Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் கே.பி

Featured Replies

நாங்கள் அவருடைய பேட்டியில் எதை எடுக்கிறோம் என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது.

நான் எதை எடுக்கிறேன்?

உலகம் தலைவரை ஆயதங்களை போடச் சொல்லிக் கேட்டது. சரணடையச் சொன்னது. அதை மறுத்து தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று கடைசி வரை போராடினார்.

இந்த செய்தியையே நான் பிரதானமாக அவருடைய பேட்டியில் இருந்து பெறுகிறேன். போராடாமல் சரணடைந்திருந்தால் மக்களின் உயிரிழப்பு குறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் தலைவர் சரணடைந்தே கொல்லப்பட்டார் என்று ஒரு தரப்பால் செய்யப்படுகின்ற பரப்புரைக்கான பதில்கள் கேபியின் பேட்டியில் நிறையே இருக்கின்றன.

  • Replies 82
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=1]

[size=4]ஒரு கைதியின் பேட்டி? [/size][/size]

[size=1]

[size=4]அதில் நான் இதை எடுத்தேன்? நீ அதை எடுத்தாய்??[/size][/size]

அவருடையே பேட்டிகளே காலத்திற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்ட திரைக்கதை என எடுக்கிறேன்.

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

போராட்டத்தயும் ,இரகசியங்களையும் காட்டிக்கொடுத்த ****** வக்காலத்து வாங்கும் உதுகளை என்னத்த சொல்ல .....

என்னது போராளிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவினாரா,..... அதே போராளிகளை நயவஞ்சகமாய் காட்டிக்கொடுத்து சிறி லங்காவிற்கு சிறை செய்து கொடுத்த ******* தமிழ் சமூகம் மறந்து விட்டது என்ற நினைப்பா.................உங்களைப்போல் மற்றவனை நினிக்க கூடாது .........ஆமா செய்ததெல்லாம் செய்து முழு துரோகமும் செய்து காட்டிக்கொடுத்த ***** ,,,,,,,,,,,,,,இனி உதுவும் செய்யும் இன்னமும் செய்யும் ..................

[size=1]நியானி: பண்பற்ற சொற்கள் தணிக்கை[/size]

Edited by நியானி

தமிழ்சூரியன்,

அவர் காட்டிக் கொடுத்தார் என்பது வெறும் ஊகங்கள் மட்டும்தான். அதற்கு ஆதரம் எதுவும் இல்லை. காட்டிக் கொடுத்தவராக அவரைக் குற்றம்சாட்டுகின்ற தரப்பின் செயற்பாடுகளை வைத்து மதிப்பிடுகின்ற பொழுது அந்த ஊகங்கள் கூட தவறாக இருப்பதற்கான வாய்புக்களையே நான் காண்கிறேன்.

தமிழ்சூரியன்,

அவர் காட்டிக் கொடுத்தார் என்பது வெறும் ஊகங்கள் மட்டும்தான். அதற்கு ஆதரம் எதுவும் இல்லை. காட்டிக் கொடுத்தவராக அவரைக் குற்றம்சாட்டுகின்ற தரப்பின் செயற்பாடுகளை வைத்து மதிப்பிடுகின்ற பொழுது அந்த ஊகங்கள் கூட தவறாக இருப்பதற்கான வாய்புக்களையே நான் காண்கிறேன்.

அவர் காட்டிக்கொடுக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதாவது உங்களிடம் உள்ளதா சபேசன்

நான் உங்களின் முதலாவது கருத்தைப் படித்து சிரித்தேன். இவருக்கு இப்படிக் கோபம் வருகிறதே என்று. ஆனால் இந்தக் கேள்வியை வாசிக்க எனக்கு கோபம் வருகிறது.

கொலை செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் இல்லாதவர்கள் எல்லோரும் கொலையாளிகளா?

திருடவில்லை என்பதற்கான ஆதாரம் இல்லாதவர்கள் திருடர்களா?

என்ன கேள்வி இது?

Edited by சபேசன்

ஒட்டு மொத்தத்தில் கேபி நல்லவர் அவரது பேட்டியின்படி

தலைமையே தவறு செய்தது என்பதை கூற வருகிறீர்களா

  • கருத்துக்கள உறவுகள்

கேபியே ஒரு டம்மி பீஸ்...கேபியை கைது செய்யும் போது முள்ளிவாய்க்காலை சிங்கள அரசு அழித்து முடித்து விட்டது பிறகு என்னத்தை காட்டிக் கொடுக்கிறதிற்கு இருக்குது...கேபியை சிங்களவன் தாங்கள் ஒரு புலித் தளபதியை வைத்திருக்கிறோம்.அவரை நாங்கள் நன்றாக வைத்துள்ளோம் என சர்வதேசத்திற்கு காட்டுவதற்கே வைத்திருக்கிறார்கள்...கேபியும் அதற்கேற்ற மாதிரி நடிக்கிறார்

நீங்கள் ஏன் அந்தப் பேட்டியை அப்படி எடுக்கிறீர்கள் என்றுதான் நான் கேட்கிறேன். அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பேட்டி எடுப்பவருக்கும் சில நோக்கங்கள் உள்ளன. அதற்கேற்றபடி கேள்விகள் கேட்கப்படும். தலையங்கங்கள் கொடுக்கப்படும்.

நாம் தலைவரிடம் எதை எதிர்பார்த்தோம்? ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைவதையா? அதை தலைவர் செய்யவில்லை என்று சொல்வதை நாம் எப்படி ஒரு குற்றச்சாட்டாக எடுக்க முடியும்.

நாம் தலைவரிடம் எதிர்பார்த்ததையே தலைவரும் செய்தார் என்பதைத்தானே கேபியும் சொல்கிறார். இதில் எங்கே தலைவரை தவறாக இருக்கிறது?

தலைவர் சரணடைந்திருந்தால் மக்களின் உயிரிழப்பு குறைந்திருக்கும். இது எனக்கோ உங்களுக்கோ தெரியாதா? ஆனால் கடைசி வர போராடச் சொல்லித்தானே நாமும் நின்றோம். அதை அவர் செய்தார் என்று கேபி சொல்கிறார்.

அல்லது தலைவர் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்திருக்கலாம் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு... உங்களைப் போன்ற ஆட்களால், தான்...

தமிழ் ஈழம் கிடைக்காமல் போனது.

இனியாவது... உங்களுக்குத் தேவையான, பித்தத்துக்குரிய மருந்தை எடுத்துக் கொண்டிருங்கோ...

அப்போ.. தமிழனுக்கு நாடும் இல்லை, இருக்க..வீடும் இல்லை.

அது, தான்... உங்களது சந்தோசமா...

த்தூ.....

Edited by நியானி

பேட்டியை யாரும் எவரின் தேவைக்கேற்ப கொடுக்கலாம். அதன் பின்னணி முக்கியமானது.

சிறந்த இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாசின் பழைய இராணுவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். புலிகளுக்கான கடல் வழியான ஆயுத வளங்களை தடுப்பது சிறிலங்கா அரசின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்று.

தமிழ்சூரியன்,

அவர் காட்டிக் கொடுத்தார் என்பது வெறும் ஊகங்கள் மட்டும்தான். அதற்கு ஆதரம் எதுவும் இல்லை. காட்டிக் கொடுத்தவராக அவரைக் குற்றம்சாட்டுகின்ற தரப்பின் செயற்பாடுகளை வைத்து மதிப்பிடுகின்ற பொழுது அந்த ஊகங்கள் கூட தவறாக இருப்பதற்கான வாய்புக்களையே நான் காண்கிறேன்.

கைதுக்கு முன் அவர்காட்டிகொடுத்தாரா என்பது ஊகமே.அது வெறும் ஊகமாகவே இருந்திட்டு போகட்டும்.ஆனால் கைதின் பின் அவர் ராணுவத்தின் விருந்தாளி.இப்போதைய எமது அரசியல் சூழ்நிலையில் அவர் இன்னமும் கைதியாகவே உள்ளார்.ஒரு தமிழன்,அதுவும் பெரும் புலியாக இருந்த தமிழன் காட்டிகொடுக்காமல் ராணுவத்தின் சுகபோகம்களை தனிவீட்டில் அனுபவிக்க முடியாது என்பது ஈழத்தில் பிறந்த சின்னக்குழந்தைக்கே தெரியும்.எனவே கே.பி காட்டிகொடுத்தாரா இல்லையா எண்ட விசர்க்கதையளை விட்டிட்டு உருப்படியான அரசியல் விவாதங்கலை செய்யுங்கோ.வாசிக்கிரவர்களுக்காவது ஏதாவது பிரயோசனம் கிடைக்கும்.

இந்த உண்மையை அறிந்த ,தெரிந்த நீங்கள் இப்படியான கருத்துக்களை எழுதும்போது அது குழம்பிப்போய் உள்ள தமிழ் சமூகத்தை

இன்னும் குழப்பி நாம் அடுத்தகட்டத்தை நோக்கி அடி எடுத்து வைக்க முடியாமல் செய்வதற்கு எதிரியானவன் என்ன என்ன முயற்சிகள் எடுக்கிறானோ அத்தனைக்கும் உங்கள் கருத்துக்கள் சாதகமாய் அமைந்து விடுவதை நீங்கள் உணராத நிலையிலேயே அதை உங்களுக்கு சுட்டிக்காட்டும் நோக்குடனேயே எனது பதில்கள் அமைந்தது என்ற உண்மையை நீங்களும் ,இப்படியான செய்திகளை இணைப்பவரும் உணர்ந்து கொள்ளும் வரைக்கும் ..............முற்றுபுள்ளிகள் அற்று .........கேள்விக்குறியாய் தொடர்ந்து கொண்டே போகும் என்பதே ...................................நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கேபி ஜெயிலில் இல்லாமல் விருந்தாளியாக இருக்கிறார் என்றால் அவரிடம் உள்ள பணத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவன் செய்வதா ஒருபோதும் இருக்க முடியாது. :rolleyes: தனிப்பட அவர்களிடம் இல்லாத பணம் இல்லை.. :rolleyes:

ஏதோ ஒன்றைச் செய்ததற்கான நன்றிக்கடனாகவே நான் பார்க்கிறேன்.. :huh:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு துன்பம், தமிழனுக்கு நடந்தும்... புலிகளில் குற்றம் காண்பவர்களை....

ஒருவித மன நோயாளியாகவே... என்னால் பார்க்க முடிகின்றது.

இவர்கள்... புலிகள் போராடும் போது.. எந்த ஆதரவும் கொடுத்ததில்லை.

அவர்கள் மௌனித்த போதூ... நியாயம் கதைக்கிறார்கள்.

வெட்கம், மானம், ரோசம் கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது கேபி சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவர். இதற்கு முன்பு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்பாளர். இவர் எந்த வகையில் தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமாக முடியும்? இங்கே இருந்து வீரம் பேசுபவர்கள் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? இராணுவத்தைக் கண்டாலே "சேர்" போட்டு பேசுகிற கூட்டம் இது. ஏதோ அந்த மனிதர் தன்னையும் காத்து மேலும் சிலரையும் காக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்வதை செய்யட்டும்

  சபேசனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். விடுலைப்புலிகளின் ஆயுதம் மௌநித்தபிறகு அவர்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் பராமரிப்பில் இருந்து விட்டுச்சென்ற செஞ்சோலை/அறிவுச்சோலை போன்ற வேலை திட்டங்களையும் கைதிகளாக இருக்கும் முன்னால் போராளிகளையும் விடுவிக்கும் வேலைகளையும் k.p. முன்னெடுக்க வேண்டிய தேவைதான் என்ன? காசா? புகழா? காசு என்றால் சிங்கலவனுக்காக பட்டியல் இடும் இயக்கத்தின் பணத்தை கையாடல் செய்து ஓடியிருக்கலாமே? இருட்டில் இருந்தே இயக்கத்தை வளர்த்த ஒரு மூத்த/முதிர்ந்த போராளி இயக்கம் இருந்த போதே புகழ் தேடியிருக்கலாமே? இன்று சிங்களவன் கையில் உள்ள இந்த கைதி முன்னாள் புகழ் பெற்ற பெரும் போராளி , இவர் தற்சமயம் என்ன சொன்னாலும் செய்தாலும் அது யாரையும் பாதிக்கும் அளவில் இல்லை. பின் ஏன் இந்த வெறி உங்களுக்கு? கே.பி  எனும் கைதியை மறந்துவிட்டு செய்யவேண்டிய செயல்களை மட்டும் பார்க்கலாமே? செய்யிறதுக்கு ஆக்கபூர்வமாக ஒரு செயல் திட்டமும்  இல்லை என்றால் திண்ணையில் இருந்து நாக்கில் நரம்பில்லாமல் என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா? கம்பு எடுத்தவன் எல்லாம் சண்டியர் என்பதுமாதிரி பேனா எடுத்தவன் எல்லாம் செய்தி ஆசிரியர்? இணையத்தளம் உள்ளவன் எல்லாம் ஊடகம்? புனைப்பெயரின் பின்னால் மறைந்து நின்று கருத்துக்களம் .  தயவு செய்து யாராவது இயற்பெயர் மூலம் இணைந்து கருது பரிமாற்ற களம் செய்வீர்களா? நான் தயார்.

Edited by Rasi82

மருத்துவர் தமிழ்சிறியின் கருத்து நியானியால் "எடிட்" செய்யப்பட்டுள்ளது. என்னைத் திட்டினாரா இல்லை கேபியை திட்டினாரா என்று தெரியவில்லை.

வண்டுமுருகன் மற்றும் இசைக்கலைஞன் கேபி அரசின் விருந்தாளியாக இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இது பலரிடம் இருக்கின்ற நியாயமான சந்தேகம்.

இதற்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

கேபியை சிறையில் வைக்காமல் விருந்தாளி போன்று கண்காணிப்பில் வைத்திருப்பதனால் சிறிலங்கா அரசுக்கு நிறைய நன்மைகள் உண்டு.

- விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரை நாம் நல்ல முறையில் நடத்துகிறோம் என்று உலகிற்கு காட்டலாம்

- கேபிக்கு ஆதரவானவர்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம்

- புலம்பெயர் மக்களின் அச்சங்களை போக்கி நாட்டுக்கு வருவதற்கு ஊக்குவிக்கலாம்

- புலம்பெயர் மக்களை கேபியின் ஊடாக முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கலாம்

இப்படி கேபியை சிறிலங்கா அரசு நல்லமுறையில் நடத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இதற்கு கேபி யாரையும் காட்டிக் கொடுக்கத் தேவையில்லை. அவர் புலிகளின் மிக முக்கிய தலைவர் என்கின்ற தகுதி போதும்.

இதுவரை அவர் யாரைக் காட்டிக் கொடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை. இங்கே உள்ளவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட சில பேரை வெளியில் எடுப்பதற்கு உதவியுள்ளார் என்றே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

கேபி ஜெயிலில் இல்லாமல் விருந்தாளியாக இருக்கிறார் என்றால் அவரிடம் உள்ள பணத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவன் செய்வதா ஒருபோதும் இருக்க முடியாது. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/rolleyes.gif தனிப்பட அவர்களிடம் இல்லாத பணம் இல்லை.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/rolleyes.gif

ஏதோ ஒன்றைச் செய்ததற்கான நன்றிக்கடனாகவே நான் பார்க்கிறேன்.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/huh.png

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கேபியை சிறையில் வைக்காமல் விருந்தாளி போன்று கண்காணிப்பில் வைத்திருப்பதனால் சிறிலங்கா அரசுக்கு நிறைய நன்மைகள் உண்டு.

- விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரை நாம் நல்ல முறையில் நடத்துகிறோம் என்று உலகிற்கு காட்டலாம்

- கேபிக்கு ஆதரவானவர்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம்

- புலம்பெயர் மக்களின் அச்சங்களை போக்கி நாட்டுக்கு வருவதற்கு ஊக்குவிக்கலாம்

- புலம்பெயர் மக்களை கேபியின் ஊடாக முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கலாம்

 

 

குட் சப்பைக்கட்டு.. :D

 

- அப்ப கேணல் ரமேஷ், நடேசன் அண்ணா, புலித்தேவன் அண்ணா இவர்களையும் நன்றாக நடத்தி உலகுக்கு நல்லிணக்கத்தைக் காட்டியிருக்கலாமே.. ஐயா புதுவை எங்கே இருக்கிறார் என்பதையே சொல்லமாட்டேன் என்கிறார்கள்.

- கேபிக்கு ஆதரவானவர்கள் யார்?

 

- புலம்பெயர் மக்களின் அச்சத்தைப் போக்கி? :rolleyes: நினைவிருக்கிறதா .. போர் முடிந்தவுடன் சிங்களவனின் அடுத்த அறிவிப்பு என்ன என்பது. "இனிமேல் எமது போர் புலம்பெயர் தமிழரை நோக்கி..! "

- கேபி ஊடாக முதலீடுகளைப் பெறுவது.. இதை அவர்கள் செய்கிறார்கள்தான்.

ஆக மொத்தத்தில் காரணங்கள் போதுமானவையாக இல்லை யுவர் ஆனர். பிரணாப் முகர்ஜி கைதான கேபியைப் பார்த்துவிட்டு வந்ததைப்பற்றி (நடந்தது 2009 க்கு முன்னர்) நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை... :D

கேபியை போர் முனையில் கைது செய்திருந்தால் நிச்சயம் அவரும் காணமல் போயிருப்பார்.

தளபதி ரமேஸ் போன்றவர்கள் உத்தியோகபூர்வமாக கைதாகவில்லை. அவர்களின் கைது உலகிற்கு தெரியாமல் நடந்தது. இராணுவத்தில் இருந்த சிலரால்தான் அது வெளிவந்தது. நடேசன் அவர்கள் கூட கொல்லப்பட்ட பின்பே சரணடைகிற திட்டம் இருந்தது பற்றி பேசப்பட்டது.

ஆனால் கேபியின் கைது மலேசியாவில் நடந்தது. பல வெளிநாடுகள் சம்பந்தப்பட்டன. கேபி சிறிலங்காவிற்கு வருவதற்கு முன்பே அவருடைய கைது இரு தரப்பாலும் உலகிற்து அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் அவரை இலகுவில் கொல்ல முடியாது. இங்கேதான் சிறிலங்கா அரசு மிகச் சிறப்பான முறையில் கெட்டிக்காரத்தனமாக இதை அணுகியது. அவரை எப்படி நடத்தினால் சிறிலங்கா அரசுக்கு இலாபமோ அப்படியே அவரை நடத்தியது.

Edited by சபேசன்

மருத்துவர் தமிழ்சிறியின் கருத்து நியானியால் "எடிட்" செய்யப்பட்டுள்ளது. என்னைத் திட்டினாரா இல்லை கேபியை திட்டினாரா என்று தெரியவில்லை.

வண்டுமுருகன் மற்றும் இசைக்கலைஞன் கேபி அரசின் விருந்தாளியாக இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இது பலரிடம் இருக்கின்ற நியாயமான சந்தேகம்.

இதற்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

கேபியை சிறையில் வைக்காமல் விருந்தாளி போன்று கண்காணிப்பில் வைத்திருப்பதனால் சிறிலங்கா அரசுக்கு நிறைய நன்மைகள் உண்டு.

- விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரை நாம் நல்ல முறையில் நடத்துகிறோம் என்று உலகிற்கு காட்டலாம்

- கேபிக்கு ஆதரவானவர்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம்

- புலம்பெயர் மக்களின் அச்சங்களை போக்கி நாட்டுக்கு வருவதற்கு ஊக்குவிக்கலாம்

- புலம்பெயர் மக்களை கேபியின் ஊடாக முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கலாம்

இப்படி கேபியை சிறிலங்கா அரசு நல்லமுறையில் நடத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இதற்கு கேபி யாரையும் காட்டிக் கொடுக்கத் தேவையில்லை. அவர் புலிகளின் மிக முக்கிய தலைவர் என்கின்ற தகுதி போதும்.

இதுவரை அவர் யாரைக் காட்டிக் கொடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை. இங்கே உள்ளவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட சில பேரை வெளியில் எடுப்பதற்கு உதவியுள்ளார் என்றே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Edited by தப்பிலி

கேபியை பிரணாப்முகர்ஜி சந்தித்த விவகாரம் பற்றியும் கேட்கப்பட்டிருக்கிறது.

கேபிக்கு தலைவரால் கொடுக்கப்பட்டு வேலை சர்வதேச தொடர்பாளர் என்பது. உலகோடும் எதிரியோடும் பேசுவது அவருடைய வேலை. அரசியலில் ஆயிரம் பேச்சுவார்த்தைகள் இருக்கும். போர்க் களத்தில் மோதிக் கடுமையாக மோதிக் கொண்டே இரு தரப்பும் திரைமறைவில் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசுவது உலகம் முழுவதும் நடக்கின்ற சாதரண விடயம்.

கேபி பிரணாப்முகர்ஜியோடு பேசியிருந்தாலோ, பசில் ராஜபக்ஸவோடு பேசியிருந்தாலோ அதனுடைய அர்த்தம் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதுதான்.

அரசியல் தெரிந்தவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள். ஈழப் போராட்டத்தில் நாங்கள் எத்தனையோ முறை வெளியில் தெரியாதபடி இலங்கை அரசோடும் இந்திய அரசோடும் பேசியிருக்கிறோம்.

ஆகவே இவற்றை வைத்து கேபியை குற்றம் சாட்டுவதும், அவரை துரோகியாக்குவதும் ஏற்புடையது இல்லை.

அதே வேளை பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஏற்பட்ட தொடர்புகள் கைதின் பின் அவரை காப்பதற்கு நிச்சயமாக பயன்பட்டிருக்கும்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

நீங்கள் ஒரு பந்தி  கட்டுரை எழுத்தாளர் என்பதை அடிக்கடி நிரூபிக்கும் வகையிலேயே  தங்களது கருத்துக்களும் அதற்கு மாற்றாக தாங்கள் வைக்கும் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே தொடர்ந்தும் இருக்கிறது. எனவே பந்தி  கட்டுரைகளை  எழதிவிட்டு தலைமறையாவது தான்தங்களுக்கு நல்லது.

 

எங்கள் நேரமும் மிச்சம்.

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

அத்துடன் இந்த நக்கல்கள் மூலம் எதையும்  நீங்கள் சாதித்துவிடப்போவதில்லை.

இதன் மூலம் எம்மவர்தான் சிங்களத்துக்கு காட்டிக்கொடுத்தார்கள் என்பதை நேரடியாக சொல்லும் தைரியமாவது தங்களிடம் வேண்டும். அதுவும் இல்லை.

 

கே.பி  பற்றி  எனக்கொரு தீர்வு உண்டு.

அது 2009க்கு முன்

அல்லது பின்......

 

அவர் எப்பொழுதிருந்து ஆரம்பித்தார் என்பதை அறியும்வரை அவர் ஒரு கைதி.  அவர் சொல்வது எல்லாமே கிளி வாயால் வரும் சொற்கள். அதை நான் பொருட்படுத்துவதில்லை.

அதேநேரம் அவரை வைவதுமில்லை. 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.