Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னபூரணி கப்பல்

Featured Replies

82168ecb8d6801c428f91291df5260d8-56.gif

"வல்வை மக்கள் "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பதற்கிணங்க சிறந்த கடலோடிகளாகவும் கப்பற் சொந்தக்காரர்களாகவும் கப்பல் கட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இதை இலங்கையின் முதலாவது பிரதமர் திரு டீ.எஸ். சேனநாயக்காவும் குறிப்பிட்டுள்ளதை மறக்க முடியாது. அன்னபூரணி அம்மாள் வல்வை சுந்தர மேஸ்திரியார் அவர்களால் 1930ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கப்பல் இந்தியாவின் கரையொரப் பட்டினங்களுக்கும், பர்மா, பாகிஸ்தான், இந்தோணேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. உலகத்தை ஒரு சின்ன வள்ளத்தில் உல்லாசப் பிரயாணத்தை மேற்கொண்டு வந்த திரு றொபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தபிரபு அன்னபூரணியை பார்க்க நேர்ந்தது. இவர் பிரபல நாவலாசிரியரும், ஆராச்சியாளரும், கடலோடியுமாவார். அன்னபூரணி உள்ளூர் வேப்பமரத்தைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டது. இந்த பாய்மரக்கப்பலின் அழகிய அமைப்பையும் அதன் உறுதியையும் எந்த நீரோட்டத்திலும் இலகுவாகப் பயணம் செய்யும் தன்மையையும் கண்ட திரு றொபின்சன் இதை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றால் அது காட்சிப் பொருளாகவும் நூதனமாகவும் இருக்குமென விரும்பினார்.

1936ம் ஆண்டு அன்னபூரணியை விலை கொடுத்து வாங்கினார். அவர் இக்கப்பலை வல்வையைச் சேர்ந்த திரு கே. தம்பிப்பிள்ளை என்பவரின் தலைமையில் திரு தா. சபாரத்தினம், திரு ஐ.இரத்தினசாமி திரு சி.சிதம்பரப்பிள்ளை, திரு பூ.சுப்பிரமணியம் ஆகியோரின் உதவியுடன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தார். அமெரிக்கா புறப்படுமுன் முன்பு திரு டபிள்யு.ஏ. றொபின்சன் கொழும்பு வாக்கர்ஸ் ஸ்தாபனத்தாரிடம் பெற்றுக்கொண்ட டீசல் இயந்திரமொன்றை முன்னேற்பாடாக கப்பலுக்குப் பொருந்தினார். அன்னபூரணி என்ற அக்கப்பலுக்கு திரு றொபின்சன் தன் மனைவியின் பெயரான ஷஷபிறிகன் ரைன்புளோரெனஸ் சி றொபின்சன் என்னும் பெயரைச் சூட்டினார். இதைத் தொடர்ந்து அவர்களுடைய வரலாறு படைத்த அந்த நீண்ட பயணம் ஆரம்பமாகியது. திரு டபிள்யு.ஏ.றொபின்சன் அமெரிக்காவில் தங்கி நின்ற பொழுது பிரபல கப்பல் தலைவரான டொனால்ட் எ.மக்கியஸ் என்பவரைச் சந்தித்து அன்னபூரணி அம்மாள் என்ற கப்பல் கிரேக்கத்திற்கு வரும்போது அதைச் சந்திக்கும்படி கூறினார

கொந்தளிப்பும், புயலும் நிறைந்த பயங்கரமான மத்திய தரைக்கடலையும், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் தாண்டும்வரை அக்கப்பலை வழி நடத்துமாறு கூறினார். கப்பல் ஏடனில் இருந்து கிறிக் துறைமுகத்தை வந்தடைந்ததும் கப்டன் திரு மக்குயிஸ் அக்கப்பலில் ஏறிக் கொண்டார்.

கப்டன் மக்குயிஸ் நீராவிக்கப்பலில் 42 வருட அனுபவமுடைய சிறந்த கடலோடியும், குளோசெஸ்ரரின் அதிசிறந்த தலைவர்களில் ஒருவருமாவார். ஆனால் இவர் பாய்க்கப்பலைச் செலுத்துவதில் அனுபவமில்லாதவராகவும் காலநிலை சீராக இருக்கும் பொழுதே எல்லாப் பாய்களையும் விரித்துக் கப்பலைச் செலுத்திய இலங்கை மாலுமிகளைப் பொறுத்தவரையில் பதட்டப்பட்டவராகவும் காணப்பட்டார்.

கப்பல் ஜிபிறேல்ரரில் இருந்து புறப்பட்டதும் அதற்கு அருகாமையில் ஓர் பயங்கரப்புயல் காற்று பெரும் இரைச்சலுடன் கப்பலை அதன் வழியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் இழுத்துச் சென்றது. வல்வையின் ஆறு மாலுமிகளும் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் மீண்டும் ஜிபிறோல்ரரை அடைந்த பொழுது திரும்பவும் பயணத்தைத் தொடர அனுகூலமான காற்றெதுவும் இல்லை. கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததனால் அவர்கள் முழுக்க முழுக்க காற்றின் உதவியையே நாட வேண்டியதாயிற்று. ஓர் அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் அன்னபூரணி அம்மாளில் இருந்த கறுப்பரான இலங்கை மாலுமிகளைக் கண்டவுடன் இனத்துவேச வார்த்தைகளால் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்படி ஒருநிலை இருந்தும் இழுவைக்காக அன்னபூரணி அம்மாளை அந்த அமெரிக்க கப்பலுடன் தொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் ஜிபிறோல்ரர் துறைமுகத்தை விட்டு அதிகதூரம் நீங்க முன்னரே சரக்கு கப்பலின் பின்தளத்திற்கு அண்மையில் உள்ள கயிறு துண்டாயிற்று. இரண்டையும் இணைத்திருந்த தொடுவைக் கயிறு வேண்டும் என்றே வெட்டப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து "புளோரன் சி றோபின்சன்" என்ற இரட்டைப் பாய்மரக்கப்பல் அங்கு வீசிய வர்ததகக் காற்றின் உதவியுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிது காலம் ஓடியது. இதே கால நிலை அவர்களுக்கு எவ்வளவு காலம் தான் இருக்க முடியும்?

திரும்பவும் நடுச்சமுத்திரத்தில் காற்று அவர்களை கைவிட்டதனால் எத்தனை நாட்களை அவர்கள் வீணே கழிக்க வேண்டியிருந்தது. கப்பலில் வைக்கப்பட்டிருந்த உலோக பீப்பாக்களில் சேமித்து வைத்த நீர் கெட்டு குடிப்பதற்கு கூடாததாக இருந்தது. உணவு முடிந்து அங்கே பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. ஓரளவு காற்றின் வேகம் குறைய ஆரம்பித்தது. நாற்பத்தியொரு நாட்களின் பின் புளோரன்சி றொபின்சன் என்னும் கப்பல் கெமில்ரனை வந்தடைந்த பொழுது அவர்களுக்கு அங்கு என்றுமே பார்க்க முடியாத வரவேற்பு காத்து இருந்தது. ஒன்பது நாட்களின் பின் அவர்கள் குளோசெஸ்ரர் நோக்கி பயணமானார்கள். அப்பொழுது இதமான

காற்று வீசிக் கொண்டிருந்தது. இக்காற்று முன்பு அசமந்த நிலையில் கழித்த நாட்களை ஈடுசெய்தது. ஆனால் கடல் மட்டம் வரைக்கும் கீழே தொங்கிக் கொண்டிருந்த மூடுபுகார் படலம் ஒரு மாபெரும் ஆபத்தைக் கொண்டு வந்தது. இப்புகார் மண்டலத்தின் காரணமாக பிரிகன்ரைன் விரைந்து வந்து கொண்டிருந்த போது வேறு ஒரு பாரிய கப்பலுடன் மோதுண்டு நொருங்கக் கூடிய நிலை ஏற்பட்டது. காப்டன் மாக்குயிஸ் தனது ஊது குழலினால் உரத்த சத்தமாக ஊளையிட்டார். கப்பலின் தளத்தில் நின்ற குழுவினர் தம்மால் இயன்றவரைக்கும் தமது பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கத்தினார்கள். ஆனால் எதையுமே உணராhர் போல் அப்பாரிய கப்பல் விரைந்து வந்து கொண்டிருந்தது. அவர்களால் வேகமாக வந்து கொண்டிருக்கும் அப்பாரிய கப்பலின் உயரமான பாய்மரங்களையும் அதன் பக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அப்படி இருந்தும் அந்தவேளையில் அவர்கள் ஒன்றும் புரியாத அவநிலையில் தவித்தனர். இரண்டாவது தடவையாக மீண்டும் இலங்கைக் குழுவினர் ஆண்டவனைப் பிரார்த்தித்தனர். கண் இமைக்கும் சில அங்குல இடைவெளியில் அக்கப்பல் விலகிச் சென்றதால் தெய்வாதீனமாக பிறிகன்ரைன் மயிரிழையில் தப்பியது. இப்படிக் கடல் கொந்தளிப்பு இருந்தும் எத்தனையோ அபாயங்களில் இருந்தும் தப்பிய பிரிகன்ரைன் புளோரன்ஸ்சி றொபின்சன் அமெரிக்காவின் பிரசித்தி வாய்ந்த குளோசெஸ்ரர் துறைமுகத்தை அடைந்தது.

திரு வில்லியம் அல்பேட் றொபின்சன் கப்பலில் வந்த இக்குழுவை அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை மிக உயர்ந்த கட்டிடத்தில் அமைந்துள்ள சென்மொறிஸ் ஒன்தி பார்க் என்ற நவீன வசதிகள் படைத்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். அங்கு அவர்கள் அரச விருந்தினர்களாகவே கௌரவிக்கப்பட்டனர்.

உள்ளூர் மரமான வேப்பமரத்தில் செய்யப்பட்ட அக்கப்பல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இரவென்றும் பகலென்றும் பாராது அதில் ஏறிப் பார்வையிட்ட வண்ணமே இருந்தனர். சில சமயங்கிளல் வேட்டியுடுத்த மாலுமிகள் தியானத்திலும் ஆழ்ந்திருப்பதை அவதானித்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். சில நாட்களின் பின்னர் வல்வை மாலுமிகள் அங்கிருந்து நீராவிக்கப்பலில் சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்பினார்கள்.

1938 ஆகஸ்ட் 2ம் திகதி வெளியாகிய அமெரிக்க தினசரியான போஸ்ரன் குளோப் பத்திரிகையின் முற்பக்கச் செய்தியாக அதன் நிருபர் ஏ.பரோஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்.

ஆர்வம்மிக்க மாலுமிகள் 89அடி நீளமுள்ள புளோறன் சி. றொபின்சன் என்னும் கப்பலில் இன்று வந்து பொஸ்ரன் துறைமுகத்தை அடைந்தனர். இந்த ரகக்கப்பலில் பாய்களின் உதவியுடன் மாத்திரம் மேற்கு சமுத்திரத்தை கடப்பது இதுவே முதற்தடவையாகவும் கடைசி தடவையாகவும் இருக்கும். ஐந்து இந்துக்களான இலங்கையரையும் தாடி வளர்த்த இளம் அமெரிக்க கடலோடி ஒருவரையும் கொண்ட பிறிகன் ரைன் ஆனது ஜி.பி.றோல்ரரில் இருந்து போர் முடா வழியாகப் புறப்பட்டு இத்துறைமுகத்தை அடைந்தது. பெருமை வாய்ந்த பல வருகைகளைக் கண்ட பிரசித்தி பெற்ற இத்துறைமுகமானது நூறு வருடங்களாகக் கண்டிராத அளவுக்குப் பெருந்தொகையான கப்பற்தலைவர்களையும் படகோட்டிகளையும் உல்லாசப் பிரயாணிகள் முதலானோரையும் கண்டு களிப்பதற்கென தன்பால் கவர்ந்தது அக்கப்பல். வெறுங்காலுடன் பாய்மரங்களில் விரைவுடன் ஏறிடும் இந்துக்களை அங்கு குழுமியிருந்த மக்கள் வியப்புடன் அவதானித்தனர். உள்துறைமுகத்தை வந்தடைந்ததும் வாழ்த்து தெரிவிப்பதற்காக சுமார் இருபது படகுகள் அப்புதிய கப்பலின் மருங்குகளைச் சென்றடைந்தன. 1840ம் வருடத்து பிரித்தானிய சண்டைக்கப்பலையொத்த இக்கப்பல் எட்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் செய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு இத்துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. கடலோடிகளின் நகரான வல்வெட்டித்துறையில் இருந்து இக்கப்பலில் புறப்பட்ட ஆறு மாலுமிகளுள் ஒருவர் மாத்திரமே இடை நடுவில் வீடு திரும்பினார

நன்றி

http://www.valvai.org

தகவலை இணைத்தமைக்கு நன்றிகள்...

  • தொடங்கியவர்

நாங்கள் திறமைச் சித்தி கல்வி கற்கும் மாணவிகள்.எங்கள் ஆண்டுவிழாவிற்கு கண்காட்சி நடத்துவது வழக்கம் அதற்காக இம்முறை நாங்கள் அன்னபூரணிக் கப்பல் ஒன்றை கண்காட்சிக்கு செய்து அதனை காட்சிப் படுத்துகின்றோம் கப்பலை மட்டும் காட்சிப்படுத்தினால் மக்களிற்கு ஆதாரமான செய்திகள் எதுவும் சென்றடையாது அதனால் நாங்கள் ஒரு புத்தகம் வெளியிடுவதாக உள்ளோம் அதற்கு எம்மிடம் போதுமான அளவு தகவல்கள் இல்லை அதனால் நாம் யாழ் கள உதவியை நாடி நிற்கிறோம்.கப்பலோட்டிய தமிழன் என்ற வரலாற்றை எம் வயதை ஒட்டியவர்களிற்கே அறிய வாய்ப்புகள் குறையவே இருக்கிறது பிறகு எப்படி இனிவரும் சந்ததியினருக்கு தெரிய வாய்ப்புக்கள் இருக்கிறது?? நாங்கள் புத்தகம் ஒன்றை வெளியிடுவதால் எத்தனையோ ஆண்டுகளிற்கு அது ஒரு எழுத்து பூர்வமான ஆதாரமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகின்றோம் அதுமட்டும் இல்லாமல் அமேரிக்கவில் உள்ள ஒரு பொருட்காட்சி நிலையத்தில் அன்னபூரணிக் கப்பல் பற்றிய தகவல்கள் இருப்பதாக ஒரு தகவல் அதனால் நாங்கள் அதுசம்பந்தமான தகவல்களையும் சேகரித்தவாறு உள்ளோம்.

களத்தில் உள்ளவர்களுக்கு மேலதிக விபரங்கள் தெரிந்தால் தந்துதவுவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு அமெரிக்கா வரை சென்ற ஒரு கப்பல் பற்றி கேள்விப்பட்டேன். இவ்வளவு பிரபல்யமானது என்று எனக்கு தெரியாது.

  • தொடங்கியவர்

191831974.img.jpg

நாங்கள் செய்து வைத்துள்ள கப்பலின் படத்தை இணைத்துள்ளேன்

என்னுடைய அப்பப்பா இதை பற்றி கதை கதையாக சொல்லுவார்... படங்கள் கூட பார்த்த நினைவு...சரியாக தெரியவில்லை

தூயா அப்பப்பா இப்ப இல்லையா? இந்த நண்பிகளுக்கு மேலதிக தகவல்கள் வேணுமாமே.

இந்த இணைப்பிலுள்ளது வாசித்தீர்களா நால்வரும்?

http://eelavar.com/eelam/pageview.php?ID=5...D=2069&pr_v=yes

நான் இன்றுதான் இதைப் பற்றிக் கேள்விப்படுறன். தகவலுக்கு நன்றிகள் நண்பிகள் நால்வர்,

இதயும் பாருங்க :

"One of Robinson's little-known adventures involved the purchase in Colombo

Ceylon, of the Annupoorunyamal, an Indian copy of a full-rigged New Eng-

land clipper in miniature, which he had first seen on his circumnavigation in

Svaap. Returning to India later, he found the vessel, bought her, outfitted her at

Colombo, and with an all-Indian crew, he and his first wife, Florence, sailed her

back to Gloucester. There, the Florence C. Robinson, as the Annapooranyamal

had been renamed, startled the natives when the Hindu crew flew kites from the

deck to celebrate the safe passage. The clipper was used as a rigging model for

the sailing ships Robinson's firm was then building, along with working fishing

boats. The unique qualities of the square rig, including that of being able to

sail backward while maneuvering in crowded waters, were noted by Robbie and

some of them were incorporated in Varua."

Ref:http://www.mcallen.lib.tx.us/books/circumna/ci_44nt.htm.

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

வணக்கம் தூயா..

உங்கள் அப்பப்பாவிடம் இருந்து தகவல்கள் பெற முடியுமா??

மற்றும் படங்கள் பார்த்ததாக கூறுகின்றீர்கள்.

உங்களால் முடிந்தால் அந்த படங்களை பெற கூடிய வசதிகள் இருக்குமா?

  • தொடங்கியவர்

வணக்கம் சினேகிதி அக்கா

நன்றி உங்கள் இணைப்புக்களிற்கு.

civar28si.jpg
  • தொடங்கியவர்

இன்னுமோர் மேலதிக தகவல்..

இந்தக்கப்பலிலே பயணம் செய்த 6 பேர்களில் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பதாக எமக்கு தகவல் சென்ற வருடம் கிடைத்தது. உயிருடன் இருப்பவர் சுய நினைவு இல்லாமல் இருப்பதாகத்தான் கூறப்பட்டது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது எமக்குத்தெரியவில்லை. இருந்தாலும் முடிந்த அளவில் நாம் அதைப்பற்றியும் விசாரித்து வருகின்றோம். இதைப்பற்றி வல்வெட்டியைச் சேர்ந்தோருக்கு எதாவது தகவல் தெரிந்தால் எமக்கு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • தொடங்கியவர்

மிகவும் நன்றி சினேகிதி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பிகளே!

உங்களுக்கான தகவல்களை முழுமையாக திரு. ராஜகோபால்

அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே 'அன்னபுூரணியில் வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்காவரை"

என்ற நூலினை இவர் 80 களின் மத்தியில் இராணுவவெறிக்கு

இரையான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 'கப்டன்" மோகனதாஸ் அவர்களின் 31 ம் நாள் நிகழ்வில் வெளியிட்டிருந்தார்.

பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரை உங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

அத்தோடு அவுஸ்ரேலியாவில் உள்ள 'வல்வை நலன்புரிச்சங்கம்"

என்ற அரையாண்டுச்சஞ்சிகையிலும் (மார்ச் 2006 இல் வெளியானது) சில விடயங்கள் இருக்கின்றன.

இவைபற்றிய விடயங்களோடு மீண்டும் சந்திக்கிறேன்.

இப்படிக்கு வல்வை சகாறா.

http://www.alaikal.com/net/index.php?optio...d=678&Itemid=44

வணக்கம் நண்பிகள்,

நல்ல முயற்சி ,உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.ராசகோபால் எழுதிய புத்தகம் நான் சிறு வயதில் வாசித்திருக்கிறேன்,இப்போது அது என்னிடம் இல்லை.

ராசகோபால் அவர்கள் லண்டனில் இருகிறார்.அவரின் தொலை பேசி இலக்கம் என்னிடம் வீட்டில் இருக்கிறது.பிறகு உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன் அவருடன் கதையுங்கள்.

நானும் இன்று தான் கேள்விப்படுகிறேன்..எனக்கும் பெரிதாக தெரியவில்லை.. :? ஆனாலும் உங்கள் முயற்சிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தகவலுக்கும் நன்றி :)

  • தொடங்கியவர்

வணக்கம் வல்வைசகாறா.

உங்களது உதவிக்கு எமது நன்றிகள்.

  • தொடங்கியவர்

வணக்கம் நாரதரே

நன்றிகள்

தொலைபேசி இலக்கத்தை முடிந்த அளவு விரைவாக தந்தால் நல்லம்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ப்ரியசகி.

இன்று தான் தகவல்களை படித்தேன் நண்பிகள் நால்வரே. இத்தகைய தகவல்களை கொண்ட புத்தகம் ஒன்றை ரொன்ரோ ரிபிறன்ஸ் லைபிரரியில் படித்தேன். இப்போதும் அங்கு 5ம் மாடியில் இருக்கின்றது. தலைப்பு ஞாபகம் இல்லை. தமிழ் என்றா பகுதியில் பாருங்கள்..

தகவலுக்கு நன்றி.

சென்றவருடம் இந்த கண்காட்சியை Warden and Finch வளாக மாணவர்கள் செய்தார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் சிலவேளை தருவார்கள்.

எனக்கும் இது தொடர்பான எந்த விபரமும் தெரியாது

தகவலுக்கு நன்றி நண்பிகளே.

நீங்கள் பெறும் மேலதிக தகவல்களை களத்தில எங்களுடன் பகிருவீங்க தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

annapoorani1sg.jpg

paper5io.th.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.