Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நிர்வாகத்தில் தலையிட விசேட குழு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் நிர்வாகத்தில் தலையிட விசேட குழு?
ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013 01:36    
 
இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 
 
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அப்பிரேரணையின் பிரதிகள் தனிப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. 
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் தேடியறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வற்புறுத்துதல், இந்நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போவதை தடுத்தல் மற்றும் சுயாதீன நீதித்துறையை உறுதி செய்தல் போன்ற விடயங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும் என்று மேற்படி பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த பிரதான யோசனைகளைத் தவிர, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைத்தல், வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தரமானதொரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல், நபர்களைக் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் கொள்கைகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமைத்தல், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குதல் தொடர்பான பல முன்மொழிவுகளும் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 
இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் திருத்தத்துக்கு உட்படுத்தும் வாய்ப்பு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ள இராஜதந்திர தகவல்கள், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் யோசனையொன்றும் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. இலங்கையின் நிர்வாகத்தில் தலையிட விசேட குழு?
ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013 01:36     0 COMMENTS
இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 
 
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அப்பிரேரணையின் பிரதிகள் தனிப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. 
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் தேடியறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வற்புறுத்துதல், இந்நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போவதை தடுத்தல் மற்றும் சுயாதீன நீதித்துறையை உறுதி செய்தல் போன்ற விடயங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும் என்று மேற்படி பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த பிரதான யோசனைகளைத் தவிர, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைத்தல், வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தரமானதொரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல், நபர்களைக் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் கொள்கைகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமைத்தல், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குதல் தொடர்பான பல முன்மொழிவுகளும் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 
இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் திருத்தத்துக்கு உட்படுத்தும் வாய்ப்பு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ள இராஜதந்திர தகவல்கள், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் யோசனையொன்றும் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விசேடக்குழு அமைக்கப்படும் எனின், அதில் 'இந்தியா' என்ற தேசம் இடம்பெறக் கூடாது!

இந்தியா, எப்போதும்  எமது உரிமைகள் விடையத்தில், வைக்கல் பட்டடை நாயைப் போலவே, கடந்த காலங்களில் செயல்பட்டது. எதிர்காலத்திலும் செயல் படும். :o

AXX079b-dog-on-haystack-blue-Edit.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு முன்னர் இந்தியா தான் அமைத்த குழுவை ஸ்ரீலங்கா அனுப்பி

அங்கு எல்லாம் திருப்தியாக இருக்கின்றது என அறிக்கை விடாமல் இருந்தால் சரி.

மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  
 
இது ஆபத்தனாது. இந்திய நம்பியார்பூதிகள் ஒரு சிங்கள உபநடிகைக்கு தாக்குப் பிடிக்க மாட்டார்கள். :unsure:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆபத்தனாது. இந்திய நம்பியார்பூதிகள் ஒரு சிங்கள உபநடிகைக்கு தாக்குப் பிடிக்க மாட்டார்கள். :unsure:

ஏன், காரம் அதிகமா, மல்லை? :D

இப்படியான விசேடக்குழு அமைக்கப்படும் எனின், அதில் 'இந்தியா' என்ற தேசம் இடம்பெறக் கூடாது!

இந்தியா, எப்போதும்  எமது உரிமைகள் விடையத்தில், வைக்கல் பட்டடை நாயைப் போலவே, கடந்த காலங்களில் செயல்பட்டது. எதிர்காலத்திலும் செயல் படும். :o

இது ஆபத்தனாது. இந்திய நம்பியார்பூதிகள் ஒரு சிங்கள உபநடிகைக்கு தாக்குப் பிடிக்க மாட்டார்கள். :unsure:

இந்தியக் காட்டுமிராண்டிகள் பங்குகொள்ளும் எந்தக் குழுவும் - நீதி,ஜனநாயகம், சர்வதேச நியமங்கள் மற்றும் நெறிமுறைகள் நேர்மையான முறையில் பின்பற்றப்பட / அமுல்படுத்தப்பட உதவாது!

மல்லையூரான் அவர்கள் குறிப்பிட்டது போல ஒரு சிங்கள துணைநடிகை போதும் இந்திய ராஜதந்திர / அரச காட்டுமிராண்டிகளை கவிழ்ப்பதற்கு.

இதெல்லாம் நடக்கிற காரியமா?

இலங்கையை திருத்தி சனநாயகப் பாதையில் கொண்டு வர ஒரே வழி இலங்கை மீதி நடவடிக்கை எடுப்பதொன்றே. 

இந்த குழுக்கள் அமைத்தல் விசாரணை செய்தேன் எல்லாம் ஒன்றும் சரிவராது. இதுகள் வைப்பதன் நோக்கம் என்னவென்று சிறிலங்காவை கேட்டால் தெரியும். 

குழு அமைச்சு விசாரிப்பத்சில் தேர்ச்சி பெற்ற தேசமேன்றால் சிறிலங்காதான்.

மகிந்தா கூட்டத்தை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்பதே இலக்கு. அதை எப்படி செய்வது என தெரியாமல் பலவழிகளிலும் முயற்சிக்கின்றார்கள். 

இந்த முயற்சிகள் அனைத்துமே சரிவரக்கூடாது.

அப்பொழுதுதான் தமிழர்களின் சுயநிர்ணய வேண்டுதலை மேற்குலகம் கையில் எடுக்க இலகுவாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.