Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்த்த படத்தில் மிகவும் சோகப் படம்(துலாபாரம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துலாபாரம் படம் முதலில் மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் 1969ம் ஆண்டு எ வி எம் ராஜன் சாரதாவின் நடிப்பில் வெளிவந்த படம்.இப்படத்தில் நடித்ததற்காக நடிகை சாரதாவிற்கு ஊர்வசி வருது மலையாளத்திலும் தமிழிலும் கிடைத்திருந்தது.

அந்த நேரத்தில் இரத்தம் ஓடஓட அடி அடியென்று அடித்தாலும் கண்ணீரே வராது.அப்படிபட்ட வயதில் இந்த படம் பார்த்த போது அழுகையே வந்துவிட்டது.அந்த இருட்டுக்குள்ளும் சுற்றுமுற்றும் பார்த்தால் தெரிந்த வரை அழாத ஆட்களே இல்லைப் போல் இருந்தது.

இங்கு பலர் அந்த நேரம் பிறந்தேயிருக்கமாட்டார்கள்.இது கறுப்பு வெள்ளை படம் என்பதால் இப்போது பார்க்கவும் முடியாது.

 

இப்படி நீங்களும் பார்த்த சோகப்படங்களைப் பற்றி எழுதலாமே.

 

http://www.youtube.com/watch?v=uNVeKrzBbr0

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு படத்தைப் பார்த்து கண்ணீர் வந்ததென்றால் ஒரு பாடல் காட்சியில்தான்.. :rolleyes:

 

படிக்கவைத்த அண்ணனை தம்பி ஏமாற்றிவிடுவார். ராஜபார்ட் ரங்கத்துரை படத்தில்.. அப்போது தம்பியின் வீட்டுக்கு வந்து அண்ணன் ஒரு பாட்டுப் பாடுவார்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அழுத சோகப்படங்கள் என்றால் நிறைய்ய்ய்ய்ய!** அவ்வளவு இளகின மனசு..அதனாலேயே சில நேரங்களில் திரையரங்குகளுக்கு போவதைத் தவிர்ப்பதுண்டு.

 

பாசமலர் படத்தில் 'கை வீசம்மா கைவீசு' என்று சிவாஜி பாடிக்கொண்டு அழும் காட்சியில் நானும் அழுது விட்டேன்.

 

சோகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் இன்றளவும் மனதிலேற்படுத்திய அதிர்வலைகள் மாறாவண்ணம் இருப்பது 'அரங்கேற்றம்' என்னும் படத்தில் தான்.

நானும் வாய் விட்டு அழுதது என்றால் போலீஸ்காரன் மகள் ,துலாபாரம் ,அரங்கேற்றம் இந்த மூன்றும் முதலிடத்தில் ,ஆங்கில படம் DENZIL WASHINTON  நடித்த THE HURRICANE பார்க்கும் போதும் அழுகை வந்தது .

பலர் துலாபாரத்தை நல்ல படம் என்று  சொல்லக் கேள்வி. பார்த்ததில்லை. சிறந்த ஒளிப்பதிவும், இயற்கையாக  உணர்வுகளை காட்சிப்படுத்தும் கமராக் கோணங்களும்.  69 இலேயே கருப்பு வெள்ளையில் நல்ல சினிமாவை தந்துள்ளார்கள். யாரப்பா இந்த ஒளிப்பதிவு இயக்குனர்?

 

சின்ன வயதிலிலேயே பிடித்தமான பாடல்களில் ஒன்று.

 

காற்றினிலே பெரும் காற்றினிலே

ஆண்டவனும் கோயிலில் தூங்கிவிடும் போது யாரிடத்தில்  கேள்வி கேட்பது

ஏழைகளின் ஆசையும் கோயில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது

தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நான் சின்னவயதாயிருக்கேக்கை காட்சிகளை பார்த்து அழுததெண்டால் நல்லதங்காள், அரிச்சந்திரமயான காண்டம் தான்........அதுக்குப்பிறகு புலம்பெயர்ந்து வந்தாப்பிறகு அழுத காட்சிப்படம் இதுதான்....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் இதுவரை.... ஒரு படத்தைப் பார்த்தும், அழுகை வரவில்லை.
ஈழப்பிரியன் இணைத்த, துலாபாரம் படத்தை நேரம் கிடைக்கும் போது பார்த்து... அழுகை வந்தால், நிச்சயம் சொல்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அழ வைத்த படங்களில் ஒன்று

 

மகா நதி.

 

 

 

http://www.youtube.com/watch?v=tkM4IEalCQE

 

இந்தப்படத்தைப்பற்றிய ஒரு நீண்ட விமர்சனம்

 

( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...
 

Mahanadhi_tamiltubevidcom.jpg
நம்ம சொர்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி...
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி... கவிஞர் வாலி எழுதி மகாநதியில் இடம் பெற்ற... பொங்கலோ பொங்கல் பாடலில் வரும் லைன் அது..அதை என் டைரியி்ல் அந்த வரிகளை எழுதி வைத்து இருந்தேன்....

எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.... நல்ல உடை உடுத்த வேண்டும் என்ற கனவு உண்டு...ஒரளவுக்கு வசதியாக வாழ்ந்தவன் இன்னும் நன்றாக வசதியாக வாழ நினைத்து வழுக்கி விழுந்த கதை இது....


ஒருநாள் காலை என் அம்மா என்னையும், என் நான்கு தங்கைகளையும் அழைத்தாள்... அப்பாவுக்கு வேலை போய் விட்டது... இனி நாளை காலையில் இருந்து யாரும் அம்மாவை காப்பி கேட்டு நச்சரிக்க கூடாது... அம்மா உங்களுக்கு கேழ்வரகு மாவை தண்ணிரில் போட்டு அலசி, வரும் வெண்மையான நீரை நன்றாக காய்ச்சி சக்கரை போட்டு உங்களுக்கு தருகின்றேன்... பால் வாங்க காசு இல்லை என்றாள்... எங்களுக்கு கேஷ்வரகு கஞ்சி சக்கரை போட்டு அன்றிலிருந்து கொடுக்க ஆரம்பித்தாள்...

அரிசி வாங்காத ரேஷன் கார்டுகளை நண்பிகளிடத்தில் வாங்கி, ரேஷன் அரிசி வாங்கி அதனை கொஞசம் நல்ல அரிசியுடன் சரிபாதியாக கலந்து அதனை இட்லிக்கு போட்டு எங்கள் பசியாற்றியவள்....

எல்லோருடைய வீட்டு இட்லியும் மல்லிகை பூவாக காட்சி அளிக்க எங்கள் வீட்டு இட்லி மட்டும் ரேஷனில் போட்ட சிவப்பு அரிசி மி்க்ஸ் செய்ததால்... சிவப்பு கலரில் இருக்கும்.... படிக்கும் போது காமராஜர் போட்ட மதிய உணவுதான் எங்கள் படிப்பை தடையில்லாமல் தொடர செய்தது...

அப்போது அப்பா வாங்கும் ஒரே பத்திரிக்கை குமுதம்தான் ....வறுமை வீட்டில் தொடர்ந்ததால் அப்போது 1ரூபாய்10 பைசாவுக்கு விற்ற குமுதம் என் வீட்டுக்கு வர யோசித்தது... என் அம்மா ஒரு போது அடுத்தவர் வீட்டில் தலை சொரிந்து நின்று அரை டம்பளர் காபி பொடி கொடுங்கள் ...என்று ஒரு போதும் இரவல் கேட்டதில்லை... இருப்பதை வைத்து மானத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவள் என் அம்மா...அத்தனை வறுமையிலும் எங்கள் வீட்டு கவுரவகொடியை கிழே இறக்க வண்ணம் தாங்கி பிடித்தவள் அவள்தான்.....போதும் என்ற மனம் போதும். ரசம்சாதமாக இருந்தாலும் பழைய சோறாக இருந்ததாலும் மானத்தோடு உண்டு வளர்ந்தோம்... அடுத்தவன் வாழ்வை பார்த்து எங்கள் அம்மா ஒரு போதும் சூடு போட்டுக்கொண்டதில்லை.... பந்தாவுக்காக இருப்பதை விட்டு விட்டு பறப்பதை ஒரு போதும் பிடிக்க எங்களுக்கு என் அம்மா கற்றுக்கொடுத்தது இல்லை....

தானும் தன் குடும்பமும் சபிட்சமாக வாழும் பொருட்டு... ஒரு தனிமனிதன் எடுத்த சில தவறான முடிவுகள் எங்கனம் அவனையும் அவன் குடும்பத்தையும் அலை கழிக்கின்றன என்பதே மகாநதி படத்தின் கதை....

மகாநதி படத்தின் கதை இதுதான்....

2.jpg
கிருஷ்ணசாமி (கமல்) மனைவியை வாரி கொடுத்துவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடனும் (ஆண் ஒன்று, பெண் ஒன்று) தனது மாமியாருடனும் (வரலட்சுமி) திருநாகேஷ்வரத்தில் சிவல் பேக்டரி நடத்தி வருபவன்... ஊரில் கையெடுத்து கும்பிட வைக்கும் குடும்பம் அவனுடையது...

வெளிநாட்டில் இருந்தது பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு கொண்டாட ஊருக்கு வரும் நண்பனின் வசதியான வாழ்க்கையும், அவன் பிள்ளைகள் பேசும் ஆங்கிலமும் அவன் மனதை கெடுக்கின்றன...ஒரு விபத்தில் எதெச்சையாக சந்திக்கும் பிராடு தனுஷ் கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி சென்னை வாழ்க்கையை ஆசைகாட்டி கிருஷ்ணசாமிக்கு அனுபவம் இல்லாத சிட் பண்ட் கம்பெனி ஆரம்பிக்க வைத்து,அந்த கம்பெனி பணத்தை மோசடி செய்து தனுஷ் தலைமறவாக, மக்கள் பணத்தை ஏமாற்றி குற்றத்திற்க்காக 4 வருட சிறை தண்டனையுடன் ஜெயிலுக்கு வருகின்றான்கிருஷ்ணசாமி..., அங்கே அவனுக்கு பாஞசாபி கேசன் (பூர்ணம் விஸ்வநாதன்) என்ற பெரியவர் நட்பாகின்றார்...ஒரு கட்டத்தில் அவர் பெண்ணை (சுகன்யா) கிருஷ்னசாமிக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கின்றார்..அவன் ஜெயிலில் இருக்கும் போது அவன் குழந்தைகள், மாமியார் என்னவாயினர்? அவன் ஜெயிலில் சந்திக்கும் பிரச்சனைகள்... பிராடு தனுஷ் மாட்டினனா? கிருஷ்ணசாமி... பஞசாபி கேசன் பெண்ணை திருமணம் செய்தானா? போன்ற கேள்விகளுக்கு வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்....
maha-nadhi.gif
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் சென்னை ஆனந் தியேட்டரில் பார்த்தேன்....கிருஷ்ணசாமி போல நான் சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு வந்து எங்களை ஏமாற்றி, எல் ஐ சி எதிரில்... அப்போது இருந்த சென்டிகோ ஸ்கூட்டர்சில் நான் செக்யூரிட்டி வேலை பார்த்து , எதிரில் இருந்த அலங்கார் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்று வயிற்றை கழுவி, மெரினா பீச்சில் சில மாதங்கள் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய போது பார்த்த படம் இது...

இன்று சென்னையில் என் பைக் போகாத சந்து பொந்துகளே இல்லை எனலாம்... ஆனால் இந்த படம் பார்த்து விட்டு கணத்த இதயத்தோடு விழிகளில் நீருடன். என் நிலை நினைத்தும், கமல் நிலை நினைத்தும், ஆனந்தியேட்டரில் நடுநிநசி காட்சி பார்த்து விட்டு அழுதுக்கொண்டே, ராதகிருஷ்ணன் தெருவில் நடந்தே காந்தி சிலை வந்து மேரி பிஸ்கட் அட்டையை பாய் போல் விரித்து மெரினா பிளாட்பாரத்தில் படுத்து, கனத்த இதய்த்தோடு வெகுநேரம் உறக்கம் வராமல்5,10 மலேசியா ஏர்லைன்சை பிளைட்டை பார்த்து மணி 5,10 என்று மன்துக்குள் சொல்லி ஒரு மணிநேரம்தூங்கி எழுந்தேன்.... அப்போது என் கைகளில் வாட்சு கூட கிடையாது பறக்கும் விமானங்கள்தான் எனக்கு கை கடிகாரம்..... அதன் பிறகு ஒரு வாரத்துக்கு மகாநதி படத்தை பற்றிய நினைவாக இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய செய்தி...

சென்னை ஆனந் தியேட்டர் ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் கண்ணீர் சிந்தி தியேட்டரை நச நசப்பாக்கினர்... படம் பார்த்து கொண்டே நாம்தான் அழுவுகின்றோமா? அல்லது வேறு யாராவது அழுகின்றார்களா? என்று பார்த்தால் எல்லா ஆண்களும் அழுதது வியப்பு...

சிறை வாழ்க்கை மனிதனை திருத்துவதற்க்கு பதில் சில விஷமிகள் மற்றும் சுய நலக்காரர்களால் சிறைகைதிகள் எவ்வாறு துன்பப் படுகின்றார்கள் என்பதை அற்புதமாக சொல்லி இருப்பார்கள்.....

இது காப்பி அடித்த படமா? அல்லது காப்பி அடிக்காத படமா? என்பது எனக்கு தெரியவில்லை ஏனென்னறால் இதே போன்ற கதை அமைப்பிள் பல படங்கள் வந்து உள்ளன...
man_behind_bars.jpg
சிறையில் கமலும் பூர்ணம் விஸ்வநாதனும் சந்தித்து அறிமுகம் ஆகும் காட்சியும் அதன் லைட்டிங்கும் அருமை...உப்புமாவை துலுக்கானத்துக்கு சுவைக்க கொடுத்து அவன் சூட்டில் துடிக்க அதுவரை சோகமாக முகத்தை வைத்து இருந்து விட்டு அவன் போனதும், அவனுக்கு நன்றாக வேண்டும் என்று சிரிக்கும் அந்த சிரிப்பு சுவையான ஒன்று....

சென்னை மத்திய சிறை கைதிகளின் நித்திரையேடு விளையாடும் ரயில் போக்குவரத்தை சொல்லி இருக்கும் காட்சி அழகு... அதே போல் கமல் படுத்து கண் சிமி்டிய படி தன் கடந்த காலத்தை நினைத்து பார்க்க கேமரா டாப் ஆங்கிளில் இருந்தது மெல்ல கமல் முகம் நோக்கி ஜும் இன் ஆக, கண் சிமிட்டவும் அதே ரயில் சவுண்டில் தடக் தடக் ஒளியோடு அவன் சொந்த ஊரில், ஒவ்வோறு கதவாக திறக்க, அவன் ஊரில் வீட்டு பக்கத்திலும் ரயில் டீராக் இருக்க, அதில் ரயில் வருவது போன்று விரியும் பிளாஷ் பேக் காட்சி அருமை... தீ லாஸ்ட் எம்பரர் படத்தில் கேம்பிள் இருக்கும் ராஜா பாத் ரூமில் கையை வெட்டிக்கொள்ள ஒரு சீப்பாய் ஓப்பன் த டோர் என்று சொல்லியபடி இருக்க, அவன் ராஜ காலத்தில் சிறுவயதாக இருக்கும் போது நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் காட்சிக்கு சமம்..அந்த கமல் நினைத்து பார்க்கும் இந்த காட்சி... அதே போல் ரயில் தடக் தடக் ஒலியோடுஇளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, பொங்கலோ பொங்கல் என்று தொடங்கும் பாடல் உற்சாக ரகம்...
19sli3.jpg
பூர்ணம் விஸ்வநாதன் தன் நிலை நினைத்து மந்திரத்தின் ஊடே கடவுளிடம் புலம்புவதும், கனகதார ஸ்தோத்திரம் சொன்னால் பணம் கூறையை பிச்சிகிட்டு கொட்டும் என்பதை சொல்ல... கமல் உனக்கு கொட்டி இருக்கின்றதா என்று எதிர் கேள்வி கேட்பதும்... நீ நாத்திகமா என கமலை பார்த்து கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் இருக்க... உண்டு இல்லை என்று எதாவது சொல் என்று சொல்ல உண்டு இல்லை என்று சொல்லி கமல் நக்கல் விடுவது அழகு...

சிறையில் மனு போட்டுபார்க்கும் குழந்தைகளிடம் கமல் கத்தி பேசி அட்வைஸ் செய்வது ஒரு சிறையின் பார்வையாளர் அறையின் இரைச்சலை ஒலி வடிவில் பார்வையாளனுக்கு புரியவைப்பது சினிமா மொழி....

கமலை பார்த்துவிட்டு சுகன்யா நடக்க ராஜா ஒரு ரோமான்ஸ் மீயுசிக் போட்டு இருப்பார் பாருங்கள்... கவிதையான நெகிழ்வான காட்சி அது..
5.jpg
காவேரி எங்கே ?என்று மாமியாரை கேட்க அவள் பாட்டி பின்புறத்தில் இருந்து தலை நீட்டி பாவாடை தாவானியோடு வந்து சட்டேன கிழே விழுந்து கும்பிடும் பெண்ணை, கம்பிக்கு உள் இருந்து ஆசிர்வாதம் செய்யமுடியாமல் தவிப்பது கண்ணில் நீர் வரவைக்கும் காட்சி...
நான் போர்த் ரேங் அப்பா... என்ற சொல்லும் மகனை ஏன்? என்று கேட்க என்னை விட கெட்டிக்கார பையன்கள் 3 பேரு இருக்காங்க, அவுங்களை துரத்திட்டா நான்தான் பஸ்ட் என்று சொல்லும் காட்சி கவிதை. வீட்டை வாடகை விட்டது தெரிய தன் இயலாமை நினைத்து கட்டை விரலை வாயில் நுழைத்து கமல் கண் கலங்குவது உணர்வு பூர்வமான காட்சி...


கமலை பார்த்து பேசம் சுகன்யாவை ஜெயிலர் ராஜேஷ் கண்டித்து ...காதலிகின்றோம், கட்டிக்க போறோம் என்று மனு எழுதி கொடும்மா... என்று சகன்யாவிடம் சொல்ல,அதற்க்கு எங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் காட்சியில் அவர்கள் காதலை ரொம்ப டிசன்டாக வெளிபடுத்தி இருப்பது அருமை..
33cnlmr.jpg
அதே போல் நர்ஸ் உடையில் தனியாக மனு போட்ட பார்க்க வரும் போது இருவரும் பேசாமல் ராஜாவின் வயலினும், பியனோவும் பேசுவது கவிதை.. இந்த காட்சியில் எல்லோரும் ஸ்டாப் பிளாக்கில் காணமல் போக கமலும் சுகன்யா இருவர் தலைக்கு பின்னும் ஸ்பாட் லைட் அடித்து அப்படியே அவுட்டோர் போய் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் வெளியே போக கமல் மட்டும் கம்பிக்குள் சிறைபட்டு பாவமாக நிற்பது சோகமான காட்சி....


“‘வழுக்கி விழுதுட்டேன்”, “என்ன ஐயரு மூத்திர வாசனை அடிக்குது” போன்ற டயலாக்குகளும் அதற்க்கு லீட் காட்சிகளும் கொடுரத்தின் உச்சம்...

எல்லாம் பகவான் பாத்துக்குவான் என்று பூர்னம் சொல்லும் போது... சும்மா இருங்க ஐயரே, நி்ன்னு கொல்லும் தெய்வமும் சும்மா இருக்கு... அன்றே கொல்லர சட்டமும் சும்மா இருக்கு.... ஆனா எனக்குமட்டும் தண்டனை.... என்ற டயலாக் மூலம் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்து இருப்பார்கள்.. நேர்மையாக இங்கு யாரும் இல்லை என்று ராஜேஷ் விளக்கம் கொடுக்கும் காட்சியும் அந்த டயலாக் வீரியமும் சுரீர் ரகம்...

ஒரு காட்சியில் வந்தாலும் தலைவாசல் விஜய் நடிப்பில் பின்னி எடுப்பார்...
பிள்ளையை விட்டில் படுக்கவைத்து விட்டு சுகன்யாவுக்கும் கமலுக்குமான அந்த மெல்லிய காமம் கலந்த காதலும் அதற்க்கான புளு லைட்டும்,காலையில் காபியை சுகன்யா கமலுக்கு கொடுக்கும் போது அந்த மெல்லிய சன்லைட் காட்சி அருமை....
அதில் பின்னனியில் ராஜாவின் பியானோ அருமையிலும் அருமை....
சோனாகாட்சி காட்சிகள் மனதை வலிக்க வைக்கும் ரகம் அதில் ஒரு விலைமாதர் தன் பெண்ணை ஜலஜா என்று அழைத்து இது காவேரி அப்பாடி என்று அறிமுக படுத்த அந்த பெண் அப்பா என்று கமலை கட்டி கன்னத்தில் முத்தமிட இரண்டு கைகளையும் கும்பிட்ட படி கண்ணீர் விடும் காட்சியில் கமல் உலகநாயகன்தான்...
1.jpg
தன் மகள் இரவில் பினாற்றுவதை பார்த்து, அதை நினைத்து கலங்கும் காட்சியில் அழுது மூக்கை சிந்தும் போது கமல் கமல்தான்....
ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே அது ஏன் என்ற டயலாக்கும், தனுஷ் புரோக்கர், ஆனா நீ புள்ள கறி கேக்கறவன் என்று மோகன் நடராஜை பின்னும் காட்சிகளில் கமல் ஆக்டிங்கில் பின்னி இருப்பார்....
Kamal_Hasan.jpg
இந்த படத்தில் கமல் பல பாடல்கள் பாடினாலும் கல்கத்தா படகில் தன்மானம் உள்ள நெஞ்சம் என்ற பாடல் சூப்பர்.. காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி கான சோகம் எல்லாம் கால்கள் கண்டதடி... போன்ற வாலியின் வரிகள் கண்களில் நீர் வர வழிப்பவை....

 

நன்றி

மூலம் http://www.jackiesekar.com/2009/08/mahanadhi.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் இதுவரை.... ஒரு படத்தைப் பார்த்தும், அழுகை வரவில்லை.

ஈழப்பிரியன் இணைத்த, துலாபாரம் படத்தை நேரம் கிடைக்கும் போது பார்த்து... அழுகை வந்தால், நிச்சயம் சொல்வேன்.

 

துலாபாரம் கறுப்பு வெள்ளைப் படம்.பார்ப்தானால் எருமை மாட்டை விட பொறுமை தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
துலாபாரம் கறுப்பு வெள்ளைப் படம்.பார்ப்தானால் எருமை மாட்டை விட பொறுமை தேவை.

 

கறுப்பு வெள்ளைப் படங்களில் தான்... அதிகமான நல்ல படங்கள், காலத்தில் இன்றும் மறக்க முடியதவையாக நிலைத்து... நிற்கின்றன. ஆனால்... இரண்டரை மணித்தியாலம், ஒதுக்கி படம் பார்க்கத்தான்... பொறுமை இல்லை. ஈழப்பிரியன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.