Jump to content

கொலைகளின் பின்னணியில் இந்திய ஏகாதிபத்தியம்.


Recommended Posts

பதியப்பட்டது

கொலைகளின் பின்னணியில் இந்திய ஏகாதிபத்தியம்.

அண்மைக்காலமாக, தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கோரமாக கொலை செய்யப்படுவதும், அதுவும் சிறிலங்கா இராணுவ முகாம் நிறைந்த பகுதிகளில் இந்த கொலைகள் நடப்பதுவும், யாவரும் அறிந்ததே.

அதே போல, சிங்கள விவசாயிகள் 13 பேர் கொல்லப்பட்டதும், கருணா குழுவால் இந்திய வணிகர்கள் கொல்லப்பட்டதும், தற்போது 63 சிங்கள பொதுமக்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டதும், முன்னறியப்படாத சக்திகளால் நடைபெறுவது போல காணப்படுகிறது.

இந்த கொலைகள், ஆலால் தருமர் கொலைகள், இராஜினி திரணகம படுகொலை, ஆகியவற்றை ஒத்ததாக, சிறிலங்கா இராணுவமோ, விடுதலைப்புலிகளோ அல்லாத, மூன்றாவது தரப்பு செய்திருப்பது போல தெரிகிறது. காரணம், கொலைகளுக்கான பழியை இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் சாட்டும் வகையிலாக இந்த கொலைகள் அமைந்திருக்கின்றன.

ஏன் இந்திய ஏகாதிபத்தியம் இந்த கொலைகளை செய்திருக்க கூடும்?

ஐ.நா. சபையின் செயலாளர் ஒரு இந்திய உணர்வுள்ள இந்தியராக இருப்பது, இந்தியா பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினராக வர அத்தியாவசியமானது, என இந்தியா நினைக்கிறது. இதற்கு லண்டனில் பிறந்து நியுூ யோர்க்கில் வாழ்ந்தாலும், இந்திய குடியுரிமையுடன் ஐ.நா. சபையில் கோவி அன்னானுக்கு அடுத்த நிலையில் உள்ளவரான சேஷன் (ஷாஷி) தரூரை இந்தியா ஆதரிக்கிறது. இவருக்கு அமெரிக்க ஆதரவும், கோவி அன்னானின் ஆதரவும் உண்டு.

s8.jpg

சேஷன்(ஷாஷி) தரூர்

சேஷன்(ஷாஷி) தரூருக்கு முக்கிய போட்டியாக இருப்பவர் இலங்கையின் வேட்பாளரான ஜெயந்த தனபால. ஜெயந்த தனபால சிறி லங்காவின் சமாதான முயற்சிக்கு பொறுப்பாகவும் இந்த சமாதான முயற்சியில் சிறிலங்கா அதிபருக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். சேஷன்(ஷாஷி) தரூரைப் போலவே ஜெயந்த தனபாலவும் கோவி அன்னானுக்கு அடுத்த நிலையில் ஐ.நா.வில் நீண்டகாலம் வேலை செய்தவர். ஜெயந்த தனபாலவும் கோவி அன்னானும் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பர்கள். சேஷனை போலவே ஜெயந்தவுக்கும் கோவி அன்னானின் ஆதரவும், அமெரிக்க ஆதரவும் உள்ளது. ஜெயந்த சீன மொழியில் புலமை பெற்றவர். அவருக்கு சீனாவின் ஆதரவும் உள்ளது. முக்கியமாக இந்தியரான சேஷனை சீனா வீட்டோ செய்து, ஜெயந்தவை தெரிவு செய்யவும் கூடும். இந்தியா பாதுகாப்பு சபையில் தன்னைப்போல வீட்டோ அதிகாரம் பெறுவதை சீனா விரும்பாது.

img26.jpg

ஜெயந்த தனபால

ஆகவே, ஜெயந்தவை கவிழ்க்க இந்தியாவுக்கு உள்ள ஒரே ஆயுதம், ஜெயந்தவின் சிறிலங்கா சமாதான முயற்சியை படுதோல்வி அடையச் செய்து, ஜெயந்தவை தலை குனிய வைப்பது தான். புளோட், கருணா, ஈபிடீபி கூலிக்கும்பல்கள் இலங்கையிலும், மாலைதீவிலும் இந்தியாவிலும், இந்திய வல்லாதிக்கத்துக்கு ஏற்கனவே கூலிக்கு கொலை செய்தவர்கள். அவர்களை கொண்டு தனது வல்லாதிக்க கனவுக்காக இலங்கையில் அப்பாவி மக்களை கொன்று இந்தியா கோர விளையாட்டு விளையாடுகிறது.

இதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வெறுமனே ஜயந்த ஜக்கிய நாடுகள் சபைக்கு போட்டியிடுவதற்கு, தமிழர் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பக் கூடாது என்பதற்காகப் புனையப்பட்ட கட்டுக்கதை என்பது புலனாகின்றது.

மீசாலைப்படுகொலை, நெல்லியடிப்படுகொலை, வாங்காலைப்படுகொலை, அல்லைப்பிட்டிப்படுகொலை எல்லாம் இராணுவம் செய்தது என்று வெளிப்படையாக தெரியும் போது, துணைக்குழுக்கள் மீது பழியைப் போடுவதன் நோக்கம் புரியவில்லை. ஏன் இராணுவத்தில் இந்தியா ஊடுருவி உள்ளனர் என்று சொல்லப் போகின்றீரா??

மேலும் இந்தியா பற்றிச் சொன்னது, நம்பக் கூடியதாக இல்லை. வெறுமனே இக்கொலைகளுக்கு, ஈபிடிபியையோ, புளொட்டையோ குற்றம் சாட்டித் தப்பித்து விட முடியாது. இலங்கை இராணுவம் ஒழுக்கமானது என்று இராணுவப் பேச்சாளர் சொன்னதை நீங்கள் நம்பலாம். ஆனால் பொதுவாக அதன் செயற்பாடுகள் எல்லோருக்கும் தெரியும். கட்டுரையாளரின் நோக்கம், ஜயநந்த மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது!

இரண்டாவது இலங்கை இராணுவம் தூய்மையானது. படுகொலைகளுக்கு இந்தியா பொறுப்பு என்ற பாணியில் இராணுவத்தை நியாயப்படுத்துவது,

மூன்றாவது இந்தியா மீது வெறுப்புணர்வை தமிழ்மக்களுக்கு இடையில் ஏற்படுத்துவது என்பனவே ஆகும்!

கொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் இலங்கை ஜனாதிபதியாவார்.இதற்குள் ஜயந்த தனபாலாவை முடிச்சுப் போடுவது ஏன் என்று தெரியவில்லை. வெறுமனே ஜயந்தாவிற்காக இப்படி அற்பத்தனமான செயற்பாட்டை இந்தியா செய்யாது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! ஜயந்த தனபால வந்தால் கூட அது தமிழ்மக்களுக்கு ஆபத்து தான். அவர் இலங்கை சமாதான செயலகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அவரது பணி இராணுவம் செய்கின்ற எந்த விடயங்களையும் நியாயப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

மேலும், சிங்கள இராணுவம் எதிர்வரும் காலத்தில் செய்யும் படுகொலைகளுக்கு, அவர் ஆட்சேபனை தெரிவிப்பார் என்பது சாத்தியமான விடயம் அல்ல. நாளை அவர் ஜநாவின் செயலாளராக வரும்பட்சத்தில் அவர் சிங்கள மேலாதிக்கத்தை ஆதரிப்பார் என்பதை மறுக்க முடியாது.

கதிர்காமர் சொன்னது போல, ஜநாவின் பணி என்பது வெறுமனே " நுளம்பிற்கு மருந்தடித்தல்" என்றா நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்! ஜயந்த தனபால விடயத்தில் ஏன் எம்மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என்ற வருத்தம் உண்டு. ஜயந்தவின் போட்டியிடும் முயற்சி தமிழருக்கு பாதிப்பை உண்டு பண்ணும் என்று யாரும் யோசிக்கவில்லையா?

இச்சந்தர்ப்பத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும், இந்தியாவிலிருந்து ஒருவர், ஜநாவில் தெரிவாவதை விட, இலங்கையில் இருந்து ஒருவர் தெரிவாவது தமிழருக்கு ஆபத்தானது. இது குறித்து தமிழ்மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். எனவே இது குறித்தும் ஜநாவிற்கு கண்டண அறிக்கைகளை அனுப்பவேண்டியது தேவையாகும். காலம் கடந்து கத்திப் பிரியோசனமில்லை.

Posted

உந்த ஆய்வின் மூலம் என்ன? யூட்டின் தனிப்பட்ட ஆய்வா?

கெப்பிட்டிகொல்லாவ கண்ணிவெடித்தாக்குதலிற்கு இதுவரை கண்டித்த 4 நாடுகளில் அமெரிக்கா ஒன்றே புலிகள் தான் செய்தவர்கள் என்று சொல்லி கண்டித்திருக்கிறது.

மாமனிதர் சிவராம் ஒருமுறை எழுதியிருந்தவர் அமெரிக்க ஆலோசனையாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் பொது இடங்களில் குண்டுகளை வெடிக்கவைத்து மக்களை பெருமளவில் கொல்வதன் மூலம் மக்களின் ஆதரவை unseat பண்ணலாம் என்று. அத்தோடு புலிகளின் தலமைப்பீடத்தை படுகொலைகள் சதிகள் மூலம் மாற்ற முயற்சிக்கலாம் என்று.

இப்படியான படுகொலை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளை அமெரிக்கா மற்ற நாடுகளில் கைய்யாண்டதை மறந்துவிடக்கூடாது.

யோசப் பரராஜசிங்கம் போன்றவர்களில் கைவைக்கும் துணிவு இன்னொரு முக்கிய சக்தியின் பின்புலம் இல்லாமல் வராது. அந்த பின்புலம் பிராந்திய வல்லரசா இல்லை உலகவல்லரசா?

ஜரோப்பிய ஒன்றிய தடையை ஊக்குவித்து அமுல்படுத்தியது பிரித்தானியா அமெரிக்கா என்கிறார்கள். கனடாவில் நடந்தவற்றிற்கு அமெரிக்காவின் நெருக்குதல்கள் முக்கிய காரணம்.

புலம்பெயர்ந்துள்ள மக்களின் பங்களிப்பை ஏதே ஒருவகையில் பாதிக்கக்கூடிய வல்லமை இந்தியாவிடம் இருக்கா இல்லை அமெரிக்காவிடம் இருக்கா?

நாம் எல்லோருக்கும் தனிப்பட்டரீதியில் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் இந்திய இராணுவத்துடன் இருக்கிறது. அந்த அடிப்படையில் எங்கள் எல்லோரை இந்தியாவை எதிரியாக காட்டி பராக்காட்டி எமது மட்டுப்படுத்த நேரத்தை வீணடிப்பது இலகு. அது சாதுரியமாக நடக்க எம்மீத நெருக்கங்கள் வேறுவழிகளில் எமது போராட்டத்தை பாதிக்கும் என்பதில் கவனமாக இருப்போம்.

மேற்கூறியவை எல்லாம் மறைமுகமாக நடந்தவை என்றால் வெளிப்படையாக பலவிடையங்கள் அமெரிக்காவால் கூறப்பட்டது கூறப்படுகிறது. இவை எல்லாம் ஒன்றை உள்ளார்ந்த நோக்கமாக கொண்டு, மக்களிற்கும் புலிகளிற்கும் இடையில் இடைவெளியை கொண்டுவருவது.

இந்தியா நல்லபிள்ளை என்று கூறவரவில்லை. ஆனால் அண்மைகால குளப்பங்களிற்கு இந்தியவின் பங்களிப்பு பெரிதா இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

மீண்டும் மாமனிதர் சிவராமின் எழுத்துக்களிலிருந்து ஒரு விடையம், கனடா ஈழத்தமிழர்களை பெருமளவில் அகதிகளாக உள்வாங்கியதற்கு அமெரிக்காவின் இந்து சமுத்திர அரசியல் இராஜதந்திர பின்னணி உண்டு என்றார்.

அதனால் தான் இன்றைய காலகட்டத்தில் கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமை கொண்ட இனப்பற்றும் எழுச்சியும் முக்கியமானது என நினைக்கிறேன்.

Posted

நண்பர் தூயவன் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்... தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் கற்பனை செய்து இந்தியா மீது பழிபோடும் கருங்காலிகளின் நோக்கத்தை ஈழத்தமிழர்கள் உணர வேண்டும் என்பதே என் விருப்பம்.....

Posted

"நாயுக்கு எங்கு அடித்தாலும் முன்னங்காலைத் தூக்குமாம்" .... அவ்வாறே நாமும் இன்று ஈழத்தில் என்ன நடந்தாலும் அதை இந்திய வல்லாதிக்கத்தின் தலையில் இலகுவில் போட்டு விடுகிறோம். இந்தியா எம் போராட்டத்தை ஆதரிக்கவில்லை, ஆரம்பத்திலிருந்தே தனது நலனுக்காகவே பாவிக்க முற்பட்டது, பின் படைகளை அமைதி காக்கவென அனுப்பி எம்மை அழிக்க முற்பட்டது, அது தோல்வியில் முடிவடைய மாத்தையாவின் மூலம் பாரிய சதியை அரங்கேற்றியது, இறுதியாக கருணாவின் சதியிலும் ஈ.என்.டி.எல்.எப் ஐயும் சேர்த்து விளையாடியது. எல்லாம் உண்மையே!!! ஆனால் அவற்றிற்கும் தற்போது நடைபெறும் கொலைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!!! இன்று இலங்கை இராணுவம், ஒட்டுக்குழுக்கள் எல்லாம் இலங்கை அரசின் முழுக்கட்டுப்பாட்டினுள்ளேய

Posted

அத்தோடு நில்லாமல் இந்தியா ஈழ்ழத்தமிழரின் நல்ல எண்ண சமிச்சைகளைப் புரிந்து கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியா மவுனமாக இருந்தால் அமெரிக்கா இந்தப்பிராந்தியத்தில் வலுவாக ஊடுருவி விடும்.இந்த ஊடுருவல் ஈழத் தமிழர்கள் சிலரின் உதவியுடனயே நடந்து விடும்.ஆகவே இந்தியா விரைவாக ஈழத் தமிழர்களின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும்.குறிப்பாக புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும்.இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.புலிகளைப் புறந்தள்ளி விட்டு ஈழத் தமிழர்களின் ஆதரவை என்றுமே இந்தியா பெற முடியாது.

மேலும் லகி லுக் உமது ஈழத் தமிழர்கள் மேலான வெறுப்பும் புலிகள் மேலான நச்சுக் கருத்துக்களும் ஈற்றில் இந்திய நலங்களுக்கு எதிரானதாகவே அமையும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.இணயத்தில் பத்திரி போன்ற வலைப் பதிவாளர்களுடன் சேர்ந்து நீரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவது இந்திய நலங்களையும்,தமிழீழத்தவரின் நலங்களையும் பாதுகாப்பதற்கான நலெண்ணத்தை வளர்க்க உதவும்.ஆகவே நீரும் பொறுப்புடன் நடந்து கொண்டு புலிகளுக்கு எதிராக வீணாண சீண்டல் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.எமக்குள் ஏற்படும் தேவயற்ற பிணக்கு வெளிச் சக்திகளுக்கே பலனுடயதாக அமையும்.விரைவில் இது தொடர்பான தெளிவான நிலையை இந்திய அரசும்,தமிழ் நாட்டு அரசும் எடுக்க வேண்டும்.

Posted

நாரதர்! இதே காரணங்கள் ஈழத்தமிழருக்கும் உண்டல்லவா? இனியாவது இந்தியத் தேசியத்தை கொச்சைப்படுத்தாமல் விரைவில் இந்தியாவின் ஆதரவைப் பெற்று தமிழ் ஈழம் மலரச் செய்ய வேண்டும்..... ஈழத்தமிழர்கள் எல்லோர் மீதும் நான் ஏதோ வெறுப்பை உமிழும்படியான தோற்றத்தை ஏற்படுத்த முனைய வேண்டாம்.... இந்தக் களத்திலேயே சில நண்பர்கள் மற்றும் நண்பிகள் என்னை தனிமடலில் தொடர்புகொண்டு என் உண்மையான நிலைப்பாடு என்ன என்று கேட்டறிந்துக் கொண்டுள்ளார்கள்.....

அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் கால் பதிக்கக் கூடும் என்ற உங்கள் எச்சரிக்கை சரியானதே.... அமெரிக்கா கால் பதித்தால் இந்தியாவுக்கு மட்டுமல்ல.... சீனா போன்ற வளரும் நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.... இலங்கையும் ஆப்கானிஸ்தான் போல அமெரிக்காவின் அறிவிக்கப்படாத இன்னொரு மாநிலமாக பாவிக்கப்படும்.

Posted

அதாவது லக்கியின் கருத்துப்படி இலங்கையில அமெரிக்கா காலூன்றுவதை தடுப்பதில எம்மைப் போலவே இந்தியாக்கும் அக்கறை உண்டு

ஆனால் இந்தியா இது தொடர்பில எந்த ஒரு ஆக்கபுூர்வமான முயற்சி|யும் இதுவரை செய்ததாக தெரியவில்லையே

Posted

இதை நன்கு உணர்ந்தமையால் தான் இந்தியா தமிழ் ஈழத்திற்கு எதிரான வகையில் செயற்பட்டாலும் ,புலிகள் இன்றும் இந்திய நலங்களுக்கு எதிரான நிலைப் பாட்டை இன்றும் கொண்டிருக்கவில்லை.புலம் பெயர்ந்த சில தமிழர்கள் மத்தியில் புலிகள் ,திரிகோணமலையை அமெரிக்காவுக்கு குத்தகைக்குக் குடுத்தால் அமெரிக்கா தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கும் என்ற நிலைப்பாடு உள்ளது, அவ்வாறான சமிக்கைகளையும் அமெரிக்கா புலிகளுக்கு அனுப்பியும் உள்ளது.இந்த நிலையில் இந்திய அரசே இதனைப் புரிந்து கொள்ளாமல் இன்னும் ராஜிவ் கொலை என்ற ஒரு நிலயிலயே இன்னும் இருக்கிறது.இந்தியா இது சம்பந்தமாக தனது பாதுகப்பு நலங்களையே முதலில் கரிசனை செய்ய வேண்டும்.இதனயே புலிகளும் இங்கே நாங்களும் சொல்லி வருகிறோம்.புலிகளோ அன்றி இங்கே களத்தில் எழுதும் எம் போன்றவர்களோ இதனைத் தான் உங்களிடம் இருந்தும் இந்திய அரசிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்.இந்திய தேசிய நலங்களுக்கு எதிராக நான் என்றும் இங்கே எழுதியது கிடயாது, வேறு சிலர் எழுதி இருக்கலாம். ஆனால் நீங்கள் புலிகளை வெகு கீழ்த்தரமான வகையில் விமர்சித்துள்ளீர்கள்.இது உங்கள் அறியாமை என்றே எடுத்துக் கொள்கிறேன்.இனியும் இவ்வாறான எழுத்துக்களை எங்குமே எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்,இது அடிப்படயில் நீங்கள் விரும்பும் இந்திய தேசிய நலங்களுக்கு எதிரானது என்று சொல்ல விரும்புகிறேன்.

Posted

இந்தியாவை அவசரப்பட்டு அளவிற்கு மிஞ்சி தலையிடச் சொல்லி வெத்திலை பாக்கு வைச்சு வரவேற்காதேங்கோ பிறகு அதற்கான எதிர்வினைiயும் சந்திக்க வேணும். There is no free lunch.

மற்றது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்காவிற்குமான பகமையுணர்வு மங்கி ஒரு பங்காளி மனோநிலை வழர்கிறது, காரணம் சீனாவின் வழர்ச்சி. இந்தியாவின் பாதகமான தலையீடுகளை மட்டுப்படுத்த தமிழ்நாடு என்ற ஒரு நெம்புகோல் இருக்கு. அந்த நொம்புகோலை பயனுள்ள நிலையில் வைத்திருப்பதற்கு எமது போராட்டங்கள் தேவையின்றி அளவிற்கு மிஞ்சி தமிழ்நாட்டிற்கு பரவக்கூடாது. அதுக்கு மேலை பேராசைப்பட்டால் எதிர்மாறான விளைவை உருவாக்குவது இலகு.

கனடா அமெரிக்காவின் ஆசியோடு ஈழமக்களை உள்வாங்கியது தாம் அப்படியான ஒரு நெம்புகோலை ஈழவிடுதலைப் போராட்டத்தில் உருவாக்கிக் கொள்ளலாம் என்று. இன்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பொரும்பான்மையாக 3 லட்சம் மக்கள் அங்கு முடங்கிப்போய் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்புகள் (அனைத்துவடிவத்திலும்) கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கப்படுகிறது. அடுத்தகட்டம் அவர்களது எண்ணங்கள் உணர்வுகளை மாற்றி ஒரு நெம்புகோலாக்கும் முயற்சியாக இருக்கும். அதை சுதாகரித்து நாங்கள் உணர்வு கொண்டு எழுந்து எதிர்மாறான முடிவுகளை அரங்கேற்ற வேண்டும்.

Posted

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கி வருவதற்கு காரணமாயமையும் பொதுவான நலன்கள்

[16 - June - 2006] [Font Size - A - A - A]

சர்வதேச தொடர்புகளில் நீண்ட காலமாக இருந்து வந்த மர்மங்களுள் ஒன்று இன்றுவரை அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் இருந்து வந்த திருப்தி தராத தொடர்பு நிலையாகும். இரண்டும் ஆணவமிக்க ஜனநாயக நாடுகள். இவை இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஐயுறவுடன் நோக்கியதுமன்றி சீனாவின் எழுச்சி பற்றியும் அச்சமடைந்திருந்தன. எனினும், பனிப்போர் காலத்தில் இந்த இரண்டு நாடுகளும் எதிரிடையான முகாம்களில் இருந்தன.

இன்றும், பனிப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்களுக்குப் பின்னும் இவற்றுக்கிடையே அடிப்படை வேறுபாடுகள் இருந்து வருகின்றன. விசேடமாக எவ்விதம் ஈரானுடன் செயற்படுவது, எதிர்காலத்தில் எவ்விதம் சக்தி வளங்களைப் பெற்றுக் கொள்வது என்ற நடவடிக்கைகளில், ஆனால், இந்த வேறுபாடுகள் யாவும் அலட்சியப்படுத்தப்பட்டு இரண்டு இராட்சத வல்லரசுகளும் இணக்கப்பாட்டுடன் முன்னேற முன்வந்துள்ளன.

மார்ச் மாதத்தில் தொடர்புகள் மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றின. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் நீண்ட கால அடிப்படையில் டெல்லியில் அணுசக்தி உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். இதற்குப் பதிலாக அணுசக்தி உலைகளை சர்வதேச பரிசோதனைக்கு அனுமதிப்பதென ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், அமெரிக்க அரசினால் செறிவூட்டப்பட்ட யூரேனியமும் தொழிநுட்ப அறிவும் சிவில் அணுசக்தித் திட்டங்களுக்கு இந்தியாவுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

எதிர்பார்த்த நிலையில், இந்த உடன்படிக்கை உலகளாவிய ரீதியில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. விசேடமாக அமெரிக்காவிலும் இந்தியாவினுள்ளும் இவை இடம்பெற்றன. அணு ஆயுதப் பரம்பலைத் தடுக்கும் உடன்படிக்கைக்கு மரண அடிகொடுத்துள்ளதாகக் குரலெழுப்பினர். அணுவாயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கை (NPT) 1968 தொடக்கம் சர்வதேச அணுசக்தி சமநிலைக்கு அடித்தளமாக அமைந்திருந்தது.

§ÁÖõ Å¡º¢ì¸>>>>>>>>>>>>>>>>

http://www.thinakkural.com/news/2006/6/16/...es_page4575.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அய்யா லக்கி லுக் எங்களுக்கு இந்தியாவின்ர ஆதரவு தேவை இல்லை என்டது இந்தியாவுக்கும் தெரியும் உலகத்துக்கும் தெரியும். உதவி பண்ணாட்டிலும் பறவாயில்லை உபத்திரம் பண்ண வேண்டாம் என்டு ஏற்கனவே நிறையப்பேர் சொல்லீட்டினம்.

Posted

பூகோள ரீதியாக இந்தியாவை இலங்கையில் இருந்தோ தமிழ் ஈழத்தில் இருந்தோ பிரித்து விட முடியாது.இந்தியாவின் அரசியல் ரீதியான தாக்கம் அல்லது ஆளுமை எப்பவும் இலங்கை அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும்.அதனால் தான் நோர்வேயோ அன்றி அமெரிக்காவோ அல்லது யப்பனோ எப்போதுமே இந்தியாவிடம் இலங்கை சம்பந்தமாகக் கதைத்துக் கொண்டிருகிறார்கள்.இதனை நாங்கள் தவிர்க்க முடியாது.இந்திய நலனுக்கு எதிர் நிலையான நிலையை தமிழ் ஈழம் எடுக்க முடியாது அது நீண்ட கால நோக்கில் தமிழ் ஈழத்திற்குப் பாதகமான நிலையயே ஏற்படுத்தும்.இன்றைய உலக ஒழுங்கு என்பது அவ்வாறே இருக்கிறது. நாம் தான் எமது விடுதலையைப் பெறப் போராட வேண்டும்,இதில் எந்த தளம்பலும் இல்லை ஆனால் தமிழ் ஈழத்தின் வெளிஉறவுக் கொள்கை என்பது நீண்ட கால நோக்கில் அமைந்த பூகோள அரசியல் நிலமைகளின் அடிப்படையிலயே முன் நகர்த்தப் பட வேண்டும்.

Posted

இந்தியா தமிழருக்கு எதிராக செயற்படப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதுபோல தெரிகிறது.... அண்மையில் நடந்த கடற்போரில் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத கடற்படை இந்திய உதவியை நாடியது.... அடைக்கலம் எண்டு கேட்க்கும் அயல்நாட்டுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டியது அயல்நாட்டின் கடமை.... ஆனாலும் அவர்கள் இலங்கை கடற்பிரதேசத்துக்குள் வரவிரும்பவில்லை இலங்கை படையினரை இந்திய கடல் எல்லைக்குள் அழைத்தனர்..... இந்திய எல்லைக்குள் போன பின்னர் புலிகளும் தங்களின் தாக்குதல்களை நிறுத்தினர்.... அதோடு இந்திய கடற்படையினர் புலிகளை தாக்க முயலவில்லை அல்லது தாக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.... அதாவது திரைபோண்ற ஒரு புரிந்துணர்வு புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இருப்பதை புரிந்து கொள்ளலாம்....!

வல்லாதிக்க கனவோடு இந்தியா இருந்தாலும் தனது பிரதேசம் அமைதியாக இருக்கணும் எண்டு விரும்புகிறது.... அது ஒரு காரணம்தான்..... ஆனாலும் இலங்கையில் (குறிப்பாய் மட்டக்களப்பில்) இருந்து ஏறுமதி ஆக இருக்கும் "ஜிகாத்" ஆயுத குழுக்கள் அல்லது இந்திய "ஜிகாத்" உறுப்பினர்களை இலங்கையில் பயிற்றுவிக்க பாக்கிஸ்தான் முயலும் இந்த வேலையில் இந்திய உளவாளிகள் எண்று கருதப்படும் புடவை வியாபாரிகள் மட்டக்களப்பில் கொல்லப்பட்டு வரும் இந்த வேளையில் இந்தியா பொறுப்பாக இல்லை என்பது தவறான கருத்தாகும்....!

அதோடு இலங்கை, இந்திய கடல் வளங்களை பகிர்ந்து எடுக்கும் திட்டமாக இந்தியாவைகும் கூட்டு சேர்க்க அமெரிக்கா முயல்வதை இந்தியா தவிர்த்து வருகின்றது.... இண்றைய சூள்நிலையில் மிகவும் மெதுவாக காய் நகர்த்தினாலும் உறுதியாக இந்தியா காய் நகர்த்திவருகிறது....! இதன் வேகம் தமிழ் மக்களின் மனநிலைக்கு போதாததுதான்.....!

இப்போதைக்கு சர்வதேச வலையில்(தலயிடியில்)இருந்து இந்திய, ஈழ கடல் வளங்களை காக்க கூடிய சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது....!

Posted

பூகோள ரீதியாக இந்தியாவை இலங்கையில் இருந்தோ தமிழ் ஈழத்தில் இருந்தோ பிரித்து விட முடியாது.இந்தியாவின் அரசியல் ரீதியான தாக்கம் அல்லது ஆளுமை எப்பவும் இலங்கை அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும்.அதனால் தான் நோர்வேயோ அன்றி அமெரிக்காவோ அல்லது யப்பனோ எப்போதுமே இந்தியாவிடம் இலங்கை சம்பந்தமாகக் கதைத்துக் கொண்டிருகிறார்கள்.இதனை நாங்கள் தவிர்க்க முடியாது.இந்திய நலனுக்கு எதிர் நிலையான நிலையை தமிழ் ஈழம் எடுக்க முடியாது அது நீண்ட கால நோக்கில் தமிழ் ஈழத்திற்குப் பாதகமான நிலையயே ஏற்படுத்தும்.இன்றைய உலக ஒழுங்கு என்பது அவ்வாறே இருக்கிறது. நாம் தான் எமது விடுதலையைப் பெறப் போராட வேண்டும்,இதில் எந்த தளம்பலும் இல்லை ஆனால் தமிழ் ஈழத்தின் வெளிஉறவுக் கொள்கை என்பது நீண்ட கால நோக்கில் அமைந்த பூகோள அரசியல் நிலமைகளின் அடிப்படையிலயே முன் நகர்த்தப் பட வேண்டும்.

சரியான விளக்கம்.... ரொம்பவும் பொறுமையாக என்னுடைய பூகோள ஆசிரியர் விளக்கியதைப் போல விளக்கி இருக்கிறீர்கள்.... நன்றி!!!!

Posted

உலக அரசியல் பொருளியல் வளப்பரம்பலின் அடிப்படையில் தான் என்றும் இராணுவ அரசியல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன..! வகுப்பாளர்கள் மட்டும் மாறிக் கொள்கிறார்கள்..! கொள்கைகள் மாறுவதாக இல்லை..! இது தமிழர் தரப்பில் போராடும் சக்தியாக உள்ளவர்களுக்கு மிக நல்லாத் தெரியும் பாருங்கோ..!

Posted

உலக அரசியல் பொருளியல் வளப்பரம்பலின் அடிப்படையில் தான் என்றும் இராணுவ அரசியல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன..! வகுப்பாளர்கள் மட்டும் மாறிக் கொள்கிறார்கள்..! கொள்கைகள் மாறுவதாக இல்லை..! இது தமிழர் தரப்பில் போராடும் சக்தியாக உள்ளவர்களுக்கு மிக நல்லாத் தெரியும் பாருங்கோ..!

ஓய் பீஏ யாருக்கு சொல்றீர் லக்கிக்கா யோவ் எருமைமாட்டில மழை பெஞ்சது போல இருக்கும்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

Posted

தூயவன்:

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! ஜயந்த தனபால வந்தால் கூட அது தமிழ்மக்களுக்கு ஆபத்து தான். அவர் இலங்கை சமாதான செயலகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அவரது பணி இராணுவம் செய்கின்ற எந்த விடயங்களையும் நியாயப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

குறுக்காலபோவான்:

மாமனிதர் சிவராம் ஒருமுறை எழுதியிருந்தவர் அமெரிக்க ஆலோசனையாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் பொது இடங்களில் குண்டுகளை வெடிக்கவைத்து மக்களை பெருமளவில் கொல்வதன் மூலம் மக்களின் ஆதரவை உன்செஅட் பண்ணலாம் என்று. அத்தோடு புலிகளின் தலமைப்பீடத்தை படுகொலைகள் சதிகள் மூலம் மாற்ற முயற்சிக்கலாம் என்று.

இப்படியான படுகொலை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளை அமெரிக்கா மற்ற நாடுகளில் கைய்யாண்டதை மறந்துவிடக்கூடாது.

சோழன்:

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இன்று, ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையோ அன்றி வேறேதும் அவலங்களில் பாரியளவில் சிக்குவதை விரும்பியும் விரும்பாது என்பதே உண்மை!! காரணம் மிக இலகு, ஈழத்தில் நடைபெறும் ஒவ்வொரு அதிர்வுகளும் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்பது சொல்லித் தெரியத் தேவையில்லை!

நாரதர்:

நாம் தான் எமது விடுதலையைப் பெறப் போராட வேண்டும்,இதில் எந்த தளம்பலும் இல்லை ஆனால் தமிழ் ஈழத்தின் வெளிஉறவுக் கொள்கை என்பது நீண்ட கால நோக்கில் அமைந்த பூகோள அரசியல் நிலமைகளின் அடிப்படையிலயே முன் நகர்த்தப் பட வேண்டும்.

தல:

இப்போதைக்கு சர்வதேச வலையில்(தலயிடியில்)இருந்து இந்திய, ஈழ கடல் வளங்களை காக்க கூடிய சக்தி இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது....!

குருவிகள்:

உலக அரசியல் பொருளியல் வளப்பரம்பலின் அடிப்படையில் தான் என்றும் இராணுவ அரசியல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன..! வகுப்பாளர்கள் மட்டும் மாறிக் கொள்கிறார்கள்..! கொள்கைகள் மாறுவதாக இல்லை..!

இவைதான் யதாத்தமான - சூழ்நிலைகள் 8) 8) 8) 8)

Posted

இங்கு வரையப்பட்ட கட்டுரையின் நோக்கம் என்ன என்று புரிந்து கொள்ள முடியாது உள்ளது. இதில் இந்தியா தனது தரப்பிலிருந்து பாதுகாப்புச் செயலரை தெரிவு செய்வதற்காக இலங்கையில் ஓர் குழப்ப நிலையை உண்டாக்குவது போன்று கருத்துப்பட எழுதப்பட்டிருக்கும் கட்டுரை சொல்ல வருவதுதான் யாது?

ஒட்டுக்குழுக்களினை பயன்படுத்தி இந்தியா தனது நோக்கத்தினை செயற்படுத்த முனைகின்றது எனின் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதல்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் யாரால் நடத்தப்படுகின்றது?. இந்திய விமானங்கள் தாக்குதலை மேற்கொள்கின்றனவா, இந்தியக் கப்பல்களில் இருந்து ஏவுகணைத்தாக்குதல் நடத்தப்படுகிறதா?

அவ்வாறாயின் இலங்கை அரசு ஏன் வாய்மூடி மெளனியாக நிற்கிறது. தங்களின் நாட்டு இறைமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டது என்று உலகம் முழுவதும் அழுது கண்ணீர் வடித்திருக்குமே. சரி அவை இராணுவத்தினர் சிலரது தவறான வழிநடத்தலில் இந்தியாவிவின் நலன் சார்ந்து செயற்படுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் கொழும்பிலிருந்து அரசியல் விஞ்ஞானம் கற்றுத் தேறி பதவிகளில் இருக்கிறோம் என இறுமாப்படைபவர்களின் அறிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது.

ஆக இங்கு வரையப்பட்டிருக்கும் கட்டுரையானது வெறுமனவே ஈழமக்களின் அடிமனங்களில் ஆறா வடுவாக இருக்கும் சில பழைய ஞாபகங்களை கிழறிவிட்டு அவரிடையே இந்தியா மீதான எதிர்ப்பலைகளை ஏற்படுத்துவதே காரணமாக உள்ளதே தவிர வேறொன்றுமில்லை.

இந்தியாவிற்கு இந்த சமுத்திரப் பிராந்தியத்தில் இன்னொரு நாடு உருவாவது கசப்பான விடயமாக இருக்கலாம். அதற்கு இந்திய நலனும் ஓர் காரணமாக அமையலாம். ஆயினும் இன்றைய சூழலில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ புதிய ஓர் நாடு உருவாவது நடைபெறுகின்றது. அதனை இந்தியாவும் நன்கு உணர்ந்தே இருக்கிறது. அதன் வெளிப்பாடாக இந்தியாவின் சில நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

Posted

ஓய் பீஏ யாருக்கு சொல்றீர் லக்கிக்கா யோவ் எருமைமாட்டில மழை பெஞ்சது போல இருக்கும்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

என்னா மழை பெஞ்சாலும் சின்னப்புவுக்கு உரைக்கப் போவதில்லை.... :lol::lol::lol:

இதுக எல்லாம் சொரணையைப் பற்றி பேசுதுகோ..... :lol:

Posted

ஆக இங்கு வரையப்பட்டிருக்கும் கட்டுரையானது வெறுமனவே ஈழமக்களின் அடிமனங்களில் ஆறா வடுவாக இருக்கும் சில பழைய ஞாபகங்களை கிழறிவிட்டு அவரிடையே இந்தியா மீதான எதிர்ப்பலைகளை ஏற்படுத்துவதே காரணமாக உள்ளதே தவிர வேறொன்றுமில்லை.

சரியான அலசல் அருவி.... நன்றி!!!!

Posted

IS RAW BAITING THE TAMIL TIGERS?

As Sri Lanka slides into war again, PC Vinoj Kumar examines allegations that Indian intelligence agency RAW is propping up an anti-LTTE outfit to neutralise Tiger supremo V. Prabhakaran's influence

War clouds are gathering over Sri Lanka , both the Sri Lankan army and Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres are mounting attacks on each other with increasing frequency. In Tamil Nadu, the Karunanidhi government is beginning to feel the pinch. The elite "Q Branch" of Chennai police and the Coastal Security Group personnel have stepped up vigil to prevent infiltration of Tamil militants sneaking into the state in the garb of refugees.

But there is trouble from unexpected quarters. A group which supports the cause of an independent Tamil Eelam homeland in Sri lanka, created by India's external intelligence agency, the Research and Analysis Wing (RAW), has been accused of recruiting cadres for the renegade LTTE leader Karuna from the refugee camps in Tamil Nadu.

Jul 01, 2006

http://www.tehelka.com/story_main18.asp?fi...06Is_RAW_SR.asp

இந்த செய்தி சொல்வது, சுருக்கமாக :

இலங்கையில் அரச இராணுவமும் விடுதலைப்புலிகளும் மோதிக்கொள்வது அதிகரிக்க, சென்னையில் கியு பிராஞ்சின் செயற்பாடுகளும், கரையோர காவல்படையின் செயற்பாடுகளும், தமிழ் இராணுவவீரர்கள் தமிழ்நாட்டினுள் அகதிகள் என்ற போர்வையில் நுழையாதவாறு பார்த்துக் கொள்வதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சிக்கல் வேறு வழிகளில் வருகிறது. இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவான றோவினால் தனித்தமிழீழத்திற்கு ஆதரவளிக்க உருவாக்கப்பட்ட குழு ஒன்று, விடுதலைப்புலிகளில் இருந்து ஒழிந்து ஓடிய கருணாவிற்கு, தமிழ் நாட்டின் அகதிகள் முகாம்களில் ஆட்களை திரட்டி வருவதாக குற்றம் சாட்டப்படுவதே இந்த சிக்கலாகும்.

----------------------------------------------------

----------------------------------------------------

மாத்தையாவும், கருணாவும், அவர்களுக்கு முதல் 47 இயக்கங்களும், இந்தியாவுக்கு விசுவாசமாக தமிழ் மக்களை கொன்றொழிக்க, வெற்றிடத்திலிருந்து உருவாகவில்லை. தமிழீழ மக்களின் என்றும் மாறாத இந்தியா மீதான பற்றுத்தான் அவர்களுக்கும் விளைநிலமாக இருந்தது. ஐரோப்பிய யுூனியனும், நோர்வேயும், அமெரிக்காவும், யப்பானும், தனது அயல் நாட்டில், தான் தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து, தமது பரம எதிரியான விடுதலைப்புலிகளை அங்கிகரிக்கபட்ட ஒரு அமைப்பாக கௌரவப்படுத்துவதை, இந்தியா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவில்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலங்களை நாம் மறக்கவில்லை. அவை தமிழீழ மக்களுக்கு நிறைய பட்டறிவைக் கற்றுத் தந்திருக்கின்றன. அவை குறித்து தமிழீழ மக்கள் அவதானமாகத் தான் இருக்கப் போகின்றார்கள்!

ஆனால் இந்தியா எமது பரமவிரோதி அல்ல. அவ்வாறு ஆகிக் கொள்வதற்கு பல சதிகள் நடக்கின்றன என்பது தான் உண்மை. என்றைக்குமே தேசியத்தலைவர் இந்தியாவைப் பற்றிக் குறை சொன்னதே கிடையாது. இந்தியாவைத் தந்தை நாடு என்ற வகையில் தான் கடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கூடக் கூறியிருக்கின்றார். இரு தினங்களுக்கு முன், தமிழ்செல்வனும் அதையே வலியுறுத்தி, இந்தியா இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். சில கசப்பான விடயங்களால் தான் உறவு பிரிந்ததே தவிர, அது நிரந்தப் பிரிவு அல்ல. எனவே பரமவிரோதி என்ற பாணியில் சொல்வது தவறானதாகும்.

மேலும், கீயுவோ, அல்லது றோவோ, தன் நாட்டுப் பாதுகாப்பில் கவனமாக இருக்கத் தான் வேண்டும். அது அவர்களின் கடமை. எங்களின் இறைமைக்குள், வேறு யாரும் பங்கம் விளைவிக்க கூடாது என்று கருதினமோ, அவ்வாறே தங்கள் நாட்டுப் பாதுகாப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவர்களின் கடமை.

முக்கியமாக இலங்கை என்ற பயங்கரமான எதிரி எம்மோடு போர் தொடக்கும் போது, என்னுமொரு எதிரியாக இந்தியாவைத் தேடுவது ஏன் என்று புரியவில்லை. ஜயந்த தனபாலவின் ஆபத்தை உணராமல், இந்தியாவின் போட்டியாளரை மட்டுமே சுட்டிக் காட்டும்போது தான் சந்தேகம் வலுக்கின்றது.

வெறுமனே இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து ஜநாவில் இந்தியா செயற்படப் போவதில்லை. பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா என்று பல விடயங்களிருக்க ஈழத்தை மட்டும் கண்காணிக்கப் போவதாக தெரியவில்லை.ஆனால் ஜயந்தவிற்கு நேர் எதிரே விடுதலைப் புலிகள் தான் உள்ளனர். எனவே அவரின் செயற்பாட்டுக்கும், இந்தியவின் செயற்பாட்டிற்கும் உள்ள வீரியத்தை ஏன் புரிந்து கொள்ளவில்லை.

சொல்லப் போனால் மேற்குறித்த ஒப்பீட்டை இலங்கை போட்டிபோடாது இருக்கும்போது சொல்லியிருப்பின் கவனத்தில் எடுக்கலாம் என்பதே என் கருத்து!

Posted

ஆனால் இந்தியா எமது பரமவிரோதி அல்ல.

மன்னிக்க வேண்டும் துர்யவன் நான் எழுதியதில் தவறு இருக்கிறது. திருத்திக்கொள்கிறேன். "இந்தியா தனது பரம எதிரியான" என்ற பதத்திற்கு பதிலாக "இந்தியா தனது பரம எதிரியாக கருதிக்கொள்ளும்" என்று வந்திருக்க வேண்டும். இந்தியா விடுதலைப்புலிகளை பரமஎதிரியாக கருதுவதற்கு இன்று வரை விடுதலைப்புலிகள் மேல் தொடரும் தடை ஒன்றே போதுமான ஆதாரம்.

ஜயந்த தனபாலவின் ஆபத்தை உணராமல், இந்தியாவின் போட்டியாளரை மட்டுமே சுட்டிக் காட்டும்போது தான்

சுட்டிக்காட்டப்பட்டது இந்த ஐ.நா. சபை செயலாளருக்கான போட்டியிலும், ஐ.நா. சபை நிரந்தர உறுப்புரிமைக்கான விருப்பிலும் இலங்கையின் சமாதானம் எப்படி பலியாகின்றது என்பதும், இதற்கு பொதுமக்கள் பலியாவதும் தான். மீண்டும் ஒரு முறை படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சந்தேகம் வலுக்கின்றது.

எதையும் நம்பாமல் சந்தேகத்துடன் ஆராயந்து பார்ப்பது எப்போதும் நல்லது. மேற்படி ஐ.நா. போட்டி, மாறி மாறி பொதுமக்கள் இனம்தெரியாதவர்களால் கொல்லப்படுவது, வடகிழக்கில் திடீரென அதிகரித்த இந்திய சாத்திரக்காரர்கள், அவர்கள் பற்றி வந்த ஆக்கங்கள், இந்தியாவில் விமான நிலையங்களில் கைதான இலங்கைத்தமிழர்களின் றோவுடனான சித்திரவதை அனுபங்கள் பற்றிய செய்திகள், தமிழகத்தில் அமைச்சர்கள் விடும் கண்ணீர், மத்திய அரசின் அதிகரித்த ஆர்வம், இந்தனையின் மத்தியிலும் விடுதலைப்புலிகள் மீது தொடரும் தடை, விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமைப்புகளுக்கு இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவு எல்லாம் இந்தியா மீது சந்தேகம் கொள்ள போதுமானவை.

அரசுகள், குறிப்பாக வல்லரசுகள், அது இந்தியாவாக இருக்கலாம், சீனாவாக இருக்கலாம், அல்லது அமெரிக்காவாக இருக்கலாம், அவை தமது சர்வதேச நலங்களை பேண பெரும்பாலும் ஒரே விதமாகவே செயற்படுகின்றன. தமது ஏகாதிபத்திய நலங்களுக்காக ஏனைய நாட்டு மக்களையோ, அல்லது தமது நாட்டு மக்களையோ பலியிட இவை என்றுமே தயங்கியதில்லை. தமது நாட்டு மக்கள் மீது கைவைக்கும் போது, மக்களாட்சி நாடுகளில் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல் பற்றி அக்கறைப்படுவார்கள். அந்நிய நாட்டுமக்கள் மேல் கைவைக்க அவர்கள் பெருமளவில் தயங்குவதில்லை. குறிப்பாக, அவர்களது செயற்பாடுகள் இரகசியமானவையாக இருக்கும்போது, அதிலும் அவர்களது நாட்டு ஊடகங்கள் அரச நிலைப்பாட்டை ஆதரிக்கும் போது அவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.