Jump to content

குழிப்பணியாரம் அல்லது குண்டுத்தோசை


Recommended Posts

DSC_6750%2Bcopy.jpg

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப்

பச்சை அரிசி 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 2

பச்சைமிளகாய் 4

இஞ்சி 1 துண்டு

உப்பு, நல்லெண்ணை தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை:

புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து

அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு,

உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

----

குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால்

ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி

எடுக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இட்லிப்பொடியுடனும் (உண்டென நல்லண்ணை விட்டு) சாப்பிடலாம்

http://annaimira.blo...og-post_27.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

டிசெம்பர் விடுமுறைக்குச் செய்து பாப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி பட்டிருக்கின்றேன் நான் இதுவரைக்கும் சாப்பிட்டதாக ஞாபகம் இல்லை ..... இந்த முறையில் செய்து பார்ப்போம். :)

இணைப்புக்கு நன்றி ஈசன்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி ஈசன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை இடைக்கிடை வீட்டில்... செய்வோம். நன்றாக இருக்கும்.

இணைப்பிற்கு... நன்றி ஈசன்.

குழியைக் காணமே :)

இதுதான்... குழிப்பணியாரம் செய்கிற, சட்டி.

சட்டியிலை... தான், குழி இருக்குது. பணியாரத்திலை... குழி இருக்காது.

DSCF2312.JPG

Link to comment
Share on other sites

இதுதான்... குழிப்பணியாரம் செய்கிற, சட்டி.

சட்டியிலை... தான், குழி இருக்குது. பணியாரத்திலை... குழி இருக்காது.

சிலர் இதை அறிந்திருக்க மாட்டார்கள் எனவே குண்டுத்தோசை சட்டியின் படத்தையும் இணைப்போம் என்று நினைத்து பின் மறந்துவிட்டேன்.

நன்றி தமிழ்சிறி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bow kuli paneeyaaram super kukusa :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவை சாப்பிட்டுள்ளேன், நல்ல சுவை, செய்து பார்க்கனும், நன்றி ஈசன்

Link to comment
Share on other sites

ஈசனை யார் என்று தெரியாவிட்டாலும் அவரின் விலாட்டு மாங்காயில் ஒரு கண் வைத்துள்ளேன்.அவர் இப்போ போதாக்குறைக்கு குளிப்பணியாரம் குண்டுத்தோசை பற்றி தகவல் சொல்கிறார்.அபோ மாங்காய் சம்பல் போடவேண்டியது தான்.தமிழுக்கு தெரிஞ்சால் அம்போ தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.