Jump to content

காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?


Recommended Posts

Posted

கள்ளச் சாமியள் எல்லாம் கடவுளின் வழியா காமத்தைக் காணுறானுகள். :icon_idea:

:D  :D  :D

  • Replies 69
  • Created
  • Last Reply
Posted

கருத்துகளுக்கு நன்றி மல்லை, புங்கை, சாம்பவி, ஆமிக்காரன் மற்றும் தமிழ்சூரியன்.

கட்டுரையின் நோக்கம் கருதி காந்தியை கொஞ்சம் தள்ளி வைத்து விடலாம் என்று எண்ணுகிறேன் :)

பல பேர் தந்திரம் என்றாலே காமம் சார்ந்தது மட்டுமே என்று எண்ணுகின்றனர். அடிப்படையில் தந்திரம் பல்வேறு கூறுகளைக் கொண்டது. உலகம் முழுவதும் வியாபித்துக் காணப்படுகிறது. இந்து மத தந்திரம், புத்த மத தந்திரம், ஜென் மத தந்திரம்,சீக்கியம், மேற்கிந்திய தந்திரம் என பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக பயிற்சிக்கப்படுகிறது. தந்திரத்தின் ஒரு கூறே யோகம்(yoga).

யோகம் தந்திர வழிமுறையின் கூறு எனக் காரணம் என்ன ?

யோகாவைப் பற்றி தெரியவேண்டுமெனில் தந்திர மதம், வேத மதம் இவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி கொஞ்சம் தெரிய வேண்டும்.

தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைய நகரம் மெஹெர்கர். இதன் காலம் கி.மு.7000 (http://en.wikipedia.org/wiki/Periodization_of_the_Indus_Valley_Civilization) இந்நாகரீகத்தின்/ குடியேற்றத்தின்  எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இதுதான் ஆசியாவின் வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஆசியாவின் மிகப்பழைய மண்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன. சிந்து சமவெளியில் உள்ள ஹரப்பா மொகெஞ்சதாரோ வின் காலம் கி.மு. 5000. ஹரப்பா மொகெஞ்சதாரோவை விட 2000 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டது மெஹெர்கர். மெஹெர்கரில் பேசப்பட்ட மொழி பிராகுயி(Brahui) எனவும் சிந்துவெளி நாகரிகத்தில் பேசப்பட்ட மொழியின் நேர் வழித்தோன்றலாக பிராகுயி இருக்க கூடும் என்பது வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.  பிராகுயி மொழி திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தது.  இந்த மொழி அப்படியே தமிழ் மொழியை ஒத்து உள்ளதாக மொழி அறிஞர்கள் கூற்று.

ஹரப்பா மொகெஞ்சதாரோவில் தந்திரம் தொடர்பாக காணப்படும் முக்கியமான சிலைகள்

1. லிங்கம்
2. யோனி தெரிய அமர்ந்துள்ள சக்தி அல்லது பெண் தெய்வம்
3. பசுபதி நிலையில் உள்ள சிவன் அல்லது மிருகங்கள் சூழ  யோகி நிலையில் உள்ள ஒரு சிலை

முதல் இரண்டும் தந்திர முறை வழிபாடு சிந்து சமவெளியில் இருந்ததை  சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்துகிறது. மூன்றாவது சிலையை ஒட்டி சில சந்தேகங்கள் நிலவுகின்றன. தொல்லியல் துறை நிபுணர் ஜான் மார்ஷல் இதை பசுபதி வடிவில் உள்ள சிவன் என்று கூறினார். ஆனால் தற்போதுள்ள ஹரப்பா மொகெஞ்சதாரோ திட்டக்குழு தலைவர் இது ஒரு யோக நிலையில் உள்ள சிலை என்று கூறுகிறார். பசுபதி நிலை என்றால் மூன்று முகம் இருக்க வேண்டும் ஆனால் இது அப்படி தெரியவில்லை என்பது பல ஆய்வாளர்களின் கூற்று.
IndusProtoSiva.png
பசுபதி சிலையை ஏன் ஆரிய நாகரீகம் என்று சொல்ல வேண்டும்?

ரிக் வேதத்தில் கால்நடைகளின் தலைவனாக பசுபதியை குறிப்பிடுகிறார்கள். ஹரப்பா மொகெஞ்சதாரோவில் காணப்படும் சிலையும் மிருகங்கள் சூழ உள்ளதால் இதை பசுபதி எனக் குறிப்பிட்டு இது வேத நாகரீகம் என்ற ஒரு கூற்றும் உண்டு.

நான்கு வேதத்தை எடுத்தால், காலத்தால் முற்பட்டது ரிக் வேதம் என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ரிக் வேதத்தில் "தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம், நல்ல மழை, நல்ல விளைச்சல், அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களை போற்றும் நோக்கிலே அமைந்தவை". இந்த வேதத்தில் யோகத்தில் முக்கியமான ஆசனம் பற்றியோ, சுவாசம் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. கடைசியாக தொகுக்கப்பட்ட அதர்வண வேதத்தில் தான் யோகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.மு 7000 அளவில் மெஹெர்கரில் தந்திரம் வழிபாட்டில் இருந்துள்ளது. இப்பொழுது உள்ளது போலவே அப்பொழுதும் சிலர் யோக வழிபாட்டையும், சிலர் பாலியல் தொடர்பான வழிபாட்டையும் மேற்கொண்டுள்ளனர். அது கி.மு 5000 அளவில் யோகிகளின் அரசன் என அழைக்கப்படும் சிவனால் நெறிப்படுத்தப்படுகிறது. அப்பொழுது வேதம் என்பது கிடையாது. கி.மு 3000 ஆண்டுகளில் தான் அதர்வண வேதம் தொகுக்கப்படுகிறது.  ஆக சிந்து சமவெளியில் போற்றப்பட்ட மதம் தந்திரம். அதன் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமே யோகம்.

யோகம்(யோகா) ஆரியர்களால் உருவாக்கப்படவில்லை / பயிற்சிக்கப்படவில்லை மாறாக இது தந்திரிகளால்(யோகிகளால்) உருவாக்கப்பட்டு பயிற்சிக்கப்பட்டது. யோகிகள் சாதியத்தை மறுப்பவர்கள், பூஜை புனஸ்காரங்களை வெறுப்பவர்கள். வேதே புரோகிதர்கள் சாதியத்தை ஆதரிப்பவர்கள்,  பூஜை புனஸ்காரங்களை போற்றுபவர்கள்.

இந்து மத யோகாவைப் பற்றி முதன் முதலில் "கத யோகா(Hatha yog)"  என்ற நூலை எழுதியவர் ஸ்வத்மரம. இவர் ஒரு யோகியே. தமிழ்ச் சித்தர்கள் எல்லாம் யோகிகளே அவர்கள் வேத புரோகிதர்கள் கிடையாது.

யோகாவைப் பற்றி கிட்டத்தட்ட என்பது புத்தகங்கள் எழுதிய சத்யானந்த சரஸ்வதியும்(founder of the Bihar School of Yoga), புத்த யோகா ஆசிரியுருமான லாமா யெச்சியும்(Lama Yeshe) யோகாவை இது ஒரு தந்திர முறை என்றே கூறுகிறார்கள். மேலும் சத்யானந்த சரஸ்வதி கூறுகையில் “இப்போது உள்ள இந்து மதம் தந்திரத்தை அடிப்படையாக கொண்டதே அதிகம் பேர் நினைப்பது போல் இது வேத முறையை கொண்டதல்ல”.

பிரபாத் ரஞ்சன் சர்க்கார்(http://en.wikipedia.org/wiki/Prabhat_Ranjan_Sarkar) கூறுகையில் நவீன இந்தியாவின் அடிப்படையான / இயற்கையான வழிபாட்டு முறை தந்திரம் தான் ஆனால் வெளி உலகுக்கு அது வேத முறையில் இருந்து வந்தது போல் காட்டப்படுகிறது.

ஆரிய குடியேற்றம் உண்மையிலே நிகழ்ந்து என்பதை மரபணு சோதனை மூலம் Dr. ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் நிருபித்து உள்ளார். அவரது பேட்டியை இங்கு காணலாம். http://www.rediff.com/news/2002/nov/27inter.htm

 

அவரது ஆராய்ச்சியின் முடிவு இதுதான்..

 

மொழிக் குழுமம்          இனம்                     இந்திய குடியேற்றம்     மதம்
ஆஸ்ட்ரலாய்ட்              ஆஸ்ட்ரலாய்ட்     கி.மு 60,000                       ஆன்மா கோட்பாடு
திராவிடன்                       திராவிடன்            கி.மு 10,000                        தந்திரம்
சீன-திபெத்தியன்            மங்கோலியன்     கி.மு 10,000 – 8000            தந்திரம்
இந்தோ-ஐரோப்பியன்    காக்கேசியன்       கி.மு 6000 – 4000               ரிக் வேதம்
 

  • 4 weeks later...
Posted

நண்பர்களுக்கு வணக்கம்....
இது ஒரு நல்ல பதிவூ....தொடர்ந்தும் உரையாடக் கூடியது....
எனக்கும் பங்களிக்க விருப்பம்.... ஆனால் நேரம் ஒரு பிரச்சனை...
 

காமத்திலிருந்து கடவூளுக்கு என ஓசோவின் தமிழ் நுhல் ஒன்று உள்ளது... இது உண்மையிலையெ from sex to super consciousness என்பதை தவறாக மொழிபெயர்த்திருக்கின்றார்கள்...
உண்மையிலையே காமத்திலிருந்து உயரந்த விழிப்பு நிலைக்கு என வந்திருக்க வேண்டும்....
இன்னும் பல முணர்பாடுகள் தவறான விளக்கங்கள் உள்ளன....
நேரம் கிடைக்குமு; பொழுது எனழுதுகின்றேன்...
காமத்தினுடுhக கடவூளைக் காண முடியாது...
ஆனால் கடவூள் தன்iமையை உணரலாதம் என்பதே ஓசோவின் போதனை...

இதை ஒரு நுhலகா "நான் ஒரு கடவூள்" என வெளியிட்டிருக்கன்றேன்....

பார்க்கவூம் நன்றி

Posted

காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....


--------------------------------

 

ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

 

http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

 

 

Posted

 

காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....

--------------------------------

 

ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

 

http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

 

வேறு வழியால் கடவுளை கண்டவர்கள் எவரும் இல்லை. அப்படிக் கண்டவர்கள் எவரும் இருந்தால் சொல்லுங்கள்.

காமம் ஒன்றே கடவுளைக் காண்பதற்கான வழி. அவ்வழியில் போகும்போது நீங்களே கடவுளாகின்றீர்கள். எமது தாய்தந்தையர் கடவுளாகி எம்மைப் படைத்தனர் நாங்கள் கடவுளாகி எமது பிள்ளைகளைப் படைக்கின்றோம். கடவுள் மனிதனை இப்படித்தான் படைகின்றரார். கடவுள் என்பது இவ்விடத்தில் காமம் என்னுமொரு இடத்தில் வேறு வடிவமாக இருக்கின்றது. ஒரு மின்கலத்தில் + - இருக்கின்றது அது இரண்டும் இணையும் இடம் கடவுள், கடவுள் அங்கே வெளிச்சத்தைப் படைகின்றார். இப்படியாக கடவுள் எங்கும் எதிலும் நிறைந்து இருக்கின்றார். இவற்றை எல்லாம் சிந்தித்துத்தான் காம நிலையை குறிப்பிடும் சிவலிங்கம் எமது முழுமுதற் கடவுள் வடிவமாக இருக்கின்றது. தனித்த ஒரு நிலை கடவுள் இல்லை. எதிலும் இணையும் நிலையே கடவுள், அதிலிருந்தே எல்லாம் பிறக்கின்றது. இதற்கு எதிரான வழியே ஆட்டுக்குள் மாட்டை விடும் வழி.

Posted

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

 

ஆனால், நீங்கள் காமம்தான் உச்சம் =கடவுள் என்று நினைத்தால், ஜமாயுங்கோ.

 

ஓஷோ ஒர் கோர்ப்பரேற் மோசடிச் சாமியார்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் புத்திசாலியாகவும் படித்தும் இருந்ததால், படித்தவர்களையும் ஏமாற்ற முடிந்தது/முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புணர்தலின் உச்ச நிலையை அடையும் நிலையில், தற்காலிகமாக, மனதின் உணர்வுகள் அனைத்தும் ஒரு நிலைப்படுகின்றன! :o

 

இந்த நிலை சில வினாடிகள் மட்டுமே நீடிக்கின்றது!

 

இந்த நிலையானது, ஞானிகள் கூறுகின்ற 'பரமானந்த நிலையை' ஒத்திருக்கின்றது என்று ஒரு கருத்து உண்டு!

 

ஒருவரது மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும், காமத்துக்கும் உள்ள 'தொடர்பு' இவ்வளவும் மட்டும் தான்! 

 

காமம் என்பது, மேலும் மேலும் இச்சையைத் தூண்டுமேயல்லாது, இச்சைகளைத் துறந்து, மேல்நிலை நோக்கிச் செல்லுவதற்கு உதவாது என்பது தான் எனது கருத்தாகும்!

Posted

காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....

--------------------------------

 

ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

 

http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

 

சோறு - வயிற்றுப்பசிக்கு, காமம் - உடற்பசிக்கு. இவை இரண்டையும் மனத்தை அடக்குவதன்மூலம் கட்டுப்படுத்தலாம், ஆனால் நிறுத்தமுடியாது. ஆதாரம் என்னிடம் இப்போது இல்லாவிடினும் படித்ததில் சேதாரமின்றி என் மனதில் பதிந்தது.

காமத்தால் கடவுளை அடையமுடியுமெனில், திருமணமானபின்னும் எதற்காகக் கோவிலுக்குச் செல்கிறோம்? இருக்குமிடத்திலேயே கடவுளை அடையலாமே....?

 

Posted
தாந்திரீகத்தில் உள்ள சில நன்மைகள்:
 
ஒரு விசயத்தை ஒருவர் செய்வதை விட இருவர் சேர்ந்து செய்யும் பொழுது இலக்கை அடையும் சாத்தியம் அதிகம்.
 
ஆண் பெண் இணைவு இயற்கையானது. மிகவும் நெருக்கமான இணைவு. ஆன்மீக பாதையில் இருவரும் பலவற்றை பகிர்ந்து ஒருமுகமாக ஒருமனத்தோடு ஒருவருக்கு ஒருவர் துனையாக பயனிக்கலாம்.
 
உடல், மனம், சிந்தனைகள் இணையும் போது எத்தகைய ஆன்மிக பலம் !
 
தனியே சாதகம் செய்யும் பொழுது பலவிதமான challenges இற்கு ஒருவர் முகம் கொடுக்க வேண்டிவரும். இதில் பலர் தோல்வி அடைந்து சாதகத்தைக் கைவிடும் நிலைக்கு செல்வர். 
 
ஆனால் தாந்திரீகத்தில் நல்ல துணை வாய்க்கும் போது ஒருவருக்கு ஒருவர் துணையாக challenges ஐ எதிர்கொள்ள முடியும். உடல் எல்லையைத் தாண்டிய ஆன்மீக நிலைய அடையக்கூடியதாக இருக்கலாம்.
 
இங்கு முக்கியமானது இருவரினதும் ஆன்மீக நிலை. [ spiritual state ]
Posted

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

 

ஆனால், நீங்கள் காமம்தான் உச்சம் =கடவுள் என்று நினைத்தால், ஜமாயுங்கோ.

 

 

ஆன்மீக நிலையை அடைய வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு மனிதர்கள் பலவித வழிமுறைகளைக் கையாண்டனர். அகோரிகள், கபாலிகர்கள், வேதமோதுபவர்கள், யோகிகள்....இன்னும் பல வடிவம். இவற்றுள் நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட வழிபாட்டு முறையே தந்திரம். இந்த  தந்திர முறையில் நம் முன்னோர்கள் கடவுள் என்று வழிபட்டது பாலியல் உறுப்புகளையே .... அதை ஆயும் நோக்குடன் தான இந்தக் கட்டுரை எழுதப்பட்டது...

Posted

புணர்தலின் உச்ச நிலையை அடையும் நிலையில், தற்காலிகமாக, மனதின் உணர்வுகள் அனைத்தும் ஒரு நிலைப்படுகின்றன! :o

 

இந்த நிலை சில வினாடிகள் மட்டுமே நீடிக்கின்றது!

 

 

இந்த ஒரு நொடி மட்டும் இருக்கும் நிலையை எப்படி நீட்டிப்பது ?? அதை நீடிக்க என்ன செய்ய வேண்டும் ? அதை நீடிப்பதால் என்ன பலன் ??? இந்தக் கேள்விகளுக்கான பதிலே தந்திர வழிபாடு.

 

ஒழுக்கம் பற்றிய இன்றைய புரிதல்களை ஓரம் கட்டிவிட்டு சற்று உற்று நோக்குவோமானால் தந்திரத்தின் எல்லைகள் விரியும்..... 

Posted

நட்புடன் நண்பர்களுக்கு வணக்கம்.
நாம் எல்லாவற்றையூம் அரைகுறையாகவே புரிந்து வைத்திருக்கின்றே ம்.

ஆனால் எழுதும் பொழுது முழுமையாக அறிந்தவர்கள் போல எழுதுகின்றே ம். செயற்படுகின்றே ம். ஆகவேதான் விளைவூகள் எதிர்மறையாக இருக்கின்றன.

இது நமது போராட்டங்களுக்குமு; பொருந்தும்.

 

நான் ஓசோவை மொக்குத்தனமாக நம்பி பின்பற்றவில்லை...
அவர் கூறியதை புரிந்து கொள்ள முயற்சித்தேன். அதை அனுபவத்தில் அறிய முயற்சித்தேன்.

 

பெரும்பாலானவர்கள் கடவூளையூம் கடவூள் தன்மையையூம் ஒன்றாகப் போட்டு குழுப்புகின்றீரு;கள்.
கடவூள் என்பது ஒரு கற்பனை.
கடவூள்  தன்மை என்பது நம்மால் புரிய முடியாத வெளிப்படுத்த முடியாத  ஒரு உணர்வூ. அனுபவம்.

இதை தனியாக முயற்சிப்பதனுடாகவூம் அறியலாம்.
இணைந்தும் அறியலாம். அது அவரவர் ஆற்றலைப் பொருத்த விடயம்.
 

எதையூம் அடக்குவதனாலோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதனாலோ புரிந்தோ அறிந்தோ கொள்ள முடியாது.
நமது விழிப்பு நிலையையூம் பிரக்ஞையையூம் வளர்ப்பதன் மூலம் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியிருப்பதையூம் ஆழமாகப் புரிந்து கொள்ளலாம்.
 

காமத்தின் உச்ச ஓகாசத்தில் பரவசநிலையில் நம:து தன்முனைப்பு இல்லாது போய்விடுகின்றது.... நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும்  துடிப்புடன் இயங்குகின்றன.... மனதில் எண்ணங்கள் இல்லாமல் செல்கின்றது..
இவ்வாறான நிலையை காமத்தினுடாகவூம் அடையலாம்..
தியானத்தினுடாகவூம் அடையலாம்.
யோகாவினுடாகவூம் அடையலாம்.
தெரிவூ நம்முடையது.

 

ஆனால் காமத்தினுடாக அடைய  சிறிது கணமே; நிலைத்திருப்பதால் சிற்றின்பம் என்கின்றே ம். ஏனெனில் உடனடியாக பழைய மனநிலைக்கு தன்முனைப்புடன் வந்துவிடுவோம்.

ஆனால்தியானதினுடாக அடையூம் பொழுது நமக்குள் உருவாகின்றது... வளர்சின்றது.... எதிலும் நாம் தங்கியிருக்கவில்லை....ஆகவெ பேரின்பம் எனப்படுகின்றது.

 

இந்தியாவின் கஜிரோ கோவில்களுக்கு சென்றிருக்கின்றே;ன.
அதன் வெளியே நீங்கள் அறிந்தபடி எல்லாவிதமான உடலுறவூ மன இச்சைகள் ஆசைகள் என்பன சிலைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலின் உள்ளே ஒன்றுமில்லை. வெறுமையான இடமே இருக்கின்றது. சில கோயில்களில் ஊச்சியிலிருந்து ஒளி வருகின்றது.
இதன் அர்த்தம் நமது மன ஆசைகளை; இச்சைகளை அனுபவித்து அல்லது புரிந்து கொள்வோமானால் நம் மனதிலிருந்து காய்ந்த இலைகளால உதிர்ந்து கொட்டிவிடும்.
அப்பொழுது நம்மை; நாம் அறியலாம் என்கின்றனர்.
 

ஆனால் சமூகம் ஆதிக்க கருத்துக்கள் நம்மை நாம் அறிவதற்கு தடையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக காமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அது தொடர்பான எதிர்மறை பார்வையை நமக்குள் விதை;துள்ளது. ஆகவே காம உறவில் குற்றவூணர்வில்லாமல் சுதந்திரமாக இயங்க முடியாதுள்ளது. இவ்வாறான குற்ற உணர்ச்சிகளை பயன்படுத்தி சமூக ஆதிக்க சக்திகளும் மத நிறுவனங்களும் தாம் விரும்பியபடி நம்மை வழிநடத்துகின்றனர்.
 

இதைப் புரிந்து கொண்டால் தெரிவூ நம்முடையது.
நாம்  மந்தைக் கூட்டங்களாக பின்தொடரப்போகின்றே மா...
அல்லது சுதந்திரமான மனிதர்களாக கூட்டுறவூடன் இணைந்து  செயற்படப்போகின்றே மா....
தெரிவூ செய்யூங்கள்....
நன்றி

Posted

காமத்தின் மூலம் குழந்தையை உருவாக்கி படைப்புத்தொழிலைச் செய்வதனால் நாங்களே கடவுள் ஆகிறோம்.

அதுதான் உண்மை :wub::icon_idea::lol:

Posted

காமத்தின் மூலம் குழந்தையை உருவாக்கி படைப்புத்தொழிலைச் செய்வதனால் நாங்களே கடவுள் ஆகிறோம்.

அதுதான் உண்மை :wub::icon_idea::lol:

hahaha :D  :D

Posted

இனிய நண்பர்களே,

 

காமம் எனும் சொல், இன்றைய காலத்தில் “கலவி” என்பதுடன் பெரிதும் சேர்ந்தே இருக்கிறது. இது காலத்திரிபு.

 

மேலும், எளிமையும் தூய்மையுமான உள்ளம் ப்ரபஞ்ச மகா சக்தி உறையும் ஆலயம். இதற்கு தந்திரம் எதற்கு? மந்திரம் எதற்கு? உள்ளத்தில் எளிமையையும் வாக்கினில் தூய்மையையும் வெறும் வார்த்தைகளில் அன்றி, வாழ்க்கையில் கடைப்பிடித்து பாருங்கள். இயற்கையின் மகாசக்தியை நீங்களே உணர்வீர்கள். எழுத்திலோ, வார்த்தைகளிலோ அதை விபரிக்க முடியாது.

 

நூல்களை வாசித்தும், மந்ர தந்ரங்களால் பூசித்தும் காண்வொண்ணா மகா சக்தியை திருப்புகழிலும் அருணகிரியார் பாடியுள்ளார்.

 

தலம் : திருச்சிராப்பள்ளி

 

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

 

 

ம்.

நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்தும், பூரித்தும் கும்பகம் செய்யும் யோகியர் கூட காண வொண்ணா சக்தி.

 

மேலும், யோக அப்பியாசங்களை விருப்புடன் பழகுவோர் எளிமையாக இருத்தல் வேண்டும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. இதையே பின்வரும் பாடல் அழகாக தருகிறது. இதில் தமிழின் அழகை பாருங்கள்:

 

“ஓடி  ஓடி  ஓடி  ஓடி  உட்கலந்த ஜோதியை

         நாடி  நாடி  நாடி  நாடி  நாட்களும் கழிந்துபோய்

வாடி  வாடி  வாடி  வாடி  மாண்டுபோன மானிடர்

        கோடி  கோடி  கோடி  கோடி  எண்ணிறந்த கோடியே

 

காணவேணும்  என்றுநீர்  கடல்மலைகள் ஏறுவீர்

        ஆணவமதல்லவோ   அறிவிலாத மூடரே

வேணுமென்று  ஈசர்பாதம்  மெய்யுளே  விளங்கினால்

       காணலாகும் நாதனை கடந்து நின்ற ஜோதியே

 

புத்தகங்களைச்  சுமந்து  பொய்களைப்  பிதற்றுவீர்

      செத்திடம்  பிறந்திடம்  தெங்கனென் றறிகிலேர்

அத்தனைய   சித்தனை   யறிந்துநோக்க வல்லீரேல்

     உத்தமத்து ளாயஜோதி  யுணரும்யோக  மாகுமே

 

நாலுவேத மோதுவீர்  ஞானமென்று  சொல்லுவீர்

     பாலினோடு  நெய்கலந்த  பான்மையை  யறிவிரோ

ஆலமுண்ட  கண்டனு  மகத்துளே  யிருக்கையில்

    காலனென்று சொல்லுவீர்  கனாவிலு  மங்கில்லையே.

 

அன்புடன்

- ஈழத்திருமகன் -

  • 3 weeks later...
Posted

நண்பர்களுக்கு ஓசோவின் பின்வரும் ஆங்கில சொற்பொழிவைக் கேட்டால்...
காமத்திற்கு; தியானத்திற்குமான உறவைப் புரிந்து கொள்ளலாம்...
நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் சரி! ஆகக்குறைந்தது ஒரு தாந்தரிக யோக முறையைப்பற்றியாவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக யாராவது விளக்கலாமே. பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஒண்ணுமே புரியலே காமத்தின் போது ஏன் கடவுளை நினைக்கணும் :(  ,அவரைப் பாக்கிறதுக்கு தானே

தனியா கோயில் கட்டியிருக்கு

Posted

எனக்கு ஒண்ணுமே புரியலே காமத்தின் போது ஏன் கடவுளை நினைக்கணும் :(  ,அவரைப் பாக்கிறதுக்கு தானே

தனியா கோயில் கட்டியிருக்கு

அந்தக் கோயில் சிலைகளில் ஏன் காமக் குறியீடுகள் உள்ளன? ஏன் லிங்கத்தையும், யோனியையும் வழிபடுகிறார்கள்? இந்தக் கேள்வி உங்களுக்கு என்றாவது எழுந்தது உண்டா? தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின் கட்டுரையை ஒருமுறை படிக்கவும் :)

எல்லாம் சரி! ஆகக்குறைந்தது ஒரு தாந்தரிக யோக முறையைப்பற்றியாவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக யாராவது விளக்கலாமே. பிளீஸ்.

 

விளக்கலாம் தான். அப்புறம் என்னையும் செக்ஸ் சாமியாருன்னு சொல்லிடுவங்கனு ஒரு பயம் :)

  • 2 months later...
Posted

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே
(தொல்காப்பியம், புற. 27)

கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம்.
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு
கடு>கடினம்
கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு

கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)

சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது.  லிங்க வழிபாடு சிவ வழிபாடாக மாற்றம் கொள்வதற்கு முன்னே ஆண்குறி வழிபாடு வேளாண்மையோடும் போரோடும் தொடர்பு கொண்ட இன்றியமையச் சடங்காக இருந்துள்ளது. தொல்காப்பியர் கந்தழி எனக் குறிப்பது ஆண்குறி வழிபாடே ஆகும் (கன்றாப்பூர் நடுதறி என அப்பர் கூறியது இதையே) . கந்தழி என்பது லிங்க வழிபாட்டை குறிப்பது என்று பல ஆய்வாளர்களால் முன்மொழியப்படுகிறது. அதையொட்டிய சில விவரங்கள்


"இந்த வழிபாட்டின் தொன்மையான பதிவுகள் வேதத்திலே காணப்படுகின்றன. ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் வேத மரபின் ருத்ரனுக்கும், லிங்க வழிபாட்டிற்குமான தொடர்பு குறித்து குறிப்பிடுகையில், “ஸ்தாணு – (வேர் சொல் ஸ்த – நிற்பது) -ஒரு கம்பம்- ருத்ரனின் குறியீடாகும். அது மேல்நோக்கி நிற்பதென்பது பிரபஞ்சத்தினூடே ருத்ரன் நெகிழ்வற்று நிற்பதைக் குறிப்பதுடன் விந்துவினை மேல்நோக்கி செலுத்துவதனையும் குறிப்பதாகும். ஸ்தாணு எனும் கம்பம் எனும் இந்த சித்திர உருவாக்கம், விறைப்படைந்த ஆண்குறியினை எதிர்மறையாக விலக்கிடும் (negation) முரணான (paradox) உருவாக்கமாகும்….ஸ்தாணுவின் செங்குத்தான தன்மை ருத்ர-சிவனின் யோகித்துவத்தின் குறியீட்டாகும். இந்த குறியீட்டு உருவக கம்பம் உயிரினை உருவாக்கும் விசைக்கும் அதனை விலக்கிக் கட்டுப்படுத்துவதற்கும் இடையிலான விறைப்பினைக் குறிப்பதாகும்.” என்கிறார். (க்ராம்ரிஸ்ச், The Presence of Siva,1981, பக்.119)

(பிற்கால) கிரேக்க புராணங்களிலும் பிரபஞ்சங்களின் ஊடாக நிற்கும் ஒளிமயமான த £ஜுவாலைகளாலான கம்பத்தினைக் குறித்து கூறப்படுகிறது. எர் எனும் புராணவீரன் அவனது சிதை எரியூட்டப்படுதற்கு சற்று முன்னர் உயிரளிக்கப்பட்டு வேறு சிலருடன் பிற உலகங்களுக்கு செல்கிறான். அப்பாதையில் அவனும் அவன் கூட்டத்தாரும் “ஒரு செங்குத்தான ஒளிமயமான கம்பம் போன்ற ஒன்று விண் உலகங்களையும் மண்ணுலகையும் இணைத்து சுழலவைப்பதாக” கண்டனர். (Book of the Republic, 10 ஆம் பாடல்) ஆனால் இந்த உருவாக்கங்கள், ரிப்பளிக்கில் ஏறுவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னதான பழமையான பழங்குடி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த பழம் இலக்கியங்களில் இந்த அச்சானது சுற்றிச்சுழலும் ஒரு அரைப்பு இயந்திரத்தின் அச்சாகும். பின்லாந்து தேசத்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்தைய நம்பிக்கைகளில் உலக சிருஷ்டி குறித்த தொன்மப்பாடலில் (kaleval) இந்த பிரபஞ்ச அச்சு வருகிறது. இப்பாடலில் அது ஸம்போ (Sampo) என அழைக்கப்படுகிறது. ஸம்போ என்பது முவ்வேர்களை பூமியிலும், ஆகாயத்திலும், சமுத்திரத்திலும் கொண்ட பிரபஞ்ச மரம். இது அதர்வண வேதத்தில் கூறப்படும் பிரபஞ்ச அச்சுக்கம்பமான ஸ்கம்பத்துடன் தொடர்புடையதாகும். அதர்வண வேதம் ஸ்கம்பத்தினை பூமியையும், ஆகாயத்தையும் ஆதாரமாக கூறப்படுகிறது."

source :http://www.tamilpaper.net/?p=3758

 

மேலும் இது பற்றிய விபரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.