Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தலை தூக்க இடமளியோம் – கோத்தா சூளுரை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gothabaya1-100x100.jpg

விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வடக்கில் சில இளையோர் அமைப்புகள் மற்றும் புதிய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவ்வாறான ரெடிக்கல் போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை.
 
தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ரகசியமான முறையில் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்;துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் உஷாராக இருக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
திட்டமிட்ட சிலர் இராணுவம் மற்றும் காவற்துறையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் ரகசியமான முனைப்புகளை மேற்கொள்ள முயற்சித்து வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்றால் புலி.. புலி என்றால் தமிழன்.. இதுதான் சிங்களவனின் நிலைப்பாடு. ஒட்டுக்குழுக்கள், மாற்றுக்கருத்துவாதிகளை அவன் தமிழராகவே எண்ணுவதில்லை என்பது புலனாகின்றது. :icon_idea:

 

இத்தகைய சிந்தனை ஒரு நல்ல விடயம் ஆகும். :D

 

தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ரகசியமான முறையில் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்;துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

மாணவர்களை வைத்து தலைவர்களை மடக்க திட்டம்.  மாணவர்களை இறக்கும் வரை சித்திரவதை செய்த்து இன்னொரு" Lies Agreed Upon" தாயாரித்து சில கூட்டமைப்பு தலைவர்களை கைது செய்ய முயல்கிறார்கள். அத்தோடு அரசு தனது வெளிநாட்டு முகவர்களுக்கும் அனுப்பி வைத்து  அவர்கள் மூலமாக புதிய ஆதார Tapes  கிடத்ததாக பிரசாரம் செய்யவும் பண்ணுவார்கள்.

 

தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தொடர்பில் விசாரிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு கோத்தபாய ஆலோசனை!

Edited by மல்லையூரான்

தமிழன் என்றால் புலி.. புலி என்றால் தமிழன்.. இதுதான் சிங்களவனின் நிலைப்பாடு. ஒட்டுக்குழுக்கள், மாற்றுக்கருத்துவாதிகளை அவன் தமிழராகவே எண்ணுவதில்லை என்பது புலனாகின்றது. :icon_idea:

 

இத்தகைய சிந்தனை ஒரு நல்ல விடயம் ஆகும். :D

 

 எப்படி இந்த ஒட்டுக்குழுக்களுக்கு புரியப்போகிறது அல்லது புரிந்தும் புரியாததுபோல் நடிக்கிறார்களா 

Edited by அலைஅரசி

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்..

 

தாங்களின் கூற்று மிகவும் தவறு. முதலில் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை ஆராய வேண்டும்.1957 ஆம் ஆண்டு நடந்த "ஜெயசிக்குறு" சமரின் போதும் அடுத்து வந்த "ரண கோச" நடவடிக்கை அடுத்தும் அன்று  புலிக்களுக்கு ஆதரவாக மாணவர்களை கொடி பிடிக்க வைக்க வேண்டாம் என்று சொன்னோம். பல கடிதங்கள் எழுதினோம்.. நேரில்  வலியுறுத்தினோம்..  ஆனால் வன்னி தலைமையின் பிற்போக்கு தனத்தால் தான் இந்த நிலைமை.. இதை ஆராய மறந்து விட்டீர்களா..?

டிஸ்கி:

அடுத்து ரோட்டில் காணாமல் போன பொருளை தேடி கொண்டு குறு குறு என்று சென்றாலே புலிகள்தான்....

இப்படிக்கு

 

மாற்றுகருத்து மாணிக்கங்கள் சங்கம் :rolleyes: :rolleyes:
 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அடக்குமுறைகள் தமிழர்கள் மீது தொடர்வதற்கு புலிப்பீதி காட்டவேண்டிய தேவை இலங்கையரசிற்கு இருக்கின்றது. அரசியல் உரிமைகளை அடைவதற்கு தமிழர்களின் தலைமைகள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள்/அமைப்புக்கள் சரியான வழியில் செல்லாமல் காற்று இழுக்கும் திசையில் செல்வதுதான் சிங்கள அரசிற்கு வாய்ப்பாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசியல் வேட்கையை பயங்கரவாதமாகச் சித்தரித்து பூண்டோடு அழிப்பேன் என்ற ஜே ஆர் ஜெயவர்த்தனா அந்தப் பூண்டுகளை பெரு விருட்சமாக்கி விட்டுச் சென்றார். அந்த வகையில்.. அவர் பூண்டாக்கி நட்டது.. பின்னர்  விருட்சமாகி நின்றது.. அதை இவர்.. உலகை எல்லாம் கூட்டி வைச்சு.. வெட்டிட்டிட்டு.. வெற்றி விழா கொண்டாடினார். பாவம்.. அந்த விருட்சம்  திசைகள் எங்கும் பரப்பி விட்டுள்ள விதைகளைப் பற்றி இவர் அறிய முடியாது. அதையிட்டு இவர் கவலைப்பட முன்னர்.. பிரச்சனைகள் இவரைச் சூழ்ந்து கொண்டிரும்..!

 

கொக்கரிக்காமல்.. விடயங்களை பேசித் தீர்க்கப் பழகிக் கொள்வது சிங்களத் தலைமைகளுக்கு அத்தியாவசியமான மனிதப் பண்பாக படிப்பிக்கப்பட வேண்டியே உள்ளது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சி, பணபலம்.படைபலம்!! எல்லாம் இருக்கும் போது 'இப்படியெல்லாம் பேசித்தான் ஆகவேண்டும்!. '

 

காலம் பதில் சொல்லும்!.

புலிகள் தலை தூக்க இடமளியோம் – கோத்தா சூளுரை!

புலிகள் மீண்டும் தலை தூக்கும் நிலையை உருவாக்குவது உங்களின் கையில்தான் உள்ளது தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றினால் மீண்டும் புலிகள் தலை தூக்குவதை தடுக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வருவதற்கான காரணங்களை அதிகப்படுத்திக்கொண்டே   இருப்பதனால் அவருக்கு அந்தப்பயம் இரட்டிப்பாக இருக்கவே  செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.