Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்

Featured Replies

”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”. புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார்.

 

அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை. உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள். சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Winci) தான் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உபயோகத்திற்காக,குண்டு துளைக்க முடியாத மோட்டார் வண்டியை ஜெர்மனி கார் தொழிற்சாலையில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தவர். இந்த ஏற்பாட்டிற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை செய்தவர். இது உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? சற்றுப் பொறுங்கள். இதே வால்டர் வின்சியேதான், இந்திய சிறப்புப் பாதுகாப்புப்பணிக் குழுவின் அதிர்ச்சித் தாக்குதல் படைக்கு (SPG – Special Protection Group -commandos) இத்தாலிய பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தவர். இத்தாலிய பயிற்சியாளர்கள், இந்திய SPG பயிற்சி பெறுபவர்களிடம் பலமுறை மரியாதையின்றி முரட்டுத்தனாக நடந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி உங்களுக்கு திகைப்பூட்டுகிறதா? 1985இல், ராஜீவ், சோனியாவுடன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புக்கு வந்த SPG இந்திய பாதுகாப்பு அமைப்புக்குக் கூடத் தெரியாமல், இத்தாலிய, ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ராகுல், பிரியாங்கா ஆகியோருக்கு இத்தாலிய வெளியுறவு அலுவலகத்திலிருந்து நேரிடையாக பாதுகாப்பு அளிக்கச் செய்தார் சோனியா.

 

உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா? இதே சோனியா மேடம்தான், இன்று தேர்தல் மேடைகளிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் ஒரு நாள்விடாமல், “என் தாய் நாட்டுக்காக என் இன்னுயிரையும் தரத் தயார்” என உணர்ச்சி பொங்க முழங்குகிறார். இந்திய அரசு அமைப்பு முழுவதையுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கையில் வைத்திருக்கிறார். சோனியா இந்தியர்களை நம்பாதது மேலை நாடுகள் முழுவதுக்கும் தெரியும். இது உலகப் பிரசித்தம். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் சோனியாவின் உண்மை ஸ்வரூபம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை! இந்த திடுக்கிடும் ரகசிய வாக்குமூலங்கள், பாதுகாப்புப் பணி-பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து கிடைத்தவை (இதில் RAW அதிகாரிகளும் அடக்கம்). அவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது. மேலே படியுங்கள்.. * * * * * * *

 

 

துணைக் காட்சிகளுக்கோ, அல்லது மறைமுகமாகவோ எதையும் காண்பிக்க இது நேரமல்ல. இனி நாம் நேரே விஷயத்துக்கே வருவோம். 1968ல், இந்திய உளவுத்துறை RAW (Research & Analysis Wing) நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, வெவ்வேறு நாடுகளில் உள்ள இதே அலுவலில் இருக்கும் உளவுத்துறை வலைப் பின்னல்களுடன் (spy network) இரகசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு. இதில் இந்திய RAW என்றுமே இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை. 1980ல் சஞ்ஜய் காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி சுறுசுறுப்பாக அரசியலில் திடீரென பிரவேசம் செய்தார். அப்போது, ஆரம்ப காலத்தில் ராஜீவ் RAW வின் பொதுவான கூட்டங்களில் (classified briefings) மட்டுமே பங்கேற்றார். ஏனெனில் அன்று அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும், பதவியும் இருக்கவில்லை. இக் கூட்டங்களில் அவருக்கு நெருக்கமான அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அவருடன் கூட பங்கு கொள்ள வேண்டுமென ராஜீவ் விரும்பினார். ராஜீவுக்கோ அல்லது அவர் சகாக்களுக்கோ இவ்வமைப்புகளில் பங்கேற்க அதிகார பூர்வ பதவி இல்லை என சம்பந்தப்பட்ட RAW அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இச்சமயத்தில் பிரதம மந்திரி என்ற பதவி கொடுத்த அதிகாரத்தாலும், பிரத்யேக சலுகைகளாலும், இந்திரா காந்தி ராஜீவுக்கு நெருங்கிய அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அக்குழுவில் பங்கேற்க RAW அதிகாரிகளை நிர்ப்பந்தமாக உடன்பட வைத்தார். இந்த ஏற்பாட்டிற்கு RAW அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் ஒப்புகொண்டார்கள் ஆனால் இந்தக் கூட்டங்களில் ராஜீவ், அருண் நேரு, அருண் சிங் சொல்வது எதையும் அதிகாரபூர்வமான குறிப்பேடுகளில் (இவர்கள் பெயர்களால்) இணைக்கக் கூடாது என்று கறாராக RAW அதிகாரிகள் கூறிவிட்டனர். ராஜீவ் அன்று வகித்த பதவி காங்கிரஸின் பொதுக் காரியதரிசி என மட்டுமே இருந்தது. இருப்பினும், அரசாங்கத்திலோ அல்லது RAWவிலோ எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், இத்தாலிய ஒற்றர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய RAW அதிகாரிகள் செயலாற்றியாக வேண்டுமென ராஜீவ் நிர்ப்பந்தித்தார். இத்தாலியர்களை இந்திய உளவுத் துறையுடன் இணைக்க ராஜீவ் ஏன் இவ்வாறு நிர்ப்பந்திக்க வேண்டும்?

 

இதில் இத்தாலியர்களின் ஒத்துழைப்பு எதற்காக, அதன் வரம்புகள் என்ன என கொஞ்சமும் ஆராயாமல், அல்லது ஒன்றுமே கண்டுகொள்ளாமல், கண்டபடி இக்காரியத்தில் வலுக்கட்டாயமாக ஏன் முனைய வேண்டும்? காரணம், சாக்ஷாத் சோனியா தான். ராஜீவ் 1968லேயே சோனியா மைனோவை கடிமணம் புரிந்திருந்தார். இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் செயல், வேண்டாம் என RAW அதிகாரிகள் பரிந்துரைத்தும் ராஜீவ் கேட்கவில்லை. கடைசியில் RAW அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஒன்றுக்குமே லாயக்கில்லாத உளவுக் கூட்டாளிகள் என பல பத்தாண்டுகளாக இந்திய RAW அதிகாரிகள் எவர்களை ஒதுக்கி வைத்திருந்தனரோ, அதே இத்தாலிய உளவுத்துறையுடன் பலவந்தமாக ஒத்துழைப்பு தர நிப்பந்திக்கப் பட்டனர். குறிப்பாக நாம் இதில் அறிய வேண்டியது, சோனியா தான் இரு உளவு அமைப்புகளுக்கும் இடையே உறவுப் பாலம் அமைக்க அரும்பாடுபட்டவர் என்பது. சோனியா மேடம் இத்தாலிய ஒற்றர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எந்தவித ஐயமுமின்றி, தெள்ளத் தெளிவாகிறது. அப்போது அவர் இந்திய அரசியலிலோ அல்லது அரசாங்கத்திலோ எந்த ஈடுபாடும் இல்லாத, பழிபாவமற்ற பதி-பக்தியுள்ள சாதாரண இந்திய குடும்பத் தலைவி எனக் காண்பித்துக் கொண்டிருந்தவர். ஆனால், அச்சமயத்திலும், சோனியா இத்தாலிய நாட்டின் குடி மகள். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பத்தைக் கூட அந்த நேரத்தில் கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடிமையை வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் பின்னர் கோர நேர்ந்தது. சோனியா பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இல்லத்தில், அக்குடும்பத்தின் அங்கமாக இருப்பவர்; இந்திய அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருப்பவர்; ஆனால், இத்தாலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்! young-rajiv-sonia-in-delhi உண்மையில் இத்தாலிய உளவு அமைப்புகளை RAW திரும்பிப் பார்க்காததற்குக் காரணமே, பிரதமரின் வீட்டில், குடும்பத்தில் சோனியா இருந்தது தான். இந்திய-இத்தாலிய உளவு அமைப்புகள் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளிக்கப் பட்டால், அது வெறும் RAWவுடன் நின்றுவிடாது, பிரதம மந்திரி வீடு வரை நீளும்; விபரீத விளைவுகளை பின்னர் ஏற்படுத்தக் கூடும் ; தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு RAWவுக்கு இருந்தது. பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி குண்டு துளைக்க முடியாத மோட்டார் வாகனத்தில் தான் எந்தப் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ஆலோசனை தந்தனர். இந்திரா காந்தி இந்தியத் தயாரிப்பான அம்பாசிடர் காரையே குண்டு துளைக்க முடியாத வாகனமாக மாற்றி விட விரும்பினார். ஆனால் அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அப்போது இல்லை (1985ல் தான் இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானது). எனவே, ஒரு ஜெர்மன் நிறுவனத்திடம் அச்சமயத்தில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஜெர்மன் நிறுவனத்திடம் இந்த காண்டிராக்டை பேசி முடித்தது யார் தெரியுமா? வால்டர் வின்சி என்பவர். இவர் சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர். இதற்கு வெகுமதியாக, வால்டர் வின்சிக்கு சிறிய கமிஷன் கிடைத்திருக்கலாமென RAW வுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை விட கவனிக்கவேண்டிய விஷயம் – பிரதமரின் பாதுகாப்பு என்ற அதி-ரகசியமான முக்கிய விஷயம் சோனியாவின் உறவினர் மூலமாகக் கொடுக்கப் பட்டது என்பது. 1984ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக SPG commandos என்கிற அதிரடித் தாக்குதல் படை இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. 1986ல், சோனியாவின் பரிந்துரைக்குப் பின்னர், இதே வால்டர் வின்சி மூலமாகத்தான், இத்தாலிய பாதுகாப்பு அமைப்பினால் SPGக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க அளிக்கப்பட்டது. இதற்காக வால்டர் வின்சிக்கு ரொக்கமாக, ஆம், ரொக்கப் பணமாக, கணிசமான தரகுக் கூலியும் (கமிஷன்) கட்டாயமாகக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டு, அப்படியே கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது! இந்த கணிசமான அளவு ரொக்கப் பணத்தை ஜெனீவாவில் இருந்த RAW அதிகாரி மூலமாகவே பட்டுவாடா செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், வால்டர் வின்சி இந்த ஏற்பாட்டுக்கு உடன்படாமல், இத்தாலியில் உள்ள மிலானில் கொண்டுவந்து நேராகத் தன்னிடம் கொடுக்க வேண்டுமென விரும்பினார். ஏனெனில், தனக்கு ஸ்விஸ் – இத்தாலி எல்லை சுங்க அதிகாரிகளிடம் ’நல்லுறவு’ இருப்பதாகவும், ஆகவே, தனக்காக வரும் எவரையும் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்ய மாட்டார்கள் எனவும் RAW அதிகாரிகளுக்கு வின்சி உறுதியளித்தார். ஆனால் இதற்கு RAW அதிகாரி அசைந்து கொடுப்பதாக இல்லை. பிடிவாதமாக RAW அதிகாரி இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாததால்

 

, Operation Cancelled என்று வால்டர் வின்சிக்கு அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அந்த ரொக்கத் தொகை பின்னர் இத்தாலியின் ரோம் நகரத்திலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகவே வால்டர் வின்சிக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. இம்மாதிரி ரொக்கப் பணமாக கொடுப்பததற்காக அதிகாரபூர்வமாக சொல்லப் பட்ட ரகசிய காரணம் என்ன தெரியுமா? இந்திய SPG commandos-அதிரடித் தாக்குதல் படைக்கு பயிற்சி அளிப்பதற்காக, இத்தாலிய பாதுகாப்பு அதிகாரிகளின் வருகைக்கான பயணச் செலவுக்காகக் கொடுக்கப்பட்டது என்பது தான் அது. இதைப்பற்றி, அப்போது அமைச்சரவைக் கூட்ட காரியதரிசியாக இருந்த பி.ஜி. தேஷ்முக் சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் விவரித்திருக்கிறார். இந்தப் பயிற்சி படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். இத்தாலியிலிருந்து இந்தியா வந்த பயிற்சியாளர் இந்தியப் படையைச் சேர்ந்த ஒருவரைக் கன்னத்தில் பளாரென அறைந்தார். இத்தாலியர்கள் இதே போல பல தடவை SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது. இதன் விளவாக SPG commandos படைக்கு ராஜீவ் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியும், மனக் கசப்பும் ஏற்பட்டு விடும் எனவும், இது ராஜீவின் பாதுபாப்புக்கே குந்தகம் விளைவிக்கக் கூடியது எனவும் எச்சரிக்கப் பட்டது; ராஜீவும் உஷாராகி வால்டர் வின்சி ஏற்பாடு செய்த பயிற்சி முகாமுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார். இந்த திடீர் முடிவின் விளைவு, படைகளுக்கு குறிப்பிட்ட பயிற்சியும் கிடைக்காமல், கணிசமான ரொக்கப் பணமும் பறிபோனது. இதெல்லாம் சோனியா-இத்தாலிய கைங்கரியம்! 1985ல் ராஜீவ் சோனியாவுடன் பாரிஸ் நகருக்கு பயணம் சென்ற போது, பாதுகாப்புக் கருதி வழக்கமான SPG அதிகாரிகளோடு கூட, பிரெஞ்சு மொழி அறிந்த RAW அதிகாரி ஒருவரும் (பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்புடன் உரையாடுவதில் உதவ) கூட பிரான்ஸுக்கு அனுப்பப் பட்டார். பிரான்ஸில் உள்ள லியோன் (Leon) நகரில், திடீரென்று ராகுலும், பிரியாங்காவும் காணாமல் போய் விட்டனர். இதை அறிந்த SPG அதிகாரிகள் மிகவும் கலவரமடைந்தனர். ஆனால், “கலவரமடையத் தேவையில்லை; ராகுலும், பிரியாங்காவும் சோனியாவின் மற்றொரு சகோதரி, நாடியாவின் கணவன், ஜோஸ் வால்டிமாரோவுடன் (Jose Valdemaro) பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று வால்டர் வின்சி தெரிவித்தார். மேலும், ராகுலும், பிரியாங்காவும் வால்டிமாரோவுடன் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு ரயில் மூலமாக சென்று விட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ஸ்பெயின் அதிகாரிகள் முன்னரே ஏற்பாடு செய்து விட்டதாகவும் வின்சி கூறினார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியாமல் இவர்கள் இப்படி பயணம் செய்தது இத்தாலிய பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொடுத்த வசதி என அறிந்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறி கலங்கிப் போனார்கள். sonia_con01_cartoonஅப்போது இந்திய பிரதமராக நரசிம்ம ராவ் இருந்தார். இந்த மாட்ரிட் பயணத் திட்டத்தில் நரசிம்மராவின் ஆதரவையோ, அல்லது உதவியையோ கொஞ்சமும் எதிர்பார்க்காது மட்டுமல்ல, இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சோனியா இப்படி செய்ததாக எவரும் தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம். இதன் மூல காரணம் சோனியாவுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் கொஞ்சமும் நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை என்பது தான். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? வேறு சில விஷயங்களையும் தெரிந்து கொண்டால் இது தெளிவாகப் புரியும். 1986ல் ஒருநாள் ஜெனிவா நகரத்தில் இருந்த RAW அதிகாரிக்கு ஒரு செய்தி வந்தது

 

 

 

 

– “இத்தாலியில் இருந்து வந்த பிரபலஸ்தர்களான வி.ஐ.பி குழந்தைகள் பத்திரமாக ஜெனிவாவிலிருந்து மறுபடி இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர்”. செய்தி அளித்தவர் ஜாக் குன்ஸி, ஜெனிவா நகரக் காவல் ஆணையர். யார் இந்த வி.ஐ.பி குழந்தைகள், எங்கு போகிறார்கள் எதுவுமே இந்திய அதிகாரிகளுக்குப் புலப்பட வில்லை. இந்திய வி.ஐ.பி குழந்தைகளின் பயணத்தைப்பற்றியும் RAW அதிகாரி களுக்கு ஒன்றுமே தெரியாது. ராகுலும், பிரியாங்காவும் வால்டர் வின்சியுடன் காரில் ஜெனீவா வந்தடைந்ததாக RAW அதிகாரியின் நல்ல நண்பரான ஸ்விஸ் காவல் அதிகாரி விவரமாக எல்லாவற்றையும் சொன்னர். இதன் பின்னணியில் RAW அதிகாரிக்குத் தெரிவிக்காமல் இத்தாலிய வெளியுறவு அலுவலக அதிகாரிகளுடன் ஸ்விஸ் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தார். அதோடு விடவில்லை காவல் ஆணையர் ஜாக் குன்ஸி. இந்திய RAW அதிகாரியைப் பார்த்து, படு நக்கலாகக் கேட்டாராம் – “ உங்கள் பிரதமரின் மனைவிக்கு உங்கள் மீதோ அல்லது இந்திய தூதரகத்தின் மீதோ சற்றும் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இத்தாலியர்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்கிறார் போலிருக்கிறது”. இதனால் தனக்கு ஏற்பட்ட அவமரியாதை மற்றும் மதிப்புக் குறைவு பற்றி இந்திய RAW அதிகாரி தன் மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கிறார். அவரும் அவர் கடமைக்காக தன் மேலதிகாரி களுக்கும் இதே புகாரை அனுப்பியும் இருக்கிறார். அத்துடன் இந்திய RAW அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவு பற்றிய விஷயம் அங்கேயே முடிவவைந்து விடுகிறது. அவ்வளவுதான். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி தகவல்கள் காட்டுத் தீபோன்று உலகளவில் உள்ள உளவு வலைப் பின்னல்கள் அனைத்திலும் உடனுக்குடன் பரவி விடுகிறது. இந்திய அதிகாரிகள், இந்திய தூதரகங்கள், இந்திய பாதுகாப்புப் படையினர் ஆகியவை மீது சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை என்கிற விஷயம், உலக அரசியல்-உளவு வட்டங்களில் இன்று சகலரும் அறிந்த தகவல். இதற்கு மேலும் இவ்விஷயத்தைப் பற்றித் தெரிய வெண்டுமா? மேலும் படியுங்கள். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, சோனியா, ராகுல், ப்ரியங்கா ஆகியோர் வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, SPG பாதுகாப்பு ஏற்பாடுகளுப்புப் பொறுப்பேற்றிருந்த RAW அதிகாரிக்கு, இவர்கள் பயண விவரங்கள் ஒன்றுமே தெரிவிக்கப் படவில்லை. ஆனால், மேலை நாட்டு உளவு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய அதிகாரிகளுக்குத் தெரியுமுன்பாகவே எல்லாமே தெரிந்திருந்தது. இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏதோ கொஞசம் தான் தெரியும்; பல சமயங்களில் அதுவும் வேற்று நாட்டு உளவு அமைப்புகள் மூலமாகத் தான் தெரியவரும். இதனால் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எவ்வளவு பாதகம், அவமதிப்பு, மதிப்புக் குறைவு, தலை குனிவு ஏற்பட்டது என இந்த இத்தாலிய பெண்மணி சோனியாவுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? சோனியாவின் பிரத்யேக காரியதரிசி ஜார்ஜ், டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் மூலமாக, ரோமில் உள்ள இத்தாலிய வெளியுறவு அலுவலகத்துடனும், மேலை நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடனும் நேரடியாகவே வழக்கமாகத் தொடர்பு கொள்வாராம். மேற்குறிப்பிட்ட நேர்மையான RAW அதிகாரி, தன் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் சமயத்தில் மேற்கூறிய விஷயங்களை தலைமை அதிகாரியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த முறையீடு அப்போது பிரதம மந்திரியாக இருந்த நரசிம்ம ராவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் (அதாவது சோனியா) மிக முக்கியமான பாதுகாப்பு விஷயஙகளைக் கூட இந்திய அமைப்புகளை நம்பாமல் அல்லது கலந்து கொள்ளாமல், நேராக இத்தாலிய தூதரகத்தின் மூலமாக செயல்படுத்துவது பற்றி அறிந்து ராவ் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், இதில் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இப்போது கேட்டாலும் அவர் உண்மையை நமக்கு சொல்லப்போவதில்லை, (இக்கட்டுரை 2004ல் எழுதப் பட்டது.

 

அன்று நரசிம்ம ராவ் உயிருடன் இருந்தார்). ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்ற RAW அதிகாரி *எப்போதும்* உண்மையைத் தான் சொல்வார். எனவே, 1980களிலேயே, சோனியா இத்தாலிய உளவாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்; பற்பல அபாயங்களும், திகில்களும் நிரம்பிய உளவு அமைப்புகளின் வேலைகளில் பின்னல்களை உருவாக்கும் அளவு செயல்திறன் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. ஆனால், வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் போதே மிக முக்கியத்துவமான இந்திய பாதுகாப்பு விஷயங்களில் சோனியா தன் இத்தாலியக் குடும்பத்தை ஈடுபடுத்தி உள்ளார்; ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும் போதே, இத்தாலியப் பாதுகாப்பை இந்தியாவின் மீது சோனியா திணித்துள்ளார். இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைப்புகள் மீது தன் அவநம்பிக்கையை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட அளவில் தன் பாதுகாப்புக்காக இத்தாலிய அமைப்புகளுடன் உடன்படிக்கையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். இத்தகைய செயல்களை இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உயிருடன் இருக்கும் போதே, காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ எந்த பதவியிலும் இல்லாத போதே சோனியா செய்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் கையில் உண்மையிலேயே அதிகாரபூர்வமாக அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்? அல்லது என்ன தான் செய்ய மாட்டார்? இருப்பினும், இன்று இந்தியாவுக்காக தன் உயிரையும் தரத் தயார் என்று சோனியா பாசாங்கு செய்கிறார். இப்போது நாம் காணும் சோனியா, அசல் சோனியாவே அல்ல. இந்திய நாட்டுடன் அவ்வளவாகத் தோழமை கொள்ளாத மேலை நாடுகளுக்கும் கூட இவரைப் பற்றி சரியாகத் தெரியும். நாம், அதாவது, இந்திய மக்கள் தான் இன்னமும் இவரை இனம் கண்டு கொள்ளவில்லை. மூலம்: எஸ்.குருமூர்த்தி (ஏப்ரல் 17, 2004 – இந்தியன் எக்ஸ்பிரஸ்) தமிழில்: சேஷாத்ரி ராஜகோபாலன் http://asrilanka.com/2012/12/01/11958

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தனை இரகசியங்கள் வெளிவராமல் மறைஞ்சு போச்சுதோ ஆருக்குத்தெரியும். இணைப்பிற்கு நன்றி இறைவா!

மானமுள்ள இந்தியர் யாரும் வாக்களிக்கமாட்டார்கள் காங்கிரஸிற்கு.

 

கிளறினால் நாறும், அதுவும் உணவுக் கடையில் வேலை செய்ய முதல் தொடங்கினால்

அன்னை சோனியா வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானமுள்ள இந்தியர் யாரும் வாக்களிக்கமாட்டார்கள் காங்கிரஸிற்கு.

 

கிளறினால் நாறும், அதுவும் உணவுக் கடையில் வேலை செய்ய முதல் தொடங்கினால்

உஷ்....அடக்கிவாசியுங்கோப்பா......பிறகு இதுக்கை நிக்கிற றோ...றா....ரி எல்லாம் குழம்பப்போயினம்

  • 1 year later...

This is wrong info.... Now also Sonia is in the Control of SPG.... So please stop telling such lie.......Tamilan will not say lie....

  • கருத்துக்கள உறவுகள்

.Tamilan will not say lie..// அப்ப நீங்க  தமிழனில்லை  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ்கன்யாகுமாரி அவா்களே  கை இப்போ முடமாகிவி்ட்டது. எனவே முன் இரு விரல்களையும் பின் இருவிரல்களையும் மடக்கிவிடுங்கள்.

 

08-1399525352-10176168-1446636275575127-

This is wrong info....

 

 நீங்கள் கூறுவதை முழு ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் ..இத்தாலியிடம் இருந்து SPG எந்த ஒரு பயிற்சியையும் பெற வில்லை ..அது முழுவதுமாக இஸ்ரேலிடமிருந்து தான் பெற்றது ..பல காங்கிரஸ் புள்ளிகள் இத்தாலியிடம்  பயிற்சி பெற நிர்பந்தித்த பொது பல காரணங்களினால் அது தடைபட்டது ..

 

Now also Sonia is in the Control of SPG....

 

சோனியாவிற்கு SPG  தர பாதுகாப்பு தரப்பட  வில்லை

 

So please stop telling such lie.......Tamilan will not say lie....

 

 

 

 பொய் சொல்லாத ஒரு தமிழரை என்னிடம் அறிமுகப்படுத்த முடியுமா ..நான் கன்யாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகில் தான் உள்ளேன்

சோனியா காந்தி அன்று

 

sonia+gandhi+childhood+pictures+2.jpg

 

 

 

Rare-photos-of-10906.jpg

 

son2.jpg

 

son14.jpg

 

sonia+gandhi+rajiv+gandhi1.png

 

son18.jpg

 

son20.jpg

 

 


son33.jpg

Edited by Athavan CH

சோனியா காந்தி இன்று

 

 

sonia_gandhi_lo.jpg

 

23TH_SONIA_GANDHI_731502e.jpg


 

Edited by Athavan CH

Tamilan say lie.? yes you are righ..... The followers of Malayalee prabaharan will tell lie....

Tamilan say lie.? yes you are righ.....

 

 ஆக நீங்கள் மட்டும் தான் சுத்த தமிழனா ..நீங்கள் மட்டும் தான் உண்மை தமிழன் எனில் எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உங்கள் பதிலைக் கூறுங்கள் ..!!

 காங்கிரஸ் அரசு ஆட்சியின் போது நடந்த ஊழல்கள் எத்தனை ..? எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது ..!!

 

 

The followers of Malayalee prabaharan will tell lie....

 

 எனக்கு தெரிந்தவரை எனது பரம்பரை தமிழ் பரம்பரையே ... எனது தாத்தா தங்கப்பன் ..அவரது அப்பா ஆறுமுகக்கண் நாடார் அனைவருமே தமிழ் பேசியவர்கள் ..தமிழர்கள் என்று உணர்ந்தவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.