Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா இம்முறை ஜெனீவாவில் இலங்கையை கைவிடாது! அமைச்சர் அதீத நம்பிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

851716837WDJ.-Senavirathna.jpg

இந்தியா இம்முறை ஜெனீவாவில் இலங்கையை கைவிடாது! அமைச்சர் அதீத நம்பிக்கை

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்தியா சென்றுள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன திருவானந்தபுரம் பகுதியில் இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இலங்கையின் மனித உரிமை விடயத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். 

எனவே இந்தியா இந்த விடயத்தில் மாறுபட்ட இடத்தில் சிந்திக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக அங்கு சிவில் நிர்வாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இலங்கை இந்தியாவிற்கிடையிலான உறவு மேலும் வலுவடைந்து செல்வதாக டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன சுட்டிக் காட்டினார். 

இலங்கையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா எனவும் கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை - இந்தியாவிற்கிடையில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கையில் மின்சார திட்டத்தை ஊக்குவிக்க இந்தியா உதவி புரிவதாகவும் அமைச்சர் செனவிரத்ன தெரிவித்தார். 

கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலாச்சார மற்றும் உணவுத்துறையில் பாரிய ஒற்றுமை காணப்படுவதாக அமைச்சர் இந்திய ஊடகங்களிற்கு குறிப்பிட்டுள்ளார். 

(அத தெரண தமிழ்) 

851716837WDJ.-Senavirathna.jpg

கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலாச்சார மற்றும் உணவுத்துறையில் பாரிய ஒற்றுமை காணப்படுவதாக அமைச்சர் இந்திய ஊடகங்களிற்கு குறிப்பிட்டுள்ளார். 

(அத தெரண தமிழ்) 

பல உணவுப்பண்டங்களிலும், பணம் கொடுத்து பணமல்லாதற்றைபகிர்ந்து கொள்வதிலும் கேரள நமூதிரிகளுக்கும் சிங்கள மந்திரிகளுக்குமிடையயில் நிறயத்தான் ஒற்றுமை காணப்படுகிறது. ஆளை பார்த்தால் நாராயணை பார்த்த மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் மல்லையூரான்.....இதுதான் இவங்களுக்கிடையில் ஒத்துப் போகுது....

உண்மையின் படி பெண்களின் உடை பழைய கச்சையிலிருந்து சட்டைக்கும், நாலுமுழத்திலிருந்து சேலைக்கும்  மாறிய போது கேரளப்பெண்களும், சிங்கள பெண்களும் அந்த முன்னேற்றத்தை மற்றவர்களுடன் சேர்ந்து எட்டிப்பிடிக்கமுயலவில்லை. அதை தவிர அவர்களுக்கிடையில் எந்த ஒற்றுமையும் இல்லை. விஜயன் கொண்டுவந்த பெண்கள் கூட பாண்டிநாட்டரே. கேரளப்பெண்கள் அல்ல. வெள்ளைக்காரர் எழுத்திவைத்திருக்கும் சரித்திரப்படி சிங்கள மன்னர்கள் சேரநாட்டு ஆண்களைத்தான் போர்வீரர்களாக வாடகைக்கு கொண்டு வந்தார்களாம். ஆண்கள் இடமாறும் போது பண்பாடு போவதில்லை. மொழியும் மதமும்தான் போவது. உணவு, உடை போகாது. போர்வீரர்களாக வந்த சேரர் கண்ணகி வழிபாட்டை இலங்கையின் தெற்கிலும் பரப்பி வைத்தார்கள். சமண புத்த சமயங்கள் தென்னிந்தியாவில் இருந்த முருகன், கொற்றவை(கண்ணகி?), கண்ணகி பொன்ற கிராமத்து தெய்வ வழிபாடுகளை முற்றாக அழித்த பின்னர், வைதீக சமயங்களாக புது உருவம் பெற்ற இந்து சமயத்தில் கண்ணகியும், கொற்றவையும் திரும்ப வரவில்லை. முருகன் வலுவிழந்த நிலையில் ஷண்முகனாகவும், ஸ்கந்தனாகவும் வந்தான். பார்வதி புதிதாக வந்தாள். 

 

இலங்கையில் இந்த மாற்றம் குறைவு என்பதால் தமிழ் இடமெங்கும் காளி, கண்ணகி தெருவெங்கும் இருக்கிறார்கள். (அப்பமும், குறுக்குக்கட்டும் யாழ்பாணத்திலிருக்கும் மிக பழைய பண்பாடுகள் - குறுக்கு கட்டில் கிழக்கை பற்றி தெரியாது)  இதுதான் சிங்களவர் நிலையும். எனவே சிங்களவருக்கும் கேரளருக்கும் கலாசர ஒற்றுமை, கேரளர், சிங்களவர் என்ற முறையில் இல்லை. சேரர்-சிங்களவர் என்ற முறையில்த்தான் இருக்கிறது.

Edited by மல்லையூரான்

 

இந்தியா இம்முறை ஜெனீவாவில் இலங்கையை கைவிடாது! அமைச்சர் அதீத நம்பிக்கை

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

 

நான்கு வருடங்களில் அசையாத நம்பிக்கை அசையும் நம்பிக்கை ஆகியுள்ளது

தமிழர்களுக்கு சற்று நம்பிக்கை தருவதாக உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலை.இந்த முறை சிறிலங்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான்(இந்தியா)வைத் தவிர வேறு எந்த நாடுகளும் இல்லை. ஆகவே அமெரிக்காவின் தீர்மானம் வெகு சுலபமாக நிறைவேறும்.ஆக தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் சென்ற தடவைபோல் வெல்லும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவே இந்தியா முயலும்.சிறிலங்கா மேலும் சினமடைந்து சீனவை அரவணைக்கும் இந்தியா வேறுவழியில்லாது தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தை எறு;படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை வரும்,

ஜெயலலிதா இந்தியாவை தனியான தீர்மானம் வைக்க சொல்லியிருக்கிறார்.  அதை வைத்து இந்தியா 13ம் திருத்ததை வைக்கும். அது சரி வந்தால் இலங்கை அதில் குரங்கப்பம் பங்கிடலாம் என்ற நினைவில்.   

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு வேறு வழியில்லை.. :rolleyes:  மகிந்தர் ஒவ்வொருவருடமும் வெருட்டத்தான் போறார்.. :unsure:

இந்தியாவுக்கு வேறு வழியில்லை.. :rolleyes:  மகிந்தர் ஒவ்வொருவருடமும் வெருட்டத்தான் போறார்.. :unsure:

 

அவ்வளவு பெரிய நாட்டில் அதற்கு ஒரு பாதுகாப்பு கொள்கை போட்டுகொடுகத்தக்க தலைவன் மேலே பதவிக்கு வரமுடியவில்லை.

 

சோனியா வீட்டு தோட்டக்காரனுக்கு,சமையல்காரனுக்கு இருக்கும் அதிகாரம் பதுகாப்பு  மந்திரிக்கு அல்ல பிரதமருக்கு கூடக் கிடையாது. இதுதான் ஜனநாயகம் அடையத்தக்க இழி நிலை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.