடுத்த சுதந்திரமும் இன்றுவரையான ஆதரவும்.

நாம் பழைய எசமானர்களான வெள்ளைகளின் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தபடி புதிய எசமானர்களான சிங்களவரிடம் இருந்து விடுதலை வேண்டி நிற்கின்றோம். இது நடைமுறைக்குச் சாத்தியமில்லை.

நாம் சமூக முரண்பாடுகளை கடந்து ஒரு தேசமாக தேசீய இனமாக எம்மை நிர்வகிக்கும் தகுதியும் அதே நேரம் அதனால் பலசாலிகளான எம்மை ஆண்டவர்களுக்கு நன்மையும் இருக்குமானால் பிரித்தானியர்கள் வெளியேறும்போதே எமக்கான விடுதலையும் கிடைத்திருக்கும். இன்றும் இதே நிலைதான். தமிழர்களை ஒரு நாடாக இனமாக அங்கீகரிக்க முடியுமா அதற்கான தகுதி (தகுதி என்பது சமூக ஏற்றதாள்வுகள் முரண்பாடுகளை கடந்து ஒற்றுமையாய் ஒரு இனமாய் இருப்பதை குறிக்கின்றேன்) இருக்கின்றதா? இதனால் அவர்களுக்கு லாபம் இருக்கின்றதா? இந்த அடிப்படையிலேயே சிங்களவர்களை ஆதரிப்பதா தமிழர்களை ஆதரிப்பதா என்ற நிலை தொடரும். ஆதாயங்கள் இருக்கென்று பலசாலிகள் நினைத்தாலும் சிதைந்த ஒரு சமூகத்திடமிருந்து தமக்குச் சார்பான அரசு அமைக்கமுடியாது என்பதே உண்மை.

தமிழர்கள் போராடுவதற்கு முன் அதற்கான தகுதியை பெறுதலே அவசியமாக உள்ளது. எமக்கான போராட்டம் நாம் ஒன்றுபடுவது நோக்கியது. ஒரு அணியாய் பலம் பெறுவது குறித்தது. அதன் பிறகு தனிநாடு என்பது இந்த உலகத்தால் கவனிக்கப்டும். நாம் சிங்களவர்களுக்கு கீழே அடிமைப்பட்டு கிடந்தாலும் ஒன்றுபட்ட அடிமைகளாக இருந்தால் நாம் கேட்காத நிலையிலும் தனிநாடு எமக்கு உலக நாடுகளால் திணிக்கப்படலாம். முரண்பட்ட உலகில் நாடுகளை பிரிப்பதும் பிரிய விடாது தடுப்பதும் நடந்துகொண்டே இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களை தவறவிடும் நிலையில் சிதைந்துபோயுள்ளோம் என்பதே எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக அரசியல் செல்வாக்கில் ஈழ்தேசம் ஆநாதை ஆன நிலமைக்கு யார் காரணம்?

புறத்தேசங்களின் தமது நலன் தூக்கிய நோக்கங்களா?

இல்லை, புலிகளின் அவிவிவேகத்தனமான போக்குக்களா?

உலக ஆதிக்க சக்திகளின் தமது நலன் சார்ந்த நோக்கங்களுக்கு சிங்களத்தேசியம் கனிபோன்றதாகவும், தமிழ்தேசியம் காய்போன்றதாகவும் விளங்குகின்றது என்பதே உண்மை!

இலங்கையில் புவியியல்சார் நலன் வேண்டும் எந்த ஒரு சக்திக்கும் இலங்கை ஒரு அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே இருப்பது அவர்கள் தேசநலனின் ஒரு உறுப்பு ஆகின்றது. இல்லாமல் இரு அதிகாரமாய் இலங்கை விளங்கின், இரண்டு ஆதிக்க எதிரி சக்திகளின் இருப்பிற்கு வழிகோலிகின்ற புகளிடம் ஆக்கப்படும் இலங்கை என்பது உறுதி!

( உதாரணமாக இந்தியாவின் புவியியல் ரீதியிலான பாதிப்பைப் பார்ப்போம்!

இலங்கையானது தனது மொத்த பகுதிகளிலும் இந்தியாவின் செல்வாக்கிற்கு இடம் விட்டு ஒரு சிறுபகுதியில் மட்டும் சீனாவின் தளத்தை அநுமதிப்பதானது ஆது இந்தியாவின் வாசலான தமிழ்நாட்டில் தளம் அமைபப்தை ஒத்தது. பதிலாக இலைங்கை தன்னை அநுமதித்த இலங்கைத்தளச் செல்வாக்கு அதற்கு ஒரு பயன்பாடே அற்ற ஒன்றும் ஆகின்றது. ஏன் என்றால், தமிழ்நாட்டின் ஒரு கோடியில் இருக்கும் இந்த இலங்கையில் இருந்து எந்த வகையான புவியியல் சால் நலன்களை அது அடைய முடியுமோ அதை தமிழ்நாட்டில் இருந்தே பெற்றும் கொள்ள முடியும் இந்திய்யாவால். எனவேதான் தமிழீழத்தால் வரும் நன்மையைக்காடிலும் சிங்களதேச பழித்தோசத்தால் வரும் பாதிப்பின் விலை மிக அதிகமாகும் இந்தியாவிற்கு! இது போன்ற வகையான ஒரு பாதிப்பே அமெரிக்காவிற்குமாகும்! )

எனவே இந்தவகையான பின்னணி சிங்களதேசியத்திற்கு உலகசெல்வாக்கு விடயத்தில் ஓர் ஆணிவேர் போன்று விளங்குகின்றது! ஈழம் தலையால் நடந்தும் சாதிக்க முயல்வதை இந்தவகையான ஆதிக்க சக்திகளே தமது சொந்தத் தேவையாக எடுத்துக் கொண்டு எமக்கு எதிராக இயங்குகின்ற ஒரு பொறிமுறை ஆகின்றது இந்த நிலை!

இந்த ஆதிக்க சக்திகளுக்கு இலங்கை ஒரு அதிகாரத்தின் கீழ் இருப்பது எவளவு வசதியோ அதேபோல் புலிகளின் இருப்பு தக்கவைக்கப்படல் இன்னுமொரு அவசிய பொறிமுறை வசதியாகவும் விளங்குகின்றது. நூல் பொம்மை போல் இங்கையை நிர்வாகம் செய்கின்ற அதிகாரத்தை இந்த புலிகளின் இருப்பு என்ற பொறிமுறையே வளங்கும்!

ஆனாலும் புலிகளின் பலம் அளவை மீறி வளர்வது தனது நாட்டின் எதிரியின் வளர்ச்சியைப் போல் கருதவைக்கின்றது புவியியல் சார் பின்னணி!

இந்த விடயத்திற்லி ஆயிரம் உதாரணங்கள் ஆதாரமாக்கப்படலாம்!

இந்தியா ரயீவ்காந்தியின் மரணத்தின் பழிவாங்கலாய் புலியின் அழிவை விட புலியின் இருப்பு பயன் உள்ளதாய் இருந்தமைதான் புலியின் இருப்பை அநுமதித்தமை!

தன் சொந்த மக்களே மொத்தமாய் புலிகளை அறியாத காலத்தில் BBC கூ புலிகளின் பிரச்சாரம் செய்திருந்தது. சிங்களைத்தைப் பணியவைக்கும் வளர்ச்சியை புலிகள் தொட்டபோது அதுவே புலிகளுக்கு எதிர் கோட்டில் பயணித்தது!

தொடரும்........

Stratfor's Chief Geopolitical Analyst Robert D. Kaplan discusses Chinese port expansion in the northern Indian Ocean, including the opening of a $1.5 billion port in Sri Lanka that was constructed and largely financed by the Chinese.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான வழியை காண, முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான பதில் தேவை:

  1. ஏன் சிங்கள மக்கள் இவ்வளவு மூர்க்கமாக போராடுகிறார்கள்? அவர்கள் கூலிக்கு போராடுகிறார்கள் அல்லது இன வெறி என்பதெல்லாம் இலகுவாக கூறப்படக்கூடிய போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத பதில்கள். அவர்கள் போராட மறுத்தால் தமிழ் மக்களின் விடுதலை இலகுவாகும்.

இந்தப் போராட்டத்தில் புலிகளின் தோல்வியை எவளவு மோசமாக மலினப்படுத்த முடியுமோ அந்த முயற்சியின் பயன் தான் இந்த வரிகள்!

இன்னும் ஒன்று நான் சொல்லித்தருகின்றேன்; ஏனைய அமைப்புக்களை அழித்தார்கள்!

எமது பாதையின் குறுக்கே படுத்து எமது வழியைத் தடுத்து நிற்கின்ற சக்திகள் அவர்களே "எம்மிடம் ஒற்றுமை இன்மைதான் காரணமாம் எமது தோல்விக்கு" என்று பழி சுமத்துகின்றார்கள் எம்மீது!

ஒரு சில இடங்களிலாவது தவறுதலாகவேனும் ஒருவரது உள்மனதின் சுவடு பதிந்து விடுகின்றது. அந்த வகையான பாதிப்பில் ஒன்றுதான் இது என்று புலனாகின்றது.

நான் எவருடனாவது விவாதிக்கும் போது ஆகக் குறைந்த ஒரு அடிப்படையை ஆவது எதிர்பார்ப்பேன் அது "தமிழ் மக்களின் மிகப்பெரும்பான்மை புலிகளையே நம்புகின்றார்கள் எபதே!" இதை மறுப்பவர்களுடம் நியாயமான விவாதம் உபயோகம்ம் அற்ற ஒன்று. செக்கு உலக்கையை விழுங்கிவைதிருப்பவனுக்கு நான் கொடுக்கும் சுக்கு கசாயாம் என்ன பலனைச் செய்யும் என்பதே ஆகும்!

இந்த வகையாக உங்களுடனான ஆரம்பகால விவாத்தில் இருந்தே எனது நம்பிக்கை அருகி விட்டது!

  1. ஏன் முழூ உலகும் சிங்கள மக்களை ஆதரிக்கிறது? நாம் உலகிலேயே சிறந்த மூளைசாலிகள் அதனால் எல்லாருக்கும் பொறாமை போன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விடுத்து ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் ஆய்வு மூலம் இதற்கான பதில் காணப்பட வேண்டும். இந்த பதிலில் தான் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது.

இன்று ஏன் முழு உலகும் சிங்களைத்தைப் பகைக்கின்றது?

'உலகம் நியாயத்தின் பக்கத்தில் நிற்க ஆசைப்படுகின்றது' என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் அது சின்னப்பிள்ளைத் தனமாகிவிடும்!

"பால் கலத்தின் அரைவாசிக்கு இருக்கின்றது" என்று சொல்வதை "கலத்தின் அரைவாசி வெறுமையாய் இருகின்றது என்றும் சொல்லலாம் எனவே இங்கு சொல்பவரின் விருப்பம் ஒன்றுதான் மாறுபட்டது!

நோர்வே நாடு இந்த இனப்படுகொலை தங்கள் தலையிலும் விழுந்துவிடும் அல்லது இதற்கு பொறுப்பு கூறவேண்டிய கடமைப்பாடு ஒன்று உள்ளது, மத்தியஸ்தம் வகித்தவர்கள் இவர்கள்.

அதை மறைக்க அல்லது பொறுப்பை தங்கள் மேல் வராமல் பாதுகாத்து கொள்வதற்காக இல்லாதவர்கள் (புலிகள்) பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.