Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியின் கிராமங்களில் கார்த்திகை தீபங்களை சப்பாத்துக் காலகளால் உதைந்த இலங்கைப் படையினர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியின் கிராமங்கள் பலவற்றில் மக்கள் தமது சமய ஆனுஸ்டானங்களின் படி .ன்றைய கார்த்தினை தீபத் திருநாள் நிகழ்வுகளை அனுஸ்டித்துள்ளனர். அதன்படி வீடுகளின் முற்றங்கள் சுற்றுப் புறங்களில வழக்கம் போல் தீபங்கள் ஏற்றி இருந்தனர். இதனை பொறுக்க முடியாத இலங்கைப் படையினரும் புலனாய்வாரள்களும் சிவில் உடையில் துப்பாக்கிகள் சகிதம் சென்று மக்களை கடுமையாக மிரட்டியதுடன் சப்பாத்துக் கால்களால் தீபங்களை உதைந்து தள்ளியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்பு கொண்ட கிராமத்தவர் சிலர் தெரிவித்தனர்.

[size=3][size=4]குறிப்பாக செல்வநகர் புதுமுறிப்பு கிராமங்களுக்கு அருகிலேயே – கிளிநொச்சி மாவட்டத்திற்கு உரிய புலிகளின் துயிலும் இல்லம் அமையப்பெற்றிருந்ததால் வழமைக்கு மாறாக இந்தப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.[/size]

[size=4]விசேடமாக செல்வாநகர், புதுமுறிப்பு, உதய நகர், டீப்போ வீதியின் இரு மருங்கு ஜெயந்தி நகர் உள்ளிட்ட கிராமப்புறங்களை இலக்கு வைத்த படையினர் அப்பகுதிகளில் ஏற்றப்பட்ட அனைத்து கார்த்திகை தீபங்களையும் துவசம் செய்ததாக கிராமப்புற மக்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கிலி கொண்ட சிங்களவனின்.....கீழ்தரமான செயல் நாம் எதிர் பார்த்ததே.....மக்களே உங்கள்...மனதளவில்....யாசித்ததே....மாவீரர்களுக்கு செய்த நன்றிக் கடனாகும்...

நல்லது

இப்படியான செயல்கள் மூலம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களிற்கு போராடுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை என்பதையே சிங்கள அரசு உணர்த்துகின்றது.

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் முன் சென்ற வருடத்தை விட கூர்மையாக மாவீரர் தினத்தைக் கடைப்பிடிக்க தூண்டும் செயல்களைத்தான் இராணுவத்தினர் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

இவ்வளவு காலமும் இங்கு சிட்னியில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் தவறாது பங்கெடுத்து வந்தேன். ஒவ்வொருமுறையும் மாவீரச் செல்வங்களுக்கு மலர் வணக்கம் செய்யும்போது நானும் கூடவே செல்வேன். அங்கே திரு உருவப்படங்களுக்குள் எனது தம்பியின் படத்தைத் தேடிக் கிடைக்காததால் எவராக இருந்தாலும் எனக்காக உயிர்நீத்தவர் என்கிற எண்ணத்தோடு ஒவ்வொரு மாவீரர் முன்னாலும் நின்று அஞ்சலி செய்துவிட்டு வருவேன். நான் இவ்வாறு செய்வதை அவதானித்த ஒரு ஆர்வலர், "நீங்கள் யாரை நினைத்து வந்தீர்கள்" என்று சென்ற தடவை என்னைக் கேட்டார். நானோ, "எனது தம்பியை, ஆனால் இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் எனது குடும்பம்தான்" என்று சொல்லிவிட்டு வந்தேன். தவறாமல் எனது தம்பியின் பெயரைக் கேட்டு வாங்கிக்கொண்ட அவர், "இவ்வளவுநாளும் எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா" என்று கடிந்து கொண்டார். இம்முறை எப்படியாவது போகவேண்டும் என்று காத்திருந்தேன். வேலை முடிய 8:15 மணி, பயணிக்க இன்னொரு 45 நிமிடம், போய்ச்சேர முடியாது, மலர் வணக்கம் முடிந்துவிடும் என்று நினைத்து போகவில்லை. ஆனால் நண்பன் ஒருவனின் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. "உன்ர தம்பியின்ர படமும் வைச்சிருந்தவையள்". எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இன்று காலை முதல் யாழ்க் களத்தின் மாவீரர் தின செய்திகளையும், பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த இழப்புகளுக்கெல்லாம் நியாயம் கிடைக்கக் காத்திருக்கிறேன்.

[size=4]இரகுநாதன்,[/size][size=1]

[size=4]உங்களை போன்று மலையொத்த பொறுமையையும் / நம்பிக்கையையும் உள்ளவர்களின் கனவு பலிக்கும். [/size][/size][size=1]

[size=4]உங்கள் தம்பி உள்ளடங்க அனைத்து மாவீரரின் தியாகங்களுக்கும் வரும் ஆண்டு பதிலாக அமையட்டும். [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த மாவீரர் தினத்தை தாயகத்தில் கொண்டாடுவோம் ![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இரகுநாதன்,[/size]

[size=1][size=4]உங்களை போன்று மலையொத்த பொறுமையையும் / நம்பிக்கையையும் உள்ளவர்களின் கனவு பலிக்கும். [/size][/size]

[size=1][size=4]உங்கள் தம்பி உள்ளடங்க அனைத்து மாவீரரின் தியாகங்களுக்கும் வரும் ஆண்டு பதிலாக அமையட்டும். [/size][/size]

[size=1][size=4]அடுத்த மாவீரர் தினத்தை தாயகத்தில் கொண்டாடுவோம் ![/size][/size]

நன்றி அகோதா,

இவர்களின் தியாகங்கள் வீண்போகக் கூடாது.

[size=4]இரகுநாதன்,[/size]

[size=1][size=4]உங்களை போன்று மலையொத்த பொறுமையையும் / நம்பிக்கையையும் உள்ளவர்களின் கனவு பலிக்கும். [/size][/size]

[size=1][size=4]உங்கள் தம்பி உள்ளடங்க அனைத்து மாவீரரின் தியாகங்களுக்கும் வரும் ஆண்டு பதிலாக அமையட்டும். [/size][/size]

[size=1][size=4]அடுத்த மாவீரர் தினத்தை தாயகத்தில் கொண்டாடுவோம் ![/size][/size]

இந்தக் கருத்தை வாசிக்கும் போது சுமார் 15 வருடங்களின் முன்னர் படித்து, மனதில் பதிந்த ஒருவிடயம் ஞாபகத்துக்கு வந்தது.

சிதறடிக்கப்பட்ட யூதர்கள் தாம் புலம் பெயர்ந்த இடங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து விடைபெறும் சந்தர்பங்களில் எல்லாம் "நாளை தாய் மண்ணில் சந்திப்போம்" என்று சொல்லிச் செல்வார்களாம்.

ஆனால் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ, மீண்டும் அதே புலம் பெயர் நாட்டில் சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் விடைபெறும் சந்தர்பங்களில் எல்லாம் "நாளை தாய் மண்ணில் சந்திப்போம்" என்று சொல்லிச் செல்வார்களாம்.

பின்னர் அவர்கள் இஸ்ரேலை தாபித்தார்கள்.

இந்தப் பழக்கம் எம்மவர்களிடமும் வர வேண்டும்.

நாமும் நாளை தாய் மண்ணில் சந்திப்போம்!!!

நிழலி,

இவ்வளவு காலமும் இங்கு சிட்னியில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் தவறாது பங்கெடுத்து வந்தேன். ஒவ்வொருமுறையும் மாவீரச் செல்வங்களுக்கு மலர் வணக்கம் செய்யும்போது நானும் கூடவே செல்வேன். அங்கே திரு உருவப்படங்களுக்குள் எனது தம்பியின் படத்தைத் தேடிக் கிடைக்காததால் எவராக இருந்தாலும் எனக்காக உயிர்நீத்தவர் என்கிற எண்ணத்தோடு ஒவ்வொரு மாவீரர் முன்னாலும் நின்று அஞ்சலி செய்துவிட்டு வருவேன். நான் இவ்வாறு செய்வதை அவதானித்த ஒரு ஆர்வலர், "நீங்கள் யாரை நினைத்து வந்தீர்கள்" என்று சென்ற தடவை என்னைக் கேட்டார். நானோ, "எனது தம்பியை, ஆனால் இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் எனது குடும்பம்தான்" என்று சொல்லிவிட்டு வந்தேன். தவறாமல் எனது தம்பியின் பெயரைக் கேட்டு வாங்கிக்கொண்ட அவர், "இவ்வளவுநாளும் எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா" என்று கடிந்து கொண்டார். இம்முறை எப்படியாவது போகவேண்டும் என்று காத்திருந்தேன். வேலை முடிய 8:15 மணி, பயணிக்க இன்னொரு 45 நிமிடம், போய்ச்சேர முடியாது, மலர் வணக்கம் முடிந்துவிடும் என்று நினைத்து போகவில்லை. ஆனால் நண்பன் ஒருவனின் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. "உன்ர தம்பியின்ர படமும் வைச்சிருந்தவையள்". எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இன்று காலை முதல் யாழ்க் களத்தின் மாவீரர் தின செய்திகளையும், பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த இழப்புகளுக்கெல்லாம் நியாயம் கிடைக்கக் காத்திருக்கிறேன்.

உங்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிகின்றது ரகு. எத்தனை இழப்புகள் எத்தனை துயரங்கள்...

காலங்கள் எப்பவும் இப்படியே இருக்கப் போவதில்லை என்று நம்புகின்றேன்... எங்கள் சந்ததிகளில் ஒன்று கண்டிப்பாக விடிவை காணும். அதுவரைக்கும் அதற்கான பலத்தை கட்டியெழுப்புதலே எமது தலையாய கடமை என்று எண்ணுகின்றேன். ஆயினும் மனதை வருத்தும் வேதனை என்னவெனில், தாங்க முடியாத வேதனைகளையும் தியாகங்களையும் சந்தித்த ஒரு தலைமுறை, எதனையுமே அடையாது சிதறிப் போனமையே. ஒரு விடிவிற்காய் எந்த இனமும் கொடுக்காத ஒரு விலையை கொடுத்த மூன்று தசாப்த மக்களுக்கு ஈற்றில் கிடைத்திருக்கும் எதுவுமற்ற வாழ்க்கை கடுமையான மனவலியைத் தருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இரகுநாதன்,[/size][size=1]

[size=4]உங்களை போன்று மலையொத்த பொறுமையையும் / நம்பிக்கையையும் உள்ளவர்களின் கனவு பலிக்கும். [/size][/size][size=1]

[size=4]உங்கள் தம்பி உள்ளடங்க அனைத்து மாவீரரின் தியாகங்களுக்கும் வரும் ஆண்டு பதிலாக அமையட்டும். [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த மாவீரர் தினத்தை தாயகத்தில் கொண்டாடுவோம் ![/size][/size]

முன்பு ஒரு நம்பிக்கை இருந்தது. தற்பொழுது ???

முன்பு ஒரு நம்பிக்கை இருந்தது. தற்பொழுது ???

[size=4]எதை வைத்து முன்பு நம்பிக்கை இருந்தது என்கிறீர்கள்? [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.