Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் எனக்கு உந்தத் துணிவு வராதப்பா ரதி. :D

  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நினைவிருக்கா...

 

188607_418770884857675_1477716635_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ சின்ன பொருள் எல்லாம் சுட்டதில்ல.... ஒரு பொண்ணோட தலையில இருந்த கிளிப் ah தான் சுட்டன் பட் அத டீச்சர் பாத்திட்டு அடிச்சு போட்டு திரும்ப வாங்கி கொடுத்திட்டா :(

  • கருத்துக்கள உறவுகள்
 

 

 

இயற்கை கொடுத்த வரம்

 
புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளின்மேல் எந்த விதமான உடல் வாசனையும் இருக்காதாம்.

பெண்மான் ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்றிருந்தாலும், பெரும்பாலும் குட்டிகள் தாயை விட்டு தனியாகவே இருக்க நேர்கிறது. தாய் அருகிலிருந்தால் தாய்மானின் வாசனை மற்ற விலங்குகளுக்கு மானின் இருப்பிடத்தையும், குட்டிகளையும் காட்டிக் கொடுத்து விடும்.

மான்குட்டிகள் பிறந்து சில நிமிடங்களில் எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாயுடன் சென்று இரை தேட, பிறந்து ஓரிரு வாரங்கள் ஆகிவிடுகிறது. எனவே தாய்மான் இரை தேட வேண்டிய கட்டாயமான தருணங்களில் துணிந்து குட்டிகளை தனித்து விட்டுச் செல்கின்றன. அத்தருணங்களில் குட்டிகள் ஒன்றுக்கு மேல் இரண்டு அல்லது மூன்று இருந்தால், இரை தேடச் செல்லும்போது அவைகளை வெவ்வேறு இடங்களில், பிற மிருகங்களிடம் சிக்கிவிடாமல், பாதுகாப்பு கருதி தனித்தனியாக விட்டுச் செல்கிறது. குட்டிகளின் தனிமை அவைகளை பத்திரமாக இருக்கவே உதவுகிறது.

மான்குட்டிகள் பிறந்த முதல் பல நாட்களுக்கு அவைகளின் மேல் எந்தவித குறிப்பிட்ட வாசனையும் இருக்காது எனத் தெரிய வருகிறது. எனவே ஓநாய், காட்டுப் பூனை போன்ற எதிரி விலங்குகளின் கண்களுக்கு மான்குட்டிகள் இருப்பது தெரிவதில்லை.

சிகப்பு கலந்த தவிட்டு நிறத்துடன் கூடிய வெண்புள்ளிகளுடைய மான்குட்டிகளின் உடல் தோல் அவைகளுக்கு பாதுகாப்பைத் தருகிறது. இத்தோற்றம் காட்டின் மரக் கிளைகளுக்கு ஊடாக தரையில் விழும் சூரிய ஒளியின் புள்ளி புள்ளியான தோற்றத்தை ஒத்திருப்பதால் விலங்குகள் அக்குட்டிகளின் மேல் தடுக்கினால் ஒழியத் தெரிவதில்லையாம்

எனவே, வனசரணாலயங்களுக்கு நாம் செல்ல நேரிடும்பொழுது, புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளைக் காண முடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். புள்ளிமான் குட்டிகளுக்கு இயற்கை கொடுத்த வரத்திற்கு நன்றி சொல்வோம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பதினாறு பேறுகளில் நோயின்மையைத் தொடர்ந்து வருவது வலி,அதாவது வலிமை.வலிமை என்பது உடல் வலிமையை மட்டும் குறிப்பதன்று...உள்ளத்து வலிமையையும் குறிப்பதுதான் இந்த வலி.எந்த வியாதியும் இல்லாத உடல் இருந்தால் போதாது;நல்ல எஃகு போன்ற உடற்கட்டும் ஒருவருக்குப் பிரதானம்.சிலரால் சில கிலோ மீற்றர் நடக்க முடியாது.வலிக்கிறது என்று அமர்ந்து விடுவார்கள்.அதே போல,சிறிய பிரச்சனைக்குக் கூட பெரிய அளவு சலனப்படுவார்கள்.மனபலம் இல்லையென்றால் எதையும் தாங்க முடியாது.தீமைகளை கண்டிக்கும் துணிவு இல்லாமல் போகும்.எதிரிகள் வாலாட்டும் போது வீர‌த்துட‌ன் செயற்பட‌ முடியாது.கோழைபோலக் கதவைத் தாழிட்டுக் கொள்ளத் தான் முயலுவோம்.எனவே ஒருவர் பேறுகளில் வலிமையும் பிர‌தானமாகும்.
 
வலிமைதான் பன்னிரென்டாவது படி!
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையான நட்பில் எவ்வித கார‌ணங்களுமின்றி சந்தேகம் வர‌லாமா?...அப்படி சந்தேகம் வந்தால் அந்த நட்பில் அல்லது நண்பர்களில் ஏதோ பிழை என்று தானே அர்த்தம்...புரிந்துணர்வு இல்லையோ!...ஒளிவு,மறைவு எதுவுமின்றி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்,உண்மையான பாச‌த்துட‌ன் இருவர்,பலர் நண்பர்களாக இருக்க முடியாதா?...யாரோ ஒருவருடைய கதையை கேட்டு நண்பரை சந்தேகிப்பவர் உண்மையான நண்பராக இருக்க முடியுமா?...அப்படி சந்தேகித்தால் அவர் அந்த நண்பரோடு முதலிருந்தே உண்மையான பாச‌த்தோடு பழகவில்லை என்று தானே நினைக்க தோன்றும்...உண்மையான பாச‌த்தோடு பழகி இருந்தால் அவருடைய தாய் சொன்னாலும் அந்த நண்பரை சந்தேகப்பட‌க் கூடாது அல்லவா!...ஒருவருக்கு கட‌வுள்,பெற்றோர்,சகோதர‌ர்கள்,குரு எல்லோரையும் விட‌ முக்கியமானது உண்மையான நண்பர்கள் என நினைக்கிறேன்[மனதில் தோன்றியது] :D
 
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையான நட்பில் எவ்வித கார‌ணங்களுமின்றி சந்தேகம் வர‌லாமா?...அப்படி சந்தேகம் வந்தால் அந்த நட்பில் அல்லது நண்பர்களில் ஏதோ பிழை என்று தானே அர்த்தம்...புரிந்துணர்வு இல்லையோ!...ஒளிவு,மறைவு எதுவுமின்றி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்,உண்மையான பாச‌த்துட‌ன் இருவர்,பலர் நண்பர்களாக இருக்க முடியாதா?...யாரோ ஒருவருடைய கதையை கேட்டு நண்பரை சந்தேகிப்பவர் உண்மையான நண்பராக இருக்க முடியுமா?...அப்படி சந்தேகித்தால் அவர் அந்த நண்பரோடு முதலிருந்தே உண்மையான பாச‌த்தோடு பழகவில்லை என்று தானே நினைக்க தோன்றும்...உண்மையான பாச‌த்தோடு பழகி இருந்தால் அவருடைய தாய் சொன்னாலும் அந்த நண்பரை சந்தேகப்பட‌க் கூடாது அல்லவா!...ஒருவருக்கு கட‌வுள்,பெற்றோர்,சகோதர‌ர்கள்,குரு எல்லோரையும் விட‌ முக்கியமானது உண்மையான நண்பர்கள் என நினைக்கிறேன்[மனதில் தோன்றியது] :D
 
சந்தேகம் வருவது மனித இயல்பு. அதனை தீர்த்துக் கொள்வதும் உண்மையான நட்புக்குள் தான் வருகிறது என நான் நினைக்கிறேன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வலிமையைத் தொடர்ந்து வருவது வெற்றியாகும்!வெற்றி ஒரு வரம்.எல்லோருக்கும் இது கிடைப்பதில்லை.சமபலம் கொண்ட இருவர் மோதிக் கொள்கின்றனர்.ஆனால் வெற்றி அவர்களில் ஒருவருக்குத் தான் சொந்தமாகிறது.சமயங்களில் யார் வெற்றி வெறுவார் என்றே தீர்மானிக்க முடியாதபடியும் ஆகிவிடுகிறது.எப்பொழுதும் எதிலும் வெற்றி பெற்றபடியே இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வெற்றி என்பது அதிர்ஸ்டத்தால் மட்டும் வருவதன்று.அதை அடைய பல காரணிகள் தேவை.அதிர்ஸ்டமும் அதில் ஒன்றாக இருக்கிறது.பல நேரங்களில் அதிர்ஸ்டம் மட்டுமே கூட காரணமாக இருக்கிறது.
 
வெற்றி என்னும் பேறு பதின்மூன்றாவது படியாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

543946_583633458329593_2076581648_n.jpg

 

யாளி - ஒரு புரியாத புதிர் !

 

தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.
 
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?
 
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
 
யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை !!!!
 
நன்றி : சசிதரன்

 

by.fb

  • கருத்துக்கள உறவுகள்

அரியலூர் மாவட்டம், அழகர்கோவில் என்னும் ஊரில் பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த யானை சிலை!!

படம் : ஸ்ரீநாத்

A view of the elephant statue of 16-17 century in Azhagar kovil village 6km from Gangai Konda Chozhapuram in Ariyalur district in Tamil Nadu.

Photo: M. Srinath

 

 

483430_175536822587257_1808561534_n.jpg

 

 

by.fb

Edited by யாயினி

அரியலூர் மாவட்டம், அழகர்கோவில் என்னும் ஊரில் பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த யானை சிலை!!

படம் : ஸ்ரீநாத்

A view of the elephant statue of 16-17 century in Azhagar kovil village 6km from Gangai Konda Chozhapuram in Ariyalur district in Tamil Nadu.

Photo: M. Srinath

 

 

483430_175536822587257_1808561534_n.jpg

 

 

by.fb

 

 வியக்க வைக்கின்றது, நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரியலூர் மாவட்டம், அழகர்கோவில் என்னும் ஊரில் பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த யானை சிலை!!

படம் : ஸ்ரீநாத்

A view of the elephant statue of 16-17 century in Azhagar kovil village 6km from Gangai Konda Chozhapuram in Ariyalur district in Tamil Nadu.

Photo: M. Srinath

 

 

483430_175536822587257_1808561534_n.jpg

 

 

by.fb

 

 

நிலத்திற்கடியில் புராதனங்களை தேடும் சர்வதேச அகழ்வாராச்சியாளர்களுகளே! முதலில் இவற்றை பாதுகாத்து பராமரியுங்கள்.  எமது பழமைகள் மழையிலும் வெய்யிலிலும் பல நூறு ஆண்டுகள் தாக்குப்பிடிக்கின்றன. காரணங்களை ஒருகணம் சிந்தியுங்கள்.
 
நன்றி யாயினி.
  • கருத்துக்கள உறவுகள்

Midnight Sun(Norway)

  • நோர்வே நள்ளிரவுச் சூரியன் உதிக்கும் நாடு எனப் பெயர்பெற்றது.

 

 

800px-Midnight_sun.jpg

 

 

The Alta Fjord in Alta, Norway bathed in the Midnight Sun.

 

800px-Altafjord01.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பொன்!உலகின் முழுமுதல் செல்வம் இது.நல்ல மனமுடைய ஒருவரை தங்கமான மனசுக்காரர் என்போம். அந்தளவு சிறப்புடையடையது இது.உலகில் உள்ள எல்லாமே தீயால் அழியும்;சாம்பலும் ஆகி விடும்.ஆனால் தீ பட்டும் ஒளிருவது தங்கம் மட்டும்தான்.மற்ற நீர்,ஆகாயம்,மண்,காற்று என்கிற பூதங்களாலும் பாதிக்கப்படாத ஒரு உன்னதம் தங்கம்.அதனால் தான் மகாலச்சுமி வாசம் செய்கிறாள் என்பார்கள்.உலகின் பொதுவான செலாவணி.இதை அடைய விதி வேண்டும்.பொன் இருக்கும் இடத்தில் தரித்திரம் இருக்காது.மற்ற செல்வங்களும் சேரும்.
 
பதினாறு  பேறுகளில் இது பதினான்காவது பேறாகும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பொன்!உலகின் முழுமுதல் செல்வம் இது.நல்ல மனமுடைய ஒருவரை தங்கமான மனசுக்காரர் என்போம். அந்தளவு சிறப்புடையடையது இது.உலகில் உள்ள எல்லாமே தீயால் அழியும்;சாம்பலும் ஆகி விடும்.ஆனால் தீ பட்டும் ஒளிருவது தங்கம் மட்டும்தான்.மற்ற நீர்,ஆகாயம்,மண்,காற்று என்கிற பூதங்களாலும் பாதிக்கப்படாத ஒரு உன்னதம் தங்கம்.அதனால் தான் மகாலச்சுமி வாசம் செய்கிறாள் என்பார்கள்.உலகின் பொதுவான செலாவணி.இதை அடைய விதி வேண்டும்.பொன் இருக்கும் இடத்தில் தரித்திரம் இருக்காது.மற்ற செல்வங்களும் சேரும்.
 
பதினாறு  பேறுகளில் இது பதினான்காவது பேறாகும்.
 

 

 

உண்மை போல தான் கிடக்குது...என்னட்டை தங்கமும் இல்லை.மற்ற செல்வங்களும் இல்லை ^_^
 
உண்மை போல தான் கிடக்குது...என்னட்டை தங்கமும் இல்லை.மற்ற செல்வங்களும் இல்லை ^_^
 

 

 தங்கம் வேணுமென்றில், தங்க (ஒரு) மனசு இருந்தா காணும். அதுவே பெருச்செல்வம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 தங்கம் வேணுமென்றில், தங்க (ஒரு) மனசு இருந்தா காணும். அதுவே பெருச்செல்வம்

 

 

இந்த காலத்திலே யார் தங்கமான மனசைப் பார்க்கிறான் எல்லாம் எழுதுவதற்கும்,பேசுவதற்கும் நல்லாயிருக்கும்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பதினாறு பேறுகளில் பொன்னைத் தொடர்ந்து பெற வேண்டிய பேறு புகழாகும்...இது ஒன்று தான் ஒருவன் இறந்த பிறகும் வாழும் ஒன்றாகும்.இந்தப் புகழ் மேல் ஆசை வைக்காதவரே இல்லை.இதற்காகவென்றே பல அரிய செயல்களைச் செய்தவர்கள் பலர்; இன்றும் செய்து கொண்டு இருப்பவர்களும் பலர்.புகழை விலைக்கு வாங்க முயல்பவர்களும் உண்டு.இது ஒன்றுதான் எவ்வளவு இருந்தாலும் ஒருவருக்குத் திருப்தியைத் தராதது.பல அறிஞர்கள் செல்வம் சென்று விடும்;ஆனால் புகழ் நிலைத்து நிற்கும் என்று கண்டு கொண்டு அதற்காகவே காவியங்கள் பலர் படைத்தனர்.
 
ஒரு மனிதன் பெறும் பதினாறு பேறுகளில் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்பது புகழ் ஒன்று தான்! இதுவே ஒருவன் பெற்றிடும் பதினைந்தாவது பேறாகும்.இதை அடைந்தவன் பதினைந்து படிகளைக் கடந்தவனாவான்!
 
  • கருத்துக்கள உறவுகள்

தெகான் பெக் என்றொரு வகைப் பூ மரம். இந்த மரம் பார்ப்பதற்கு கொய்யா மரம் போலவே இருக்கும். இது பூக்கும் பூ காலையில் வெள்ளை நிறமாகவும், நண்பகல் நேரத்தில் சிவப்பாகவும், இரவில் நீல நிறமாகவும் இருக்கும்.

 

 

397747_520356284664858_569271632_n.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பதினாறு பேறுகளில் அடுத்து வருவது நல்லூழ்! நல்லூழ் என்டால் விதியமைப்பு என்பது ஒரு பொருள்.நல் வினைகளையே நாம் செய்தவர்களாக இருப்பது இன்னொரு பொருள்.
 
நல்ல வினைகள் நம் கணக்கில் இல்லா விட்டால் இந்தப் பேறுகள் நம்மிட‌ம் தங்காமலேயே கூட‌ப் போய் விடும்.மாத்திர‌மல்ல...அவை தங்கள் கணக்கை தீர்த்துக் கொள்ள நம்மை இந்தப் பேறுகளின் கிட்டேயே நெருங்க விடா...நல்வினை இல்லை என்பது பல விதங்களில் தெரியவரும்.
 
அதேபோல நல்ல மனைவி,மக்கள்,செல்வம் என்று எல்லாம் வாய்க்கவும் நல்லூழே துணை நிற்கிற‌து.குறிப்பாக பதினாறு பேறுகளையும் நமக்குப் பெற்றுத்தருவதே நல்லூழ் தான்.
 
பேறுகளில் இது பதினான்காவது பேறு.ஆனால் படிகளிலோ இது பதினாறாவது படியாகும்!
 
  • கருத்துக்கள உறவுகள்

பாலைவன போபாப் மரங்கள் தனது உடலில் 1000 லீற்றருக்கும் அதிகமான நீரினை சேமிக்கும் தன்மை கொண்டவையாகும்.

 

388229.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்லூழைத் தொடர்கின்ற பேறு நன்மக்கள் என்பதாகும்.ஆம்...பேறுகளிலேயே தலை சிறந்த முதல் பேறாக பிள்ளைப் பேற்றைத் தான் பலர் குறிப்பிட்கின்றனர்.வம்சம் விளங்க,பரம்பரை சிறக்க வாரிசு தான் பிரதானம்.வயதான காலத்தில் நம்மை வைத்து காப்பாற்ற வேண்டியவர்களும் நமது மக்களே.அவர்கள் நன்மக்களாக இருக்க வேண்டும்.வள்ளுவர் கூறியது போல தாய்,தந்தைக்கு அழியாப் புகழை சேர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.
 
பெற்றோர் சொற்பேச்சை கேட்கும் ஒழுக்கமுள்ள பிள்ளைகளை நாம் பெறுவது என்பது பதினைந்தாவது பேறு.படிகளிலோ இது பதினேழாவது படி!
 
  • கருத்துக்கள உறவுகள்

சீன நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு...!


ஆக்கம்:பூ.சிவகுமார்.

 

 

47014_523619481005205_1843328626_n.jpg

 

 

குப்லாய் கான்( Kublai Khan)

 

 

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

 

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

 

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

 

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பேறு பதினாறு...!அந்தப் பதினாறில் பதினாறாவது பேறு வாழ்நாள் என்னும் நீண்ட ஆயுளாகும்.ஆம்! பிறப்பதைவிட பெரியது இன்பமாய் வாழ்வது.அப்படி வாழ்வது என்பது குறைந்தபட்சம் ஒரு வாழ்க்கைச் சுற்றான அறுவது வயதையாவது கடப்பதாக இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் வாழ்வின் சிறப்புக்குச் சாட்சிகளாக பேரன்,பேத்திகளைக் காணும் பாக்கியம் கிட்டும்.நாம் மட்டும் வாழவில்லை.நம் பிள்ளைகளும் பிள்ளை குட்டி என்று வாழ்கிறார்கள் என்பதை நீண்ட ஆயுளோடு வாழ்ந்தாலன்றி அறிய முடியாது.
 
நீண்ட ஆயுள் என்பது முழுமையான பேறு.படிகளில் இது பதினெட்டாவது படி! பதினெட்டு படிகளுக்கு வேறு காரணச் சிறப்புகளும் உண்டு. அதே சமயம் சூட்சுமச் சிறப்பு அது தன்னுள் இந்தப் பேறுகளைக் கொண்டிருப்பது தான்!
  • கருத்துக்கள உறவுகள்

734067_548249958521657_217048695_n.jpg

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.