Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு

Featured Replies

என்ன அஜீவன் அண்ணா இணயத்தில எழுதிப் படங்ககாட்டிற யாரிட்டையோ நல்லா எமாந்து போய்டீங்க போல?

பேரை எழுதினாத் தானே மற்றாக்களுக்கும் இவையின்ர உண்மயான முகங்கள் தெரியும்.

எதோ சுகமாக வீடு போய்ச் சேந்தீர்களே.

  • Replies 226
  • Views 34.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

ம்ம்ம்ம்... அஜீவன் லண்டனுக்கு வந்தால் என்னாவது? என்று யோசித்தேன்!!! தலை சுத்தியது!!!....

இங்கிருந்து யாழ்களத்தில் மா..., செ... என்று இரு முகமாக ஒன்று, ச.., பொ... என்றொன்டு, க.., ...., ... என்று மூன்றுமுகமொன்று, ...... இப்படி யாழ்களத்தில் உலாவுகின்ற சிலதுகளின் பலமுக குட்டுக்கள் உடந்தல்லோ போய்விடும்!! ம்ம்ம்ம்ம்..... பார்ப்போம்....

ஆனால் லண்டனிலிருந்து சில திரைப்படத்துறை சார்ந்த கலையர்களையும் இவ் யாழ்களம் கொண்டுள்ளது!

அரோகரா...

அரோகரா...

ம்ம்ம்ம்... அஜீவன் லண்டனுக்கு வந்தால் என்னாவது? என்று யோசித்தேன்!!! தலை சுத்தியது!!!....

இங்கிருந்து யாழ்களத்தில் மா..., செ... என்று இரு முகமாக ஒன்று, ச.., பொ... என்றொன்டு, க.., ...., ... என்று மூன்றுமுகமொன்று, ...... இப்படி யாழ்களத்தில் உலாவுகின்ற சிலதுகளின் பலமுக குட்டுக்கள் உடந்தல்லோ போய்விடும்!! ம்ம்ம்ம்ம்..... பார்ப்போம்....

ஆனால் லண்டனிலிருந்து சில திரைப்படத்துறை சார்ந்த கலையர்களையும் இவ் யாழ்களம் கொண்டுள்ளது!

அரோகரா...

நல்ல வேளை " எ " :lol::lol: என்ற எழுத்தென்று அரோகரா எழுதவில்லை.... பிறகு நான் தலையைப் பிச்சு ...(இருப்பதோ முடிக்குள்ளால் மூன்று நான்கு முடிகள்)

என்னவோ :lol::lol: ஆகி ஆதிவாசியாக மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பேன்..... :shock: :shock:

தப்பிப் பிழைத்த -எல்லாள மஹாராஜா-

அஜீவனண்ணா சந்திப்பைப் பற்றி எல்லாரும் கருத்துக்களை எழுதினோம் உங்களைத் தவிர..நீங்களும் வந்து எழுதுங்கோ :-)

பரவாயில்லை மன்னா.....

மரத்தில தொங்கிறதுக்கு ஒரு துணிவு வேணும்.

துணிவிருந்தா... வாரும்!

நாலு முடியோட பார்த்தா....சேச்சே

:idea: :idea: :idea: இங்க வாரும். பிறகு உடம்பெல்லாம் முடியென்று புூரிச்சுப்போவீர்.

துணைக்கு வேணுமென்றால் அந்தப்புரத்தில இருக்கிற

கிழட்டு இராணியையும் கூட்டி வாரும்!

:lol::lol::lol::lol::lol::lol:

துணிந்து அழைக்கும் ஆதிவாசி

என்ன அஜீவன் அண்ணா இணயத்தில எழுதிப் படங்ககாட்டிற யாரிட்டையோ நல்லா எமாந்து போய்டீங்க போல?

பேரை எழுதினாத் தானே மற்றாக்களுக்கும் இவையின்ர உண்மயான முகங்கள் தெரியும்.

எதோ சுகமாக வீடு போய்ச் சேந்தீர்களே.

சுயாதீன கலை திரைப்பட மையம்- ரொரன்ரோ! ... சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா! ...

என்று படம் காட்டும் ரதன் என்பவர்தான் அவர்.

அவரது படத்தையும் நிச்சயம் போடுறன்.

வந்ததும் வேலையில்லையா நாரதா?

கொஞ்சம் தூங்க விடுங்க....... :P

அஜீவனண்ணா சந்திப்பைப் பற்றி எல்லாரும் கருத்துக்களை எழுதினோம் உங்களைத் தவிர..நீங்களும் வந்து எழுதுங்கோ :-)

நிச்சயம்...........

நல்ல விடயங்களை நல்லா எழுத வேணும்.

கொஞ்சம் பொறுங்கோ சிநேகிதி.

எடுத்த போட்டோக்களை போடுவீங்களா நிதர்சன்?

பரவாயில்லை மன்னா.....

மரத்தில தொங்கிறதுக்கு ஒரு துணிவு வேணும்.

துணிவிருந்தா... வாரும்!

நாலு முடியோட பார்த்தா....சேச்சே

:idea: :idea: :idea: இங்க வாரும். பிறகு உடம்பெல்லாம் முடியென்று புூரிச்சுப்போவீர்.

துணைக்கு வேணுமென்றால் அந்தப்புரத்தில இருக்கிற

கிழட்டு இராணியையும் கூட்டி வாரும்!

:lol::lol::lol::lol::lol::lol:

துணிந்து அழைக்கும் ஆதிவாசி

:lol: :P :D

நல்ல வேளை " எ " :lol::lol: என்ற எழுத்தென்று அரோகரா எழுதவில்லை.... பிறகு நான் தலையைப் பிச்சு ...(இருப்பதோ முடிக்குள்ளால் மூன்று நான்கு முடிகள்)

என்னவோ :lol::lol: ஆகி ஆதிவாசியாக மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பேன்..... :shock: :shock:

தப்பிப் பிழைத்த -எல்லாள மஹாராஜா-

:!: எல்லாள மஹாராஜா தப்பியது தம்பிரான் புண்ணியம்.

:!: நான் எப்பவோ லண்டனுக்கு பல முறை வந்துட்டனே ஜெயதேவன்.........அது தெரியாதா?

நீங்க அப்ப அங்க இருந்தீங்க........ :lol:

அதுக்கு பிறகுதான் இடம் மாறினீங்க :!: :P

அஜீவன் முதல் மரியாதையை ஆங்கிலத்தில் எடுக்கிறதோ டாவின்சி கோட்டை தமிழில் எடுக்கிறதோ எண்டு கேபிள் காரிலை இருந்து யோசிக்கிறாராம். :roll:

நல்ல பகிடி...........

வயிறு நோகுது குறுக்ஸ் :lol::lol::lol:

முதலில் என்னை அயீவன் அண்ணாவும் நிதர்சன் அண்ணாவும் மன்னிக்கவேண்டும். இருவரின் தனிமடல்களும் எனக்கு கிடைத்திருந்தது. காலம்கடந்து பார்வையிட்ட காரணத்தால் என்னால் அங்கு வரமுடியவில்லை. இங்கு எல்லோரும் வந்து சந்திப்பைப் பற்றிச் சொல்லும்போது கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற சோகம்தான் என்னுள் குடிகொள்கிறது. மீண்டும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்தமுறை வருவார் என்று கூறுகின்றார்கள். அப்பொழுது நிச்சயம் நான் வருவேன்.

முதலில் என்னை அயீவன் அண்ணாவும் நிதர்சன் அண்ணாவும் மன்னிக்கவேண்டும். இருவரின் தனிமடல்களும் எனக்கு கிடைத்திருந்தது. காலம்கடந்து பார்வையிட்ட காரணத்தால் என்னால் அங்கு வரமுடியவில்லை. இங்கு எல்லோரும் வந்து சந்திப்பைப் பற்றிச் சொல்லும்போது கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற சோகம்தான் என்னுள் குடிகொள்கிறது. மீண்டும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்தமுறை வருவார் என்று கூறுகின்றார்கள். அப்பொழுது நிச்சயம் நான் வருவேன்.

மீண்டும் வரும் போது

நிச்சயம் சந்திப்போம்.

நன்றி!

AirCanadaLayoffs.gif

எனது அமெரிக்க - கனடாவுக்கான முதல் பயணம் இது............

இதில் என்ன புதுமையிருக்கப் போகிறது..........

ஐரோப்பா முழுவதும் சுற்றியிருக்கிறேன்.

அது ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது.

காரணம் நான் வாழும் சுவிஸ் நாட்டைச் சுற்றி

ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

அதனாலோ என்னவோ 2-3 நாட்கள் லீவாக இருந்தாலும்

காரிலோ - புகையிரதத்திலோ அல்லது விமானத்திலோ

எங்காவது போய் வர முடிகிறது.

இடம் பிடிக்கா விட்டாலோ அல்லது

வானிலை சரியில்லாவிட்டாலோ

பக்கத்து நாட்டுக்கோ அல்லது வாழும் நாட்டுக்கோ

போய் விடலாம்..............

அமெரிக்காவுக்கோ - கனடாவுக்கோ போவது என்பது

பயண அலுப்பைத் தர வல்லது என்பது மட்டுமல்ல.

அதிகாரிகளின் சோதனைகள் - கேள்விகள்!!!

இப்டியான அலுப்பையும் தரவல்லது.

இவற்றை ஏற்கனவே

மனம் ஏற்றுக் கொள்ளமானால்

பிரச்சனையே இருக்காது.

இருந்தாலும்

குடிவரவு அதிகாரிகளிடம்

கொஞ்சம் வார்த்தை தடுமாறினாலும் போதும்

பிரச்சனைகள் எந்த ரூபத்திலும் வரலாம்

என்பதை முன்னால் தடுமாறுவோர் அவஸ்தையே

பின்னால் வருவோருக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

நான் எயார் கனடா விமானத்தில் பயணித்ததால்

சுவிசிலிருந்து டொரோன்டோ வழியாகவே அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது.............

சுவிஸ் சூரிச் விமான நிலையத்தில் பெரிதாய் ஒன்றுமில்லை.

அந்த நாட்டு மொழி பேசும் போதே

ரிலாக்ஸாகும் அதிகாரிகள்...........

கேட்கும் கேள்விகளுக்கு முகம் பார்த்து பதில்

சொல்லும் போதே மென்மையாகிறார்கள்.

அவர்களது குசல விசாரிப்புக்கு பதில் சொல்வதற்கும்

ஒரு பயிற்சி வேண்டும்.

நேர்மையாக இருந்தால் நிமிர்ந்து பேசலாம்.

இருந்தாலும் செப்டம்பர்11 குண்டு வெடிப்பு

கடும் சோதனைகளை உருவாக்கியிருக்கிறது.

இந்த சோதனைகள் அவர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல

விமானத்தில் போகும் எம்மையும் காப்பாற்ற

என்று நினைக்க முடிந்தால்

அவர்களுக்கு ஒத்துழைப்பதில் தவறில்லை.

விமான நிலைய அதிகாரிகளின்

குசல விசாரிப்புகள் முடிந்து

பிரயாணிகள் இருக்கும் பகுதிக்கு போன போது

பெரும்பாலான வட இந்தியர்கள் இருந்தார்கள்.

உள்ளே சென்றதும் டில்லியில் இருந்து வந்து செல்லும் எயார் கனடா விமானத்தில்தான்

நான் பயணிக்க வேண்டியிருந்தது.

ஒரு இந்திய இளைஞனை சுற்றி சுவிஸ் விமான நிலைய போலீசார்

ஏதோ துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவனோ

மேற்கத்திய நாட்டவன் போல் ஆடை அணிந்து

காதில் வோக்மன் கெட்போணும்

கையில் துருப்பு சீட்டு காடுகளையும் வைத்துக் கொண்டு

இல்லாத பொல்லாத சிலுமிச விளையாட்டுகளைக் காட்டிக் கொண்டவாறே உட்கார்ந்திருந்தான்.

போலீசார் கேட்பதற்கெல்லாம் ஓரிரு வார்த்தை பதில்கள்........

மீண்டும் ஆபிரிக்கர் போன்று அவனது கொசப்பு சேட்டைகள்.........

இவையே அவனை சந்தேகத்துக்கு உரியவனாக்கியிருக்கும்.

எனக்கே

அவன் நன்றாகவே நடிக்கிறான் என்பது புரிந்தது.

பெரும் அறிவாளிகளாக சிலர் நடிக்க முயல்வதால்

மாட்டிக் கொள்வது இப்படித்தான் என்று புரிந்தது.

விமான போடிங் நேரம் வரை இந்த காட்சியை

பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

எனக்குள்ளே ஏன் இவ்வளவு மடத்தனமாக இவன்

சேட்டைகளைச் செய்கிறான் என்று கோபமாக இருந்தது.

என் பக்கத்தில் இருந்த வட இந்தியர்

என்னோடு பேச்சுக் கொடுத்தார்.

அவரை அறிமுகப்படுத்துக் கொண்ட போது

என்னைப் பற்றி கூறினேன்.

நான் சுவிஸில் இருப்பதாக சொன்னதும்

தனது மகளைக் காண அமெரிக்கா செல்வதாக சொல்லி விட்டு

சுவிஸ் போலீஸார் ரொம்ப மோசமாம் உண்மையா? என்றார்.

நான் சிரித்தேன்.

என்ன சிரிக்கிறீங்க? என்றார்.

அதைத்தான் முன்னால பார்க்கிறீங்களே? என்று இளைஞனை விசாரிக்கும் போலீசாரை கண்ணால் காட்டினேன்.

சும்மாதானே பேசிக் கொண்டிருக்கிறாங்க என்றார்.

பொறுத்திருந்து பாருங்க என்றேன்.

விமானத்துக்குள் பயணிகளை செல்ல அழைக்கத் தொடங்கியதும்

போலீசார் அந்த இளைஞனை அழைத்துச் செல்வது தெரிந்தது.

நான் அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.

அவர் எதுவும் பேசவில்லை.

தலையை மட்டும் ஆட்டினார்.

பயணிகளது கவனிப்பு விமானத்துக்குள் செல்வதற்காக

மாறிய போது இளைஞனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது தடுப்பதற்கு யாரும் முன் வர மாட்டார்கள்.

பயணிகளது நோக்கம் பயணத்தை தொடர்வதுதானே?

போலீசார் கன கச்சிதமாக செய்தனர்.

இருந்தாலும் என்னால் அந்த இளைஞனது சிலுமிசங்கள்

எரிச்சலை உண்டு பண்ணியதற்கான காரணம் இருக்கவே செய்தது.

அவனுக்கு 20-23 வயதுதான் இருக்கும்.

நாட்டை விட்டு வேறு நாடு போக வந்து

மாட்டிக் கொண்டானே என்றே மனதை கனக்க வைத்தது.

அதுவே முகம் தெரியாத அவன் மேல் கோபத்தையும் வர வழைத்தது.

விமானம் எம்மை ஏற்றிக் கொண்டு வானில் வட்டமிட்டு.........ஏறி...........

பயணத்தை முடித்துக் கொண்டு இறங்கிய போது............

இது ஒரு விமானப் பயணம் மட்டுமல்ல

இந்த பயணம் பல பாடங்களையும் கற்றுத் தந்தது எனலாம்.

அதை மனம் திறந்து பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

உம்............

கனடாவில் தமிழ் குறும்பட விழா ஒன்று

நடத்த போகிறோம் உதவ முடியுமா என்று ஒரு நண்பர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க

சுவிஸ் குறும்பட விழாவுக்கு வந்திருந்த

குறும்படங்களை அவருக்கு அனுப்பினேன்.

அதற்கான தபால் செலவைக் கூட நான் பெற விரும்பவில்லை.

அது பல இளம் கலைஞர்களை இனம் காட்டவும்

புது படைப்புகள் உருவாகவும் உதவியாக இருக்கும்

என்றே நம்பினேன்.

இப்படியான நிகழ்வுகள் முறையானவர்களால் நடை முறைப்படுத்த வேண்டும்.

இதுவே எனது அவா.............

அப்படியான கருத்தில்

நான் அனுப்பிய குறும்படங்களை வைத்தே

அந்த நபர் முதன் முதல்

குறும்பட விழாவை கனடாவில் நடாத்தினார்.

அது தொடர்ந்தது.........

அதே போல

அவர் கடந்த வருடம் நடத்திய

குறும்பட விழாவுக்கு என்னை கனடாவுக்கு வருமாறு

அழைப்பு விடுத்தார்.

நானும் வருவதாக ஏற்றுக் கொண்டு

எனது கனேடிய வீசாவுக்காக கடிதம் ஒன்றை

அனுப்பக் கோரினேன்.

அதை அவர் சரியான நேரத்தில்

அனுப்பாது தாமதித்ததால்

விழா நடைபெற இருந்த கடைசி நாளுக்கு

இரு நாட்களுக்கு முன்னதாகத்தான் வீசா கிடைத்தது.

வீசா தாமதமாவது தெரிந்ததும்

என்னால் கடைசி நேரத்தில்

பயண ஒழுங்குகளை செய்ய முடியாது.

அது எனக்கு ஒத்து வராத ஒரு செயல்

எனவே..........வர முடியாது எனக் கூறி விட்டேன்.

கனடா வர இருப்பதாக

அமெரிக்க தமிழ் நண்பர்களிடம் சொன்ன போது

அங்கு வந்தால் இங்கும்

வந்து விட்டுப் போகலாமே என்று

சொன்னார்கள்.

அதற்காக நான் பேசி முதல் ஏற்பாட்டை செய்வதாக சொன்னவர்

திண்ணை ராஜாராம் அவர்கள்தான்.

உடனடியாகவே திண்ணை ராஜாராம் அவர்களது நண்பர்களில் சிலர் நான் கனடாவில் வந்து

நிற்பதாகவே எண்ணிக் கொண்டு

அமெரிக்கா வருவதற்கு உடனடியாக

நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்

என்று என்னோடு தொடர்பு கொண்டார்கள்.

நான் அவர்களுக்கு என் நிலையை சொன்னேன்.

நான் கனடா வர இருந்தது

கனடாவுக்கான வீசா கிடைக்க தாமதமானதால்

முடியாமல் இருக்கிறது.

கனடா வருவதற்கான அழைப்புக் கடிதம் வர ஏற்பட்ட தாமதமும்

கனடாவுக்கான தூதுவராலயம் சுவிஸில் இல்லாது

வீசாவை ஜெர்மனியின் பெர்லின்

அல்லது பிரான்சின் பாரீஸில் உள்ள கனடிய தூதுவராலயங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வீசா பெற வேண்டிய காரணத்தாலும்

பிரச்சனையாகி விட்டது என்ற விபரத்தைக் கூறினேன்.

இப்போது முடியாவிடினும்

நிச்சயம் ஒரு முறை வருவேன்

என்றும் அப்போது முடிந்தால்

ஒரு குறும்படத் திரையிடலையும்

கலந்துரையாடல் ஒன்றையும் செய்தால் பயணாய் இருக்கும் என்றேன்.

யாராவது விரும்பினால்

ஒரு குறும்பட பயிற்சிப் பட்டறை ஒன்றையும்

செய்யலாம் என்ற என் கருத்தையும் முன் வைத்தேன்.

air_canada450.jpg

பயணம் தொடரும்...................

தொடரும் பயணங்களை எதிர்பார்க்கின்றோம்....

நானும் கனடாவில் தான் இருக்கின்றேன்...நீங்கள் ஏதாவது ஏற்பாடுகளுடன் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்ததால் பெரிதாக உங்களுடன் தொடர்பு கொள்ள முயலவில்லை.

நடக்கும் நிகழ்வுகளில் சந்திக்கலாம் என்று இருந்து விட்டேன்.

ஆனால் நிகழ்வுகள் எல்லாம் தலைகீழாகி விட்டதை இப்போதுதான் அறிகின்றேன்....

கீதவாணியில் போன உங்கள் பேட்டியையும் பேட்டியெடுத்தவரின் பேக்குத்தனமான ஒரு கேள்விக்கு,

"மக்கள் நம் கலைப்படைப்புகளிற்கு அதிக அளவில் ஆதரவு தருகின்றார்கள் இல்லை .இதற்கு என்ன சொல்லுகின்றீர்கள் ? என்பதற்கு

"நாம் தரமான கலைபடைப்புகளைக் கொடுக்காமல் அவர்களைக்குற்றம் சொல்வது சரியல்ல "

என்ற ரீதியில் தந்த பதில் உண்மையைச் சுட்டி நின்றது.

ஈழத்துப் படைப்பாளிகளில் ஒரு குறை என்றும் உள்ளது. ஒரு படைப்புக்கான அதிக பட்ச விலையைக் கொடுக்காமலே மக்கள் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதுவும் கிடைக்காதவிடத்து மக்களைக் குறை சொல்வதும்....

கனடாவின் திரைப்படத்தயாரிப்பு முன்னோடி சிறீமுருகன் பல படங்களை(?) தொடர்ந்தும் எடுத்து வருகின்றார்.

மற்றவர்கள் எல்லாம் நாடகம் என்ற கட்டத்திற்கு அப்பால் இன்னும் அதை நகர்த்தத் தெரியாதவர்களாக அல்லது திரைப்படம் எடுக்கத் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்த ரதன் என்பவரைப் பற்றி நானும் தான் கேள்விப்படவில்லை. இது ஆச்சரியமாக இருக்கின்றது. திரைப்படம் சம்பந்தப்பட்ட ரவி அச்சுதன், திவ்வியராஜன்,சித்து,தனபாலன்,

தொடரும் பயணங்களை எதிர்பார்க்கின்றோம்....

நானும் கனடாவில் தான் இருக்கின்றேன்...நீங்கள் ஏதாவது ஏற்பாடுகளுடன் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்ததால் பெரிதாக உங்களுடன் தொடர்பு கொள்ள முயலவில்லை.

நடக்கும் நிகழ்வுகளில் சந்திக்கலாம் என்று இருந்து விட்டேன்.

ஆனால் நிகழ்வுகள் எல்லாம் தலைகீழாகி விட்டதை இப்போதுதான் அறிகின்றேன்....

கீதவாணியில் போன உங்கள் பேட்டியையும் பேட்டியெடுத்தவரின் பேக்குத்தனமான ஒரு கேள்விக்கு,

"மக்கள் நம் கலைப்படைப்புகளிற்கு அதிக அளவில் ஆதரவு தருகின்றார்கள் இல்லை .இதற்கு என்ன சொல்லுகின்றீர்கள் ? என்பதற்கு

"நாம் தரமான கலைபடைப்புகளைக் கொடுக்காமல் அவர்களைக்குற்றம் சொல்வது சரியல்ல "

என்ற ரீதியில் தந்த பதில் உண்மையைச் சுட்டி நின்றது.

ஈழத்துப் படைப்பாளிகளில் ஒரு குறை என்றும் உள்ளது. ஒரு படைப்புக்கான அதிக பட்ச விலையைக் கொடுக்காமலே மக்கள் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதுவும் கிடைக்காதவிடத்து மக்களைக் குறை சொல்வதும்....

கனடாவின் திரைப்படத்தயாரிப்பு முன்னோடி சிறீமுருகன் பல படங்களை(?) தொடர்ந்தும் எடுத்து வருகின்றார்.

மற்றவர்கள் எல்லாம் நாடகம் என்ற கட்டத்திற்கு அப்பால் இன்னும் அதை நகர்த்தத் தெரியாதவர்களாக அல்லது திரைப்படம் எடுக்கத் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்த ரதன் என்பவரைப் பற்றி நானும் தான் கேள்விப்படவில்லை. இது ஆச்சரியமாக இருக்கின்றது. திரைப்படம் சம்பந்தப்பட்ட ரவி அச்சுதன், திவ்வியராஜன்,சித்து,தனபாலன்,

என்ன தொடர் நொண்டிக்கொண்டு நிற்கின்றதா? ஆவலுடன் பார்த்திருக்கின்றோம்....

பார்வையுடன் -எல்லாள மஹாராஜா-

என்ன தொடர் நொண்டிக்கொண்டு நிற்கின்றதா? ஆவலுடன் பார்த்திருக்கின்றோம்....

பார்வையுடன் -எல்லாள மஹாராஜா-

பொறுங்கள்.............எல்லாள மஹாராஜா

வேலைப் பழு காரணமாக தாமதம்.

அவ்வளவே.........

வ.....வரு.......வரும்!

  • 2 weeks later...

எனது அமெரிக்க - கனடாவுக்கான முதல் பயணம் இது .2

jeeva.gif

சிறிது நாட்களுக்குப் பின்னர்

பீ.கே.சிவகுமார் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலில்

தான் சிறீராம் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும்

கூடிய விரைவில் ஒரு அழைப்பிதழை

வொசிங்டன் தமிழ் சங்கம் மூலமாக அனுப்புவதாகவும்

தீர்மானிக்கப்பட்ட தகவல்கள் மின்னஞ்சல் வழி

எமக்குள் பரிமாறப்பட்டன.

இருந்தாலும்

நான் கனடா வரவில்லை என்று தெரிந்ததும்

அந்த யோசனை தற்காலிகமாக நின்றாலும்

மீண்டும் எப்போது வந்தால் நன்றாக இருக்கும் என்று

கேட்டு அமெரிக்க நண்பர்களிடமும்

கனடா நண்பருடனும் விசாரித்தேன்.

அனைவரும்

மே மாத காலம்

நல்ல கால நிலையாக இருக்கும் என்ற

கருத்துகளை முன் வைத்தார்கள்.

வொசிங்டன் தமிழ் சங்க தலைவர்

பிரபாகரன் எழுதிய அழைப்பு மடலை

சிறீகாந் எனக்கு அனுப்பியிருந்தார்.

அதன் வழி

அமெரிக்க தூதுவராலயம்

எனக்கான வீசாவை

ஆவணங்களை மட்டும் பார்த்து தந்ததில்

எனக்கு வியப்பே!

காரணம்

நான் போவதற்கு முன்

ஏகப்பட்டவர்கள் அமெரிக்க தூதுவராலய

நடைமுறைகள் பற்றிய தவறான தகவல்களையே

பலரும் சொன்னார்கள்.

பலரது வீசாக்கள் நிராகரிக்கப்பட்ட கதைதான் அத்தனையும்.

இதை ஏன் இங்கு சொல்கிறேனென்றால்

அடுத்தவர் பேச்சு கேட்டு

முயற்சி செய்யாமல் நாம் பயந்தால்

நாம்தான் முட்டாளாவோம்.

நேர்மையாக இருந்தால் அச்சம் எதற்கு?

வீசா கைக்கு வந்ததும்

என் வேலைகளை குறைப்பதற்கும்

என் விடுமுறையாக

2006 வருடத்தில் மீதமிருந்த

2 வாரங்களையும் பெற்றுக் கொள்வதெனவும்

முடிவெடுத்தேன்.

ஆரம்பத்தில் இரு வாரங்கள் போதும் என்றே கருதினேன்.

நான் கொண்டு செல்லும்

குறும்படங்களை திரையிடவும்

நண்பர்களை சந்திக்கவும் என்று நினைத்தாலும்

என் வேலையிடம் தேவையானால்

மேலும் ஒரு வாரம் இருந்து விட்டு வா

என்று மனது வைத்து சொன்னதால்

மேலும் மகிழ்ந்து போனேன்.

அமெரிக்க கனேடிய நண்பர்களுடன்

தொடர்பு கொண்டு என் பயண விபரங்களுக்கு

நாள் குறிப்பதற்கு முன் மறுமுறை இறுதியாக பேசினேன்.

அனைவரும் உங்கள் செளகரியத்தை பாருங்கள்.

இங்கு எப்போ வந்தாலும் ஓகே என்றார்கள்.

உடனே டிக்கட் மற்றும் பிரயாண

ஒழுங்குகளை செய்து

என்ன என்ன குறும்படங்களை

கொண்டு செல்வதென்பதை முடிவெடுக்க

தலையைப் போட்டு பிய்த்துக் கொண்டேன்.

ஐரோப்பிய குறும்பட விழாவுக்கு

வந்த இந்திய தமிழ் குறும்படங்கள்

என் வசம் ஏராளம்...............

அடுத்து

புலம் பெயர் தமிழர் படைப்புகள்

தமிழீழ மற்றும் சிங்கள குறும்படங்கள்.

அமெரிக்காவில்

என்னுடைய குறும்படங்களையும்

இலங்கை தமிழில் வந்த

குறும்படங்களையும் திரையிடுவதென முடிவெடுத்தேன்.

அதற்கு காரணம்

நியூ ஜெர்ஸியில் சிந்தனை வட்டம் நடத்திய,

தமிழ்க் கலைப்பட விழாவில்

என் படங்களின் கதாபாத்திரங்கள்

பேசிய தமிழ் புரியவில்லை என ஒரு கேள்வி எழுந்திருந்தது.

http://www.thinnai.com/?module=displaystor...172&format=html

அதை இப்போது தெளிவுபடத்தலாம் என்பதே

என் எண்ணத்தில் ஒன்றானது.

அடுத்த சிக்கல்

பல குறும்படங்கள்

தமிழீழத்தை மையமாக வைத்து

உருவான குறும்படங்கள்.

இத்தருணத்தில்

கனடா விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது.

ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்திருந்தது.

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்...........?

என் நெருங்கிய யாழ் கள கனேடிய உறவுகளில் சிலர் .................

"பிரச்சனையானதாக தோன்றும் படங்களை கொண்டு போக

யோசித்து முடிவெடுங்க அண்ணா.

ஒன்று தபாலில் அனுப்பி விட்டு போங்க.

அல்லது நெட்டில் அனுப்பி விட்டு போங்க......." என்றார்கள்.

தவிர அங்கு உள்ள நிலமைகளையும் சொன்னார்கள்.

நான் கொண்டு போவதே பிரச்சனை என்றால்

நான் தபாலில் அனுப்புவதால்

அங்குள்வர்களுக்கு பிரச்சனை வரலாம்.

நமக்கு

உதவும் ஒருவருக்கு

நம்மால் பிரச்சனை வரக் கூடாது.

உதவி செய்யும் மனங்கள் கூட

இது போன்ற செயல்களால்

வெறுத்து உதவ மறுப்பதை

நான் பார்த்திருக்கிறேன்.

எனவே

நான் எதைக் கொண்டு போவது

எதைத் தவிர்ப்பது என்று இறுதி முடிவெடுத்தேன்.

அடுத்ததாக

அங்கு ஒரு குறும்பட பயிற்சி பட்டறை

செய்வதாக பேசியிருந்ததால்

அதற்கான ஒரு விரைவு பாடத் திட்டத்தை உருவாக்கினேன்.

பாடத்திட்டம்

அதற்கான தகவல்கள்

குறும் படங்கள்

இப்படி தேவையானவற்றை

ஒழுங்கு படுத்திக் கொள்ள

எனக்கு பல நாட்கள் ஆகின.

வேலை முடிந்து வந்ததும்

ஓய்வே எடுக்காமல்

இதற்காக கடுமையாக

என்னை வருத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.............

என்னை தயார் பண்ணிக் கொள்ளும் போதே

காலமும் சரியாகவே இருந்தது.

பயணத்துக்கு முன்

அனைவருக்கும் தொலைபேசி வழியும்

மின் அஞ்சல் வழியும்

இறுதியாகவும் உறுதியாகவும்

பயணத்தை நிச்சயித்துக் கொண்டேன்.

அனைத்தும் ரெடி

நானும் ரெடி

பயணம் தொடரும்.............

  • 2 weeks later...

எனது அமெரிக்க - கனடாவுக்கான முதல் பயணம் இது .3

swiss%20areal.ajeevan.jpg

22.05.06 காலை 9.30க்கு

சுவிஸ் சூரிக் விமான நிலையத்திலிருந்து

எயார் கனடா AC 879 விமானம் மேலெழுந்து பறந்து

ஒரு வட்டமிட்ட போது

சுவிசின் காலைக் காட்சிகள்

விண்ணிலிருந்து பார்ப்பதற்கு ரம்யமாகவே இருந்தது.

Kaiser.ajeevan.jpg

மெல்லிய முகிலை கிழித்துக் கொண்டு முன் நகரும்

விமானத்தின் ஜன்னல் வழி சூரிக் நகர் தாண்டி

அல்பஸ் மலைகளின் மேலே விமானம் பறக்கத் தொடங்கியதும்

விமானத்திலிருந்த பலர் வாவ் என்று

ஆச்சரியப்பட்டு வாய் பிளப்பதை கண்ணுற

மனதுக்குள் ஐசே உறைந்து கரைவது போல இருந்தது.

AerialAlps.ajeevan.jpg

எட்டிப் பார்த்தால் அது அல்ப்ஸ் மலையில் தெரியும் ஐஸ் கொடுத்த குளுமைதான்..............

8 மணி நேரத்து பயணம்.

22.05.06 பி.ப.12.25 மணிக்கு Toronto Pearson Airport Terminal 1 ல் வந்திறங்கும் வரை அதிக நேரத்தை தூக்கத்திலேயே கழித்தேன்.

டொரொன்டோவில் வந்து இறங்கி அங்கிருந்து 15.45 மணிக்கு பயணமாகும் வொசிங்டன் செல்ல

Air Canada AC 308 விமானம் தரித்து நிற்கும்

Terminal 2 பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதற்காக நான் அங்கிருந்து ஒரு பஸ்ஸிலே பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.

அங்கு நான் நுழையும் போதே நுழை வாயில்

அமெரிக்கா என வரவேற்றது.

ஆம்..........கனடாவிலிருந்து விமானம் ஏறும்

அடுத்த சுங்க பகுதி அமெரிக்காவாக இருப்பதை

கண்ணுற்றதும்

சுவிஸின் பாசல் விமான நிலையம் நினைவுக்கு வந்தது.

Euro-Airport Baselலின் ஒரு பகுதி ஜெர்மனியையும்

மற்றொரு பகுதி பிரான்சையும்

அடுத்த பகுதி சுவிஸையும் இணைக்கிறது.

eroairport.ajeevan.jpg

(CH = Switzerland, F= France , D = Germany)

சுங்க பரிசோதனைகளை முடித்துக் கொண்டு போய்

விமானத்தில் ஏறி

அது 22.05.06 17.10 மணிக்கு

Washington Ronald Regan National Airportல்

இறங்கிய போது சுங்க பரிசோதனைகள் எதுவுமேயில்லை.

ஓ........... நாம் கனடாவின் மறு பகுதியான

அமெரிக்காவுக்குள் அப்போதே வந்து விட்டோமே

அதனால்தான் எந்த பிரச்சனையுமில்லை என

மனது சொல்லிக் கொண்டது.

அடுத்து

வெளியே இறங்கி

நமக்காக காத்திருப்பதாக சொன்ன

சிறீகாந்தை என் கண்கள் தேடின.

தூரத்தே சில இந்தியர்கள் நிற்பது தெரிந்தது.

ஆகா நிக்கிறாங்க போல என்று முன்னால் நடந்தால்...........

நினைத்தது போல அவர்களில் யாருமே சிறீகாந் இல்லை.

எல்லோருமே யார் யார் பெயரையோ எழுதிய

பதாதைகளை வைத்துக் கொண்டு

எதிர்பார்ப்போடு இருப்பது

அவர்களது அலை மோதும் கண்களில் இருந்தே தெரிந்தது.

ஆனால் என் கண்கள் சிறீகாந்தை தேடி அலை மோதியது.

இறுதியாக எனது கைத்தொலைபேசியை எடுத்து அழுத்தினால்

அது என் நிலமை புரியாது தொடர்பு கொள்ள மறுத்தது.

சே.........என்று

வேண்டா வெறுப்பாய் திரும்பிய போது

விமானம் புறப்பட்ட போது

கனடாவிலிருந்தே என் பக்கத்து ஆசனத்தில்

அமர்ந்து வந்த பஞ்சாபி பெண்

"யாருக்கு போண் பண்ண டிரை பண்ணுறீங்க?" என்ற குரலோடு

அருகே வந்ததும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

என் பக்கத்தில் அமர்ந்து வந்தாலும்

நான் ஏனோ அவரோடு பேச்சுக் கொடுக்கவில்லை.

இப்போது அவரே பேசியது ஆச்சரியமாக இருந்தது.

"என் போண் ஏனோ வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

நான் நினைக்கிறேன் வெதர் பிரச்சனையோ தெரியாது"

அவள் பலமாய் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறீங்க?" என்றேன்.

"நீங்க சரியான ஜோவியல் பேர்வழி.

சுங்க இலாகா அதிகாரிகள் கூட

உங்க பேச்சுக்கு சிரிச்சதை நான் பார்த்தேன்." என்றார்.

எனக்கு தெரியாதே என்றேன்.

சுங்க அதிகாரிகள் செக் பண்ணும் போது

"ஏசுநாதரை ஒரு முறைதான் சிலுவையில அறைங்சாங்க.

சிலுவையே இல்லாம இன்னைக்கு

என்னை பல முறை சிலுவையாக்கிட்டாங்க"

என்று சொல்லிட்டு போனீங்க.

உங்க பின்னாடி நானும் செக்கிங்காக நின்றேன்.

அவங்க உங்கள காட்டி

"பாவம் இன்னொரு ஏசுநாதர் போறார்" என்று சொல்லி

சிரிச்சாங்க என்றார்.

எனக்கே தெரியாமல் நான் செய்யும்

கோமாளித்தனங்களை நினைத்து

சிரிப்பு வந்தது.

அந்த சிரிப்பு சிறீகாந் மேலிருந்த சூட்டை கொஞ்சம் தணித்தது.

யாரையாவது எதிர்பார்க்கிறீங்களா?

ஆமாம் . ஒருத்தர் வந்துடுவேன் என்றார்.

எல்லா விபரமும் மெயில் பண்ணினேன்.

இப்ப............ என்ற போது

நம்பர் இருந்தா கொடுங்க

என் போணில் நான் டிரை பண்ணி பார்க்கிறேன்

என்று சொல்லி முடிக்கும் முன்னே

நான் கையிலிருந்த பேப்பரை கொடுத்து சிறீகாந்தின் கைத்தொல்லைபேசியின் எண்ணைக் காட்டினேன்.

அவரது கைத் தொலைபேசியில்

இலக்கங்களை அழுத்தி வேலை செய்கிறது.

இதோ என்று தொலைபேசியை என்னிடம் தந்தார்.

மறு முனையில் சிறீகாந்தான்.

பக்கத்தில வந்துட்டேன் அஜீவன்.

சாரி...........

ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கே வாங்க என்றார்.

நான் எங்கே நிக்கிறேன் என்றே தெரியாத போது

அவர் சொல்லுற இடம் எனக்கு எங்கே தெரியப் போகுது?

கொஞ்சம் இருங்க என்று சொல்லி விட்டு

அவளிடம் போனை நீட்டினேன்.

சிலவேளை சிறீகாந்

ஒரு பெண்ணும் அஜீவன் கூட வந்திருக்கு

என்று நெனைச்சாரோ தெரியாது?

அவளிடம் சிறீகாந் இடத்தை சொன்னதும்

ஓகே சொல்லிவிட்டு என்னை அழைத்து வந்து

இடத்தை காண்பித்தார்.

மிக்க நன்றி என்று சொல்லி விட்டு

அவர் போவதை பார்த்து விட்டுத் திரும்பிய போது

ஒரு இந்திய முகம் யாரையோ தேடிக் கொண்டு

காரை முன்னால் ஓட்டி வருவது தெரிந்தது.

அது நிச்சயம் சிறீகாந்தாய்தான் இருக்கும்

என்று நம்பி சும்மா கையை ஆட்டினேன்.

அது சிறீகாந்தான்.

ஒரு அசட்டுச் சிரிப்பு.

அவரது முன் சீட்டில்

அஜீவன் என தமிழில் பெரிதாய் எழுதி வைத்திருந்த

ஏ4 சைஸ் பேப்பரைக் காட்டினார்.

எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

நான்தான்யா என்று தலையை ஆட்டினேன்.

என்னை காரில் ஏற்றிக் கொண்டு

"ரொம்ப சாரி அஜீவன்.

எயார் போட்டில நீங்க வரும் போது இதை புடிச்சூட்டு

நிக்கணும்ணு வந்தா

இந்த டிராப்பிக் பாருங்க.............

சே......... மாட்டிக்கிட்டேன்" என்றார்.

பரவாயில்ல.

வெளியே வந்ததும் நீங்க வந்துட்டீங்க என்றேன்.

அவர் சொன்னது உண்மைதான்

நாங்கள் திரும்பி வரும் போது

எதிர் திசை டிராப்பிக்காய் தெரிந்தது.

அப்போது

என் கல்லூரி வாழ்வின் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஆனால்

அன்று அவரைத் தெரியாததால் சொல்லவில்லை.

ஆனால் இப்ப சொல்லலாம்.

ஏன்னா நான் இப்ப சுவிஸுக்கு வந்துட்டேன்?

.............................................................

நான் காலேஜுக்கு போகும் நாட்கள்ல

ஒரு நாளுமே நேரத்துக்கு காலேஜ் போகவே மாட்டேன்.

அப்போது என் காலேஜின் பிரின்சிபாலாக இருந்தவர் ஒரு கத்தோலிக்க சகோதரர்.

பெயர் பிறதர் ஜஸ்டின்.

அடிக்கவே மாட்டார்.

ஆனால் கிள்ளி தலையில குட்டுற குட்டுல

உலகமே இருண்டுடும்.

அவருக்கு நாங்க வைத்த பெயர் ரண்டொக்கா (சிங்களத்தில்).

அதாவது தங்ககுட்டன். ( தங்க மோதிரக் கையால் குட்டுறவன்)

அப்போ எல்லாம் நினைப்பேன்

இனி இந்த பேய் கிட்ட மாட்டுறது இல்ல.

நேரத்துக்கே வர வேணும் என்று........

இருந்தாலும் எனக்கு அது முடியாத காரியமாவே இருந்துச்சு.

அதனால

அவர் கிள்ளுறதும் குட்டுறதும் எனக்கு பழகிடுச்சு.

கடைசியில

என்னைப் பார்த்து அவரே திருந்தி இருக்க வேணும்.

ஒரு நாள் கூப்பிட்டார்.

போனேன்.

நானும் பார்க்கிறேன்.

நீ திருந்திற மாதிரி இல்லயே?

ஏன் எப்பவும் நீ லேட்டா வர்ரே? என்றார்.

நான் வரும் போது எப்பவும் பஸ் போயிடுது என்றேன்.

அவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

எனக்கு அவர் சிரிப்பதன் அர்த்தம் புரியவில்லை.

ஆனால் நான் சொன்னது உண்மை.

நானும் மெதுவாய் சிரித்தேன்.

இங்க பாரு ஜீவன்

நமக்காக ஒரு நாளும் பஸ் காத்து நிக்காது

நாமதான் பஸ்ஸுக்காக காத்து நிக்கணும்.

இனி ஒரு 15 நிமிசம் முன்னமே வந்து நில்லு.

நீ ஒரு வாரம் சரியா நேரத்துக்கு வந்தா

உனக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றார்.

அடுத்த நாள் தொடங்கி 30 நிமிடம் முன்ன வந்து

நேரத்துக்கு காலேஜ் வரத் தொடங்கினேன்.

ஒரு வாரம் கழிந்தது.

எனக்கொரு சைக்கிள் பரிசாக கிடைத்தது.

சில ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில்

கொண்ட கரிசனைகளே எமக்கும் வழிகாட்டியாக

இன்றும் எம் இரத்தத்தில் உறைந்து கிடக்கிறது.

அவர் என் மனக் கண்ணில் இன்று........................

அடுத்த முறை சிறீகாந் நிச்சயம்

இன்னொரு கதை சொல்ல வைக்க மாட்டார்

என்று நினைக்கிறேன்?

அதுக்காக

அடுத்த தொடருக்கு சைக்கிளோடு வரமாட்டேன்பா?

தொடரும்...........

ஆகா அஜீவன் அண்ணா நல்ல சுவாரிசியமாகத்தான் கதை சொல்லுறியள். தொடருங்கோ.

பாவம் ஸ்ரீகாந்த்.. இதை வாசிச்சா.. தனது காரை மறந்து சைக்கிளையே நினைச்சிட்டிருக்கப் போறாரு!

அஜீவன்...!

சுஜாதாவை விட மோசமா இருக்கு உங்க எழுத்து....குட்டி குட்டியா கதை எழுதீட்டு ஒரு தொடரும் போட்டுர்ரது......ரைம் எடுத்து முழுசா எழுதுங்க.....ஸ்ரீகாந்த் ..என்பது தமிழோவியம் ஸ்ரீகாந்த் மீனாட்சி தானே....?

நாங்க ஒரு குறும் பட விழா ....கனடாவில வைக்கிறது பற்றி உங்க ....ஆலோசனை என்னா...? (முடிந்தால் தனி மடல் போடுங்க)

-எல்லாள மஹாராஜா-

ஆகா அஜீவன் அண்ணா நல்ல சுவாரிசியமாகத்தான் கதை சொல்லுறியள். தொடருங்கோ.

நன்றி ரசிகை

அடுத்து நீங்க எல்லாம் இருக்கிறீங்கள்.

அதை மறக்கவில்லையே? :P

பாவம் ஸ்ரீகாந்த்.. இதை வாசிச்சா.. தனது காரை மறந்து சைக்கிளையே நினைச்சிட்டிருக்கப் போறாரு!

:P :D :P

அஜீவன்...!

சுஜாதாவை விட மோசமா இருக்கு உங்க எழுத்து....குட்டி குட்டியா கதை எழுதீட்டு ஒரு தொடரும் போட்டுர்ரது......ரைம் எடுத்து முழுசா எழுதுங்க.....ஸ்ரீகாந்த் ..என்பது தமிழோவியம் ஸ்ரீகாந்த் மீனாட்சி தானே....?

நாங்க ஒரு குறும் பட விழா ....கனடாவில வைக்கிறது பற்றி உங்க ....ஆலோசனை என்னா...? (முடிந்தால் தனி மடல் போடுங்க)

-எல்லாள மஹாராஜா-

ஆமாம்.

180686794_dfeb151e35_m.jpg

தமிழோவியம் ஸ்ரீகாந்த் மீனாட்சியேதான்!

(பிஞ்சு மனம் பற்றி இங்கே அவர்..............)

http://kurangu.blogspot.com/2006/07/blog-post.html

ஆகா...........

குறும் பட விழா ....கனடாவில என்று...........

திருப்பி பழசை ஞாபகப் படுத்திறீங்களே எல்லாள மஹாராஜா? :P

நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.