Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ், ஜப்பான் ஊழியர்கள் அல்ஜீரியாவில் கடத்தல்

Featured Replies

ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில்,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு ஊழியர்களை, மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர்.

 

இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய

பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின் மீது,

பயங்கரவாதிகள் நேற்று, தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்;

 

ஏழு பேர் படுகாயமடைந்தனர். பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, பிபி நிறுவனத்தில் பணிபுரிந்த,பிரான்ஸ் ஊழியர் ஒருவர் மற்றும் ஜப்பானை சேர்ந்த நான்கு பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

 

http://tamil.yahoo.com/ப-ர-ன்ஸ்-ஜப்ப-ன்-ஊழ-யர்கள்-அல்ஜ-173200704.html;_ylt=AnbQnLs7CSKIUd4rZPx2dYf.zNIF;_ylu=X3oDMTRndWlraGlkBG1pdANUb3BTdG9yeSBOZXdzU0YgV29ybGQgTUQEcGtnA2M1OWNiZTQ4LWYzNzUtM2I0ZC04MmJhLWFjNDdjZjgwYzY2MgRwb3MDNgRzZWMDTWVkaWFCTGlzdE1peGVkTFBDQVRlbXAEdmVyAzgyYjY4ODgxLTYwMTAtMTFlMi1hNTlmLWYyYWQ0ODRlMGU2Zg--;_ylg=X3oDMTJwajk4N3JsBGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr4184K6J4K6y4K6V4K6u4K.NBHB0A3NlY3Rpb25z;_ylv=3
...

  • தொடங்கியவர்

 

 

US Condemns Algeria Militant Attack

 

http://www.youtube.com/watch?v=dxi3GeJtIsw

 

 

  • தொடங்கியவர்

மாலியில் தேள் கொட்ட அல்ஜீரியாவில் நெறிக்கட்டியது

 

மாலியில் இன்று பிரான்சிய படைகள் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுத்தன, மாலி நாட்டு படைகள் பிரான்சியருடன் இணைந்து போரிடுகிறார்கள்.

 

மாலியில் பிரான்சியர் தாக்குதலை ஆரம்பிக்க மறுபுறம் அல்ஜீரியாவில் இருந்த மேலை நாடுகளின் ஸ்ரேற் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் சேகரிப்பு நிலையத்தில் பணியாற்றிய 41 ஊழியர்களை அல் குவைடா தொடர்புள்ள இஸ்லாமிய மெகாப் அமைப்பு கடத்தியுள்ளது..

 

பணயக்கைதிகளாக இருக்கும் 41 மேலை நாட்டவரில் 7 அமெரிக்கர், 13 நோர்வேஜியர், 1 பிரான்சியர், பிரிட்டன் பிரஜைகள், ஜப்பானியர்கள் உட்பட பல நாட்டவர்கள் அடங்குகிறார்கள்.

 

மூன்று வாகனங்களில் நன்கு ஆயுதமயப்பட்ட போராளிகள் வந்து இந்தத் தாக்குதல்களை நடாத்தினார்கள், சம்பவம் நடைபெற்ற இடம் லிபிய எல்லையில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் இருக்கிறது.

 

பிரான்ஸ் மாலியில் நடாத்தும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த பணயக்கைதிகள் கடத்தல் நாடகம் அரங்கேறியுள்ளது.

 

பிரான்ஸ் தாக்குதல்களை நிறுத்தினால் இவர்கள் அனைவரும் நின்மதியாக வீடு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

இவர்கள் இதுவரை ஹாலிவூட் திரைப்படங்களில் வராத புதிய வேலையொன்றை செய்துள்ளார்கள் அதுதான் இந்தக் கடத்தலின் உச்சக்கட்டமாகும்.

 

கடத்தப்பட்டவர்களில் ஒரு பகுதியினரை எரிவாயு மையத்தில் இருந்து இடம் மாற்றியுள்ளார்கள் மற்றவர்களின் வயிற்றில் வெடி குண்டு பெல்ற்றுக்களை கட்டியிருக்கிறார்கள்.

 

ஏதாவது மீட்பு முயற்சிகள் நடைபெற்றால் பணயக்கைதிகளே மனித வெடி குண்டுகளாவார்கள் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு நில்லாது எரிவாயு மையத்தை சுற்றி வெடிகுண்டுகளை பொருத்தியுள்ளார்கள், இதற்கான முதற்கட்ட தாக்குதலில் ஒரு பிரிட்டன் பிரஜை, அல்ஜீரியர் ஒருவருமாக இருவர் கொல்லப்பட்டு ஏழுபேர் காயமடைந்துள்ளார்கள்.

 

இந்தக் கடத்தலை மேற்கொண்டவர்கள் அல் குவைடா தொடர்புடைய ஜிகாத் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று மேலைத்தேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் பல நூறு அல்ஜீரிய பிரஜைகள் பிடிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

 

மொத்தம் 20 பேர் இந்தக் கடத்தல் நாடகத்தை செய்துள்ளார்கள், இவர்களை தற்போது அல்ஜீரிய இராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

எக்காரணம் கொண்டும் பயங்கரவாதிகளுடன் அல்ஜீரியா பேச்சுக்களை நடத்தாது என்று தெரிவிக்கப்படுகிறது.

 

பிரிட்டனின் வெளிநாட்டு செயலர் வில்லியம் ஹேக் பிரிட்டன் பிரஜை மரணமடைந்ததை உறுதி செய்ததோடு, பயங்கரவாதிகளை மன்னிக்க முடியாது என்று தெரிவித்தார், மற்றய பணயக் கைதிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றார்.

 

இது இவ்விதமிருக்க சோமாலிய அல் ஸபாப் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்ட பிரான்சிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

 

தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது போல என்பார்கள், மாலியில் பிரான்சிய தேள்கள் கொட்ட

அல்ஜீரியாவில் நெறி கட்டியுள்ளது.

 

http://www.alaikal.com/news/?p=120802

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு தனித்து தொடங்கியதை பலரும் சேர இது வழி  வகுத்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பல உயிரிழப்புகளுடன் கடத்தல் நாடகம் முறியடிக்கப்பட்டததாகவும்

இருபதிற்கு மேற்பட்ட பயணக்கைதிகள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும்

தொலைக்காட்சித் தகவல்கள் கூறுகின்றன.

  • தொடங்கியவர்

மீட்பு நடவடிக்கை பற்றி குழப்பகரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

  • தொடங்கியவர்

At least 30 hostages and 11 members of an al-Qaeda-affiliated group were killed when Algerian forces stormed a desert gas plant to free the captives, Reuters news agency has quoted an Algerian security source as saying. Eight Algerians and seven foreigners, including two British, two Japanese and a French national, were among the dead, the source said. Al Jazeera's Alan Fisher reports.

 

 



  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனது எக்கச்சக்கமாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு தனித்து தொடங்கியதை பலரும் சேர இது வழி  வகுத்துள்ளது

விசுகு, பிரான்சில் அடையார் என்று எம்மவர்கள் கூறுவது அல்ஜீரிய மக்களையா?

  • தொடங்கியவர்

இன்னும் கைதிகள் கட்டுப்பாட்டில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Hostages still held after Sahara assault

 

At least 22 foreign hostages remained unaccounted for on Friday after Algerian forces stormed a desert gas complex to free hundreds of captives taken by Islamist gunmen, an operation in which dozens of the hostages were killed.

 

http://www.torontosun.com/2013/01/18/hostages-still-held-after-sahara-assault

  • தொடங்கியவர்

"அல்ஜீரியாவில் பணயக் கைதிகள் நெருக்கடி நீடிக்கிறது"

 

அல்ஜீரியாவில் சஹாரா பாலைவனம் பகுதியில் உள்ள ஒரு எரிவாயுத் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் டஜன் கணக்கானவர்களை பணயக் கைதியாக பிடித்துவைத்துள்ள நெருக்கடி இன்னும் நீடிக்கவே செய்கிறது என பிரிட்டன் கூறுகிறது.

 

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களில் ஒரு சிலரின் கதி என்ன என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.

 

வியாழனன்று இவர்களை விடுவிக்க அல்ஜீரியத் துருப்புகள் முயன்றபோது பணயக் கைதிகள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர்.
இனிமேலும் கெட்ட செய்திகள் வரலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்துள்ளார்.

 

பிடித்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்க நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று அல்ஜீரிய அதிகாரிகள் வியாழனன்றே அறிவித்திருந்தாலும், ஆயுததாரிகள் பணயக் கைதிகளை பிடித்துவைத்துள்ள அந்த தொழிற்சாலையைச் விசேடப் படையினர் சுற்றி வளைத்துள்ள முற்றுகை நீடிக்கிறது என அல்ஜீரிய அரசு வானொலி கூறுகிறது.

 

அல்ஜீரியாவில் பிடிபட்டுள்ள பணயக் கைதிகள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களோ, அந்தந்த நாடுகள் இந்தச் சம்பவம் தொடர்பிலும் பிடிபட்டுள்ளவர்களின் நிலை தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளன.

 

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபெ, தேர்தல் வெற்றிக்குப் பின் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்த நெருக்கடி காரணமாக ஒத்திப்போட்டுள்ளார்.

 

பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு அல்ஜீரியப் படைகள் மேற்கொண்ட முயற்சி வருந்தத்தக்கது என்று அவர் கூறினார்.

 

பணயக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அதிக முக்கியத்துவம் தந்து இந்த விவகாரத்தை அல்ஜீரியா கையாள வேண்டும் என்று நோர்வே அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 

பிரிட்டனில் பிரதமர் தலைமையில் இது சம்பந்தமாக அவசரக் கூட்டம் நடக்கிறது.


பிரதமர் கெமரன் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விவரம் அளிக்கவுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/01/130118_algeria.shtml

  • கருத்துக்கள உறவுகள்
விசுகு, பிரான்சில் அடையார் என்று எம்மவர்கள் கூறுவது அல்ஜீரிய மக்களையா?

 

ஆம் சிறி

 

அல்ஜீரிய மறோக்க மற்றும் துனிசிய மக்களைத்தான் அடையார் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடையாரின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
அடையாரின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..! :lol:

 

நேற்று  அல்ஜீரிய ராணுவம் பணயக்காறர்களுக்கு எதிராக செய்த அதிரடி நடவடிக்கை இனிமேல்  இது போன்ற  செயல்கள் மூலம் எதையாவது சாதிக்கலாம் என முயலாதீர்கள் என்று சொல்லி  நிற்கிறது.

அதைத்தானே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் இசை?

அதேநேரம் இந்த நடவடிக்கை பிரெஞ்சு அரசுக்கு பெரும் கொடையாக அமைந்துள்ளது.

எனது வேலைத்தளத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாலிக்காறருடன் பேசிவிட்டேன்.

அத்தனைபேரும் பிரான்சினை தெய்வமாக போற்றுகிறார்கள்.

  • தொடங்கியவர்

இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் முன்னர் உருசிய படைகளை அமெரிக்க ஆதரவுடன் அப்கானிஸ்தானில் எதிர்த்தவர்.

  • தொடங்கியவர்

ஆபிரிக்காவில் அல்கைடா என கூறும் அமேரிக்கா + மேற்குலகம்

 

  • தொடங்கியவர்

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.