Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெப்பிடிகொல்லாவில் பகுதியில் குண்டுவெடிப்பு 64 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று அனுராதபுரம் கெப்பிடிகொல்லாவவில் பேருந்தில் ஏற்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பில் 30 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

source: www.battieelanaatham.com

முப்பது இராணுவமா இல்லை பொதுமக்களா? :?:

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பிட்டிக்கொல்லாவ பேரூந்து தாக்குதலில் 25 பேர் பலி- 50 பேர் காயம்

அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெப்பிட்டிக்கொல்லாவ என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 7.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

50 civilians feared killed in Claymore blast in Kebitigollawe

[TamilNet, June 15, 2006 03:30 GMT]

Around 50 civilian passengers were feared killed and more than 30 wounded when a civilian bus hit a Claymore mine near Kebitigollawe, 23 km southeast of Vavuniya, Thursday around 7:50 a.m., medical sources said. Wounded passengers were rushed to Kepitigollawe and Anuradhapura hospitals. Majority of the victims are Sinhalese civilians.

Seriously wounded persons were being transferred to Colombo hospital, medical sources added.

Further details are not available at the moment.

  • கருத்துக்கள உறவுகள்

(2 ஆம் இணைப்பு) கெப்பிட்டிக்கொல்லாவில் கிளைமோர்த் தாக்குதல்: 50 பொதுமக்கள் பலி- 30 பேர் படுகாயம்

[வியாழக்கிழமை, 15 யூன் 2006, 09:35 ஈழம்] [ந.ரகுராம்]

அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவில் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து மீது இன்று வியாழக்கிழமை காலை 7.50 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ, அனுராதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்து அரசதொலைக்காட்சியும் சொன்னாங்கப்பா... கொல்லப்பட்டவங்க தமிழ்மக்களா? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் என தமிழ் நெற்றில் வந்துள்ளது.அதனால் தான் வெளினாட்டு ஊடகங்களில் செய்தி வருகின்றது

ஒஸ்லோவிற்கு தூதுக்குழுவை அனுப்பிப் போட்டு கடற்படை வாகனத்திற்கு கொழும்பில் கண்ணி வைக்க முயற்சித்ததாக நாடகமாடி தமது குழபத்தை நியாயப்படுத்த முயன்ற மாதிரி தான் சிங்கள இனவாதத்தின் நாடகம் இது.

படைகளின் வாகனத்தை தாமே தாக்கி இழப்புகள் வந்தால் உடபூசல்கள் தொடங்கி அவர்களில் ஒரு பிரிவினரை உண்மையை போட்டுடைத்துடுவார்கள். பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியவாறு மக்களின் வாகனத்தை பதம் பார்த்தால் அனுதாபம் தேடுவதிலும் உச்ச பயன் கிடைக்கும்.

தற்போது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம், கண்காணிப்புக்குழுவிடம் எதிர்கொள்ளும் விமர்சனங்களை திசைதிருப்ப ஒரு பரிதாப முயற்சி.

தமிழரை கொன்றழிப்பதில் ஆரம்பித்த இனவாதம் தமது மக்களை தாமே கொன்று அனுதாபம் தேடுமளவிற்கு வெறி முத்தி நிக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொது மக்கள் மீதான இத்தாங்குதலை விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் அவர்கள் வன்மையா கண்டித்துள்ளார். இது துணை இராணுவ குழுக்களது திட்டமிட்ட செயலெனவும் தெரிவித்துள்ளர்.

திருமலையில் இரு இனங்களுக்கிடையே நிலவுகின்ற பதற்ற நிலையை அதிகரிப்பதற்காக நடாத்தப்பட்ட தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் மொத்தம் 58 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் பலர் மரணமடையலாம் என அஞ்சப்படுகின்றது.

படுகாயமடைந்த மக்கள் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.

அரசாங்கம் வாங்கின ஆயுதம் எல்லாம் வந்துட்டுது போல

அதுதான் சண்டை தொடங்குறதுக்கு தங்கடை சனத்தையே கொல்லுறான்கள்.

.

20060615123113kepiti203d.jpg

இலங்கையில் அநுராதபுரம், கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் பயணிகள் பஸ் மீது கிளெமோர் தாக்குதல்.

64 பயணிகள் பலி,

மேலும் 86 பேர் காயம்.

20060615122055kepiti203a.jpg

தாக்குதலுக்கு உள்ளான பேருந்து

இலங்கையில் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் இன்று இடம்பெற்ற கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு பயணிகள் பேருந்து ஒன்று அகப்பட்டுக்கொண்டதில் 64 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 86 பேர் காயமடைந்ததாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால் விடுதலைப்புலிகள் அதனை மறுத்துள்ளனர், இலங்கை இராணுவத்தின் துணைப்படையினர் மீது அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேவேளை இந்தத் தாக்குதலை அடுத்து முல்லைத்தீவு மற்றும் சம்பூர் ஆகிய இடங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று விமானக் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.

-BBC

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் சொல்கின்றார்கள், கொப்பட்டிக்கொலவா என்பது வவுனியா, திருகோணமலை வீதி என்றும், அதனால் திருகோணமலைக்கு செல்லும் தமிழ்மக்களையோ, அல்லது வவுனியாவிற்குச் செல்லும் தமிழ்மக்களையோ இலக்கு வைத்து தான் தாக்குதலை சிங்கள அரசு மேற்கொண்டிருந்தது என்று. ஆனால் திசைமாறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று!

சிங்கள அரசின் அரசியல்நாடகத்திற்குப் பலியான பொதுமக்களுக்கு இரங்கலைத் தெரிவிக்கின்றோம்!

ஓம் பிபிசி தமிழ்ச்சேவைக்கும்,பிபிசிக்க

காணிப்புக் குழுவினர் முன்னிலையிலேயே திருமலை தாக்குதல்: சி.எழிலன்

[வியாழக்கிழமை, 15 யூன் 2006, 18:04 ஈழம்] [ம.சேரமான்]

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீதான இன்றைய தாக்குதல்கள் கண்காணிப்புக் குழுவினர் முன்னிலையே நடத்தப்பட்டுள்ளதாக திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய "இன்பத் தமிழ் ஒலி" வானொலிக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல்:

கிளைமோர்த் தாக்குதல் செய்தி எமக்குக் கிடைத்தபோதே திருகோணமலையில் எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டடன.

மங்கிபிரிட்ஜ் மற்றும் திருமலை கடற்படை முகாமிலிருந்தும் பல்குழல் எறிகணைத் தாக்குதல் காலை 10 மணி முதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதல் பிற்பகல் 2.30 மணிவரை தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.

ஆனால் இப்பகுதிகளில் ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய இத்தகைய தாக்குதலால் மக்கள் வெளியேறியதால் உயிரிழப்பு குறைந்திருக்கிறது. இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

பல வீடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. சில வீடுகள் எரிந்துள்ளன. கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன.

இத்தாக்குதல் தொடர்பாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தினோம். இத்தாக்குதல் நடந்த போது கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி மூதூரில்தான் இருந்தார்.

திருகோணமலை கண்காணிப்புக் குழு அலுவலகம் இருக்கும் இடம் அருகில்தான் கடற்படை உள்ளது. அங்கிருந்து ஏவப்படும் எறிகணைகளின் சத்தங்களை அவர்கள் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும். ஆகையால் தாக்குதல் சத்தங்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் உங்களுடைய பகுதிகளை நோக்கி எறிகணைகள் ஏவப்படுகின்றன என்றும் கண்காணிப்புக் குழுவினர் கூறினர்.

ஒரு அப்பட்டமான தாக்குதலை அனைவரது கண் முன்னாலேயே எமது பிரதேச மக்கள் குடியிருப்புகள் மீது நடத்துவது மிக மோசமான யுத்த நிறுத்த மீறல் சம்பவம்.

இத்தகைய தாக்குதல்களை தொடர்ச்சியாக படையினர் நடத்துகின்றனர். ஆனால் நாங்கள் கண்காணிப்புப் பணியை மட்டுமே செய்கிறோம் என்று கண்காணிப்புக் குழுவினர் கூறுவதும் அர்த்தமற்றது.

கண்காணிப்புக் குழுவினர் கண் முன்னாலேயே இத்தகைய தாக்குதலை நடத்துவது மிக மோசமானது என்று கண்காணிப்புக் குழுவினருக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

வன்னிப் பிரதேசத்தில் கிளைமோர்த் தாக்குதல்களை பெருமளவு நடத்த சிறிலங்கா இராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. விடுதலைப் புலிகளை மட்டுமில்லாமல் பொதுமக்கள், அரச அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைவரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் படையணியனர் தமிழ் மக்கள் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி சினம் கொள்ள வைக்க முயற்சிக்கிறது.

இதனுடைய தாக்கமாகத்தான் சிறிலங்கா அரசாங்கம் மோசமான செயற்பாடுகளை மேற்கொள்கிறது என்று சர்வதேச சமூகம் சொல்லுகின்ற நிலைமை உருவாகி உள்ளது.

இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றுதான் இன்றைய பயணிகள் மீதான தாக்குதலையும் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினர்தான் செய்திருக்க வேண்டும். சிங்களப் பிரதேசத்துக்குள் இப்படியொரு தாக்குதலை புலிகள் நடத்திவிட்டார்கள் என்று கூறி தங்களுக்கான அனுதாபத்தைத் தேடவே இன்றைய கிளைமோர் தாக்குதலை சிறிலங்கா இராணுவம் நடத்தியுள்ளது

திருமலை பகுதிகளில் மிக மோசமான நிலை உள்ளது. அதை மாற்றத்தான் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பெரும்தொகையான மக்கள் யுத்தத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் பயிற்சி பெற்றுள்ளனர்.

யுத்தத்தின் மூலமே தீர்வைப் பெற முடியும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதை எதிர்கொள்ள பெருந்திரளான மக்கள் பயிற்சிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

மக்களினது உற்சாகமானது போராளிகளாகிய எங்களுக்கு இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இனியொரு யுத்தம் ஏற்படுமாக இருந்தால் எமது இறுதி இலட்சியத்தை பெற்றுக் கொள்வோம் என்றார் எழிலன்.

http://www.eelampage.com/?cn=26883

அல்லைப்பிட்டி படுகொலைகள் வங்காலைப் படுகொலைகள் வர்ணப்படத்தில் சர்வதேசத்தின் முன் இந்தளவிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கும் என்று சர்வதேசம் கூட எதிர்பார்த்திருக்காது.

இன்று காலை கண்ணி வெடித்தாக்குதல் நடந்த இடத்திற்கு பத்திரிகையாளர்களை போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கூட்டிச் சென்று காட்டியது ஒரு முன்ஏற்பாட்டையும் அப்படியான ஒரு நிகழ்விற்கான தயார் நிலையையும் சுட்டிக்காட்டுகிறது.

அத்தோடு கேணல் ரமணன் கொலை லெப் கேணல் மகேந்தியின் கொலை அதைவிட தொடர்ந்து வன்னி பெருநிலப்பரப்பில் தொடரப்பட்ட கண்ணிவெடித்தாக்குதல்கள் எதுவும் புலிகளைச் சீண்டி யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. இது இலங்கை அரச தரப்பை விரக்த்தி நிலைக்கு கொண்டு சென்றிருக்கும்.

ஒஸ்லோ பயணத்தில் புலிகள் கொடுத்த செய்தி "சமதரப்பாக நடத்தினாலே பேச்சுக்கள், எம்மை மாத்திரம் பக்கச்சார்பாக தடை செய்து பேச்சுக்களை திணிக்க முடியாது" என்ற செய்தியை சர்வதேச சமூகமும் அனுசரணையாளர்களும் நடைமுறைபடுத்த வெளிக்கிட்டால் status-quo இழந்து மூக்குடைபடப்போவது இலங்கை அரச தரப்பு. இந்த அவமானத்தை தவிர்க்க தற்பொழுது தனது மக்களை தானே கென்று அனுதாபம் தேட முயல்கிறது.

இந்த கொலைகள் இலங்கை அரசின் திட்டமிட்ட நாடகம் என்பதை படங்கள் கொண்ட பாதகைகளோடு புலம் பெயர்ந்த தமிழர்கள் வீதியில் இறங்கி சர்வதேசத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

களஉறவுகள் சந்தேகப்பட்டபடி தான் திரு எழிலன் அவர்களும் கூறியிருக்கின்றார். அது பற்றிய செய்தி- சங்கதியில் இருந்து-

இன்றைய நிலையில் சிறீலங்கா அரசாங்கமும், அதன் கொடுமையான படைகளும், யுத்தகாலம் ஒன்றில் செயற்படுவதை மிட மிக கொடூரமான முறையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வான்வெளித்தாக்குதல்களையும், எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தவிர நாளாந்தம் சிறுவர் பெரியவர், பாலகர், முதியவர்கள் என்ற எந்தவித வித்தியாசங்களும் இன்றி கொன்று குவித்துக்கொண்டு வருகின்றனர். இருந்த போதும் எமது மக்களை பாதுகாப்பதெற்கென பொறுப்பெடுத்த நாம் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தினை மதித்து இன்றுவரை பொறுமைகாத்தே வருகின்றோம். ஆனால் இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் சிங்கள இனவாதம் தமிழர்களை கொன்றொழிப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டுவருகின்றது.

எங்கோ ஒரு சிங்களக்கிராமத்தில் கிளைமோர் ஒன்று வெடித்தது என்று சொல்லிக்கொண்டு, அதை அரசாங்மே செய்தார்களோ, அல்லது வேறு எவரும் செய்தார்களா என்று தெரியாமல் அதை சாட்டாக வைத்து, ஒரு அரசாங்கம் இன்னொரு சமூகத்தின் மீது எவ்வாறு, எந்த நியாயத்தில் தாக்குதல்களை நடத்தமுடியும்? இன்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதொன்று தான் அதை நாம் செய்யவில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்து அந்த செயலை கண்டித்தும் இருந்தோம்.

இருந்தபோதும் விசனத்தனமாக விடுதலைப்புலிகளை சினம் கொள்ளச்செய்யும் முகமாக அதை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. இவர்கள் இவ்வாறு உடனடியாக சொல்லி வைத்தால்போல் செயற்படுவது எமக்கு மட்டும் இன்றி பல தரப்பினருக்கும் பலத்த சந்தேகங்களை அவர்கள் மேல் எழுக்கின்றது. தமிழர் பிரதேசங்களில் நடக்கும் கொலைகள், கண்மூடித்தனமான தாக்குதல்கள் என்பவற்றுக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கும் சிறீலங்கா அரசு எந்த விதத்தில் இதை மட்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே செய்தார்கள் எனச்சொல்லமுடியும்?

அடுத்த படியாக அவர்கள் சொல்வது போல் ஒட்டுக்குழுக்கள் ஒன்று சிறீ லங்கா தேசத்தில் இயங்குகின்றன, அந்தக்குழுவுக்கும் சிறீலங்கா அரசுக்கும், இராணுவத்திற்கும் தொடர்புகள் எதுவும் கிடையாது என்று அரசு சொல்லிவரும் நிலையில் இந்த தாக்குதல்களை, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம்சுமத்த சிறீலங்கா இராணுவமோ அல்லது அந்த ஒட்டுப்படைகளோ ஏன் செய்திருக்க கூடாது? இது ஒருபுறம்போக எமது தாயகப்பிரதேசத்தில் தொடர்ந்தும் எம்மக்கள் பல வழிகளில் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்படுகின்றனர்.

இந்த மிலேச்சதனங்கள் நாளுக்குநாள் பெருகி வருவதால் உடனடியாக ஒரு முடிவினை எடுக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைதி காத்துவருகின்றனர் என்றால் அது அவர்களின் பலவீனம் அல்ல என்பது எம்மைவிட எமது எதிரிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதற்கு அவர்கள் நிச்சயம் அதிக விலைகள் கொடுக்கவேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

யார் செய்திருப்பாhகள் என்ற விவாதத்திற்கப்பால் நான் ஒரு விடயத்தைச் சொல்கிறேன்.

அப்பாவிப் பொதுமக்களின் இழப்பு வருத்தத்தைத் தருகிறது (அவாகள் யாராக இருந்தாலும் ) ஆனால் நாய்க்குணம் கொண்ட அரசை எப்படிக் கையாள்வது.

அது என்ன நாய்க்குணம்?

யாரவது பயந்து ஓடுவதைக் கண்டால் துரத்திக் கொண்டு வரும். வேகமாக ஓட ஓட அது துரத்துகின்ற வேகமும் கூடும். ஆனால் ஓடுபவர் திரும்பி நின்றாலோ அல்லது திருப்பித் தாக்க முயன்றாலோ அது அப்படியே நின்றுவிடும். அல்லது பின்வாங்கித் திரும்பி ஓடும்.

ஆக மொத்தத்தில் இதுவே கடைசி அப்பாவி மக்களின் (சகல தரப்பிலும்) உயிரிழப்பாக இருக்கட்டும்.

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்
ஓம் பிபிசி தமிழ்ச்சேவைக்கும்,பிபிசிக்க

சிறீலன்கா அரசபயங்கரவாதத்திற்கு பலியான அனைத்து மக்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். தமிழ்மக்களின் பகுதிகளில் குண்டுகளைவீசி மக்களை கொல்வதற்காக காரணம் தேவைப்பட்டதால் சிங்களமக்களை கொன்றது சிறீலங்கா பயங்கர அரசாங்கம். சம்பவம் நடந்து குறுகிய நேரத்திற்குள் திட்டமிட்டபடி தமிழர் பகுதிகள் மீது குண்டுவீச்சுக்கள் நிகழ்ந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :cry: :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

ஏவியவர்கள் எத்தரப்பாகவிருப்பினும் கொல்லப்பட்டவர்கள் பொது மக்களே, பொது மக்கள் கொல்லப்படுவது ஏற்புடையதல்ல, கண்டிக்கப்பட வேண்டியதே, சிங்களவரென்றாலும் தமிழரென்றாலும் ஓடுவது ஒரே இரத்தமே!

கிளைமோர் தாக்குதலிலை செத்த சனத்துக்கு கவலை தெரிவிக்கிற அதே நேரம் இதுக்கு பதிலடி தாக்குதல் ஒண்டு தமிழ் பிரதேசத்திலை எங்கையாவது நடக்கும் எண்டு சனம் பயத்திலை இருக்குது இண்டைக்கு 10மணிக்குப் பிறகு திருமலை நகரத்திலை ஒரு சனம் சாதியில்லை ஊரடங்கு போட்ட மாதிரி கிடந்திச்சு...........இராணுவத்தின் கெடுபிடிகளும் அதிகமாகத்தான் இருந்திச்சு.......

பொரும்பான்மையான சிங்களவர்கள் இனவாதிகள் இல்லை. சிறுபான்மையான மிதவாதப் போக்கை கொண்ட சிங்களவரின் கையில் அதிகாரம் இன்று. சிங்கள மக்களிடம் ஒரு அரசியல் விழிப்புணர்வு வந்தால் அவர்கள் இந்த மிதவாதிகளின் பிரச்சாரத்திற்கு எடுபடமாட்டார்கள், அவர்களை ஆட்சிக்கு தெரிவு செய்யமாட்டார்கள். அந்த விழிப்புணர்வு அனுபவத்தினால் தான் வரும். 2ஆம் உலகமகா யுத்தத்தின் அனுபவம் யேர்மனிய மக்களிற்கு ஒரு நிரந்தர அரசியல் விழிப்புணர்வை கொடுத்தது பாசிசவாதம் பற்றி.

தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றதால் கடந்த சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்ற வில்லை. சிங்களவர்கள் அரசியல் விழிப்புணர்வை அடையாததால் மிதவாதப்போக்கை கொண்ட தலைவரை தேர்ந்தெடுத்தார்கள். சிங்களவர்கள் அந்த தவறை உணர்ந்து ஒரு விழிப்புணர்வை பெறும் அனுபவங்கள் அவர்களுக்கு காத்திருக்கிறது.

ஆனால் அதற்கான விலையை குறைத்துக் கொள்ளலாம் சிங்கள ஊடகங்கள் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளின் நிதானமான நடவடிக்கைகளால். அதைவிடுத்து அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி வியாக்கியானம் செய்தால் அவர்கள் ஊக்கப்படுத்தி வழர்க்கும் இனவாதம் அவர்களையே கொஞ்சம் கொஞ்சமாக பதம் பார்க்கும்.

கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்க்க ஒட்டுப்படை உருவாக்கப்பட்டது. அந்த ஒட்டுப்படைகள் அரசாங்கத்தினதும் அவர்களின் ஆலோசகர்களினதும் கட்டுப்பாடுகளை மீறி நடக்கத் தொடங்கி பல அழிவுகளை தாமே தேடிக்கொண்டவை.

தமிழர்கள் நிதானம் இழக்காமல் சிந்திப்போம். முடிந்தால் சிங்கள மக்களின் நடுநிலையாளர்கள் ஊடக (உதாரணத்திற்கு வைத்திய கலாநிதி பிறையன் செனவிரட்ன)அவர்களுடைய இனம் அரசியல் விழிப்புணர்வை பெறுவதற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்க முயலுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அவர்களே!

எமது கருத்து நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? நாங்கள் அழிய வேண்டும், அவர்கள் வாழு வேண்டும் என்றும், எங்கள் எதிரி கூட்டத்து ஆதரவாளர்கள் என்றாளும் உயிருக்காக இரங்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது மனிதாப மானம் தான்?

ஆனால்

உங்கள் எங்கள் உறவுகள் மரணத்தில் மகிழ்ச்சிப்படும் ஓர் இனம். எங்கள் மக்கள் சாகும் போதெல்லாம் அது புலிகள் என்று சொல்கின்ற ஒரு இனம் அழிவதை பற்றி நீங்கள் அதிகமாகவே கவலை கொள்கின்றீர்கள் எங்கள் மக்கள் அழிவதைப்பற்றி கவலை கொள்ளதாக எவனைப்பற்றியும் நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியமோ தேவையோ எமக்கில்லை. எங்கள் சாவை வாசாய் எடுக்காத ஒரு இனம், சாவதைப்பற்றி கவலை கொள்ள வேண்டிய தேவையும்இல்லை. பச்சிளம் பாலகர்கள் கொல்லப்படுகையில் அதைப்பற்றி கவலையின்றி, அதற்க்கு கண்டனம் சொல்லாதா ஒரு இனம், அனவாதத்தை மட்டுமே கக்குகின்ற ஒரு இனம், சாவதில் எமக்கு கவலை இல்லலை. இதையுமு; வெட்டுங்கள். கவலை இல்லை. காலம் இதை தான் உங்களுக்கு சொல்லும் ஆண்டாண்டு காலமதாய் நாம் அழுகின்றோம் எமக்காக மட்டுமல்ல எதிரிகளுக்கு மாய். இனியாவது மாறுவேமெ. சுயநல இனமாக..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.