Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு !

Featured Replies

[size=3]

LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ![/size]

[size=3]

நாடுகடந்த தமிழீழ .அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்விற்கு முன்நிகழ்வாக, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நவ 22ம் நாள் மாநாடொன்றும் இடம்பெறுகின்றது.[/size]

[size=3]

நாதம் ஊடகசேவை Live : http://naathamnews.com/?page_id=306[/size]

[size=3]

உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.[/size]

[size=3]

ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைத்துக் கொள்ளவது குறித்தும், ஐ நா வின் உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை வழியே சிறிலங்காவுக்கு தொடர்பில் அனைத்துலக ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டியமை அவசியம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு இது வரை என்ன விடய்ததில் முன்னேற்றங்களைக் கண்டது என்று பகிர்ந்து கொள்ள முடியுமா? ஏன் கேட்கின்றேன் என்றால், இன்றைக்கு இரண்டு பிளவுகளாகப் பிரிபட்டு மோதல்ளுக்கு நாடு கடந்த அரசு தொடக்கமும் காரணமாகும். இது சிங்களவர்களோடு இயங்குவதாகச் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் அவர்கள் கொடக் கொண்டன் என்றால் இவர்கள் விடாக் கொண்டன்களாகச் செயற்படும் இந்த நிலமையில், ஏதாவது ஒரு முன்னேற்றகரமான செய்லகளில் ஈடுபடுவதன் ஊடாகத் தங்களின் வெற்றிகளை மக்கள் மத்தியில் இடம் பிடிப்பதை விட்டு விட்டு, விளம்பரத்துக்காகவும், மக்கள் ஆதரவைக் காட்டவும் ஏட்டிக் போட்டியாகச் செயற்படுவதில் என்ன வகையில் நியாயம்??

இந்தக் கூட்டம் கூட ஒரு விளம்பரமாகவே இருப்பதாகத் தோன்றுகின்றது. கடந்த அமர்வில் கதைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் அறிய முடியவில்லை

  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம் : சீற்றத்தில் சிறிலங்கா அரசு !

பிரித்தானிய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்து வரும் மற்றுமொரு அங்கீகாரமாக பலராலும் கருதப்பட்டு வருவதானது சிறிலங்காவினை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.

இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வினை சீர்குலைப்பதற்கான மறைமுகமாக முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.

நாளை வியாழக்கிழமை (29-11-2012) பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வான புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கம் அறிவித்துள்ளது.

BRENT TOWN HALL எனும் முகவரிக்கு மாற்றாக Zoroastrian Centre/ 440 Alexandra Avenue / Rayners Lane / HA2 9TL / Nearest Tube: Raners Laneஎனும் புதிய முகவரிவரியில் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடக்க அமர்வு இடம்பெறவிருக்கின்றது.

தொடக்க நாள் அமர்வில் பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வானது டிச2ம் நாள் வரை தொடர்சியாக இடம்பெறவுள்ள பாராளுமன் அமர்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் http://naathamnews.com/?page_id=306 இணையத்தளத்தின் ஊடாக உலகத் தமிழர்கள் கண்டுகொள்ள முடியுமென ஊடகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னது போல நாடு கடந்த அரசு என்பதற்கு விளம்பரத்துக்காகவே இயங்கும் அமைப்பு என்ற தோற்றத்தை உங்களின் 2வது தகவல் மூலம் வெளிப்படுத்துகின்றீர்கள்.

  • தொடங்கியவர்

ஐயா விளம்பரம் தேட இதுவொன்றும் வியாபாரம் அல்ல.

இனத்தின் விடுதலைப் போராட்டம்.

தயவுசெய்து பொறுப்பற்ற முறையில் சேறுவாரிப் பூசாமல் தோழமையுணர்வுடன் கைகோர்த்து சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுக்க போராடுவோம் வாரீர்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு முதலில் நான் கேட்க கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா முதலில். இவ்வளவு காலமும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரிந்தால் தானே, மக்கள் உங்கள் கூட இணைந்து போராடுவார்கள். ஆகவே நீங்கள் கடந்த 3 வருடத்தில் என்னென்ன மாற்றத்தைச் செய்தீர்கள் என்று சொல்லுங்கள். மற்றும்படி எவ்வித தனிப்பட்ட கோபமும் கிடையாது. நீ செய்தாயா என்னைப் பற்றிக் கேட்க என்று நினைத்தீர்கள் எனில் அதைச் சொல்லுங்கள்.

என்னுடைய வருத்தம் என்னவெனில் இன்றைய பிரிவுகளுக்கு நாடு கடந்த அரசும் காரணமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் அது பற்றிய தெளிவு அவசியம் என்பதால் தான் கேட்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா விளம்பரம் தேட இதுவொன்றும் வியாபாரம் அல்ல.

இனத்தின் விடுதலைப் போராட்டம்.

தயவுசெய்து பொறுப்பற்ற முறையில் சேறுவாரிப் பூசாமல் தோழமையுணர்வுடன் கைகோர்த்து சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுக்க போராடுவோம் வாரீர்.

முதலில் தூயவன் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாருங்கள் அகரன்

லண்டனில் கடந்த வருடம் நடந்த மாவீரர் தினத்தில் இரண்டாவது அணிக்கும் (சங்கீதன் ) உங்களுக்கும் ஒரு தொடர்பும்

இல்லை என்று அறிவித்தீர்கள் . இந்தவருடம் எப்பிடி அதே மேடையில் சிறப்பு பேச்சாளராக நா .க. த அமைப்பினர் .

எங்களைப் பொறுத்த வரையில் பாம்பு புற்றை விட்டு வெளிவரத் தொடங்குகின்றது .

உள்நாட்டுக்கு தமிழ் கூட்டமைப்பு.. வெளிநாட்டுக்கு நாடு கடந்த அரசாங்கம்..

சுருக்கமா சொன்னால் இரண்டும் ஒரு செல்லாத நாணயத்தின் இருபக்கங்கள்..

*********** அரசியல் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சிரமமான காலப்பகுதியில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளும் அதன் இருப்பும் அவசியமான ஒன்று. அவர்கள் தம்மை இன்னும் இன்னும் ஸ்திரப்படுத்தி..காத்திரமாகச் செயற்பட வழிகாட்டுவதை விடுத்து ஏறி மிதிக்க நினைப்பது மிகவும் தவறான அணுகுமுறை. இவை எதிரிக்கே வலுச்ச்சேர்க்கும்.

யூதர்கள் பல கோணங்களில் செயற்பட்டுத்தான் ஒரு இலக்கை அடைந்தார்கள். எம்மிலும் பலர் சுய ஆர்வத்தோடு பல வழிகளில் ஒரே இலட்சிய தேவைக்காக நீதியாக நியாயமாக செயற்படுகின்ற போது அவர்களை வஞ்சிப்பதை தவிர்த்து அவர்களுக்கு வழிகாட்டுவதே சிறப்பு..! இன்னொரு வேளையில் அவர்களை ஒரு இலக்கு நோக்கி கொண்டு வர முடியும். இன்று பன்முனை அணுகுமுறைகள் அவசியமாவதோடு அது எதிரிகள் வஞ்சகர்கள்.. எம்மை இலகுவாக குறிவைப்பதில் இருந்தும் காத்து நிற்கும்.

நாம் இன்று பல முனை நகர்வுகளை நம்பிக்கையூடான வழிமுறைகளில் செய்ய நம்பிக்கையான அமைப்புக்களை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது.

வட அயர்லாந்து ஐ ஆர் ஏ இயக்கம் பிரிட்டனால் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதும்.. அதன் அரசியல் செயற்பாட்டை சிம்பைன் (Sinn Féin) அமைப்பு உறுதியோடு மேற்கொண்டு தான் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய வெள்ளி உடன்படிக்கைக்குள் வட அயர்லாந்துப் பிரச்சனையைக் கொண்டு போனார்கள்.

[Sinn Féin (/ˌʃɪnˈfɛɪn/ shin-FAYN; Irish: [ʃɪnʲ fʲeːnʲ]) is a left wing, Irish republican political party in Ireland. The name is Irish for "ourselves" or "we ourselves",[7][8] although it is frequently mistranslated as "ourselves alone".[9] Originating in the Sinn Féin organisation founded in 1905 by Arthur Griffith, it took its current form in 1970 after a split within the party. Sinn Féin is led by Gerry Adams, and has elected representatives in both Northern Ireland and the Republic of Ireland.[10] The party in its present form has historically been associated with the Provisional IRA.[11]]

http://en.wikipedia..../wiki/Sinn_Féin

தயவுசெய்து குறைபிடிப்பதும் கேள்வி கேட்பதுமே உங்கட கடமை என்று இருக்காமல்.. நல்ல வழிகாட்டுதலை வழங்குங்கள் அல்லது நீங்களா வழி நடத்த முனையுங்கள்..! இப்போ குறைபிடிக்கவும்.. காழ்ப்புணர்ச்சியை கொட்டவும் எமக்குள் நிறைய ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். நல்ல வழிகாட்டகலை.. வழிநடத்தலை செய்யத்தான் ஆட்களில்லை..! :icon_idea:

நாடு கடந்த தமிழீழ அரசின் முயற்சிகள் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.

Edited by nedukkalapoovan

[size=1]

[size=5]நாடு கடந்த அரசு என்ன இதுவரை செய்தது?[/size][/size]

[size=1]

[size=4]எனக்கும் முழுமையாக தெரியாது. ஆனால் அவர்களில் சிலர் செய்யும் வேலைகளை எமக்குள் உள்ள மற்றைய அமைபுக்கலால் செய்யமுடியாது.[/size][/size]

[size=1]

[size=4]உதாரணத்திற்கு 'நாடு கடந்த அரசின் யாப்பு' - இவ்வாறு ஒன்றை உலகத்தில் வித்தியாசமான அணுகுமுறையில் எமது பிரச்சனயை எடுத்து அணுகுவது. [/size][/size]

[size=1]

[size=4]கொள்கை ரீதியாக 'நாடு கடந்த அரசு' என்பது மிகவும் புதுமையான ஆனால் சாத்தியமான, அத்துடன் தேவையான அணுகுமுறை. [/size][/size]

[size=1]

[size=4]ஏன்? [/size][/size][size=1]

[size=4]திடீரென சர்வதேசம் எம்மை அங்கீகரிக்க விரும்பினால் அவர்களால் யாரை எம்மில் அங்கீகரிக்க முடியும்? [/size][/size]

[size=1]

[size=4]
உலகத்தமிழர் பேரவை ?
[/size][/size]

[size=1]

[size=4]
அனைத்துலக செயலகம் ?
[/size][/size]

[size=1]

[size=4]
விடுதலைப்புலிகள் அமைப்பு ?
[/size][/size]

[size=1]

[size=4]
நாடு கடந்த அரசு?
[/size][/size]

[size=1]

[size=4]திடீரென சர்வதேசம் எம்மை அங்கீகரிக்க விரும்பினால்... இது சாத்தியமா? [/size][/size]

[size=1]

[size=4]இவ்வாறான சாத்தியங்கள் கடந்த பத்து வருட காலத்தில் ஏற்பட்டன, அங்கெல்லாம் அமேரிக்கா தனது நிலை சார்ந்தவர்களை இடைக்கால அரசில் நியமித்தது. [/size][/size]

[size=1]

[size=4]
- அப்கானிஸ்தான்
[/size][/size]

[size=1]

[size=4]
- ஈராக்
[/size][/size]

[size=1]

[size=4]
- இலிபியா
[/size][/size]

[size=1]

[size=4]
- கொசவா
[/size][/size]
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா!

நீங்கள் சொல்கின்ற நன்மைகளை வரவேற்கின்றேன். தொடங்கும்போது பலருடைய எதிர்பார்ப்பு அது. ஆனால் அதன் அடிப்படையிலா இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதைத் தான் கேட்கின்றேன். ஏன் மாவீரர் தினம் நடத்துகின்றீர்கள் என்று கேட்டால் மற்றய அமைப்பு, அப்படியான நாட்களை வைத்துத் தான் மக்கள் ஆதரவைக் கூட்டுகின்றது அதனால் இவர்களும் அதைச் செய்கின்றார்களாம்...( மற்றய அமைப்பும், இவ்வளவு சனம் வந்தது பெருவெற்றி என்று மாவீரர் தினத்தில் மக்கள் வருகையை வைத்தே வெற்றி கொண்டாடுகின்றார்கள்.)

நாடு கடந்த அரசு தொடங்கப்படும்போதும் சரி, அதன் நோக்கங்கள் பற்றிய எல்லோருடைய எதிர்பார்ப்பும் அமையவாகச் செயற்படவில்லையே என்பது தான் கேள்வியே தவிர, நாடு கடந்த அரசு போன்ற அமைப்புக்கள் இருப்பதால் என்ன பயன் என்பது பற்றிக் கேட்கவில்லை.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாட்டு தான் நினைவிற்கு வருகிறது

உண்மையில் ஆக்கபூர்வமா நடந்தால்!!! வாழ்த்துக்கள்.

வெறுமனே போட்டி மாவீரர்தினம் போல இதையும் பிரித்தானிய தமிழர் பேரவை மாநாடு நாடாத்தியது ஆகவே நாமும் நாடாத்துவோம் என்று நாடாத்தாமல் இருந்தால் சரி

அகூதா!

நீங்கள் சொல்கின்ற நன்மைகளை வரவேற்கின்றேன். தொடங்கும்போது பலருடைய எதிர்பார்ப்பு அது. ஆனால் அதன் அடிப்படையிலா இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதைத் தான் கேட்கின்றேன். ஏன் மாவீரர் தினம் நடத்துகின்றீர்கள் என்று கேட்டால் மற்றய அமைப்பு, அப்படியான நாட்களை வைத்துத் தான் மக்கள் ஆதரவைக் கூட்டுகின்றது அதனால் இவர்களும் அதைச் செய்கின்றார்களாம்...( மற்றய அமைப்பும், இவ்வளவு சனம் வந்தது பெருவெற்றி என்று மாவீரர் தினத்தில் மக்கள் வருகையை வைத்தே வெற்றி கொண்டாடுகின்றார்கள்.)

நாடு கடந்த அரசு தொடங்கப்படும்போதும் சரி, அதன் நோக்கங்கள் பற்றிய எல்லோருடைய எதிர்பார்ப்பும் அமையவாகச் செயற்படவில்லையே என்பது தான் கேள்வியே தவிர, நாடு கடந்த அரசு போன்ற அமைப்புக்கள் இருப்பதால் என்ன பயன் என்பது பற்றிக் கேட்கவில்லை.

[size=1]

[size=4]#1 : மாவீரர் தின செய்தி 2009 க்கு முன்னர் ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பிக்கப்பட்டது. 2009க்கு பின்னர் வரும் மூன்று அறிக்கைகளும் ஒன்றையே சொன்னாலும் நாடு கடந்த அரசு மட்டுமே அதை மற்றை மொழியில் எடுத்து செல்கிறது என எண்ணுகிறேன். [/size][/size]

[size=1]

[size=4]#2 : ஆம் அவர்கள் பல விடயங்களை வடிவாக செய்யவில்லை. அவர்கள் மீது குறைகள் உள்ளன. மக்களாகிய எங்கள் மீதும் உள்ளன. குறைகளை உங்களுக்கு சுட்டிக்காட்ட முழு உரிமையும் உள்ளது, அவர்கள் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]நான் தனிப்பட்ட ரீதியில் திருமுருகன் காந்தி போன்று மக்களை மாதம் இவர்கள் நாடுகள் ரீதியாக சந்திப்பதை விரும்பினேன். நடைமுறையில் அதிலும் சிக்கல் இருக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]இந்தக்களத்திலும் ஒரு உறுப்பினர் உதவி கேட்டார் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=100557[/size][/size][size=1]

[size=4]நாங்கள் செய்தோமோ தெரியவில்லை. [/size][/size]

[size=6]UN Urged to Send Officials to Protect Jaffna University Students: TGTE[/size]

[size=3]

[size=5]• Sri Lankan military stormed the Jaffna University and attacking students.

• There are also concerns about the safety of women students, as there are reports that the security forces have entered women's dormitories.

• The military is roaming in and around the Jaffna University hunting for students.

/EINPresswire.com/ NEW YORK: Novermber 28, 2012:--

-- Mr. Visuvanathan Rudrakumaran, the Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE) today urgently urged the UN Secretary General Ban Ki Moon to send a team of high-level UN officials to the Jaffna University in the island of Sri Lanka to protect the students and faculty from rampaging Sri Lankan security forces.

On May 27th, The Sri Lankan Security forces attacked students who were peacefully assembled to remember those who were killed by the Sri Lanka Security forces. According to international wire services, at least 20 students were injured on the first day of the attack, when the military stormed the University. The military is roaming in and around the Jaffna University hunting for students.

There are also concerns about the safety of women students, as there are reports that the security forces have entered women's dormitories. Sri Lankan Security forces have a history of sexually assaulting and raping Tamil women.

A Tamil Parliamentarian was attacked tried to stop military abuse and journalists were beaten up for taking pictures.

TGTE's Parliament is currently having a Pre-Session panel discussion in the British Parliament complex and TGTE Legislators brought the situation in the Jaffna University to the attention of British Members of Parliament who attended the panel discussion. TGTE is also bringing this situation to the attention of world leaders.

"We make this urgent appeal to prevent a repeat of past massacres of Tamils and rape of Tamil women by the Sri Lankan Security forces. As a first step we urge you to send your UN Country team in Colombo to immediately visit Jaffna University " said Mr. Rudrakumaran.

For info contact: pmo@tgte.org

About Transnational Government of Tamil Eelam (TGTE):

Transnational Government of Tamil Eelam (TGTE) was created in the aftermath of the bloody end of Sri Lanka's war; resulting tens of thousands of Tamil civilians were killed and sexually assaulted by the Sri Lankan security forces. UN documented war crimes and recommended an International Commission of Inquiry.

Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected government of the Tamil Diaspora of Sri Lanka. Its actions are non-violent, democratic and diplomatic.

It held internationally supervised elections in twelve countries to elect Members of Parliament (MPs). These MPs drafted and ratified a Constitution and elected a Prime Minister, a Cabinet and a Speaker.

Web: www.tgte-us.org and www.en.naathamnews.com[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 3 வருடத்தில் செய்தார்கள் என்பது பற்றிய கேள்விக்கு இதுவரைக்குப் பதில் இல்லை. எனக்கு அது பற்றிய விளக்கம் மட்டுமே வேண்டும். இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்பதை விடுங்கள்...

மாவீரர் அறிக்கை தலைவர் வெளியிடும்போது அதைத் தமிழ்நெற் தொடக்கம் பலர் மொழி பெயர்த்தார்கள். பிற்பாடு வந்த அறிக்கைகள் எப்படிப்பட்டவை என்பது உங்களுக்கும் தெரியும்... அதில் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கம் ஒன்றையும் தெளிவுபடுத்தவில்லை என்பதை நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள்... அப்படிபட்டவற்றை மொழி பெயர்த்து...

நாடு கடந்த அமைப்புத் தொடங்கப்பட்ட பின்னர், பலர் இரு பிரிவாகப் பிரிந்தார்கள். இரு நடப்பும் எல்லா அமைப்பையும் தங்களுக்கு ஆதரவானது எதிரானது என்று பங்கு போட வெளிக்கிட்டனர். வானொலி, தொலைக்காட்சி என்று எல்லாமே இன்று 2ல் ஏதாவது ஒரு பிரிவுக்குள் அடங்க முயல்கின்றன.

இவை எல்லாம் எப்போதில் இருந்து ஆரம்பமானது? அதையும் மீறி நாடு கடந்த அரசு ஏதாவது சாதிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளாக எதுவுமே இல்லை... மற்ற அமைப்பினை விடுங்கள். அவர்கள் 2009க்கு முதல் என்ன செய்தார்களோ, அதைத் தான் செய்யப் போகின்றார்கள். அவர்கள் அந்த வளையத்தில் இருந்து வெளியே வரப் போவதில்லை.

இன்று நாடு கடந்த அரசு மேலே இப்படிக் கேள்வி கேட்டவுடன் உடனே என்னில் ஏதாவது குற்றம்பிடித்து என்னை மடக்கலாம் என்று தான் பார்க்கின்றீர்களே தவிர, இப்படி ஒன்றுமே செய்யாமல் நாட்களை கடத்துவது பற்றி உங்களுக்கு வலிக்கவில்லை. அதை நியாயப்படுத்துவதன் மூலம், கால வெறுமைக்குள் நீங்களும் மக்களை அழைத்துச் செல்கின்றீர்கள். என்னமும் எத்தனை காலத்துக்கு இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

ஒரு நாளில் மக்கள் வெறுப்படைந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இப்படிக் கஸ்டப்பட்டு அடிபட்டு ஒன்றுக்குமே உதவாமல் போவதை விட, சிங்கள அரச பயங்கரவாதமே பரவாயில்லை என்ற எண்ணத்தை மனம் நாடும். அப்படி ஒரு செயற்பாட்டில் தான் இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன.

எதிரி செய்கின்ற பேச்சுவார்த்தையில் கால இழுத்தடிப்பு என்பது எங்களைப் பலவீனப்படுத்தவே என்பதைத் தலைவர் பல தடவை சொல்லியிருமிக்கின்றார். எங்களின் போராட்டத்துக்கும் அதுவே நடந்தது.

மற்றய அமைப்பு பிழையாக நடந்ததா, சரியாக நடந்ததா என்று எல்லாம் தெரியாது...ஆனால் நாடு கடந்த அரசு தொடகும் வரைக்கும் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருந்தார்கள் என்றே என் மனது நினைக்கின்றது...---------------------

பணரீதியான உதவி எல்லோருக்கும் செய்ய முடியவில்லை என்பது உண்மை தான். ஆனாலும் என் பொறுப்பிலும் சிலர் இருக்கின்றனர். இப்படியான வேண்டுகோள்களுக்காக அவர்களுக்கு அனுப்புவதை நிறுத்தித் தான் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிவரலாம்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Robert Evans ‏[size=3]@RobertJEEvans[/size]

The @TGTE conference opens at House of Commons. @TGTE_UK@TGTE_US [size=1]http://[/size]twitpic.com/bh9ond

Edited by Queen

[size=1][size=5]நாடு கடந்த அரசு என்ன இதுவரை செய்தது?[/size][/size]

[size=1][size=4][/size][/size]

[size=1][size=4]ஏன்? [/size][/size]

[size=1][size=4]திடீரென சர்வதேசம் எம்மை அங்கீகரிக்க விரும்பினால் அவர்களால் யாரை எம்மில் அங்கீகரிக்க முடியும்? [/size][/size]

[size=4]
உலகத்தமிழர் பேரவை ?
[/size]

[size=1][size=4]
அனைத்துலக செயலகம் ?
[/size][/size]

[size=1][size=4]
விடுதலைப்புலிகள் அமைப்பு ?
[/size][/size]

[size=1][size=4]
நாடு கடந்த அரசு?
[/size][/size]

[size=1][size=4]திடீரென சர்வதேசம் எம்மை அங்கீகரிக்க விரும்பினால்... இது சாத்தியமா? [/size][/size]

நிச்சயமாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் எதுவும் இருக்காது. நாடு கடந்த அரசின் கோட்பாடு ஒரு நல்ல கோட்பாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பனங்காய், மற்றும் தூயவன் கூறியது போன்று, ஒரு சிலர் தங்கள் இருப்புகளுக்காக நடத்தும் நாடகங்களே இவை. மற்றைய தமிழ் அமைப்புகளுக்கும் நாடுகடந்த அரசாங்கத்திற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. இவர்களும் அதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்மக்களுக்காகச் செய்தார்கள், செய்யப் போகின்றார்கள் என்று அறிக்கை வராது.. இந்த அமர்வு முடிந்த பின்பு, மகிந்தவுக்கு படுக்கையில் சிறுநீர் கழிந்தது... சர்வதேசம் இந்த அமர்வை உன்னிப்பாக அவதானித்தது என்று அறிக்கை வரும்... பாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில அமைப்புக்கள், மக்களை இணைக்காமல் இப்பவும் மாபியாக்குழுக்கள் ரேஞ்சிலை நாலு பேர் சேர்ந்து அது பிடுங்கினான்,இது பிடுங்கினான் என்று உள்ளதையும் கெடுங்கோ.. எவ்வளவு காலத்துக்கு இந்த ஒளிச்சு பிடிச்சு விளையாட்டு? பகிரங்கமாய் மக்கள் முன் செயற்படுங்கள் பொறுப்புக்களை அவர்களிடம் கொடுங்கள்,அவர்களையும் பங்காளராக்குங்கள் அதை விட்டு இன்னும் திரைமறைவு செயற்பாடுகள் வேண்டாம்.

புரியவேண்டியவர்கள் புரிந்துகொள்வார்களா?????? :(:icon_idea:

தயவுசெய்து குறைபிடிப்பதும் கேள்வி கேட்பதுமே உங்கட கடமை என்று இருக்காமல்.. நல்ல வழிகாட்டுதலை வழங்குங்கள் அல்லது நீங்களா வழி நடத்த முனையுங்கள்..! இப்போ குறைபிடிக்கவும்.. காழ்ப்புணர்ச்சியை கொட்டவும் எமக்குள் நிறைய ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். நல்ல வழிகாட்டகலை.. வழிநடத்தலை செய்யத்தான் ஆட்களில்லை..! :icon_idea:

செய்ய ஆட்களும் இருக்கிறார்கள்,பங்களிக்க மக்களும் இருக்கிறார்கள் முதலில் இரகசியச்செயற்பாடுகளை விடுத்து பகிரங்கமாக செயற்படுங்கள் யார் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள்????

Edited by ஜீவா

புரியவேண்டியவர்கள் புரிந்துகொள்வார்களா?????? :(:icon_idea:

[size=1]

[size=4]தம்பி ஜீவா,[/size][/size][size=1]

[size=4]புரிய வேண்டியவர்கள் கள உறுப்பினர்களா? நன்றிகள். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1][size=4]தம்பி ஜீவா,[/size][/size]

[size=1][size=4]புரிய வேண்டியவர்கள் கள உறுப்பினர்களா? நன்றிகள். [/size][/size]

இல்லை அண்ணா,

நான் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு கிடைக்க கூடியவெளிகளினூடு சொல்ல நினைக்கிறேன். :)

[size=4]

இல்லை அண்ணா,

நான் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு கிடைக்க கூடியவெளிகளினூடு சொல்ல நினைக்கிறேன். :)

[/size]

[size=4]நன்றிகள் தம்பி விளக்கத்திற்கு. [/size]அவர்களின் கருத்தை செயல்பாட்டை [size=4]நா[/size]கரீகமாக விமர்சிக்கலாம்.

[size=1][size=4]எவ்வாறு ஒருவர் அறியாமையை இகழ்வது பிழையோ இல்லை ஒருவரின் தொழிலை இகழ்வது பிழையோ அதேபோன்று 'படித்தவர்கள்'என விழிப்பதும் தவறு என எனக்கு தெரிகின்றது. [/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றிகள் தம்பி விளக்கத்திற்கு. [/size]அவர்களின் கருத்தை செயல்பாட்டை [size=4]நா[/size]கரீகமாக விமர்சிக்கலாம்.

[size=1][size=4]எவ்வாறு ஒருவர் அறியாமையை இகழ்வது பிழையோ இல்லை ஒருவரின் தொழிலை இகழ்வது பிழையோ அதேபோன்று 'படித்தவர்கள்'என விழிப்பதும் தவறு என எனக்கு தெரிகின்றது. [/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

தவறைச்சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள், யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காய் மனம் வருந்துகிறேன்.

திருத்தப்பட்டுள்ளது நன்றி அகூதா அண்ணா. :)

[size=4]ஜீவா,[/size][size=1]

[size=4]பண்பாக கருத்துப்பரிமாறியமைக்கு நன்றிகள்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.