Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.

Featured Replies

சகாறா பார்த்துவிட்டு வந்து எப்படி இருந்ததென்று சொல்லுங்கோ ?

கொடுத்து வைக்கவில்லை .இலங்கைக்கு விடுமுறை செல்லும் ஒருவரின் வியாபாரத்தை பார்த்துக்கொள்ளுவதாக வாக்கு கொடுத்து பலமாதங்கள் .

  • Replies 90
  • Views 7.5k
  • Created
  • Last Reply

இந்நிகழ்ச்சிக்கு ரிக்கற் வாங்கியவர்களின் தொகை குறைவு என்று கேள்வி.  எதற்கும் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். 

ஒரு வீடு விற்பனை முகவர் (பெண்மணி ) பல ரிக்கேட்டுகளை வாங்கி அதை பொக்சாக விற்றார் .எனது நண்பர்கள் ஒரு பொக்ஸ் வாங்கி போகின்றார்கள் ,மொத்தம் நாற்பது பெயர்கள்(பன்னிரண்டு குடும்பம் ) .தலைக்கு  நூறு டொலர் பிளஸ் வரி.மூன்று உபசரிப்பாளர்கள் அவர்களை உபசரிப்பார்கள் .ஒரு பியரும் மூன்று துண்டுகள் பிஸாவும் இலவசம் மேலதிக தேவையென்றால் பணம் கொடுத்துவாங்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்ச்சிக்கு ரிக்கற் வாங்கியவர்களின் தொகை குறைவு என்று கேள்வி.  எதற்கும் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். 

 

கனடிய  நண்பர் ஒருவருடன் கதைத்தேன்

விஐய்  தொலைக்காட்சி  தானே  நடாத்துது.

அடுத்த மாதம் போடுவார்கள்

தேவையற்றவற்றை  ஓடவிட்டுப்பார்க்கலாம் என்றார்.....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வீடு விற்பனை முகவர் (பெண்மணி ) பல ரிக்கேட்டுகளை வாங்கி அதை பொக்சாக விற்றார் .எனது நண்பர்கள் ஒரு பொக்ஸ் வாங்கி போகின்றார்கள் ,மொத்தம் நாற்பது பெயர்கள்(பன்னிரண்டு குடும்பம் ) .தலைக்கு  நூறு டொலர் பிளஸ் வரி.மூன்று உபசரிப்பாளர்கள் அவர்களை உபசரிப்பார்கள் .ஒரு பியரும் மூன்று துண்டுகள் பிஸாவும் இலவசம் மேலதிக தேவையென்றால் பணம் கொடுத்துவாங்க வேண்டும் .

 

வீட்டை இருந்து புட்டு கட்டிக் கொண்டு போகலாமோ?

கனடிய  நண்பர் ஒருவருடன் கதைத்தேன்

விஐய்  தொலைக்காட்சி  தானே  நடாத்துது.

அடுத்த மாதம் போடுவார்கள்

தேவையற்றவற்றை  ஓடவிட்டுப்பார்க்கலாம் என்றார்.....???

 

 

நானும் இங்கு அதிகம் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்குச் சென்றதில்லை.  இதுதான் முதற்தடவையாக இவ்வாறான மாபெரும் நிகழ்ச்சிக்குச் சென்றேன்.  இங்கு பல தடவைகள் ஏ.ஆர். ரஹ்மான் இவ்வாறான மாபெரும் நிகழ்ச்சி செய்திருக்கிறார்.  இதுவரை காலமும் சென்றதில்லை.  இம்முறைகூட எனக்காகச் செல்லவில்லை.  எனது அக்காவின் மகள் போக வேண்டுமென விரும்பியதால் அவரைக் கூட்டிச் செல்வதற்காகத்தான் அங்கு செல்லவிருந்தேன்.  நான் ரிக்கற் வாங்கியதுகூட வெள்ளி இரவுதான்.  பின்னர் எனது அம்மாவும் வர விரும்பினார்.  அதன் பின்னர் எனது அக்காவையும் கேட்டு நால்வரும் சென்று வந்தோம்.

 

என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சிக்குச் சென்றது நேர மற்றும் பணவிரயம்.  இளையராஜாவின் இசையில் பாடல்கள் படித்தவர்களில் எஸ்.பி.பி.யும் சித்ராவும் மட்டுமே வந்திருந்தார்கள்.  மற்றவர்கள் எல்லோருமே ரஹ்மானின் காலத்திற்குப் பின்னர் வந்தவர்களாதலால் அவர்கள் அதிகம் பாடவில்லை.  அவர்கள் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரன், ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன்  போன்றவர்கள் பாடிய பாடல்களைப் பாடி மிக நன்றாகவே சொதப்பினார்கள்.  ஹரிஹரன், ஜெயச்சந்திரனின் பாடல்களைப் பாட முயற்சித்து அவரது பெயரையே கெடுத்துக் கொண்டார்.  முக்கியமாக சித்ராவைத் தவிர்த்து அனைத்துப் பெண்களும் பாடியது மோசமாகவே இருந்தது.  நூற்றுக்கணக்கான கலைஞர்கள் எனச் சொல்லி நன்றாகவே எமது தலையில் மிளகாயை அரைத்து விட்டார்கள்.

இந்நிகழ்வில் “ஓரம்போ’ என்ற பாடலும் பாடப்பட்டது.  அப்போது இவரது நிகழ்ச்சி பற்றிய சர்ச்சையான ஒரு திரியில் இப்பாடலைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டிருந்தது ஏனோ ஞாபகம் வந்தது.  ஒருவேளை இந்நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்கள் யாழ்களத்தில் இதனைப் பார்த்துவிட்டு அவர்களுக்குத் தெரிவித்திருப்பார்களோ என்ற ஒரு சந்தேகமும் என் மனதில் தோன்றியது. 

பிண்ணனி வாத்தியக்குழு மட்டுமே இதில் ஸ்கோர் பண்ணினார்கள்.  என்னைப் பொறுத்தவரை, இளையராஜாவின் இசையை இவ்வாறான மாபெரும் நிகழ்வுகளில் இரசிக்க முடியாது.  இவரது பாடல்களை நாம் அமைதியாக இருந்து கேட்க வேண்டியவை.  ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களின் துள்ளல் பாடல்களே இவ்வாறான மாபெரும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமானவை.

 

இந்நிகழ்ச்சியின் பிண்ணனி பற்றிய விபரங்களும் கொஞ்சம் இருக்கின்றன.  அவற்றை பின்னர் அறியத் தருகிறேன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய  நண்பர் ஒருவருடன் கதைத்தேன்

விஐய்  தொலைக்காட்சி  தானே  நடாத்துது.

அடுத்த மாதம் போடுவார்கள்

தேவையற்றவற்றை  ஓடவிட்டுப்பார்க்கலாம் என்றார்.....???

 

தமிழச்சியின்ரை கதையைப்பாக்க ஓடவிட்டும் பாக்கேலாது போலை கிடக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

பிண்ணனி வாத்தியக்குழு மட்டுமே இதில் ஸ்கோர் பண்ணினார்கள்.  என்னைப் பொறுத்தவரை, இளையராஜாவின் இசையை இவ்வாறான மாபெரும் நிகழ்வுகளில் இரசிக்க முடியாது.  இவரது பாடல்களை நாம் அமைதியாக இருந்து கேட்க வேண்டியவை.  ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களின் துள்ளல் பாடல்களே இவ்வாறான மாபெரும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமானவை.

 

 
சந்தேகமே இல்லை. கிற்றார் வாசிப்பவர் (சிவா என நினைக்கிறேன்) 35 வருடங்களாக இளையராஜாவின் குழுவில் கிற்றார் வாசிப்பதாக கூறியிருந்தார்.ஒர் உதாரணம் போதுமானது. அருண்மொழி (புல்லாங்குழல் வாசிப்பவர்) திறமையானவர் என கேள்விப்பட்டுள்ளேன்.
  • Thanks for wasting my day 
  • You guys should be ashamed of the overall organization of the event. despite best efforts by you to sink the show, Raja's music wins.
  • Raja sir was Great!...but the event organizers messed up... and could not even pay Rogers Center to keep the show going to make up the lost time...what a shame
  • What a Great show.
  • horrible was show and this is what happens when organizers are pure business mind shitholes who are greedy for money and don't care anything about tamils. they think they can use us to make money, next time they will think twice about it. You expect people to pay between $50-$150/seats, then we expect you to deliver a show that's worth the money, and if anyone that was there last night knows, the show was garbage. Iraja sir himself was probably more disappointed than us
  • A show that was to start at 5 starts at 7. I didn't pay 150 dollars to listen to audience members sing their favorite songs for 2 hours. I believed in Trinity events attempt at bringing a world class show to Toronto. I along with many Toronto Tamils supported you even when the show got cancelled in November. And what did you guys do in return? 3 hours of a poorly planned, rushed and BORING show. Raja has so many hits and it was disappointing to see only a handful made the cut. Next time you plan a show, hire a creative director, take requests, and most importantly start on time. If you plan on doing another show in Toronto, please plan on delivering something that we all can be proud of hosting and supporting. Very disappointed.

http://www.facebook.com/pages/Trinity-Events/212526588875765

நேற்றைய கால நிலையையும் பொருட்படுத்தாமல் அங்கு வந்த மக்கள் அனைவரும் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே வந்தவர்கள். இந்த நிகழ்ச்சிக்காக வேறு முக்கிய நிகழ்வுகளை தவிர்த்து காத்திருந்தவர்கள், வேறு வேறு இடங்களில் இருந்து வந்திருந்து தங்கியிருந்தவர்கள் என்று அனைவரது நேரமும், ஆர்வமும் மதிக்கப்படவே இல்லை.

 

நிகழ்ச்சி இரண்டு மணி நேர தாமதம். அதற்கான கரணம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் சொல்லப்பட்டிருக்க வேண்டும். சொல்லப்படவுமில்லை, வந்து காத்திருந்தவர்களுக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டுமென்ற கடமையைக் கூட ஒழுங்காக செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் நிதாவும் கோபியும் என்ன பாடுபட்டாவது கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்களே ஒழிய தாமதமாகும் நிகழ்ச்சி குறித்து குறிப்பிடவேயில்லை என்பது கவலை.

 

வந்து கலந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்த பலர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து ராஜாவோ, விழா ஒழுங்கமைப்பாளாளர்களோ ஒரு வார்த்தை தன்னும் சொல்லவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் ஒழுங்கமைப்பாளர்களது மக்கள் குறித்த அலட்சியப் போக்கையுமே காட்டியது. வந்த மக்கள் இனி என்ன செய்ய முடியும், இருந்து பார்த்துவிட்டுத்தானே போக முடியும் என்ற மனநிலையிலேயே தான் இருந்தார்கள். கலைந்து போகும் போது எல்லோரது வாயும் இதே வார்த்தைகளையே முணுமுணுத்தன.

 

ராஜா இறுதியில் கூறியதுபோல் மனமெல்லாம் இசையில் நிறைந்திருந்தாலும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களது அலட்சியம், கவனக் குறைபாடு (?) இன்ன பிற காரணங்களினால் மனம் முழுக்க குறையுடனே வீடு திரும்ப வேண்டியாயிற்று. இவ்வளவு மக்களும் கூடியிருந்தார்கள் என்றால் ஒரே காரணம் ராஜ மட்டும் தான். ஆனால் இசையை ரசிக்கவந்த மக்களுக்கு, அவர்களது நேரத்துக்கு, பணத்துக்கு, சிரமத்துக்கு மரியாதையை தராமல் ஏதோ மேம்போக்காய் ஒரு நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறீர்கள். இதற்கான பதிலை நீங்கள் நிச்சயம் பொதுவாக வெளியிட வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் பதிலுக்காய் நான் மட்டுமில்லை, எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

 

- மாயோ மனோ



எங்கேயும் எப்போதும் இளையராஜா!!!!!!!!!!! இதில் கலைஞர்களை குற்றம் சொல்வதற்கு இல்லை... அவர்கள் தமக்குரிய கடமையை சரியாகச் செய்திருந்தார்கள்.

 

ஆனால்?????????? நிகழ்ச்சி ஒட்டு மொத்தத்தில் யாரையுமே திருப்திப் படுத்தவில்லை. இதற்கான முதற்காரணம் கால தாமதம்.. கனடாவில் நேரம் பணத்தை விட முக்கியமான ஒன்று, இந்த நிகழ்வுக்காக 5 மணித்தியாலங்களை ஒதுக்கி வைத்த எமக்கு 2 மணித்தியாலத்திற்கு மேலான காத்திருப்பு சினத்தை ஏற்படுத்தியது. அதிலும் அந்த இரண்டு மணித்தியாலத்தில் எல்லாம் வல்ல கோபி நாத் அந்த நேரத்தை சரியான முறையில் எமக்கு எத்தனையோ செய்திகளைத் தந்திருக்கலாம்.ஆனால் நடந்ததோ????????????????? ஐயோ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அந்த மணிப் பொழுதுகளில்.

 

முதற் கோணமே முற்றும் கோணலாக‌ இருக்கும் போது இளையராஜா எதைத்தந்திருந்தாலும் எமக்கு கசப்பாகத்தான் இருக்கும். கலைஞர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம். , எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு திரளாக சென்ற எமக்கு வெறும் ஏமாற்றத்தை மட்டும் தந்த நிகழ்சியின் நிறை குறைகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பாளர்கள் ஆவார்கள்... மீண்டும் ஒரு முறை வேண்டாம் இந்த ஏமாற்றம்...

 

- செல்வன் குமார்

 

http://www.facebook.com/pages/Trinity-Events/212526588875765



1) Raja and the group went shopping....got delayed...no way! they know they can get good deals in the US... Raja Sir is a professional to let that happen!!....even if so event coordinators are responsible to get to the venue well before 5: 00 pm.
 

Poor coordination!!!


 

2) Poor weather- Snow storm!! No way you know it, it is not SRILANKA, we all know weather predictions and Traffic, Trinity staff unless they just landed with Raja Sir, they need to plan accordingly...May be the Politicians the trinity wanted us to sell to...got delayed.
 

Poor Planning!!!! GREED!!!
 

 

3) VIPs Delayed!!! WHO ARE THOSE VIPS? Not Raja Sir for sure!..... Politicians... Not surprising !
Trinity events guys sure want to sell us all at a whole sale price to all politicians so that they can become SOMEBODY!!!...these guys are not the movers&shakers in our community..THEY are nobody!!

 

They SOLD US !!!

 

 

4) I agree things go wrong.... MINIMUM you apologize ..They did not!! but came with thier smug faces on the stage several times...WHO ARE THESE people? are they one of us...I don’t think so...We Tamils are decent folks!!!


 

5) So what can we do? NEXT time.... let us NEVER ever attend these shows organized by these people ...They will change their company name etc...IDENTIFY these GUYS... PRESS IGNORE next time...maybe they will be in to fight for the next elections ...now they they have gained political mileage using us!!!
 

BEWARE!!!

 

 

Now they will delete all our comments...let us start SAY NO TO TRNITY EVENTs!!! Have a Picture of the Trinity organizers... SHARE PLEASE lets not let this happen... we are not a political capital for people who use us!!
 

START " NO TO TRINITY EVENTS" PAGE!!!

 

-Muthu Kumar

இந்த நிகழ்வை நடாத்திய நிறுவனத்தின் முகநூல் இன்று காலையுடன் அகற்றப்பட்டுள்ளது.

 

நேற்று நள்ளிரவுவரை இது இருந்தது.


அநேகமனான  இசைப்பிரியர்கள், காசைக்கொடுத்து சென்றவர்கள், கடுமையான தொனியில் கருத்துக்களை வைத்தவண்ணம் இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சரியாகத் திட்டமிடவில்லை என்பதே எனது கருத்தும். ரொராண்டோவில் அன்று பனிப்புயல், கார்டினர் நெடுஞ்சாலை மூடல் என்று பல காரணிகள் இருந்தாலும், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் "what if" பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும்.

 

இசைக்குழு தாமதமாக (6:45PM) வாகனத்தில் வந்து இறங்கியதை நேரில் கண்டேன். மேடைக்குப் பின்புறமாக வாகனம் அரங்கத்துக்கு உள்ளேயே வரும் வசதி இருந்தது. இவர்களும் அதீத வாகன நெரிசலில் சிக்குப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
இருந்த 4 மணி த்தியாலத்துக்கும் இளையராஜா அல்ல ஒரு இசையை தந்திருக்கலாம்  அல்லவா?
 
ஏன் சரியான தெரிவு பாடல்கள் தகுந்த பாடகருக்கு வழங்கப்படவில்லை?
 
இந்தியாவில் அடிக்காத, கேட்காத விசிலையா இளையராஜா ரொரன்டோவில் கேட்டு விட்டார். 
 
எத்தனையோ நல்ல பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா ஏன் பாடல் தெரிவில் கோட்டை விட்டார்?
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் கடந்த சென்னை நிகழ்ச்சியிலும் விசில் அடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நவீனன் சொல்வதைப் பார்த்தால் கங்கை அமரனுக்கும் இது ஒவ்வாது போல் இருக்கிறது.

 

எல்லோருக்கும் எல்லாப் பாடல்களும் பிடிக்கும் என்பதில்லைதானே.. அதனால் 50% பாடல்கள் மட்டுமே ஒரு ரசிகருக்குப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

 

அதிக கரவொலியைப் பெற்ற பாடல்களுள் ஒன்று சாய்ந்து சாய்ந்து என்று யுவன் பாடிய பாடல். எனக்கு அதை கேட்பதற்கு அறவே விருப்பமில்லை.. :D ஆனால் பலரின் பிருப்பமும் நிறைவேறத்தானே வேண்டும்..?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா டொராண்டோ 

 

யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.


ஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா? அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.

நான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.

ஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.

கோபி நீ போய் ராஜாவை அனுப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்........... நீயா? நானா? என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்...

முதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.

இதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.

இது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.

இந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.

வெளியிலே பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை!

இலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.

நிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.

அது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது? அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.

கோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.

ஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்..... மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.

கோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.

கனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.

சட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

இடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

அரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ...

டிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.

பாவம் கோபி அல்லாடினார்.

இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும்? 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.

25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட்டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே?

இளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.

ஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.

நீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.

ஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.

நேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்
வந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.

நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.

இவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.

அரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்
தொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.

இது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.

இளையராஜாவுக்கு நேரம் போதவில்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.

அந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.

அந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.

இளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.

உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை
வெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.

அவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.

விசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.

இப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.

இளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.

இந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.

காதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த பாட்டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.

(தொடரும்)

 

- அன்புடன் புகாரி

 

http://ekuruvi.com/ilayaraja%20toronto

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.