Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 கவிஞர் வாலி சொன்னதுக்காக அது சரியாகிவிடுமா?? தலைக்கனம் கொள்பவரை யாருக்குமே பிடிப்பதில்லையே??

  • Replies 584
  • Views 42k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நண்பர்கள்,மதிப்பிற்குரிய சகோதரங்கள் உங்கள் பிறந்த நாளுக்கு உங்களை அழைத்து வாழ்த்த மறந்தால் எப்படி இருக்கும்?...எத்தனை பேரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற்றாலும்,எத்தனை பரிசுகள் எமக்கு அன்று கிடைத்தாலும் நாம் பாசம் வைத்தவர்கள் எமது பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்தா விட்டால் அதைப் போல சோகம் வேறு ஒன்றுமில்லை :(  :o  ^_^

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கனம் உள்ளவர் மண்டைக்குள் சரக்கு உள்ளவராக இருப்பார்.. :unsure:  அல்லது அப்படி நினைப்பவராக இருப்பார்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆணில் அழகு தேடும் செல்வி! ஒன்று தெரியுமா,
ஆணில் அழகு விலங்குகள் தான்.
 
ஹாஹா :lol:  :D  :rolleyes:
 
நாளாந்த வாழ்க்கையில் எத்தனையோ தமிழ்ப் பெடியங்களைக் கண்டாலும் நல்ல அட்டக் கரி நிறத்தோட,களையான முகத்தோட இருக்கின்ற பெடியங்களைக் கண்டால் அட இவன் தமிழன் என்ட உணர்வு கூடுதலாக வரும் :)
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ஏன் கறுப்பு எண்டால் இளக்காரமாக நினைக்கிறியள் என்று விளங்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ஏன் கறுப்பு எண்டால் இளக்காரமாக நினைக்கிறியள் என்று விளங்கவில்லை

 

நான் எங்கே கறுப்பை இளக்காரமாய் நினைத்தேன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணில் அழகு தேடும் செல்வி! ஒன்று தெரியுமா,
ஆணில் அழகு விலங்குகள் தான்.
 
ஹாஹா :lol:  :D  :rolleyes:
 
நாளாந்த வாழ்க்கையில் எத்தனையோ தமிழ்ப் பெடியங்களைக் கண்டாலும் நல்ல அட்டக் கரி நிறத்தோட,களையான முகத்தோட இருக்கின்ற பெடியங்களைக் கண்டால் அட இவன் தமிழன் என்ட உணர்வு கூடுதலாக வரும் :)

 

ரியூசனில் படிக்கும் காலத்தில் நடந்தது. என்னுடைய நண்பன் ஒருவன் நல்ல கரி நிறம் ஆனால் எப்பவும் சிரித்துக் கலகலத்துக் கொண்டிருப்பான்.  ஒருநாள் எங்கள் வகுப்பில் படித்த வாய்க்கொழுப்புக் கூடிய பெட்டை ஒருத்திக்கு (எப்பவும் காலை வேகமாக ஆட்டிக்கொண்டிருப்பாள், பார்க்கிற எங்களுக்கே அந்தரமாக இருக்கும் :wub: ) கோபம் வரத் தக்கமாதிரி நக்கலாக சில வார்த்தைகள் சொல்லிவிட்டான். அவள் எழும்பித் திரும்பிப் பார்த்து "கரியா. உன்ரை மூஞ்சையின்ர இலட்சணத்திற்கு நக்கல் கதை வேறயா" என்று கோபத்தோடு கத்தினாள். அடுத்ததாக பாய்ந்து காதைப் பொத்தி அடிபோட்டாலும் போடுவாள் என்ற மாதிரி எனக்குத் தோன்றியது!

 

சத்தம் கேட்டு அந்தப் பக்கம் வந்த ரியூசன் நிர்வாகி "அவன் கறுப்பெண்டாலும் நல்ல முகவெட்டாத்தானே இருக்கிறான். ஏன் அவனைக் கோவிக்கிறாய்" என்று சொன்னார். அப்பத்தான் கலர் முக்கியமில்லை. நல்ல முகவெட்டோடு (Golden Ratio) உள்ளவர்கள் கவர்ச்சியானவர்களாக இருப்பார்கள் என்று விளங்கியது. 

 

GoldenRatioFaceMask-e1336070776212.jpg

 

golden+ratio.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
'கடவுள் இருக்கிறான்' என சொல்பவனை நம்புங்கள்.'கடவுள் இல்லை' என சொல்பவனைக் கூட நம்புங்கள்.ஆனால் நான் தான் கடவுள் என சொல்பவனை மட்டும் நம்பாதீர்கள்
 
அடுத்த நொடி நம் கையில் இல்லை.எனவே,இந்த நொடியை வீணாக்காமல் வாழ்ந்து பார்த்து விடுங்கள்.
 
மனதில் மற்றவர்கள் பால் கொண்ட அன்பை உடனே வெளீப்படுத்தி விடுங்கள்.இல்லையென்றால் பின்னர் வெளீப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காமலே போய் விடும்
  • கருத்துக்கள உறவுகள்

 
 
மனதில் மற்றவர்கள் பால் கொண்ட அன்பை உடனே வெளீப்படுத்தி விடுங்கள்.இல்லையென்றால் பின்னர் வெளீப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காமலே போய் விடும்

எல்லாத்துக்கும் ஒரு கால நேரம் வரவேண்டாமே அக்கா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெற்றோர்களின் வாழ்க்கை என்பது குழந்தைகளின் பாட‌ப்புத்தகமாய் அமைகிறது. நீங்கள் நல்ல பெற்றோர்களாய் இல்லாத பட்சத்தில் உங்களுடைய குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை,ஒரு கேள்விக்குறியாக மாறுவதை உங்களால் தடுக்க முடியாது.பிறரோடு வாழ்வதல்ல வாழ்க்கை.பிறருக்கு எடுத்துக் காட்டாய் வாழ்வது தான் வாழ்க்கை.
 
ர‌சிக்கத் தெரிந்தவனுக்கு இருட்டுக் கூட‌ அழகு தான்! சிரிக்கத் தெரிந்தவனுக்கு சோகம் கூட‌ சுகம் தான். எதையும் பார்க்கும் விதத்தில் பார்த்து-கையாளும் விதத்தில் தான் சந்தோச‌ம் இருக்கிறது.
 
ஒரு மனிதனுக்கு கண்ணிர‌ண்டு,கையிர‌ண்டு,காது இர‌ண்டு என அவயங்கள் எல்லாத்தையும் இர‌ண்டிர‌ண்டாய் படைத்த இறைவன் இதயத்தை மட்டும் ஒன்டாய்ப் படைத்தது தனக்குப் பொருத்தமான இதயத்தை தானே தேடிக் கொள்ளட்டும் என்று தான் :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்!
கனவுகளுக்குத் தேவை அமைதியான -தூக்கம்
லட்சியங்களுக்குத் தேவை தூக்கமில்லாத உழைப்பு
 
80 வருடங்கள் வாழும் மனிதன் அழுது கொண்டே பிறக்கின்றான்.
ஆனால்...
சில மணி நேரங்களே வாழும் பூக்கள் சிரித்துக் கொண்டே பிறக்கின்றன.
புன்னகையோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் :)
 
ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் ஆறுதல் சொல்ல ஒரு உண்மையான நண்பன் இல்லையென்டால் அவன் தான் மிகப் பெரிய ஏழை.
எந்தக் காரணத்திற்காகவும் நட்பை இழந்து விடாதீர்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று...மாணவர் போராட்டங்களில் தற்போது தீவிரமாக பங்கு பற்றுவோரும்,ஹிந்தி எதிர்ப்பாளர்களும் தயவு செய்து இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம்[களவாக] :lol:  :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வாழ்வில் சந்தோச‌மாக இருக்க இரு எளிமையான வழிகள்;
நீங்கள் மற்றவருக்கு செய்த உதவிகளை மறக்க வேண்டும்.
மற்றவர் உங்களுக்கு செய்த கெடுதல்களை மறக்க வேண்டும்.
 
சந்தோச‌ம் என்பது வண்ணாத்திப்பூச்சி மாதிரி அதைத் துர‌த்திக் கொண்டு போனால் கிடைக்காது.அதைப் பொருட்படுத்தாமல் உன் கட‌மையைச் செய்து கொண்டு இருந்தால் அதுவே தானாய்ப் பறந்து வந்து உன் தோள் மீது உட்காரும்.
 
சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லா விட்டாலும் எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது உங்கள் பொன் மொழிகள் ரதி. :D

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"என்னங்க இது,பையன் பரீட்சையில் பாஸ் பண்ணிட்டா,சைக்கிள் வாங்கித் தரேன்னு சொல்றீங்க!நம்மகிட்ட காசே இல்லை.எந்த நம்பிக்கையிலே அப்படிச் சொல்றீங்க?"
 
"பையன் மேலே இருக்கிற நம்பிக்கையிலேதான்!"
 
........................................................................................................................................................
 
 
கல்லூரிக்குச் செல்லும் பேருந்திற்காக நின்று கொண்டிருக்கிறான் அவன்.அவள் வருகிறாள்.அவளை எப்படியாவது சினிமாவிற்கு அழைத்து செல்ல ஆசை. அதற்காக ஒரு யுத்தி செய்கிறான்."சுசீலா,இந்த மாட்சிலே இந்தியா ஜெயிச்சுதுன்னா,இன்னிக்குச் சினிமா நீ அழைச்சுட்டுப் போகணும்"
 
"தோற்றுப் போயிடுச்சின்னா?"
 
"நான் உன்னை அழைச்சிட்டுப் போறேன்"
 
"டிராவிலே முடிஞ்சு போச்சுன்ன‌..."
 
"நான் அழைச்சிட்டுப் போறேன்!" என்று குர‌ல் கொடுத்தான் இன்னொரு மாணவன்" :lol: 
 
முதல் மாணவராக நெடுக்கரையும் இரண்டாவது மாணவராக சுண்டலையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்
 
இருவரும் வரேக்கு முன் நான் எஸ்கேப் :D 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயதொழில் செய்பவருக்குக் கடனாக

அரசாங்கம் செய்கிறதாம்'கைடு!'

ஆனால் சரோஜாவுக்கு மட்டும் ஏன்

போலீசால் அடிக்கடி'ரெய்டு?' :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைய சந்ததிக்கு நட‌ந்ததைக் கூறு

 

 

எம் பிரிய நண்ப.

இந்த் மண்ணைவிட்டு

மக்களை விட்டு  

நாம் பிரியலாம்

ஆனால்

நீயோ உன் சந்ததியோ

பிரியமுடியாது பிரியவும் கூடாது

இன்றைய தர்ம யுத்தத்தை

நாளைய சந்ததிக்கு கூறு

 

 

உன்னைப் போல் எம்முட‌ன்

உள்ளன்போடு உறவாடியவர்

யாருமே இல்லை

எனவே நட‌ந்ததைக் கூறு

உன்னை கற்பகதரு என

போற்றியவர்கள்

நீ எமக்கு 'கவர்' ஆகும்

கருத்தை நிச்சயம்

கற்பனையிற் கூட‌

சேர்த்திருக்கவே மாட்டார்கள்

 

 

உக்கிர‌மான யுத்தத்தில்

எம்முட‌ன் உறுதியோடு

துணையிருந்தவன்

நீ மட்டுமே என்பதால்

நாளைய சந்ததிக்கு

நட‌ந்ததைக் கூறு 

எம் எல்லைகள் எல்லாம்

நீ நெருங்கி நிற்பதனால்

எம் இழப்புகள்

குறைந்து போனதை

எடுத்துச் சொல்

எம்மை துளைக்க வேண்டிய

 

எத்தனையோ குண்டுகளை  

நீ சுமப்பதை           

அத்தனை 'செல்' துண்டுகள் உன்

வைர‌மேனியையை ஊடுருவியதை

கூறுவாயா?

 

தோழனே!

கூடி நின்று கதைத்தவர்கள்

 

அடுத்த நிமிட‌ம் மர‌ணமானதை

வேதனைகளை மனதுள் 

மறைக்க முடியாமல்

உன்னில் மறைந்து

கண்களை துடைத்துக் கொண்ட‌தை

கூறுவாயா?

எம்மை உளவ் பார்க்க

ஆகாயத்தில் திடீர் திடீரென

வட்டமடிக்கும் அந்த

வல்லூறுகளிட‌மிருந்து தப்பி விட‌

 

உன்னை சுற்றிச்சுற்றி நாம்
மறைந்ததை,அதற்காய்
அவன் தீர்க்கும் வேட்டுக்களை
நீ வேண்டிக் கொண்டதை கூறுவாயா?
 
மாளிகையில் வாழ்வதை விடவும்
உன் ஒற்றை நிழலில் காவல் இருந்ததை
சந்தோசமாய் அதை நினைத்ததை
பஞ்சனையில் படுத்ததை விட‌
பசும் புல்லில் சுகமாய் தூங்கியதை
மழையில் நனைந்து
அடுத்த ஆடை மாற்றாது
'பொசிசனில்' நின்றதை
பசி மறந்து
தூக்கம் மறந்து
எதிரி எல்லையை மீறுவதெனில்
எம் உடல்களின் மேலாகத்தான் என
உறுதியோடு காவலிருந்ததை
கூறுவாயா?
 
இந்தப் புனித பூமி மீண்டும்
களங்கப்படக் கூடாது
எனவே
அடுத்த சந்ததிக்கு
வரலாறு தெரிய வேண்டும் 
தோழனே!
உண்மையைக் கூறு  
 
எல்லை காக்கப்பட வேண்டும் என்ற
உண்மையைக் கூறு.
எந்த நிமிடத்திலுய்ம்
மரணத்தை
சந்திக்க தயாராயிருந்ததால்
ஒற்றைக் காலை
உன்னில் ஊன்றி
மனதை தொட்ட
மகத்தான உண்மைகளை 
நினைத்து சந்தோசப்பட்டதை
கூறுவாயா?
 
பிரிய நண்ப,
எம் இரத்ததைக் கூட‌
உன் வேர்கள் உறிஞ்சியுள்ளதால்
உன்னிடமும் எம் இலட்சியம்
உயிர் பெற்று விட்டதால்
கடமை உனக்கும் கட்டளையிடுவதால்
அடுத்த சந்ததிக்கு
கட்டாயமாக கூறு.
 
உன்னை விட
உணர்வுபூர்வமாய்
சொல்லக் கூடியவர்கள்
யாருமே இல்லை
எனவே
மண்ணின் மகத்துவத்தை
வருங்கால மைந்தர்களிடம்
கட்டாயமாகக் கூறு.
உனக்குத் தெரியும்
 
எம் தலைவனை நாம் 
எப்படி நேசித்தோம்
எப்படி மதித்தோம்
எப்படி வாழ்ந்தோம் என்பதெல்லாம்.
 
அவன் சுட்டுவிரல் அசைப்பில்
எத்தனை சக்தி
என்பதை நீ அறிவாய்
எத்தனை அழுத்தங்களின் 
பின்னாலும்
எழுந்து நிற்கிறோம் என்றால்
அது அவன்
கட்டளையின் சிறப்புய்
பிறக்கப் போகும் தமிழீழத்தை
நிட்சயம் நீ காண்பாய்‍--- -*எனவே
அடுத்த சந்ததிக்கு கூறு 
தமிழீழத்தில்
தன்மானம் விலைபோகக் கூடாதென
அடித்துக் கூறு.
 
நாளை உன் நிழலில்
நான் மடியலாம்
என் குருதியையும்
உன் வேர்கள் உறிஞ்சலாம்
என் நினைவுகளும் உன்னுள் காவலிருக்கலாம்
தமிழீழத் தாயகத்தை
பார்த்து மகிழலாம்.
 
வானதி(1991)
 
  
 
 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காலத்தின் போக்கையெட்டிச் செயற்படுபவன் வெற்றி அடைவான்.காலத்தோடு ஒன்றத் தெரியாதவனுக்குத் தோல்விதான்
நூறு வலுவான கைகளை விட‌ மேலானது ஒரு நல்ல மூளை   
பொருளில் தன்னை விட‌க் கீழோரையும்,அறத்தில் தன்னை விட‌ மேலோரையும்,இன்பத்தில் தன்னை ஒத்தோரையும் வைத்து நம்மை ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும்  
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றாலும்,ஆண்டவன் மேல் நம்பிக்கை வையுங்கள்.100 கோரிக்கைகளில் 99 கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் கூட நம்பிக்கையை இழக்காமல் இருங்கள்.அவ்வாறு இருந்தால் இறுதியில் எதையும் வேண்டாத மேலான ஒன்றை அடைவீர்கள்.நீங்கள் ஆண்டவனை எவ்வளவு அதிகமாக நம்புகிறீர்களோ...அந்த அளவுக்கு அவன் உங்களை சோதிப்பான்.நீங்கள் பல்லாண்டு காலம் பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிடைக்காமல் போகலாம்.வேறு ஒருவர் ஒரு நிமிடமே பிரார்த்தனை செய்து எல்லாவற்றையும் அடைந்திருக்கலாம்.பிரார்த்தனையின் தரமே நீங்கள் எவ்வள்வு நேர்மையாக‍-உண்மையாக-உள்ளம் உருகப் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.பிறர் நலன் பாதிக்காத வகையில் உங்கள் பிரார்த்தனை இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஐயர் எழுதினது போலை இருக்கு.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றாலும்,ஆண்டவன் மேல் நம்பிக்கை வையுங்கள்.100 கோரிக்கைகளில் 99 கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் கூட நம்பிக்கையை இழக்காமல் இருங்கள்.அவ்வாறு இருந்தால் இறுதியில் எதையும் வேண்டாத மேலான ஒன்றை அடைவீர்கள்.நீங்கள் ஆண்டவனை எவ்வளவு அதிகமாக நம்புகிறீர்களோ...அந்த அளவுக்கு அவன் உங்களை சோதிப்பான்.நீங்கள் பல்லாண்டு காலம் பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிடைக்காமல் போகலாம்.வேறு ஒருவர் ஒரு நிமிடமே பிரார்த்தனை செய்து எல்லாவற்றையும் அடைந்திருக்கலாம்.பிரார்த்தனையின் தரமே நீங்கள் எவ்வள்வு நேர்மையாக‍-உண்மையாக-உள்ளம் உருகப் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.பிறர் நலன் பாதிக்காத வகையில் உங்கள் பிரார்த்தனை இருக்க வேண்டும்.

 

திருவாளர் மோகனிடமிருந்து இப்படி ஒரு  வாக்கு.

ம்ம்ம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்க்கை பற்றிய பயம் மட்டுமே...கட‌வுளைப் பற்றிய நம்பிக்கைகளை வளர்த்திருந்தால்...உங்களிட‌ம் கட‌வுள் இருக்க மாட்டார்.வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்காது.பயத்தின் கார‌ணமாக பக்தி வர‌க் கூடாது.பயத்தையும்,பக்தியையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில் ஒரு பயனும் இல்லை.பக்தி என்பது உண்மைய‌யாகவே என்னவென்றால்...உங்கள் அடையாளங்களை எல்லாம் இழந்து,எதன் மீது பக்தி கொண்டீர்களோ அதன் மீது இர‌ண்ட‌றக் கலந்து விடுவது தான்.அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதால் உண்மையான பக்தி யாரிட‌மும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி ரதி, வாழ்த்துகள் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரைத் துன்புறுத்தி மகிழ்ச்சியடைய நினைப்பவர்கள் எத்தனை தான் முயற்சி செய்தாலும் வெற்றி பெற மாட்டார்கள்.டொம்-ஜெர்ரி பாருங்கள்.30 வருட‌மாக அந்த பூனை எலியை துர‌த்திக் கொண்டு இருக்கிறது.ஒரு முறை கூட‌ வெற்றி பெற்றதில்லை.இது குழந்தைகளுக்கான கதை தான்.ஆனால் பெரியவர்கள் கூட‌ கற்றுக் கொள்ள வேண்டிய பாட‌ம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபம் என்பது மனிதர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மோசமான வைரஸ்.அமெரிக்கா பல்கலைகழக ஆய்வொன்று அண்மையில் ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.அதாவது மனிதனுக்கு ஏற்படும் மாரடைப்பு,நீரழிவு,இருதயக் கோளாறுகள் போன்ற பல நோய்கள் குணமடையாமல் இருப்பதற்கான காரணம் அவன் வெளிப்படுத்தும் கோபம் தான். 'நான் சொல்வதும்,செய்வதும் சரியானவை;மற்றவர்கள் செய்வது தவறு!'என்னும் புள்ளியில் இருந்தே பெரும்பாலானா கோபங்கள் பிறக்கின்றன. 'எல்லாமே நம்முடைய விருப்பப்படியும்,திட்டத்தின்படியும் நடக்கப் போவது இல்லை_என்கின்ற யதார்த்த உண்மையை யார் புரிந்து கொண்கிறார்களோ...அவர்கள் இருக்கும் பக்கம் கோபம் எட்டிப் பார்க்காது :D 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.