Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இன்று மட்டும் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dog(4).jpg

-சுமித்தி தங்கராசா

யாழில் நாய்க்கடிக்கு இலக்காகிய 30 பேர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு புள்ளிவிபரத் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரையிலான 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை,கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களின் கடிக்கு இலக்காகியவர்கள் தாமதிக்காது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2010ஃ2011 ஆம் ஆண்டுகளில் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். 2010 ஆம் ஆண்டு 16 பேரும் 2011 ஆம் ஆண்டு 14 பேரும் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு அம்பாறையி;ல் ஒருவரும், மட்டக்களப்பில் ஐவரும், திருகோணமலையில் இருவரும் பலியாகியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பேரும் மரணமடைந்துள்ளனர்.

வடக்கை பொறுத்தவரையில் 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை இவ்விரு மாகாணங்களிலும் 2011 ஆம் ஆண்டு 25 ஆயிரத்து 903 பேருக்கு விசர் நாய் கடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் 5,638 பேருக்கும், மட்டக்களப்பில் 3222 பேருக்கும், திருகோணமலையில் 2244 பேருக்கும் விசர் நாய் கடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு 5073 பேருக்கும், கிளிநொச்சியில் 6378 பேருக்கும், மன்னாரில் 1692 பேருக்கும்,முல்லைத்தீவில் 1320 பேருக்கும், வவுனியாவில் 396 பேருக்கும் விசர் நாய் கடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு மாகாணங்களிலும் கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கென 2010 ஆம் ஆண்டு 77 ஆயிரத்து 932 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கிழக்கு மாகாணத்திற்கு 35015 தடுப்பூசிகளும் வடக்கு மாகாணத்திற்கு 42,916 தடுப்பூசிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு  கிழக்கு மாகாணத்திற்கு 47,008 தடுப்பூசிகளும் வடக்கிற்கு 49,378 தடுப்பூசிகளும்  விநியோகிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் பொது சுகாதார மிருக வைத்திய சேவைகளின் புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59619----30---.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நம்ம ஊர் நாயல் மட்டும் ஆக்களை கடிக்குதுங்கள்.....வெளிநாட்டு நாயல் அப்படி இல்லை....அதுங்கள் கூட இருக்க சந்தோசமாய் இருக்கும்.....அதுங்கட அசைவுகள் செய்யிர அட்டகாசங்கலை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கும்.....அனால் ஊர் நாய் என்றால் சொல்லவே தேவை இல்லை.......ஊர் நாய் எனக்கு சின்னனில் ஒருக்கா கடிச்சு நான் பட்ட பாடு ....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எம்ஜியாருக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

  • கருத்துக்கள உறவுகள்

Dog day

  • கருத்துக்கள உறவுகள்

நாய் என்றால் கடிக்கத்தானே செய்யும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நம்ம ஊர் நாயல் மட்டும் ஆக்களை கடிக்குதுங்கள்.....வெளிநாட்டு நாயல் அப்படி இல்லை....அதுங்கள் கூட இருக்க சந்தோசமாய் இருக்கும்.....அதுங்கட அசைவுகள் செய்யிர அட்டகாசங்கலை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கும்.....அனால் ஊர் நாய் என்றால் சொல்லவே தேவை இல்லை.......ஊர் நாய் எனக்கு சின்னனில் ஒருக்கா கடிச்சு நான் பட்ட பாடு ....

எல்லாம் எங்கட ஊர் சாப்பாடு செய்கிற வேலை கண்டது கடியதை தின்று போட்டு கடுப்பில்தான் தங்களுக்குள்ள கடிபடுவினம் ஒரு சேஞ்சுக்கு ஆட்களையும் கடிப்பினம்  :D
 
இப்ப வேற அவையளுக்கு மொழிப்பிரச்சனையும் இருக்கும் ஆமிக்காரன்ரை நாயளுக்கு தமிழ் தெரியாது இருக்கும் யாழில் உள்ளவை கதைக்கிறது விளங்காது கோபத்திலும் கடித்திருக்கும்  :icon_mrgreen:

இவையளை குறைக்கிறதுக்கு கொஞ்ச பிலிப்பைஸ் காரரை கூப்பிட்டு விட்டால் எல்லாத்தையும் சமைத்து சாப்பிட்டு விடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடிக்கத்தான் மகிந்த பல ஆயிரம் பேரை  நிறுததி  வைத்திருக்கிறாரே.

கடிக்க வேண்டியது தானே?

இதுகளுக்கும் தமிழன் என்றால் தான் இளக்காரம்  போலும்... :(

ஏன் நம்ம ஊர் நாயல் மட்டும் ஆக்களை கடிக்குதுங்கள்.....வெளிநாட்டு நாயல் அப்படி இல்லை....அதுங்கள் கூட இருக்க சந்தோசமாய் இருக்கும்.....அதுங்கட அசைவுகள் செய்யிர அட்டகாசங்கலை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கும்.....அனால் ஊர் நாய் என்றால் சொல்லவே தேவை இல்லை.......ஊர் நாய் எனக்கு சின்னனில் ஒருக்கா கடிச்சு நான் பட்ட பாடு ....

வெளிநாட்டில் நாய்கள் ஒழுங்குமுறைப்படி பழக்கி வளர்க்கப்படுகின்றன. கடிக்கக்கூடிய நாய்களை வெளியே அழைத்து செல்வதென்றால் வாயை மூடி அழைத்து செல்ல வேண்டும். மீறி நாய் யாரையாவது கடித்தால் fine கட்ட வேண்டும்.

எமது நாட்டில் அப்படியல்ல. அங்கு பல நாய்கள் கைவிடப்பட்ட நிலையில், அவை வீதியில் கட்டாக்காலி நாய்களாக அலைகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய்களையும் பெரும்பாலும் நட்பு ரீதியில் அல்லது பிள்ளை போல் வளர்ப்பதில்லை. காரணம் அங்கு பெரும்பாலும் திருடர்கள் பயத்திற்காக தான் நாய் வளர்ப்பார்கள். எனவே வீட்டிற்கு திருடர்கள் வந்தால் கடிக்கட்டும் என்று சாதாரணமாக வளர்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ  அங்கை ஊரிலை இவ்வளவுகாலமும் நாய்க்கடி இல்லாமல் சனம் வாழ்ந்தமாதிரியெல்லே இப்ப நியூஸ் சொல்லினம்....போறபோக்கை பாக்க நுளம்பர் முதுகிலை குத்தினாலும் பெரிய நியூஸ் போலை கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நம்ம ஊர் நாயல் மட்டும் ஆக்களை கடிக்குதுங்கள்.....வெளிநாட்டு நாயல் அப்படி இல்லை....அதுங்கள் கூட இருக்க சந்தோசமாய் இருக்கும்.....அதுங்கட அசைவுகள் செய்யிர அட்டகாசங்கலை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கும்.....அனால் ஊர் நாய் என்றால் சொல்லவே தேவை இல்லை.......ஊர் நாய் எனக்கு சின்னனில் ஒருக்கா கடிச்சு நான் பட்ட பாடு ....

நாங்கள் அப்படிதான் பாருங்கோ... :D

ஊர்ல இருந்து பொண்ணுங்க எடுத்தாலும் இப்பிடி தான் அவஸ்த்தைப்படனும் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.