Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடி ஏற்றுவார்களா?

Featured Replies

ஐரோப்பிய நாடு ஒன்றில் விரைவில் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. எல்லா கழகங்களும் தமக்காக வீரர்களை தேடி சேர்க்கிறார்கள். ஒரு இளைஞன் நன்றாக கால்பந்தாடுவார். அப்போ அந்த இளைஞனிடம் ஒருகழகம் தங்களுக்காக விளையாடும் படி கேட்டார்கள். அவர் அப்பாவிடம் கேளுங்கள் என்றார். இவர்களும் தந்தையிடம் தொடர்பு கொண்டு தங்கள் கழகத்திற்கு மகனை விளையாட விடும்படி கேட்டார்கள்.

அவர் கேட்ட முதல் கேள்வி அங்கு புலிக்கொடி ஏற்றுவார்களா என்று. இவர்களும் சந்தோசமாக புலிக்கொடி ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திதான் விளையாட்டு ஆரம்பமாகும் என்று சொன்னார்கள்.

அவர் உடனே சொன்னாராம் புலிக்கொடி ஏற்றி தொடங்கும் விளையாட்டு விழாவில் தனது மகனை பங்கு பற்ற விடுவதில்லை என்றாராம்.

இது என்ன அறியாமையா? அல்லது மனநோயா?

பின் குறிப்பு.

இவர் இவ்வளவுக்கும் தமிழ் ஆட்களினுடைய வீடுகள் களவாக திருத்தி கொடுத்து நல்லாக கறுப்புப்பணம் வைத்திருக்கிறார்.. சொந்தமாக தனிவீடு கடைசி மொடல் அவ்டி கார் வைத்திருக்கிறார்.முழுக்காசு

  • கருத்துக்கள உறவுகள்

உப்படிப் பல லூசுகள் அவுச்திரெலியாவிலும் இருக்கு. நாங்கள் அவுச்திரெலியான் என்று சொல்லிக்கொண்டு மாவீரர் தினத்துக்குச் செல்ல மாட்டினாம். ஆனால் இந்திய சுதந்திர தின விழாவுக்கு தங்கட பிள்ளைகளினை நடனம் ஆட விடுவினம். நடிகைகள் வந்தால் ஈ ஈ ஈ ஈ ஈ ஈ என்று பல்லை இளிச்சுக் கொண்டு போவினம். தமிழும் கதைக்கமாட்டினம். பிள்ளைகளுக்கு சங்கீதம் படிப்பிக்கப்போய் தெழுங்கு கீர்த்தனைகளினை கற்பிப்பினம். அரை குறை ஆங்கிலத்தில் கதைப்பினம். வெள்ளைக்காரன் என்ற நினைப்பு.

சாதிகள் பாக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. இப்படியான ஆக்களினைத்தான் நான் குறைஞ்ச சாதியாக பாக்கிறேன்.

ம்ம்ம் மற்றது தமிழ் பாடசாலையில் வந்து ஆங்கிலத்தில் கதைக்கும் பெற்றோர்களை விட்டுவிட்டீர்களே கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்... இப்படி பல ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவங்களை எல்லாம் என்னதான் செய்வது.

இந்த செய்தியை பார்த்த போது எழுந்த ஒரு கேள்வி. இங்கே எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும், விளையாட்டும் தான்... அந்தந்த நாட்டு கொடியுடன் புலிக்கொடி ஏற்றுவது நடைமுறையில் இருந்து வந்தது. ஜரோப்பாவில் நமது இயக்கம் தடைசெய்யப்பட்ட இந்த நிலையில் தொடர்ந்தும் புலி கொடிஏற்ற முடியுமா?? லண்டனில் தடை செய்யப்பட்டபின் எவ்வாறு இருந்தது நடைமுறை??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கு எப்படியோ தெரியாது விஸ்னு கனடாவில் தடைக்கு பின்னர் புலிக்கொடி ஏற்வது தடை செய்யப்பட்டுள்ளது.

தடைக்கு முதலே புலிக் கொடி ஏத்திறதிலை கனடாவில இருக்கிற பலருக்கு உடன்பாடு இல்லை. பொது நிகழ்ச்சிகளை சிறுவர் சிகழ்ச்சிகளை கலாச்சார நிகழ்ச்சிகளை அரசியல் படுத்தக்கூடாது எண்டு வாண வேடிக்கை காட்டுவினம்.

ஒரு இனத்தின்ரை தேசிய கொடியை பொது நிகழ்வில் ஏத்திறது அரசியல் எண்ட அளவிற்கு அயின்ரை பொது அறிவும் இனப்பற்றும் இருக்கு.

அடுத்ததாக வணவேடிக்கை விடுவினம் தடைக்கு பிறகு புலிக்கொடி ஏத்தினால் அடுத்த முறை நிகழ்விற்கு காவல்துறை அனுமதி தராது என்று. கனடாவில் எந்தவெரு நிகழ்விற்கும் எமது தேசிய கொடி ஏற்றாமல் ஈழத்தமிழர் நிகழ்வுகள் நடத்த மாட்டோம் என்ற உறுதியோடு இருந்தால் என்ன செய்ய முடியும் காவல்துறையால்?

ஏல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக கொடி ஏத்தினால் யார் தடுக்க முடியும்? 3 லட்சம் பேரில் 1 லட்சமாவது இந்த உறுதிப்பாட்டோடு நின்றால் நிலமை உப்படி கேவலமாக இருக்காது.

ஜரோப்பாவிலை தடை செய்தாபிறகு நடந்த உரிமைகுரலில் தமிழ்தேசிய கொடியை மக்கள் வைத்திருக்கவில்லையா?

மக்கள் ஒருமித்து (இன்னொருதரை பாதிக்காத வகையில்) செய்தால் அதை தடுக்க முடியாது.

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் போர்நிறுத்த உடன்பாடு வந்த பின்னர் பொதுநிகழ்வுகளில் தமிழ்த்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பதில் மக்களுக்கு இருந்த உறுதிப்பாட்டை ஒரு முறை யோசித்துப்பாருங்கள். கொலைப்பயமுறுத்தல்களிற்கு மத்தியிலும் அதில் உறுதியாக இருந்தார்கள்.

அப்படியான ஒரு சூழலிலா கனடாவில் 3 லட்சம் எருமைகளும் இருக்கு? மற்றவர்கள் மனிதாபிமான நிகழ்வுகள் அமைப்புகளிற்கு புலிச்சாயம் பூசுவது இவர்களிற்கு வசதியாக போய்விட்டது.

ஜரோப்பிய ஒன்றியத் தடை அமெரிக்காவின் தடையை போன்று இறுக்கமானது அல்ல என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட தடைக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தமிழ்த் தேசிய கொடி ஏற்றியிருக்கிறார்கள். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான தொண்டர் நிறுவனமாக இருக்கிறது. அமெரிக்காவை தளமாக வைத்து இயங்கும் ITTPO வின் முயற்சியில் Vanni Tech உருவானது.

அமைதி முயற்சிகளில் உள்ள இணைத் தலைமை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, போராளிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஐரோப்பியத் தடையானது அப்படியானது அல்ல.

இரு நாட்டுத் தடைகளும் வெவ்வேறு பின்புலங்களில் விதிக்கப்பட்டது. ஐரோப்பியத் தடையானது ஐ.நா. தீர்மானத்தின் கீழானது. நிதி உதவியை மட்டுமே தடை செய்கிறது. சாதகமான செயற்பாடுகளைத் தடுக்காது

  • கருத்துக்கள உறவுகள்

இப்டியும் ஆட்க்கள் இருக்கினமா? நல்ல கொள்கை. இதுகளை எல்லாம் திருத்தேவே முடியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குறுக்கால போவான்.

நீங்கள் என்னத்தை வைத்து சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை.

கனடாவில் தமிழ் தேசிய ஆதரவாளர்களது நிகழ:வுகளில், கொடியேற்றப்பட்டால் அங்கே தேசியக்கொடி ஏற்றப்படுவது வழக்கம். பொஞ் தமிழின் போது ஒன்ராரியோ பாரளுமன்றுக்கு முன்னாள் கொடி யேற்றப்பட்டது. சீ-36 எனும் தடை சட்டத்தின் வலு தெரியாமல் பலர் பலவற்றை எழுதியும் கதைத்தும் வருகின்றனர். 300000 பேரல்ல 3000000 பேர் .ருந்தாலும் உங்கள் கதையை கேட்க அவர்கள் தயாராய் இல்லை. பத்து மேற்ப்பட்ட ஊடகங்களால் பதிவு செய்யப்பட்ட "உரிமைக்குரல்" நிகழ்வு அரச அழுத்தங்களால் வெளிவராமல் (ஒன்றில் கூட) இருந்ததும், அது பற்றி கேட்டபோது இச்செய்தி எமக்கு முக்கியமற்றது என சர்வசாதாரணமாக சொன்னதும் அவர்களது குணத்தை நன்றாகவே எமக்கு எடுத்து காட்டுகின்றது. நீங்கள் சொல்வது போல இங்கே சட்டங்கள் இல்லை. என்பதை கவனத்தில் வைத்து கருத்து எழுதுங்கள்

ஒரு இனத்தின் தேசிய அடையாளத்தை தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அது கனடாவின் இறைமைக்கு ஆபத்தானதா? சமூகவிரோதத்தை தூண்டுகிறதா? பயங்கரவாதத்தை தூண்டுகிறதா?

எம்மில் பலர் அதை விடுதலைப்புலிகளின் கொடியாகப் பார்ப்பது தான் பரிதாபம். எமக்கே அந்தளவிற்கு விளக்கம் குறைவு என்றால் மற்றவர்களை குறை சொல்லி என்ன பயன்? தடை செய்யப்பட்டது புலிகள் அமைப்பு. தமிழ்த் தேசயம் அல்ல. கனடாவில் 3 லட்சம் தமிழர்கள் இருக்கும் வரை எப்படி தமிழ்த்தேசியத்தை தடை செய்ய முடியும்? சிந்தியும் கொஞ்சம்.

ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் தமித்தேசிய கொடி ஏற்றுவதற்கு எந்த சட்டம் அனுமதித்து மக்கள் எழுச்சி கொண்டு செய்தார்கள். நீர் உமது இனத்தில் அளவுகடந்த பாசம் வைத்திருப்பதால் வந்த மனநோயில் சிங்களவர் இறந்தால் சந்தேசமாக இருக்கு என்றீர். உமது இனத்தில் தேசியத்தில் இருக்கு அளவுகடந்த பாசத்தை உமது தேசிய கொடியை பறக்கவிட்டு காட்டுவீரா? இல்லை அந்தளவிற்கு துணிவில்லை ஆழமான பாசம் இல்லை. நாலு சுவருக்குள் இருந்து இணையத்தில் இனவாதத்தை கொட்டும். கேட்டால் சிங்களவன் இனவாதியாக இருக்கிறான அது தான் பதிலுக்கு நானும் மனநோயாளி மாதிரி எழுதுறன் எண்ணும்.

வணக்கம் குறுக்காலபோவான்.

நீங்கள் சொல்வது சரி. ஆனால் தனிமனிதனாக நின்று இதைச் சாதிக்க முடியாது. தனியொருவன் செய்யும்போது காவல்த்துறை கைதுசெய்தால் ஒட்டுமொத்த தமிழ்மக்களும் திரண்டு நின்று அவனை விடுதலைசெய்யச் சொல்வார்களா என்பதே சந்தேகம். கனடாவில் தடைக்குப்பின் வெளியில் வராத பல நடவடிக்கைகள் எமக்கு எதிராக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் தமித்தேசிய கொடி ஏற்றுவதற்கு எந்த சட்டம் அனுமதித்து மக்கள் எழுச்சி கொண்டு செய்தார்கள். நீர் உமது இனத்தில் அளவுகடந்த பாசம் வைத்திருப்பதால் வந்த மனநோயில் சிங்களவர் இறந்தால் சந்தேசமாக இருக்கு என்றீர். உமது இனத்தில் தேசியத்தில் இருக்கு அளவுகடந்த பாசத்தை உமது தேசிய கொடியை பறக்கவிட்டு காட்டுவீரா? இல்லை அந்தளவிற்கு துணிவில்லை ஆழமான பாசம் இல்லை. நாலு சுவருக்குள் இருந்து இணையத்தில் இனவாதத்தை கொட்டும். கேட்டால் சிங்களவன் இனவாதியாக இருக்கிறான அது தான் பதிலுக்கு நானும் மனநோயாளி மாதிரி எழுதுறன் எண்ணும்.

தன்னினவாதத்தை மதிக்க பழக வேணும். அது அளவுக்கு அதிகமாக கூடாது. சகோதரரே! இன்று ஒரு வானொலியில் பல நேயர்கள் வந்து சொன்ன விடையம் இது. எம்மை இனவாதிகளாக மாற்ற வேண்டிய கட்டத்தை சிங்கள தேசம் தந்துள்ளது. எம்மை முதல் நாம் சுதாகரித்து எமது இனவாதத்தால் எங்கள் தேசத்தை காப்போம், பின்னர் மற்ற இனங்களை பற்றி சிந்திப்போம். நாம் அழிகையில், சிரிப்பவன் மறைவுக்காய் எம்மை சோகமாக்க வேண்டாமே!

நாலு சுவருக்குள் இணையத்தில் நீர் எழுதிக்கொள்ளலாம், எழுதிகொள்ளுங்கள், நாங்கள் அப்படியல்ல. எமது கருத்தும் செயலும் ஒன்றே! தமிழீழ தேசியை எனது வீட்டிலும் வாகனத்திலும் பறக்க விட்டு தான் இருக்கிறேன்.

"தேசியம் எங்கள் வாய்ப்பேச்சல்ல உயிர் மூச்சு"

சுஜீந்தன், ஒருவர் முன்னுதாரணமாக நடந்தால் ஓரே கொள்கை கொண்ட பலர் பின்னுக்கு வருவார்கள் அணிதிரளுவார்கள் உக்களுக்குரிய அடிப்படை உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம். பாதுகாப்பும் பயனும் இல்லாது இருப்பதற்கு காரணம் ஒட்டுமொத்த மக்களின் சுயநலவாதம். தயா இடக்காடர் நல்லதொரு முன்னுதாரணம். பின்பற்றுவார்களா கனடாவில் யாரும்?

ரொறொன்ரோவில் உரிமைகுரலின் போது 1 வெள்ளை மேடையில் ஏறி குளப்பம் விளைவித்தது. அதற்கு ஆத்திரப்பட்டு எங்கடை கனடா வாழ் வீரத்தமிழ் மக்கள் பலர் அடிக்கப் போனவர்கள். ஒரு வெள்ளை கூலிக்கு குளப்பம் விளைவிக்குது அதை 20..30 சேர்ந்து அடிக்கிற வீரமும் விளக்கமும் தான் இண்டைக்கு உந்தக் கேவலத்துக்கு கொண்டுவந்திருக்கு.

ஒன்றில் மோட்டுத்தனமான காட்டுமிராண்டித்தனமாக நடப்பினம் கேட்டால் தேசியம் உணர்ச்சித் தமிழன் எண்டு வியாக்கியானம். அதுக்குப்பிறகு காவல்துறை விசாரிக்கிறான் எண்டுபோட்டு எல்லாத்தையும் ஒரேயடியா பொத்திக் கொண்டு இருப்பினம்.

பறவைகள், தன்னினத்தின் மீது தாராளமாக மதிப்பு வையும் அளவில்லாமல் அன்பு வையும் அது ஊக்குவிக்கப்பட வேண்டியது பெருமைப்பட வேண்டியது கொளரவப்படுத்தப்பட வேண்டியது. ஆனால் அவற்றின் எந்தவெரு வெளிப்பாடகவும் இன்னொரு இனத்தின் மீதான வெறுப்பை நியாயப்படுத்த முடியாது.யாரோ ஏதே எல்லாம் சொல்லுவார்கள். அதுவும் வானொலியில் சொல்லிப்போட்டார்கள் என்றபடியால் அது சரி என்றாகிவிடாது. இனப்பற்று தேவை ஆனால் அதுவே இன்னொரு இனம் மீதான வெறுப்பாக மாறக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜீந்தன், ஒருவர் முன்னுதாரணமாக நடந்தால் ஓரே கொள்கை கொண்ட பலர் பின்னுக்கு வருவார்கள் அணிதிரளுவார்கள் உக்களுக்குரிய அடிப்படை உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம். பாதுகாப்பும் பயனும் இல்லாது இருப்பதற்கு காரணம் ஒட்டுமொத்த மக்களின் சுயநலவாதம். தயா இடக்காடர் நல்லதொரு முன்னுதாரணம். பின்பற்றுவார்களா கனடாவில் யாரும்?

ரொறொன்ரோவில் உரிமைகுரலின் போது 1 வெள்ளை மேடையில் ஏறி குளப்பம் விளைவித்தது. அதற்கு ஆத்திரப்பட்டு எங்கடை கனடா வாழ் வீரத்தமிழ் மக்கள் பலர் அடிக்கப் போனவர்கள். ஒரு வெள்ளை கூலிக்கு குளப்பம் விளைவிக்குது அதை 20..30 சேர்ந்து அடிக்கிற வீரமும் விளக்கமும் தான் இண்டைக்கு உந்தக் கேவலத்துக்கு கொண்டுவந்திருக்கு.

ஒன்றில் மோட்டுத்தனமான காட்டுமிராண்டித்தனமாக நடப்பினம் கேட்டால் தேசியம் உணர்ச்சித் தமிழன் எண்டு வியாக்கியானம். அதுக்குப்பிறகு காவல்துறை விசாரிக்கிறான் எண்டுபோட்டு எல்லாத்தையும் ஒரேயடியா பொத்திக் கொண்டு இருப்பினம்.

பறவைகள்,இனப்பற்று தேவை ஆனால் அதுவே இன்னொரு இனம் மீதான வெறுப்பாக மாறக்கூடாது.

வணக்கம் குறுக்காலபோவான்,

உங்களோடு விவாதம் செய்வது எனது நோக்கமல்ல, ஆனாலும், ஒரு நாட்டில் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டிய, கடமை அந்த நாட்டின் பிரஜைக்கு உள்ளது. நீங்கள் சொல்கின்ற முன்னூதாரணங்கள் எல்லாம் சுயநலத்தின் அடிப்படையில் தான் எழுந்தவை, யாரையும் யாருக்கும் முன்னூதாரணமாக காட்ட வேண்டிய தேவையில்லை. கனடிய தமிழர்கள் இன்றும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக, ஆதரவான கருத்தோடு, உணர்வோடு தான் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து கருத்தெழுதுகின்றீர்கள் என்று யாமறியொம். ஆனாலும், கனடாவைப்பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இங்கு சட்டம் தான் தளபதி, எமது தேசங்களில் ஆயுதத்தை வைத்து அடக்கு முறையாளர்கள் அடக்குகின்றனர். இங்கு சட்டத்தை வைத்து அடக்குகின்றனர். இரண்டும் ஒரே கொள்கை ஆனால் அவற்றை செயற்ப்படுத்தும் வடிவங்கள் மட்டுமே வேறுபடுகின்றது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்ன, வேறு வேறு பெயர்கள் "வன்முறை அரசு" "ஜுனநாயக அரசு" இந்த ஜனநாயக அரசு செய்யும் எதுவும் வெளியில் வராது (தெரியாது) அவர்கள் நினைத்ததை நினைத்தபடி அவர்களது உளவுத்துறையின் உதவியுடனும், காவல்துறையின் உதவியுடனும் செய்து முடிப்பார்கள்.

குறிப்பாக ஒருவரை நாட்டை விட்டு கடத்த வேண்டும், அல்லது, சிறையிலடைக்க வேண்டுமென்று நினைத்தால் அவர்கள் அதை எந்த வழியிலாவது செய்வார்கள். அண்மையில் ரொரன்ரோவின் சுற்றுப்புறத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 17 க்கு மேற்ப்பட்ட முஸ்லீம் மக்கள் உண்மையில் குற்றவாளிகளா? என்று முஸ்லீம் மக்களை கேட்டுப்பாருங்கள் ஆனால் கனடாவில் வாழும் மற்றைய சமூகங்களுக்கு அவர்கள் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், அதே நிலை தமிழனுக்கும் ஏற்ப்படலாம்.

ஒரு வெள்ளைகாரன் மேடையில் ஏறி கத்தியதற்க்கு, அடிக்க போனதைப்பற்றி பேசும் நீங்கள், அதே மேடையிலிருந்து பாதுகாப்பாக, அவனை அழைத்து சென்றது நாம் தான் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?

ஒரு சமூகத்தில் வேறு பட்ட குணாதியங்களுடன் மக்கள் இருக்கின்றனர். ஒருவர் உணர்வுக்கு அடிமையானவராக, ஒருவர் பொறுமையுள்ள எதையும் சகிக்க கூடியவராகவும், மற்றவர் எதைப்பற்றியும் கவலைப்படாதவராயும், சிலர் உங்கள் மொழியில் மன நோயாளியாகவும் இருக்கின்றனர். எனவே இதில் அவர்கள் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

காண்டுமிராண்டிகள் என்று நீங்கள் சொல்வது எம்மை தானே!

அதை தான் மேற்குலகம் இன்னேரு மொழியில் சொல்லி கொண்டிருக்கின்றது. அதாவது நாகரீக வார்த்தையில். இதையே நீங்களும் சொல்லி "நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பதை ஒப்பிப்பதாய் இருக்கிறது"

பறவைகள், ஒரு இனத்தின் மீது வெறுப்பை காட்டவில்லை. சிங்களமக்களோடு நான் நன்றாக பழகியவன், அவர்களின் பாச நேசங்களை நன்கறிவேன். தமிழர்களை விட அன்பு வைப்பதில் அவர்கள் சிறந்தவர்கள்? ஆனால் அரசியல் ரீதியி் அவர்கள் தமிழர்களை மக்களாய் பார்க்கவில்லை. ஒரு தமிழன் சாகும் போது அவர்கள் சொல்வது " அது புலியாகத்தான் இருக்கும்" அப்படியான சூழலில் அவர்களுக்கு நாம் எடுத்து விளக்குவது எல்லாம் வீண் நேரவிரையம். அதையும் செய்து பார்த்தோம். ஏன் நான் கனடாவில் வசிக்கும் பகுதியில் பல சிங்களவர்கள் வசிக்கின்றனர். அவர்கள் எங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்க வருவார்கள். அப்போத அவர்களுடன் பேசிப்பார்த்தால் அவர்கள் சொல்வது "எங்கள் நாட்டை பிடிக்க நீங்கள் வந்தால் நாம் பார்த்திட்டு இருக்க ஏலாது தானே" எங்கள் நாட்டின் வரலாற்றை கூட தெரிந்திராமல் எங்கள் நாடு என்று அவன் சொல்லும் போது எம்மால் மறுத்து இல்லை இதில் எமக்கும் பங்கிருக்கிறது. தமிழர்களும் இந்த நாட்டின் அரசாட்சிக்குரியவர்கள் என்று சொன்னால்!.. அவர்கள் கேட்பது "என்ன ஆதாரம் நாங்கள் படிதட்த வரலாறுகள் எமக்கு அதை சொல்லவில்லையே" இவர்கள் மாறுவார்களா? அல்லது மாற ஏதாவது சந்தர்ப்பம் இருக்கா? இவர்களின் இப்படிப் பட்ட கதைகளைக்கேட்டால் அவர்கள் மீது பற்றா வரும்? அவர்கள் மீது வெறுப்பு வரும் நிலையை அவர்களே உருவாக்கினார்கள். நாமாய் யார் மீது தேவையில்லாமல் வெறுப்பதற்க்கு விரும்பியதில்லை. ஒரு தமிழனாய் அவர்கள் மரணத்துக்காய், மகிழ்கின்றேன் என்று சொன்னேன் ஆனால், ஒரு மனிதனாய் அவர்கள் மரணத்திற்க்காய், கவலைப்படுகின்றேன்.

´Õ ¿¡¨ÇìÌ ¦Åû¨ÇÂÛìÌ Å¢º÷

ÅóÐ, ¦ÅÇ¢¿¡ðÎ측Ã÷ ±ýÚ ¦º¡øÄ¢ ±øÄ¡¨ÃÔõ

«ÊîÍ ¸¨ÄìÌõ §À¡Ð¾¡ý, ±í¸ §À¡¸ô§À¡Â¢É§Á¡

¦¾Ã¢Â¡Ð..????

________________________________________

±Ä¢ ŨÇ¡ɡÖõ ¾É¢Å¨Ç §¾¨Å

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் மற்றது தமிழ் பாடசாலையில் வந்து ஆங்கிலத்தில் கதைக்கும் பெற்றோர்களை விட்டுவிட்டீர்களே கந்தப்பு

சில தமிழ்ப்பாடசாலை வகுப்பு முடிந்தபின்பு ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஆங்கிலத்தில் கதைப்பதினைப் பார்க்கும் போது இவர்களின் தமிழ் உணர்வினை நினைக்க சிரிப்பாக இருக்கிறது. இன்னும் சில தமிழர்கள் அவுச்திரெலியாவில் தமிழ்ப்பாடசாலைக்கு பிள்ளைகளினை அனுப்பாமல் சீன,ஜப்பான் மொழி கற்க அனுப்புகிறார்கள். இவர்களும் தமிழர்களா?

இங்கு இது பற்றி பேசலாமே கந்தப்பு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=195029#195029

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடாப்பு இங்க நடக்குது எல்லாரும் தூக்கம் போல :roll:

தளமுகவரியல் எண்டதுக்கு என்னவோ பற்றி கதைக்கிறாங்க

எந்த ஒரு முகவரியும் வந்த பாடில்ல நானும் ஒவ்வொருத்தற்ற பதிலையும் பாக்கிறன் எல்லாரும் பொல்லுத் தூக்கிட்டுத்தான் நிக்கிறாங்க ஒரு முகவரியும் குடுக்கிற பாடில்லை :?

  • 1 month later...

உப்படிப் பல லூசுகள் அவுச்திரெலியாவிலும் இருக்கு. நாங்கள் அவுச்திரெலியான் என்று சொல்லிக்கொண்டு மாவீரர் தினத்துக்குச் செல்ல மாட்டினாம். ஆனால் இந்திய சுதந்திர தின விழாவுக்கு தங்கட பிள்ளைகளினை நடனம் ஆட விடுவினம். நடிகைகள் வந்தால் ஈ ஈ ஈ ஈ ஈ ஈ என்று பல்லை இளிச்சுக் கொண்டு போவினம். தமிழும் கதைக்கமாட்டினம். பிள்ளைகளுக்கு சங்கீதம் படிப்பிக்கப்போய் தெழுங்கு கீர்த்தனைகளினை கற்பிப்பினம். அரை குறை ஆங்கிலத்தில் கதைப்பினம். வெள்ளைக்காரன் என்ற நினைப்பு.

சாதிகள் பாக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. இப்படியான ஆக்களினைத்தான் நான் குறைஞ்ச சாதியாக பாக்கிறேன்.

ஆம் :D:D இது உண்மை

´Õ ¿¡¨ÇìÌ ¦Åû¨ÇÂÛìÌ Å¢º÷

ÅóÐ, ¦ÅÇ¢¿¡ðÎ측Ã÷ ±ýÚ ¦º¡øÄ¢ ±øÄ¡¨ÃÔõ

«ÊîÍ ¸¨ÄìÌõ §À¡Ð¾¡ý, ±í¸ §À¡¸ô§À¡Â¢É§Á¡

¦¾Ã¢Â¡Ð..????

________________________________________

±Ä¢ ŨÇ¡ɡÖõ ¾É¢Å¨Ç §¾¨Å

ஏன் இப்பவே இரண்டாம் மூன்றாம் தரமாத்தானே நடத்தினம். குடியேற்றக்காரர்களை அவர்கள் தங்கள் கூலிகளாகத்தான் உள்வாங்குகின்றார்கள் என்பதில் எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை. அன்று எங்கள் தேசத்தில் எங்களைக் கூலிகளாக்கினார்கள்..வளம் சேர்த்தார்கள் இன்று..மனிதாபிமானம் என்ற ஒன்றை உச்சரித்து எங்களை அடிமைகளாக்கி..தாங்கள் எஜமான மனிதர்களாகி நிற்கிறார்கள்..! நாமோ..வசதி வாய்ப்புக்கு அங்கலாய்க்கும் கூட்டம்...எலும்பு தேடி ஓடும்..நாய்களாக..அவர்கள் தேசத்தில்...! அதுதான் அவர்கள் எங்கள் மரணங்களைக் கூட மதிக்கிறார்கள் இல்லை..! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபம் தொலைக் காட்சியில் புலிகளின் உடலங்களை காட்டினார்கள். இது எவ்வளவு து}ரம் உண்மை?

http://www.army.lk/morenews.php?id=1911

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை உற்றுப்பாரக்கையில் புலிகளின் சீருடையில் எந்த கறையும் இல்லை. அது மட்டமல்ல சில உடல்களில் சாரங்கள் இன்னமும் இருக்கிறது. அண்மைய தாக்குதல் (மண்டைதீவ, மூது}ர்) படங்களில் புலிகள் வரிச்சீரூடை அணியவில்லை. மக்களை கொன்றுவிட்டு புலிகள் என்கிறார்களா? அயுதங்களும் துருப்பிடித்த நிறத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் மனித வலுவை மேற்கத்தைய நாடுகள் மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்துகின்றன. இவர்களுக்கு எங்களால் கிடைக்கும் கடின உழைப்பில்த்தான் அக்கறை இருக்கிறதே தவிர எங்களுக்கான நலமான வாழ்க்கையைப்பற்றி இவர்கள் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. எந்த ஒரு காலகட்டத்திலும் நாங்கள் இத்தகைய நாடுகளில் முதல்த்தர பிரசைகள் ஆக முடியாது.

மேற்கத்தைய நாடுகளில் இருந்தும் நாங்கள் அகதிகள் ஆக்கப்படும் காலம் வரும்..... அப்போது தாய்த் தமிழீழத்தைத் தேடி எங்கள் சந்ததிகள் செல்வார்கள். மொழி, பண்பாடு சிதைந்து அவர்களின் மூதாதையர்களான நாங்கள் விட்டுச் செல்லும் வரலாற்று ஆதாரங்களின் எச்சங்களோடு தாயக புூமியை நோக்கிச் செல்லத்தான் போகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.