Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்

Featured Replies

அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி

இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன.

அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆராய்ந்து, முகாம்களின் தற்போதைய நிலை, அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இதையடுத்து இரு அமைச்சர்களும் மண்டபம் முகாம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வை முடித்து விட்ட அமைச்சர்கள் அதுதொடர்பான பரிந்துரை அறிக்கையை ¬கருணாநிதியிடம் வழங்கியுள்ளனர். அதில் ஏராளமான பரிந்துரைகளை இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 103 அகதிகள் முகாம்களிலும் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாமில் 2,000 வீடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் பாதி வீடுகள் படு மோசமான நிலையில் உள்ளன. தரை எல்லாம் பெயர்ந்துவிட்டது. வெறும் மண் தான் தரை. பல வீடுகளுக்கு கூரையே இல்லை.

மழைக் காலங்களில் இங்கு வசிப்பது மிகவும் கடினம். அதிலும் குழந்தைகள், பெண்களின் நிலைமை தான் மிகவும் மோசம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிப்பறைகள் எல்லாம் உடைந்து, சிதிலமடைந்து கிடக்கின்றன. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் படு மோசமாக உள்ளன. அகதிகள் மிகவும் சிரமமான நிலையில் தான் இங்கு வசித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட ஆதரங்களுடன் கூடிய இந்த அறிக்கையை கருணாநிதியிடம் தந்தனர்.

மேலும் அந்த மக்கள் படும் துன்பங்களை கருணாநிதியிடம் விவரித்தபோது பெரிய கருப்பண் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கியதாகவும், சுப.தங்கவேலன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரே விட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களைப் பார்த்த கருணாநிதியும் கண் கலங்கியுள்ளார்.

மொத்தம் உள்ள 53,000 அகதிகளுக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் அவர்களின் அவல நிலைக்கு முடிவு கட்ட ஒரே வழி என்பதை சுப.தங்கவேலன் உறுதியாகத் தெரிவித்துள்ளா÷ர்.

அதேபோல அகதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவியையும் அதிகரிக்க வேண்டும் என்று பெரியகருப்பண் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது அகதிகளுக்கு மாதம் ரூ. 150 முதல் ரூ. 250 வரை வழங்கப்பட்டு வருகிறது. இது நிச்சயம் அகதிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதாது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கை ஒன்றையும் அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலும் பல அகதிகளின் குழந்தைகள் மிகச் சிறப்பாக படிப்பது தான் அமைச்சர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பள்ளிகளில் பிற மாணவர்களை இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து வருகின்றனர்.

எனவே தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அகதிகள் கோரியுள்ளனர்.

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளித்தால் இவர்கள் மிகச் கல்வியைப் பெற முடியும் என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒரு அகதியின் மகன் பிளஸ் டூவில் 1,130 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் உயர் கல்வி கற்க அவருக்கு வசதி இல்லை. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அரசு உதவியுடன் மருத்துவம் படிக்க அந்த மாணவன் ஆசையாக உள்ளாராம்.

இதுகுறித்து கருணாநிதியிடம் அமைச்சர்கள் விளக்கியபோது ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டாராம். அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் கருணாநிதியிடம் அமைச்சர்கள் கோரினராம்.

15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி விவாதித்து வருகிறார். விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களின் அறிக்கையைப் பார்த்த இலங்கை விஷயத்தில் இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமருடன் கருணாநிதி தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

  • Replies 107
  • Views 10k
  • Created
  • Last Reply

வாழ்க கலைஞர்

வாழ்க தமிழ்

கலைஞருக்கு இந்த வயதில் கூட சினிமாவிற்கு வர ஆசையா?

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது திரு. குருக்காலபோனவனின் கமெண்டைப் பார்த்தால்....

இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அலை ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் சாத்தியமான ஒன்றாக இருந்ததா என்பதை கொஞ்சம் நேர்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.... ம்....ம்... ம்... இதைத்தான் நன்றிக்கெட்டத் தனம் என்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்ச்சி,நன்றியுனர்வு,பனிவ

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பதைப் பார்த்து எமது நிலையை எடுப்போம்.முன்னர் நாம் பலமற்றவர்கள் ,இப்போது பலமுள்ளவர்கள், ஆகவே இதனை அவர்கள் கருசனையில் எடுப்பார்கள் என்று நம்புவோம்,இல்லாது விடின் என்ன நிகழும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

தங்கள் நலங்களைப் பாதுகாக்க வேனும் அவர்கள் சில மாற்றங்களை தமது கொள்கைகளில் ஏற்படுத்த வேண்டும்.பொறுத்திருப்போம்.

மேற்குறிப்பிட்ட செய்தி அவர்கள் அவ்வாறான மாற்றங்களை ஏற்படுதுவதற்கான தயார் படுதலாகக் கூட இருக்கும்.

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

ஜெயலலிதாவே அல்லது வேறு எந்த ஒரு அரசியல்வாதிகள் போல் அல்லாது கலைஞரை ஒரு elderly statesman ஆக legendary figure ஆகத்தான் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கு. ஆனால் அவர் இன்னமும் ஒரு சதாரண அரசியல்வாதியாக சாக்கடை அரசியலில் நாட்டம் கொண்டவராக நடந்து கொள்வதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

  • தொடங்கியவர்

மனசாட்ச்சி,நன்றியுனர்வு,பனிவ

  • தொடங்கியவர்

கலைஞரின் அரசியலோ தமிழ்நாட்டு அரசியலிலோ எனக்கு உரிமையில்லை. ஆனால் ஈழத்தமிழ் அகதிகளை அரசியலாக்கும் பொழுது கொஞ்ச உரிமைவருகிறது.

வணக்கம்.... கலைஞர் அகதிகள் நலனைப் பற்றி ஆட்சியில் இல்லாதபோது முதலைக்கண்ணீர் வடித்திருந்தால் அது தன் கட்சி நலன் என்று எடுத்துக்கொண்டிருக்கலாம்.... வாக்கு வங்கி அரசியல் என்றும் எடுத்துக் கொண்டிருக்கலாம்....

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.... நல்லது செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.... அவருக்கு எந்த லாபமும் இல்லை.... அவரை யாரும் கேள்வி கேட்கப்போவதும் இல்லை.... ஜெயாவை யாராவது கேள்வி கேட்டார்களா? - இதையெல்லாம் கூட சிந்திக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது....

  • தொடங்கியவர்

அப்பு லக்கி திருப்பி உந்த நன்றியுணர்வு முருங்கை மரத்தில் ஏறாதையும். உதைப்பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கப்பட்டிருக்கு. உமக்கும் நல்லாத் தெரியும் எம்ஜிஆர் போல் அல்லாது கலைஞர் எப்பவும் arms length இல் தான் வைக்கப்பட்டிருந்தவர். அதற்கான காரணமும் என்ன வென்று தெரியும்.

எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் என்னவெல்லாமோ நினைத்துக் கொள்ளுங்கள்... எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.... எம்.ஜி.ஆர் நடத்தியது அரசியல்... கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்தபோது அதற்கு எதிராக ஏதாவது செய்யவேண்டுமே என்று புலிகளை ஆதரித்தவர் அவர்....

சென்னையில் புலிகளின் தலைவர் குடும்பத்தை சிறை வைத்து டெல்லியில் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளுமாறு செய்தது யார் என்று எனக்குத் தெரியும்.... ஒப்பந்தங்களில் ஆங்கிலத்தில் இருந்த விஷயங்களை தப்புத் தப்பாக புலித்தலைவருக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் யார் தெரியுமா? பண்ருட்டி ராமச்சந்திரன்.... இப்போது விஜயகாந்த் கட்சியில் இருக்கிறார்.... எம்.ஜி.ஆரின் வலதுகரம்.... இவற்றையெல்லாம் 90க்கு முன்பாக அரசியலை உன்னித்துக் கவனித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.....

  • தொடங்கியவர்

கொஞ்சம் பொறுங்க கலைஞருக்கும் சந்தர்ப்பம் அழியுங்கள்,

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

  • தொடங்கியவர்

வெளிநாடுகளில் தாமும் தமது குடும்பமும் வசதியாக இருக்கும் போது இந்தியாவில் நமது உறவுகள் சென்ற ஆட்சியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். இதனால் பாதிக்கப் படப்போவது அங்கு வாழும் எமது உறவுகளே. தற்போது கலைஞர் ஆட்சியில் அங்குள்ள நமது உறவுகளின் வாழ்க்கையில் மீண்டும் நல்ல நிலமைகள் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அங்குள்ள எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்துமளவிற்கு கருத்துக்கள் எழுதாமல் இருப்பது உத்தமம்.

வழக்கம்போல யதார்த்தத்தை உணர்ந்து விவேகமாக எழுதப்பட்ட கருத்து நண்பர் வசும்புவுடையது....

ஆட்சியில் இருக்கும் போது செய்பவற்றிற்கு அரசியல் காரணங்கள் இருக்காது என்று நீர் நினைப்பது உமது பக்குவக்குறைவு.

நீர்தான் ஜெயலலிதாவை ஏன் கேட்கவில்லை என்று ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒரே தட்டில் வைத்து கலைஞரை தரம் இறக்குறீர்.

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

வாக்கு வங்கி, கட்சி அரசியல் என்பன தான் இன்றும் அவரை கட்டுப்படுத்துகிறது. கலைஞரை இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒருவராக பார்க்க விரும்புவது தவறாக இருக்கலாம்.

இது நிச்சயமாக சரியான கருத்து.... ஒரு தமிழக அரசியல் கட்சித்தலைவராக அவருக்கு பல கடமைகள் உண்டு.... அவரை நம்பி ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்....

கலைஞர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே நீங்கள் விரும்பும் கலைஞரை காண முடியும்....

கலைஞருக்கே நீங்கள் சந்தர்ப்பம் அளிக்கிறீர்களா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? :lol:

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள்.உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம்.தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

  • தொடங்கியவர்

உலகத்திற்கும் ,உங்களுக்கும் நாங்கள் சொல்வது இனியும் எங்களைப் பாவித்து நீங்கள் அரசியல் செய்ய முடியாது என்பதைத் தான். நாங்கள் எமது வழியைப் பார்க்கும் பலம் எங்களிடம் இருக்கிறது. நாம் ஐரோப்பிய யூனியனுக்குக் கூட ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கக் கூடியவர்கள். உலக அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய எமக்கு தமிழ் நாட்டு அரசியல் என்பது சின்ன விடயம். தமிழ் நாட்டு அரசியல் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.யார் எம்மிடம் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதையும் நாம் அறிவோம்.எவரும் எமக்கு அரசியல் பாடம் நடத்த வேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

நாம் எவ்வாறு மற்றவர்கள் எமது உரிமைப் போரட்டத்தில் தலையீடு செய்யாமல் அதனை சிதைக்க திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் படி விரும்புகிறோமோ, அதே போல் நாம் மற்ற எவரது அரசியைலிலும் தலை நுழைய விரும்பவில்லை.

இங்கே நாம் இந்திய அரசிடம் வேண்டுவது எம்மை எமது வழியில் போக விடுங்கள் என்பதயே, நாம் உங்களுடன் போரிடவில்லை,உங்கள் தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை, நாம் எமது தேசிய நலனுக்ககவே போராடுகிறோம்.ஆகவே எம்மைப் பயங்கரவாதிகள் என்பதையோ,மறைவாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவி வழங்குவதயோ, ஒட்டுக் குழுக்களை ரோவின் உதவியுடன் ஏவி விடுவதயோ நிற்பாட்டுங்கள் என்பதையே.புலிகளே தமிழ் ஈழமக்களின் அரசியற் சக்திகள்,அவர்களை உங்களால் சிதைக்க முடியாது.தமிழ் ஈழ இராணுவத்தை எவராலும் அழிக்க முடியாது.அதுவே நிதர்சனம்.

இந்தியாவின் தென் எல்லைகளை நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பின், தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ,பலமான உறவுகளை வெளிப்படயாகக் கட்டி எழுப்புங்கள்.அது தான் இந்தியாவின் வருங்காலத்திற்குச் சிறந்தது.

அதனாலயே இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். இங்கே எவரும் இரங்கவில்லை,இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம்.இதனை நாம் வெகு வலிமையான நிலையில் இருந்தே கூறுகிறோம்.இதனை நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை,ஆனால் உங்கள் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதனடிப்படையிலயே தர்போதய இந்திய அரசியலாளரின் நகர்வுகள் இடம் பெறுகின்றன.மத்திய அரசின் வழி காட்டல் இன்றி கலஞர் இவ்வாறான நகர்வுகளை மேற் கொள்ள மாட்டார்.ஏனெனில் அவருக்கு ஆட்சி நடத்துவதற்கு காங்கிரசின் தயவு அவசியம் அத்தோடு என்றுமே ஆட்சிக் கலைப்பு என்கின்ற ஆயுதம் அவரின் நாற்காலிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே லகிலுக் இந்திய அரசியலைக் கலக்கிக் குடித்த எமக்கு பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பால் என்ன நிகழ்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

நீங்கள் சொன்னதில் நிறைய விஷயம் எனக்கு காமெடியாகத் தான் இருக்கிறது.... இருந்தாலும் இறுக்கமான ஒரு சூழ்நிலை நிலவும் வேளையில் நான் எதையும் எதிர்மறையாக விமர்சிக்க விரும்பவில்லை.... :lol:

தன்னம்பிக்கை இருக்க வேண்டியது தான்... அதற்காக ஓவர் தன்னம்பிக்கை இருந்தால் அது மற்றவர்களின் நகைப்புக்குத் தான் ஆளாகும்.... :lol:

எதை ஓவர் தன்னம்பிக்கை என்கிறீர்கள் லக்கி :roll:

எங்கட தலைவரின் தன்னம்பிக்கை தான் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிற விடுதலை போராட்டமாக மாறி இருக்கு

எமது மக்களின் தன்னம்பிக்கை நாளைக்கு உங்களுக்கே எடுத்துக்காட்டான ஒரு தமிழீழம் அமையும் போது உங்களுக்கு தெரிய வரும் :wink: :P

நீங்கள் நகைத்துக் கொள்ளுங்கள் ,உங்களுக்கு முடிந்ததைத் தானே உங்களால் செய்ய முடியும்.புலிகளின் அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொள்ள விரும்பின் தமிழ் சசியின் பதிவுகளைப் படியுங்கள் கொஞ்சமாவது விளங்கும்.

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

உங்களை நினைத்து புன்முறுவல் செய்வதைத்தவிர வேறொன்றையும் புதிதாக நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. இனி நிகழும் சம்பவங்கள் நான் சொன்னவற்றை உங்களுக்கு உணர்த்தக் கூடும்.

வளமை போல புலனாய்வு அறிக்கை படிக்காமல் பொறுப்பு உணர்ந்து கலைஞர் செயற்பட துணிந்தது போல ஒரு தோற்றப்பாட்டை காட்டி இருக்கிறார்..... அதுக்காக ஒரு வணக்கம்.... அது உண்மை நிலை எண்று இல்லாவிட்டாலும் கலைஞர் முன்வைத்த காலை பின்வைக்காதவர் எண்ற வகையில் அவருக்கு நண்றியையும் சொல்லவேண்டும்....!

கடந்த முறை இந்திய வெளியுறவுச்செயலர் மலேசியாவில் விட்ட செய்திக்குப்பின்னர் பல நிகழ்வுக்கள் சட சடவென நடக்கிண்றது....

முக்கியமாக பாஜக்கவின் அறிக்கை, ஈழ ஆதரவு அமைப்புக்களின் பேரணி, பமகவின் தனியான அறிக்கை, இப்போ கலைஞரின் கூட்டணி தீர்மானம் எண்று அதன் பின்னர் உடனடியான பிரதமரின் கரிசனை... அதை அண்டி முக்கிய எதிர் கட்ச்சியான ஜேவின் கரிசனையான பார்வை எண்று ஒட்டு மொத்த தமிழகமும் ஈழ மக்களுக்காக கவலை கொள்வது மனதில் பால்வார்க்கும் விடயம்தான்...

இன்நடவடிக்கையை இந்திய புலநாய்வுத்துறையின் நாடகம் எண்று நினைக்காமல் உண்மையிலேயே மகிழலாம் காரணம் இம்முறை இந்திய அரசால் எங்களை வஞ்சிக்க முடியாது காரணம் ஈழ தமிழர்களால் இந்தியாவுக்கு நன்மைகள் அடைய வேண்டி இருக்கிறது.... முக்கியமாக அமைதியான சூழள் ஐநா நிரந்தர உறுப்புரிமைக்கு அது முகவும் முக்கியமானது....!

யோவ் லக்கி தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என்ற கதையாக கிடக்கிறது.லக்கி அவன்கள் நாடு வேனும் என்று சன்டை பிடிக்கிறாங்கள்.நீ என்ன என்ற நம்ம அரசிய்ல்வாதி டயல்க் விட்டுட்டு இருக்கிறய்.அவன்களாவ்து சுதந்திர காற்றாய் சுவாசிக்கட்டும்

தன்னம்பிக்கை இருந்ததால் தான் இன்று தமிழர்களிற்கான ஓர் முகவரி கிடைத்துள்ளது.

  • தொடங்கியவர்

தின்று ,குடித்து ,சிரித்து ,மரிப்பது சாதாரணமானவனவரின் அன்றாட  நிகழுவுகள் தானே, வரலாற்றைப் படைப்பவர்களின் இயங்கு தளம் அதனையும் தாண்டியது.

மீண்டும் மீண்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள்.... ரொம்பவும் புரட்சியாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு புரியாத எழுத்துக்களைப் போட்டு நீண்ட கருத்துக்களை வைத்து விட்டால் எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்பதில்லை....

இங்கே வீரம் பேசும் நீங்கள் அனைவருமே வெளிநாடுகளில் நல்ல வேலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள்.... நீங்கள் பேசும் இதே வீரத்தை தமிழக அகதி முகாம்களில் வாடும் தமிழன் பேச முடியாது.... நாளை என்ன என்ற நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருபவன் அவன்....

அவன் அனுபவிக்கும் பசியும், இருண்ட வாழ்வையும் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால் இதுபோல எல்லாம் பொய் வீரம் பேசித் திரிய மாட்டீர்கள்....

தமிழக அகதிகள் வாழ்வில் கொஞ்சமாக வெளிச்சம் தெரியப்போகிறது.... அதுகூட உங்களில் சிலருக்கு பொறுக்காதா?

கொஞ்சமாவது யதார்த்தத்தைப் புரிந்து கதையுங்கள்....

இங்கே எழுதுபவர்கள் யாரும் வானத்தில இருந்து குதிக்கவில்லை லக்கி ஈழத்தில இருந்து நீங்க சொன்ன மாதிரியே கஸ்டப்பட்டுதான் வந்தார்கள்

அதால நீங்க சொல்லுற அகதித் தமிழனது நிலை உங்களை விட எங்களுக்கு நன்றாகவே விளங்கும் இங்குள்ள எல்லாருக்கும் தமிழ் நாட்டிலுள்ள எமது உறவுகள் வாழ்வு சீர்படுவது சந்தோஸம் தான் :wink:

ஆனால் நீங்க தான் எமது யதார்த்தத்தை புரியாமல் எழுதுறீங்களோ எண்டு தோணுது :roll:

ஏங்க... அந்த வயதான தனி மனிசனோட போறிங்க... அவராலாய்... என்னங்க செய்யமுடியும்... அதிகரா நிர்வாக அரசு யந்திரத்தை மீறி ஒன்னும் செய்யமுடியாதுங்க... ஆட்சி மாற்ற புலுடாவை நம்பாதீங்க... வேணுமென்னா குறளுக்கு உரை..பாயும் புலி பண்டராவன்னியன் எழுதினால் ரசிக்கலாமுங்க... அவ்வளவு தானுங்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.