Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பாரிய திட்டமே கொழும்பில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம்

Featured Replies

புலம்பெயர் மக்கள், தமிழர்கள், சிங்களதேசத்தில் இல்லை தமிழீழத்தில் முதலிடும்பொழுது, அதற்கு அமெரிக்க மற்றும் மேற்குலக அரச ஆதரவு இருக்கவேண்டும்.

 

கார்கில் பிரச்சனை நேரம், அப்போது சனாதிபதியாக இருந்த கிளிண்டன் நேரடியாக கதைத்து சண்டையை நிற்பாட்டினார். காரணம் அப்பொழுது இந்தியாவில் அமெரிக்க முதலீடு - 50 பில்லியன்கள். அத்துடன் அமெரிக்க பொருளாதாரமும் முடங்கிவிடும்.


அதேவேளை மேற்குலகம் சிம்பாவேவியில் உள்ள முதலீடுகளை காப்பாற்ற முடியவில்லை. அவை தேசியமயப்படுத்தப்பட்டன. ஆனால், அவை பெரிய தொகையை இல்லை முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாக இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,

புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பலத்தை சிறிலங்காவில் கொண்டு முடக்குவது ஆபத்தில்தான் முடியும். நினைத்த நேரத்தில் அதனை எடுத்துக் கொண்டு துரத்தி விடலாம். அதனை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை. உலக அளவில் சிறு சலசலப்புகள் கிளம்பும். அது நமக்குப் பிரயோசனமாகாது. முள்ளிவாய்க்கால் நல்லதொரு சாட்சி.

இதைவிட ஐரோப்பிய அமெரிக்க ஜனநாயகக் கோட்பாடுகள், தென் கிழக்காசியாவில் இல்லை. தனிமனித சார்பாக ஊழல் மிகுந்த பிரதேசம். அண்மைய வரலாறுகளில் மிகப்பெரிய இன அழிப்பையும் படுகொலைகளையும் ஜூஜூபியாக ஊதித் தள்ளி உலகத்திற்கு தண்ணி காட்டிய பிரதேசம்.

வரலாறில் இருந்து படிப்பினைகளைக் கற்பது தவறில்லை.

 

 

தப்பிலி,
 
நீங்கள் வரலாறு தந்த பாடத்தினுள் நிற்கப் பார்கின்றீர்கள்.
 
தமிழ் நாடு, கர்நாடக பிரச்னை காவேரி நீர் பங்கீடு போல், இலங்கையின் பிரச்சினையே, அங்கே இருந்த சொற்ப வளங்களை பங்கு இட்டுக் கொள்வதில் தான் ஆரம்பமானது.
 
மிகவும் குறைவான பல்கலை கழக இடங்களுக்கான போட்டியில், வந்த தரப்படுத்தல் இந்த பங்கீடு பிரச்சனையின் ஒரு ஆரம்பம்.
 
மேற்குலக நாடுகள் போல் பொருளாதார தன்னிறைவு வருகையில், இந்த பிரச்சினைகள் இல்லாது மறையும்.
 
சிங்கப்பூர் ஒரு உதாரணம். மேலும் அங்கே அமைந்த சிறந்த தலைமையும் ஒரு காரணம்.
 
புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பலத்தை, தேவையான பாதுகாப்பு இல்லா தற்போதைய சிறிலங்காவில்,  முடக்கும் அளவுக்கு, நமது மக்கள் முட்டாள்கள் இல்லை. 
 
நான் முன்னர் கூறியது போல், காலம் சரியாக வரும் போது தான் அது நடக்கும்.
 
எனக்கு தெரிந்த பலர், கொழும்பில் தமது வீடுகள் மீது, தேவை இல்லாவிடினும், ஒரு பாதுகாப்பு என அங்கேயே (mortgage) கடன் வாங்கி, மாதாமாதம் கட்டுகின்றனர்.
 
அதனை பறித்தால், யாருக்கு நட்டம்?
 
இன்றைய தேவை, பொருளியல் பலம்  தொடர்பான தெளிவான தூர நோக்கு கொண்ட சிந்தனை.
 
பிரித்தானியாவின் முதாவது சாம்ராஜ்யம், அமரிக்காவின் சுதந்திர பிரகடனத்துடன் முடிவுக்கு வந்ததும், வரலாறு தந்த பாடம் கசப்பானது என இருக்காமல், இரண்டாவது சாம்ராஜ்யம் வீறுடன், அந்த பாடத்தில் இருந்த தவறுகளில் இருந்து படித்து, இன்னும் தீவிரமாக எழுந்து, பரந்தது.
 
எனவே இன்றைய நிலை, கடந்து போன பாடங்கள், குறித்து கவலை படாமல், எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் திட்டம் இடுவோம்.
  • கருத்துக்கள உறவுகள்

 

மகிந்த, சிங்களவர்களுக்கு, கரை ஏற முடியாத ஒரு பெரும் கடனுடன் கூடிய நாட்டினை  விட்டுச் செல்வார்.
 
தமிழர்கள், மகிந்த காலத்தின் பின்னே, சர்வதேச தலையீட்டுடன் கூடிய  சரியான தீர்வு ஒன்றின் பின்புதான் நாடு திரும்புவார்கள். முதலிடுவார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல.

 

கடந்த 50 வருடத்தில் சிறிலங்காவின் அரச தலைவர்களாக வந்தவர்கள் பெரும்பாலோர் இனவாதிகள்.டட்லி சேன நாயக்க ,பண்டாரநாயக்க ,சிறிமாவோ,ரனில்,சந்திரிக்கா, மகிந்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்கள் ஏதோ வகையில் தமிழர்களின் சொத்தை அபகரித்தவர்கள் அல்லது அழித்தவர்கள். இவர்களை தெரிவு செய்தவர்களும் சிங்கள மக்களே. ஆகவே மகிந்தவுக்கு அடுத்ததாக வரும் தலைவரும் ஒரு இனவாதி,தமிழரை அழிப்பவர் என்பதில் சந்தேகம் இல்லை.எதனை வைத்து மகிந்தவுக்கு பின்னர் தமிழர்கள் சிறிலங்காவில் முதலிடலாம் என்கிறீர்கள்??

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கடந்த 50 வருடத்தில் சிறிலங்காவின் அரச தலைவர்களாக வந்தவர்கள் பெரும்பாலோர் இனவாதிகள்.டட்லி சேன நாயக்க ,பண்டாரநாயக்க ,சிறிமாவோ,ரனில்,சந்திரிக்கா, மகிந்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்கள் ஏதோ வகையில் தமிழர்களின் சொத்தை அபகரித்தவர்கள் அல்லது அழித்தவர்கள். இவர்களை தெரிவு செய்தவர்களும் சிங்கள மக்களே. ஆகவே மகிந்தவுக்கு அடுத்ததாக வரும் தலைவரும் ஒரு இனவாதி,தமிழரை அழிப்பவர் என்பதில் சந்தேகம் இல்லை.எதனை வைத்து மகிந்தவுக்கு பின்னர் தமிழர்கள் சிறிலங்காவில் முதலிடலாம் என்கிறீர்கள்??

 

 

நான் சொன்ன விடயங்களை முழுவதுமாக வாசியுங்கள். விடை கிடைக்கும்.
 
சிங்களவர்களிலும் பார்க்க மிக மோசமான வன்முறைகளை, ஸ்காட்லாந்து மீது, இங்கிலாந்து புரிந்தது. இருப்பினும் 2014 ல் ஒன்றாக இருபதற்கே வாக்களிப்பார்கள் என சொல்லப்படுகின்றது.
 
ஆங்கிலேய காலனித்துவ வாதிகளால் மோசமாக பாதிப்படைந்த பிரெஞ்சு காலனியான, கனடாவின் கியுபெக் மாகாணம், சுதந்திரத்திற்கான வாக்களிப்பில் ஒன்றாக இருப்போம், சுதந்திரம் வேண்டாம் என வாக்கு அளித்தது.
 
என்ன காரணம்? இரு நாடுகளுமே உயர் பொருளாதார அபிவிருத்தி கொண்ட நாடுகள் என்பதால் தான், பழைய வரலாறினை மறந்தது விட்டனர்.  இல்லையா?
 
இலங்கையில் பொருளாதார பலம் ஒன்றே தமிழர் வாழ்வினை சிறப்புற வைக்கும். இந்தியாவோ, அமெரிக்கவோ அல்ல என்பதனை நினைவில் கொள்வோம்.
 
ஈட்டி எட்டடி பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்.
 
கரிபியன் பகுதியில், பல மில்லியன் கொடுத்து ஒரு தீவினை சொந்தமாக வாங்கிப் போட்டிருகின்றார் ஒரு பிரிட்டிஷ் பெரு முதலாளி. 
 
சண்டை இல்லை. துவக்கு இல்லை, பீரங்கி இல்லை: பச்சை டாலர், ஐயா, டொலர்.
 
இந்த திரியின் தலைப்பு நான் சொல்வதனை தெளிவாக சொல்கின்றதே.
 
(சும்மா ஒரு கேள்வி: ஒரு பெரிய தொகை கொடுத்து, யாழ்ப்பாணம் பக்கத்தில் உள்ள ஒரு தீவினை, நீண்ட கால குத்தகைக்கு கேட்டால், நம்ம மகிந்த, இல்லை என்று சொல்வார் என்று நினைகின்ரீர்களா?)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி..

 

நீங்கள் சொல்லும் அணுகுமுறை ஈழத்தமிழர்களுக்குப் புதியதல்ல.. 1948 இல் இலங்கையை பிரித்தானியா விடுவிக்கும்போது தமிழ் தலைவர்களுக்கு இருந்த அணுகுமுறையே உங்களதும். அதாவது செல்வாக்குடன் இருக்கும் நாங்கள் இலங்கை ஆட்சி பரிபாலனத்தில் செல்வாக்கு செலுத்தலாம் என்பது (சிங்களவன் சனத்தொகையில் அதிகமாக இருந்தாலும்).

 

அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய தமிழர் நிலை நம் முன்னோரது சிந்தனை வெற்றியளித்ததா என்பதைப் பறை சாற்றுகிறது.

 

ஆனாலும், பணம் பாதாளம் வரை பாயும் என்கிற உங்களது சித்தாந்தத்தை ஒத்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், சிங்களவர்கலும் சளைத்தவரல்ல.. மாற்றி யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ஆனாலும், பணம் பாதாளம் வரை பாயும் என்கிற உங்களது சித்தாந்தத்தை ஒத்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், சிங்களவர்கலும் சளைத்தவரல்ல.. மாற்றி யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.

 

 

எது குறித்து மாற்றி யோசித்துக்கொண்டே இருப்பார்கள். என்கிறீர்கள்?
 
தமிழர்களுடன் சேர்ந்து தீவினை முன் நோக்கி கொண்டு செல்லாமல் 60 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு விட்டன என அவர்களும் சிந்திப்பார்கள் தானே.
 
1948 குறித்து நீங்கள் சொல்வது, கண் மூடித்தனமான சிங்களவர்கள் அப்பாவித்தனம் மீதான நம்பிக்கையும், மெத்த படித்த தம் மீதான அகங்கார நம்பிக்கையும். இல்லாவிடில், ஜின்னாவின் உதாரணம் பின்பற்றி, பிரிட்டிஷ் காரரிடம் தனி நாடு கேட்டு இருந்திருப்பார்களே. 
 
இப்போது நாம் வைக்க வேண்டிய நம்பிக்கை எமது பொருளாதார வளம் மேல். 
 
இரண்டுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.
 
இந்தியாவில் யாரை சந்தித்தாலும் பணம், தொழில் குறித்து பேசுகின்றனர். அதன் காரணமாக வேகமாக முன்னேறுகின்றனர்.
 
மகிந்த செய்யும் கோமாளித்தன அரசியல் விரைவில் உள்ளூர், மற்றும் சர்வதேச நடவடிக்கையினால்  முடிவுக்கு வரும். அத்துடன் இனவாத அரசியலும் முடிவுறும்.
 
பின்னர் புலம் பெயர் தமிழரும் சர்வதேச உத்தரவாதத்துடன் முதலிட தீவு முன்னேறும்.
 
சிங்களவர் சேர்ந்து ஓடி வராவிடில், இழப்பு அவர்களுக்கு தான்.
 
1977 ல் திறந்த பொருளாதார கொள்கையினை அறிமுகப் படுத்திய இலங்கை, தமிழர் உரிமை விடயத்தில், செய்த திமிர்தன முட்டாள் தனத்தில் 30 வருடங்கள் இரு பக்கமுமே பேர் இழப்பு தானே.

Edited by Nathamuni

இன்று இலங்கையில் யாரும் எந்த பெரிய பொருளாதார திட்டத்தையும் மகிந்தா அண்ட் கோவை மீறி செய்ய முடியாது.


இதை இந்தியாவே உணர்ந்துள்ளது. சீனாவும் கொடுத்த கடனை இறுக்கத்தொடங்கியுள்ளது.
 

உலகப்பொருளாதாரம் நிலையற்ற நிலையில் உள்ளது. 
ரூபாய் மேலும் சரியப்போகின்றது

 

பல மாற்றங்கள் உலகிலும் இலங்கையிலும் நடக்கலாம்.
 

 புலம்பெயர் மக்கள் வேலையை செய்து பணத்தை சேமித்து காசாக கையில் வைத்திருக்க வேண்டும்  :D

  • கருத்துக்கள உறவுகள்
எது குறித்து மாற்றி யோசித்துக்கொண்டே இருப்பார்கள். என்கிறீர்கள்?
 

 

முக்கியமானது தமிழர்களின் பணத்தால் சிங்களவனை "வாங்க" முடியாமல் இருப்பது. அவ்வளவு வளம் மிக்கவர்களாக நாம் இருந்தால் சிங்கள அரசை "வாங்கி" வெற்றிநடை போடலாம். ஆனால் எம்மால் முடியக்கூடியதை மீறிய வளத்தை சிங்கள ஆட்சியாளர்கள் ஆட்சி பரிபாலனத்தை வைத்துப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆகவே பணம் என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டன்று.

 

அதே சமயத்தில் சிங்கள நாட்டையே மறைமுகமாக ஆண்டு வருபவர்கள் தேரர்கள்தான். இனவாதத்தைத் தக்க வைத்திருப்பவர்களும் அவர்களே.. ஆட்சியாளர்கள் இவர்களை மீறிச் செயற்படமுடியாது. அரசமைப்பின் இரண்டாவது பகுதியிலேயே புத்த மதத்தின்பேராலான ஆளுமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

 

இந்த அதிகாரத்தை மாற்ற முடியுமா? மாற்ற நினைக்கும் சிங்கள ஆட்சியாளர் உயிருடன் இருக்க முடியுமா?

 

1983 வரை தென்பகுதித் தமிழரை அடித்து விரட்டினார்கள். அரசியல் மாறியபின்பு, போர்க்காலப் பகுதியில் பஸ்ஸில் ஏற்றி அனுப்பினார்கள்.. :D

 

ஆகவே.. அவர்கள் மாற்றி மாற்றி சிந்தித்து தமது இருப்பை நன்கு தக்கவைத்துள்ளார்கள்.

 

இலங்கையில் முதலீடு.. அதன்மூலமான அதிகாரம் என்பது கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பதற்குச் சமம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் முதலீடு.. அதன்மூலமான அதிகாரம் என்பது கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பதற்குச் சமம் என்பது என் கருத்து.

 

 

இசை,
 
நீங்களும் பழைய வரலாறினை வைத்தே பார்கின்றீர்கள்.
 
எனது கருத்துகளின் அடிப்படையே, சர்வதேச தலையீடுடன் கூடிய தீர்வு ஒன்றின் பின்னால் வருவது குறித்தது.
 
இப்போது உள்ள நிலையில் யாரும் முதலிட செல்லும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை என குறிப்பிட்டேன்.
 
பாதுகாப்பு இல்லாவிடில் யாரும் போகப் போவதில்லை. தீவுக்கும் முன்னேற்றம் வரப் போவதில்லை.
 
புத்தரையும், இனவாதத்தினையும் கட்டிப் பிடித்துக் கொண்டு எவ்வளவு நாள் போகலாம்?
 
:D  :D
  • கருத்துக்கள உறவுகள்

இசை,
 
நீங்களும் பழைய வரலாறினை வைத்தே பார்கின்றீர்கள்.
 
எனது கருத்துகளின் அடிப்படையே, சர்வதேச தலையீடுடன் கூடிய தீர்வு ஒன்றின் பின்னால் வருவது குறித்தது.
 
இப்போது உள்ள நிலையில் யாரும் முதலிட செல்லும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை என குறிப்பிட்டேன்.
 
பாதுகாப்பு இல்லாவிடில் யாரும் போகப் போவதில்லை. தீவுக்கும் முன்னேற்றம் வரப் போவதில்லை.
 
புத்தரையும், இனவாதத்தினையும் கட்டிப் பிடித்துக் கொண்டு எவ்வளவு நாள் போகலாம்?
 
:D  :D

 

நாதமுனி..

 

மன்னிக்க வேண்டுகிறேன்.. :D

அவக் எண்டு பலதையும் படிப்பதால் சிலதை வாசிக்கவில்லை.. :D

தீர்வு வந்தபின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்தத் தீர்வு என்பது என்பதுதான் பிரச்சினை.. காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

நாத முனி நீங்கள் யாழில் சோறா சுந்திரமா எனப்து போன்ற திரிகளை படிக்கவில்லை போல் இருக்கிறது. இல்லாத பிள்ளைக்கு நீங்கள் என்ன பெயரையும் வைத்தும் தாலாட்டலாம். அது ஆணோ பெணோ என்றது கூட உங்களுக்கு இன்னமும் தெரியாது. நீங்கள் பொருமாத்தோண்டி மனைவிக்கு அடித்த மாதிரி உங்கள் பொருளாதார கற்பனை தேற்றங்களை வைத்து  சிங்களவனை அடிக்கிறீர்கள். இதனால் இன்றைய வயிற்றுப்பாட்டுக்கு இருக்கும் பொரிமாவும் பானையும்தான் போகப்போகிறது.

 

கிழே நீங்கள் சுட்டி இருப்பவற்றை பற்றி நான் தனியத்தனிய விவாதம் நடத்த வரவில்லை. அவை ஒன்றில் இங்கே பொருத்தமில்லாதவை. இல்லையேல் நீங்கள் உண்மையை எதிர்வளமாகப்பாவித்து விட்டீர்கள்.    

 

 

தமிழ் நாடு, கர்நாடக பிரச்னை காவேரி நீர் பங்கீடு போல், இலங்கையின் பிரச்சினையே, அங்கே இருந்த சொற்ப வளங்களை பங்கு இட்டுக் கொள்வதில் தான் ஆரம்பமானது. 1956 வரை நமது வளங்களுக்குள் போட்டி இருக்கவில்லை

 

சிங்கப்பூர் ஒரு உதாரணம். மேலும் அங்கே அமைந்த சிறந்த தலைமையும் ஒரு காரணம். சிங்கப்பூர் சீனர்களால் ஆளப்படுவது. மற்றவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டிருகிறது. சிங்களவர்களால் ஆளப்படுவதில்லை. 

 

பிரித்தானியாவின் முதாவது சாம்ராஜ்யம், அமரிக்காவின் சுதந்திர பிரகடனத்துடன் முடிவுக்கு வந்ததும், வரலாறு தந்த பாடம் கசப்பானது என இருக்காமல், இரண்டாவது சாம்ராஜ்யம் வீறுடன், அந்த பாடத்தில் இருந்த தவறுகளில் இருந்து படித்து, இன்னும் தீவிரமாக எழுந்து, பரந்தது.

பிருத்தானிய சாம்ராச்சியம் அமெரிக்காவால் ஆனதல்ல. அமெரிக்க இழப்பு அங்கே பெரிதும் அல்ல. அது சூரியன் அஸ்தமிக்காத நாடு 

 

சிங்களவர்களிலும் பார்க்க மிக மோசமான வன்முறைகளை, ஸ்காட்லாந்து மீது, இங்கிலாந்து புரிந்தது. இருப்பினும் 2014 ல் ஒன்றாக இருபதற்கே வாக்களிப்பார்கள் என சொல்லப்படுகின்றது.  ஸ்கொடலாந்தின் கதை தமிழர்களில் நடந்து முடிய எவ்வளவோ ஆண்டுகள் போக இருக்கு. அன்றுவரைக்கும் நாம் கைகட்டி இருக்கமுடியாது. மேலும் வாக்களிப்பை பற்றி நீங்கள் கூறும் எதிர்வு முழுமையானதல்ல. கிழக்குமாகாணம் பிரிய மறுப்பதற்கு அதன் காரணம் வேறு

 

ஆங்கிலேய காலனித்துவ வாதிகளால் மோசமாக பாதிப்படைந்த பிரெஞ்சு காலனியான, கனடாவின் கியுபெக் மாகாணம், சுதந்திரத்திற்கான வாக்களிப்பில் ஒன்றாக இருப்போம், சுதந்திரம் வேண்டாம் என வாக்கு அளித்தது. கியூபெக் பிரிய ஒரு காலமும் நியாயம் இருந்ததில்லை. கியூபெக்கை ஆங்கிலேயர் பிடித்து ஆண்டார்கள் என்பதால் அது பிரிய வேண்டும் என்பது பொருளாதார, அரசியல் விவாதங்களுக்குள் வரமுடியாதது.  கியூபெக்கு வெளியே நிறைய பிரெஞ்சுக்காரகள் வாழ்கிறார்கள்.(30% வீதம் என்று நினைக்கிறேன்) அவர்கள் சுதந்திரமாகவே வாழ்கிறார்கள்.

 

கரிபியன் பகுதியில், பல மில்லியன் கொடுத்து ஒரு தீவினை சொந்தமாக வாங்கிப் போட்டிருகின்றார் ஒரு பிரிட்டிஷ் பெரு முதலாளி. இது நமது கருத்துக்களுடன் இணையாதது.

 

1948 குறித்து நீங்கள் சொல்வது, கண் மூடித்தனமான சிங்களவர்கள் அப்பாவித்தனம் மீதான நம்பிக்கையும், மெத்த படித்த தம் மீதான அகங்கார நம்பிக்கையும். இல்லாவிடில், ஜின்னாவின் உதாரணம் பின்பற்றி, பிரிட்டிஷ் காரரிடம் தனி நாடு கேட்டு இருந்திருப்பார்களே.  அன்றல்ல இன்றும் வெள்ளைகாரர் ஒருவரும் நமது சுதந்திரத்தை தர ஆயத்தம் இல்லை. அண்மையில் சொலெயும் புலிகள் மீது சட்டியிருந்த குற்றங்களும், ஐ.நாவின் கடந்தகால நடத்தைகளையும் ஆராய்ந்தால், நாம் சும்மா சோம்பேறிகளாக இருந்து கொண்டு வெறும் கனவுகள் மட்டும் காண்பது மட்டும் அல்ல, உரிமைக்காக போராடிவர்கள் எல்லோரையும்  குறையும் சொல்கிறோம்.

 

மகிந்த செய்யும் கோமாளித்தன அரசியல் விரைவில் உள்ளூர், மற்றும் சர்வதேச நடவடிக்கையினால்  முடிவுக்கு வரும். அத்துடன் இனவாத அரசியலும் முடிவுறும். நமக்கு தீர்வு வரும் வரை நாம் போராட வேண்டும். மகிந்தாவை சிங்களவர்கள் நிராகரிக்க மாட்டார்கள் என்பது இன்றைய அனுமானம்.(நாளை மாறலாம்) .அப்போது அவரை வெளிநாட்டவர்கள் வந்து பதவி நீக்குவார்கள் என்பது, இன்றைய மட்டத்தில், ஒரு ஆசை வார்த்தை. நாம் எமது உரிமையை, வெளிநாடுகளை வைத்து, அவரிடம் பெற்றுக்கொள்ளத்தான் முயவேண்டும்.

 

சிங்களவர் சேர்ந்து ஓடி வராவிடில், இழப்பு அவர்களுக்கு தான். இழந்தார்களொ இல்லையோ 1956 ல் கொரியாவுக்கு இணையாக இருந்த பொருளாதாரத்தை இன்று பிச்சைக்கார நாட்டு நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். இது வரையில் உணராதவர்கள் இனி உணர்ந்தாலும் விட்டாலும் அவர்களின் பாடு.

 

அமெரிக்கா - கையில் காசு இல்லாமல், வேலை ஏதுவும் இல்லாமல், ஆனால், பரிபூரண முழு சுதந்திரத்துடன் வாழ இயலும். சுதந்திரத்தை முழுமையாக பொறுப்புணர்ந்து அநுபவிக்கும் வேளையில், புதிய சிந்தனைகள் உதயமாகும். புதுமையினால் பொருளாதாரம் ஏற்றம் அடையும்.

 

சீனா - வேலை, மற்றும் தொழில் செய்து, பணக்காரராக இருக்கலாம். ஆனால், கூண்டில்தான் வாழ்க்கை. சீனாவில், பணக்காரர்கள் என்றால், தங்க கூண்டினில் வாழலாம். சுதந்திரம் என்பது முழுமையாக மறுக்கப்படுகின்றது.

 

இந்தியா - எல்லாமே குழப்பம். உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம். வளமான வாழ்வு. வேலை. கார் வசதி. எல்லாம் இருந்தும், மன நோய்கள் பெருகி வருகின்றன. கலாசாரம், கிழக்கா, மேற்கா என்ற குழப்பம். அரசியல் குழப்பம். குடும்ப வாழ்வே குழம்பிய நிலையில்.

 

இலங்கை - இன்றைய இலங்கையில் வலிமையான நிறுவனம். மிலிடெரி. புத்த சாமியார் மடங்கள்.

 

இலங்கை மிலிடெரி - தேவைக்கு மிஞ்சிய நவீனமயமாக்குதல். பொருட் செலவு. மற்ற தொழில்களில் ஈட்டிய முதலீட்டை முழுங்கும் நிறுவனம். மிலிடெரியினால், மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

 

இலங்கை புத்த சாமியார் மடங்கள் - ஆக்கச் செயல் இல்லாத நிறுவனங்கள், அழிவு செயலிலேயே ஈடுபடும். சிறுவர்களை புத்த மடங்களில் சேர்ப்பது - சைல்ட் லேபர் என்ற நிலை. மடங்களில் சேர்ந்து, வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீணடிக்கப்படுகின்றது. நிறைய பேர், மடங்களில் இணைவதால், சில ஆண்டுகளில், எண்ணிக்கை குறைந்து, மைனாரிட்டி நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

பிரிட்டீஷ் நாடாளுமன்ற அரசியல், மிகவும் குழப்பமான மக்களாட்சி. நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட்டால், வடக்கு தெற்கு என்று நாட்டை பொளந்து கொடுப்பார்கள். ஐ.நா என்று அலைந்து திரிய அவசியம் இல்லை.

 

இன்றைய இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் இருக்கின்றன. "மாகாணங்களில் சுயாட்சி. மத்தியில் கூட்டாச்சி." அனைவரும் ஒத்துழைப்பார்கள்.

 

ஆக, புதிய மனதோடு, புதிய சிந்தனையோடு, பிரச்சனைகளை அணுகவும். நேற்றைய பிரச்சனை இன்றைக்கு இல்லை. இன்றைய பிரச்சனை, புதிய பிரச்சனை. ஆக, புதிய பிரச்சனைக்கு, புதிய தீர்வினை தேடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் இருக்கின்றன. "மாகாணங்களில் சுயாட்சி. மத்தியில் கூட்டாச்சி." அனைவரும் ஒத்துழைப்பார்கள்.

இதன் கருத்தைக் கொஞ்சம் தெளிவாக விளங்கப் படுத்துவீர்களா, பாலச்சந்திரன்!

 

இந்தியக் குப்பையை, மட்டும் உதாரணமாகக் காட்டாதீர்கள்!

 

ஒரு சொட்டுத் தண்ணீருக்கும், சொம்பைத் தூக்கிக் கொண்டு, வடக்கே ஓடவேண்டிய, சுயாட்சி, இலங்கைக்குச் சரிப்பட்டு வராது என்பது, எனது கருத்தாகும்!

 

இலங்கைக்கு இரண்டு மாகாணங்கள் போதும் என நினைக்கிறேன்!

 

வடக்கும், கிழக்கும் ஒரு மாகாணம்! இரண்டு அல்லது மூன்று நிர்வாக அலகுகள்!

 

மிச்சமெல்லாம் சேர்த்து இன்னொரு மாகாணம் ! அந்த மாகாணத்தை எத்தனை பிரிவாகப் பிரிக்கவேண்டும் (நிர்வாக அலகுகளாக) என்பதைப் பின்பு யோசிக்கலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
நாத முனி நீங்கள் யாழில் சோறா சுந்திரமா எனப்து போன்ற திரிகளை படிக்கவில்லை போல் இருக்கிறது. இல்லாத பிள்ளைக்கு நீங்கள் என்ன பெயரையும் வைத்தும் தாலாட்டலாம். அது ஆணோ பெணோ என்றது கூட உங்களுக்கு இன்னமும் தெரியாது. நீங்கள் பொருமாத்தோண்டி மனைவிக்கு அடித்த மாதிரி உங்கள் பொருளாதார கற்பனை தேற்றங்களை வைத்து  சிங்களவனை அடிக்கிறீர்கள். இதனால் இன்றைய வயிற்றுப்பாட்டுக்கு இருக்கும் பொரிமாவும் பானையும்தான் போகப்போகிறது.

 

கிழே நீங்கள் சுட்டி இருப்பவற்றை பற்றி நான் தனியத்தனிய விவாதம் நடத்த வரவில்லை. அவை ஒன்றில் இங்கே பொருத்தமில்லாதவை. இல்லையேல் நீங்கள் உண்மையை எதிர்வளமாகப்பாவித்து விட்டீர்கள்.    

 

 

மல்லை,
 
அதிகமாகவே குழம்பாதீர்கள்.
 
நீங்கள் அரசியல் போராட்டம் குறித்து பேசுகின்றீர்கள் என நினைக்கிறன்.
 
நான் பொருளாதார பலம் பெறும் போராட்டம் குறித்து மட்டும் கருத்து எழுதுகின்றேன். 
 
நான் சொன்ன சகல உதாரணங்களும் பொருளாதார பலம் சம்பத்தப் பட்டது. நீங்கள் வெளியே போய் குழம்புகிறீர்கள். உதாரணமாக சிங்கப்பூர். அங்கே பொருளாதார பலம் இல்லாவிடில் சமத்துவம் வந்து இருக்காது. சீனர்கள் ஆண்டால் என்ன சிங்களவர் ஆண்டால் என்ன.
 
மலேசியாவில் நடக்காத இனவெறித் தாகுதல்களா, இலங்கையில் மட்டும் நடந்தது? இப்போது அங்கே பொருளியல் வளம் பெருகியதால், சமத்துவம் வருகின்றது.
 
இது தான் நாடுகள், சமூகங்கள், குடும்பங்கள், தனிமனிதர் மத்தியில் நடக்கும் கதையும் கூட. (வீட்டில், சோம்பி இருக்கும் தண்டச் சோறுக்கும், கை நிறைய உளைக்கும் சகோதரருக்கும் இருவருக்கு இடையே கிடைக்கும் சமத்துவ மரியாதை பார்த்து இருப்பீர்கள் தானே).
 
ஒரு சமூகம், பொருளியல் ரீதியில் இன்னுமொரு சமூகத்தில் தங்கி இருக்கும் வரை, இங்கிலாந்தில் கூட வர்க்க வேறுபாடு இருந்தது. இந்த வேறுபாடே நமக்கும், சிங்களவருக்கும் இடையே இருந்தது. அது மட்டும் அல்ல: தமிழர் மத்தியில் கூட இந்த வர்க்க வேறுபாடு இருந்தது. புலத்தில் அடுத்த தலைமுறை மத்தியில் இது இருக்காது. காரணம் பொருளாதார சுஜ பலம்.
 
பிரித்தானிய சாம்ராஜிய விஸ்தரிப்பு ஒரு அரசியல் விடுதலை போர் அல்ல. 
 
அது ஒரு பொருளாதார வள விஸ்தரிப்பு போராட்டம். 
 
மோதிக் கொண்டிருந்த மகாராஜக்களுக்கு ஆயுதங்கள் கடனுக்கு கொடுத்து, கடனும், முதலும் கொடுக்க முடியாத மன்னரிடம் சிறிது, சிறிதாக நிலங்களை சுவீகரித்து, நல்ல சம்பளங்களை வழங்கி, போர் வீரர்களை, அம் மன்னர்களிடம் இருந்தது கவர்ந்து உருவானதே, அந்த சாம்ராஜ்யம்.
 
இது தான் எமது பிரச்னை தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்து.
 
நம்பிக்கையுடன் இருங்கள். எல்லாம் நன்கு நடக்கும்.
 
இரவுக்குப் பின்னே பகல் வரத் தான் வேண்டும் அல்லவா. வரும்.

 

Edited by Nathamuni

இது தான் நாடுகள், சமூகங்கள், குடும்பங்கள், தனிமனிதர் மத்தியில் நடக்கும் கதையும் கூட. (வீட்டில், சோம்பி இருக்கும் தண்டச் சோறுக்கும், கை நிறைய உளைக்கும் சகோதரருக்கும் இருவருக்கு இடையே கிடைக்கும் சமத்துவ மரியாதை பார்த்து இருப்பீர்கள் தானே).

 

 

 

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பருக்காக வெள்ளையர்களேதான் போராடினாகள். இன்றும் கறுப்பர்களின் பொருளாதார நிலை அதள பாதாலத்தில்தான்.  ஆனால் கறுப்பராக கணிக்கப்படும் ஒபாமா நாட்டுத் தலைவர். சீனர்கள் தமக்குள் இனக்குரோதம் குறந்த இனம். அந்த உண்மை இருப்பத்தால் தான் சிங்கபூர் அப்படி. அங்கே பொருளாதாரதில் கடைசி நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள். இவர்களை மற்றவர்களுடன் சமனாக மதிக்க வைப்பது  75% பலம் உள்ள சீன வாக்குகள். அது அங்கே தமிழர் கட்டி எழுப்பியிருக்கும் பொருளாதாரம் அல்ல.  இலங்கையில் நாம் தண்ட சோறு சாப்பிடாமல் எமது சோற்றை சாப்பிட்ட போது அதை பறித்து தானும் சாப்பிட்டமல் தட்டிக்கொட்டியதுதான் சிங்களம். 

 

இங்கே நடப்பது இன வழிப்பு  என்று சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பொருளாதார, வர்க சமனிலைப் போட்டி அல்ல. 

 

பிருத்தானிய சாம்ராசியம் பொருளாதார போரில் ஆரம்பித்தது எனலாம். அதனால்தான் அவர்கள் கைப்பற்றிய நாடுகளில் தமது வருமானத்தை மட்டும் கவனித்தார்கள். எதோ ஒரு நாள் விடுதலையும் கிடைத்தது. ஆனால் இலங்கையில் நடப்பது இன அழிப்பு என்றதை கவனிக்க வேண்டும் அதை தடுத்து நிறுத்த போராடாவிட்டால் இன அழிப்பு நோக்கம் வெற்றி பெறும். அது முன்னேறும் போது தொடர்ந்து தமிழரின் பொருளாதார அழிப்பு நடைபெறும். தமிழர் இலங்கையில் முதலிட மாட்டார்கள் என்பதால் இன அழிப்பு மெதுமை அகாது. அது முன்னேறி இலனகயில் இருக்கும் தமிழரை அழிதேதான் ஆகும். இது தான் அமெரிக்கா, கனடாவில் ஆரம்பக கால செவ்விந்தியர் அழிந்த காரணம். 

 

இலங்கை ஒரு சுதந்திர நாடு.  அதற்குள் வாக்கு பலம் இல்லாத, வெளிநாடுகளில் இருப்போரின் பொருளாதர பலம் ஆட்சி பீடம் அடையும் என்பது கனவு. இது உண்மையாக இருந்திருந்தால் இன்று பொருளாதார பலத்தில் முன்னணியில் நிற்கும் மேற்கு நாடுகள் தமது விருப்பு வெறுப்புகளை இலங்கையில் நிலை நாட்டி இருக்கும்.(ஐரோப்பிய ஒன்றியம் தனது GSP+ யை நிறுத்தியும் எதையும் சாதிக்க முடியவில்லை). மேற்கு நாடுகள் நிலைநாட்ட முடியாமல் போய்விட்ட விருப்பு வெறுப்புகளை இனிமேலைய காலங்களில் தமது பொருளாதார பலத்தை வைத்து தமிழர் நிலை நாட்டலாம் எனபது உண்மை அல்ல. வெளியேறிய தமிழர் பலர் இலங்கையின் தொடர்புகளை துண்டித்து தமிழர்கள் அல்லாமல் போகிறார்கள். இதற்காகத்தான் இலங்கை தனது இன அழிப்பின் ஒரு பகுதியாக அவர்களை வெளியேற்றியது. இது பலமாக மாறுகிறதாக நினைப்பது சரியான அனுமானம் அல்ல. இதில் யூதர்களை தமிழருக்கு உதாரணம் எடுக்க கூடாது. த்மிழர்கள் யூதர்கள் மாதிரி மதம் மொழியில் பற்று உள்ளவர்கள் அல்ல. இருக்கும் இடத்தில் தமது அடையாளத்தை அழித்துவிடுபவர்கள்.

 

இந்த "பொருளாதார வெற்றித்தத்துவம்"  ஒரு உண்மையை கண்டு பிடிக்கத்தவறிவிட்டது. அதாவது இலங்கையின் இன வெறி தொடந்து வளர்கிறது. ( உ+ம் அதாவது சுதந்திர நேரம் 25 % மாக இருந்த வெறி இன்று 50வீதமாகிவிட்டது) அது என்று எப்போ எந்த நிலையில் உச்சத்தை அடையும் என்றோ, அன்று இலங்கையில் தமிழரின் நிலை எவ்வாறு இருக்கும் என்றோ எதிர்வு கூற வேண்டிய பொறுப்பை இந்த பொருளாதார வெற்றித் தத்துவங்கள் தட்டிக்கழித்துவிட்டன. இன்றைய அதன் நிலையை 1948ல் தமிழ், ஆங்கில அரசியல் வாதிகள் கனவிலும் காணவில்லை. இதனால் நாதமுனி அன்றைய தமிழ்ர்கள் தனிநாடு கேட்கவில்லை என்று குறையும் கூறி இருந்தார். 65% அரசாங்க உத்தியோகத்தில், இரண்டு மாகாணங்களில் தனி பெரும்பாணமை, மேல்மாகணத்தில் முழு ஆட்சி மத்திய மாகணங்களில் பாரிய செல்வக்குடன் என்பவற்றுடன் இருந்த தமிழர், தமக்கு கஸ்டம் இருப்பத்தாக சோல்பரியிடம் முறையிட்டபோது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.  இன்று ஒருமாகணம் மட்டும் கையில் அதிலும் எந்த உரிமை அற்று இருக்கிறது. இனத்துவேசம்  மேலும் மேலும் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழருக்கு அநியாயம் செய்வதை  எவ்வளவு கூட முன்னெடுக்கிறார்களோ அவர்கள்தான் தேர்தல்களில் வென்றார்கள். அதனால் வர  இருக்கும் அதிபர் மகிந்தாவை விடக் கொடியவராக இருந்தால்தான் பதவிக்கு வரமுடியும். இப்படி தொடந்து வளரும் இனதுவேச இனஅழிப்பை இந்த நிலையில் தன்னும் நிறுத்தாமல் தமது பொருளாதாரத்தை மட்டும் வளக்க தமிழர்கள் புதிய தத்துவங்கள் கண்டு பிடித்தால், நம் காலத்து தலைவர்களின் சுயநல தத்துவங்களை  குறை கூறத்தன்னும் வருங்காலத்தில் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். 

 

 

இதில் பொறுத்திருப்போர் இலங்கையின் நோக்கமான இனவழிப்பு உதவு செய்கிறார்கள்.  இலங்கை தன் இனஅழிப்பை நிறைவேற்றி முடிக்கமுதல் தமிழர் தம் அரசியல் போராட்டத்தில் வெற்றிகண்டு முடிக்கவேண்டும்.

உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இல்லாது விட்டாலும் சிங்களவர்களும் அந்த ஓட்டத்திற்குள் வரத்தான் வேண்டும். காலம் முழுவதும் மகாவம்ச சிந்தனையில் வாழ்ந்து விட முடியாது.

ஆயினும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட முடியாது. அது அது அதற்கான நேரத்தில் நடக்கும். 80களில் முப்பது ஆண்டுகள் கழித்து கொழும்பில் தமிழ் மொழியை பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்க முடியுமா? இதை அறிவித்து விட்டுத்தான் செய்ய முடியமா?

எல்லாமே இயல்பாக நடக்கும். காலத்தின் ஓட்டம் தமிழர்களுக்கே சாதகமானது. பதற்றம் இல்லாத இலங்கை தமிழர்களையே பலமிக்கவர்கள் ஆக்கும்.

சிங்களம் பதற்றத்தை தக்க வைப்பதன் ஊடாக தமது இருப்பை காக்கவும் தமிழர்களை பலவீனப்படுத்தவும் முயல்வது எதிர்பார்க்கக் கூடியதுதான். இதை சமாளிப்பதில்தான் தமிழர்களின் வெற்றி தங்கி உள்ளது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இல்லாது விட்டாலும் சிங்களவர்களும் அந்த ஓட்டத்திற்குள் வரத்தான் வேண்டும். காலம் முழுவதும் மகாவம்ச சிந்தனையில் வாழ்ந்து விட முடியாது.

ஆயினும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட முடியாது. அது அது அதற்கான நேரத்தில் நடக்கும். 80களில் முப்பது ஆண்டுகள் கழித்து கொழும்பில் தமிழ் மொழியை பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்க முடியுமா? இதை அறிவித்து விட்டுத்தான் செய்ய முடியமா?

எல்லாமே இயல்பாக நடக்கும். காலத்தின் ஓட்டம் தமிழர்களுக்கே சாதகமானது. பதற்றம் இல்லாத இலங்கை தமிழர்களையே பலமிக்கவர்கள் ஆக்கும்.

சிங்களம் பதற்றத்தை தக்க வைப்பதன் ஊடாக தமது இருப்பை காக்கவும் தமிழர்களை பலவீனப்படுத்தவும் முயல்வது எதிர்பார்க்கக் கூடியதுதான். இதை சமாளிப்பதில்தான் தமிழர்களின் வெற்றி தங்கி உள்ளது.

 

 

சபேசன்,
 
உங்கள் கருத்துகள், சுருக்கமாகவும், ஆணித்தரமாகவும், தெளிவாகவும் வைக்கப் படுகின்றன.
 
நன்றி 

கொழும்பில், தமிழர்கள் அகதிகளாக தங்கள் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்பது ஆணித்தரமாக வைக்கப்பட்டிருக்கிறது. 2008 ல் கோபத்தபாய பஸ்களில் தமிழரை எற்றி வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவைக்க முயன்றபோது(இன்று அவுஸ்திரேலியா கப்பலில் ஏற்றி அனுப்புவது போன்று)  அதை தடுத்து நிறுத்தியவர் அந்த நேரம் கோபத்தபயாவின் ஒரு முக்கிய நண்பனாக இருந்த அமெரிக்கத்தூதுவர் ரொபேட் பிளேக்.

 

பதியுதின் கேட்டது மாதிரி 150,000 முஸ்லீம் மக்களை வடமாகாணத்தில் குடியேற்றி வடமாகணத்தேர்தலையும் நடத்தி அங்கேயும் கூட்டமைப்பை தோற்கடிக்க போராடத்தை மளுங்க அடித்து பின்தள்ளுவது இப்போது அவசியம். அதற்காக மேலும் வடமாகாணத்து தமிழர்களை கொழும்பு அகதிகளாக மாற்றவும் வேண்டும்.(புலத்தில் இருந்து யாரும் கொழும்பில் போய் குடியேறுவதில்லை)

 

அதன் பின்னர் யார் யார் கிழக்கு தேர்தல் முடிந்தவுடன் "15 முஸ்லீகள் வென்று கிழக்கு மாகணத்தை முஸ்லீம் மாகாணமாக நிறுவிவிட்டர்கள்" என்று பெருமையாக எழுதினார்களோ அவர்களின் கைகள் காலம் வந்து வடக்கும் கை மாறிய பின்னர் அதே பெருமையான வசங்களை திரும்பவும் யாழில் எழுத்தும். அதுவரைக்கும் அவர்களின் கதைகள் ஆணித்தரமானதாக மட்டும் தான் இருக்கும். அதன் பின்னர், கிழக்கு தேர்தலின் பின்னர் இருந்தது மாதிரி, வெற்றி மிடுக்கும் அதில் இருக்கும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.