Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யா(பா)ழ்ப்பாணம்....!!!

Featured Replies

இந்த கவிதையை எழுதியது யாரையும் நோகடிக்கவோ இல்லை புண்படுத்தவோ அல்ல.
தமிழனின் எதிர்காலம் விடைதெரியாத கேள்விகளாலும் ஆச்சரிய குறிகளாலும் நிரம்பிக்கொண்டிருக்கிறது.
நாளைய சந்ததியின் எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் அறியாமலேயே விசங்கள் ஏற்றப்படுகிறது.
தமிழனின் எதிர்காலம் திட்டமிட்டே நாசமாக்கப்படுகிறது.
நாங்கள் ‘எதையெல்லாம்” பெருசுபடுத்தாமல் விட்டு விட்டு போகிறோமோ “அவைதான்” நாளை எங்களுக்கு தலையில் இடியாய் விழும்.
புத்தி சொல்லவும் அறிவுரைகளை அள்ளித்தெளிக்கவும் இலகுவாய் முடியும்.
ஆனால் அதை புரிந்து நடப்பது மிகவும் கடினம்.
என்ன “எங்கட பொடியள்” தான் எண்ட நம்பிக்கையில் தான் எழுதுகிறோம்.
புரிவதும் தெளிவதும் காலத்தின் கட்டாயம்.

அன்புடன்

தமிழ்ப்பொடியன்

வாருங்கள் அண்ணா, யாழுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். :)

நீங்கள் நல்ல நோக்கத்தை கொண்டு கவிதை எழுதியுள்ளீர்கள். ஆனால் சில சொற்பிரயோகங்கள் தான் பல விதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதற்காக கவலைப்படாதீர்கள். அடுத்த தடவை திருத்திக்கொள்ளலாம். :)

 நன்றி துளசி.

 நிச்சயமாக ....

உண்மையில் எந்த சொற்பிரயோகம் எதிர்மறையான விமர்சனக்களை ஏற்படுத்தியது என்று எனக்கு தெரியவில்லை.இந்த கவிதையினை முகப்புத்தகத்தில் நான் பிரசுரித்த போது 250 பேர் அதை தங்களின் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டார்கள்.

எனக்கு எப்போதும் எதிர்மறையான விமர்சனங்களில் அக்கறை அதிகம்.

அவற்றை நாம் தட்டிகழிப்பது சரியல்ல.ஏனெனில் காத்திரமான விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு எழுத்தாளனினதும் கடமை.

வெறும் காழ்ப்பு கவிதை ,

அவரவரை அந்த அந்த வயதில் சந்தோசமாக இருக்க விடுங்கள் .இப்படி இளவயதில் அனுபவிப்பவர்கள் தான் பொறுப்பு வர தங்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுபவர்கள்.எதையும் அனுபவிக்காமல் இருப்பவர்கள் தான் ஐம்பது வயதிற்கு பின்பும் அலைகின்றார்கள் .

கிருசாந்தியின் நினைவு இருந்திருந்தால்  இவர் முதல் கனடா ஓடியிருக்க மாட்டார்

ஐயா அர்ஜுன்

இதில் என்ன காழ்ப்பு இருக்கிறது என்று எனக்கு சத்தியமா தெரியவில்லை.

நாங்கள் யாரையும் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே...!!!

எங்களின் இளம் சமுதாயம் யாழ்ப்பாணத்தில் எவ்வளவு பாரதூரமாக சீரளிந்து போகிறது என்று உங்களுக்கு தெரியாதா? 

முடிந்தால் ஊருக்குப்போய் ஒரு மாதம் இருந்து பாருங்கள்.(எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை)

புலம் பெயர்ந்து வாழும் கோடித்தமிழர் ஒவ்வொருவருக்கும் “கிருசாந்தியின்” நினைவுகள் மட்டுமல்ல பல வலிகளும் இப்போதும் இருக்கிறது.

நாங்கள் யாரும் ஊரைவிட்டு ஓடி வரவில்லை.

மண்ணைப்பிரிந்த வலி அன்னையை இழந்த வலியிலும் கொடிது.

  • தொடங்கியவர்

 மண்ணைப்பிரிந்த வலி அன்னையை இழந்த வலியிலும் கொடிது.

நன்றிகள்!

மண்ணைப்பிரிந்த வலி அன்னையை இழந்த வலியிலும் கொடிது

.

சரியாகச் சொல்லியிருக்கிறாய் நண்பா.

அந்த மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்திலேயே நாட்கள் நகர்கின்றது. :(

யாழுக்கு வந்து கருத்துரைத்ததில் மிக்க சந்தோசம். தொடர்ந்து கருத்தாடலில் பங்கேற்க வேண்டுமென்பது எம் அன்பான கட்டளை.  என்ன ஓகேதானே? :)                  

நெடுக்ஸ் ,

ஒரு குறுகிய வட்டத்திற்குள் மிக குறுகிய மனப்பான்மையுடன் வாழ்பவர் நீங்கள் ,உலகம் மிக பரந்தது விசாலமானது .உங்களது பதிவுகளிலேயே நண்பர்கள் பலர் புலியில் என்று படித்த ஞாபகம் ,நீங்கள் சுழித்து வெளிநாடு ஓடிய ஒருவர் இதை விட வேறு உங்களை பற்றி அறிய எனக்கு தேவையில்லை .

இன்றும் நீங்கள் பல தமிழர்கள் போல் சொகுசான வாழ்க்கையுடன் இருந்து கொண்டு முகமூடியுடன் தேசியம் வளர்க்கும் ஒருவர் .உங்களுக்கு எமது சமூகத்தில் மீது ஒருவித வெறுப்பு இருப்பதை பல பதிவுகளில் பார்த்துள்ளேன் மிக சிறிய வட்டத்தில் வாழ்க்கை நடாத்துவது தான் அதன் காரணம் என்னை பற்றி எழுத உங்களுக்கு ஒரு சின்ன அருகதையும் கிடையாது ,நான் போராட்டத்திலும் நேரே ஈடுபட்டவன் ,அகதிகளுக்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று உதவிசெய்தவன் .

பின் கனடா வந்தும் நண்பர்களுடன் சேர்ந்து யாழ் இந்து பழையமாணவர் ஒன்றியம் உருவாக்கி கணணி ,ஸ்கொலர்ஷிப் ,விளையாட்டு மைதானம் விஸ்தரிப்பு வரை செய்தோம் செய்துகொண்டும் இருக்கின்றோம் .தனிப்பட நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு உபகரணங்கள் வேறு வாங்கி கொடுத்தோம் .சும்மா வெறும் காழ்ப்பில் மற்றவர்களை பார்த்து குரைக்கும் நேரம்  நாட்டில் இருக்கும் எம்மவர்களுக்கு ஏதாவது உதவி செய்தால் கோடி புண்ணியம் .

பின்னூட்டம் கவிதை பற்றியது மட்டுமே ,அவர்களின் அக்கோலம் ஒருநாளுக்குரியதா அல்லது ஒவ்வொரு நாளுமா சிங்களவரா எனக்கு தெரியாது .இதே கோலத்தில் இருந்து இன்று உலகம் முழுக்க மிக பெரிய பதவிகளில் இருக்கும் நண்பர்கள் எனக்கு இருக்கின்றார்கள் .

மீண்டும் மீண்டும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் சற்று வெளியில் வரவும் .உலகம் மிக பரந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதையை எழுதியது யாரையும் நோகடிக்கவோ இல்லை புண்படுத்தவோ அல்ல.

தமிழனின் எதிர்காலம் விடைதெரியாத கேள்விகளாலும் ஆச்சரிய குறிகளாலும் நிரம்பிக்கொண்டிருக்கிறது.

நாளைய சந்ததியின் எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் அறியாமலேயே விசங்கள் ஏற்றப்படுகிறது.

தமிழனின் எதிர்காலம் திட்டமிட்டே நாசமாக்கப்படுகிறது.

நாங்கள் ‘எதையெல்லாம்” பெருசுபடுத்தாமல் விட்டு விட்டு போகிறோமோ “அவைதான்” நாளை எங்களுக்கு தலையில் இடியாய் விழும்.

புத்தி சொல்லவும் அறிவுரைகளை அள்ளித்தெளிக்கவும் இலகுவாய் முடியும்.

ஆனால் அதை புரிந்து நடப்பது மிகவும் கடினம்.

என்ன “எங்கட பொடியள்” தான் எண்ட நம்பிக்கையில் தான் எழுதுகிறோம்.

புரிவதும் தெளிவதும் காலத்தின் கட்டாயம்.

அன்புடன்

தமிழ்ப்பொடியன்

யாழுடன் இணைந்திருங்கள்.தொடர்ந்து கவிதை எழுதுங்கள்,தமிழ்பொடியன்.

ஐயா

எனது எழுத்தும்

கருத்தும்

மக்கள் மீதான கரிசனையும்

எனது மண்ணின் மீதான எதிர்காலம் பற்றிய  கனவும்

இப்படித்தான் இருக்கு.

ஆனால் இவ்வளவையும் தாண்டி அதை விட்டு வெளியேறியவனுக்கு இதைச்சொல்ல அருகதை  இல்லை என்ற பார்வைக்கு எப்பொழுது விருப்பு வாக்குகளும் அதை ஆதரிக்கும் கருத்துக்களும் விழ  ஆரம்பித்ததோ அன்றிலிருந்து எனது நேரத்தை  இதில் செலவிடுவதில் பயன் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனாலும்  உங்கள் போன்ற புதியவர்கள் செலவளிக்கணும்

அதற்கு  எமது ஆதரவு என்றுமிருக்கும்.

 நன்றி துளசி.

 நிச்சயமாக ....

உண்மையில் எந்த சொற்பிரயோகம் எதிர்மறையான விமர்சனக்களை ஏற்படுத்தியது என்று எனக்கு தெரியவில்லை.இந்த கவிதையினை முகப்புத்தகத்தில் நான் பிரசுரித்த போது 250 பேர் அதை தங்களின் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டார்கள்.

எனக்கு எப்போதும் எதிர்மறையான விமர்சனங்களில் அக்கறை அதிகம்.

அவற்றை நாம் தட்டிகழிப்பது சரியல்ல.ஏனெனில் காத்திரமான விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு எழுத்தாளனினதும் கடமை.

அண்ணா, முகநூலில் கவிதையை எத்தனை பேர் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து கவிதை சரியா பிழையா என்ற முடிவுக்கு வர முடியாது. :rolleyes:  உங்களை அதிகளவில் புலம்பெயர் தமிழர்கள் add பண்ணியிருந்திருப்பார்கள். அவர்களில் பலர் பகிர்ந்திருப்பார்கள்.

இந்த கவிதை முற்றுமுழுதாக புலம்பெயர் தேசத்திலுள்ள அண்ணனை நியாயப்படுத்தியும் தாயகத்திலுள்ள தம்பியை பிழைபிடித்தும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மையில் புலம்பெயர் அண்ணனில் உள்ள பிழை...

அதைவிட "உன் காலடிக்கு கீழ் இருப்பது தாயக மண்", "உன் காலடிக்கு கீழ் இன்னொரு கிருசாந்தி புதைக்கப்பட்டிருக்கலாம்" போன்ற வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொள்வதன் மூலம் என் காலடிக்கு கீழ் இவை எதுவும் இல்லை, எனவே நான் இவற்றை எல்லாம் செய்யலாம். எனக்கு ஒரு கடமையும் இல்லை. தனியே உன்னில் தான் முழு கடமையும் உள்ளது. நீ தான் தாயகத்தில் இருக்கிறாய். என்பது போன்ற தோற்றப்பாட்டை உங்கள் கவிதை உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு பந்திக்கும் இப்படி தனித்தனியாக எழுத வெளிக்கிட்டால் பலவற்றை எழுதலாம். :rolleyes:

Edited by துளசி

அண்ணா, முகநூலில் கவிதையை எத்தனை பேர் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து கவிதை சரியா பிழையா என்ற முடிவுக்கு வர முடியாது. :rolleyes:  உங்களை அதிகளவில் புலம்பெயர் தமிழர்கள் add பண்ணியிருந்திருப்பார்கள். அவர்களில் பலர் பகிர்ந்திருப்பார்கள்.

இந்த கவிதை முற்றுமுழுதாக புலம்பெயர் தேசத்திலுள்ள அண்ணனை நியாயப்படுத்தியும் தாயகத்திலுள்ள தம்பியை பிழைபிடித்தும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மையில் புலம்பெயர் அண்ணனில் உள்ள பிழை...

அதைவிட "உன் காலடிக்கு கீழ் இருப்பது தாயக மண்", "உன் காலடிக்கு கீழ் இன்னொரு கிருசாந்தி புதைக்கப்பட்டிருக்கலாம்" போன்ற வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொள்வதன் மூலம் என் காலடிக்கு கீழ் இவை எதுவும் இல்லை, எனவே நான் இவற்றை எல்லாம் செய்யலாம். எனக்கு ஒரு கடமையும் கடமை இல்லை. தனியே உன்னில் தான் முழு கடமையும் உள்ளது. நீ தான் தாயகத்தில் இருக்கிறாய். என்பது போன்ற தோற்றப்பாட்டை உங்கள் கவிதை உருவாக்கியுள்ளது.

வணக்கம் சகோதரி

உங்களுடைய முகநூலில் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்வீர்களா?  :unsure:

என்னுடைய முக நூலில் காத்திரமான ஆக்கங்களைத்தான் பகிர்ந்துகொள்வேன். :rolleyes:

எல்லாத்தையும் போட்டா அது wastebook

 நல்லதைப்போட்டாத்தான் அது facebook.( அடச் சீ..... :D )

இந்த கவிதை யாரையும் பிழை பிடிப்பதற்காகவோ இல்லை யாரையும் நியாயப்படுத்துவதற்காகவோ எழுதப்படவில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.(சப்பா முடியல என்னால.. :( )

1.நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும்.

இந்த வரிகள் யாருக்காக தெரிகிறதா?

கேட்டவுடன் “ஏன் எதுக்கு?” என்று கேட்காமல் காசு அனுப்பும் அண்ணனுக்காக.

இன்று ஊரில தம்பி படிக்கிறானோ ...அல்லது வேலைக்கு போகிறானோ இல்லையோ அவனுக்கு ஒரு mobile இருக்கும். கட்டாயம் motorbike இருக்கும். இது யார் பிழை?

சத்தியமாக சொல்லுங்கோ வெளிநாடுகளில் நேர்மையாய்     உழைப்பவர்களால் ஆடம்பரமாக 

சொகுசாக நிம்மதியாக வாழமுடியுமா?

ஊரில் நடக்கும் நிறைய “கலாச்சார சீர்கேடுகளுக்கு “ மிக முக்கிய காரணம் mobile phones.

ஒரு வீட்டில 4 mobile phones.  நாலுக்கும் குறைஞ்சது மாதம் 3000 படி பாத்தாலும் 12000 ரூபா.

இன்று mobile phone கொம்பனிக்காரர் எல்லாம் யாழ்ப்பாணத்துக்கு படை எடுக்குறாங்கள்.

காரணம் அங்கதான் அவிக்கலாம்.... :(

(இலங்கையில் அதிகூடிய mobile phone பாவனை வடபகுதியில் தானாம். ரொம்ப பெருமை...... :( )

2.அடையாளங்களை தொலைத்துவிட்டு 

அம்மணமாக வாழ்வது இழிவு

அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு 

வாழ்வது உயர்வு...

இந்த வரிகள் தாயகத்தில் வாழும் தம்பிக்கு மட்டுமல்ல அண்ணனுக்கும் பொருந்தும்.

3.உங்கே நீங்கள் போடாத ஆட்டமோ ? என்று கேட்பதும் 

நியாயம்

புலம் பெயர் தேசங்களில் நடக்கும் கூத்துகளை உள்ளடக்கியும் எழுதிருக்கலாமே என்று யாரோ பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். இந்த வரிகளை ஆழமாய்ப் படியுங்கள்.இதைவிட விளக்கமாக எழுதவேண்டுமானால் அதற்கென்று ஒரு கவிதை தனியாகத்தான் எழுதவேண்டும்.( சப்பா எவ்வளவு கஸ்ரம்.....ஸ்ஸ்ஸ்ஸ் :huh: )

தம்பி பொடியா நீ எழுதினது என்ன கம்ப ராமாயணமோ இல்லை பகவத்கீதையோ?

தமிழில தானே எழுதினீர்?

எதுக்கு இத்தனை விளக்க உரையும் வியாக்கியானமும்? :)  :)  :)

ஐயா

எனது எழுத்தும்

கருத்தும்

மக்கள் மீதான கரிசனையும்

எனது மண்ணின் மீதான எதிர்காலம் பற்றிய  கனவும்

இப்படித்தான் இருக்கு.

ஆனால் இவ்வளவையும் தாண்டி அதை விட்டு வெளியேறியவனுக்கு இதைச்சொல்ல அருகதை  இல்லை என்ற பார்வைக்கு எப்பொழுது விருப்பு வாக்குகளும் அதை ஆதரிக்கும் கருத்துக்களும் விழ  ஆரம்பித்ததோ அன்றிலிருந்து எனது நேரத்தை  இதில் செலவிடுவதில் பயன் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஐயா விசுகு

போற்றுவோர் நாலுபேர் இருந்தால் தூற்றுவோர் நாற்பது பேர் இருப்பார்கள்.இதுதான் தமிழ்ச்சமூகம்.

அப்படி “அருகதை” பாத்தால் யாருக்கும் கருத்து சொல்லும் “யோக்கியதை” கிடையாது.

கண்ணதாசனின் பாடல்களும் கவிதைகளும் கருத்துகளும் தத்துவங்களும் காலத்தால் அழியாதவை.

ஆனால் அவர்மீதும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் காறி உமிழ்ந்தவர்களும் கல்லெடுத்து எறிந்தவர்களும் அதிகம்.அவை எல்லாவற்றையும் தாண்டி  தன் சமூகத்தின் மேல் வைத்த கரிசனையில் தான் அந்த கவிஞ்ஞன்

தன் படைப்புகளை தந்தான்.அவன் போகும் போது எதையும் கொண்டு போகவுமில்லை.கோடி கோடியாய் சம்பாதிக்கவுமில்லை.

ஐயா 

உங்களைப்போல மன உளைச்சலுக்கு உள்ளானவர்கள் பலர் மெளனமாய்ப்போனார்கள்.

பல கலைஞர்களை இந்த தமிழ்சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் சாபக்கேடு.

உணர்வு மிக்க கலைஞர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு “பப்பரப்பா.....” என பகட்டுக்கு விலாசம் காட்டும் “கத்துக்குட்டிகளை” எல்லாம் நம் தமிழ் ஊடகங்கள் தூக்கி வைத்திருப்பது கேவலம்.

வாழும் காலம் கொஞ்சம்-ஆதலால்

நன்றே செய்யுங்கள்.

அதை இன்றே செய்யுங்கள்.

அன்புடன்

தமிழ்ப்பொடியன்

ஐயா அர்ஜுன்

இதில் என்ன காழ்ப்பு இருக்கிறது என்று எனக்கு சத்தியமா தெரியவில்லை.

நாங்கள் யாரையும் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே...!!!

எங்களின் இளம் சமுதாயம் யாழ்ப்பாணத்தில் எவ்வளவு பாரதூரமாக சீரளிந்து போகிறது என்று உங்களுக்கு தெரியாதா? 

முடிந்தால் ஊருக்குப்போய் ஒரு மாதம் இருந்து பாருங்கள்.(எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை)

புலம் பெயர்ந்து வாழும் கோடித்தமிழர் ஒவ்வொருவருக்கும் “கிருசாந்தியின்” நினைவுகள் மட்டுமல்ல பல வலிகளும் இப்போதும் இருக்கிறது.

நாங்கள் யாரும் ஊரைவிட்டு ஓடி வரவில்லை.

மண்ணைப்பிரிந்த வலி அன்னையை இழந்த வலியிலும் கொடிது.

நீங்கள் மட்டும் அல்ல பல புலம்பெயர் ஊடகங்களிலும் அடிக்கடி வரும் செய்திகள் இவை ,இங்கு இருக்கும் பெரும் அறியாமை என்னவெனில் தாங்கள் நாட்டை விட்டு புறப்படும் போது நாடு எப்படி இருந்ததோ அப்படி இன்றும் இருக்க வேண்டும்  என்று பலர் நினைக்கின்றார்கள் ,இந்த நாகரீக ,தொழில் நுட்ப மாற்றம் உலகம் முழுக்க ஏற்பட்டது .ஏதோ புலிகள் இல்லாததால் தான் இந்த நிலைமை என சில பன்னாடைகள் இப்படியான கருத்தை தொடர்ந்து பெரிதுபடுத்துக்கின்றன .

தமிழ்நாட்டில் யுத்தம் நடந்ததா அல்லது புலிகள் ஆட்சி முன்பு இருந்ததா? ஆனால் தமிழ் நாடும் இதே மாற்றங்களை கடந்த இருபது வருடங்களில் கொண்டுவந்துதான் இருக்கு .உலகமயமாதலினால் வந்த விளைவு இது ,இதை கூட விளங்கிக்கொள்ளாமல் நாடு கெட்டு போச்சு ,இளைஞர்கள் சீரளிகின்றார்கள் என்று சிலர் கத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இவர்கள் கருத்துக்களை புறம தள்ளி அடுத்த கட்டத்திற்கு உலகம் நகர்ந்துக்கொண்டிருக்கும் இதில் எமது நிலமும் விதிவிலக்கல்ல .எண்பதுகளில் நான் பார்த்த சென்னை இல்லை இப்போ இரண்டாயிரத்து பத்துகளில் நான் பார்க்கும் சென்னை அப்படிதான் யாழ்ப்பாணமும் என்பதை புரிந்து கொள்ளவும்.

சும்மா இணையத்தில் வந்து கலாச்சார சீர்கேடு பற்றி கதை விடுபவர்களை விட நாட்டில் தனது மண்ணில் மக்களில் அக்கறையுடைய பலர் இருக்கின்றார்கள்.

பக்கத்துக்கு வீட்டிற்கு வேலி பொட்டுக்கால் பூந்த எமது கலாச்சார காவலர்கள் இப்படித்தான் மாற்றங்களை ஏற்க முடியாமல் காலம் காலமாக கத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.  

நீங்கள் நல்லா “அடிபட்டு “ இருக்கிறியள் என்பது தெட்டதெளிவா தெரியுது.

சில  பேருக்கு “குதர்க்கம்” மட்டுமே பேச வரும்.அவர்களுக்கு அது பிழை என்று தெரிந்தாலும் விடமாட்டினம். :)

ஒண்டும் மாறக்கூடாது அப்பிடியே இருக்கோணும் எண்டு யாரைய்யா சொன்னார்கள்?

புலிகளுக்கு முதல் ...புலிகளுக்கு பிறகு எண்டு நீங்களாகவே காலத்தினை பிரிக்கிறீர்கள்.

மிக நல்லம்.

கனடாவில வெக்கையெண்டா கடற்கரையில 2 piece ஓட படுத்திருபாள் வெள்ளைக்காரி.

உலகமயமாதல், நாகரீக வளர்ச்சி எண்டு எங்கட ஊரிலையும் உதுகளை செய்யலாமோ?

சில சில விசயங்களை தர்க்க ரீதியாக சொல்ல முடியுமே ஒழிய புரிய வைப்பது கடினம்.

உண்மையா நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாம். நடிக்கிறவனை....?????

 நாகரிக வளர்ச்சி , உலக மயமாதல் இவை எல்லாம் எங்களின் மண்ணுக்கும் பொருந்தும்.

கத்தினாலும் குழறினாலும் காலப்போக்கில் அவை நடந்தே தீரும். இன்னும் 50 வருடங்களுக்கு பிறகு நான் எழுதிய கவிதையை நானே வாசிக்கும் போது சிரிப்புத்தான் வரும்.

நாங்கள் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா என்று தெரியவில்லை.

பிறந்த குழந்தைக்கு மீசை முளைப்பதை பார்க்கும் போதுதான் கவலையாய் இருக்கு.

மீசை முளைப்பது தவறல்ல.அது முளைத்த வேகம்....வயது....தான் கவலையா இருக்கு.

ஐயா அர்ஜுன்

புரிந்தால் நல்லம்.

புரியா விட்டால் இன்னும் நல்லம். :)

பின் குறிப்பு:தனிப்பட்ட யார் மீதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை செயற்பாடுகளை விமர்சித்தும் கேவலமாக கருத்துக்களை பொது இடங்களில் ப்கிர்வது நல்லதல்ல.அது உங்களுக்கும் பொருந்தும்.உங்களை விமர்சிப்பவர்களுக்கும் பொருந்தும்.தயவு செய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.தாழ்மையான வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் மட்டும் அல்ல பல புலம்பெயர் ஊடகங்களிலும் அடிக்கடி வரும் செய்திகள் இவை ,இங்கு இருக்கும் பெரும் அறியாமை என்னவெனில் தாங்கள் நாட்டை விட்டு புறப்படும் போது நாடு எப்படி இருந்ததோ அப்படி இன்றும் இருக்க வேண்டும்  என்று பலர் நினைக்கின்றார்கள் ,இந்த நாகரீக ,தொழில் நுட்ப மாற்றம் உலகம் முழுக்க ஏற்பட்டது .ஏதோ புலிகள் இல்லாததால் தான் இந்த நிலைமை என சில பன்னாடைகள் இப்படியான கருத்தை தொடர்ந்து பெரிதுபடுத்துக்கின்றன .

தமிழ்நாட்டில் யுத்தம் நடந்ததா அல்லது புலிகள் ஆட்சி முன்பு இருந்ததா? ஆனால் தமிழ் நாடும் இதே மாற்றங்களை கடந்த இருபது வருடங்களில் கொண்டுவந்துதான் இருக்கு .உலகமயமாதலினால் வந்த விளைவு இது ,இதை கூட விளங்கிக்கொள்ளாமல் நாடு கெட்டு போச்சு ,இளைஞர்கள் சீரளிகின்றார்கள் என்று சிலர் கத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இவர்கள் கருத்துக்களை புறம தள்ளி அடுத்த கட்டத்திற்கு உலகம் நகர்ந்துக்கொண்டிருக்கும் இதில் எமது நிலமும் விதிவிலக்கல்ல .எண்பதுகளில் நான் பார்த்த சென்னை இல்லை இப்போ இரண்டாயிரத்து பத்துகளில் நான் பார்க்கும் சென்னை அப்படிதான் யாழ்ப்பாணமும் என்பதை புரிந்து கொள்ளவும்.

சும்மா இணையத்தில் வந்து கலாச்சார சீர்கேடு பற்றி கதை விடுபவர்களை விட நாட்டில் தனது மண்ணில் மக்களில் அக்கறையுடைய பலர் இருக்கின்றார்கள்.

பக்கத்துக்கு வீட்டிற்கு வேலி பொட்டுக்கால் பூந்த எமது கலாச்சார காவலர்கள் இப்படித்தான் மாற்றங்களை ஏற்க முடியாமல் காலம் காலமாக கத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.  

மேலே சிவப்பு மையிட்டு குறிப்பிட்டவற்றைத் தவிர்த்து இதுவே எனது கருத்தும் ஆகும்.

பழையவர்கள் ஒழித்து செய்தவற்றை இப்போது நேரடியாகச் செய்கிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசமே தவிர தவறுகளும்,சீர்திருத்தங்களும் என்றுமே தான் நடந்து கொண்டிருக்கின்றன.

என்ன இப்ப "மூத்திரம்" போனாலும் ப்டம் எடுத்து இணையத்தில் போடும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது, அன்று அப்படி ஒரு வசதி இருந்திருப்பின் பல குஞ்சியப்புக்களின் லீலைகள் படமாய் ஓடியிருக்கும்.

அதற்காக நான் இதை ஆதரிக்கவோ, இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ சொல்ல வரவில்லை.. இதற்கான பொறுப்பை புலம்பெயர்சமூகமும் ஏற்றே ஆக வேண்டும், அவர்களை மட்டும் குற்றம் சொல்லி விட்டு எமக்கு நாமே வெள்ளை அடித்துவிட முடியாது.

காசு அனுப்பிய அண்ணன் மட்டுமல்ல, கலர்காட்டிய அண்ணன்,அக்கா,ஜயா,ஆன்டிங்க எல்லாருக்கும் இதில் பங்குண்டு. :icon_idea:

இந்த கவிதையை எழுதியது யாரையும் நோகடிக்கவோ இல்லை புண்படுத்தவோ அல்ல.

தமிழனின் எதிர்காலம் விடைதெரியாத கேள்விகளாலும் ஆச்சரிய குறிகளாலும் நிரம்பிக்கொண்டிருக்கிறது.

நாளைய சந்ததியின் எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் அறியாமலேயே விசங்கள் ஏற்றப்படுகிறது.

தமிழனின் எதிர்காலம் திட்டமிட்டே நாசமாக்கப்படுகிறது.

நாங்கள் ‘எதையெல்லாம்” பெருசுபடுத்தாமல் விட்டு விட்டு போகிறோமோ “அவைதான்” நாளை எங்களுக்கு தலையில் இடியாய் விழும்.

புத்தி சொல்லவும் அறிவுரைகளை அள்ளித்தெளிக்கவும் இலகுவாய் முடியும்.

ஆனால் அதை புரிந்து நடப்பது மிகவும் கடினம்.

என்ன “எங்கட பொடியள்” தான் எண்ட நம்பிக்கையில் தான் எழுதுகிறோம்.

புரிவதும் தெளிவதும் காலத்தின் கட்டாயம்.

அன்புடன்

தமிழ்ப்பொடியன்

தமிழ் பெடி வாங்கோ ஏற்கனவே பேரை பதிஞ்சு போட்டு பேசாமல் இருந்திட்டியள் . நல்ல கவிதையோடை வந்திருக்கிறியள் .  பாராட்டுக்கள் . நீங்கள் கவிதையிலை உண்மை  எழுதிறது எண்டால் கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும் . நான் உண்மையை எழுதிப்போட்டு " துரோகியா " போனன் . சோ நீங்கள் உள்ளதை சொல்லாதையுங்கோ . பொய் சொன்னால் விசலடி தூள் கிளப்பும் . நீங்களும் பெரிய புலத்து தேசியவாதியாய் போடுவியள் . இனி உங்கடை விருப்பம் :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.