Jump to content

காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?


Recommended Posts

Posted

உங்கள் பதிவுகளுக்கு முதல் வாழ்த்துக்கள். தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.

 

நன்றி சண்டமாருதன்

 

ஒன்று மட்டும் நிச்சயம்.. காமத்தினூடாக கடவுளைக் காணுறீங்களோ இல்லையோ.. சனத்தொகையை பெருக்கிடுவீங்கள் என்பது..! :lol::D

இருந்தாலும் காமம் பற்றிய தவறான பார்வைகளை அகற்றக் கூடிய நல்ல பதிவாகவே இது வரை இருக்குது. இன்னும் இருக்கும் என்று நம்புகிறோம். :icon_idea: .

நன்றி நெடுக்ஸ். இயன்ற வரை நல்லதையே கொடுக்க முயலுகிறேன்  :)

இந்து சமயத்தில் நான்கு வாழ்க்கைப்படிகள் இறவனை அடைய வேண்டுவன. பிரமச்சரியம், கிருகப்பிரஸ்த்தம், வனப்பிரஸ்த்தம், சன்நியாசம். . 

 

நீங்கள் கூறுவது எல்லாம் இந்து என்ற மதம் ஒன்றை கட்டமைக்கும்போது ஆர அமர யோசித்து எழுதியது, ஆரிய வருகைக்கு பின்னால் வந்தது. நான் நோக்குவது ஆரிய  வருகைக்கு முன் இங்கு வாழ்ந்த மக்களின் வழிபாட்டு  முறையை.  ஆதலால் சமணம், புத்தம் மற்றும் இந்து சமயத்தில் நான்கு வாழ்க்கைப்படிகள் என்பன யாவும் இங்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன். சிவாச்சரியார்களை  மதக் குருமார்கள்  என்ற வகையிலே பார்க்கிறேன். ஏனெனில் அவர்கள் வேதத்தில் சொல்லப் பட்டது என்பதற்காகவே அதை நியாப்படுத்த எந்தக் கதையையும் புணைய தயாராக இருப்பார்கள்.

 

 

இந்த திரியில் சிற்றின்ப வாழ்க்கையை காமம் என்று பிழையாக குறிப்பிடப்படுகிறது.  காமம் மனத்தின் ஆசையில் எழுவது. சிற்றினபம் உடம்பின் தேவையில் எழுவது. காமம் இருவினைகளை உயிருக்கு சேர்க்கக் கூடியது. ஆனால் சிற்றின்பம் உடலோடு அழிந்து போவது. அது ஒரு நினைவில்லாத செயல்

 

‘இன்ன தன்மையுடையது’ என்று சொல்ல இயலாதிருப்பதால்தான் காதலை ‘அகம்’ என்றனர். காமம் என்பதின் பொருள் "ஆசை" என்பது வடமொழி விளக்கம். ஆனால் தமிழில் அதன் அர்த்தம் காதல் என்பதுதான். சங்க இலக்கியம் முழுவதும் காமம் எனபது காதல் என்ற பொருளிலும், காதலின் முதிவுற்ற நிலை என்ற பொருளிலும் காணப்படுகிறது. மேலும் அது இயற்கை நிகழ்வு என்றே அழைக்கின்றனர். ஆகையால் இது ஆசை என்ற பொருளுடன் ஒவ்வாது. காமம் என்ற உணர்வு எழாமல் கலவி கொள்ள முடியுமா என்ன?? மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறைகள்.  காமத்தை சிறுமைபடுத்த சொல்லப்பட்டதே இந்த சிற்றின்பம் என்ற வார்த்தை. காமத்தின் மூலம் பேரின்பம் எனப்படும் பரவச நிலையை அடைய முயலுவதே தந்திர முறையின் நோக்கம். எனது கட்டுரையின் நோக்கமும் அதுவே.

 

 

ஆதித்த இளம்பிறையனின் ஆராச்சி நம்பிக்கைகளை, தனியவாகவும் மதத்தத்துவங்களை தனியாகவும் இனம் கான வேண்டும்

 

மத தத்துவங்கள் எதிலிருந்து வந்தது. மக்கள் நம்பிக்கையில் இருந்துதான். வேதம் எப்படி எழுதப் பட்டது?? அன்று வாழ்ந்த மக்களின் நம்பிக்கையில்  இருந்துதான். கடவுள் இருக்கிறார் என்ற மக்களின் நம்பிக்கையில் இருந்து எழுதப் பட்டதே மதத் தத்துவங்கள். எனது நோக்கம்  மக்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? அப்படி செய்ய தூண்டியது எந்த நம்பிக்கை / எண்ணம் ? அந்த நம்பிக்கையின் ஊற்று யாது? என்பதை ஆய்வதே.

 

 

 

என்வே தந்திரம் காமத்தை போதிப்பத்தாக விளங்குவது தவறு.  யோனி என்பது சில இடங்களில் இலட்சுமியை குறிக்கிறது. அவர்கள் அதை தாய் தெய்வத்தை சுட்டும் பெயர்க்கவும் பயன் படுத்துகிறார்கள்.

 

தந்திரம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின்பற்றிய வழிமுறை. யோனி என்பது  இலட்சுமியையும் குறிக்கலாம், சக்தியையும் குறிக்கலாம் அவையெல்லாம் பெண் அவையங்களை சுமந்து நிற்கும் ஒரு குறியீடு அவ்வளவே. ஏனெனில் தந்திர முறையில் பெண்ணே முக்கியம் அவளது அவயங்களே பாடுபொருள்கள்.

  • Replies 69
  • Created
  • Last Reply
Posted
நீங்கள் கூறுவது எல்லாம் இந்து என்ற மதம் ஒன்றை கட்டமைக்கும்போது ஆர அமர யோசித்து எழுதியது, ஆரிய வருகைக்கு பின்னால் வந்தது. நான் நோக்குவது ஆரிய  வருகைக்கு முன் இங்கு வாழ்ந்த மக்களின் வழிபாட்டு  முறையை.  ஆதலால் சமணம், புத்தம் மற்றும் இந்து சமயத்தில் நான்கு வாழ்க்கைப்படிகள் என்பன யாவும் இங்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன். சிவாச்சரியார்களை  மதக் குருமார்கள்  என்ற வகையிலே பார்க்கிறேன். ஏனெனில் அவர்கள் வேதத்தில் சொல்லப் பட்டது என்பதற்காகவே அதை நியாப்படுத்த எந்தக் கதையையும் புணைய தயாராக இருப்பார்கள்.

நீங்கள் ஆராச்சியில் ஈடுபட்டு  இருப்பவர். நான் பொதுவில் வாசித்துவிட்டு எழுதுவது. எனவே முதல் முதல் நால்வகையை வாழ்க்கைபடிகளையும்,எப்போது சொல்லப்பட்டது என்பதையோ அல்லது அது பிற்கால ஆரிய இந்து சமயத்தின் கூறு மட்டும் தான் என்பதையோ வைத்து ஒரு விவாத்ததை ஆரம்பிக்க விரும்பவில்லை. ஆனால் சிவன் பிராமணன் என்பதும், கிருகப்பிரஸ்தர் துறவிகளாகினர் என்பதும் சிந்து வெளியிலிருந்தே வருவதால் உங்கள் கால நிர்ணயம் ஆராய்ந்து நிரூபிக்க படவேண்டியது. மேலும் வேதங்களில் காணப்படும் தத்துவ சாரங்களும், மந்திரங்களில் பலவும் சிந்து வெளியிலிருந்து வந்தவை என்று கூறப்படுகிறது. அது சரியாயின் அவை வட மொழியில் மட்டும் எழுதப்பட்டிருப்பது இந்து சமத்தின் தந்துவங்களில் காலத்தை நிர்ணயித்து அவவை சிந்து வெளி சமயமா அல்லது, பிற்கால ஆரிய தத்துவமா என்பது கூறுவதில் சவால்கள் இருக்க போகிறது.    நமது தேவைக்கு, காலத்தை சரியாக வரையறுக்கமுடியாவிட்டாலும், இந்தியாவுக்கு வெளியே இல்லாததை சிந்திவெளியினது என்று கொள்ளலாம். இதனால் நால்வகை வாழ்க்கைபடியும் வேறு எந்த மதத்திலும் இல்லாததால், நிறுவாமலும் அது திராவிட தத்துவமாக கொள்ளலாம்.  மேலும் நான் சொல்ல வந்து, இந்து சமத்தின் வாழ்க்கை படிகளுக்கும், தந்திர மார்கத்தின் சிற்றின்பமூலம் பேரின்பம் காணும் முறைக்கும் இடையில் காணப்படும் தத்துவ உறவையே. அதில் விவாதத்திற்கு இடமில்லாமல் தொடர்புள்ளதாகவே காணப்படுகிறது.  அதில் தந்திர மார்க்கம், சிற்றின்பத்தை பேரின்பமாக மயங்கவில்லை என்பதையும் அதை, இந்துசயங்கள் மாதிரியே படி முறை ஆக்குகிறார்கள் என்பதையும் தான் சுட்ட முயன்றேன்.

 

‘இன்ன தன்மையுடையது’ என்று சொல்ல இயலாதிருப்பதால்தான் காதலை ‘அகம்’ என்றனர். காமம் என்பதின் பொருள் "ஆசை" என்பது வடமொழி விளக்கம். ஆனால் தமிழில் அதன் அர்த்தம் காதல் என்பதுதான். சங்க இலக்கியம் முழுவதும் காமம் எனபது காதல் என்ற பொருளிலும், காதலின் முதிவுற்ற நிலை என்ற பொருளிலும் காணப்படுகிறது. மேலும் அது இயற்கை நிகழ்வு என்றே அழைக்கின்றனர். ஆகையால் இது ஆசை என்ற பொருளுடன் ஒவ்வாது. காமம் என்ற உணர்வு எழாமல் கலவி கொள்ள முடியுமா என்ன?? மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறைகள்.  காமத்தை சிறுமைபடுத்த சொல்லப்பட்டதே இந்த சிற்றின்பம் என்ற வார்த்தை. காமத்தின் மூலம் பேரின்பம் எனப்படும் பரவச நிலையை அடைய முயலுவதே தந்திர முறையின் நோக்கம். எனது கட்டுரையின் நோக்கமும் அதுவே.

அகமோ காமமோ காதல் அல்ல. அகமும், காமமும் நீதிநூலான திருக்குறளில் காதலின் பின் வரும் சிற்றின்ப வாழ்க்கையைத்தான் சுட்டுகிறது. காதல் காம வாழ்க்கையை குறிக்காது. பழைய பாவனையில் சிற்றின்ப வாழ்க்கைகை காமவாழ்கையாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது.

 

காமம் தமிழுக்கு வட மொழியிருந்து மட்டும்தான் வந்தது. இன்றைய பாவனையில், காமுகன், காமக்கிழத்தி போன்ற சொற்கள் காதல் கணவனையோ, காதல் மனைவியையோ சுட்டுவன அல்ல. மேலும் காமனோ, காமன் பண்டிகையோ இன்று வழக்கில் இல்லாதவை. 

 

 

காமன் தேவன் என்பது ஒருகாலத்து வழக்கம். இப்போதில்லை. ஆயினும் அந்த காலத்தில் தன்னும் காமனின் உந்துதலால் ஏற்படுவது தெவீகமானதாக கருதப்படவில்லை. காமத்தை சிவன் மீது எய்தமையால் மாகாயோகியாகிய சிவன், காமன் தன்னை தவறாக வழிநடத்துவதாக கோபம் கொண்டு அவனை அழித்தார். யோகிகளுக்கும் காமத்திற்கும் பொருந்துவதில்லை. தந்திரிகள் யோகிகள். காமுகர்கள் அல்ல. அவர்கள் காமுக நோகத்துடன் சிறின்பதை அணுகுவதில்லை.  

காமம் என்ற உணர்வு எழாமல் கலவி கொள்ள முடியுமா என்ன??

தந்திர சாதனைகளை விளங்காதவர்கள் இத்தையக கேள்விகளை கேட்க முடியும். ஆனால் இதை மட்டுமேதான் தந்திரம் சொல்கிறது.  அந்த விடயத்தில் தான் நானும் நீங்களும் ஒத்துவர முடியவில்லை. அதையேதான் இந்த திரியின் ஆரம்பம் தொடக்கம் நான் சொல்வது. உணர்வுக்கு அடிமையானவனால் மேலும் வினையைமட்டும்தான் தேடமுடியும். வினைகளை விடுவிக்க முடியாது. நீங்கள் ஆபிரிக்க பழங்குடி மக்களை இந்த ஆராய்வில் இணைத்தபோது, அவர்கள் தந்திர மார்க்கத்தின் உயர் தத்துவங்களை அறிந்திருக்க வழியில்லை என்பதால்த்தான் நான் எதிர்த்தேன்.

 

தந்திரமார்க்கத்தில் எல்லாமே நீங்கள் கூறுவது போன்ற அழகிய லீலைகள் இல்லை. அவற்றில் பல இந்த திரியில் எழுதிய உடனேயே நிழலி திரி முழுவதையும் வெட்ட கூடிய, மனித சமுதாயம் என்றுமே ஏற்கமுடியாத சம்பிரதாய முறைகள். யாழில் ஒரு திரியில் அகோரிகள் சமய சடங்காக பிணம் தின்னுவதை போட்டிருந்தார்கள். நான் அதை பார்த்துவிட்டு அன்று நினத்தது இவர்கள் யாரும் தந்திரிகளை கேள்விப்படவில்லை என்றுதான். அதாவது தந்திரிகள் பல செய்ல்களை செய்த்து உடம்பை கழித்து மனத்தை தாயுடன் இணைக்க முயல்பவர்கள். உடம்பால் உணர்வதை தவிர்க்கவே அவர்கள் ஒரு வளத்தில் மனம் அங்கலாய்க்கும் அதி உன்னத லீலைகளையும் மறுவளத்தில் அதி வேறுப்பான அசிங்களையும் செய்வது. எப்படி லீலைகளை  மனத்தில் எடுக்காமல் செய்கிறாகலோ அதே மாதிரியேதான் அசிங்கங்களையும் மனத்தால் எடுக்காமல் செய்கிறார்கள் (மனத்தால் எடுக்காமல் செய்வதால் மட்டுமே அவற்றை செய்ய முடியும்). எனவே தந்திரத்தை பற்றி ஒரு பக்க படம் கீறுவதால் தப்பபிப்பிராயங்கள் தான் ஏற்படும்.  அவர்கள் செய்வதை எல்லாம் வெளிப்படையாக விவாத்தித்தால் தான் அவர்கள் யார், ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது தெளிவாகும். அதற்கு "காமத்தால், அல்லது அசிங்கத்தால் கடவுளை காண முடியுமா" என்ற தலைப்புகள் போதாது.

மத தத்துவங்கள் எதிலிருந்து வந்தது. மக்கள் நம்பிக்கையில் இருந்துதான். வேதம் எப்படி எழுதப் பட்டது?? அன்று வாழ்ந்த மக்களின் நம்பிக்கையில்  இருந்துதான். கடவுள் இருக்கிறார் என்ற மக்களின் நம்பிக்கையில் இருந்து எழுதப் பட்டதே மதத் தத்துவங்கள். எனது நோக்கம்  மக்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? அப்படி செய்ய தூண்டியது எந்த நம்பிக்கை / எண்ணம் ? அந்த நம்பிக்கையின் ஊற்று யாது? என்பதை ஆய்வதே.

 

நம்பிக்கை என்பது எழுந்தமானமானது. தத்துவங்கள், logical debates லிருந்து பெறபட்ட முடிவுகள். உண்மையில் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. இதனால்தான் சமயங்களில் குழ்பங்கள் விளைகிறது. மேலை நாட்டு சமயங்கள் நம்பிக்கைகளில் இருந்து எழுந்தவை. அவற்றின் தாக்கத்தாலும், பல ஆண்டுகள் அடிமை வாழ்கையாலும் நமக்கும் இத்தையக குழப்பம் மனத்தில் எழுவது உண்டு. வேதாந்த தத்துவங்களும், பக்திமார்க்கமும் வேதத்துடன் முரணுபவை.

 

சமயம் என்ற தீயை பொறுத்தளவில் இரண்டும்(நம்பிக்கையும், தத்துவமும்) தீப்பற்றக்கூடிவையே. அதில் ஒரு உதாரணத்தை காட்டலாம். நாம் நாளும் பொழுத்தும் வாழ்வில் சந்திப்பவையை raw petroleum என்று வைத்துக்கொள்ளுங்கள். திறமையான காச்சி வடிப்பில் பெறப்படும் முதல் வடிப்பு பெற்றோல் ஆகும். இது தத்துவம். தீர விசாரித்து ஆராய்ந்து பெறப்பட்டது. எத்தனை வடிப்புகளிலும் பதம் செய்ய முடியாமல் போய்விட்ட கழிவுப்பொருள் தார். இது நம்பிக்கை.   இரண்டுக்கும் தீ வைக்க முடியுமாயினும் பெற்றலுக்கு இருக்கும் தரமும் குணமும் தாருக்கு இல்லை.(மேலும் இது சமயத்தில் மட்டும்தான்). மூட நம்பிக்கையுடன் ஆண்டவனை பிராத்தித்தாலும் இறைவனடி சேர முடியும்(பக்தி மார்க்கம்). ஆனால் இது சங்காசாரியரியால் கட்டி எழுப்பட்ட அத்துவைத தத்துவம் அல்ல. 

 

தந்திரம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின்பற்றிய வழிமுறை. யோனி என்பது  இலட்சுமியையும் குறிக்கலாம், சக்தியையும் குறிக்கலாம் அவையெல்லாம் பெண் அவையங்களை சுமந்து நிற்கும் ஒரு குறியீடு அவ்வளவே. ஏனெனில் தந்திர முறையில் பெண்ணே முக்கியம் அவளது அவயங்களே பாடுபொருள்கள்.

 

தந்திரம் மனிதர்களால் தவறு என் ஒதுக்கப்படுபவற்றை மறுத்து அவற்றை படிகளாக ப்யன் படுத்தி ஞானம் அடைய முயலும் ஒரு வகை சமயம்.  இது தற்கால மேலை நாட்டு நகரீகத்துடன் வெளிப்படையாக முரணுவது. தந்திரத்தில் பெண்ணும் முக்கியமில்லை, உறுப்பும் முக்கியமில்லை. அவைகள் கடந்த அருவமும்  உருவமும் இல்லாத "மா-ஆய்" ஆன மாயையேதான் முக்கியம். உடம்பை அழித்து ஞானதை தேடும் தந்திரிகள் தமது தந்துவங்களை நல்ல மகசூலை தேடும் ஆபிரிக்க பழங்குடிகளிடம் இருந்த்து பெறவில்லை.

Posted

உங்களது கருத்துகளுக்கு நன்றி மல்லை. இன்றைய காலச் சூழலில் நாம் காணும் தந்திர முறையின் மற்றொரு பக்கம் அகோரமனதுதான்.  அதை நாம் ஒரு விதிவிலக்காகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?. விஞ்ஞானத்தில்  நல்ல முகம் தீய முகம் இருப்பதுபோல் இதிலும் உண்டு.  

 

இதை மேலும் தொடருமுன் நாம் காலத்தை வரையறை செய்துவிடலாம் என்று எண்ணுகிறேன்.  கீழே கூறப்படுகின்ற கால வரையறை பெருவாரியான வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒன்று. 

சிந்து சமவெளியின் காலம் -> ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் (கி.மு 3700)
வேத காலம் -> ஏறத்தாழ மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் (கி.மு 1500)
வேத புத்தகம் எழுதப்பட்டது / தொகுக்கப்பட்டது  - இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்(மௌரிய ஆட்சிக் காலத்தில் கி.மு 320)
புராண காலம் - கி.மு ஐநூறுக்கும் கி.பி ஐநூறுக்கும் இடைப்பட்ட காலம் (கி.மு 500 - கி.பி 500)

 

இன்று நாம் காணும் வேத எழுத்துக்கள் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டது. தொகுக்கும்போது அப்பொழுது இருந்து சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு சில கருத்துக்களை நீக்கியிருக்கலாம் சிலவற்றை சேர்த்திருக்கலாம். மேலும் முதலில் தொகுக்கப்பட்ட பிரதிக்கும் இப்பொழுது உள்ள பிரதிக்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருக்கலாம்.

வேத நூல்களில் இருந்து தெரிவது என்னவென்றால் 

 

1.  அவர்கள் தந்தை வழிச் சமூகம்  

2.  அவர்களுக்கு அசுரர்களுடனும் , தஸ்யுக்களுடனும் ஓயாத பகை இருந்தது 

3.  அசுரர்களும், தஸ்யூக்களும்  இவர்களுடன் ஒவ்வாத வழிபாட்டு முறையைக் கொண்டவர்களாக இருந்தனர். 

4.  இவர்களது தொழில் மேய்ச்சல். வேளாண்மை பற்றிய அறிவு இல்லை.  

5.  பெண் தெய்வ வழிபாடு கிடையாது 

 

சிந்து சமவெளியில் கிடைத்த தொல்லியல் கூறுகளிருந்து நாம் அறிவது 

 

1. விவசாயம் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்திருக்கிறது 

2. சிவ வழிபாட்டுடன் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்திருக்கிறது.

3. பெண் தெய்வங்கள் வழிபாடு இருந்திருக்கிறது.

4. போர் பற்றியோ, அயலவருடன் பகை பற்றியோ எதுவும் கிடையாது

5. மரங்களையும், மிருகங்களையும் வழிபட்டுள்ளனர்

6. மனிதப் பலிகளும், மிருகப் பலிகளும் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது      

 

கிடைக்கப் பட்ட சான்றுகளை வைத்து வேத வழிமுறையும், தந்திர வழிமுறையும் வெவ்வேறுபட்ட மூலங்களிலிருந்து வந்தது என நிறுவுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காமமும், கடவுளும் ஒன்றே....
நாங்கள் கோவிலுக்குப் போகும் போது... ஐயரோ, பூசாரியோ... மேலாடை இல்லாமல் நிற்கும் போது... கொஞ்சம் காமம் வரத்தான்... செய்யும்.
இனிமேல்... ஐயர் மார், எல்லாம்.... மேலாடையுடன் தான்... பூசை செய்ய, வேண்டும், என்று சட்டம் கொண்டு வர, வேணும்.

Posted

காமமும், கடவுளும் ஒன்றே....

நாங்கள் கோவிலுக்குப் போகும் போது... ஐயரோ, பூசாரியோ... மேலாடை இல்லாமல் நிற்கும் போது... கொஞ்சம் காமம் வரத்தான்... செய்யும்.

இனிமேல்... ஐயர் மார், எல்லாம்.... மேலாடையுடன் தான்... பூசை செய்ய, வேண்டும், என்று சட்டம் கொண்டு வர, வேணும்.

நான் அதை ஆமோதிக்கிறேன் :D  :D 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுளை அடைவதற்குக் காமம் படிக்கல்லாக அமைகின்றது!

 

அதாவது பேரின்ப நிலையை, எய்துவதற்குச் சிற்றின்பம் ஒரு பாதையமைத்துக் கொடுக்கின்றது!

மனம் என்பது, எவ்வளவு பெரிய குரங்குக் குணம், கொண்டதென்பது, ஐந்து நிமிடங்களுக்குத் தியானத்தில் அமர்ந்தவர்களுக்குத் தெளிவாகப் புரியும். இந்த நினைவுகளில், பெரும்பாலானவை, காமம் பற்றிய நினைவுகளே! இதைத் தாண்டி மேலே போக வேண்டுமானால், காமம் என்ற கடலைக் கடந்தேயாக வேண்டும்! அதனால் தான் காமம், கடவுளை அடைவதில் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றது!

 

உண்மையான வாழ்வு முறையும், பிரமச்சரியம், கிருகஸ்தம், வான்ப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற ஒழுங்கிலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றது!

இதில் ஒரு படியை, விட்டுச் சென்றாலும் திரும்ப ஆரம்பப் புள்ளிக்கே வர வேண்டியிருக்கும்!

 

எனவே விரும்பியோ, விரும்பாமலோ, காமம் என்ற நிலையைத் தாண்டினால் தான், கடவுள் நிலையை அடையலாம்!

 

புத்தர் கூட, அரண்மனையை விட்டுக் கிளம்பும் போது, தனது குழந்தையைத் திரும்பவும் ஒரு முறை, தொட்டுப் பார்க்க விரும்பித் திரும்ப வருகிறார், அப்போது யசோதாவின் புடவை விலகியிருக்கின்றது. அதைக் கண்டதும், குழந்தையிடம் விடைபெறும் எண்ணத்தை,மாற்றிவிடுகின்றார். அவ்வளவு வலிமை படைத்தது, காமம்!

Posted

புங்கை.. உந்தக் காமத்தில் இருந்து விடைபெறுவது எப்பிடி? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
புங்கை.. உந்தக் காமத்தில் இருந்து விடைபெறுவது எப்பிடி? :D

 

ஆனானப் பட்ட விசுவாமித்திரனே, ஆடிப்போன 'இடம்' அது இசை!

 

மிகவும் நீண்ட பயிற்சியின் பின்பு, ஒரு பதினைந்து நிமிடங்கள் வரைக்கும், மனதை வெறுமைப் படுத்த, இப்போது முடிகின்றது!

 

ஆழ்நிலைத் தியானத்தின் நேரத்தை அதிகரிக்கும் போது, இது சாத்தியமாகும் போலத் தெரிகின்றது!

 

ஆனால், மேலைத் தேச வாழ்க்கை முறையில், வாழும் எமக்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை என நினைக்கின்றேன்!

 

பிற்காலத்தில், நேபாளம் அல்லது கங்கோத்திரி போன்ற இடங்களுக்குப் போய்த் தொடரலாம் என நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஆனானப் பட்ட விசுவாமித்திரனே, ஆடிப்போன 'இடம்' அது இசை!

 

மிகவும் நீண்ட பயிற்சியின் பின்பு, ஒரு பதினைந்து நிமிடங்கள் வரைக்கும், மனதை வெறுமைப் படுத்த, இப்போது முடிகின்றது!

 

ஆழ்நிலைத் தியானத்தின் நேரத்தை அதிகரிக்கும் போது, இது சாத்தியமாகும் போலத் தெரிகின்றது!

 

ஆனால், மேலைத் தேச வாழ்க்கை முறையில், வாழும் எமக்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை என நினைக்கின்றேன்!

 

பிற்காலத்தில், நேபாளம் அல்லது கங்கோத்திரி போன்ற இடங்களுக்குப் போய்த் தொடரலாம் என நினைக்கிறேன்! 

 

இப்போதைக்கு  ஒன்றும் சரிவராது  எல்லோரும் அங்கேயே சங்கமமாவோம்  :D

Posted

 vasectomy புலம்பெயர் தேசங்களில் ஆண்கள் இதை செய்வதுண்டு.

காரணம் தகப்பனாக வந்தால் செலவு அதிகம் என்பதால்  :D

Posted
 vasectomy புலம்பெயர் தேசங்களில் ஆண்கள் இதை செய்வதுண்டு.

காரணம் தகப்பனாக வந்தால் செலவு அதிகம் என்பதால்  :D

 

அது பாம்பு செட்டை கழட்டுவது போன்றது. செட்டையை கழட்டிய பாம்பின் இயல்பில் மாற்றம் வருவதில்லை. 

Posted

காமமும், கடவுளும் ஒன்றே....

நாங்கள் கோவிலுக்குப் போகும் போது... ஐயரோ, பூசாரியோ... மேலாடை இல்லாமல் நிற்கும் போது... கொஞ்சம் காமம் வரத்தான்... செய்யும்.

இனிமேல்... ஐயர் மார், எல்லாம்.... மேலாடையுடன் தான்... பூசை செய்ய, வேண்டும், என்று சட்டம் கொண்டு வர, வேணும்.

 

 

நான் அதை ஆமோதிக்கிறேன் :D  :D 

 

தமிழ் சிறி, தமிழ்சூரியன்..... ரொம்ப காய்ஞ்சு போய் கிடந்த இப்படி எல்லாம் தோணும்.... :rolleyes::D
Posted
புங்கை.. உந்தக் காமத்தில் இருந்து விடைபெறுவது எப்பிடி? :D

 

 

ஆனால், மேலைத் தேச வாழ்க்கை முறையில், வாழும் எமக்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை என நினைக்கின்றேன்!

 

பிற்காலத்தில், நேபாளம் அல்லது கங்கோத்திரி போன்ற இடங்களுக்குப் போய்த் தொடரலாம் என நினைக்கிறேன்! 

 

 

இப்போதைக்கு  ஒன்றும் சரிவராது  எல்லோரும் அங்கேயே சங்கமமாவோம்  :D

 

இந்த மாதிரி தலைப்புகளை போட்டு தமிழ் இனத்தின் மக்கள் தொகையை பெருக்கலாம் என்றால்... நீங்கள் இமயமலையில் போய் சங்கமிக்கலாம் என்கிறீர்கள்.  ம்ம்ம் ... இப்போதைக்கு அந்த எண்ணமெல்லாம் ஆகாது. நந்தன் சொல்வதுபோல் எல்லோரும் அங்கேயே போய் சங்கமிக்கலாம். :lol:

Posted

நித்தியானந்தா  செய்த விளையாட்டுகளுக்கு இது காரணமாக இருந்து இருக்குமா?

Posted
நித்தியானந்தா  செய்த விளையாட்டுகளுக்கு இது காரணமாக இருந்து இருக்குமா?

 

நானும் அப்படித்தான் கேள்விபட்டேன். நித்தி தந்திர முறையைத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தாராம். அவரு ஒரு கட்டத்தை தாண்டியதும் நிறுத்துன்னு சொல்வாரம். ஆனால் சன் டிவி, நித்தி ரஞ்சிதா கிட்ட சொல்ற "நிறுத்து" என்கிற வார்த்தையை கட் பண்ணிட்டங்கலாம். உண்மையை யார் கண்டா ??

  • 7 months later...
Posted

நமது பொதுபுத்திக்கு எட்டாத ஒன்றை மற்றொருவர் செய்யும்போது ஒன்று நாம் அதைக்கண்டு வியப்போம் இல்லை விமர்சிப்போம். இப்படி நமது அறிவிற்கு எட்டாத ஒரு செயலைச் செய்து அதிகமான விமர்சனத்திற்கு ஆளான இருவரில் ஒருவர் காந்தி மற்றொருவர் ஓசோ. இருவருக்கும் என்ன ஒற்றுமை என்று கேட்கிறீர்களா? இருவரும் தந்திர வழிபாட்டு முறையின் மூலம் முக்தியை காண முயன்றனர்.

 

இருவரும் தனது முயற்சியில் வென்றார்களா? இல்லை இந்த முயற்சியை உன்னத நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தினார்களா? எனத் தெரியாது. அந்த இருவருக்குள்ளும் ஆன்மீகத்தைப் பற்றி ஒரு தேடல் இருந்தது. அந்த தேடலின் விளைவாக இந்த வழிபாட்டு முறையினைத்தான் ஊடாகத்தான் கடவுளை காண முடியும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் விளைவாக அதை பரிசோதித்து பார்க்க முனைந்தார்கள்.

 

தந்திரம்  உடலை  தன்னுள் இருந்து அடைவதற்காக அனைத்தையும் துறக்க தயாராக இருப்பவனுக்குரியது. அந்த நோக்கத்தின் பொருட்டு அது எதைவேண்டுமானாலும் செய்யலாம். பாவபுண்ணியங்கள்,  ஒழுக்கம், அறம், கருணை போன்றவற்றையெல்லாம் அது தாண்டலாம் என்று சொல்லப்பட்டது. எப்படி சைவப் பிரிவில் உள்ள அகோரிகள் செய்யும் செயலை நம்மால் உள்வாங்க முடியாதோ அதேமாதிரி தந்திர முறையில் உள்ள சில பிரிவு செயல் முறைகளையும் நாம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நமது இன்றைய பக்தி கடவுளை / புனிதர்களை பற்றி ஒரு மனப்பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளது. அவர்கள் பிறக்கும்போதே புனிதர்களாக பிறந்தார்கள் என்று கருதுகிறோம். அவர்களின் ஆன்மீகத் தேடல், அதற்காக என்ன செய்தார்கள் என்பது பற்றி நமக்கு தெரிவிக்கப் படவே இல்லை.

 

காந்தியும் அவருடைய பேத்திமுறையான மனு காந்தியும் ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்கினார்கள் என்றும் காந்தியுடன் இருந்த சுசீலா நய்யாரும் அவருடன் நிர்வாணமாக உறங்கினார் என்ற செய்தியை பலரும் கேட்டிருக்க கூடும். இதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வைத்திருப்பார்கள். சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கவியலே உண்மையான ஒழுக்கவியல், பிறிதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவை என்று நம்பும் மனநிலை கொண்ட ஒரு சாதாரண மனிதனின் நோக்கில் இது ஒவ்வாதது. ஆனால் புலன்களை வெல்லும்பொருட்டு ஆன்மிகத் தேடல் கொண்ட ஒருவரின் ஆய்வே என்பதை நமது மனம் மறுக்க கூடும். காந்தியும் காமமும் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய சில கட்டுரைகளில் தந்திர முறையைப் பற்றிக் காணலாம். மேலதிக வாசிப்புகளுக்கு இங்கே செல்லவும் http://www.jeyamohan.in/?p=5130

 

ஓஷோ பற்றி எனக்குச் சொன்ன எல்லாருமே அவரை செக்ஸ் சாமியார் என்றுதான் சொன்னார்கள். அப்படி என்ன சொன்னார் என்பதை யாரும் சொல்லவில்லை.  “காமமின்றி நாமில்லை. ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். அதை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால் மனிதரின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கே பயன்படுத்தலாம்” என்பது அவர் கூற்று.

 

இங்கே காந்தியும், ஓசோவும் சொன்னதும் செய்ததும் புதிது ஒன்றும் கிடையாது. காலம் காலமாக நம் முன்னோர்கள் போதித்த ஒன்று, பழகிய ஒன்றுதான். காமத்தை தடுப்பதோ அல்லது தவிர்ப்பதோ அல்லாமல் அதை கலையாக மாற்றப்படும்போது காம உணர்ச்சிக்குப் பதில் மேன்மைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளை உணர முடியும். அதை எப்படி கலையாக பாவிப்பது? இங்குதான் செயல் முறைகள் மாற்றம் பெறுகின்றன. நூற்றாண்டுகளுக்கு ஏற்ப புதிய செயல்முறைகள் தோற்றம் பெறுகின்றன. அதுவே நாம் சிந்து சமவெளியில் கண்ட சிலைகளும், இன்று கோவில்களில் காணும் சிற்பங்களும்.

 

இது பற்றி நிறைய வாசிக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை பகிர்ந்து உங்களின் கருத்து அறிவதே என் நோக்கம்.......

Posted
காந்தியும் அவருடைய பேத்திமுறையான மனு காந்தியும் ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்கினார்கள் என்றும் காந்தியுடன் இருந்த சுசீலா நய்யாரும் அவருடன் நிர்வாணமாக உறங்கினார் என்ற செய்தியை பலரும் கேட்டிருக்க கூடும். இதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வைத்திருப்பார்கள். சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கவியலே உண்மையான ஒழுக்கவியல், பிறிதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவை என்று நம்பும் மனநிலை கொண்ட ஒரு சாதாரண மனிதனின் நோக்கில் இது ஒவ்வாதது. ஆனால் புலன்களை வெல்லும்பொருட்டு ஆன்மிகத் தேடல் கொண்ட ஒருவரின் ஆய்வே என்பதை நமது மனம் மறுக்க கூடும். காந்தியும் காமமும் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய சில கட்டுரைகளில் தந்திர முறையைப் பற்றிக் காணலாம். மேலதிக வாசிப்புகளுக்கு இங்கே செல்லவும் 

 

 

சிலவற்றை நானும் நீங்களும் எதிர் எதிர் கரையில் தான் கிரகிக்கிறோம் போலிருக்கு.

காந்தியையோ, ஓசோவையோ(அவரைப்பற்றி நான் அதிகம் வாசித்து இல்லை) வைத்து தனிமனித நடத்தைகளை ஒரு மார்க்கமாக்காமல் இருப்பது நல்லது. சிந்துவெளியில் இருந்து நித்தியானந்தா(திரும்பவும், தனி ஒரு மனிதர் பிரதானமல்ல- நடத்தையில் உண்மையும், மனத்தில் நம்பிக்கையும், சிந்தனையில் ஒரு தத்துவிசாரணையை ஆரம்பித்திருந்தவர்கள் மட்டும்) வரைக்கும் பயின்ற முயற்சிகளின் சாரஅம்சம்தான் தந்திரமாக இருக்க முடியும். இதில் ஒரு மனிதரின் ஒரு செயல்ப்பாட்டிலிருந்து தந்திரத்தை நிச்சயிக்க முடியாது. இந்த தெளிவாக மனத்தில் இருத்திக்கொண்டு காந்தியின் நடத்தையை , காந்தியை நான் அறைந்த வரையில், விளக்குவதனால் காந்தி முயற்சித்தது தந்திரமல்ல. 

 

தந்திரம் சிற்றின்பம் தூய்ப்பதை படியாக எடுப்பது. இதை எல்லோரும் ஒத்துகொண்டோம். நான் சொல்ல்வந்தது, தந்திரம் இந்து மதத்திதில் காணப்படும் வளர்சிப்படி முறைகளை விடுத்து sprinting ஓட்டம் போட முயல்வது.(சமணம் புத்தம் போல் இல்வாழ்க்கையில் இருந்து விலத்துவது). உதாரணத்திற்கு  தாய், மனைவி, பிள்ளை என்ற உறவு நிலையை, வாழ்க்கை படிமுறைகளை ஏற்கும் இந்து சமயம், ஏற்க முயல்கிறது. ஆனால் "ஆத்மா உடல் என்ற கூட்டில் ஒட்டியிருக்கிறது" என்று கூறும் போதுஅது தன்னைதான் மறுக்கிறது . அதாவது அநாதியான ஆத்மா உறவு முறையில்லாதது. உறவு முறை, புவியில் காணப்படும் இரசாயன சேர்க்கைகளான உடம்பிற்க்கு பொருந்ததாது. இன்னொருவகையில் கல்லும் கல்லும் அண்ணன் தம்பி என்பதோ ஆறும் கடலும் கணவன் மனைவி என்பதோ என்று ஒன்றும் இல்லை. எனவே சம்பிரதாயங்களால் கட்டி எழுப்பட்ட உறவு முறைகளில் உண்மை இல்லை என்கிறது தந்திரம். ஆனால் உனக்கும் எனக்கும் உறவில்லை என்று தாய் பிறந்த உடனே பிள்ளையை தூக்கி எறிந்திருந்தால் இன்று உலகம் ஆகியிருக்காது. தத்துவ விசாரணை இருக்கது. இந்த சிக்கலை விளங்கிக்கொண்டு, பொய்களை ஏற்று வாழ்க்கையை முன்னால் எடுத்தால் மட்டும்தான் உடல் கிடைத்ததின் பலனை அடைய முடியும்.  இந்த வழியில் தந்திரம், பூரணமில்லாத அரைவேக்காட்டு மார்க்கமாக இருக்கிறது. அது ாஆக்கிவைத்த சோறை மட்டும்தான் பேசுகிறதேயல்லாமல், வரம்பு வட்டி வைப்பதையோ, வாய்க்கால் கட்டி இறைப்பதையோ, கதிரை வெட்டி சூடி மிதிபதையோ உதைத்து தள்ளிவிடுகிறது.

 

அதை நாம் விளங்கினால் மட்டும் காந்தி என்ன செயய முயன்றார் என்பது விளங்க்கிக்கொள்ளப்படத்தக்கது. காந்தி ஒரு சம்பிரதாய நம்பிக்கைகாரன். சாதியை மறுத்த போது கூட சாதி பேசுவது பாவம் என்று நம்பினாரேயல்லாமல், அதில் உள்ள உண்மையில்லாமை, பொருள் இல்லாமை என்ற யதார்த்தங்க்களைப் பறை சாற்றவில்லை. இவருக்கும் அடிப்படை உண்மையாக, உறவு என்பது எங்கும் இல்லாததது என்ற தத்துவங்களில் ஆரம்பிக்கும் தந்திரத்திற்கும் வெகுதூரம். நான் காந்தியை நியாப்படுத்த முயலாமல், காந்தியை அறிந்த வரையில்,  தூய விவாதமாக மட்டும்தான் எனது கருத்தை வைக்கிறேன். இதில் நான் காந்திய நியாப்படுத்த முயன்றாகத கருத்து எழுந்தால் அது எனது விவாதம் ஒழுங்கான முறையில் வைக்கபடவில்லை என்றுதான் பொருளாகும்.

 

காந்தி இளம் உறவுப் பெண்ணை அறையில் வைத்திருந்தது தந்திர முறையில் இறைவனைக்கான என்ற பொருள்பட எழுவதில் அர்த்தம் இல்லை. தந்திரிகள் எந்த நிலையில் உடல் உறவை கைவிடுவார்கள் என்பதை என்னால் கூற இயலாது, காய் பழுக்தது தாய்மரத்திலிருந்து தானாக விழும் எனப்துதான் அவர்களின் தத்துவம். ஆனால் காந்தி இருந்த ஆன்ம முன்னேற்றத்தில் நிச்சயமாக உடல் உறவை கைவிடுவதால் தந்திர மார்க்க நோக்கம் ஈடேறாது. காந்தி மறுப்பு பாதையில் போனவர். இதனால் சத்திய சோதனை நிகழ்த்தி தனது மனம் மறுப்பை ஏற்கிறதா என்றுதான் பரிசோதிக்க முயன்றார்.  காந்தி நேர்மையாக(கடசி வெளியோருக்கு காட்டவாவது) வாழ முயன்ற மனிதனே அல்லாமல் உண்மையான ஆன்ம ஈடேற்றம் பெற்ற மனிதன் அல்ல. அவர் நிகழ்த்தியது ஒரு சத்திய சோதனை. சத்திய சோதனை சம்பிரதாய பாதைகளை பின்பற்றுவது. சத்தியம் என்பது பொய் என்றதை மறுக்கும் நிலை. சத்தியத்தை காணும் எவனும் பொய்யை மறுத்து இரு வினைகளை கட்டக்க முடியாது. காந்தியின் சத்திய சோதனை உண்மையான ஆன்ம ஈடேற்றத்திற்கு தடையான சுவர்.  

 

இந்த நிலையில் காந்தி உடல் உறவை மனதுக்கு மறுக்க இளம் பெண்ணை காட்டிலில் வைத்துக்கொண்டு தூங்கினார். இதற்கும் உடல் உறவை வைத்து மேலே செல்ல முயலும் தந்திரத்திற்கும் தொடர்பு எதிரும் புதிரும். காந்தி தந்திரத்தை பயிர்சிக்க முயலவில்லை. 

 

 

Posted

சிலவற்றை நானும் நீங்களும் எதிர் எதிர் கரையில் தான் கிரகிக்கிறோம் போலிருக்கு.

 

 

எதிர் கேள்விகள் மூலமே என்னுடைய தேடலை விரிவாக்குகிறேன்.

நான் தனிமனித நடத்தைகளை ஒரு மார்க்கமாக்கவில்லை. அவர்கள் பின்பற்றியது தந்திர மார்க்கத்தின் கட்டமைப்பே என்று கூற விளைகிறேன்.

 

இந்த நிலையில் காந்தி உடல் உறவை மனதுக்கு மறுக்க இளம் பெண்ணை காட்டிலில் வைத்துக்கொண்டு தூங்கினார். இதற்கும் உடல் உறவை வைத்து மேலே செல்ல முயலும் தந்திரத்திற்கும் தொடர்பு எதிரும் புதிரும். காந்தி தந்திரத்தை பயிர்சிக்க முயலவில்லை.

 

 

தந்திர முறையில் வாம மார்க்கம் மட்டுமே பாலியல் சடங்குகளை பற்றிக்  கூறுகிறது. தந்திர முறையில் உள்ள தட்சிண மார்க்கம் பாலியல் சடங்குகள் அற்றது. இந்த தட்சிண முறையைத்தான் தமிழக சித்தர்களும், காஷ்மீர் பண்டிட்களும் பின்பற்றினார்கள் எனக் கூறப்படுகிறது.தந்திர முறையில் எதை நீங்கள் அடக்க / கட்டுபடுத்த நினைக்கிறீர்களோ, அதை மறுக்காமல், வெறுக்காமல் அதன் வழியிலே சென்று வெல்வது. நிர்வாணத்தைக் கண்டு தனது மனம் சலனப்படாமல் இருக்கும் பொருட்டு நிர்வாண பெண்களுடன் உறங்கியதாக கூறப்படுகிறது.

 

தந்திர மார்க்கம் இருவகைப் பட்டது.

1. வாம மார்க்கம்

2. தட்சிண மார்க்கம்

வாம மார்க்கம் 

இது சக்தி வழிபாட்டை முதன்மையாகக் (பெண் தெய்வ வழிபாடு)  கொண்டது. தந்திர கோட்பாட்டிண்படி  ஆண்-பெண் இருபாலரிலுமே உடலின் இடது பாகம்(left side) பெண் தன்மை கொண்டிருப்பதால் இது இடது மார்க்கம் எனவும் வழங்கப்படும். பாலியல் சடங்கு மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி பேரின்பத்தையும், இறைநிலையையும் அடைவதே இதன் செயல்முறை. துறவற வாழ்க்கையை புறக்கணித்து மது, மாமிசம், மீன், தானியங்கள் மற்றும் கலவிச் சடங்கு மூலம் தன் மெய்யுணர்ந்து அதன் மூலம் இறைநிலையை அடைவதே வாம மார்க்கத்தின் கோட்பாடு. இம்மார்க்கம் சாதிக் கருத்துக்கள், உயர்வு தாழ்வு மற்றும் ஒழுக்க விழுமியங்களை மறுக்கிறது.

 

என்னைப் பொருத்தவரை வாம மார்க்கமே சைவ சமயத்தின் அடிப்படை. கோவில் கருவறைகளில் லிங்கத்தையும் (ஆண் குறி), யோனி பீடத்தையும் (பெண் குறி) துதிப்பது தானே சைவம்.

வாம மார்க்கத்தின் செயல்முறையான பாலியல் சடங்குகளின் சித்தரிப்புகளே கோவில் சுவர்களில் உள்ள நிர்வாண ஓவியங்கள். இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தந்திர வழிபாட்டு குறியீடுகள் என்றே சொல்லலாம்.

 

தட்சிண மார்க்கம்

இது சிவ வழிபாட்டை முதன்மையாகக் (ஆண் தெய்வ வழிபாடு)  கொண்டது. ஆண்-பெண் இருபாலரிலுமே உடலின் வலது பாகம்(right side) ஆண் தன்மை கொண்டிருப்பதால் இது வலது மார்க்கம் எனவும் வழங்கப்படும். யோகப் பயிற்சி மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பிஇறைநிலையை அடைவதே இதன் செயல்முறை.

 

தட்சிண மார்க்கத்தில் உபாசனா, விபாசனா என இருவகை உண்டு.

 

இதில் உபாசனா என்ற முறையைத்தான் காந்தி பின்பற்றியதாக கூறப்படுகிறது.உபாசனா என்றால் அருகருகே அமர்தல் / படுத்தல் என்று கொள்ளப்படும். இதில் பாலியல் சடங்குகள் ஏதும் கிடையாது. காந்தி இளம் பெண்களுடன் நிர்வாணமாக உறங்கினார் என்றும் அவர்களுடன் எந்தவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

காந்தியுடன் உறங்கிய சுசீலா நய்யார் இதுபற்றி கூறியதாகச் சொல்லப்படுவதாவது,  "காந்தி முதுகின்மீது நாங்கள் படுத்துக்கொள்வோம். அவர் உடனே தூங்கிவிடுவார். இதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை”.  

 

ஜெயமோகன் இதுபற்றி கூறும்போது ஜென் மதத்தில்  ஒரு நம்பிக்கை உண்டு. அது என்னவெனில் வயோதிகர்களை இளம்பெண்களுடன் நிர்வாணமாக படுக்க  வைக்கும்போது, வயோதிகர்களின் உயிர்சக்தி அதிகரிக்கும்  என்பதே. இதைப் பற்றி “The house of sleeping beauties” என்ற நாவலில் கூறப்பட்டுள்ளது.  இளம் பெண்கள் நிர்வாணமாக ஒரு அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். அவர்கள் கட்டணத்திற்காக வந்து, தூக்க மாத்திரை உண்டு உறங்குபவர்கள். அவர்களுடன் ஒரு வயோதிகர் தூங்கச் செல்வார் அவர் அநுபவத்தைப் பற்றி விளக்குவதாக இருக்கும்.

 

Posted

ம்..

 

உலகில் மறுக்க மிகக் கடினமான நிகழ்வுகளில் காமமும் ஒன்று.

மனதில் கருணை பிறந்தால் காமம் விலகும். :) :)

Posted

வாம மார்க்கம் 

இது சக்தி வழிபாட்டை முதன்மையாகக் (பெண் தெய்வ வழிபாடு)  கொண்டது. தந்திர கோட்பாட்டிண்படி  ஆண்-பெண் இருபாலரிலுமே உடலின் இடது பாகம்(left side) பெண் தன்மை கொண்டிருப்பதால் இது இடது மார்க்கம் எனவும் வழங்கப்படும். பாலியல் சடங்கு மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி பேரின்பத்தையும், இறைநிலையையும் அடைவதே இதன் செயல்முறை. துறவற வாழ்க்கையை புறக்கணித்து மது, மாமிசம், மீன், தானியங்கள் மற்றும் கலவிச் சடங்கு மூலம் தன் மெய்யுணர்ந்து அதன் மூலம் இறைநிலையை அடைவதே வாம மார்க்கத்தின் கோட்பாடு. இம்மார்க்கம் சாதிக் கருத்துக்கள், உயர்வு தாழ்வு மற்றும் ஒழுக்க விழுமியங்களை மறுக்கிறது.

 

என்னைப் பொருத்தவரை வாம மார்க்கமே சைவ சமயத்தின் அடிப்படை. கோவில் கருவறைகளில் லிங்கத்தையும் (ஆண் குறி), யோனி பீடத்தையும் (பெண் குறி) துதிப்பது தானே சைவம்.

வாம மார்க்கத்தின் செயல்முறையான பாலியல் சடங்குகளின் சித்தரிப்புகளே கோவில் சுவர்களில் உள்ள நிர்வாண ஓவியங்கள். இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தந்திர வழிபாட்டு குறியீடுகள் என்றே சொல்லலாம்.

 

இந்து வெளிச்சமயத்தை பற்றி யாரும் உண்மையான ஆராச்சி செய்யவில்லை. அங்கு கடவுளுக்கு முதல் இடம் கொடுக்கப்படாமையால் கோவில்கள் பெரிதாக இல்லை. என்வே துதிப்பது அவர்களின் சமைய முறையாக இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. எனவே இன்று காணப்படும் துதிப்புகளை, சம்பிரதாயங்களை அவர்களிடம் இருந்து வந்த சைவத்தில் ஏற்றுவதாயின் ஆதாரம் வேண்டும். ஆகமத்தால் வரையறுக்கப்படும் கார்ப்பகிருகம் ஆரியம் இல்லை என்பதற்கும் ஆதாரம் வேண்டும். இதனால் லிங்கத்தையோ, யோணியையோ சிந்து வெளியில் துதித்தார்கள் என்பதற்கு முழு ஆதாரம் தேவை. இதையெல்லாம்  சைவைத்துடன் இணைக்க தேவை இல்லை. சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட பிரதான சமய அடையாளச் சின்னங்கள் சுட்டுவது யோகிகளை. இதனால், வழக்கமான வணக்கம், துதித்தல் போன்ற ஆரியம் முன்னேறியிருக்கும் செயல்பாடுகள் இந்த மாதிரி துறவற யோகிகளிடம் எவ்வளவுக்கு நிறைந்திருந்தது? 

 

எனவே காந்தி செய்தது தந்திர மார்க்கம் என்று சொல்லவதாயின் அது வாம மார்க்கமாக இருக்க வேண்டும். அந்த நிலையில் காந்தி மனம் அறிய  "இறைநிலையையும் அடைவதே இதன் செயல்முறை. துறவற வாழ்க்கையை புறக்கணித்து மது, மாமிசம், மீன், தானியங்கள் மற்றும் கலவிச் சடங்கு மூலம் தன் மெய்யுணர்ந்து அதன் மூலம் இறைநிலையை அடைவதே வாம மார்க்கத்தின் கோட்பாடு." இந்த கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்.  காந்தி பெண்களை அருகில் வைத்திருந்தது, அதை தனது மனதிற்கு மறுக்கவே. இன்பம் தூய்பதை படியாக கொள்ளும் தந்திரத்தில் மறுப்பது ஒவ்வாது.   அதனால் அவர் செய்தது சத்திய சோதனையாகத்தான் பார்க்க மட்டும் சந்தம் சூழ்நிலைகள் இருக்கு.

 

(தந்திரத்தில் யோனிவழிபாடு இருக்கிறது. ஆனால் அதன் ஆரம்பகாலத்தை வரையறுப்பது கடினம். இருக்கிறது. தந்திரம் சிந்துவெளிக் காலத்தில் கூட ஒதுக்கப்பட்டத்தாகத்தான்(குறந்தவர்கள் பின்பற்றும்) கருதப் படுகிறது. இதன் காரணம் அது சாதாரண மக்கள் விரும்பாத சடங்குகளை பின் பற்றுவதே.

 

ஆனால் வைவத்தில் இருக்கும் சிவலிங்கம் ஆண் குறியல்ல. இதானால் அது ஆண் கடவுளான சிவனை குறிக்கிறது என்பது பிழையான தத்துவம். சிவலிங்கத்தை பாலியலில் தொடுப்போர் ஆண் பெண் இணைந்த நிலையாக மட்டும்தான் தொடுக்கிறார்கள். சிந்து வெளியில் காணப்படும் களிமண் தட்டுக்கள் பசுபதிக்கு மனைவி இருப்பதை காட்டவில்லை. இதனால் பாலியல் விளக்கம் சிவலிங்கத்துக்கு பொருந்ததாது. வட மொழி சொற்பிரயோகம், சிவலிங்கம் என்பது சிவனை சுட்டுவது என்று மட்டும்தான் கொள்ளப்படலாம். எந்த இடத்திலும் அது ஆண்குறி என்று பொருள் தராது. எனவே கருபக்கிருத்தில் லிங்கத்தை காண்பது ஆரியக்கூத்துமட்டுமே. துறவியான பசுபது ஆணும் பெண்ணும் இணைந்த ஒருவம் ஒன்றால் பிரதியிடப்பட மாட்டார். சிவலிங்கம், பசுபதி சப்பாணி கட்டியிருந்து தவம் செய்யும் தோற்றத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. சிவலிங்கத்தை சுற்றியிருக்கும் பாம்பு, தெளிவாக அவர் பசுபதி என்பதை சொல்கிறது )

Posted

காந்தி தந்திர மார்க்கத்தை பின்பற்றியிருக்கலாம் என்பது பற்றி சில குறிப்புகளை ஜெயமோகன் தந்து உள்ளார். அது உங்கள் பார்வைக்கு   

"காந்தி மேற்கொண்ட முறை ‘ஸஹஸயனம்’ என்று தாந்த்ரீக மரபில் குறிப்பிடப்படுவதே என்று நித்ய சைதன்ய யதி சொன்னார். கண்ணன் கோபிகைகளுடன் செய்தது அது என்று அதைச் சொல்கிறார்கள். புலன்களை வெல்லும்பொருட்டு புலன்களையே மயக்குவது என்று அதைச் சொல்லலாம்."

"காந்தி தன் வாழ்க்கையின் கடைசிக்காலக்ட்டத்தில் வங்காள தாந்திரீகர்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்று படுகிறது. அவரது சுயசரிதையிலேயே அவர் சந்தித்த சில தாந்த்ரீகர்களைப்பற்றிய சிறிய குறிப்புகள் உள்ளன. கத்ரின் டிட்ரிக் அவரது ‘காந்தி அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை’ [ Gandhi: a political and spiritual life By Kathryn Tidrick] என்ற நூலில் காந்தியின் தாந்திரீகச் செயல்பாடுகளை அறிந்திருக்கக் கூடியவர்கள் என சுவாமி ஆனந்த் மற்றும் கேதார்நாத் ஆகியோரை குறிப்பிடுகிறார். ஆனால் அவர்களைப்பற்றி அதிகம் விஷயம் தெரியவில்லை. தாந்த்ரீகரான போலே பாபாவுடனும் காந்திக்கு நெருக்கம் இருந்தது. அவருடன் தன் மகன் ராமதாஸை இமயமலைப் பயணத்துக்கு காந்தி அனுப்பினார். "

"காந்தியின் காமம் சார்ந்த சோதனைகளை பின்னர் ஆராயும் பேராசிரியர் நிக் கீர் அவரது  ‘அகிம்சை என்னும் விழுமியம், கௌதமர் முதல் காந்திவரை’   [ The Virtue of Non-Violence: from Gautama to Gandhi Nick Gier] என்ற நூலில் காந்தி தட்சிண மார்க்கத்தைச் சேர்ந்த ஏதேனும் சில சடங்குகளை தனக்கேற்ற முறையில் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்."


நாம் கட்டுரையின் நோக்கத்தில் இருந்து திசை மாறுகிறோம் என்று எண்ணுகிறேன்.

பட்டாச்சாரியா எழுதிய "The history of tantric religion" என்ற நூலில் கூறியிருப்பதாவது,

இங்கு இருவகையான வழிபாட்டு முறை இருந்தது. ஒன்று அதிகார வர்க்கம் பின்பற்றும் வேத  வழிபாட்டு முறை(ஸ்ருதி எழுதிய) மற்றொன்று சாதாரண மக்கள் பின்பற்றும் தந்திர முறை. இந்த தந்திர முறை தான் ஆதி மக்களின் வழிபாட்டு முறை என்கிறார்.வேத வழிபாட்டு முறை தந்திர முறையை தொடர்ந்து ஒழிக்கவே முற்பட்டது. மெது மெதுவாக காலப்போக்கில் தந்திர முறையும் சில சடங்குகளை பூஜை, படையலை வேத முறையில் இருந்து ஏற்றுக்க கொண்டு விட்டது. ஆனால் அதன் அடிப்படையான சாதி மறுப்பை விடவில்லை. தந்திர முறைக்கென்று ஒரு முறையாக எழுதபட்ட இலக்கணமோ செயல்முறை வடிவமோ கிடையாது.  தந்திர முறையின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் எனக் கருதபட்ட ஐந்து சித்தர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்களே, யாரும் பிராமணர்கள் கிடையாது, மேலும் அந்த  ஐந்து ஆசிரியர்களும் தனது சீடர்களுக்கு தான் சொந்தமாக அறிந்தவற்றைத்தான் கூறவேண்டும் என்று சொல்லிச் சென்றார்கள். சித்தர்கள் அனைவருமே வருணத்தை போற்றும் சாதியத்தை மறுத்தவர்கள் என்பது நோக்கத்தக்கது,

 

இன்னும் பேசலாம்..................

Posted

மேலே உள்ளவை காந்தியின் கடைசிக் காலத்தில் நடந்த நிகழ்சிகள் ஒன்று அல்லது இரண்டுக்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றன. அவரது சத்திய சோதனையில் இருந்து ஆதாரம் எடுத்திருந்தால் இந்த விளக்கங்கள் மறுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இவை வேறும் சந்தேகங்களே என்று அதை எழுத முயலும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். காந்தி செய்ததை தந்திர மார்க்கமே என்று வலிந்து விளங்கப்படுத்த, காந்தி  5000 வருட பழைய தந்திர மார்கத்தில் மாறுதல் செய்தார் எங்கிறார்கள். ஆயிரம், ஆயிரம் வங்காளிகளை காந்தி சந்தித்திருக்கலாம் என்றாலும் ஒருவரை வைத்து விவாதத்தை முன்னெடுக்கிறார் ஆசிரியர். ஆனால் அந்த வங்காளியின் போதனைகளை காந்தி எப்போதாவது பின்பற்ற முயன்றாரா என்பதை ஆராந்து பார்க்க ஆசியர் ஆர்வம் காட்டவில்லை. அவசரம் அவசரமாக காந்தியும் ஒரு தந்திரியே என்று விவாதத்தை வைத்துவிட்டார். இது ஒருவர் பனையின் கீழ் நின்றாலே கள்ளுக்குடித்தவர் என்பது போலிருக்கு. உண்மையில் அவர் பால் மட்டும் அல்ல, வெறும் தண்ணீர், பழசாறு எதுமே குடிக்கவில்லை.

 

காந்தி தன் இளமைகாலத்தில் காமத்தால் அல்லல்ப்பட்டத்தாக நேராக எழுதிவைத்துவிட்டார்.  இனி அதற்குவேறு விளங்கங்கள் கொடுக்க வேண்டியதில்லை. அவர் தன் மனதை கட்டுப்பதும் சத்திய சோதனைகளில் இறங்கினார். இதில் காமத்தை மட்டும் தள்ளி வைத்தார் என்று விவாத்திப்பது அர்த்தமில்லாதது. காமமும் அவரின் சத்திய சோதனைக்குள் அடக்கப்பட்டது என்று கொள்வதுதான் இயல்பானது. அந்த முறையில் அவர் தன் உடம்புக்கு காமத்தை மறுத்து தனது மனத்தை சோதனைக்குள்படுத்தினாரே அல்லாமல் தந்திரிகள் போன்று அதை பிரஜோசனப்படுத்தினார் என்பது இயல்பல்லாதது.

 

 எனது கவலை நாம் தந்திரத்தை விளங்கிக்கொள்ள முயல்கிறோமா அல்லது  தந்திரத்திற்கு விளம்பரம் செய்ய முயல்கிறோமா என்பது விளங்கவில்லை என்பதாகும். அப்படியாயின் காந்திரி மாதிரி முறையாக தந்திரி என நிரூபிக்கப்படாத விலாச நபர்களை இழுத்துவந்து தந்திரத்தை ஆராயாமல் பல வழிகளில் தந்திரத்தை ஆராய முடியும். தந்திரியாக நிரூபிக்கப்படாத  காந்தியை அவர் தந்திரி என்று நிரூபித்து முடிக்க, தந்திரத்தின் அடிப்படைகளையே மாற்றுகிறோம். இப்படியா நாம் தந்திரத்தை விளங்கிகொள்ள முயல்கிறோம்.? :(

 

கிருஸ்ணன், இராமன் மாதிரியே கிளீன் ஆன ஒரு திராவிடன். வியாசர், புத்தர் காலங்களில் திராவிட வேதமான இருக்குவேதம் மதம் மாற்றப்பட்டு, ஆரியமதமானது போலவே கிருஸ்ணனுமும் வியாசர் காலத்தில் கடுமையான ஆரிய மத மாற்றத்திற்கு உள்ளானான். ஆனால் சிவன், முருகன், கிருஸ்ணன், கொற்றவை அல்லது காளி நால்வரும் திராவிட மதத்தினரே.  இதில் தந்திரம் வடநாட்டில் மட்டுமிருந்த திராவிடமதம். திராவிட இந்துமதம் தந்திரத்தில் இருந்து பலவற்றை கடன் வாங்கியது. யந்திரங்கள் கீறி கோவில்கள் கட்டுவதும், வழிபடுவதும் ஆரியர் வரமுன்னர் தந்திரத்தில் இருந்த வழிபாட்டுமுறைகள். அவை இன்றைய இந்து சமத்தில் முக்கியமானவை. இது ஆரிய றிச்சுவல்கள் இந்து மத்தத்தில் புகும் போது, அது ஆரியாமா, தந்திரமா என்று அடையாளம் தெரியாமல் புகுந்திருக்கலாம். அல்லது ஆரியத்திற்கு  முன்னரே எல்லை கடந்து வந்திருக்கலாம். ஆனால் தவத்தையும், தியானத்தையும் போதித்த பழைய திராவிட இந்து மதம், யந்திரம் கீறுவதில் நம்பிக்கை வைத்திருக்குமா என்பது கேள்வியே. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதித்ய இளம்பிறையன், மல்லை, இரண்டு பேருமே, அழகாக விவாதத்தை நகர்த்திக்கொண்டு போகின்றீர்கள்!

 

இது வரை, கேள்வி ஞானத்தில் இருந்தவற்றை, ஆழமாக இருவருமே தொட்டுச் செல்கின்றீர்கள்!

 

இந்த விவாதத்தைத் திசை திரும்ப விடாது, தொடர்ந்து செல்லுங்கள்!

 

மிகவும் ஆர்வத்துடன், பின் தொடருகின்றேன்! :D

Posted

நல்ல பதிவுகள், தொடருங்கள். காம ம் ஆசையின் ஒரு வெளிப்பாடே, ஆசையை அடக்கியவன் காமத்தையும் அடக்கலாம், காமத்தால் முன்னேற்ற வழியை காணலாமென்றால் சாகும்வரை முடியாது. எதுவும் அளவுடன் இருந்தால் நன்று. 

 

நம் முன்னோர்கள் தமக்கு அன்று கிடைத்த வழியில் காமங்களை வெளிப்படுத்தி ஆவணமாக்கினார்கள், இன்று பல வழியில் ஆவணமாக கிடைக்கின்றது.

 

காந்தியென்ற பாவி செய்தது இருட்டில் பல திருவிளையாடல்கள், வெளியில் தெரியாமல் முடிமறைத்தவர்.

Posted

கள்ளச் சாமியள் எல்லாம் கடவுளின் வழியா காமத்தைக் காணுறானுகள். :icon_idea:
காமத்தின் வழியா கடவுளைக் காண்பது என்டு சொல்லுறது உந்த சிவலிங்க மாற்றர்தான் போல கிடக்கு. :wub::lol:
ஆனா காமம் வந்தா கடவுளா ஞாபகத்தில வருவாரு. :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.