Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம்

சிறு கிழவியொருத்தியின் பத்தோ என்னவோ மகன்களில் இளையவன், தனது 39-ஆவது வயதில், அகாலமாய் இறந்து போனான். யுத்தமல்ல, அது ஒரு அகால மரணம். இறக்கும் போது, மனைவி மற்றும் நாலோ ஐந்தோ பிள்ளைகள் கூட இருந்தன. லெளகீக வாழ்வின் இன்பங்களனைத்தையும் அனுபவித்தே போனது அவனது உடல். விட்டுச் சென்ற 28 வயதேயான ஒரு இள மனைவியின் உணர்ச்சிகள் சாகடிக்கபடும் நெடுந்தூரத் தனிமையும், மறுமணம் என்பதே சிந்திக்கப்படா குழந்தைகளின் எண்ணிக்கையும் சமூகமும் தவிர – காலம் மூடிவிடக் கூடியது அந்த மரணம். ஆனால் அந்த இள மனைவியின் துயரத்தை இளமையை அரித்துக் கொண்டு காலம் போன போக்கின் பின்னும், மேலும் ஒன்பது பிள்ளைகளை உடையவரான அந்தக் கிழவி, பல காலமாக குங்குமமும் சரிகைச் சேலையும் கட்டிக் கொண்டதில்லை. “மகனிறந்ததிலிருந்து” அப்படித்தானென்று சொல்லுவார்கள். எல்லாவற்றையும் அனுபவித்து மறைந்த ஒரு செல்வந்தப் பிள்ளையான அந்த 10 இல 1 மகனுக்காக!!

ஈழத்தில் 80களில் ஆரம்பித்த போராட்டத்துடன் “வீடு திரும்பாத மகன்”களதும் மகள்களதும் எண்ணிக்கைப் பெருகப் பெருக, பெற்றவர்கள் கொடியதொரு போருக்கு அதன் எண்ணற்ற எதிரிகளிற்கு தமது பிள்ளைகளை பறிகொடுக்க ஆரம்பித்தார்கள். ஊர்வசி போன்ற கவிஞர்களின் வரிகளில் வந்த, அந்த “புத்திரசோகத்தை” -இதுவரையிலும்- எந்தச் சொற்களாலும் தடவிக் தணிக்க முடியவில்லை. செத்த தனது மகனின் மகன் திருமணம் செய்கிற வயது வந்த பிறகும் கூட “ஐயிரண்டு திங்களாய்” என்ற பாடலை ஊர்ப் பெண்மணி ஒருவர் பாட, எனதந்தக் கிழவியின் ‘கிழண்டிய’ கண்களை தனது பிள்ளையின் இருப்பை வேண்டிய கண்ணீர் நிறைத்துக் கொண்டே இருந்தது; இன்று யுத்தம் தீண்டிய கிராமங்களில் எல்லாம் கண்ணீர்தான் நிறைந்துகொண்டிருக்கிறது

எங்களது இலக்கியப் பிரதிகளில் அவை மையமாய் இருந்திருக்கின்றன. வீரசாகச கதைகள் எனில் அவற்றில் அந்தந்தக் கொள்கைகளின் முலாம் பூசப்பட்டிருக்கலாம்; எந்த எந்த நியாயங்களோ, பொது இணைவாய், “சாகக் குடுத்த” தமது பிள்ளைகளை ஏதோ வழியில் அவை பின்தொடர்ந்தன.

‘எல்லாரும்தானே சாகக்குடுக்கினம்” என்று சொன்னார் உறவினர் ஒருவர்.

வன்னியின் கிராமங்களில் பிள்ளைகள் யுத்தத்தில் கொல்லப்படுகின்றனர் என்கிறபோது “எல்லோரதும்தானே”என்றார் ஐரோப்பாவிலிருந்து இன்னொருவர். தனது குழுந்தையின் செல்லக் குரலிற்கு பதிலளித்தவாறே அதைச் சொல்ல அவரால் முடிகிறது. ஆனால் தொலைதூர வன்னிக் கிராமங்களில்

அத்தைகள்

இள வயதுக்குரிய மச்சான்களை “பெண் பிள்ளைகள் போல”

நாங்கள் வளர்ந்தபோது -சிறுவர்களாய் இருக்கையில்- அவர்களது வீட்டு முற்றங்களில் சோறு போட்டுச் சாப்பிடலாம் என்று, எங்களது முற்றங்கள் ஒப்பிடப்பட்டு அவமதிக்கப் படுவதற்கு ஏதுவான, அந்த, தமது அம்மாவிற்கு சமைக்க காய்கறி வெட்டி, தேங்காயும் திரிவிக்குடுக்கிற மச்சான்கள்…. அவர்களிற்கு எந்த அரசியலும் தெரியாது. ஒரு பிரச்சாரமும் அவர்களது அம்மாவை விட்டுப் பிரிய போதுமானதில்லை. “உலகமயமாதலின்” பயனாய் -அமைதிக் காலத்தில் பரதுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள்- ஊடே மேலும் துளிர்த்த அவர்களது ஆசைகள், கனவுகளாலான அந்த இளைஞர்களுடைய இருப்பை பலவந்தமாய்ப் பறிக்க யுத்தம்…

வடகிழக்கில் யுத்தமென்றால், (பயங்கரவாத தடைச் சட்டம் இத்தியாதியின் கீழ்) நெருக்கடிக்கு உள்ளாகும் எமது நேசத்துக்குரிய உறவுகள், நண்பர்கள் என கொழும்பு மற்றும் இன்ன பிற இராணுவ கட்டுப்பாட்டு நகரங்களில் வசிக்கும் நண்பர்களின் பாதுகாப்பிற்காய்ச் “சுயநலமாய்ப்” பயப்படும் ஒரு மனத்துடன், “யுத்தமென்று வந்தால் இதெல்லாம் இப்படித்தானே” என்று களத்தில் கொல்லப்படும் எமதல்லாத பிள்ளைகள் தொடர்பாக மட்டும் சொல்லிக் கொள்ள முடிகிறது; ஒரு மெழுகுவர்த்தியும் பரத நாட்டிய ஆடல் பாடல்களும் அவர்கள் அனுபவிக்காத எல்லாவற்றையும் ஈடுசெய்துவிடுமென்று – கடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது.

10 இற்கு 1

300 இற்கு 40 என இலக்கங்களாய் மட்டும் ஒவ்வொரு தரப்பும் மரணங்களை பார்த்துப் பழகி நோயிற்றிருக்கிறது. கிரிக்கெட் ஸ்கோர் போல, அவற்றை கேட்க, அங்கு நெருக்கமான உறவுகள் அல்லாத -முற்றாய்த் தொடர்புகள் விடுபட்டிருக்கிற – ஒரு சூழலில் மட்டுமே முடியும். போரின் எந்தக் கோரத்தையும் “வாழாத” சூழலிருந்து

-பிள்ளைகள் பசியால் கஸ்ரப்படுதென்றால்,யுத்தமென்றால் அப்பிடி என்றும்

-பிள்ளைகள் பிடிக்கப்படுகிறார்கள் என்றால் எல்லாரையும்தானே என்றும் இலகுவாக சொல்ல முடியும். இவற்றை முகங்கொடுத்திருப்பது அங்கு வசிக்கிறவர்கள் மட்டும்தான்.

யுத்த புலத்தில் வாழாத உறவினர்களை ஒத்தவர்களிடமிருந்து வரக்கூடிய இந்த சொற்கள் நனவாய், இரக்கமற்ற கயமை மிகுந்த மனதிலிருந்து வருவதென்று சொல்ல வேண்டியதில்லை. தமதான அர்த்தங்களை இழந்த நிலையிலேயே சொற்களை எல்லோரும் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம். ஒன்றை எந்தக் கேள்வியுமின்றி நம்பிவிட்டபிறகான இயந்திரத்தன்மையில் அவற்றை உபயோகிப்பது பழகிவிட்டது.

இங்கே, தூரே, போரின் இரைச்சல்களற்ற பெயர்ந்த நிலங்களில் இருந்து – நாங்கள் – யுத்தத்தைப் பற்றிப் பேசலாம். அதன் நியாயத்தை நினைவுகூரல்களில் ஞாபகம் கொள்ளலாம். ஒரு மாறுதலாக, யுத்தத்திற்கான பரணிப் பாடலாகவோ உற்சாகமான வரவேற்பாயோ அன்றி, எங்களின் “சுய”நலத்தை ஒத்துக்கொண்டு, கொலையுண்டு போனவர்களுக்கான விழாக்களில், தோளில் காவிச் செல்லும் எங்களின் பிள்ளைகள் போலவே “அங்கும்” பிள்ளைகள் வாழ வேண்டும் என்பதை மனங்கொண்டு… அது தருகிற அத்தனை அழிவுகளையும் மறுத்து, இங்கு வந்திருந்து, நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற அத்தனை நியாயங்களையும் மறுபரிசீலிக்க வேண்டும்.

சர்வாதிகாரி முசோலினியுடனான அவரது தொடர்பு தொடர்ந்தும் விவாதங்களிற்குள்ளாகிற Luigi Pirandello-இனது, “போர்” சிறுகதை நாம் உச்சரிக்கிற சில சொற்களை எம் முன் எடுத்துப் போடுகிறது.

தேசம், தேசீயம், தியாகம், அர்ப்பணம், மாவீரம்

இந்தச் சொற்களெல்லாம் கலைகிறபோது -அவற்றில் நாம் நம்பிய அர்த்தம் அழிஞ்சுபோற போது – இறுதியில், என்னதான் எஞ்சுகிறது என்பதாய்க் கேட்கிறது. அக் கேள்வி எமது நிகழ்காலமெல்லாம் கொல்லப்பட்டவர்களின் நினைவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரு தசாப்தங்களில் ஈழத்தில் கிராமத்திற்குக் கிராமம் கூடியுள்ளதென்னவோ “மாவீரர் துயிலும் இல்லங்களே”. எல்லாவிடங்களிலும் தம் பிள்ளைகளுக்கான கண்ணீரைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

-புறநானூறு

-ஹொலிவூட் சாகசப் படங்கள்

-கவிஞர்களின் பரணிப் பாடல்கள்

வீரத்திற்காக சில எழுதப்பட்டதெனில் -சொற்கள் எல்லாம் கலைந்து போய்விட்ட பல பொழுதில்- மனித அழிவு கண்ணீரால் எழுதப்பட்டபடியே இருக்கும்.

“““““““““““““““““““

http://peddai.wordpr...-தூண்டாத”-பெரு/

Edited by சுபேஸ்

துயரங்களை வரிக்கு வரி பதிவுசெய்கின்றது இந்தப் பதிவு.

சமூக முரண்பாடுகள் மிதமிஞ்சிய நிலையில் இனவிடுதலைக்காக போராடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதற்கு நாம் நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(
  • கருத்துக்கள உறவுகள்

மனித அழிவுகள் கண்ணீரால் எழுதப் படுகின்றன

இது தானே சுபேஸ், மானுடத்தின் வரலாறு, எமக்குச் சொல்லும் உண்மை!

கிறிஸ்துவத்தின் பெயரால் நடந்த மரணங்களைக் கணக்கெடுத்தால், இயேசு நாதர் கூட வெட்கப்படுவார்!

புத்த மதத்தின் பெயரால் நடந்த கொலைகளைப் பார்த்தால், புத்தன் கூடக் கண்ணீர் விடுவான்!

இஸ்லாமின் பெயரால் நடக்கும் அனியாயங்களுக்கு, எல்லையே கிடையாது.

இந்து மதம் கூட இந்த விதத்தில், தூய்மையானது அல்ல!

இராமாயணமும், பாரதமும், பச்சையான திராவிட அழிப்புக்களின், தேன் தடவப்பட்ட காவியங்களே!

மனம் வலிக்கின்றது சுபேஸ் .உண்மையை சொல்லவோ எழுதவோ பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமில்லை .பெரும்பானமையானவர்கள் அப்படி இருப்பதால் எல்லோருமாக அதை மறைக்க தம்மை நியாயபடுத்த தான் புலம் பெயர்ந்ததேசங்களில் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும்.

இவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் யுத்தம் முடிந்தபின் சிறையில் இருப்பவர்களுக்கு முகாம்களில் இருப்பவர்களுக்கு ,அங்கயினமாக இருப்பவர்களுக்கு முதலில் ஒரு விடிவிற்கு அலுவல் பார்த்துவிட்டு அதன் பின் உந்த விழாக்களை நடாத்தலாம் .இவர்கள் இப்படி செய்துகொண்டு இருந்தால் களியாட்ட நிகழ்வுகளை வைப்பவர்களை நாம் புறக்கணிக்கலாம் .

அதைவிட்டு உங்களுக்காக தம்மையே அர்பணித்த எத்தனையோ போராளிகள் உயிருடன் வாழா வழியின்றி பிச்சை முதல் விபச்சாரம் வரை செய்துகொண்டு இருக்கும் போது தம்மையும் ஒரு தியாகிகளாக காட்டவே உந்த வேசங்கள் .

புலம் பெயர்ந்தவன் எவனும் வியாபாரம் மட்டுமே செய்தான் ,மற்றதெல்லாம் நடிப்பு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துயரங்களை வரிக்கு வரி பதிவுசெய்கின்றது இந்தப் பதிவு.

சமூக முரண்பாடுகள் மிதமிஞ்சிய நிலையில் இனவிடுதலைக்காக போராடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதற்கு நாம் நல்ல உதாரணம்.

நன்றி சுகன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்...ம்ம்..அதைத்தான் நாம் இப்பொழுது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம் அண்ணா..இந்த நிலையில் இப்படியான முரண்பாடுகளை களைவதே முதலாவதும் முக்கியமானதுமான அறுவைச்சிகிச்சை..

:( :( :(

நன்றி அக்கா வாசிப்பிற்கு.... :( :( :(

மனித அழிவுகள் கண்ணீரால் எழுதப் படுகின்றன

இது தானே சுபேஸ், மானுடத்தின் வரலாறு, எமக்குச் சொல்லும் உண்மை!

கிறிஸ்துவத்தின் பெயரால் நடந்த மரணங்களைக் கணக்கெடுத்தால், இயேசு நாதர் கூட வெட்கப்படுவார்!

புத்த மதத்தின் பெயரால் நடந்த கொலைகளைப் பார்த்தால், புத்தன் கூடக் கண்ணீர் விடுவான்!

இஸ்லாமின் பெயரால் நடக்கும் அனியாயங்களுக்கு, எல்லையே கிடையாது.

இந்து மதம் கூட இந்த விதத்தில், தூய்மையானது அல்ல!

இராமாயணமும், பாரதமும், பச்சையான திராவிட அழிப்புக்களின், தேன் தடவப்பட்ட காவியங்களே!

நன்றி புங்கைஅண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்...உண்மை புங்கை அண்ணா...புனிதம்களுக்காக மனிதம்களே எப்பொழுதும் கொலை செய்யப்படுகின்றன... :(

மனம் வலிக்கின்றது சுபேஸ் .உண்மையை சொல்லவோ எழுதவோ பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமில்லை .பெரும்பானமையானவர்கள் அப்படி இருப்பதால் எல்லோருமாக அதை மறைக்க தம்மை நியாயபடுத்த தான் புலம் பெயர்ந்ததேசங்களில் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும்.

இவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் யுத்தம் முடிந்தபின் சிறையில் இருப்பவர்களுக்கு முகாம்களில் இருப்பவர்களுக்கு ,அங்கயினமாக இருப்பவர்களுக்கு முதலில் ஒரு விடிவிற்கு அலுவல் பார்த்துவிட்டு அதன் பின் உந்த விழாக்களை நடாத்தலாம் .இவர்கள் இப்படி செய்துகொண்டு இருந்தால் களியாட்ட நிகழ்வுகளை வைப்பவர்களை நாம் புறக்கணிக்கலாம் .

அதைவிட்டு உங்களுக்காக தம்மையே அர்பணித்த எத்தனையோ போராளிகள் உயிருடன் வாழா வழியின்றி பிச்சை முதல் விபச்சாரம் வரை செய்துகொண்டு இருக்கும் போது தம்மையும் ஒரு தியாகிகளாக காட்டவே உந்த வேசங்கள் .

புலம் பெயர்ந்தவன் எவனும் வியாபாரம் மட்டுமே செய்தான் ,மற்றதெல்லாம் நடிப்பு .

நன்றி அர்ஜுன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்...என்னத்தை சொல்ல..அதுதான் ஒருவரியில் நெத்தியில் அடிப்பதுபோல் கட்டுரை ஆசிரியர் கேட்டிருக்காரே...

ஒரு மெழுகுவர்த்தியும் பரத நாட்டிய ஆடல் பாடல்களும் அவர்கள் அனுபவிக்காத எல்லாவற்றையும் ஈடுசெய்துவிடுமென்று – கடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் வாழ்வோர் ஒவ்வொருவரும் ஒரேஒரு உசிரைப் பாதுகாக்க முடிந்தால் .......என்ன செய்வது எல்லோரும் அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.