Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

36 வது சென்னை புத்தகக் கண்காட்சி

Featured Replies

11 ஜனவரி முதல் 23 ஜனவரி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. இம்முறை புதிய இடம். நான் பார்க்கும் மூன்றாவது இடம் இது. பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி, சில ஆண்டுகளுக்குமுன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்குச் சென்றது. இப்போது சென்னை மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் போக்குவரத்தைச் சமாளிக்கமுடியாது என்ற காரணத்தால் அந்த இடம் இருந்தாலும் மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடலில் இம்முறை கண்காட்சி நடக்க உள்ளது.

 

 

இதுவரையில் கிடைத்த இடங்களிலேயே பிரம்மாண்டமான இடம் இதுதான். ஊருக்கு மிக நடுவில், எங்கிருந்துவேண்டுமானாலும் மக்கள் எளிதாக வந்துபோகும் வகையில் கிடைத்துள்ள இடம் ஒருவகையில் வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்.


இம்முறை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான ஸ்டால்கள் உள்ளன. ஆனாலும் சில மாறுதல்கள். ஒரு குறிப்பிட்ட லாபி கடுமையாக வேலை செய்து, முன் கொடுத்துவந்த 400 சதுர அடி ஸ்டால்களின் அளவைக் குறைத்துள்ளது. அதன் காரணமாக இம்முறை 300 சதுர அடி ஸ்டால்தான் உள்ளதிலேயே பெரிய இடம். அதன்பின் 200 சதுர அடி, 100 சதுர அடி ஸ்டால்கள் எப்போதும்போல் உண்டு.

 

  • தொடங்கியவர்

இந்தியன் ஆவது எப்படி?

 

978-81-8493-761-9_b.jpg

 

நான் சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது பவன் வர்மா எழுதிய 'Becoming Indian' என்ற ஆங்கிலப் புத்தகம். இவர் எழுதி சில ஆண்டுகளுக்குமுன் வெளியாகியிருந்த 'Being Indian' என்ற புத்தகத்தையும் படித்துள்ளேன்.

 

 

பவன் வர்மா, இந்திய மனநிலையை ஆராய்கிறார். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்திய கலாசாரம் எவ்வாறு காலனிய காலத்தில் மனத்தளவில் அடிமையானது என்பதை ஆராய்வதுதான் அவருடைய நோக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் பெரும்பகுதியைத் தன்வசப்படுத்தியதும், இப்பகுதியை ஆட்சி செய்யவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதன் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் இந்தியா வந்த பல ஆட்சியாளர்களும் சமஸ்கிருத மொழி, இந்திய கலாசாரம் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.

 

இந்தக் கீழையியல் விரும்பிகள் இந்திய கலாசாரத்தின் தொன்மையை மிகவும் மதித்தனர். இந்தியாவைப் பொருளாதாரரீதியில் சுரண்டி தம்முடைய கம்பெனிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்பதி அடிப்படை நோக்கமாக இருந்தாலும் அதே நேரம் இங்குள்ள கலாசாரத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்று, அதன்மூலம் உலகம் முழுதும் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் முதற்கொண்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று நாம் நம்முடைய தொன்மைகளாக உணர்ந்திருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ இலக்கியங்கள், பகவத் கீதை, சமஸ்கிருத இலக்கணமான அஷ்டாத்யாயீ, இதிகாசங்களான ராமாயண மகாபாரதம் தொடங்கி, தமிழ், தெலுங்கு முதலான எண்ணற்ற மொழிகளுக்கு அகராதிகள், இலக்கணப் புத்தகங்கள், இவற்றில் உள்ள பல்வேறு இலக்கியங்களுக்கான ஆங்கில மொழியாக்கம் என்று பிரிட்டிஷ்காரர்களுடைய கொடை மிக நீண்டது. இன்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரமி எழுத்துகளை மீண்டும் படிக்கச் சொல்லிக்கொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி ஒருவரே. இந்தியாவின் பல்வேறு புராதன கலாசாரச் சின்னங்களான கோவில்கள், சிந்து-சரசுவதி நதிக்கரை நகரங்கள், அசோகரின் தூண்கள் என அனைத்தையும் அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதோடு நமக்குச் சுட்டிக்காட்டியது ஆங்கிலேயர்களே.

 

 

ராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சைப் பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிற்காலத்தில் வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியக் கண்டுபிடிப்புகளும், இலக்கியங்களும், கலைகளும் குப்பைகள், எவற்றுக்கும் உதவாதவை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மெக்காலேயை இதற்குப் பெரிய உதாரணமாகச் சொல்லலாம். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் இந்தியர்கள் எம்மாதிரியான கல்வியைக் கற்கவேண்டும் என்பதை முடிவெடுப்பதில் அவர்

முக்கியமானவராக இருந்தார். வெகு சில நாட்களே அவர் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர் விட்டுச் சென்ற தாக்கம் இன்றளவும் இந்தியர்களைப் பாதித்துவருகிறது.

 

ஆங்கில மொழி, ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்த விழுமியங்கள் என்று தொடங்கிய அந்தக் கல்விமுறை இன்று இந்தியர்களைத் தன் கிடுக்கிப் பிடியில் வைத்துள்ளது. தன் பாரம்பரியம் என்பதே கீழானது, தன் எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களின் பாரம்பரியமும் கலாசாரமும் மொழியுமே உயர்ந்தவை என்ற கருத்து இந்தியர்கள்மீது திணிக்கப்பட்டது; இந்தியர்களும் விரும்பி இதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்தியா என்பது என்ன, இந்தியர் என்பவர் யார், காலனியத்தால் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நபர் மீண்டும் இந்தியன் ஆவது எப்படி என்பதை ஆராய முற்படுகிறது இந்த நூல்.

 

நூலாசிரியர் பவன் வர்மா, தற்போது பூட்டானுக்கான இந்தியத் தூதராக உள்ளார். இந்திய அயல்துறை பணியில் இருப்பவர். சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார்.

இந்தியாவின் சமூக வரலாற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகக் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.

 

 

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 384

விலை ரூ. 250

 

http://www.badriseshadri.in/2013/01/blog-post_7328.html

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவந்துள்ள தீபச்செல்வனின் மூன்று நூல்கள்: 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114843

  • தொடங்கியவர்

A rendezvous for Sri Lankan Tamils

 

16THWRITERS_1331411f.jpg

 

The Chennai Book Fair has become a meeting point for the Sri Lankan Tamil diaspora yearning for a literary and cultural space not available in their homeland – native or adoptive.

 

“It is not possible for me to publish my book on the French Revolution in Tamil in Sri Lanka in the present circumstances. So, I chose to print and publish the book in Chennai,” said K. Vasudevan, a poet and translator working in Paris.


Mr. Vasudevan, settled in Paris 28 years ago, is working as a translator of legal documents. He is visiting the book fair for the first time and he has used the occasion to publish his translation of some 19 century French poetry too. The poetry work will be out on January 18.

Sri Lankan Tamils visit the book fair to buy books for their personal collection and also for book shops they run in their adoptive countries.


M. Sivathasan buys books for Rs. 20 lakh every year for his bookstall Arivalayam in Paris.

 

“I have been visiting the book fair for the last 10 years and I will buy books for Rs 10 lakh. My purchases will not stop with the book fair and I will buy throughout the year for another Rs 10 lakh,” said Mr. Sivathasan.


Similarly, A. Selvam, editor of the Canada-based serious literary magazine Kalam, comes to Chennai quite often as his magazine is being printed here.

 

“I am printing it in Chennai because it is easy for me to send copies to Sri Lanka from here,” said Mr. Selvam, who purchases books from the book fair for his personal collection and also for sale. But he confines himself to serious literature.


For Kandeeban, now living in the United Kingdom, and his father Arasarathinam, a retired postmaster from Sri Lanka, the fair that coincides with Pongal offers a chance to be with his relatives here. Besides, of course, it is an opportunity to buy books.

 

“We can meet and celebrate Pongal with our relatives, which is not possible in the UK,” said Mr Kandeeban. He and his father together buy books for Rs 40,000 at the book fair and find it difficult to transport them to their place.


S. Kannan of Kalachuvadu Pathipagam said many Sri Lankan MPs and Ministers from the provinces regularly visit his stall to buy books. “I have published most of the works of the Sri Lankan Muslim writers and others such as Cheran, Uma Varadarajan and Deepachelvan,” he said.

 

Manushyaputhiran of Uyirmai Pathipagam, however, explained that it was a myth that Sri Lankan Tamils read only serious literature. “As in Tamil Nadu, only a small section of people there read serious literature. Of course there was a demand for political literature so long as the war continued. But the sale came down once the war was over,” he said.


Mr. Sivathasan confirmed Manushyaputhiran’s view, saying many of his customers settled in countries like Germany, the UK and Sweden and other countries were readers of pulp fiction and serious literature attracted not many.

 

“Many prefer self-improvement books and an author like Robin Sharma is a big hit. Political literature is also preferred by many Sri Lankan Tamils,” he said.

 

http://www.thehindu.com/news/states/tamil-nadu/a-rendezvous-for-sri-lankan-tamils/article4310387.ece

நானும் ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்காவது புத்தகம் வாங்கி விடுவேன் :)  போன புத்தக கண்காட்சியில் மனுஷ்யபுத்திரனையும், கவிஞர் நா.முத்துக்குமாரையும் கண்டு அளாவும் வாய்ப்புக் கிடைத்து. ம்ம்ம் இந்த தடவை மிஸ்ஸிங்.

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் போக ஆசை தான் யாராவது ரிக்கெட் போட்டு அடுத்த வருட‌மாவது கூட்டிப் போனால் எவ்வளவு சந்தோச‌மாய் இருக்கும் :lol:   :D
 
சிவதாச‌ன் அங்கே போய் புத்தகங்களை மலிவு விலையில் வேண்டி வந்து இங்கு 3,4 மட‌ங்கு விலை வைத்து விற்கிறார் <_<
 
 
 
  • தொடங்கியவர்
எனக்கும் போக ஆசை தான் யாராவது ரிக்கெட் போட்டு அடுத்த வருட‌மாவது கூட்டிப் போனால் எவ்வளவு சந்தோச‌மாய் இருக்கும் :lol:   :D
 
சிவதாச‌ன் அங்கே போய் புத்தகங்களை மலிவு விலையில் வேண்டி வந்து இங்கு 3,4 மட‌ங்கு விலை வைத்து விற்கிறார் <_<

 

யாரும் இறக்குமதி செய்து அதைவிட மலிவாக விற்கலாம் தானே?

  • தொடங்கியவர்

மௌனத்தின் அலறல்

 

978-81-8493-784-8_b.jpg

இந்தியப் பிரிவினை என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதை வெறும் புள்ளிவிவரங்களாகவும் அரசியல் நிகழ்வுகளாகவும் பலரும் பதிவு செய்துள்ளனர். சிலர் கதைகளாகவும் பதிவு செய்துள்ளனர். குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் போகும் ரயில் அப்படிப்பட்ட ஒரு கதைப் பதிவு. அதனை சென்ற ஆண்டு கிழக்கு பதிப்பகம் தமிழாக்கம் செய்து கொண்டுவந்திருந்தது. இந்தியப் பிரிவினை பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தையும் கிழக்கு முன்னதாகக் கொண்டுவந்திருக்கிறது.

 

ஆனால் ஊர்வஷி புட்டாலியா எழுதியுள்ள புத்தகம் சற்றே வித்தியாசமானது. இது மக்களின் குரல்கள்மூலம் பிரிவினையின்போது நடந்த நிகழ்வுகளை முன்வைக்கிறது. ஊர்வஷி புட்டாலியாவை நான் நன்கு அறிவேன். பெண்ணியவாதி. சிறு பதிப்பாளர். எழுத்திலும் புத்தகப் பதிப்புத் துறையிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவர்.

பிரிவினையின்போது எண்ணற்ற மக்கள் வீடிழந்தனர். கொல்லப்பட்டனர். பெண்கள் முக்கியமாகத் திருடப்பட்டனர். வன்கலவிக்குப்பின் கொல்லப்பட்டனர். பலர் அடிமைகளாக தன்னை நாசம் செய்தவனுடனேயே வசித்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கவேண்டியிருந்தது.

 

ஊர்வஷி இதுபோல பாதிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் பலரைச் சந்தித்து, அவர்களுடைய கதைகளைச் சொல்வதன்மூலம் பிரிவினையின்போது என்ன நடந்தது என்பதை நம்மைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.

இன்று, 2012-13-ல்கூட பல நகரங்களில் பெண்கள் தைரியமாக வெளியே போகமுடிவதில்லை. கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் கூட்டமாகச் சேர்ந்து மிருகங்கள்போல தனியான பெண்கள்மீது விழுந்து தாக்குகிறார்கள்.

 

பிரிவினையின்போது இந்த வெறிகொண்ட கூட்டங்கள் (இரு பக்கத்திலுமே) எப்படி நடந்துகொண்டிருக்கும் என்று நீங்கள் ஓரளவுக்கு ஊகிக்கலாம். உண்மை அதைவிடப் பதைபதைப்பானது.

 

 

மௌனமாகக் கிடந்த அலறல்களை இந்தப் புத்தகம் ஓரளவுக்கு வெளிக்கொணர்கிறது. The Other Side of Silence என்று ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை கே.ஜி. ஜவர்லால் மிக நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்க

பக்கங்கள்: 352

விலை: ரூ. 250/-

ஒரு மாதத்திற்கு முன்பே என்ன புத்தகம் வாங்கவேண்டும் என்று எழுதி வைத்துக் கொண்டு அங்கே போனால், அதைவிட நல்ல புத்தகங்கள் சிலவற்றை பார்க்கும்போது லிஸ்ட் மாறிப் போகும்.

 இணையத்திலோ அல்லது சில பதிப்பகத்திலோ இல்லாத புத்தகங்கள் அங்கு காணக் கிடைக்கும். இதைப் பத்தியெல்லாம் கூட தமிழில் புத்தகம் இருக்கா  என்று வியக்கத் தோன்றும்.  அதைவிட இன்னொரு சிறப்பம்சம் எல்லாப் புத்தகங்களையும் கொஞ்சம் நுனிப்புல் மேயலாம். அப்புறம் கண்டமேனிக்கு எல்லா புத்தகத்தையும் வாங்கி பில் போடும்போது பர்சை தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பது... கண்காட்சிக்கு வெளியே இலக்கிய உரைகள் நடந்து கொண்டிருக்கும்.. இந்தக் கம்பனை புகழ்வதை எப்பத்தான் நிறுத்தப் போகிறார்களோ ??!!  எல்லாம் முடித்து விட்டு வெளியே வந்தால் அப்பா...!! இந்த வண்டிகளின் ஒலிச் சத்தம்.. போக்குவரத்து நெரிசல் .. இது எல்லாமே ரசிக்கத் தோன்றும்...

ஒவ்வொருத்தருக்கும் ஒரு பீலிங் !! :)

அஜீவன் ,காலம் செல்வம் ,ஜெயபாலன் ,தமிழ்நதி இன்னும் பலர் அங்கு நிற்கின்றார்கள் .
சிவதாசன் வாங்கிவந்த புத்தகங்களை அனைத்துலக செயலக ,தலைமை செயலக அங்கத்தர்களுக்கும் கொஞ்சம் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும் .(பாரிஸில் கொலைகள் கொள்ளைகள் குறையும் )

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் ,காலம் செல்வம் ,ஜெயபாலன் ,தமிழ்நதி இன்னும் பலர் அங்கு நிற்கின்றார்கள் .

சிவதாசன் வாங்கிவந்த புத்தகங்களை அனைத்துலக செயலக ,தலைமை செயலக அங்கத்தர்களுக்கும் கொஞ்சம் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும் .(பாரிஸில் கொலைகள் கொள்ளைகள் குறையும் )

 

எல்லாத்திலயும்

எதிலும்

காலைத்தூக்கியே  பழகிய  குணம்............???

 

ஒரு பிள்ளையின் தலையை முன்னும் பின்னும் எடுத்து காரால் மாறி  மாறி மிதித்து சுக்கு நூறாக்கிய  இடம் உங்களுக்கு பக்கத்தில்தான்.

அங்க இதைச்சொல்லியிருக்கலாம்.

  • தொடங்கியவர்

குமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்



978-81-8493-790-9_b.jpg



இந்தியா என்பது ஒற்றை தேசமா இல்லை பல தேசிய இனங்களின் கூட்டா என்ற கேள்வி ஒரு பக்கம் பலராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஓர் அரசியல் கேள்வி. இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விக்கான பதில் முக்கியம். பல மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் பெரும்பாலும் ஒன்றே என்று சிலர் பதில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு சிறு பிராந்தியப் பகுதியிலும்கூட கலாசாரக் கூறுகளில் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். மதம் என்று எடுத்துக்கொண்டாலும் சிறுசிறு வித்தியாசங்களின் தொடங்கி மாபெரும் வேற்றுமைகள் உள்ளன. நான்கு வர்ணங்கள், லட்சம் சாதிகள், வர்ணத்துக்கு வெளியிலான தீண்டத்தகாத சாதிகள், தோல் நிறத்தில் வேறுபாடு, உருவ அமைப்பில் வேறுபாடு என்று கருத்துரீதியாகவும் உடற்கூறுரீதியாகவும் இந்தியாவில் எக்கச்சக்க வேற்றுமைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சிலர்; ஒற்றுமையே கிடையாது - எல்லாம் வேறு வேறு என்று சிலர்.

 

 

வரலாறு, மானுடவியல், சமூகவியல், மொழியியல் துறை நிபுணர்கள் இந்தியாவின் இந்தப் பல்வேறு வண்ணங்களை ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இவர்களால் ஒருசில பெரும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தபடி உள்ளது.


இந்தியாவின் இரு பெரும் இனங்கள் ஆரியர்களும் திராவிடர்களும்; இதில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக பரத கண்டத்துக்குள் நுழைந்து, இங்கு வசித்துவந்த திராவிடர்களுடன் போரிட்டு, அவர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்பது ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஆரியர்கள் வெளுப்புத் தோல் கொண்டவர்கள், உயரம் அதிகமானவர்கள், இந்தோ-ஆரிய குடும்ப மொழியான சமஸ்கிருதம் பேசியவர்கள், குதிரைகளை வைத்திருந்தவர்கள். திராவிடர்கள் குள்ளமானவர்கள், கருத்த நிறத்தவர், தமிழ் அல்லது புரோட்டோ-தமிழ் மொழி பேசியவர்கள்.

 

தமிழர்கள் (திராவிடர்கள்) என்று எடுத்துக்கொண்டால், கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டம் என்று தென்புலத்திலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுமையிலும் வசித்தவர்கள் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலரது கருத்து.

சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரை எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்துவெளிப் பகுதி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

இல்லை இல்லை, சிந்து சரசுவதி நதி நாகரிகம் என்பது முழுமையாக ஆரிய நாகரிகம்; இந்த ஆரியர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தெல்லாம் வரவில்லை; அவர்கள் சரசுவதி நதிக்கரையில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்; சரசுவதி நாகரிகம்தான் வேத நாகரிகம்; அவர்கள்தான் லோத்தால், தோலாவிரா போன்ற நகரங்களை (பின்னர் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவையும்) கட்டினார்கள்; வேத உபநிடதங்களையும் எழுதினார்கள்; சரசுவதி வற்றிப்போனதால் சிந்துவையும் கங்கையையும் நோக்கி நகர்ந்தார்கள் என்கிறார்கள் சிலர்.


இன்று ஆரியர்களைப் பற்றியும் நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை; திராவிடர்களைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனாலும் இவை குறித்த தகவல்கள் நம்முடைய பாடப்புத்தகங்களில் சர்வ சாதாரணமாக, முற்று முழுதான உண்மைகளைப் போல உலா வருகின்றன.

 

இவற்றுக்கிடையில், பா. பிரபாகரன் வலுவான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். முதலில் தமிழர்களின் தோற்றம் குறித்து தற்போது பரவலாக இருக்கும் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய்கிறார். அவை ஏன் தவறானவை என்று தன் கருத்துகளை ஆணித்தரமாக வைக்கிறார்.


குமரிக்கண்டம் என்ற ஒன்று கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கச் சாத்தியமே இல்லை என்று விளக்கியதற்குப் பிறகு, இன்றைய தமிழர்களின் தோற்றுவாய் மத்திய தரைப் பகுதியான (இன்றைய ஈராக்) சுமேரியம்தான் என்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சுமேரிய நாகரிகம் பற்றி விரிவாக விளக்குகிறார். சுமேரியர்கள் சுட்ட களிமண்ணில் எழுதிவைத்துவிட்டுச் சென்ற பல விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இன்று படிக்கமுடியும்; பொருள் புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் இணையத்தில் ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. அவற்றை ஆராய்வதோடு தமிழ் இலக்கியங்களில், முக்கியமாக இறையனார்

 

அகப்பொருள் உரையில் சொல்லியுள்ள விஷயங்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவை, சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவை ஆகியவற்றோடு ஒப்புநோக்கி, இந்த முடிவுக்கு வருகிறார் பிரபாகரன்.

 

சுமேரிய சுடுமண் ஓடுகளில் மெலூஹா, தில்முன் என்று இரு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூரத்தில் உள்ள இந்த நாடுகள் (பகுதிகள்) சுமேரியத்துடன் வர்த்தகத்தின் ஈடுபட்டிருந்தன. மெலூஹாதான் சிந்து சரசுவதி நாகரிகம் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்கின்றனர்.

 

Immortals of Meluha என்னும் தொடர் வெகுஜனக் கதை வெளியாகி இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. தில்முன் என்பது பஹ்ரைன் அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதி என்பதாகச் சிலர் சொல்கின்றனர். ஆனால் பிரபாகரனின் கருத்து, தில்முன் என்பது தமிழகம்தான் என்பது. அதற்கான ஆதாரங்களை பிரபாகரன் முன்வைக்கிறார்.


பிரபாகரனின் கருத்தின்படி, திராவிடர்கள், ஆரியர்கள் என இருவருமே சுமேரியத்திலிருந்து இந்தியா வந்தவர்கள். திராவிடர்கள் நீர்வழியாகக் கப்பல்களில் வந்து இன்றைய கேரளக் கடற்கரையில் இறங்கினர்; ஆரியர்கள் தரை வழியாகப் பல கலப்புகளைச் சந்தித்தபடி வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

 

பிரபாகரன் முன்வைக்கும் கோட்பாட்டை நீங்கள் உங்கள் அரசியல் சமூகக் கருத்துகளுக்கு ஏற்ப ஆதரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய சுவாரசியமான எழுத்தை நிராகரிக்க முடியாது. சுமேரிய நாகரிகம், கிரீட் தீவில் நிலவிய மினோயன் நாகரிகம், தமிழகக் கதையாடல்கள், சிந்துவெளி நாகரிகம், இந்த எல்லா இடங்களிலும் நிலவிய நம்பிக்கைகள், கடவுள்கள், வழக்கங்கள் ஆகியவற்றை மிக சுவாரசியமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பிரபாகரன். அவற்றிலிருந்து அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எப்படி இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தையும் அழகாக முன்வைக்கிறார். நிறைய படங்கள் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.


தொழில்முறை வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லர் பிரபாகரன். கப்பல் போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். லாஜிஸ்டிக்ஸ்: ஓர் எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகத்துக்காக எழுதியவர். தமிழர்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முதலில் இவர் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஒரு புத்தகமாக மாறியுள்ளது.

 

புத்தகத்தை வாங்க

விலை ரூ. 125

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் போக ஆசை தான் யாராவது ரிக்கெட் போட்டு அடுத்த வருட‌மாவது கூட்டிப் போனால் எவ்வளவு சந்தோச‌மாய் இருக்கும் :lol:   :D
 
சிவதாச‌ன் அங்கே போய் புத்தகங்களை மலிவு விலையில் வேண்டி வந்து இங்கு 3,4 மட‌ங்கு விலை வைத்து விற்கிறார் <_<
 
 
 

 

 

வார வருஷம் என்று ஏன் இழுக்கிறீங்கள்???
இந்த வருடத்திற்கு என்ன குறை?
 
எவளவோ செய்யிறம் ஒரு டிக்கட்டை போட  மாட்டமா?
  • தொடங்கியவர்

புத்தகக் காட்சியில் அடியேன்!

 

கத்தியை தீட்டாதே தம்பீ புத்தியை தீட்டு என்று அடிக்கடி யாராவது சொல்வார்கள். அப்படிப்பட்ட புத்தியை கூர் தீட்டுகிற மகத்தான இடமாக புத்தக கண்காட்சி அமைந்திருக்கிது. முதல் நாள் போனபின் மீண்டும் அந்தப்பக்கம் கால் வைக்கிற எண்ணமேயில்லை.

 

பார்க்கிங்குக்கு பத்துரூபா சொளையாக கொடுக்க வேண்டியிருக்கிறது. இருபது ரூபா புத்தகம் வாங்கினால் பத்து பர்சென்ட் தள்ளுபடியில் இரண்டுரூபா மீதி கிடைக்குமா என ஏங்கி ஏங்கி கால்கடுக்க காத்திருந்து போராடி வாங்கி செல்லுகிற என்னைப்போல ஏழைகளுக்கு இந்த சத்யம் தியேட்டர் பார்க்கிங் கட்டண முறைமைகள் எப்படி ஏற்றுக்கொள்ள தக்கதாக அமையும்.


அதுபோக வண்டி நிறுத்துமிடத்திலிருந்து பல பர்லாங்குகள் நடந்துதான் புத்தக கண்காட்சியை அடைய வேண்டிய கொடுமைவேறு. என்னைப்போன்ற இளவட்டங்கள் பரவாயில்லை, முதியவர்கள்தான் பாவம். அவர்களுக்கென்று பஸ்வசதிகள் ஏற்பாடு செய்திருக்கலாம்.

 

அரங்கை அடைவதற்குள் ஆறு மலை ஏழு கடல் நாலைந்து டைனோசர்களையெல்லாம் தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. ஒருவழியாக உள்ளே நுழைந்துவிட்டோமா!

 

நுழைந்தால் எங்கே டிக்கட் வாங்குவது என்று தெரியாமல் ஒரு அரைமணிநேரம் தவித்து. பிறகு ஒருவழியாக டிக்கட்டையும் வாங்கி உள்ளே நுழைந்தால் கண்ணை கட்டி கவர்மென்ட் ஆபீஸில் விட்டதுபோல எந்தபக்கம் இன்சைட் எந்தபக்கம் அவுட்டுசைட் என்பதும் விளங்காமல் தலை கிறுகிறுக்கிறது.


ஒருவழியாக ஏதோ ஒரு இன்னை பிடித்து உள்ளே நுழைந்தால் எப்போதும் போல மனுஷ் உயிர்மை வாசலில் தன்னுடைய ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதில் பிசியாக இருந்தார். தூரத்தில் சாரு நடந்துவருகிறார். அடடா.. ஏதோ களேபரம் நடக்கபோகிறது என்று ஆர்வத்தோடு காத்திருந்தால்.. ஒரு மந்தையில் இரண்டு ஆடுகள்.. அதே சீன்தான். சந்தித்துக்கொண்டன. இரண்டும் சந்தித்தபோது.. நிறைய பேசினர். எத்தியோப்பிய மன்னரும் எத்தியோப்பிய எழுத்தாளரும் சந்தித்து பேசிக்கொண்ட அரிய காட்சியை நண்பர் புகைப்படமாக எடுத்திருக்கிறாராம்.வரலாற்று சிறப்புமிக்க அந்த புகைப்படத்தை விரைவில் வெளியிடுங்க முனீஸ்வரா!

 

ஞானபானுவில் ஞாநி உற்சாகமாக அமர்ந்திருந்தார். இந்த ஆண்டும் பாரதியார் படம் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. கொஞ்சம் விலையை ஏற்றலாம். ஐந்துரூபாய்க்கு வாங்கிப்போய் எந்த காப்பிரைட் உரிமையும் இல்லாமல் சகட்டுமேனிக்கு உபயோகிப்பதையாவது கட்டுபடுத்தலாம். பாவம் பாரதி. இந்த வருடமும் ஞாநி தன் கடையில் வாக்கெடுப்பு நடத்துகிறார்.


கிழக்கு பதிப்பகத்திலும் விகடன் கடையிலும் எப்போதும் போல கூட்டம் கும்மி அடிக்கிறது. பத்ரி என்னை அழைத்து கிழக்கின் புதிய முயற்சியான டேப்லட்களில் புத்தக வெளியீடு குறித்து விளக்கினார். அதுகுறித்து தனியாக எழுதவேண்டும் என குறித்துக்கொண்டேன்.

 

காணும் பொங்கல் அன்று ஜெஜெ என்று கூட்டமாம். மாண்புமிகு அம்மா ஆட்சியில் மக்கள் எவ்வளவு சுபிட்சமாக இருக்கிறார்கள் பாருங்கள். கூட்டம் கும்மினாலும் யாரும் புத்தகமே வாங்குவதில்லையாம். இதற்கு நிச்சயமாக கலைஞர்தான் காரணமாக இருக்கவேண்டும். வாசலில் விற்கிற டெல்லி அப்பளத்தை இரண்டு கடி கடித்துவிட்டு ஓடிவிடுவதாக தகவல். பலரும் போன வருஷம் வாங்கின புக்கையே படிக்கல இதுல இந்தவருஷமுமா.. என்று சலித்துக்கொண்டனர். அதனால் கூட புத்தக விற்பனை குறைந்திருக்கலாம்.


உடுமலை டாட் காமில் ஒரு பேனர் பார்த்தேன். விஷ்ணுபுரம் விருது வென்ற கவிஞர் தேவதேவனின் புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என எழுதப்பட்டிருந்தது. விஷ்ணுபுரம் விருதுக்கு சந்தையில் நல்ல மரியாதைபோல! ஆச்சர்யமாக இருந்தது. பாவம் தேவதேவன். இன்னொரு கடையில் (இந்துபதிப்பகம் என்று நினைக்கிறேன்) உலக வரலாற்றிலேயே ரஜினிகுறித்து வெளியாகும் முதல் கவிதை நூல் என்று பேனர் வைத்து பயமுறுத்தினர்.

 

அஜயன் பாலா தன்னுடைய பதிப்பகத்திற்கென ஒரு ஸ்டாலை முதன்முறையாக எடுத்திருந்தார். சென்ற ஆண்டைப்போல ஆண்குறியை சித்தை மையபுனைவின் என்றெல்லாம் இந்த வருடம் அதிர்ச்சிகர புத்தகங்கள் வெளியிடவில்லை போல.. எம்ஜிஆர் எழுதிய ஒரு புத்தகமும் , அவரே எழுதிய உலக சினிமா இரண்டாம்பாகமும் ஈர்த்தன. வாங்கும் ஆசையிருந்தும் வாங்கவில்லை காசில்லை. அதோடு என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் இருவர் (பிரதாப்,பரணி) சந்தித்து நான் நன்றாக எழுதுவதாக பாராட்டி புகழ்ந்து கால்மணிநேரத்துக்கு மேலாக பேசினர். நான் அடக்கத்தோடு அதையெல்லாம் கேட்டு ரசித்தேன்.


நேற்று கிடைத்த இரண்டு மணிநேரத்தில் இவ்வளவுதான் சாத்தியமானது. இன்றும் போக நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல கர்த்தர் அதற்கு ஏற்பாடு செய்வார் என நம்புவோம். அல்லேலுயா. நேரம் கிடைத்தால் அடியேனின் அனுபவங்கள் இரண்டாம்பாகமும் இதே தளத்தில் வெளியாகலாம்.

 

 

முதல் வரியில் சொன்ன கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு என்கிற வரிகளுக்கிணங்க புத்தக கண்காட்சியில் புத்தியை ஓவராக தீட்டிவிட்டு வெளியே வந்தால்.. வாசலிலேயே கத்திகள் சாணை பிடிக்கிற புதிய மிஷின் அல்லது கருவி ஒன்றை விற்கிறார்கள். விலை இருபது ரூபாய்தான். விற்பவரே டெமோவும் செய்துகாட்டுகிறார். நன்றாக கத்தியை தீட்டுகிறது. கையில் சேஞ்சில்லாததால் நாளைக்கு வாங்கிக்கறேண்ணே.. என்றேன்.. சாவுகிராக்கி என மனதில் நினைத்திருப்பார். நமக்கென்ன!

 

http://www.athishaonline.com/2013/01/blog-post_9809.html

  • கருத்துக்கள உறவுகள்
வார வருஷம் என்று ஏன் இழுக்கிறீங்கள்???
இந்த வருடத்திற்கு என்ன குறை?
 
எவளவோ செய்யிறம் ஒரு டிக்கட்டை போட  மாட்டமா?

 

ஜயோ மருதங்கேணி ரிக்கட் புக் பண்ணி தருவார் என்டால் நான் இந்த வருசமே வெளிக்கிட்டு இருப்பேனே :lol: பரவாயில்லை அடுத்த வருடம் புக் பண்ணித் தாங்கோ :) போறது தான் போறன் முழுமையாக புத்தக வெளியீட்டை பார்த்திட்டு வாறன் <_<

  • கருத்துக்கள உறவுகள்
ஜயோ மருதங்கேணி ரிக்கட் புக் பண்ணி தருவார் என்டால் நான் இந்த வருசமே வெளிக்கிட்டு இருப்பேனே :lol: பரவாயில்லை அடுத்த வருடம் புக் பண்ணித் தாங்கோ :) போறது தான் போறன் முழுமையாக புத்தக வெளியீட்டை பார்த்திட்டு வாறன் <_<

 

வரும்போது எனக்கும் ஏதாவது வாங்கிவாங்கோ...

  • தொடங்கியவர்

சென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்


இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.

  1. கிமு கிபி
  2. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  3. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
  4. பிரபல கொலை வழக்குகள்
  5. மோட்டார் சைக்கிள் டைரி
  6. ராஜராஜ சோழன்
  7. ஸீரோ டிகிரி
  8. ஜாலியா தமிழ் இலக்கணம்
  9. திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
  10. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  11. ஜப்பான்
  12. அக்பர்
  13. சே குவேரா: வேண்டும் விடுதலை
  14. ஹிட்லர்
  15. கோணல் பக்கங்கள் - பாகம் 1
  16. இட்லியாக இருங்கள்
  17. இரண்டாம் உலகப் போர்
  18. முதல் உலகப் போர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.