Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14

Featured Replies

பனங்காய் பணியாரம்

palmyrafruit.jpg

உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .

பனங்களி செய்யிற பக்குவம் :

தேவையான சாமான் :

நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம்.

பக்குவம் :

sdc11230.jpg

நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை மணம் போக காச்சி எடுத்து ஆறவையுங்கோ.

தேவையான சாமானுகள்:

பனங்களி – 1 கப்
சீனி- ¼ கப்
எண்ணெய் – லீட்டர்.
வறுத்த உழுந்துமா – ¼ கப்
உப்பு தேவையான அளவு.

பக்குவம் :

காச்சின பனங்களியோடை உழுத்தம்மா உப்பு சேர்த்து கிளறி விடுங்கோ . தாச்சியிலை எண்ணையை விட்டு நல்லாய் கொதிக்க விடுங்கோ . மாவைக் கையில் எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாக எண்ணெயிலை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கோ.

படிமானம்:

panankaipaniyaram1.jpg

எண்ணை ஒத்தி எடுக்கிற பேப்பரிலை போட்டு எண்ணையை வடியவிட்டு , ஆற வைச்சுப்போட்டு ரெண்டு மூண்டு நாள் கழிய வைச்சி சாப்பிடுங்கோ. சொல்லிவேலையில்லை ஐஞ்சு நிமிசத்திலை பலகாரத்தட்டு உங்களைப் பாத்து சிரிக்கும்.

முன்னைய பக்குவங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92131

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101593

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101652

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101897

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102110

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102279

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102377

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102733

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103010

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103540

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103853

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105065

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108263

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

லாச்சப்பலில் இந்தப் பனங்களி போத்தலில் அடைத்து விக்கிறார்கள்..சிலநாட்களுக்கு முன்னர் வாங்கி வந்து பனங்காய்பனியாரம் சுட்டம்..அந்தமாதிரி இருந்தது...சாப்பிடும்போது ஊர் நினைவுகளும் வந்துபோனது...பனங்காய்பனியரம் சுட்ட எனக்கும் நண்பணுக்கும் இதைப்பற்றிய எந்த அனுபவமும் இருக்கவில்லை...ஒரு அக்காவை கோல் பண்ணி கேட்டு எப்படி செய்வது என்று அவ சொல்ல சொல்ல செய்தம்..ஆனால் அந்தமாதிரி வந்தது..நன்றி கோ அண்ணா பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயித்தை கலக்கிறமாதிரி ஒரு பீலிங்க் இன்னும் வரேல்லை? :mellow:

  • தொடங்கியவர்

எவவா  :o  :o  நல்லது :lol: .

எனக்கு இது ரொம்ப பிடிக்கும். அம்மம்மா அடிக்கடி செய்து தந்திருக்கிறார்.

நான் ஒருசில தடவை பிழிந்திருக்கிறேன். களி பட்டால் கை எல்லாம் வழுக்கிகொண்டிருக்கும்... ஆனால் நான் தண்ணி கூடுதலாக சேர்த்து பிழியிற அதுவும் வடிவா பிழிவதில்லை என்று என்னை பிறகு பிழிய விடுறேல்லை. :D எங்கள் வீட்டில் துணிக்கு பதில் சிறிய கண்ணுள்ள சிறிய அரிதட்டை பயன்படுத்தி வடிப்பார்கள் என்று நினைக்கிறேன். :unsure:  எத்தனை தடவை வடிப்பார்கள் என்று தெரியவில்லை. 2,3 தடவையாக இருக்கலாம். :rolleyes:

ஆனால் பின்னர் என்னென்ன சேர்ப்பார்கள் என்று கவனித்ததில்லை. நான் நினைத்தேன் கோதுமை மா சேர்ப்பார்கள் என்று. :unsure:

முதல் தரம் சுட்டு இறக்கியதும் இரண்டாம் தரம் சுடுவது வர முன்னம் அதை சாப்பிட்டு விடுவோம். :icon_idea: பேச்சு விழ விழ சாப்பிடுற. ஆனால் உண்மையில் ஆறவைத்த பின்னர் தான் மிகவும் ருசியாக இருக்கும். :) ஆனால் சேர்க்கப்படும் மாவின் அளவு குறைந்தால் அல்லது சீனியின் அளவு குறைந்தால் பனங்காய் பணியாரம் கைக்கும். :)

நன்றி பகிர்வுக்கு...
 
மறந்து போன பனங்காய் பணியாரத்தை நினைவுபடுத்திப் போட்டியள். இங்கும் தமிழ் கடைகளில் போத்திலில் அடைத்து பனங்களி விற்கின்றார்கள். வாங்கிச் சுடவேணும்!! என்ன சுவையான பணியாரம்!! ம்ம்........நன்றி கோ!!

பனங்காய் பணியாரம்

உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .

எனக்கு மிகவும் பிடித்த பலகாரம். அடுத்த மாதம் ஊருக்குப் போகும் போது, அம்மாவிடம் செய்து தரச் சொல்லிக் கேட்டாப் போச்சு! :D

நினைவூட்டியமைக்கு  நன்றிகள் கோமகன் அண்ணா. :)

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14 வரை வந்து விட்டதா!

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி பனங்காய் பணியாரம் செய்வேன் கோதுமை மா சேர்த்து. நீங்கள் உளுந்துமா சேர்க்கச்சொல்லிச் சொல்லுறியள்.  அதுதான் யோசனை. பிழைக்கட்டும் பிறகு இருக்கு. :D

  • தொடங்கியவர்
வயித்தை கலக்கிறமாதிரி ஒரு பீலிங்க் இன்னும் வரேல்லை? :mellow:

இதெல்லாம் வெளீலை சொல்லுறதே அண்ணை  :lol: :lol:  ??? பப்பி சேம் :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

நான் பனங்காய்ப் பனியாராம் சாப்பிட்டே எத்தனையோ வருசம்...தமிழ்க் கடைக்குப் போனால் பனங்களி வாங்கி வந்து செய்து சாப்பிட வேண்டும்...செய்முறைக்கு நன்றி கோமகன்...ஊரில் கோதுமை மா போட்டுத் தான் அம்மா செய்ததாக ஞாபகம் நீங்கள் உழுத்தம்மா போட்டது சத்துக்காக் இருக்கும் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தை கலக்கிறமாதிரி ஒரு பீலிங்க் இன்னும் வரேல்லை? :mellow:

சம்பவம் நடந்து சிலபல நாட்களாகிவிட்டது..எதுவும் நடக்கவில்லை..ஆனல் இதை நீங்கள் எழுதி அதை நான் வாசிச்சபின்னர் லேசாக அடிவயுத்துக்குள் ஏதோ செய்வது போல இருக்கு..இப்படியா மனிசற்ற வயித்தை கலக்கிறது.... :D 

எவவா  :o  :o  நல்லது :lol: .

ஒரு நல்ல உதவும் உள்ளம் கொண்ட அக்கா... :D 

முதல் தரம் சுட்டு இறக்கியதும் இரண்டாம் தரம் சுடுவது வர முன்னம் அதை சாப்பிட்டு விடுவோம். :icon_idea: பேச்சு விழ விழ சாப்பிடுற. ஆனால் உண்மையில் ஆறவைத்த பின்னர் தான் மிகவும் ருசியாக இருக்கும். :) ஆனால் சேர்க்கப்படும் மாவின் அளவு குறைந்தால் அல்லது சீனியின் அளவு குறைந்தால் பனங்காய் பணியாரம் கைக்கும். :)

நன்றி பகிர்வுக்கு...

அட நம்ம வீட்டை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்...எங்க வீட்டிலும் நான் சுடசுட அம்மம்மாக்கு பக்கத்தில இருந்து ஒன்றொன்றாய் வாய்க்குள் போட்டுவிடுவன்...சில நேரம் சுடுபணியாரம் வாயிலை சுட்டு ஜயோ அம்மா என்டு அலற ஆறமுன்னம் அகாவிலை சாப்பிட்டால் இப்பிடித்தான் வாயிலை சூடும் எண்டு அம்மம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கன்... :D 

  • தொடங்கியவர்

எனக்கு இது ரொம்ப பிடிக்கும். அம்மம்மா அடிக்கடி செய்து தந்திருக்கிறார்.

நான் ஒருசில தடவை பிழிந்திருக்கிறேன். களி பட்டால் கை எல்லாம் வழுக்கிகொண்டிருக்கும்... ஆனால் நான் தண்ணி கூடுதலாக சேர்த்து பிழியிற அதுவும் வடிவா பிழிவதில்லை என்று என்னை பிறகு பிழிய விடுறேல்லை. :D எங்கள் வீட்டில் துணிக்கு பதில் சிறிய கண்ணுள்ள சிறிய அரிதட்டை பயன்படுத்தி வடிப்பார்கள் என்று நினைக்கிறேன். :unsure:  எத்தனை தடவை வடிப்பார்கள் என்று தெரியவில்லை. 2,3 தடவையாக இருக்கலாம். :rolleyes:

ஆனால் பின்னர் என்னென்ன சேர்ப்பார்கள் என்று கவனித்ததில்லை. நான் நினைத்தேன் கோதுமை மா சேர்ப்பார்கள் என்று. :unsure:

முதல் தரம் சுட்டு இறக்கியதும் இரண்டாம் தரம் சுடுவது வர முன்னம் அதை சாப்பிட்டு விடுவோம். :icon_idea: பேச்சு விழ விழ சாப்பிடுற. ஆனால் உண்மையில் ஆறவைத்த பின்னர் தான் மிகவும் ருசியாக இருக்கும். :) ஆனால் சேர்க்கப்படும் மாவின் அளவு குறைந்தால் அல்லது சீனியின் அளவு குறைந்தால் பனங்காய் பணியாரம் கைக்கும். :)

நன்றி பகிர்வுக்கு...

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் துளசி . பொதுவாக கோதுமை மாவில் பனங்காய்பணியாரம் செய்வதற்கு முக்கிய காரணம் அது மென்மையாக வரும் என்பதற்கே . மாறாக வறுத்த உளுத்தம் மாவில் செய்யும் பொழுது சிறிது கடினமாகவும் , உடலுக்கு சத்துடன் வாசமாகவும் இருக்கும் என்பதற்காக உளுத்தம் மாவைச் சேர்ப்பார்கள் . கோதுமை மாவிலும் செய்யலாம் தடையேதும் இல்லை.

  • தொடங்கியவர்

மறந்து போன பனங்காய் பணியாரத்தை நினைவுபடுத்திப் போட்டியள். இங்கும் தமிழ் கடைகளில் போத்திலில் அடைத்து பனங்களி விற்கின்றார்கள். வாங்கிச் சுடவேணும்!! என்ன சுவையான பணியாரம்!! ம்ம்........நன்றி கோ!!

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அலைமகள் .

எனக்கு மிகவும் பிடித்த பலகாரம். அடுத்த மாதம் ஊருக்குப் போகும் போது, அம்மாவிடம் செய்து தரச் சொல்லிக் கேட்டாப் போச்சு! :D

நினைவூட்டியமைக்கு  நன்றிகள் கோமகன் அண்ணா. :)

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு மல்லிகைவாசம் . உங்களுக்கு எப்படியொரு வாசம் உள்ளதோ அதுபோலவே இதற்கும் ஒரு வாசம் உண்டு . அதுதான் மண்வாசம் :D .

  • தொடங்கியவர்

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14 வரை வந்து விட்டதா!

தொடருங்கள்.

ஓ ........ வந்திட்டுதே  :D . உங்கடை வசதிக்காக எல்லா லிங்கையும் குடுத்திருக்கிறன் கப்பி .  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ........ வந்திட்டுதே  :D . உங்கடை வசதிக்காக எல்லா லிங்கையும் குடுத்திருக்கிறன் கப்பி .  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :) .

நன்றி கோமகன்.

  • தொடங்கியவர்

நான் அடிக்கடி பனங்காய் பணியாரம் செய்வேன் கோதுமை மா சேர்த்து. நீங்கள் உளுந்துமா சேர்க்கச்சொல்லிச் சொல்லுறியள்.  அதுதான் யோசனை. பிழைக்கட்டும் பிறகு இருக்கு. :D

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுமே . நான் துளசிக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும் :) :) .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நான் பனங்காய்ப் பனியாராம் சாப்பிட்டே எத்தனையோ வருசம்...தமிழ்க் கடைக்குப் போனால் பனங்களி வாங்கி வந்து செய்து சாப்பிட வேண்டும்...செய்முறைக்கு நன்றி கோமகன்...ஊரில் கோதுமை மா போட்டுத் தான் அம்மா செய்ததாக ஞாபகம் நீங்கள் உழுத்தம்மா போட்டது சத்துக்காக் இருக்கும் என நினைக்கிறேன்

வாயிலை போட்டால் கரையிறமாதிரி சாப்பிடிறதை விட்டுட்டு , உடம்புக்கு சத்துவாறமாதிரியும் சாப்பிடிறது நல்லது தானே அக்கை . வரவிற்கும் கருத்திற்கும் நன்றி  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.