Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல்-காசா மோதல்: டெல் அவிவ் பேருந்தில் குண்டு வெடிப்பு

Featured Replies

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

[size=3][size=4]இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைமையகத்துக்கு எதிரே வீதியில் கண்ணாடிகள் சிதறிப்போன நிலையில் புகையைக் கக்கிக்கொண்டு இந்தப் பேருந்து நிற்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.[/size][/size]

121121113220_tel_aviv_bus_304x171_ap.jpg

[size=3]

[size=4]காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.[/size][/size][size=3]

[size=4]குண்டு வைத்தவர் என்று சந்தேகிக்கப்படுபவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.[/size][/size]

[size=3]

[size=4]இத்தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.[/size][/size]

[size=3]

[size=4]இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு, இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.[/size][/size]

[size=3]

[size=4]காசாவில் செவ்வாய் இரவும் இஸ்ரேலியர்கள் கடுமையாக குண்டு வீசியிருந்தனர்.[/size][/size]

[size=3]

[size=4]காசா மீதான தாக்குதல்களில் இஸ்ரேல் குண்டுவீச்சு விமானங்களையும், யுத்த ஹெலிகாப்டர்களையும், போர்க் கப்பல்களையும் பயன்படுத்தியுள்ளது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/11/121121_telavivblast.shtml

பாலஸ்தீன பயங்கர வாதிகள் அப்பாவி மக்களுக்கு குண்டு வைப்பதை நான் வன்மையா கண்டிக்கிறேன்

  • தொடங்கியவர்

[size=4]போர்நிறுத்த முயற்சிகள்[/size]

[size=3][size=4]பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகளை பூமிக்கையிடியிலிருந்து ஏவிவரும் இடங்கள்தான் தமது இலக்குகளில் பாதிக்கும் அதிகம் என இஸ்ரேல் கூறுகிறது.[/size][/size]

[size=3][size=4]இன்னொருபுறம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக ஹமாஸ் ராஜீய முயற்சிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.[/size][/size]

[size=3][size=4]இந்த விவகாரம் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும், ஜெருசலேத்தில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளிண்டனுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]அதிபர் அப்பாஸோடு சேர்ந்து நின்று உரையாற்றிய பான் கி மூன், வன்முறை அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.[/size][/size]

[size=3][size=4]இரண்டு தனித்தனி நாடுகளை உருவாக்கும் தீர்வுத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலிய பாலஸ்தீன தகராற்றை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று மூன் வலியுறுத்தினார்.[/size][/size]

[size=3][size=4]அமெரிக்க ராஜாங்க அமைச்சரும் பாலஸ்தீன அதிபரை சந்திக்கவிருக்கிறார்.[/size][/size]

[size=3][size=4]பின்னர் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து எகிப்திய அதிபர் முகமது முர்ஸியுடன் விவாதிப்பதற்காக ஹில்லரி கிளிண்டனும், பான் கி மூனும் கெய்ரோ செல்லவிருக்கின்றனர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/11/121121_telavivblast.shtml

என்ன கொடுமை மூன் சுயநினைவோடதான் பேசுறாரா? ஏன் ஒருங்கிணைந்த இஸ்ரேலுக்குள் பாலஸ்தினர்களுக்க்கு தீர்வு கொடுக்க முடியாதா?

  • தொடங்கியவர்

[size=4]மேற்குலகத்தின் + ஐ.நா.வின் கவனம் பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கில் இறப்பது அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட புதிய எகிப்திய அரசு இந்த யுத்தத்திற்குள் இழுபட்டுவிட கூடாது என்பதே. [/size]

இரத்தத்தில் நனையும் பாலஸ்தீனம் ! இந்தியாவும் உடந்தையென கண்டனங்கள்.

[size=3]

gaza_strikes_sunday_600.jpg

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் இந்திய அரசுக்குக் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திலுள்ள காசா பகுதிமீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்துவதைத் தொடர்ந்து காசா நகரம் இரத்தத்தில் குளிக்கிறது. தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்றும் காஸாமீது இஸ்ரேல் தொடர்ந்த விமானத்தாக்க்குதலில் இதுவரை 88 ஃபலஸ்தீனிகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 700 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸின் எதிர் தாக்குதலில் இதுவரை 3 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஃபலஸ்தீன் காவல்துறையின் இரண்டாவது மிகப்பெரிய நிலையத்தின்மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதோடு காவல்நிலையம் முழுமையாக தரைமட்டமாகியுள்ளது. இன்று காலை நடத்திய தாக்குதலில், ஒரு வீட்டின்மீது விழுந்த குண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் எதிர்பாராமல் இத்தவறு நடந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரால் காஸாவில் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன. காஸாவுக்கான மூன்று பாதைகளையும் இஸ்ரேல் அடைத்துள்ளதால், போதிய உயிர்காப்பு மருந்துகளோ உணவுப்பொருட்களோ காஸாவுக்குள் வராமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காஸாவின் எல்லைப்பகுதியில் தமது படையினர் சுமார் 1 லட்சம் பேரை இஸ்ரேல் இறக்கியுள்ளது. இது, தரை மூலமாக காஸாவினைத் தாக்க இஸ்ரேல் தயாராகிவருவதைக் காட்டுவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் தானும் கலந்து கொள்ள இருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். அத்துடன், உடனடி வெடி நிறுத்தலுக்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், 'தம் மக்கள்மீதான தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கவும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் இஸ்ரேலுக்கு உரிமையுள்ளது' என கூறியுள்ள ஹிலாரி கிளின்டன், 'மத்தியக் கிழக்கில் அமைதி கொண்டு வர உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்' எனவும் 'இரு தரப்பும் அமைதிகாக்கவேண்டும்' எனவும் கூறியுள்ளார்.

மத்தியக்கிழக்கில் தற்போது உருவாகியுள்ள இப்பிரச்சனைக்கு, ஹமாஸின் முக்கியத்தலைவர்களில் ஒருவரை இஸ்ரேல் கொலைப்படுத்தியதும் ஐந்து தினங்களுக்கு முன்னர் தன்னிச்சையாக காஸாமீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இஸ்ரேலிடமிருந்து ஆயுதம் வாங்குவதை எதிர்த்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கும் ஆயுதங்களின்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அப்பாவி பலஸ்தீனிகளை இஸ்ரேல் கொன்றொழித்து வருகிறது.' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

[/size][size=3]

Written By ilankainet.com[/size]

பாவம் அச்சு இந்தியா இஸ்ரேலிடம் இருந்து ஆயுதம் வாங்காவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் வாங்கிவிடும் அந்த ஒரே காரணத் திட்க்காகவே இந்தியா இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்குகிறது என்று இந்த மலையாள அச்சு மாமா அறியமாட்டாரா? கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சரியா இருக்கும்

  • தொடங்கியவர்

[size=4]இன்னும் சில நாட்களில் ஒய்வு பெறப்போகும் ஹிலரி அம்மையாருக்கு இந்த மோதல் தலையிடியாக வந்துள்ளது. அவரது சனாதிபதியாகும் ஆசைக்கு மண் போடுமா? தெரியவில்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் கணிசமான அளவு முஸ்லிம் வாக்குகள் உள்ளன.. யூத வாக்குகள் இல்லை..! அதுதான் அச்சு ரொம்ப துள்ளுது..! :D

  • தொடங்கியவர்

[size=5]இஸ்ரேல் உளவாளிகள் காஸாவில் படுகொலை![/size]

[size=4]இஸ்ரேலுக்கு உளவாளிகளாகச் செயற்பட்ட 6 பேர் காஸாவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.[/size][size=2]

[size=4]காஸாவின் வடபகுதியிலுள்ள இடமொன்றில் வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளனர்.[/size][/size]

[size=2]

article-2235635-1621F8B1000005DC-779_634x404.jpg

[/size][size=2]

[size=4]இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததுடன் ஹமாஸின் முக்கிய உறுப்பினர்களின் இருப்பிடங்கள் தொடர்பாகவும் அறியத்தந்தமை தொடர்பிலேயே இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.[/size][/size][size=2]

[size=4]குறித்த 6 பேரும் அதி நவீன சாதனங்களை உபயோகித்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் ஹமாஸ் இலக்குகளை படமும் பிடித்துள்ளனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 6 பேரில் ஒருவரின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச் செல்லும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=2]

http://www.virakesari.lk/article/world.php?vid=286[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்தான் ஒருகாலத்தில் உலகை ஆளப்போகிறார்கள்..! :blink:

இப்பிடியான கேவலத்தை நம் போராளிகள் செய்வார்களா? இறந்தவனுக்கு மரியாத கொடுக்காத இலங்கை அரசிற்கும் தம்மை போராளிகள் என்று சொல்லும் இந்த பலஸ்தினியருக்கும் என்ன வித்தியாசம்

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனர்களுக்காக நாங்கள் இரங்கிய காலம் ஒன்று இருந்தது. எம்மைப் போலவே அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்பிற்கும் உள்ளான சமூகம் என்கிற அடிப்படையில் அவர்கள் மேல் பரிதாபம் இருந்தது. ஆனால், தங்களைப்போன்ற இன்னொரு சமூகமான ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி அவர்களிடம் சரியான பார்வை இருக்கவில்லை. மேற்குலகிற்கெதிரான சிங்கள அரசின் நிலைப்பாட்டை பாராட்டி ஈழத்தமிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதனைப் பயங்கரவாதம் என்று தற்போதைய பாலஸ்த்தீன அரசு பிரகடனப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் 2009 வன்னி இனவழிப்புப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட, சிங்களம் செய்துவந்த இனக்கொலையை நியாயப்படுத்தி சிங்களத்தின்மேல் செலுத்தப்படும் எந்த அழுத்தங்களும் நியாயமற்றவை என்று சொல்லியிருந்தது. விடுதலைக்காகவும், ஆக்கிரமிற்கெதிராகவும் போராடும் தன்னைப்போன்ற இனத்தின் துன்பங்களை அன்று கண்டுகொள்ளாத பாலஸ்தீன அமைப்பிற்கிற்காகவும், இன்று அந்த இனம் இஸ்ரேலின் தாக்குதலில் அகப்பட்டு படும் இழப்புக்களுக்காகவும் பரிதாபம் ஏற்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க எம்மால் முடியாது.

என்னைப்பொறுத்தவரை இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் ஏற்படப்போகும் ஆபத்தைவிட, இஸ்ரேலினால் எமக்கு ஏற்படப்போகும் அல்லது ஏற்பட்டு வரும் ஆபத்துக்கள் குறைவானவை. இஸ்ரேலிகள் வியாபாரிகள், அவர்களுக்கென்று அடிப்படைவாதக் கொள்கை எதுவும் கிடையாது. நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் உங்களுக்கும் உதவுவார்கள். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் அப்படியானதல்ல. முழு உலகையும் சரியா சட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம், மனிதர்களைக் கல்லெறிந்து கொல்லும் மிருக காலத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தினைக்கொண்டது. பெண்களை விலங்குகளாகவும், இயந்திரங்களாகவும் அடிமைப்படுத்தும் ஆசையைக் கொண்டது. சக மனிதனை கடவுளின் பெயரால் படுகொலை செய்துவிட்டு அந்தக் கடவுளின் புகழ்பாடும் ஆசையைகொண்டது.அப்பாவிகளைக் கொல்வதற்காக தற்கொலைத் தாக்குதல் நடத்திவிட்டு சொர்க்கத்தில் 70 கன்னியர்களுடன் சல்லாபிக்கும் கனவுடன் வாழ்வது. இவர்களைப் பார்க்கும்போது, வெறும் அப்பாவிகள் என்று எண்ணத் தோன்றவில்லை, மாறாக அடிப்படைவாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இஸ்ரேலின் இருப்பை இன்றுவரை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாமிய மிருகங்களுக்காக நாம் ஏன் இரக்கப்பட வேண்டும்? இஸ்ரேலை முற்றாக அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் அவர்களை ஆதரிக்கும் ஈரான், சிரியா, எகிப்து போன்ற நாடுகளுக்கெதிராக இஸ்ரேல் நடத்தும் எந்தவித நடவடிக்கையும் சரியானதே. இஸ்ரேலியர்கள் கேட்பது வேறு யாரினதும் நாட்டையல்ல. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் அவர்களின் தாயகமான நாட்டைத்தான். அரேபியர்களாலும், ரோமானியர்களாலும் இஸ்ரேலின் வரலாறும் அவர்கள் ஆயிரமாயிரமாண்டுகளாக வாழ்ந்துவந்த தேசமும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு, இஸ்ரேலியர்கள் ஏதிலிகளாக இவ்வளவு காலமும் உககெங்கும் அலைக்கழிந்தார்கள். 1948 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த நாட்ட்ற்கு திரும்பிப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களை அழித்து, இஸ்ரேலை மண்ணோடு மண்ணாக்க இதுவரை இரு பாரிய யுத்தங்களை அரபு நாடுகள் செய்திருக்கின்றன. 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம். ஆனால் இவ்விரு யுத்தங்களிலும் பாரிய தோல்விகளை அரபு நாடுகள் சந்தித்ததுடன், பெருமளவு நிலப்பரப்பினையும் இஸ்ரேலிடம் இழந்தன. இன்றுவரை இஸ்ரேலினை முற்றாக அழிப்பதென்கிற இவர்களது கனவு உயிர்ப்புடன்தான் இருந்துவருகிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ரகு கருத்துக்களுக்கு நன்றி. காஸ்ரோவும் இனப்படுகொலை செய்த மகிந்த அரசுக்கு மிண்டு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். எதிரிகள் யார் நண்பர்கள் யாரென்பதை நாம் இனம் காணுதல் அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் எதை எதிர்பார்த்ததோ, அதை இந்த முட்டாள்கள் செய்து விட்டார்கள்!

இனி எழுதப் படப் போவது தான் 'வரலாறு' ஆகப் போகின்றது! :o

  • தொடங்கியவர்

[size=4]

என்னைப்பொறுத்தவரை இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் ஏற்படப்போகும் ஆபத்தைவிட, இஸ்ரேலினால் எமக்கு ஏற்படப்போகும் அல்லது ஏற்பட்டு வரும் ஆபத்துக்கள் குறைவானவை.

[/size]

[size=4]இருந்தாலும் நாம் முஸ்லீம்களையும் இலாவகமாக கையாளும் இராஜதந்திரத்தை / கொள்கையை வகுக்க வேண்டும். [/size]

[size=2]article-2235635-1621F8B1000005DC-779_634x404.jpg[/size]

இது எங்களுக்குள்ளும் முன்பு நடந்துள்ளது. அனுபவிப்பார்கள்.

ரகு கருத்துக்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இருந்தாலும் நாம் முஸ்லீம்களையும் இலாவகமாக கையாளும் இராஜதந்திரத்தை / கொள்கையை வகுக்க வேண்டும். [/size]

அகோதா,

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இஸ்லாமியர்களை இன்று நாம் ஆதரிப்பதன்மூலம் நாம் எதைச் சாதித்துக்கொள்ள முடியும் என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. ஏன் சொல்கிறேன் என்றால், எமது நாட்டிலேயே எமது மொழிபேசி, எமது கலைகளை பழகி வரும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கே எமது போராட்டத்தின் நியாயம் பற்றியோ அல்லது எமக்கு நடத்தப்பட்ட அநியாயங்கள்பற்றியோ ஒரு தெளிவான பார்வை இல்லாதபோது, சர்வதேசத்தில் இஸ்லாமியர்களை அனுசரித்துப் போவதனால் மட்டும் எதை சாதிக்கப்போகிறோம் என்று என்னை நானே கேட்பதுண்டு. சிங்களத்தின் இனவழிப்பிற்கு முஸ்லீம் நாடுகளின் ஆதரவினைத் திரட்ட எமது சகோதர இனமான முஸ்லீம்கள் செய்த லீலைகள் நீங்கள் அறியாதவை அல்ல. முஸ்லீம் காங்கிரஸினூடாகவோ அல்லது அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவோ சிங்களம் தமிழினவழிப்பிற்காக இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைத் திரட்டியே வந்திருக்கிறது. ஈரான், லிபியா, சிரியா, சவூதி அரேபியா, பாக்கிஸ்த்தான் என்று பல நாடுகளுக்கு முஸ்லீம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சுறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் அறிவீர்கள். இன்றுவரை சிங்களத்தின் இனவழிப்பிற்கு முண்டு கொடுத்து, அது செய்த அக்கிரமங்களை சர்வதேசத்தில் நியாயப்படுத்தியோ அல்லது அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று வாதிட்டோ வருபவை இந்த இஸ்லாமிய நாடுகளேயன்றி வேறில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய காலகட்டத்தில் உலகம் இரு முகாம்களாகப் பிரிந்து இருக்கிறது. ஒன்று மேற்குலகு, மற்றையது மேற்குலகின் வாழ்வு முறைகளை, சனநாயகத்தை, மனிதவுரிமைகளை முற்றாக அழித்து முழு உலகையும் தமது இஸ்லாமியக அடிப்படைவாத காட்டாட்சிக்குள் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத முகாம். இவர்களுக்கிடையே தமது வியாபாரத்தைப் பெருக்கக் காத்திருக்கும் ரஷ்ஷியாவும் சீனாவும் எந்த முகாமையும் சாராத தூய வியாபாரிகள்.

எங்கள் முன்னாலிருப்பது இரு தெரிவுகள். எமக்கு நடந்த கொடுமைகளை ஒருவேளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து எமக்கு ஏதாவதொரு தீர்வை பெற்றுத்தரக்கூடிய மேற்குலகின் சனநாயக அமைப்பையா அல்லது எமக்கு நடந்த இனவழிப்பை இன்றுவரை சர்வதேசத்தில் நியாயப்படுத்தி எமக்கு எந்தவொரு தீர்வோ அல்லது நீதியோ கிடைத்துவிடக்கூடாதென்று சிங்களத்திற்கு முண்டு கொடுக்கும் இஸ்லாமிய நாடுகளையா நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று நாம் முடிவெடுப்பது அவசியம். இஸ்லாமிய நாடுகளுடனும் சமரசம் செய்துகொண்டு மேற்குலகின் அனுசரணையையும் எதிர்பார்ப்பது எமக்கு விமோசனத்தைத் தரும் அன்று நான் நினைக்கவில்லை.

Edited by ragunathan

  • தொடங்கியவர்

எங்கள் முன்னாலிருப்பது இரு தெரிவுகள். எமக்கு நடந்த கொடுமைகளை ஒருவேளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து எமக்கு ஏதாவதொரு தீர்வை பெற்றுத்தரக்கூடிய மேற்குலகின் சனநாயக அமைப்பையா அல்லது எமக்கு நடந்த இனவழிப்பை இன்றுவரை சர்வதேசத்தில் நியாயப்படுத்தி எமக்கு எந்தவொரு தீர்வோ அல்லது நீதியோ கிடைத்துவிடக்கூடாதென்று சிங்களத்திற்கு முண்டு கொடுக்கும் இஸ்லாமிய நாடுகளையா நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று நாம் முடிவெடுப்பது அவசியம். இஸ்லாமிய நாடுகளுடனும் சமரசம் செய்துகொண்டு மேற்குலகின் அனுசரணையையும் எதிர்பார்ப்பது எமக்கு விமோசனத்தைத் தரும் அன்று நான் நினைக்கவில்லை.

[size=1]

[size=4]தமிழீழத்திலும் தமிழகத்திலும் அருகருகே எமது மக்களும் முஸ்லீம் மக்களும் வாழ்கிறார்கள். நேற்று ஐ.சி.ஜி. சேர்ந்த அலன் கீனனும் முஸ்லீம் தலைவர்களுடன் தமிழ் தலைவர்களை ஒரு புரிந்துணர்விற்கு வர கேட்டு வருகிறார். [/size][/size]

[size=1]

[size=4]எமது முதல் எதிரி. எனவே அவர்களை வெல்லும் வரை என்றாலும் எமக்கு இந்த இராசதந்திர அணுகுமுறை தேவை. [/size][/size]

[size=1]

[size=4]பூகோள ரீதியாகவும் எம்மை சுற்றி பல நாடுகள் முஸ்லீம் நாடுகள். எனவே வர்த்தகரீதியாகவும் சில தொடர்புகளை பேணியே ஆகவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]தமிழீழத்திலும் தமிழகத்திலும் அருகருகே எமது மக்களும் முஸ்லீம் மக்களும் வாழ்கிறார்கள். நேற்று ஐ.சி.ஜி. சேர்ந்த அலன் கீனனும் முஸ்லீம் தலைவர்களுடன் தமிழ் தலைவர்களை ஒரு புரிந்துணர்விற்கு வர கேட்டு வருகிறார். [/size][/size]

[size=1][size=4]எமது முதல் எதிரி. எனவே அவர்களை வெல்லும் வரை என்றாலும் எமக்கு இந்த இராசதந்திர அணுகுமுறை தேவை. [/size][/size]

[size=1][size=4]பூகோள ரீதியாகவும் எம்மை சுற்றி பல நாடுகள் முஸ்லீம் நாடுகள். எனவே வர்த்தகரீதியாகவும் சில தொடர்புகளை பேணியே ஆகவேண்டும். [/size][/size]

சரி, இதை எப்படி செய்யப்போகிறீர்கள். அண்மையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட முஸ்லீம்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் இன்றுவரை சர்வதேச சமூகத்தில் முஸ்லீம்கள் நடந்துவரும் முறையைப் பார்த்துக்கொண்டே நாம் அவர்களுடன் ஒரு சமரசத்திற்கு எப்படி வரமுடியும் என்று கூறுங்களேன்.

  • தொடங்கியவர்

[size=4]

சரி, இதை எப்படி செய்யப்போகிறீர்கள். அண்மையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட முஸ்லீம்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் இன்றுவரை சர்வதேச சமூகத்தில் முஸ்லீம்கள் நடந்துவரும் முறையைப் பார்த்துக்கொண்டே நாம் அவர்களுடன் ஒரு சமரசத்திற்கு எப்படி வரமுடியும் என்று கூறுங்களேன்.

[/size]

[size=1]

[size=4]உங்கள் கேள்விக்கு தெளிவான பதில் என்னிடம் இல்லை. [/size][/size][size=1]

[size=4]சிங்களம் மேற்குலகத்தால் பலவீனப்படுத்தப்படும்பொ[/size][size=4]ழுது முஸ்லீம் தரப்பு அவர்களை விட்டு தமிழர் தரப்புடன் இணையலாம். அதாவது தமிழர் தரப்பு மேற்குலகத்தால் இல்லை இந்தியாவால் இல்லை இரண்டும் சேர்ந்து பலப்படுத்தும்பொழுது, தமிழர் தரப்பின் அரசியல் பலம் ஓங்கினால் அவர்கள் இணைய,இணைந்து செயல்பட சாத்தியங்கள் உள்ளன. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.