Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இனத்தின் சில மனிதங்கள்.....

Featured Replies

  • தொடங்கியவர்

ஈ.பி.டி.பி ஜாதிக கெல உறுமயவின் உதவியுடன் நாவற்குழியில் சிங்களவர்களுக்கு வீடுகள்

navatkuli-sinhala-house-150x150.jpgயாழ். நகரத்தின் எல்லையான நாவற்குழியில் நிரந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஈ.பி.டி.பி ஆதரவுடனும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் இந்தக் குடியேற்றப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர சிங்களக் குடியிருப்பில் குடியேறியுள்ளவர்களுக்கு காணிகளைச் சொந்தமாக வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைசசர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.  2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்குடன் 54 குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள் திடீரென வந்து யாழ். தொடருந்து நிலையத்தில் தங்கின. ஒரு மாதத்தின் பின்னர் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி நாவற்குழியில் இருந்த தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் அத்துமீறி புகுந்து கொட்டில்கள் அமைத்துத் தங்கினர்.

இந்நிலையில் நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் தமது குடியேற்றத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். நிரந்தர வீடுகளுக்கான கட்டிடங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அங்கு 135 சிங்கள குடும்பங்கள் தங்கியுள்ளன. இவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிரந்தர சிங்களக் குடியேற்றத்தில் விகாரை மற்றும் பொது நோக்கு மண்டபம் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளுக்குரிய அனுமதி பத்திரங்களை தான் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தம்மிடம் உறுதியளித்தார் என்று அந்த மக்களின் சார்பில் பேசும் மல்காந்தி என்ற பெண் தெரிவித்துள்ளார்.navatkuli-sinhala-house.jpg

http://www.thinakkathir.com/?p=47817

இப்பிடிப் பட்ட இன இழி பிறப்புகளுடன் எப்பிடி  கைகோர்ப்பது சாண்டாமருதன் சொல்லுங்கோ 

Edited by யாழ்அன்பு

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply

மக்களுக்காக நியாயத்திற்காக குரல் கொடுத்தால் புலிகளை இழுப்பதே இவர்கள் வேலை.

 உங்களுக்கு டக்ளசை இழுப்பதே வேலையாய் போச்சு. அதுதான் இருபது வருடம் பல தற்கொலைத் தாக்குதலால் கூட கொல்ல முடியவில்லையே ! பேசாம அவர விட்டுட்டு உங்கட தேசீய வேலையை பார்க்கலாமே. அவர் அவர் பாட்டிற்கு மக்களுக்கான அபிவிருத்தியை செய்யட்டும். நீஙகள் வழமை போல பெட்டிசங்களை போட்டு அமர்வுகளை நடத்தி யாகங்களை வளருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய குழுவினரோ பெரிய குழுவினரோ விழைவு பெரியது. டக்ளஸால் ஏற்பட்ட பாதிப்பை விட கருணாவல் எற்பட்ட பாதிப்பே அதிகம். நியாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை.

புலிகள் 30 வருடங்களாக போராடும் போது 30 வருடங்களாக  குழிபறிப்பு செய்தது ஒட்டுக்குழுக்கள்.இதில்  ஈபிஆரெல் எவ்/ டக்ளசின் பங்கு மிக மிக பெரியது.இந்திய இராணுவத்துடன் சேர்ந்து புலிகளை உண்டு இல்லை என்றாக்கி விட்டீர்கள். மக்கள் பட்ட பாடு வார்த்தைகளால் வடிக்க முடியாது.இன்றும் கூட இவர்களின் கொலை வெறி அடங்கவில்லை. ஏன் இன்று வரை இவர்களுக்கு மக்கள் (பெரும்பான்மையோர்) வாக்களிக்கவில்லை என்பதற்கு மக்கள் இவர்கள் மீது கொண்ட ஆத்திரம் தான் காரணம்.சீலையும் சாராயமும் கொடுத்து அன்றாட வாழ்வுக்கு அல்லாடுபவர்களிடம் வாக்கு பெற்றது தான் டக்கிளசின் வரலாறு.

புலிகளால் இனியும் எதுவும் கிடைக்கும் என்று சொல்லுவதே சுத்த தானே ?

புலிகளில் இருந்த சிலர் மக்களின் பணத்தை சுத்திவிட்டார்கள் என்பது வெள்ளிடை மலை.சுத்திய ஆட்களையும் மக்களறிவர்.
 
பிரச்சனை என்னவென்றால் அதை மக்களை சுத்தாத ஆட்கள் வந்து அதை சொல்ல வேண்டும். நீங்களல்ல

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சிறுமிக்கு ? மேற்குலக ஆதரவோடு விடிவு கிடைக்கும் என்றும் இடப்பெயர்வெல்லாம் தமிழீழம் என்ற பிரசவத்துக்கான வலி என்றும் மக்களை கொலைக்களம் நோக்கி நகர்த்தி நகர்த்தி முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கா? இல்லை போருக்கென்று சேர்த்த காசிலும் மாவீரர் தின வருமானத்திலும் சிறைப்பட்ட மக்களுக்கு துளியும் கொடுக்க மறுத்து பட்டிணியால் செத்த சிறுமிகளுக்கா? கொஞ்சம் விபரமாகத்தான் சொல்லுறது

இரு பக்கம் சண்டை பிடிக்கும் போது ஒரு பக்கம் வெல்லும்.மறு பக்கம் தோற்கும். இடையில் அகப்பட்ட மக்கள் இறப்பார்கல். இது உலக மகாயுத்தத்தில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது.நாங்கள்  போரில் தோற்றோம்.ஏன் தோற்றோம் என் ஆராய வேண்டும்.
 
அரசுடன் சேர்த்து இயங்கும் ஒட்டுக்குழுக்கள் அது தான் டக்ளசின் குழு செய்யும் தேசத்துரோகங்கள், சமூக விரோதங்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள். இவை ஒன்றல்ல ஒவ்வொன்றாக பல.

 உங்களுக்கு டக்ளசை இழுப்பதே வேலையாய் போச்சு. அதுதான் இருபது வருடம் பல தற்கொலைத் தாக்குதலால் கூட கொல்ல முடியவில்லையே ! பேசாம அவர விட்டுட்டு உங்கட தேசீய வேலையை பார்க்கலாமே. அவர் அவர் பாட்டிற்கு மக்களுக்கான அபிவிருத்தியை செய்யட்டும். நீஙகள் வழமை போல பெட்டிசங்களை போட்டு அமர்வுகளை நடத்தி யாகங்களை வளருங்கள்.

உந்த சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் செய்த பாவம் உத்தரிச்சு தான் சாக வேண்டும் என்றால் யார் தான் அவரின் விதியை மாற்ற முடியும்?.

  • தொடங்கியவர்

இரு பக்கம் சண்டை பிடிக்கும் போது ஒரு பக்கம் வெல்லும்.மறு பக்கம் தோற்கும். இடையில் அகப்பட்ட மக்கள் இறப்பார்கல். இது உலக மகாயுத்தத்தில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது.நாங்கள்  போரில் தோற்றோம்.ஏன் தோற்றோம் என் ஆராய வேண்டும்.
 
அரசுடன் சேர்த்து இயங்கும் ஒட்டுக்குழுக்கள் அது தான் டக்ளசின் குழு செய்யும் தேசத்துரோகங்கள், சமூக விரோதங்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள். இவை ஒன்றல்ல ஒவ்வொன்றாக பல.

உந்த சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் செய்த பாவம் உத்தரிச்சு தான் சாக வேண்டும் என்றால் யார் தான் அவரின் விதியை மாற்ற முடியும்?.

:lol: நிதர்சனமான உண்மை  :lol:

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்த்துப் பிழைப்பவர்களும், அண்டிப் பிழைப்பவர்களும்தான் தற்போது நம்மினத்தில் அதிகம்.

  • தொடங்கியவர்

அப்பிடியே காட்டிக் கொடுப்பவர்களும் கூட்டிக் கொடுப்பவர்களும் ரொம்ப ரொம்ப அதிகம் சார் 

ஆறு வித்தியாசங்கள் - கண்டுபிடியுங்கள்  :D

jaf_mr1.jpg

இப்படி ஒரு வாழ்வு அதுவும் யாழ்பாணத்தில் கிடைக்கும் என்று கனவிலும் டக்கிளஸ் நினைத்திருக்கமாட்டார்.எல்லாம் அவர்களால் தான்  வந்தது .புலிகளுக்கு யார் நன்றி சொல்லாவிட்டாலும் டக்கிளஸ் நன்றி சொல்லியே ஆகவேண்டும் .

Edited by arjun

நீங்களும் உந்த நிலைக்கு வந்திருக்கலாம்.சேர்ந்த கூட்டம் பிழைச்சுபோச்சு.

இப்படி ஒரு வாழ்வு அதுவும் யாழ்பாணத்தில் கிடைக்கும் என்று கனவிலும் டக்கிளஸ் நினைத்திருக்கமாட்டார்.எல்லாம் அவர்களால் தான்  வந்தது .புலிகளுக்கு யார் நன்றி சொல்லாவிட்டாலும் டக்கிளஸ் நன்றி சொல்லியே ஆகவேண்டும் .

இதைத்தான் கூட்டமைப்பினர் (மக்கள் வீடுகள் இடிப்பு, இராணுவ அடக்குமுறை, புனர்வாழ்வு என்ற பெயரில் ... )என மேற்குலகத்திடம் மற்றும் இந்தியாவிடம் முறையிடும்பொழுதும், கூறுகிறார்கள்.

பிரச்சனை என்னவென்றால் தமிழ் மக்களுக்கும் டக்லஸ் மாதிரி வாழத்தெரியாமையும், முடியாமையும் :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு வாழ்வு அதுவும் யாழ்பாணத்தில் கிடைக்கும் என்று கனவிலும் டக்கிளஸ் நினைத்திருக்கமாட்டார்.எல்லாம் அவர்களால் தான்  வந்தது .புலிகளுக்கு யார் நன்றி சொல்லாவிட்டாலும் டக்கிளஸ் நன்றி சொல்லியே ஆகவேண்டும் .

மனிதப்பிறவியில்

இரண்டுமிருந்தால் தானே நல்லது கெட்டதை அறியமுடியும்

ஆனால் மாமா  மாதிரி  வாழ்வது ரொம்ப  சுலபம்

புலிகள் மாதிரி  வாழ  எல்லோராலும  முடியாது

ஆசியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரம் மிக்க சிங்கள இனம் இதுவரையில் உலகின் முரண்பட்ட நாடுகளை எல்லாம் தனக்குச் சாதகமாக கவனமாகக் கையாள்வதில் வெற்றியுடனே பயணிக்கின்றது.

பெரும் மக்கள் போராட்டத்தை பயங்கரவாதமாக முடிவுக்கு கொண்டுவந்ததில் வெற்றி பெற்றிருக்கின்றது. இவ்வாறான சாதுரியங்களில் ஒரு வீதத்தை தன்னிலும் தமிழர்களால் சாதிக்க முடிந்ததில்லை. இன்நிலையில் சிங்களவர்கள் பயப்படுகின்றார்கள் என்று சொல்வது நகைப்புக்கிடமானது..

நீங்கள் தமிழ் எழுதத் தெரிந்த சிங்களவரா?  :o 

 பிழையில்லாமல் தமிழை எழுதுவதும்  உங்கள் இன, மற்றும்  நாட்டுப் பற்றுகளும் அபாரம்.

 வாசித்து விட்டு ஒரு வார்த்தையாவது சரியாகத்தமிழை  எழுதுவதற்கு பாராட்டாமல் போக முடியவில்லை.  :unsure:

நாட்டில் மக்களும் யுத்தம் இன்றி மிக சந்தோசமாக இருப்பதை பார்க்க இரட்டிப்பு சந்தோசம் .

யுத்தம் இல்லைத்தான். ஆனால் நாடு சீரளிந்து (பலாத்கார்கங்கள், களவு, கொள்ளை, கொலை, போதைப்பொருள், .............) சின்னபின்னமாகிறதே ?

5 வருடத்தின் முன் இப்படியா இருந்தது ?

நீங்கள் தமிழ் எழுதத் தெரிந்த சிங்களவரா?  :o 

 பிழையில்லாமல் தமிழை எழுதுவதும்  உங்கள் இன, மற்றும்  நாட்டுப் பற்றுகளும் அபாரம்.

 வாசித்து விட்டு ஒரு வார்த்தையாவது சரியாகத்தமிழை  எழுதுவதற்கு பாராட்டாமல் போக முடியவில்லை.  :unsure:

பிள்ளைகள் அகதிபணத்தில் அலைந்து கொண்டுதிரிய அமெரிக்காவில் ஒண்டு பிளேன் ஓடுது மற்றது கனடாவில் கப்பலோடுது என்று சொல்லும் தமிழ் வீர பரம்பரையா தாங்கள் .

அன்றிலிருந்து இன்றுவரைஎனக்கும் எங்கோ எதோ உதைத்துக்கொண்டிருக்கு .
  • தொடங்கியவர்

சிங்களவன் தன் இனம் வெல்ல வேண்டும் என்று ஒற்றுமையா முயற்சித்தான் வென்றான். தங்களுக்குள் எவ்வளவு பிளவு இருந்தாலும் தமிழனை வெல்வதில் தமிழனுக்கு உரிமை கொடுக்க கூடாது என்பதில் அனைத்து சிங்கள கட்சிகளும் ஒற்றுமையா இருந்தன வென்றன. ஐ தே கவோ ஜே வி பியோ முதலில் மகிந்தரை ஒழித்து விட்டு பின்னர் புலிகளை / தமிழரை பார்ப்போம் என்று நினைக்கவில்லை ஆனால் நம்ம ஒட்டுக் குழுக்களோ காட்டிக் கொடுக்கும் கூட்டமொ என்ன நினைத்தது?  முதலில் புலிகளை அழிப்போம் முதலில் தமிழ் தேசிய வாதிகளை அழிப்போம் அப்புறம் சிங்களவனுக்கு கால் கழுவி நக்கி பிழைப்போம் என்று நினைத்தது. தமில் இன முன்னேற்றம் தமிழர் விடுதலை பற்றி சிந்திக்க மறுத்தது விளைவு  ஒற்றுமைப் பட்ட சிங்களவன் வென்றான் தமிழன் தோற்றான். இது சிங்கள ராஜ தந்திரம் அல்ல தமிழ்த் துரோகமே  வென்றது. இப்பவும் எம்மினம் எதோ ஒரு வழியில் வெல்லும் விடுதலை பெறும் ஆனால் அதற்கு முன்னம் இந்த எட்டப்பர்கள் , இனத் துரோகிகள் ஒழிந்தால் மட்டுமே சாத்தியம் இல்லை என்றால் தலைவர் பிரபாகரன் வீட்டில் சிங்களவன் குடியேறினாலும் ஆச்சியப் பட முடியாது.  

நீங்கள் தமிழ் எழுதத் தெரிந்த சிங்களவரா?  :o 

 பிழையில்லாமல் தமிழை எழுதுவதும்  உங்கள் இன, மற்றும்  நாட்டுப் பற்றுகளும் அபாரம்.

 வாசித்து விட்டு ஒரு வார்த்தையாவது சரியாகத்தமிழை  எழுதுவதற்கு பாராட்டாமல் போக முடியவில்லை.  :unsure:

நான் வெளிப்படையான உண்மையை எழுதினேன்.

என்னை யாரென்று அடயாளப்படுத்தத இந்த இடத்தில் உங்களிடம் இரண்டு வர்த்தை பாராட்டும் இரண்டு பச்சைப் புள்ளியும் பெறுவதற்காக மோட்டு சிங்களவன் என்றும் தமிழர்களை லெமோரியா சுமேரியா உலகின் மூத்த குடி தலை சிறந்த இனம் என்று எழுதி இன்புற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அறிவுக்கு எட்டிய வரலாற்றில் தொடங்கி இன்றுவரை உலகில் வாழும் அத்துணை தமிழர்களும் சுய அதிகாரமற்ற இரண்டாம்தரப்பிஜைகளும் அடிமைகளுமே. பெருமை பேசுவதும் ஆகா ஓகோ என்று புகழ்வதிலும் உண்மை இருப்பின் இந்த நிலை நிச்சயமாக சாத்தியமில்லை. அடுத்த தலைமுறையையும் வாயால் வடைசுடும் தலைமுறையாக உருவாக்க முடியாது.

ஆனால் நீங்கள் யாழ் மாவட்டத்தில் இருந்து  சிங்கள இனவாத பயங்கரவாத அரசுடன் கைகோத்து தமிழின அழிப்புக்களை ஜெனீவாவரை நியாயப்படுத்தும் டக்ளசை ஆகா ஓகோ என புகழுவதில் மட்டும் ஒரு புத்திசாலித்தமான சமுதாயம் யாழில் உருவாகின்றது என்பது அது உச்ச ஏமாற்று வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் அகதிபணத்தில் அலைந்து கொண்டுதிரிய அமெரிக்காவில் ஒண்டு பிளேன் ஓடுது மற்றது கனடாவில் கப்பலோடுது என்று சொல்லும் தமிழ் வீர பரம்பரையா தாங்கள் .

http://en.wikipedia.org/wiki/Refugee

இவ்வளவு நாடுகளில் இருந்து ஏதோ ஒரு சமயத்தில் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளார்கள். இந்த மக்கள் கூட்டத்தை நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்?

ஆனால் நீங்கள் யாழ் மாவட்டத்தில் இருந்து  சிங்கள இனவாத பயங்கரவாத அரசுடன் கைகோத்து தமிழின அழிப்புக்களை ஜெனீவாவரை நியாயப்படுத்தும் டக்ளசை ஆகா ஓகோ என புகழுவதில் மட்டும் ஒரு புத்திசாலித்தமான சமுதாயம் யாழில் உருவாகின்றது என்பது அது உச்ச ஏமாற்று வேலை.

எல்லோரும் எரியிற வீட்டில் புடுங்குறது வரையில் லாம் என்ற நிலையில் இருப்பவர்கள். என்னைப் பொறுத்தவரை டக்ளஸ்சும் ஒன்றுதான் மாவீரர் தின வருவாயில் இருந்த அவலப்பட்ட மக்களுக்கு சிறு பங்கை கொடுக்க மறுக்கும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்றுதான். மாவீரர் தேசீயம் என்னும் பெயர்களை பயன்படுத்தி குழப்பங்களை விழைவித்து காசுபார்க்கும் பல அமைப்புகள் தனிநபர்களும் ஒன்றுதான். கருணாவும் பிள்ளையானும் கே பி யும் ஒன்றுதான் போருக்காக சேர்த்த பணத்தை ஆட்டையை போட்டவர்களும் ஒன்றுதான். சுய அடயாளம் தேடும் ந க அரசும் ஒன்றுதான்.  இந்த முடிவுக்கு நான் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இவ்வாறான கோடாங்கிக் கூட்டத்துள் யார் செற்பமேனும் மக்கள் அபிவிருத்திக்கு உதவுகின்றார்கள் என்று பார்த்தால் அதில் அமைச்சர் தேவானந்தா முன்னிலையில் நிற்கின்றார். அந்தவகையில் அவரின் மக்கள் சார் அபிவிருத்தியை ஆதரிக்கின்றேன். இரண்டாம் நிலையில் கே பி நிற்கின்றார். இதே காரியத்தை அவரை விட அதிகமாக செய்தால் அவரையும் ஆதரிப்பேன். 

எவனும் யோக்கியன் கிடையாது என்ற உறுதியான தெளிவுடன் அயோக்கியனில் யார் பரவாயில்லை என்பதில் இருந்தே எனது கருத்துக்கள் ஆரம்பிக்கின்றது. நீங்கள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் யோக்கிய சிகாமணிகளாக நினைத்து எனது கருத்துக்களுடன் முரண்பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஒருபோதும் அதை என்னால் ஏற்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிப்படையான உண்மையை எழுதினேன்.

என்னை யாரென்று அடயாளப்படுத்தத இந்த இடத்தில் உங்களிடம் இரண்டு வர்த்தை பாராட்டும் இரண்டு பச்சைப் புள்ளியும் பெறுவதற்காக மோட்டு சிங்களவன் என்றும் தமிழர்களை லெமோரியா சுமேரியா உலகின் மூத்த குடி தலை சிறந்த இனம் என்று எழுதி இன்புற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அறிவுக்கு எட்டிய வரலாற்றில் தொடங்கி இன்றுவரை உலகில் வாழும் அத்துணை தமிழர்களும் சுய அதிகாரமற்ற இரண்டாம்தரப்பிஜைகளும் அடிமைகளுமே. பெருமை பேசுவதும் ஆகா ஓகோ என்று புகழ்வதிலும் உண்மை இருப்பின் இந்த நிலை நிச்சயமாக சாத்தியமில்லை. அடுத்த தலைமுறையையும் வாயால் வடைசுடும் தலைமுறையாக உருவாக்க முடியாது.

2009 க்கு முன் சுகன் எனும் பேரில் ஆகா ஓகோ என புலிகளை புழுகி எழுதி வடை சுட்டதை யாழ் களம் அறியும்.
 
இப்போ சண்டமாருதனாகி டக்ளசுக்கு வடை சுடுவதையும் நாம் அறிவோம்.

எல்லோரும் எரியிற வீட்டில் புடுங்குறது வரையில் லாம் என்ற நிலையில் இருப்பவர்கள். என்னைப் பொறுத்தவரை டக்ளஸ்சும் ஒன்றுதான் மாவீரர் தின வருவாயில் இருந்த அவலப்பட்ட மக்களுக்கு சிறு பங்கை கொடுக்க மறுக்கும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்றுதான். மாவீரர் தேசீயம் என்னும் பெயர்களை பயன்படுத்தி குழப்பங்களை விழைவித்து காசுபார்க்கும் பல அமைப்புகள் தனிநபர்களும் ஒன்றுதான். கருணாவும் பிள்ளையானும் கே பி யும் ஒன்றுதான் போருக்காக சேர்த்த பணத்தை ஆட்டையை போட்டவர்களும் ஒன்றுதான். சுய அடயாளம் தேடும் ந க அரசும் ஒன்றுதான்.  இந்த முடிவுக்கு நான் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இவ்வாறான கோடாங்கிக் கூட்டத்துள் யார் செற்பமேனும் மக்கள் அபிவிருத்திக்கு உதவுகின்றார்கள் என்று பார்த்தால் அதில் அமைச்சர் தேவானந்தா முன்னிலையில் நிற்கின்றார். அந்தவகையில் அவரின் மக்கள் சார் அபிவிருத்தியை ஆதரிக்கின்றேன். இரண்டாம் நிலையில் கே பி நிற்கின்றார். இதே காரியத்தை அவரை விட அதிகமாக செய்தால் அவரையும் ஆதரிப்பேன். 

எவனும் யோக்கியன் கிடையாது என்ற உறுதியான தெளிவுடன் அயோக்கியனில் யார் பரவாயில்லை என்பதில் இருந்தே எனது கருத்துக்கள் ஆரம்பிக்கின்றது. நீங்கள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் யோக்கிய சிகாமணிகளாக நினைத்து எனது கருத்துக்களுடன் முரண்பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஒருபோதும் அதை என்னால் ஏற்கவும் முடியாது.

தாயாக மக்கள் அன்றாட வாழ்விற்கே கடினப்படும் நிலை இன்றும் உள்ளது என்றால் அதற்கும் புலம்பெயர் மக்களின் பணம் தான் தேவை என்றால் முதலில் டக்ளசையும் மகிந்தாவையும் அகற்றி கூட்டமைப்பு சுதந்திர மக்களாட்சியை நடாத்தட்டும்.

2009 க்கு முன் சுகன் எனும் பேரில் ஆகா ஓகோ என புலிகளை புழுகி எழுதி வடை சுட்டதை யாழ் களம் அறியும்.
 
இப்போ சண்டமாருதனாகி டக்ளசுக்கு வடை சுடுவதையும் நாம் அறிவோம்.

புகழ்வது என்பது எங்கேயும் கிடையாது.

-2009 வரை புலிகள் மக்களுக்காக போராடினார்கள் அதனடிப்படையில் அவர்களை ஆதரித்து எழுதினேன்.

- மோசமான அழிவுகளும் அடிமை வாழ்வும் மிஞ்சிய பின் எமக்குள் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது குறித்து எழுதுகின்றேன்

-தற்போதைய நிலையில் மக்கள் இருப்பு ஒன்றே போராட்டம் என்னும் போது மக்கள் அபிவிருத்திகள் பால் யார் முன்னிலையோ அவர்கள் செயல்களை ஆதரித்து எழுதுகின்றேன்

-நாளை இன் நிலையிலும் கருத்திலும் மாற்றம் ஏற்படலாம். காலம் மாறுகின்றது அரசியல் சூழல் மாறுகின்றது எனது கருத்தும் ஆதரவு நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். இது தவிர்க்க முடியாதது. இதில் தவறு என்று எதுவும் நான் உணரவில்லை. கருணா பிள்ளையான் டக்களஸ் போன்ற பல்வேறு முரண்ட்டவகளையும் தமிழர் என்ற வரையறைக்குள் அணுகும் எனக்கு இந்த இனத்துக்காக தியாகம் செய்தவர்கள் குறித்த அணுகுமுறையில் தனித்துவமாக இருக்க முடியும். எதிர்மறைக்கருத்துக்களுக்கும் முரண்பாடுகளுக்கும் எல்லா நேரமும் ஒரே அர்த்தம் இருப்பதில்லை. நோக்கங்கள் சார்ந்து அது வேறுபடும்.

சண்டமாருதன் / அர்யுன்,

நீங்கள் தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களை வசை பாடுகின்றீர்கள். சிங்கள அரசுடன் சேர்ந்து வாழ்வதே வழி என்கிறீர்கள்.

அதேவேளை ஐநா, மனித உரிமை அமைப்புக்கள், அரசுகள், பொதுநலவாய அமைப்பு என பலரும் அங்கு நியாயமான அரசாட்சி நடக்கவில்லை என கூறுகின்றது.

எனவே உங்களின் நோக்கம் சிங்கள இனவழிப்பை மூடி மறைப்பதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.