Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் அமைச்சராக இருந்து இதுவரை செய்தவை என்ன?

Featured Replies

-என்னைப்பொறுத்தவரை எல்லோரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைத் தமிழர்கள். ஒன்று குட்டையை சுத்தம் செய்யவேண்டும் இல்லை அரசியல் உரிமைகள் என்ற கருத்தைக் கைவிட்டு நூறுவீத அடிமைகளாக இருக்கவேண்டும. இரண்டும் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. ஆகவே யாரொருவன் மக்களுக்கு உதவி செய்கின்றானோ அவருக்கு ஆதரவாக இருப்பது என்பதே எனது வழி.

யார் இந்த குட்டையில் ஊறிய மட்டைகளுடன் "பேச்சு வார்த்தை ஆரம்பிக்க வேண்டும்" என்பது, என்று கூற முடியுமா?

1.மகிந்தா-கோபத்தபயா-பசில்-சமல்-சிராந்தி-நாமல்- ரோகிதா.........

2.திரு கனம் தங்கிய துரை கௌரவச் செயலாளர் நாயகம் (ரப்பர்) டக்கி

3.புலம் பெயர் மக்கள் தொடர்பாடல் மந்திரி K.P.

இவர்கள் என்ன விடயம் பேசப் போகிறார்கள்?

கூட்டமைப்புடன் இனி பேசுவார்களா அல்லது பேச மாட்டார்களா?

தெரிவு குழுவுக்குள் கூட்டமைப்பு போகாதால் பேச்சுவார்த்தை ஸ்தம்பிதம் அடைந்துவிட்டதாக கூறும் அரசு அதை எப்படி புலம் பெயர் அமைப்புகளுடன் பேசும்?

புலம் பெயர் அமைப்புக்களுக்கு பராளுமன்ற பதவி கொடுத்து தெரிவு குழுவுக்குள் உள்வாங்கிய பின்னரா பேச்சு வார்த்தைகள் தொடங்கும்?

கடந்த தடவை பேச்சு வார்த்தைகள் பற்றிய கதை அடிபட்ட போது, நா.கடந்த அரசின் கனடா மந்திரிகளும், GTF ன் சுரேன் சுரேந்திரனும் தனித்தனியாக இலங்கை அரசின் தலைவர்கள் பொறுப்பு கூற வேண்டியதை தீர்வுக்கு தன்னும் தாங்கள் வர்த்தகம் செய்யத் தயாரில்லை என்று பி.பி.சி க்கும் மற்றைய ஊடகங்களுக்கும் அறிவித்தார்கள். பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்போர் இந்த பொறுப்பு கூறல் நிபந்தனையை ஏற்றுவிட்டார்களா?

  • Replies 81
  • Views 4.2k
  • Created
  • Last Reply

<p>சண்டமாருதன், on 25 November 2012 - 02:03 AM, said:<br />

<br />

-அரசு அமைச்சர் ஊடாக அவர்கையாலே அபிவிருத்தி செய்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றது என்றால் ஏன் புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பும் சேர்ந்து புலம்பெயர் மக்களிடம் உதவிகளைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ முடியாது?நீங்களும் உங்களால் ஆனதை ஒருங்கமைந்து செய்யலாம்தானே? சிங்களவனுடன் சேரமுடியாது மானத்தோடு வாழவேண்டும் என்றெல்லாம் வீரவசனம் பேசுகின்றவர்கள் ஏன் ஆகக் குறைந்தது அபிவிருத்தி திட்டங்களிலாவது இணைந்திருக்கக் கூடாது?<

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,புலம்பெயர் தமிழர்களும் சலசலப்பு இல்லாமல்

பலவற்றை செய்துள்ளோம் .சிலவற்றை தெரியத்தருகின்றேன் .

2011தை மாதம் கிழக்கில் ஏறபட்ட வெள்ளத்திற்கு ,(40000.00டாலர் )

கொக்கிளாய் ,கொக்குதொடுவாய் ,தென்னமரவடி கிராமங்களில் கணவனை

இழந்த பெண்கள் தொழில் தொடங்க (30000.00டாலர் ),இதேபோல மட்டக்கிளப்புக்கு

யோகேஸ்வரன் M .P ஊடாக (10000.00டாலர் )முல்லைத்தீவு கேப்பாபிலவு

மக்களுக்கு (5000.00டாலர் ).

எதற்கு மறைமுகமான மனிதாபிமானப்பணி? போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப்பணி எ ன்ற புள்ளியில் புலம்பெயர் மக்களும் த தே கூ வும் வெளிப்படையாக இணையவேண்டும் என்பதே அவசியம். அரசியல் ரீதியாக இணைவதில் பிரச்சனை இருக்கலாம். இங்கே புலம்பெயர் தேசத்தில் ஆங்காங்கே கூட்டங்களில் மறைத்துவைத்திருந்த புலிக்கொடியை தடால் என்று தூக்கிப்பிடிப்பதால் அரசியல் ரீதியான இணைந்த செயற்பாடு த தே கூ வுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் ஆனால் மனிதாபிமனப்பணிக்கான இணைந்த செயற்பாடு ஒன்றும் பிரச்சனைக்குரிய விடயமில்லை. மறைமுகைமாக பேர்க்குற்றத்துக்குள் ஏதோ பூராயம் புடுங்குவது என்று பந்தா காட்டுவது. நாடுகடந்த அரசுக்குள் உள்ளால நிறைய விடயங்கள் செய்கின்றோம் என்று பந்த காட்டுவது. மனிதாபிமானப்பணிகளை மறைமுகமாகச் செய்கின்றோம் என்று பந்தா காட்டுவது. இதெல்லாம் மறைமுகமாகச் செய்யவேண்டிய பணிகளா? இதென்ன ஆயுத்கடத்தலா? எதை எதை வெளிப்படையாகச் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் மறைமுகமாக செய்வதாக ஒரு பூராயத்தை அவ்வப்போது கிளப்பி விடுவது. இதை எல்லாம் யார் நம்பப் போகின்றார்கள்? வெளிப்படையான ஒருங்கிணைந்த மனிதாபிமானப்பணி என்பதே ஒரு அரசியல் தளத்தை உருவாக்குவதற்கான வெளியை உருவாக்கும். புலம்பெயர் தமிழனும் தாயகத்தமிழனும் இந்த ஒரு புள்ளியிலாவத அமைப்பு ரீதியாக வெளிப்படையாக செயற்படவேண்டிய அவசியம் இந்த வெளியை உருவாக்கும் தேவை நிமிர்த்தம் இருக்கின்றது. ஆனால் அதை செய்ய மறுப்பதன் நோக்கம் என்னவெனில் மக்கள் எப்போதும் பிளவுபட்டுக்கிடக்கவேண்டும் என்ற கபட எண்ணமே அன்றி வேறில்லை.

செயலாளர் நாயகம் தனது அபிவிருத்திப் பணிகளை வெளிப்படையாகச் செய்கின்றார். மக்கள் அவரைப் படிப்படியாகப் புரிந்துகொள்ள இது சந்தர்ப்பமாக அமைகின்றது. அதைப் பொறுக்காதவர்களே அவர்மீது குதர்க்கமாக எப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பல ஆண்டுகளாக இவற்றைக் கவனித்து வருகின்றோம். ஈபிடிபி யில் சாதரண பத்திரிகை வித்தவர்களை கூட ஈவிரக்கமின்றி மண்டையில் போட்டது அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்களை வைத்துக் கூட இந்த உலகத்திடம் நீதி கேட்டு பாதுகாப்புக் கேட்டு ஆர்பாட்டம் செய்த வரலாறுகள் நிறையவே உண்டு. மற்ற இயக்கங்களை ஓட ஓட சுட்டுக்கொல்வார்கள் ஓடிய அவர்கள் போக்கிடம் இன்றி அரசுடன் இணைந்து இணக்க அரசியலையாவது செய்து மக்களுக்கானதை செய்வோம் என்று செயற்பட்டால் அரசுடன் ஒட்டிய ஒட்டுக்குளுக்கள் என்று மீண்டும் போட்டுத்தள்ளுவீர்கள். செத்தவன் துரோகி சுட்டவன் தியாகி. இந்த லோலாயங்களை கடந்து எல்லோரும் தமிழராய் ஒருவரக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொள்வோம் என்றால் அதுவும் சரிவராது.

யார் இந்த குட்டையில் ஊறிய மட்டைகளுடன் "பேச்சு வார்த்தை ஆரம்பிக்க வேண்டும்" என்பது, என்று கூற முடியுமா?

1.மகிந்தா-கோபத்தபயா-பசில்-சமல்-சிராந்தி-நாமல்- ரோகிதா.........

2.திரு கனம் தங்கிய துரை கௌரவச் செயலாளர் நாயகம் (ரப்பர்) டக்கி

3.புலம் பெயர் மக்கள் தொடர்பாடல் மந்திரி K.P.

இவர்கள் என்ன விடயம் பேசப் போகிறார்கள்?

மகிந்தா கோத்தா ஏன் இதுக்குள் வந்தார்கள்? அவர்கள் ஏன் வரவேண்டும்? நான் தமிழர்கள் தங்களுக்குள் கலந்துரையாடல் செய்யவேண்டும் என்றே சொன்னேன்.

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

செயலாளர் நாயகம் அல்லது ஈழத்து எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம்

http://youtu.be/kfWz8RTDGuA

டக்ளஸ் இதுவரை பலவற்றை செய்துள்ளார்.

1) யாழ் கொழும்பு விமான டிக்கெட் பெற்றுக்கொள்ள அதுவும் பாதை பூட்டியிருந்த சமயம் அவரை நம்பிய மக்களுக்கு பேருதவியாக இருந்தார். பின்னர் பாதை திறந்ததும் கிளியரன்ஸ் எடுத்து செல்வதற்கு உதவி செய்தார்.

2) இராணுவத்தால் கடத்தப்பட்ட சில மக்களை பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற்றி இருந்தார்.

3) வெள்ளைவான் வைத்து மக்களை கடத்தினார்.

4) முக்கியமாக இவரது ஆட்கள் ஆயுத முனையில் பெண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கொலை செய்து பத்தைக்குள் போட்டு விட்டு சென்றார்கள்.

5) மக்களிடம் கப்பம் பெற்றார்.

6) ஐயர் மார்களிடமும் பணம் கேட்டு தராது விட்டதும் தனது கும்பலை வைத்து வாளால் வெட்டினார்.. வேறு நபர்களை சுட்டார்.

7) விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து விலகிய சிலரை பின்னர் தனது கூட்டத்துடன் இணைத்து வைத்திருந்து மறைமுகமாக அவர்கள் உதவியுடன் பல கொலைகளை அரங்கேற்றினார்.

8) இவருக்கு போடப்பட்ட வாக்குகளில் பெரும்பானையானவை கள்ள வாக்குகள். இதனை வாக்குகள் எண்ணியவர்களே கூறியுள்ளார்கள். :D

9) இராணுவத்தினரே ஈ.பீ.டீ.பீ உறுப்பினர்களை சுட்டாலும் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் மௌனமாக இருந்தார். :D

அவரது ஆட்கள், அவர்களின் குடும்பங்களுக்கு நன்மையும் கிடைத்துள்ளது. :rolleyes: பலர் விடயத்தில் பணமும் சேர்ந்து விளையாடியது. :blink: பெரும்பாலானோருக்கு தீமை கிடைத்துள்ளது. :(

இன்றுவரை தமிழர்களுக்கு சிங்களத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை என்றே சொல்லிக்கொண்டு வருகிறார். ^_^ அதாவது தானும் தனது ஆட்களும் நன்றாக இருப்பதற்காக பாதிக்கப்படும் தமிழ்மக்களை இன்னும் பலியாக்குகிறார். ^_^

இவரால் அரசாங்கத்துடன் ஒட்டி இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்னும் போது அரசாங்கத்துடன் சேராமல் இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எவ்வளவோ நல்லது என்பது என் கருத்து. :rolleyes:

Edited by துளசி

எதற்கு மறைமுகமான மனிதாபிமானப்பணி? போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப்பணி எ ன்ற புள்ளியில் புலம்பெயர் மக்களும் த தே கூ வும் வெளிப்படையாக இணையவேண்டும் என்பதே அவசியம். அரசியல் ரீதியாக இணைவதில் பிரச்சனை இருக்கலாம். இங்கே புலம்பெயர் தேசத்தில் ஆங்காங்கே கூட்டங்களில் மறைத்துவைத்திருந்த புலிக்கொடியை தடால் என்று தூக்கிப்பிடிப்பதால் அரசியல் ரீதியான இணைந்த செயற்பாடு த தே கூ வுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் ஆனால் மனிதாபிமனப்பணிக்கான இணைந்த செயற்பாடு ஒன்றும் பிரச்சனைக்குரிய விடயமில்லை. மறைமுகைமாக பேர்க்குற்றத்துக்குள் ஏதோ பூராயம் புடுங்குவது என்று பந்தா காட்டுவது. நாடுகடந்த அரசுக்குள் உள்ளால நிறைய விடயங்கள் செய்கின்றோம் என்று பந்த காட்டுவது. மனிதாபிமானப்பணிகளை மறைமுகமாகச் செய்கின்றோம் என்று பந்தா காட்டுவது. இதெல்லாம் மறைமுகமாகச் செய்யவேண்டிய பணிகளா? இதென்ன ஆயுத்கடத்தலா? எதை எதை வெளிப்படையாகச் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் மறைமுகமாக செய்வதாக ஒரு பூராயத்தை அவ்வப்போது கிளப்பி விடுவது. இதை எல்லாம் யார் நம்பப் போகின்றார்கள்? வெளிப்படையான ஒருங்கிணைந்த மனிதாபிமானப்பணி என்பதே ஒரு அரசியல் தளத்தை உருவாக்குவதற்கான வெளியை உருவாக்கும். புலம்பெயர் தமிழனும் தாயகத்தமிழனும் இந்த ஒரு புள்ளியிலாவத அமைப்பு ரீதியாக வெளிப்படையாக செயற்படவேண்டிய அவசியம் இந்த வெளியை உருவாக்கும் தேவை நிமிர்த்தம் இருக்கின்றது. ஆனால் அதை செய்ய மறுப்பதன் நோக்கம் என்னவெனில் மக்கள் எப்போதும் பிளவுபட்டுக்கிடக்கவேண்டும் என்ற கபட எண்ணமே அன்றி வேறில்லை.

செயலாளர் நாயகம் தனது அபிவிருத்திப் பணிகளை வெளிப்படையாகச் செய்கின்றார். மக்கள் அவரைப் படிப்படியாகப் புரிந்துகொள்ள இது சந்தர்ப்பமாக அமைகின்றது. அதைப் பொறுக்காதவர்களே அவர்மீது குதர்க்கமாக எப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பல ஆண்டுகளாக இவற்றைக் கவனித்து வருகின்றோம். ஈபிடிபி யில் சாதரண பத்திரிகை வித்தவர்களை கூட ஈவிரக்கமின்றி மண்டையில் போட்டது அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்களை வைத்துக் கூட இந்த உலகத்திடம் நீதி கேட்டு பாதுகாப்புக் கேட்டு ஆர்பாட்டம் செய்த வரலாறுகள் நிறையவே உண்டு. மற்ற இயக்கங்களை ஓட ஓட சுட்டுக்கொல்வார்கள் ஓடிய அவர்கள் போக்கிடம் இன்றி அரசுடன் இணைந்து இணக்க அரசியலையாவது செய்து மக்களுக்கானதை செய்வோம் என்று செயற்பட்டால் அரசுடன் ஒட்டிய ஒட்டுக்குளுக்கள் என்று மீண்டும் போட்டுத்தள்ளுவீர்கள். செத்தவன் துரோகி சுட்டவன் தியாகி. இந்த லோலாயங்களை கடந்து எல்லோரும் தமிழராய் ஒருவரக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொள்வோம் என்றால் அதுவும் சரிவராது.

உங்கள் பேச்சை நம்பி கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் வெளிப்படையாக உதவி செய்யப்போனால் புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணத்தில் 80% ஐ அரசாங்கம் தனதாக்கிக்கொள்ளும் என்பது சின்னப்பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம்.

டக்ளஸ் அவர்கள் வெளிப்படையாக உதவி செய்கிறார் என்கிறீர்கள். உண்மையில் அவர் வெளிப்படையாக உதவி செய்வது போல் காட்டிக்கொள்கிறார். தனக்கும் சொத்து சேர்த்து தன் ஆட்களுக்கும் ஓரளவு உதவி செய்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்காக புலிகள் இல்லாத இந்த மூன்று வருடங்களில் என்ன செய்தார்? அவர்களுக்கு செய்வதை விட நீச்சல் தடாகம் அமைத்து நாடு அபிவிருத்தி செய்யப்படுகிறது, இப்பொழுது நாடு நன்றாக இருக்கிறது என்று சர்வதேசத்திற்கு காட்டி தமிழர்களின் பிரச்சினையை மேலும் மேலும் மூடி மறைக்க தான் அவரால் இயலும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,புலம்பெயர் தமிழர்களும் சலசலப்பு இல்லாமல்

பலவற்றை செய்துள்ளோம் .சிலவற்றை தெரியத்தருகின்றேன் .

2011தை மாதம் கிழக்கில் ஏறபட்ட வெள்ளத்திற்கு ,(40000.00டாலர் )

கொக்கிளாய் ,கொக்குதொடுவாய் ,தென்னமரவடி கிராமங்களில் கணவனை

இழந்த பெண்கள் தொழில் தொடங்க (30000.00டாலர் ),இதேபோல மட்டக்கிளப்புக்கு

யோகேஸ்வரன் M .P ஊடாக (10000.00டாலர் )முல்லைத்தீவு கேப்பாபிலவு

மக்களுக்கு (5000.00டாலர் ).

நன்றி. இதை இங்கு சொல்வதால் ஏதும் பிரயோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? :D அது தான் இல்லை. அவர் நோக்கம் அல்லது அவர் நிறுவ முயல்வது வேறு.

நீங்கள் ஏற்கனவே கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்ல பிரச்சாரம் செய்வதற்கு என நிதி சேகரித்த போது நிதியுதவி செய்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பெயரை பார்த்த மாதிரி இருக்கிறது. உங்கள் உதவிகளுக்கும் நன்றி.

சண்டமாருதன்! நீங்கள் டக்கிளசின்ரை ஆளா?

இல்லை. நான் ஒருவரின் ஆளும் கிடையாது. நான்கு வருடங்களுக்கு முன்பு நானே இத்தளத்தில் இப்போது அமைச்சருக்கு எதிராக எழுதியவர்கள் போலவே எழுதினேன். பின்பு ஏன் துரோகி ஒட்டுக்குளு அரசுடன் இணைந்த போக்கு இவைகள் எல்லாம் தோற்றம் பெறுகின்றது என்று யோசித்துப்பார்த்தேன். மிக இலகுவாக எதிரானவர்களை ஆளையாள் சுட்டுக்கொல்கின்றோம். இவை எல்லாம் ஏன் என்று யோசிக்கும் போது எல்லோரிடமும் ஒரு காரணம் இருக்கின்றது. அதை வைத்து எல்லோரும் தம்மை நியாயப்படுத்திக்கொள்ளமுடியும். ஒரு வயலில் புல்லு இருந்தால் அதைப் புடுங்கி வரப்பில் போட்டுவிட்டுப்போகலாம். இது ஒரு சாதரண விசயம். நாம் புல்லை புடுங்கி காலில் போட்டு உழக்கி கையால் நசுக்கி ஒரு வெறித்தனத்தை சைக்கோ போல் செய்கின்றோம். அதைக்டந்து தியாகி துரோகி என்று பார்த்தால் வயலே ஏறத்தாள புல்லுவயல்தான். இதுக்குள் வெறித்தனம் காட்டுவதும் தற்கொலை செய்வதும் ஒன்றுதான். காரணங்களை நியாயப்படுத்தல்களை கடந்து நாம் ஐக்கியப்படவேண்டுமானால் வெறித்தனம் உணர்ச்சிவசம் வெறுப்பு இவைகளில் இருந்து நாம் சற்று எம்மை விடுவித்து எல்லோரும் தமிழர்கள் என்று அனுசரிக்க பழகவேணும். அவன் அந்தக்குற்றம் செய்தான் இவன் அவனை மண்டையில் போட்டான் என்றால் இதற்கு முடிவேயில்லை. ஒரு பிழையை சுட்டிக்காட்டுவதாகட்டும் அல்லது விமர்சிப்பதாகட்டும் மிக அமைதியாக உணர்ச்சிவசப்படாமல் துரோகி ஒட்டுக்குளு இவ்வாறான வர்த்தைப்பிரயோகங்கள் இன்றி அமைதியாகவே நிதானமாகவே செய்யவேண்டும். யார் நல்லது செய்கின்றார்களோ அவர் செய்யும் நல்லதை ஆதரிப்போம். எப்பொதும் அவன் பிழை செயதான் என்றால் அதற்கு நீயும் காரணம் என்று சுட்டிக்காட்டுவோம். கெட்ட விசயங்களை சமநிலைப்படுததவேண்டிய தேவையும் நல்லவிசயங்களை முதன்மைப்படுத்திக்காட்டவேண்டிய தேவையும் எனது கருத்துக்களின் சாராம்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்... போராட்டகாலத்தில் ஆளையாள் சுட்டுக்கொல்வது பற்றிய உங்களது கேள்வி நியாயமானது. ஆனால் இது எமது இனத்திற்குள் மட்டுமே நடந்த ஒன்று அல்ல. :unsure:

ஒரு உதாரணத்திற்கு, ஆயுதப் போராட்டகாலத்தில் போராளிகளைக் காட்டிக்கொடுத்து பணம் பெற்றவர்களை எடுத்துக் கொள்வோம். இவர்களது காட்டிக்கொடுப்பால் போராளிகள் பலியாகி, அவர்களது குடும்பங்களுக்கும் ஆறாத துயர்.

இப்போது இவ்வாறு காட்டிக் கொடுத்தவர்களை என்ன செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

  • அவர்களிடம் சமாதானமாகப் பேசி இனிமேல் இதைமாதிரி செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? :rolleyes:
  • அல்லது சிங்கள அரசு கொடுத்த தொகையைவிட அதிகமாகக் கொடுத்து அவர்களை போராட்டத்தின் பால் ஈர்த்திருக்க வேண்டுமா? :huh:
  • அல்லது அவர்களை வெருட்டி வைத்திருக்க வேண்டுமா? :blink:
  • அல்லது தண்டனை வழங்கியது சரியா? :rolleyes:

நீங்கள் ஆயிரம் ஆயிரம் காரணங்களை ,நியாயப்படுத்தலை கூறினாலும் ......................காரணத்தையும்,நியாயத்தையும் அறிந்தவனுக்கு அவை போலியாக இருந்தால் .............அவனை உங்கள் கருத்துக்களால் ஒன்றும் செய்ய முடியாது .............

ஏனனில் உண்மை சற்று ஒதுங்கியிருக்கும் ,பதுங்கியிருக்கும் ....................ஆனால் அது உண்மையாய் இருக்கும் ...........உண்மையாய் கருத்திடும் ................உண்மையாய் செயற்படும் ..................பொய்கள் மட்டுமே இப்போ துள்ளி குதிக்கும் ......ஆனால் உண்மையோ அமைதியாய் .அடக்கமாய் .........எரிமலையாய் இல்லாமல் எரிமலயைப்போல் வெடிக்கும் ..................அந்த வெடிப்பில் கூட வெப்பம் இருக்காது ...............உண்மையானவர்கள் முன் :)

உங்கள் பேச்சை நம்பி கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் வெளிப்படையாக உதவி செய்யப்போனால் புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணத்தில் 80% ஐ அரசாங்கம் தனதாக்கிக்கொள்ளும் என்பது சின்னப்பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம்.

டக்ளஸ் அவர்கள் வெளிப்படையாக உதவி செய்கிறார் என்கிறீர்கள். உண்மையில் அவர் வெளிப்படையாக உதவி செய்வது போல் காட்டிக்கொள்கிறார். தனக்கும் சொத்து சேர்த்து தன் ஆட்களுக்கும் ஓரளவு உதவி செய்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்காக புலிகள் இல்லாத இந்த மூன்று வருடங்களில் என்ன செய்தார்? அவர்களுக்கு செய்வதை விட நீச்சல் தடாகம் அமைத்து நாடு அபிவிருத்தி செய்யப்படுகிறது, இப்பொழுது நாடு நன்றாக இருக்கிறது என்று சர்வதேசத்திற்கு காட்டி தமிழர்களின் பிரச்சினையை மேலும் மேலும் மூடி மறைக்க தான் அவரால் இயலும்.

மனிதாபிமானப்பணிகளை தாராளமாகச் செய்யலாம். சிங்கள அரசு அவ்வாறு பணிகளை தடுக்கின்றது என்றால் அதற்கெதிராக புலத்திலும் தாயகத்திலும் ஆர்ப்பாட்டம் செய் போராடு. சிங்கள அரசு 80 வீதத்தை எடுபதிலும் பார்க்க இதனூடாக எமக்கு போராட ஒரு பிடிமானம் கிடைக்கின்றது என்று சாதகமாக சிந்தித்துப்பாருங்கள். புலம்பெயர் தமிழனும் தாயக் தமிழனும் வெளிப்படையாக இணைகின்றான் என்று சாகமாகப் பாருங்கள்.ஒரு அமைப்பு உருவக்கப்படுகின்றது என்ற கோணத்தில் சிந்தியுங்கள். ஆரம்பத்தில் 80 அல்ல 90 வீதத்தை இழக்கலாம் அல்லது 100 வீதத்தையும் இழக்காலம். ஆனால் மறைமுகம் என்ற ஒரு குறுக்கு வழியை விட நேர்வழி காலத்தின் தேவை. இரண்டுதரப்பும் சேர்ந்து பத்தாயிரம் உதவி செய்கின்றது என்றால் நேர் வழியில் ஆயிரத்தை செலவுசெய் மறைமுகைமாக ஒன்பதாயிரததை செலவுசெய். நட்டம் அதிகமில்லை. இதற்கு காரணம் ஒன்றுதான் நாமும் தாயக மக்களும் ஒரு புள்ளியில் இணையவேண்டும். சுலபமாக சிங்களம் எடுத்தவிடும் என்பது எல்லாம் ஒரு காரணமாகக் கருத முடியாது.

  • தொடங்கியவர்

யார் நல்லது செய்கின்றார்களோ அவர் செய்யும் நல்லதை ஆதரிப்போம். எப்பொதும் அவன் பிழை செயதான் என்றால் அதற்கு நீயும் காரணம் என்று சுட்டிக்காட்டுவோம்.

கெட்ட விசயங்களை சமநிலைப்படுததவேண்டிய தேவையும் நல்லவிசயங்களை முதன்மைப்படுத்திக்காட்டவேண்டிய தேவையும் எனது கருத்துக்களின் சாராம்சம்.

[size=4]ஆயிரம் கெட்ட விடயங்களுக்கு ஒருவர் ஒரு நல்ல விடயத்தை செய்யும்பொழுது...[/size]

அந்த ஆயிரம் விடயங்களையும் சமநிலைப்படுத்தி ஒரு நல்ல விடயத்தை முதன்மைப்படுத்திக்காட்டவேண்டிய தேவை இருந்தால் அந்த கருத்தை பகுத்தறிவு உள்ள மக்கள் எவ்வாறு ஏற்பார்கள்?

சண்டமாருதன்... போராட்டகாலத்தில் ஆளையாள் சுட்டுக்கொல்வது பற்றிய உங்களது கேள்வி நியாயமானது. ஆனால் இது எமது இனத்திற்குள் மட்டுமே நடந்த ஒன்று அல்ல. :unsure:

ஒரு உதாரணத்திற்கு, ஆயுதப் போராட்டகாலத்தில் போராளிகளைக் காட்டிக்கொடுத்து பணம் பெற்றவர்களை எடுத்துக் கொள்வோம். இவர்களது காட்டிக்கொடுப்பால் போராளிகள் பலியாகி, அவர்களது குடும்பங்களுக்கும் ஆறாத துயர்.

இப்போது இவ்வாறு காட்டிக் கொடுத்தவர்களை என்ன செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

  • அவர்களிடம் சமாதானமாகப் பேசி இனிமேல் இதைமாதிரி செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? :rolleyes:
  • அல்லது சிங்கள அரசு கொடுத்த தொகையைவிட அதிகமாகக் கொடுத்து அவர்களை போராட்டத்தின் பால் ஈர்த்திருக்க வேண்டுமா? :huh:
  • அல்லது அவர்களை வெருட்டி வைத்திருக்க வேண்டுமா? :blink:
  • அல்லது தண்டனை வழங்கியது சரியா? :rolleyes:

காலம் கடந்து வந்துவிட்டோம். சூழ்நிலை மாறிவிட்டது. ஒரு காலத்தில் சில தண்டனைகள் நியாயமாக இருந்திருக்கலாம் ஆனால் அதை நாம் இக்காலத்தில் மீள நினைவுபடுத்துவது பிளவுகளை தக்கவைக்கவே உதவும். அதைக் கடந்து செல்லவேண்டியதுதான். போராட்டப்பாதையில் நடந்த ஒரு தவறு தண்டனை வழங்கல் ஆகும். ஆரம்பத்தில் தண்டனை வழங்குதலை பலமாக கருதினார்கள். அதனூடாக மக்களை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று எல்லா இயக்கமும் கருதியது. ஆனால் காட்டிக்கொடுப்பு என்பது முள்ளிவாய்கால் வரை தொடர்ந்து அதை கடந்து நிற்கின்றது. ஒருவனை கொல்லும்போது குறைந்தது அவனது சொந்த பந்தம் சுற்றம் நட்பு என்று அறுபதுபேர் சுட்டவர் மீது அதிருப்தி கொள்கின்றார்கள். நியாயங்களை கடந்த உணர்வு இது. இவ்வாறன ஆய்வுகளின் பின்னரே மரணதண்டனைகள் படிப்படியாக குறைந்தது. நானறிய காட்டிக்கொடுத்தவர்கள் கூட அவர்கள் பின்னணி ஆரயப்பட்டு தடுப்புமுகாம் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. 93 க்குப் பின்னர் தண்டனை விடயத்தில் புலிகள் பாரிய மாறுதல்களை செய்தார்கள். பாலியல் உறவில் இயக்கக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் அதன் பின் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இதற்குக் காரணமும் கட்டுப்பாட்டை பலமென்று கருதிய அதே மறுவளத்தில் பலவீனமானது.பலத்தை அந்நிய உளவு நிறுவனங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். தண்டனைகளில் விதிவிலக்கு எப்போதும் இருப்பது வழமை என்பது வேறு விசயம்.

உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக சரி பிழை என்ற விடையாளிப்பதை விட குற்றத்திற்கான பின்னணியை ஆராய்தல் அதனடிப்படையில் வறுமை ஒரு காட்டிக்கொடுப்பை செய்தால் அவற்றை சரிசெய்ய முற்படுதல் தண்டனைகளின் பின் விழைவை ஆராய்தல் அதனடிப்படையில் தண்டனைகளை மாற்றுதல். இப்படித்தான் என்னால் பதிலளிக்க முடிகின்றது

[size=4]ஆயிரம் கெட்ட விடயங்களுக்கு ஒருவர் ஒரு நல்ல விடயத்தை செய்யும்பொழுது...[/size]

அந்த ஆயிரம் விடயங்களையும் சமநிலைப்படுத்தி ஒரு நல்ல விடயத்தை முதன்மைப்படுத்திக்காட்டவேண்டிய தேவை இருந்தால் அந்த கருத்தை பகுத்தறிவு உள்ள மக்கள் எவ்வாறு ஏற்பார்கள்?

அந்த ஒரு நல்லவிடயத்துக்குப் பதிலாக ஒன்பது நல்லவிடயத்தை செய்து ஆயிரம் கெட்ட விசயங்கள் செய்தவனை செல்லாக்காசாக்க வேண்டியதுதான். ஒரு நல்லவிசயத்தால் ஓராயிரம் கெட்டவிசயத்தை மறைக்கமுடியுமானால் அந்த நல்ல விசயத்தை பகுத்தறிவுள்ளவன் கையில் எடுக்கவேண்டியதுதான்

  • தொடங்கியவர்

[size=4]இன்று தமிழரின் போராட்டம் அகிம்சை வழியாக தொடங்கி ஆயுத போராட்டம் ஊடாக மீண்டும் அகிம்சை வழியில் ஆனால் ஐ.நா.வரை சர்வதேசப்படுத்தப்பட்டு உள்ளது. [/size]

[size=1]

[size=4]பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவாமல் தடுப்பதற்கு, அவர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காமல் இருப்பதற்கு, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு தமிழர்களை சிங்களம் பயன்படுத்துவது நீண்டகால வழக்கம். அதில் இன்று முக்கிய பங்கு வகிப்பவர்களில் ஒருவர் - டக்ளஸ். [/size][/size]

[size=1]

[size=4]இதனால் அவர் 'உதவிகள்' செய்கிறார் என்றால் அதற்கான காரணமே அவர் தான். அதாவது அதற்க்கான நிலைமையை அவர் சிங்கள எதிரிகளுடன் இணைந்து உருவாக்குகிறார் . [/size][/size]

[size=1]

[size=4]"ஆயிரம் உபத்திரவங்களை" அமைச்சர், தமிழர் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு செய்வது பின்னர் " ஒரு நல்ல விடயத்தை செய்வது" - துரோகமே. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]இன்று இலங்கையில் நடப்பது ஒரு சர்வாதிகார இனவாத ஆட்சி. இதில் சிங்களவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முஸ்லீம்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அகதிகளாக அவுசிற்கு போகிறார்கள். வேலை தேடி கொரியா செல்கிறார்கள், பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்களாகவும் செல்லுகிறார்கள்.[/size]

[size=4]இவர்களை விட மேலும் அதிகமாக திட்டமிட்ட முறையில் பாதிக்கப்படுபவர்கள் - தமிழர்கள். சொந்த நிலத்தில் வாழ முடியாத அடிமைகளாக [/size]நடாத்தப்படுகின்றார்கள். அநாதைகளாக நிர்கதியான நிலையில் உள்ளனர். மரணத்தின் விளிம்பில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

[size=4]எமது மக்களின் அவலத்தை மறைக்க, இன அழிப்பிற்கு உதவ சிங்களத்திற்கு எமது இனத்தில் புல்லுருவிகள் தேவைப்படுகின்றனர்:[/size]

[size=4]ஐ.நா.விடம் நல்லிணக்கம் நன்றாக நடக்கின்றது என கூறவும், [/size]

[size=4]அமெரிக்காவிடம் புனர்வாழ்வு புனிதமாக நிறைவேறுகின்றது என காட்டவும், [/size]

[size=4]
ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனித உரிமைகள் மின்னல் வேகத்தில் முன்னேறுவதாக பொய்யு
ரைக்கவும்,
[/size]

[size=1]

[size=4]இந்தியாவிடம் தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொல்லவிலை புலிகள் தான் இன்றும் கொல்லுகிறார்கள் என ஆதாரத்துடன் கூறவும், [/size]
[/size]
[size=1]

[size=4] - - - ...................[/size][/size][size=1]

[size=4]பயன்படுபடும் சிங்கள கறிவேப்பிலை தான் - டக்லஸ் என்ற தமிழர்.[/size][/size]

மகிந்தா கோத்தா ஏன் இதுக்குள் வந்தார்கள்? அவர்கள் ஏன் வரவேண்டும்? நான் தமிழர்கள் தங்களுக்குள் கலந்துரையாடல் செய்யவேண்டும் என்றே சொன்னேன்.

பா.உ தேவானந்தா, கூட்டமைப்பு பா.உ களின் தலைவர் சம்பந்தன் தன்னுடன் வந்து இணையும் படி கேட்டபோது ஏன் அவருடன் பேச மறுத்தார்? இவர் அவர்களுடன் பேசுவதல்லவா முறை. ஜெனிவா வந்தவர் ஏன் புலம் பெயர் மக்களுடன் பேச முயலாமல், அவர்களை தாக்கிவிட்டு போனார். எதற்காக சுவிசில் வைத்து இரண்டு ஊடகவியலாரை தாக்க முயன்றார்.

புலம் பெயர் மக்கள் றபர் டக்கியுடன் பேசுவதற்கு அவரிடம் எந்த அதிகாரமும் இல்லை. புலம் பெயர் மக்கள் றபர் டக்கியை தமிழனாக எற்றுக்கொள்ளவில்லை. வெறுமனே ராசபக்சாவின் உத்தியோகத்தராகத்தான் பார்க்கிறார்கள். அஸ்வரும் இப்படி ஒரு உத்தியோகத்தரே. அஸ்வர் இடை இடை சபாநாயகர் கதிரையில் ஏறி அமர்பவர். எனவே இவருடன் பேசுவதிலும் பார்க்க அஸ்வருடன் பேசலாம். இதில் புலம் பெயர் மக்களுக்கு பேதம் கிடையாது.

Edited by மல்லையூரான்

//பயன்படுபடும் சிங்கள கறிவேப்பிலை தான் - டக்லஸ் என்ற தமிழர். //

டக்ளஸ் கருவேப்பிலை கேபி கடுகு கருணா பெருங்காயம் உருத்திரகுமார் பெருஞ்சீரகம் வினாயகம் வெங்காயம் நெடியவன் மிளகாய் கூட்டமைப்பு சின்னச் சீரகம். இதுதான் தமிழர்களின் வழிநடத்துனர்கள். சிங்களச் சட்டியில் நாங்கள் தாளிக்கப்படுகின்றோம் என்பதே உண்மை. இப்படி அவனவன் கிள்ளி சட்டியில் போடக்கூடியவாறு இருக்காமல் எல்லாரும் சேர்ந்து ஒரு பருப்பாக மாறினால் என்ன? பருப்பில் நிறைய புரதம் இருக்கின்றது. நல்ல டிமாண்டாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இப்படி அவனவன் கிள்ளி சட்டியில் போடக்கூடியவாறு இருக்காமல் எல்லாரும் சேர்ந்து ஒரு பருப்பாக மாறினால் என்ன?

[size=4]அது வேகாது, நாறும். உதாரணம் முஸ்லீம்களின் இணக்க அரசியல். [/size]

[size=4]

இத்தகைய கோளைத்தனமானவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு சிறு உரிமையைக் கூட பெற்றுத்தர முடியுமா என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கு கொஞ்சமும் பயப்படாமல் யாருக்கோ இவர்கள் பயந்துள்ளார்கள் என்பது தொடர்ச்சியான சோரம் போதலின் இன்னுமொரு மைல்கல்லாகும்.
[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111894

பருப்பில் நிறைய புரதம் இருக்கின்றது. நல்ல டிமாண்டாக இருக்கும்.

[size=4]உண்மை. தமிழீழம் சிங்களத்தையும் சிங்களம் தமிழீழத்தையும் அங்கீகரித்தால் நாங்கள் அவர்களுக்கு புரதம் மட்டுமல்லாது சகல உணவுவகைகள் தொழில்நுட்பங்கள் ஏன் பணம் கூட கடனாக தரலாம். [/size]

சிலர் ஒரு பெயரில் வந்து கூட்டமைப்பு, முஸ்லீம்களுடன் பேச வேண்டு மென்பார்கள். ஆனால் நடந்தது, மு.கா எல்லோரையும் ஒரே தோசை பிரட்டாக பிரட்டிவிட்டது.

சிலர் அது எடுபடாவிட்டால் K.Pயுடன் பேச வேண்டும் என்பார்கள். ரம்புக்கவெல அவர் ஒரு அரசியல் கைதி என்கிறார்.

சிலர் இப்போது புலம் பெயர் மக்கள் அரசின் டக்கியுடன் பேச வேண்டும் என்கிறார்கள்.

இந்த எழுத்துகளில் எவ்வளவு உண்மை இல்லாத்தன்மை வெளியாகிறதோ, அவ்வளவு உண்மைகள் முக மூடிகளின் பின்னால் மறைந்திருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து வந்துவிட்டோம். சூழ்நிலை மாறிவிட்டது. ஒரு காலத்தில் சில தண்டனைகள் நியாயமாக இருந்திருக்கலாம் ஆனால் அதை நாம் இக்காலத்தில் மீள நினைவுபடுத்துவது பிளவுகளை தக்கவைக்கவே உதவும். அதைக் கடந்து செல்லவேண்டியதுதான். போராட்டப்பாதையில் நடந்த ஒரு தவறு தண்டனை வழங்கல் ஆகும். ஆரம்பத்தில் தண்டனை வழங்குதலை பலமாக கருதினார்கள். அதனூடாக மக்களை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று எல்லா இயக்கமும் கருதியது. ஆனால் காட்டிக்கொடுப்பு என்பது முள்ளிவாய்கால் வரை தொடர்ந்து அதை கடந்து நிற்கின்றது. ஒருவனை கொல்லும்போது குறைந்தது அவனது சொந்த பந்தம் சுற்றம் நட்பு என்று அறுபதுபேர் சுட்டவர் மீது அதிருப்தி கொள்கின்றார்கள். நியாயங்களை கடந்த உணர்வு இது. இவ்வாறன ஆய்வுகளின் பின்னரே மரணதண்டனைகள் படிப்படியாக குறைந்தது. நானறிய காட்டிக்கொடுத்தவர்கள் கூட அவர்கள் பின்னணி ஆரயப்பட்டு தடுப்புமுகாம் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. 93 க்குப் பின்னர் தண்டனை விடயத்தில் புலிகள் பாரிய மாறுதல்களை செய்தார்கள். பாலியல் உறவில் இயக்கக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் அதன் பின் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இதற்குக் காரணமும் கட்டுப்பாட்டை பலமென்று கருதிய அதே மறுவளத்தில் பலவீனமானது.பலத்தை அந்நிய உளவு நிறுவனங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். தண்டனைகளில் விதிவிலக்கு எப்போதும் இருப்பது வழமை என்பது வேறு விசயம்.

உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக சரி பிழை என்ற விடையாளிப்பதை விட குற்றத்திற்கான பின்னணியை ஆராய்தல் அதனடிப்படையில் வறுமை ஒரு காட்டிக்கொடுப்பை செய்தால் அவற்றை சரிசெய்ய முற்படுதல் தண்டனைகளின் பின் விழைவை ஆராய்தல் அதனடிப்படையில் தண்டனைகளை மாற்றுதல். இப்படித்தான் என்னால் பதிலளிக்க முடிகின்றது

தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் சண்டமாருதன்..

போராட்ட நியாயங்கள் காலநேரங்களுக்கேற்ப வேறுபடும் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். பழையனவற்றை கிளறுவதும், அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்று எழுதுவதும் பயனற்றது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். :unsure:

இக்கால அரசியல் என்பது ஜனநாயக அரசியல். அதில் டக்ளஸ் ஒரு பாத்திரம். அவர் மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு தலைவராக இருந்து தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதே எல்லோரும் விரும்புவது. ஆனால் அவர் மக்கள் ஆதரவினைப் பெற்ற தலைவரா? :rolleyes:

அப்படி இல்லாவிட்டால், அவர் கள்ள வாக்குகள், மிரட்டல் அரசியல், கொல்லைப்புற அரசியல் வழியாக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் என்றே எடுக்க வேண்டியுள்ளது. மக்களால் தரப்படாத அதிகாரத்தை நாம் சகித்துக்கொள்ள முடியுமா? மக்கள் கூட்டத்தினுள் இவரைவிடப் பன்மடங்கு சேவைகுணம் உள்ள தலைவர்கள் இருப்பார்களே.. மக்கள் செய்யாத தெரிவுக்கு அவர்களே பலிக்கடா ஆகவேண்டுமா? :rolleyes:

துளசி

Advanced Member

Posted Yesterday, 06:43 PM

Gari, on 25 November 2012 - 06:00 AM, said:

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,புலம்பெயர் தமிழர்களும் சலசலப்பு இல்லாமல்

பலவற்றை செய்துள்ளோம் .சிலவற்றை தெரியத்தருகின்றேன் .

2011தை மாதம் கிழக்கில் ஏறபட்ட வெள்ளத்திற்கு ,(40000.00டாலர் )

கொக்கிளாய் ,கொக்குதொடுவாய் ,தென்னமரவடி கிராமங்களில் கணவனை

இழந்த பெண்கள் தொழில் தொடங்க (30000.00டாலர் ),இதேபோல மட்டக்கிளப்புக்கு

யோகேஸ்வரன் M .P ஊடாக (10000.00டாலர் )முல்லைத்தீவு கேப்பாபிலவு

மக்களுக்கு (5000.00டாலர் ).

நன்றி. இதை இங்கு சொல்வதால் ஏதும் பிரயோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? அது தான் இல்லை. அவர் நோக்கம் அல்லது அவர் நிறுவ முயல்வது வேறு.

நீங்கள் ஏற்கனவே கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்ல பிரச்சாரம் செய்வதற்கு என நிதி சேகரித்த போது நிதியுதவி செய்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பெயரை பார்த்த மாதிரி இருக்கிறது. உங்கள் உதவிகளுக்கும் நன்றி.

நன்றிகள் .துளசி

நிதிஉதவி செய்தது மட்டுமில்லாமல் ,கிழக்கு மாகாணசபை தேர்தலில் தலைநகர மாவட்டத்தில்

முதன்மை வேட்பாளரை களமிறக்கியதில் முக்கியபங்கு வகித்துள்ளோம் . இதனுடாக

அந்த மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புதிதாக தொடங்கலாம் ஒற்றுமையை என்பவர்கள் மீது ஒரு கேள்வி???

எப்பொழுது கதவு பூட்டப்பட்டது???

பொது நலம் சார்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அத்தனை தரமும் தனது சுயநல லாபம் கருதி ஒதுக்கியவர் தான் செயலாளர் அவர்கள்.

அது கூட்டமைப்பை உருவாக்கும் காலப்பகுதியாக இருந்தாலும் சரி

முள்ளிவாய்க்காலுக்கு பின் கூட்டமைப்பு விடுத்த ஒற்றுமை முயற்சிகளானாலும் சரி.

வரலாறும் அனுபவங்களும் தந்த படிப்பினைகளை மறந்து மறுத்து எடுத்து வைக்கும் எந்த அடியும் சுயநலமானதாகத்தான் இருக்கும். முடியும்

மனிதாபிமானப்பணிகளை தாராளமாகச் செய்யலாம். சிங்கள அரசு அவ்வாறு பணிகளை தடுக்கின்றது என்றால் அதற்கெதிராக புலத்திலும் தாயகத்திலும் ஆர்ப்பாட்டம் செய் போராடு. சிங்கள அரசு 80 வீதத்தை எடுபதிலும் பார்க்க இதனூடாக எமக்கு போராட ஒரு பிடிமானம் கிடைக்கின்றது என்று சாதகமாக சிந்தித்துப்பாருங்கள். புலம்பெயர் தமிழனும் தாயக் தமிழனும் வெளிப்படையாக இணைகின்றான் என்று சாகமாகப் பாருங்கள்.ஒரு அமைப்பு உருவக்கப்படுகின்றது என்ற கோணத்தில் சிந்தியுங்கள். ஆரம்பத்தில் 80 அல்ல 90 வீதத்தை இழக்கலாம் அல்லது 100 வீதத்தையும் இழக்காலம். ஆனால் மறைமுகம் என்ற ஒரு குறுக்கு வழியை விட நேர்வழி காலத்தின் தேவை. இரண்டுதரப்பும் சேர்ந்து பத்தாயிரம் உதவி செய்கின்றது என்றால் நேர் வழியில் ஆயிரத்தை செலவுசெய் மறைமுகைமாக ஒன்பதாயிரததை செலவுசெய். நட்டம் அதிகமில்லை. இதற்கு காரணம் ஒன்றுதான் நாமும் தாயக மக்களும் ஒரு புள்ளியில் இணையவேண்டும். சுலபமாக சிங்களம் எடுத்தவிடும் என்பது எல்லாம் ஒரு காரணமாகக் கருத முடியாது.

மிகவும் நகைப்புக்கிடமான பதில் இது.

அதாவது டக்ளஸ் மக்களுக்காக பலவற்றை செய்கிறார். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள். இப்பொழுது புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் 80% ஐயும் ஏன் 100% ஐயும் அரசாங்கம் எடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் வெளிப்படையாக உதவி செய்கிறார்கள் என்ற பிடிமானத்தை ஏற்படுத்தாலாம் என்கிறீர்கள். உண்மையில் உங்களை தவிர வேறு எவராலும் இப்பிடி யோசிக்க முடியாது.

கொடுக்கும் பணத்தில் 100% ஐயும் அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டு இவர்கள் கையை கட்டிக்கொண்டிருப்பதால் மக்களுக்கு உதவி போய் சேரும், வெளிப்படையான தன்மை உருவாகும் என்று சொல்லும் முதல் ஆளும் நீங்களாக தான் இருப்பீர்கள்.

சரி 80% பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டு மிகுதியில் மக்களுக்கு உதவி செய்யும்படி கூறினால்,

பணம் என்ன மரத்திலிருந்து காய்க்குது என்ற நினைப்போ உங்களுக்கு? மக்களில் எத்தனை வீதமானோர் பணம் வழங்குகிறார்கள்? அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக பணத்தை பெற்றுக்கொள்வதே தற்போது கடினமான சூழ்நிலை. அரசாங்கத்துக்கு பணம் செல்கிறது என்று தெரிந்தால் இப்பொழுது உதவி செய்பவர்களில் பலரும் பின்னர் உதவி செய்ய மாட்டார்கள்.

இப்பொழுதே பணத்தை அவர் சுருட்டி விட்டார் இவர் சுருட்டி விட்டார் என்று சொல்லும் மக்கள் அரசாங்கம் 80% ஐ பறித்தாலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் சேர்ந்து மக்களின் பணத்தை அமுக்கி விட்டது என்று சொல்வார்கள். அதை பற்றி கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தீர்களா?

உங்களுக்கென்ன கவலை? நீங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கத்தவரோ இல்லை நாடுகடந்த அரசாங்கத்தில் ஒரு அங்கத்தவரோ இல்லை தானே. பொறுப்பு கூற வேண்டியது அவர்கள். மாட்டப்போவதும் அவர்கள்.

போராட்டத்துக்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டு அதில கொஞ்சத்தையேனும் போரால் அவலப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்த புலம்பெயர் தமிழர்களால் செயலாளர் நாயகத்தைப் பார்த்து சுட்டுவிரல் கூட நீட்டமுடியாது. பாம்புக்குறும் பன்னிகுறுப் என்று அடிபட்டு குத்துப்பட்டு சுடுபட்டுக்கொண்டு எப்படி இப்படி பேசமுடியும்? சுட்டுவிரல் நீட்டுவதற்கு ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதியை வைத்திருங்கள்.

அதிலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் பணத்தை சுருட்டி விட்டது என்று சொல்லும் முதல் ஆளும் நீங்களாக தான் இருப்பீர்கள். :D

//இப்பொழுதே பணத்தை அவர் சுருட்டி விட்டார் இவர் சுருட்டி விட்டார் என்று சொல்லும் மக்கள் அரசாங்கம் 80% ஐ பறித்தாலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் சேர்ந்து மக்களின் பணத்தை அமுக்கி விட்டது என்று சொல்வார்கள். அதை பற்றி கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தீர்களா?//

காதல் தப்பு தப்பு தப்பாய் சிந்திக்க கூடாது ............அப்படியெல்லாம் அவர்கள் தப்பாய் நினைக்க மாட்டார்கள் ...........மக்கள் நினைத்தாலும் .இணையவாதிகள் நினைக்கவே நினைக்க மாட்டார்கள் ............. :lol: .

நம்பிக்கை என்னும் சக்கரத்தில்தான் வாழ்க்கை என்னும் வண்டில் ஓடுது .................இன்னொருக்கா சொல்லுங்கோ என்று மட்டும் கேட்கேட்காதிஇங்கோ .............. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.