Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்திரிக்காவின் சதிராட்டம்

Featured Replies

வணக்கம் சகோதரரே

சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைச்சதிலை இருந்து நாங்கள் படுற பாட்டை ஒரு கவிதையா எழுதுவம் எண்டு வெளிக்கிட்டனான். ஒரேயடியா எழுதினா நீங்களெல்லாம் கூடிப் போச்சுது எண்டு சண்டைக்கு வருவியள் எண்டபடியாலை கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன்.

நல்ல பிள்ளைகள் மாதிரி வாசிச்சுப் போட்டு உங்கடை கருத்துக்களைக் கட்டாயம் எழுதுங்கோ. அப்ப தானே எனக்கும் உசார் வரும். (அடுத்த பாகம் எழுதினதும் தலையங்கத்தை நான் இரண்டாம் பாகம் எண்டு மாத்திறன் . அப்ப உங்களுக்கு வாசிக்க லேசா இருக்கும்.

வரலாற்றை மறப்போமா? (முதலாம் பாகம்)

போர் ஓய்ந்து விட்டதனால்

போராட்டம் முடிந்ததென்று

புளகாங்கிதம் கொண்ட

புதல்வர்களே கேட்டிடுவீர்

சாமான்கள் போவதனால்

சமாதானம் வந்ததென்று

சந்தோசித்து நின்ற

சகோதரரே கேட்டிடுவீர்

இலவுகாத்த கிளியாக

இத்தனைநாள் வாழ்ந்தபின்னும்

மாப்பிள்ளை இணங்காமல்

மணப்பந்தல் போடலாமோ

இப்படிச் சொல்வதற்காய்

இழிவாய்ப் பார்க்காதீர்

சமாதான விரோதியென்று

சாக்கடையில் தள்ளாதீர்

தடைமுகாம் கடக்காமல்

தலையாட்டி இல்லாமல்

எங்கேயும் சுற்றிவர

எங்களுக்கும் விருப்பந்தான்

துப்பாக்கிச் சத்தமின்றி

செல்லடிக்குப் பயமின்றி

சுற்றம் சுூழ்ந்திருக்கும்

சுூழலுக்கும் விருப்பந்தான்

அன்னியரின் தேசத்தில்

அகதியாய் அலைந்திடாமல்

எம்மண்ணை வந்தடைய

எங்களுக்கும் விருப்பந்தான்

நாள்முழுதும் மாயாமல்

நனிகுளிரில் காயாமல்

நிம்மதியாய் வாழ்வதற்கு

நிச்சயமாய் விருப்பந்தான்

ஆனாலும் என்மனதில்

ஆழப் பதிந்திட்ட

கடந்தகால வரலாறு

கண்முன்னே நிற்கிறது

தவறுகளை மன்னித்தல்

தமிழர்குணம் என்றாலும்

கடந்தகால வரலாற்றை

கணப்பொழுது பார்த்திடுவோம்

உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் தொடரும்............

  • Replies 74
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தூள்

வணக்கம் சகோதரரே,

இலவுகாத்த கிளியாக

இத்தனைநாள் வாழ்ந்தபின்னும்

மாப்பிள்ளை இணங்காமல்

மணப்பந்தல் போடலாமோ

அன்னியரின் தேசத்தில்

அகதியாய் அலைந்திடாமல்

எம்மண்ணை வந்தடைய

எங்களுக்கும் விருப்பந்தான்

நாள்முழுதும் மாயாமல்

கடுங்குளிரில் காயாமல்

நிம்மதியாய் வாழ்வதற்கு

நிச்சயமாய் விருப்பந்தான்

கவிதை வரிகள் மிகவும் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்

வணக்கம் அங்கிள்

நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

ஒரு சின்னச் சந்தேகம் சுதந்திரம் கிடைச்சதிலிருந்து எழுதப் போறன் என்று

சொல்லி இருந்தீர்கள். எப்ப கிடைச்ச சுதந்திரம்???

கவிதை வழமை போல அருமை அங்கிள்.வாழ்த்துக்கள். :)

கவிதை அருமை மணிவாசகன் அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன் :arrow: :P :wink:

  • தொடங்கியவர்

ரசிகை சொன்னது

ஒரு சின்னச் சந்தேகம் சுதந்திரம் கிடைச்சதிலிருந்து எழுதப் போறன் என்று

சொல்லி இருந்தீர்கள். எப்ப கிடைச்ச சுதந்திரம்???

பிள்ளை உங்கடை கேள்வியைப் பாத்ததும் எனக்கு வெக்கமாப் போச்சுது. சிறீலாங்காவிற்கு சுதந்திரம் கிடைச்சதிலையிருந்து எண்டு சேத்து வாசியுங்கோ. கொஞ்சம் பொறு பிள்ளை . நானே மாத்தி விடுறன்.

எண்டாலும் பெறுமதியான ஒரு கேள்வியை (முதல் தரமா) :) கேட்டதுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

அன்புள்ள புத்தன், இலக்கியன், கௌரிபாலன்,

உடனடியாகவே வாசித்து அன்பான தங்கள் கருத்துக்களைத் தந்ததற்கு நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

அன்புள்ள புத்தன், இலக்கியன், கௌரிபாலன்,

உடனடியாகவே வாசித்து அன்பான தங்கள் கருத்துக்களைத் தந்ததற்கு நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

அடுத்த பகுதி விரைவிலே எதிர் பார்க்கின்றோம்

அடுத்த பகுதி விரைவிலே எதிர் பார்க்கின்றோம்

அவசரக்குடுக்கை அவசரக்குடுக்கை..

ஒரு சுத்து முடிக்கட்டும்.

எழுதி மணியின் கை ஓயேல்லை

அவசரப்படுத்தறீர்..

மணி மணியாத்தான் எழுதுகிறீர்கள்..

கிண்டல்களை இங்க விட இயலாது....

பாத்துக் கொண்டிருக்கிறவை என்னைக் கட்டி வைச்சுத் தோலை

எரிச்சுப்போடுவினம்.. சே... உரிச்சுப்போடுவினம்.

ர(h)மாவுக்குப் பயப்பிடும் ஆதிவாசி

அவசரக்குடுக்கை அவசரக்குடுக்கை..

ஒரு சுத்து முடிக்கட்டும்.

எழுதி மணியின் கை ஓயேல்லை

அவசரப்படுத்தறீர்..

மணி மணியாத்தான் எழுதுகிறீர்கள்..

கிண்டல்களை இங்க விட இயலாது....

பாத்துக் கொண்டிருக்கிறவை என்னைக் கட்டி வைச்சுத் தோலை

எரிச்சுப்போடுவினம்.. சே... உரிச்சுப்போடுவினம்.

குடுக்கை

இல்லை

குடுக்கை

இல்லை

அவசர

அவசர

குடுக்கை

இல்லை

கிண்டல்

செய்யவில்லை

நீரும்

இங்கே

நீரும்

என்னைக்

கிண்டல்

செய்யவில்லை

தூண்டுது

தூண்டுது

அப்பாவின்

கவிபடிக்க

தேடுது

கண்தேடுது

அப்பாவின்

கவிதைகளை

நாடுது

என்மனம்

மணியான

கவித்தேன்குடிக்க

தாயகத்து

தேன்தமிழை

அந்தக்கவியில்

பார்த்துவிட

என் தாகம்தான்

அதிகரிக்குது

தொண்டையும்

வரண்டுபோச்சு :roll:

நல்ல கவிதை. அடுத்த பாகத்தை வாசிக்க ஆர்வமாயிருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாருக்கு மேலும் எதிர்பார்க்கிறன்

நல்லா முயற்சி தொடருங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்.

இலவுகாத்த கிளியாக

இத்தனைநாள் வாழ்ந்தபின்னும்

மாப்பிள்ளை இணங்காமல்

மணப்பந்தல் போடலாமோ

அருமையான கற்பனை

  • தொடங்கியவர்

கருத்தெழுத்திய அனைவருக்கும் நன்றி.

இதன் இரண்டாம் பாகத்தை 01 - 07 - 2006 அன்று எழுதுவதற்கு எண்ணியுள்ளேன்.

அன்புடன்

மணிவாசகன்

மணிவாசகன் அண்ணா உங்கட கவிதை நல்லாயிருக்கு :P

இரண்டாம் பாகம் வர இன்னம் இன்னும் 4 நாட்கள் இருக்கே :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா முயற்சி மணிவாசகன் தொடருங்கள். வாசிக்க ஆவலாகவுள்ளோம்

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் இந்த மணிவாசகன்ரை வணக்கங்கள்,

அண்ணாவெண்டும், அங்கிளெண்டும், அப்பாவெண்டும் விளித்து என் எழுத்துக்களுக்குக் கருத்துச் சொல்லி என்னை ஊக்கப் படுத்திய அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றிகள்.(எனக்கு ஒரு அண்ணா அக்கா கூட இல்லையெண்டது ஒரு கவலைதான்)

இதன் இரண்டாம் பாகத்தை நாளைக்குப் பிரசுரிப்பேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்ற அதே வேளையில் உங்களிடம் ஒரு பணிவான உதவியையும் கேட்டு நிற்கிறேன். இங்கு நான் கண்ட நான் வாசித்தறிந்த சம்பவங்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன்.

நான் அறிந்திராத அல்லது மறந்து போன எங்கள் வரலாற்றில் கட்டாயம் இட்ம்பெற வேண்டிய பல விடயங்கள் இங்கே தவறவிடப்பட்டிருக்கும். அவற்றை எங்கள் நாட்டின் பால் அன்பு கொண்ட அரசியல் அறிவுள்ள நீங்கள் அவ்வப்பொழுதில் சுட்டிக் காட்டுவீர்கள் என்றால் இந்தப் படைப்பைச் செழுமைப்படுத்தலாம்.

மற்றும் என்னுடைய கவிதைகளின் குறைகளை நீங்கள் தாராளாமாகச் சுட்டிக் காட்டுங்கள். நான் கோபப்பட மாட்டேன். என்ன செய்வீர்கள்?

அன்புடன்

மணிவாசகன்

கருத்தெழுத்திய அனைவருக்கும் நன்றி.

இதன் இரண்டாம் பாகத்தை 01 - 07 - 2006 அன்று எழுதுவதற்கு எண்ணியுள்ளேன்.

அன்புடன்

மணிவாசகன்

இன்று 2ம் திகதி எங்கே பாகம் இரண்டைக் காணவில்லை :roll: :roll: :( :wink:

  • தொடங்கியவர்

வணக்கம் சகோதரர்களே,

அனைவரிடமும் பேச்சு மாறியதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். (தெரியுந்தானே நாங்கள் எல்லாம் நேற்று எவ்வளவு பிசியெண்டு)

இத்தளத்தனூடாகவும் தனிமடல் மூலமாகவும் எனக்கு ஞாபகப் படுத்திய அனைவருக்கும் நன்றி. இதோ இரண்டாம் பாகம். கருத்துக்களுக்காய்க் காத்திருக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

வரலாற்றை மறப்போமா (இரண்டாம் பாகம்)

சங்கிலியன் ஆட்சியிலே

சந்தோசமாய் நாமிருந்தோம்

சட்டம் ஒழுங்கையெல்லாம்

சரியாகப் பேணிநின்றோம்

தனியாக வாழ்ந்தஎம்மை

தங்களது வசதிக்காய்

சிறீலங்கா அரசுடனே

சேர்த்திட்டார் அந்நியர்கள்

அவர்தம் ஆட்சியிலே

அதிகமிது உறைக்கவில்லை

அதனாலே நாமதிகம்

அலட்டிக் கொள்ளவில்லை

எம்நாட்டை நாமே

எழிலாய் ஆண்டிடுவோம்

எல்லாரும் சரிசமமாய்

எப்போதும் வாழ்ந்திடுவோம்

சிங்களத் தலைவர்களின்

சிங்கார வார்த்தைகளில்

நம்பிக்கை கொண்டதனால்

நாம்மோசம் போய்விட்டோம்

சும்மா இருக்காமல்

சுதந்திரத்தைக் கேட்டிட்டோம்

சுதந்திரமும் கிடைத்தது - 48இலே

சுதந்திரமும் கிடைத்ததாம்.

அம்மே தாத்தேயென்று

அழைத்துக் கொஞ்சியோரின்

அன்புப் பேச்செல்லாம்

அடியோடு போயாச்சு

அண்ணா தம்பியென்று

அழகாய் நடித்தவரின்

சுயருபம் மெல்லமெல்ல

சுழன்றாடத் தொடங்கியது

தனியாகச் சிங்களத்தை

தான்நாங்கள் பாவிப்போம்

அதிகாரத் தொனியினிலே

அறுதியிட்டுச் சொன்னார்கள்

ஒப்பந்தஞ் செய்தார்கள்

ஒருதலையாய் கிழித்தார்கள்

ஒன்றும் தரமாட்டேன்

ஓடிப்போ என்றார்கள்

அமைதியாய் வாழ்ந்தஎம்மை

அடித்தழிக்கும் பழக்கத்தை

அம்பத் தெட்டில்பண்டா

அழகாய்த் தொடக்கிவிட்டார்

என்பங்கைப் பாரென்று

எழுந்துநின்ற ஜே-ஆரும்

ஒன்றல்ல இரண்டுமுறை

ஓடஓட விரட்டிவிட்டார்

தலைவர்நாம் என்றுசொல்லி

தம்பட்டம் அடித்தசிலர்

அஹிம்சை அஹிம்சையென்று

அடிக்கடி சொல்லிநின்றார்

அஹிம்சை பேசியோரின்

அறிக்கைத் தலையிடியை

அமைச்சர் பதவியெனும்

அஸ்திரத்தால் அடக்கிட்டார்

பணத்தாசை பிடித்திருந்த

படித்தநம் தலைவர்கள்

பதவிக்கும் பஜிரோக்கும்

பல்லிளித்து நின்றிட்டார்

உலகத் தமிழருக்காய்

உன்னதமாய் மாநாடு

உருவாகி நிற்றல்கண்டு

உள்ளங்குமுறி நின்றார்

மகத்தான வகையினிலே

மாநாடு நடக்கையிலே

கொடுரக் காரர்கள்

கொலைக்களமாய் ஆக்கிட்டார்

துயர்நிறைந்த காட்சியினை

தூரத்தேபார்த்து நின்ற

துரோகக் கும்பலுக்கு

துரையப்பா தான்தலைவன் ..............

  • தொடங்கியவர்

மிகவும் நன்றாக உள்ளது... வரலாற்றை அறிய ஆவலாக உள்ள என் போன்றவர்களுக்கு உங்கள் கவிதை மிகவும் உதவியாக உள்ளது. பாராட்டுக்கள். தொடருங்கள்... :P

எமது தலைவர்கள் தந்தை செல்வா,ஜி.ஜி,அமிர்தலிங்கம் போன்றோரின் பங்களிப்பை நாம் கொச்சப்படுத்தக் கூடாது....பதவிக்கும் பஜிரோவுக்கும் பல்லிளித்தார் என்பது...அதிகப்பிரசங்கித் தனம்....

அவர்கள் காலத்தில் அகிம்ஸை என்பது போராட்ட ஆயுதம்....அதனை நாங்கள் ...குறைத்து மதிப்பிட முடியாது.... அந்த நிலைமைக்கூடாகவே வரலாறு நகர்ந்தது என்பதற்கு அப்பால்....வேறு வியாக்கியானம் பொருந்தாது....

வரலாறு உள்ளபடியே எழுதப்பட வேண்டும்....

அன்புடன்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

வணக்கம் எல்லாளன்இ

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை.

ஆனால் தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் (என்றாலும் இவரைப் பற்றிய விமர்சனம் பின்னர் வரும்) அமைச்சர் பதவி பெற்று அரசுடன் இணையவில்லையே.

அதற்காகத் தான் 'சிலர் என்ற சொல்லைச் சேர்த்திருந்தேன்.

தலைவர்நாம் என்றுசொல்லி

தம்பட்டம் அடித்தசிலர்

அஹிம்சை அஹிம்சையென்று

அடிக்கடி சொல்லிநின்றார்

அஹிம்சை பேசியோரின்

அறிக்கைப் பேச்சினையும்

அமைச்சர் பதவியெனும்

அஸ்திரத்தால் அடக்கிவிட்டார்

பணத்தாசை பிடித்திருந்த

படித்தநம் தலைவர்கள்

பதவிக்கும் பஜிரோக்கும்

பல்லிளித்து நின்றிட்டார்

இலங்கை சுதந்திரம் பெற்றிருந்தாலும் அதன் யாப்பை நினைத்தபடி மாற்றமுடியாத நிலையிருந்தது. ஆனால் 1972 இல் இலங்கை குடியரசாவதற்கு தமிழ்மக்கள் சார்பில் (அத்தனை அவலங்களைக் கண்ட பின்பும்) கையெழுத்திட்ட Kumarasooriyar

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் .அதன் பின்னர் தானே அவர்கள் நினைத்தபடியெல்லாம் அரசியலமைப்பை மாற்றினார்கள். அவரைப் பதவிக்காகப் பல்லிளித்தார் என்று சொல்வதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கிறேன்.

என்பதில் உங்களுக்குத் திருப்தியளித்ததா? எழுதுங்கள்.

தவறுகளைச் சுட்டுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

இரண்டாம் பாகமும் அருமை. பராட்டுக்கள்.. 3ம் பாகம் எப்போது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.