Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு

Featured Replies

3d%20text%20logo.gif

அமெரிக்கா மற்றும் கனடாவில்

அஜீவனுடன் ஒரு சந்திப்பு

தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம்.

வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைபெறவுள்ள குறும்பட பயிற்சிப் பட்டறையை அஜீவன் நெறிப்படுத்த உள்ளார். அதுகுறித்த மேலதிகத் தகவல்களை, http://www.thinnai.com/?module=displaystor...198&format=html என்ற முகவரியில் காணலாம். பயிற்சிப் பட்டறைக்கு மிகக் குறைந்த அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மே 27, 2006 (சனி) பிற்பகல், கனெக்டிகட் மாநிலம் மில்போர்ட் நகரில், திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் இல்லத்தில், அஜீவனுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. கனெக்டிகட், மசாசூசெட்ஸ் மாநிலத் தமிழன்பர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் அப்பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், தங்களையும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதுகுறித்த மேலதிக விவரங்களை, http://www.thinnai.com/?module=displaystor...199&format=html என்ற முகவரியில் காணலாம். இச்சந்திப்பின்போது அஜீவனின் குறும்படங்கள் திரையிடல், கலந்துரையாடல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.

மே 28, 2006 (ஞாயிறு) பிற்பகல் நியூ ஜெர்ஸியில் என்னுடைய இல்லத்தில், அஜீவனுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. நியூ ஜெர்ஸி மாநிலத் தமிழன்பர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறீர்கள் என்றால் இச்சந்திப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். இச்சந்திப்பின்போது அஜீவனின் குறும்படங்கள் திரையிடல், கலந்துரையாடல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன. அனுமதி இலவசம். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை, http://www.thinnai.com/?module=displaystor...910&format=html என்ற முகவரியில் காணலாம். நியூ ஜெர்ஸி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள் முன்கூட்டியே pksivakumar [at] yahoo [dot] com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் தெரிவித்தால், நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்தின் முகவரி, வருகிற வழிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம்.

வட அமெரிக்க வாழ் தமிழன்பர்கள் தங்கள் ஊருக்கு அருகில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் ஆதரவு தருமாறூம் அன்புடன் வேண்டுகிறோம்.

பின்குறிப்பு: ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். இணைய நண்பர்கள் பாஸ்டன் பாலாஜி, பெப் சுந்தர் ஆகியொர் கனெக்டிட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வாக்களித்துள்ளனர். நியூ ஜெர்ஸி நிகழ்ச்சியில் வழக்கம்போல இணைய நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: http://pksivakumar.blogspot.com/2006/05/blog-post.html

உங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா உங்கள் முயற்சி இனிதே அமையட்டும்.

அஜீவன் அண்ணா பயணம் வெளிக்கிட்டாச்சா :-) என்ஜோய்.

  • தொடங்கியவர்

நன்றிகள்

ஹரி - புத்தன் - ரசிகை மற்றும் சிநேகிதிக்கு............

யாழ்கள நண்பர்கள் பலரை சந்திப்பேன் என நம்புகிறேன்.

வாழ்துக்கள் அஜீவன் அண்ணா சுவிசில எப்ப பயிச்சிப்பட்டறை வைக்கப்போறியள் நானும் ஒரு கமறா வத்துள்ளேன் பாலுமகேந்ரா மாதிரி படம்மெடுக்கோணும்.

  • தொடங்கியவர்

வாழ்துக்கள் அஜீவன் அண்ணா சுவிசில எப்ப பயிச்சிப்பட்டறை வைக்கப்போறியள் நானும் ஒரு கமறா வத்துள்ளேன் பாலுமகேந்ரா மாதிரி படம்மெடுக்கோணும்.

பாலுமகேந்ரா மாதிரி படம்மெடுக்கோணும். :lol:

முதலில் நன்றி விது.

உங்களைப் போல ஆர்வமுள்ளவர்கள்

ஒழுங்கு செய்தால்

அதைச் செய்யலாம்.

தவறாக எடுக்க வேண்டாம்!

பலரால் பேச முடிகிறது.

ஆனால் முழுமையாக செயல்பட முடியவில்லை.

நம்மவர்களில் பலர் ஆர்வக் கோளாறு உள்ளவர்கள்.

ஆனால் அடிப்படையையாவது கற்று ஏதாவது செய்ய எண்ணாதவர்கள்.

ஒரு வீடியோ கமரா இருந்து விட்டால்

இப்போ எல்லாம்

ஒரு படத்தை எடுத்து விடலாம்.

அது

நாம் பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது

நமது சமூகத்தை தாண்டியும் பேசப்பட வேண்டும்.

அதுபோலவே குறும்பட போட்டிகளை நடத்துவதும்

பெரிய விடயமல்ல.

சினிமா பார்ப்போரும் - மேடைப் பேச்சாளர்களும் இருந்தாலே

யாரையும் பேய்க் காட்டலாம்.

பரிசும் கொடுக்கலாம்...........

ஆனால்

அந்தப் படைப்புகள்

அது நமது சமூகத்தை தாண்டிச் செல்ல வேண்டும் :?:

அதுதான் குறிக்கோளாக வேண்டும்.

சினிமா கலை என்பது நாடகமில்லை.

அது நகரும் படங்கள் வழி பேசும் ஒரு அரிய கலை.

படமாக இருந்தாலும்

குறும்படமாக இருந்தாலும்

சினிமா மொழி தெரியாதவனது படைப்புகள்

தொடர்ந்து பயணிக்காது.

அது ஒரு எல்லையோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி.

சினிமா கலை தெரியாதவர்களுடன் சேர்ந்து

சினிமா தெரிந்த ஒருவனால் கூட

தனி மனிதராய் பணியாற்றி நிச்சயம் ஜெயிக்க முடியாது.

அப்படி ஒரு வெற்றி கிடைக்குமானால்

அது ஒரு விபத்தாய் ஏற்படும் வெற்றியாகலாம்.

அவை தொடர் வெற்றிகளாய் மாற வேண்டும்!

அதுவே நம்மவர் மத்தியில் தொடர வேண்டும்...............

ஒரு நிகழ்வு :

நான் வாழும் நாட்டுக்கு பக்கத்து நாட்டில்

ஒரு குறும்படம் எடுக்க ஆவலாக இருந்தார்கள்.

ஆரம்பத்திலியே அவர்களுக்கு சொன்னேன்.

அதில் பங்கு கொள்பவர்களுக்கு அடிப்படை தெரிய

ஒரு குறும்பட பயிற்சிப்பட்டறை செய்வோம்.

பின்னர் குறும்படத்தை எடுக்கலாம் என்று..............

உண்மை பேசினால் நம்மில் பலருக்கு பிடிக்காது. :?: :lol:

அதற்கான காரணம்

நம்மிடம் சினிமா தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லை.

பணியாற்றுவோர்தான் உதவ வேண்டும்.

அவர்களுக்கு ஓரளவாவது விடயம் தெரிந்தால்தான்

அவர்களாலும் உதவவோ

அல்லது நாம் என்ன வேண்டுகிறோம் என்பதை

புரிந்து கொள்ளவோ முடியும்.

ஸ்டார்ட் கட் சொல்ல................. :P

வசனங்களை நாடகங்கள் போல பேச வைக்க................

:P 100 கசெட்டில் ஒளிப்பதிவு செய்ய.............. :P

இப்படி

யாரால்தான் முடியாது.

இது போன்ற படைப்பாளிகளால்

சிறந்த தொழில் நுட்பவியலாளர்களை சேர்த்துக் கொண்டு கூட

வெற்றி பெற முடியாது.

அதுவே நம்மவர் எடுக்கும் பெரிய சினிமாக்களின் தோல்விக்கு

அடிப்படைக் காரணம்.

இவர் சொல்வது அவர்களுக்கு புரியாது.

அவர்கள் சொன்னால் ஈகோ காரணமாக இவர்களாலும் ஏற்க முடியாது.

இதுவே பலரில் நான் கண்ட சறுக்கல்களாக இருக்கிறது.

கதைக்கு வருவோமே????????? :roll:

இறுதியில் பயிற்சிப்பட்டறை சாத்தியமில்லை என்றார்கள்.

நீங்கள் வந்து உதவி செய்யுங்கள் குறும்படத்தை எடுப்போம் என்றார்கள்.

பரவாயில்லை என்று எனது பணத்திலேயே சென்று உதவினேன்.

ஒளிப்பதிவு முதற்கொண்டு செய்து கொடுத்தேன்.

ஆனால்

அதை எடிட் பண்ணவோ

அல்லது அவர்களாக எடிட் பண்ணியதை பார்க்கவோ

அவற்றை எனக்கு காட்டவேயில்லை.

அதன் பின் அதை சில இடங்களில் திரையிட்டும்

இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

ஒரு மெயில் கூட...............ஊகும்...............

இதுதான் பலரது நிலை.

இப்படியான போக்குகள் மாறாத வரை

..................................... :P

:?: :P யோசித்து முடிவெடுத்து சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அஜிவன் உங்கள் பயணம் நன்றாக அமையவும் உங்கள முயற்சிகள் மெலும் எமது இனத்திற்கு பெயரையும் புகழையும் பெற்று தர வாழ்த்துகள் கூறி கனடா அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்களையும் முடிந்தால் சந்தித்து உங்கள் அனுபவங்களையும் எங்களுடன் பகிருங்கள் ;

:P :P

அதொடை நானும் ஒரு கமறா ஒண்டு வாங்கி படமெடுத்து பாத்தன் ஒரு படமும் சரி வரேல்லை இப்ப ஒரு பாம்பு வழக்கிறன் அதாவது படம் எடக்கிதா எண்டு பாபப்பம் :lol::lol::(

அஜிவன் அண்ணா உங்கள் ஆதங்கம் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது இன்நிலைமை எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும் என்றாலும் சிலர் செயல்வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி சிலரை ஒன்று சேர்த்து உங்களை சந்திக்க விரும்புகிறேன் உங்கள் வசதிக்கேற்ப அதையெருவிடுமுறை நாளில் போர்ண் மாநிலத்தில் ஒழுங்கு செய்வேம்.

வாழ்த்துக்கள் உங்கள் பயணம் இனிதே அமையட்டும்

congratulation0qy.jpg

  • தொடங்கியவர்

நன்றி சாத்திரி மற்றும் சந்தியாவுக்கு............

வந்த பின் பேசுவோம் விது........

வணக்கம் அஜீவன்

தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

வணக்கம் அஐிவன் அண்ணா.

உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஜீவன், சுகமாய்ப் போயிட்டு வாருங்கள். எப்பொழுது அவுஸ்திரேலியாப்பக்கம் வருவீர்கள்?

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன், சுகமாய்ப் போயிட்டு வாருங்கள். எப்பொழுது அவுஸ்திரேலியாப்பக்கம் வருவீர்கள்?

Thanks

See You soon Kanthappu :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன்

தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

வணக்கம் அஐிவன் அண்ணா.

உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

Thanks.........

Yarl Iniya Nanbarkalukku

greetings.........

from

Washington DC

ajeevan

உங்கள் பயணம் சிறப்பாக அமையவும் உங்கள் பணியில் சிறப்புறவும் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா...! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா வாழ்த்துக்கள்( நான் மோகன் விலாசம்)பாரிஸ்

  • தொடங்கியவர்

உங்கள் பயணம் சிறப்பாக அமையவும் உங்கள் பணியில் சிறப்புறவும் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா...! :lol:

அஜீவன் அண்ணா வாழ்த்துக்கள்( நான் மோகன் விலாசம்)பாரிஸ்

Nandri Anitha & Mohan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்குப் போனபின்பு தமிழினை மறந்துவிட்டீர்களா அஜீவன். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றனவே.

  • தொடங்கியவர்

அமெரிக்காவுக்குப் போனபின்பு தமிழினை மறந்துவிட்டீர்களா அஜீவன். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றனவே.

ஐயோ இலலை.

இஙக தமிழில எழுத கணணி கிடைககவிலல.

இதுவே பெரிய விடயம

அஜீவன் அண்ணாவின் பயணம் - இனிதே தொடர வாழ்த்துக்கள்-!

திறமையுள்ளவர்களின் - பயணம் எல்லையற்றது-

அதற்கு - நீங்கள் - உதாரணம்! 8)

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணாவின் பயணம் - இனிதே தொடர வாழ்த்துக்கள்-!

திறமையுள்ளவர்களின் - பயணம் எல்லையற்றது-

அதற்கு - நீங்கள் - உதாரணம்! 8)

நன்றி வர்ணன்

  • 2 weeks later...

அஜீவன் அண்ணா நிறைய மன்னிக்கணும்

நான் மொன்றியல் ல இருக்கன் - நிறைய தூரம் -

அத்துடன் - உரிமைகுரல் நிகழ்வுக்காக்க லீவு எடுத்திருந்தன் -

அதால - மிக குறுகிய இடைவெளில உங்க சந்திப்பு பத்தி -அறிந்தததால - கலந்து கொள்ள முடியவில்லை -

திரும்ப லீவு தரமாட்டாங்கள்!

நான் உங்கள் சந்திப்பை வேண்டுமென்றே தவிர்த்ததாய் எண்ணிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புறேன்!

மத்தும்படி - நாகரிகமான - இயல்பு உள்ள உங்களோட சேர்ந்துதான் -என் கருத்தும் இருக்கும் எப்போதும் யாழ் களத்தில!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.