Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமா வென்றார்!

Featured Replies

[size=5]ஒபாமா வென்றார்![/size]

[size=5] இன்னும் நான்கு வருடங்களுக்கு ஆட்சி செய்ய அமெரிக்கர்கள் அனுமதி அளித்துள்ளனர்.வாழ்க! ஒபாமா![/size]

http://www.cnn.com/

  • Replies 53
  • Views 4.2k
  • Created
  • Last Reply

[size=1][size=4]சற்று முன்னர் வெளியான முடிவுகளின்படி பதவியில் உள்ள அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் நான்கு வருடங்களுக்கு சனாதிபதியாக தெரியப்பட்டுள்ளார். [/size]

[size=4]தேவையான தொகுதி வாக்குகளை 270 (275 +) வென்று இவர் குடியரசு கட்சி வேட்பாளரான ரோம்னியை தோற்கடித்தார்.[/size]

[size=4]முதல் விவாதத்தில் தோற்ற ஒபாமா பின்னர் தன்னை சுதாகரித்தார். பலரும் இவர் வெற்றி பெறுவாரா? என வினவினார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக பொருளாதார வளர்ச்சி ஒபாமாவின் வெற்றிக்கு வழி சமைத்தது.[/size][/size]

[size=4]அமெரிக்க சனாதிபதி வரலாற்றில் இந்த தேர்தலில் அதிக பணம் செலவழிக்கப்பட்டது. அத்துடன் பதவியில் ஒரு சனாதிபதி எட்டு வீதம் அளவில் வேலையில்லா திண்டாட்டம் இருந்தும் வென்றார் என்ற சாதனையை முதல் முறையாக நிறுவியுள்ளார். [/size]

[size=1]

[size=4]இருந்தாலும் பல சவால்களை அவர் முகம் கொடுக்கவேண்டி வரும். [/size][/size]

[size=1]

[size=4]அத்துடன் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் தான் அடுத்த ஒபாமா அரசில் அங்கம் வகிக்க மாட்டார் என கூறி இருந்தார். எனவே யாரை இந்த முக்கிய பதவிற்கு ஒபாமா நியமிப்பார் என்பதில் பல உலக அரசியல் தங்கி உள்ளது. [/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு ஆட்களை வளைத்துப் போடும் சக்தி இருக்கின்றது. கிலாரி கட்சியில் இவருக்கு எதிராகப் போட்டி போட்டிருந்தாலும், இராஜங்க செயலாளர் ஆக நியமித்தார். அவ்வாறே இத் தேர்தலில், கிளிண்டன் ஒபாமா அதிபர் பதவிக்குத் தகுதி இல்லாதவர் என்றபோது, உடனே அவரை நிதி சேர்க்கும் பொறுப்பில் இணைத்து, தனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வைத்தார். கிளிண்டனின் பிரச்சாரமும் இவரது வெற்றியில் பங்காற்றியதை மறுக்க முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

Vino --

I'm about to go speak to the crowd here in Chicago, but I wanted to thank you first.

I want you to know that this wasn't fate, and it wasn't an accident. You made this happen.

You organized yourselves block by block. You took ownership of this campaign five and ten dollars at a time. And when it wasn't easy, you pressed forward.

I will spend the rest of my presidency honoring your support, and doing what I can to finish what we started.

But I want you to take real pride, as I do, in how we got the chance in the first place.

Today is the clearest proof yet that, against the odds, ordinary Americans can overcome powerful interests.

There's a lot more work to do.

But for right now: Thank you.

Barack

[size=1]

[size=4]அமெரிக்க அரசியல் சாசனப்படி ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் சனாதிபதியாக இருக்க முடியாது. எனவே அவர் பல செயல்திட்டங்களை துணிவுடன் எடுக்க முனைவர். இதில் பல வெளிநாட்டு கொள்கைகளும் அடங்கும். [/size][/size]

[size=1]

[size=4]அவுஸ்திரேலியாவிற்கு சென்ற ஒபாமா ஆசியாதான் உலக அரசியல்/பொருளாதார மையம் எனக்கூறி இருந்தார். அந்த நாட்டில் முதல் முறையாக ஒரு அமெரிக்க இராணுவ இருப்பையும் உறுதிப்படுத்தினார். எனவே ஆசியாவில் மேலும் பல மாற்றங்கள் நிகழலாம். அவை ஊடாக அமேரிக்கா தனது பொருளாதார, அரசியல், இராணுவ பலத்தையும் தக்க வைக்கலாம்.[/size][/size]

[size=1]

[size=4]ஆசிய மாற்றங்கள் எமது தாயக மக்கள் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... மகிழ்ச்சியான செய்தி. :)

ஒபாமாவுக்கு இன்றைய வெற்றி, கருத்துக்கணிப்புகளில் காட்டப்படாத வெற்றி. இதை ஒபாமா அலை என்றுதான் வருணிக்க வேண்டும். இறுதி நேரத்தில் போர்கள மாநிலங்களாக கருத்தப்பட்ட மாநிலங்களில் ரோமினிக்கு கிடைத்த தோல்வி எதிர்பாராதது. கபிங்க்ரன் போஸ்ட்(ஜனநாயகட்சி சார்பு) ஊடகம் கூட ஒபாமாவுக்கு 277 மட்டும்தான் கருத்துக்கணிப்பில் சொல்லியிருந்தது.

ரோமினி தனது முதலாவது விவாதத்தில் ஒரு சூதாட்டம் நிகழ்த்தியிருந்தார். அன்றைய நேரங்களில் ஒபாமா, கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையான அளவு முன்னணியில் இருந்தார். இதானால் அவர் விவாதத்தில் நல்ல முகத்தை காட்டி தனது முன்னணியை தக்க வைக்க விரும்பினார்.

ரோமினி வேட்பாளர் தேந்தலில், ஜிங்க் றீச், சாந்தோரம் போன்ற "ரீபாட்டி" ஆதரவு உடைய வேட்பாளர்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. இதனால் அவர் நடுப்பாதை எடுக்காமல் தீவிரவாதக்கருத்துகள் உதிர்த்திருந்தார். மேலும் போல்ரையன் போன்ற தீவிர வாதியை உப அதிபர் தலைவருக்கு தெரிந்தார். கருத்துக்கணிப்புகள், RNC,DNC மகாநாடுகள் முடிந்த பின்னர், புஸ்சின் பின்னர் அமெரிக்கர் இன்னமும் தீவிரவாதத்திற்கு தயாரில்லை என்பதை காட்டியது. ரோமினி இங்கேதான் தனது பரிசோதனையை அவிழ்த்துவிட்டார்.

விவாதத்திற்கு ஒரு கிழமைக்கு முன்னரே ரோமினி குழு தாங்கள் விவாதத்தில் வெல்ல முடியும் என்று எதிர்வு கூறினார்கள். அவர்கள் செய்த முடிவு, "ரீ பாட்டி" அங்கத்தவரை கைவிட்டுவிட்டு நடுப்பாதையை எடுப்பதுதான் அது. இது விவாதத்தில் ஒபாமாவுக்கு தான் எப்படி ரோமினியை விட வேறுபடுகிறார் என்பதை விளங்கப்படுத்த முடியாமல் தோல்வியை தந்தது. ஆனால் அந்த வெற்றிதான் ரோமினியின் இன்றைய பயங்கர தோல்விக்கு வித்திட்டுவிட்டது.

குடியரசுக்கட்சிக்கொள்கைகளை கைவிட்டுவிட்டு ஜனநாயக கட்சி கொள்கைகளை தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொண்டுவிட்ட ரோமினியை, நம்பத்தகாதவர் என்று ஓபாமா தாக்கத்தொடங்கிவிட்டார். கொள்கைகளில், ரோமினி எங்கும் அலைகிறார் என்று குற்றம் சாட்டினார். அடுத்த இரண்டு விவாத்திலும் ரோமினி சொல்வது உண்மையல்ல என்பது இலகுவாக நிரூபிக்கப் பட்டுவிட்டது. தீவிரவாத போல் ரையனின் பெயரே கடைசி நாட்டகளில் வெளியே சொல்ல முடியாதபடி ரோமினி நடுநிலைக்கு போய்விட்டர். "ரீபாட்டி" அங்கத்தவர்கள் தமது கட்சியில் நம்பிக்கை இழந்தார்கள்.

இன்று, ரோமினி, யாரும் எதிர்பார்க்காதவிதமாக புளோரிடா, வேஜினியா மாநிலங்களில் தோற்றுவிட்டர். இது புஸ்சுக்கு பின்னர் மக்கெயின் தோற்றதைவிட அதிக எண்ணிக்கை லாபத்துடன் இல்லை. அப்படியானால் புஸ் எதிர்ப்புடன் மக்கெயின் தோல்வியைவிட இது பெரிய தோல்வி.

4 வருடம் போயியும் ஓபாமாவுக்கு இன்னமும் பொருளாதாரத்தை இன்னமும் 2008 ஆண்டு தான் பதவி எற்ற நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. இந்த பொருளாதார பிரச்சனையால் அவர் மருத்துவ காப்புறுதி சட்டத்தை கூட சரியாக முடிக்க முடியவில்லை. போரில் வைத்த காலை இன்னமும் இழுத்தெடுக்க முடியவில்லை. இதை வைத்து ரோமினி, மக்கெயினை விட பெரிதாக பெரிதாக எதும் செய்ய முடியாமை குடியரசுக்கட்சியில் "ரீ பாட்டி"யினரை கட்டாயம் இக்கட்டனா நிலையில்தான் இனி போடும். அவர்கள் தோல்வியின் முழு பொறுப்பையும் தேர்தலில் நடந்த கொள்கை தடுமாற்றத்தின் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இப்போதைய நிலை 332 : 206. electoral college........ 51,203,368 : 51,010,064 Popular Votes

ரோமினி தனது இழப்பை ஒத்துக்கொண்டு தனது பேச்சை நடத்தினார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

07-obama-wife-600.jpg

வரலாறு படைத்தார் பாரக் ஒபாமா!.. அமெரிக்காவில் பெரும் கொண்டாட்டம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் பாரக் ஒபாமா.

நேற்று நடந்த வாக்குப் பதிவில் அவருக்கு கிட்டத்தட்ட 300 வாக்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர் அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ராம்னிக்கு இதுவரை 203 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து இருமுறை அதிபரானது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை. அந்த வகையில் மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையான புகழை ஒபாமா பெற்றுவிட்டதாக அமெரிக்க மீடியா வர்ணித்துள்ளது.

அமெரிக்க தேர்தல் முறை வித்தியாசமானது. பரந்துபட்ட நிலப்பரப்பு என்பதால், அங்கு நேர வித்தியாசம் உண்டு. அமெரிக்காவின் வட முனையான அலாஸ்காவுக்கும் கிழக்கு முனையான ஹவாயிக்கும் 6 மணிநேர வித்தியாசம் உண்டு.

கிழக்கில் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும்போது, மேற்கு மற்றும் வடக்கில் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது!

கிழக்கு மாகாணங்களில் ராம்னி ஆரம்ப வெற்றியைப் பெற்று வந்தார். ஆனால் நேரம் செல்லச் செல்ல, ஒபாமா வெற்றிப் பாதைக்கு வந்துவிட்டார்.

மேற்குப் பகுதியில் வாக்குப் பதிவு முடிந்த கையோடு எண்ணிக்கையை ஆரம்பித்துவிட்டனர். கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு முடிந்து எண்ணிக்கை நிலவரம் தெரிந்ததுமே ஒபாமா வெற்றி என சிபிஎஸ், என்பிசி சேனல்கள் அறிவித்துவிட்டன. ராம்னி ஆதரவு சேனல் எனப்பட்ட ஃபாக்ஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது ஒபாமாதான் அதிபர் என்று.

பாப்புலர் வாக்குகள் எனும் பிரிவில் ஒபாவுக்கும் ராம்னிக்கும் 1 சதவீத வித்தியாசமிருந்தது. ஆனால் அதிபராகத் தேவையான வாக்குகள் 270. இதில் ஒபாமா இதுவரை 280 வாக்குகள் வரை பெற்றுவிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னிக்கு 203 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

இன்னும் சில மாகாண வாக்குகள் வரவேண்டியுள்ளன. அவற்றையும் சேர்த்தால் ஒபாமாவுக்கு 300 வாக்குகள் வரை கிடைக்கலாம் என சேனல்கள் அறிவித்திருந்தன.

ஆனால் ஒபாமாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதால், அவர் வெள்ளை மாளிகையில் அடுத்த நான்காண்டுகள் அமர்வதை அனைத்து தரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன.

அதிபர் ஒபாமாவும், "இன்னும் நான்காண்டுகள் வெள்ளை மாளிகை வாசம்.. நன்றி வாக்காளர்களே" என செய்தி விடுத்தார்.

அவரது செய்தி வெளியான ஒரு நிமிடத்துக்குள் உலகமெங்கும் 1 லட்சத்துக்கும் அதிகமான முறை அதனை மறுபதிப்பு செய்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் 88000 முறை மறுவெளியீடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொண்டாட்டம்

ஒபாமா முன்னிலை என்று செய்தி வெளியாக வெளியாக கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன அமெரிக்காவில். அவர் வெற்றி பெற்றார் என்பதை அறிவித்ததும் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தெருக்களில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

சற்றுமுன்னர் ஒபாமா தனது வெற்றி பேச்சை பேசுனார். அது தேர்தல் பிரசார பேச்சைபோல் நீளமாக இருந்தது. நாட்டுக்கு நீங்கள் வாக்களித்து விட்டு உங்கள் கடமை முடிந்து விட்டது என்று போய்விடாதீர்கள். நாட்டுக்கு உங்கள் கடமையின் தேவை இருக்கிறது என்றார். தான் இரண்டு கட்சிகளுடனும் சேர்ந்து இயங்குவதாக வாக்களித்தார். தான் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றை நினைவுபடுத்தினார். தான் என்றும் இல்லாதாவாறு இன்று அமெரிக்காவில் நம்பிக்கையுடன் இருப்பத்தாகவும் கூறினார்.

இவர் இவ்வளவு காலமும் என்னத்தை புடுங்கினவர்.....இனியும் வந்து என்னத்தை புடுங்கப்போறார்....

[size=4]இவர் பதவியை ஏற்றபொழுது :[/size]

[size=4]- அமேரிக்கா மாதம் நாலு இலட்சம் வேலைகளை இழந்தது [/size]

[size=4]- அமேரிக்கா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தவண்ணம் இருந்தது [/size]

[size=4]- அமெரிக்க ஒரே நேரத்தில் இரண்டு யுத்தங்களை புரிந்தவண்ணம் இருந்தது [/size]

[size=4]இன்று [/size]

[size=4]- மாதம் ஒன்றரை இலட்சம் வேலை அளவில் உருவாக்கும் நிலை [/size]

[size=4]- எந்த புதிய யுத்தத்தையும் உருவாக்கவில்லை, ஈரான் மீது இதுவரை தாக்கவில்லை [/size]

[size=4]- அரபு எழுச்சி ஏற்பட்டபொழுது மக்கள் பக்கம் இருந்தார் [/size]

[size=6]ஒன்றாகவே உயர்வோம், ஒன்றாகவே தாழ்வோம்: ஒபாமா[/size]

[size=4]நாம் அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் ஒன்றாகவே உயர்வோம். ஒன்றாகவே தாழ்வோம் என அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்ற பின் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பராக் ஒபாமா குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் வெல்வதற்கு தேவையான தேர்தல் கல்லூரி வாக்குகள் 270 இலும் கூடுதலாக பராக் ஒபாமா பெற்றிருந்தார்.

புளோரிடா மாநிலத்தின் 29 வாக்குகளும் யாருக்கு என்பது தெரியாத நிலையிலும் ஒபாமா 303 தொகுதி வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். றொம்னி தொகுதி 206 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

வெற்றியீட்டியதன் பின்னர் பராக் ஒபாமா மேலும் உரையாற்றுகையில்,

'இந்த நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதற்கு நாம் சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புக்களையிட்டு மிட் றொம்னியுடன் பேசவுள்ளேன்.

கூடுதல் உறுதியுடனும் கூடுதல் உற்சாகத்துடனும் மீண்டும் வெள்ளை மாளிகை செல்லவுள்ளேன.

வரவு – செலவுத்திட்டக் குறையை குறைக்கவும் வரிவிதிப்பு நெறியை வகுத்துக்கொள்ளவும் குடிவரவு முறைமையை திருத்தியமைக்கவும் காங்கிரஸிலுள்ள குடியரசுக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்யப்போகின்றேன்' என்றார்.

இதேவேளை, எனது வழியில் உங்கள் நம்பிக்கைகளை நிறைவேற்றி நாட்டை முன்னெடுத்துச் செல்ல நான் விரும்பினேன். ஆனால் நாடு வேறு தலைவரை தெரிந்துள்ளது. எனவே அவருக்காகவும் இந்த நாட்டுக்காகவும் முழு மனதுடன் பிரார்த்திப்பதில் நானும் உங்களோடு சேர்ந்துகொள்கின்றேன் என மிட் றொம்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சனத்தொகைக்கேற்ப ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தில் கூடுதல் வாக்கைப் பெறுபவருக்கு ஒதுக்கிய முழுவாக்கும் போய்விடும். மற்றவருக்கு ஒரு வாக்குக்கூட கிடையாது. [/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/52167-2012-11-07-11-17-31.html

  • கருத்துக்கள உறவுகள்

ரொராண்டோவில் இருந்து பஸ்சில் போய் ரொம்னிக்காகப் பிரச்சாரம் செய்த சிங்களவர்கள் பாவம்.. :D

[size=4]நடைபெற்று முடிந்த அமெரக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பராக் ஒபாமாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52130-2012-11-07-06-42-58.html

[size=5]ஒபாமாவிற்கு பான் கி மூன் வாழ்த்து[/size]

[size=4]அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அமெரிக்காவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான நட்பு அடிப்படையில், ஒபாமாவுடனும், அவரது நிர்வாகத்துடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். சிரியா மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்னைகளில் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக கூறினார்.[/size]

http://tamil.yahoo.com/%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%AE-085200220.html

[size=5]வெற்றி பேச்சு : நேரம் இருந்தால் முழுமையாக கேளுங்கள் ( ~ 20 நிமிடங்கள் ) [/size]

[size=5]தேர்தலில் வெற்றியடையாத மிட் ரொம்னியின் பேச்சு [/size]

[size=6]ஒபாமாவின் கனவுகளுக்கு நான்கு ஆண்டுகள் போதாது![/size]

அமெரிக்காவின் அதிபர் கட்டிலில் மேலும் நான்கு ஆண்டுகள் இருக்கும் வாய்ப்பு பராக் ஒபாமாவுக்கு கிட்டியிருந்தாலும் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கிடைத்துள்ள மேலதிக நான்கு ஆண்டுகள் போதாது என்கிறார்கள் நிபுணர்கள்.

[size=2][size=4]ஒபாமா எடுத்துள்ள பணிகள் கூட்டிக் கழிக்கும் கணக்கல்ல சமுதாயப் பணியாகும், அவற்றை நிறைவேற்ற காலம் எடுக்கும்.[/size][/size]

[size=2][size=4]உதாரணமாக கியூபாவில் உள்ள குவான்ரநோமா சிறைச்சாலையை மூடுவேன் என்று சென்ற தேர்தலிலேயே கூறியவர் அதை மூட அவரால் முடியவில்லை.[/size][/size]

[size=2][size=4]ஈரானின் அணு குண்டு உருவாக்கச் சிக்கல் இருக்கிறது, அதற்கான பணிகள் என்னவென்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்க வேலையில்லாத் திண்டாட்டம் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.[/size][/size]

[size=2][size=4]இருப்பினும் கறுப்பர்களை பெருமளவில் இணைத்து தேசத்திற்கு மேலும் புதிய வலு கொடுக்க அவருக்கு அடுத்த நான்கு வருடங்கள் உதவும்.[/size][/size]

[size=2][size=4]ஒபாமா 330 வல்மான்களை பெற்று வெற்றியடைந்துவிட்டாலும் சர்ச்சைக்குரிய புளோரிடாவில் இன்னமும் வாக்கு எண்ணிக்கை முடிவடையவில்லை.[/size][/size]

[size=2][size=4]புளோரிடாவில் ஒபாமா 49.7 வீதமாகவும் றொம்னி 49.3 வீதமாகவும் தொடர்ந்து நெருக்கமாக உள்ளார்கள், தபால் வாக்களிப்பு இனிமேல்தான் எண்ணப்படவுள்ளது. [/size][/size]புளோரிடாவில் 22 வீதம் வெளிநாட்டு பின்னணி கொண்டவர்கள் இருக்கிறார்கள், அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் 8.8 வீதமாக இருக்கிறது.

[size=2][size=4]மறுபுறம் ஒபாமாவின் வெற்றி ஓரினச் சேர்க்கையாளருக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]பொதுவாக 6.7 வீதம் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தால் ஒருவர் இரண்டாவது தடவையும் அதிபராக வர இயலாது, ஆனால் பழைய அதிபர் ரூஸ்வெல்டிற்கு பின்னர் 7.9 வீத வேலையின்மை நிலவுகின்ற போதும் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]கடந்த நான்கு ஆண்டு காலம் ஒபாமா எடுத்த பணிகளின் தொடர்ச்சியை ஓரளவு நிறைவு செய்ய கிடைத்துள்ள நாலாண்டுகாலமும் ஓடி முடிந்துவிடும். [/size][/size][size=2][size=4]ஒபாமா அமெரிக்க மக்களை ஆறுதல்படுத்துவதிலேயே தனது வெற்றி உரையை பயன்படுத்தியுள்ளார், உலக நாடுகளின் அமைதியின்மை, பொருளாதார மந்தத்திற்கு பதில் கூறமாமலே தனது உரையை முடித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்க மக்கள் போல உலகத் தலைவர்களும் ஒபாமா சொல்வதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு அவருடைய உரை போதிய மகிழ்வு தந்ததாக தெரியவில்லை.[/size][/size]

[size=2][size=4]மறுபுறம் மிற் றொம்னி ரீபாட்டி இயக்கத்தில் தொடர்ந்தும் பலமிக்க ஒருவராக இருக்கிறார், அவருடைய அடுத்த கட்டம் என்னவென்பது தெரியவில்லை.[/size][/size]

[size=2][size=4]சேர்ந்தியங்க வரும்படி ஒபாமா அழைத்தாலும் அது சம்பிரதாயபூர்வமான வார்த்தையே அல்லாது உண்மையில்லை, ஆகவே மிற் றொம்னியின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]ஒபாமா பொருளாதாரம் பற்றி அதிகம் பேசினாலும் காலமும் செயலும் என்ற கணக்கை அவர் சரிவர புரிந்தது கிடையாது, அவருடைய அதிபர் பதவி மேலும் நான்கு ஆண்டுகள் மட்டும் ஓடும் ரயில்வண்டி, இரண்டு ஆண்டுகள் முடிந்தால் அது தளர் நடை பயில ஆரம்பித்துவிடும்.[/size][/size]

[size=2][size=4]ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகள் வீரியமாக பணியாற்றி உலகிற்கு ஒபாமா நன்மை செய்வார் என்று கருதப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]சென்ற தடவை 2008 ல் நடைபெற்ற தேர்தலில் கிடைத்தது போன்ற இலகுவான வெற்றி இந்தத் தடவை ஒபாமாவுக்குக் கிடைக்கவில்லை ஆகவே அவர் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக கோப்பன்கேகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கூறுகிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]மறுபுறம் றொம்னியின் தோல்வியால் தளர்வடைந்துள்ள றிப்பப்ளிக்கன் கட்சிக்குள் பெரும் புயல் இனித்தான் வீசப்போகிறது என்று ஸ்ரான்போட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் ஸ்ரயர் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]றிப்பப்ளிக்கன் கட்சியின் கொள்கைகளை விட்டு பல படிகள் வெற்றிக்காக றொம்னி இறங்கி வந்துள்ளார் இது கட்சியின் எதிர்கால வெற்றிகளுக்கு பெரும் தடையாகியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]றிப்பப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த நியூயோர்சி கவர்னரான கிறிஸ் கிறிஸ்டி, சாரா பெலின், போல் றயன் ஆகிய முன்னணித் தலைவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதே இப்போதுள்ள றிப்பப்ளிக்கன் கேள்வியாகும்.[/size][/size]

[size=2][size=4]தோல்வியை சந்தித்த கட்சி பல மாற்றங்களை செய்து புது இரத்தம் பாய்ச்சுவது வழமையாகும்.[/size][/size]

[size=2][size=4]வெற்றியும் சுமை தோல்வியும் சுமை என்பதே அமெரிக்காவின் இன்றைய பரிதாப நிலை இதை மாற்றுவதே ஒபாமாவின் முன்னுள்ள பணியாகும்.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=116673

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமே வென்று விட்டார் என்று சந்தோச‌ப்படுறீங்களே அப்படி என்னத்தை தமிழர்களுக்கு செய்யப் போறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் என்னத்தை செய்தாரோ ................ அதையே அடுத்த நான்கு வருடங்களிற்கும் செய்யப்போகின்றார். :D

ஒபாமே வென்று விட்டார் என்று சந்தோச‌ப்படுறீங்களே அப்படி என்னத்தை தமிழர்களுக்கு செய்யப் போறார்?

[size=4]அவரின் மனித உரிமை ஆலோசகராக தொடர்ந்தும் சமந்தா பொக்ஸ் அவர்கள் நீடிப்பது எமக்கு பல நன்மைகளை தொடர்ந்து தரலாம். அதாவது கடந்த ஐ.நா. மனித உரிமை தொடர் தொடக்கம் அடுத்த மார்ச் வரை அழுத்தங்கள் நீடிக்கும் [/size]

[size=1]

[size=4]ஒபாமாவின் ஐ.நா. பிரதிநிதி சூசன் ரைஸ் சூடான் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தென் சூடான் பிரிய காரணமானவர். அவர் நீடிப்பதும் நன்மையே. [/size][/size]

[size=2]

121107022544-09-world-election-1107-horizontal-large-gallery.jpg

[/size]

[size=5]Indian artist Sudaran Pattnaik adds final touches to his sand sculpture of Obama [/size]

[size=5]at Golden Sea Beach in Puri, India, on Wednesday.[/size]

[size=2]

121107022539-11-world-election-1107-horizontal-large-gallery.jpg

[/size]

[size=5]Kenyans prepare villagers for a mock vote for the U.S. presidential elections in Kogelo, [/size]

[size=5]where Obama's father was born and raised.[/size]

[size=2]

121107082353-13-world-reaction-1106-horizontal-large-gallery.jpg

[/size]

[size=5]Sarah Obama, step-grandmother to Obama, smiles during a press conference Wednesday [/size]

[size=5]in the hamlet of Kogelo in western Kenya after Obama's victory was announced.[/size]

  • தொடங்கியவர்

இவர் இவ்வளவு காலமும் என்னத்தை புடுங்கினவர்.....இனியும் வந்து என்னத்தை புடுங்கப்போறார்....

பழனி மலை ஒபாமாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதி அல்லாததால் அங்கு ஒன்றையும் புடுங்கவில்லை

:wub: :icon_idea:

Edited by BLUE BIRD

பழனி மலை ஒபாமாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதி அல்லாததால் அங்கு ஒன்றையும் புடுங்கவில்லை

:wub: :icon_idea:

முருகா.................... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.