Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்த வரலாற்று இறுதி யாத்திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தளம்பல்

ஈடு செய்யாமுடியா

இழப்பின் தடுமாற்றம்

இனி

என்ன செய்வது

எவர் இவர் போல்

எம்மை தாங்குவார்

அந்த கட்டளைச்சொல்லை

எந்த வாய் சொன்னாலும் இனி........

எதிரி ஒருபுறம்

துரோகிகள் மறுபுறம்

இரண்டையும் தாண்டி

வலை இணைப்பாளர் இன்னொரு புறம்

புறம் பேசுதலே குண்டுகளாக பாய.......

இனி

இவருடன்......................

இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன்

புக வழி இல்லை

தம்பிமார்

அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே

கொஞ்சம் பொறுங்கள்

இருக்கும் சனம் வெளியில் வரட்டும்.........

மனதில் ஒரு கீறல்

இதற்கிடையில் நிரம்பிவிட்டதா....

மெதுமெதுவாக

கொஞ்சம் நகர்ந்தால்

மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம்

மண்டபத்தினுள் கால் வைக்கின்றேன்

மரணவீட்டுக்கு வந்த நிலை

மனதிலிருந்து போகிறது

இப்படி ஒரு மரண வீட்டை

இதுவரை நான் கண்டதில்லை

வலையில் பார்த்து

விவாதித்தது

முரண்பட்டது

எல்லாமே கண் முன்

கண்கள் பனிக்கின்றன

பல மணித்துளிகளின் பின்

அவன் காலடி வந்து

முகமதைப்பார்த்து

வெம்பி சொல்கின்றேன்

நீ சாகவில்லை

விதைக்கப்படுகின்றாய்

பல்லாயிரம் மக்களும் புலிகளும் சாட்சி இங்கு............

இறுதிவரை

இருக்கையில் இருந்து

கடைசி நிமிடங்கள் வந்தபோது..........

புலிகள் சலூட் அடித்து

அரச மரியாதை செய்ய

போராளிகள் தோள் கொடுக்க

பூதவுடல் நகரத்தொடங்க

இறுதி வார்த்திய ஓசை முழங்க

செக்கனுக்கொரு காலடி வைத்து

எம் அண்ணன் பயணம் தொடங்க.......

பக்கத்தில் நின்ற நண்பன் சொல்கின்றான்

இறந்தால்

இவன் போல் வாழ்ந்து

சாகணும்.............

  • கருத்துக்கள உறவுகள்

காட்சியைக் கண்முன் காட்டியமைக்கு நன்றி விசுகண்ணா

[size=1]

[size=4]நிச்சயம் எமது இந்த ஒற்றுமையை எதிரி எதிர்பார்த்து இருக்க மாட்டான். அவனுக்கு மீண்டும் ஒரு தெளிவான செய்தியை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தெளிவாக கூறி உள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]இந்த தியாகங்கள் அர்ப்பணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும். எமது தாயகம் விடுதலைபெறும். [/size][/size]

[size=4]நன்றிகள் அண்ணா.[/size]

அங்கு நடந்தவற்றை அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றிகள் விசுகு அண்ணா....

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எதிரி ஒருபுறம்[/size]

[size=4]துரோகிகள் மறுபுறம்[/size]

[size=4]இரண்டையும் தாண்டி[/size]

[size=4]வலை இணைப்பாளர் இன்னொரு புறம்[/size]

[size=4]புறம் பேசுதலே குண்டுகளாக பாய.......[/size]

[size=4]இனி[/size]

[size=4]இவருடன்....[/size]

[size=4]நன்றிகள்,விசுகர்!.[/size]

[size=4][size=1][size=4]இந்த தியாகங்கள் அர்ப்பணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும். எமது தாயகம் விடுதலைபெறும். [/size][/size][/size]

நன்றிகள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்த்தேன்....பரிதியின் முகம் காணவில்லை.....உங்கள்...பா..வில்...அவரின் வீர வணக்க நிகழ்வில்...கலந்த ஒரு உணர்வை பெற்றேன்...நண்பரே....சோகத்திலும் ஒரு மன நிறைவை அடைந்த்தேன்.....

558993_303775559726363_1179781319_n.jpg

198383_303775479726371_793779025_n.jpg

374478_303775719726347_215679810_n.jpg

30341_303775829726336_1221830948_n.jpg

406859_304421502995102_1566500297_n.jpg

399260_304420152995237_1167052310_n.jpg

215844_304421689661750_135232824_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]கேணல் பரிதியின் வித்துடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி! [/size]

[size=2]ஓளிப்பதைவைப் பார்க்க... கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை அழுத்தவும்.[/size]

http://www.tubetamil...்-வித்துடல.html

Edited by தமிழ் சிறி

[size=2]கேணல் பரிதியின் வித்துடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி! [/size]

[size=2]ஓளிப்பதைவைப் பார்க்க... கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை அழுத்தவும்.[/size]

http://www.tubetamil...்-வித்துடல.html

இணைப்பிற்கு நன்றி, உங்கள் இணைப்பிலுள்ள இரு காணொளிகளையும் நேரடியாக இத்திரியில் இணைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.