Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற சீமான் கையெழுத்து !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1362055380.jpg
 
vtpixpc.gif?pid=931&pixelfrom=cp
இலங்கை தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற சீமான் கையெழுத்து ! 
 
இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளனர் தமிழ் அமைப்புகள் . எல்லா அரசியல் கட்சி / இயக்கத் தலைவர்களிடமும் சென்று ஒருமித்த கருத்தோடு கையெழுத்து பெற்று அதை தமிழக முதல்வருக்கு தமிழர்களின் சார்பில் நாம் கொடுக்க அவர்கள் கொடுக்க உள்ளனர்.
 
அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களை சந்தித்து அவரிடம் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற்றனர் . அப்போது சீமான் கூறியதாவது , இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அதே வேளையில் இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் மாபெரும் முற்றுகை போராட்டம் நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுக்கும் என உறுதி அளித்தார் . 
 
இதை தொடர்ந்து பிற அரசியல் கட்சி தலைவர்களையும் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட தமிழ் அமைப்புகள் அணுக உள்ளன .
seeman.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

 

நீக்கப்பட்டால் உள்ளூர் அரசியல் தலைகளை அப்பப்போ 'கவனித்து' சமாளிக்கும் மற்றும் உளவு வேலைகளுக்கும் சிறிது தடையாக இருக்கும்.

கையெழுத்தா? கை நாட்டா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்தா? கை நாட்டா?

பார்த்தால் எப்படி இருக்கிறது அர்ஜுன் .....?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒரு ஆள் தன்ர காமெடி வீடியோவை தானே காண்பிக்கிறார்... ஹிஹிஹி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை ஒரு ஆள் தன்ர காமெடி வீடியோவை தானே காண்பிக்கிறார்... ஹிஹிஹி

இதுதான் அவர் காலத்தில் அவர் செய்த அரசியல். எல்லாம் வயிற்றுக்காக.

என்னுடைய பணி நிமித்தமாக சந்தித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் பேச்சுவாக்கில் பாலச்சந்திரம் படுகொலையைப் பற்றி பேசினார், “ ரொம்ப கஷ்டமா இருக்குங்க பார்த்தப்ப.. உங்களுக்கேல்லாம் அவரு பெரிய தலைவர்ன்னு சொல்ரீங்க, ஆனா தமிழ் நாட்டுல ஒரு ரியாக்ஸனும் இல்லையே. படத்த பார்த்தப்ப எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு”ன்னார்.. நான் அங்கே நடந்த இனப்படுகொலை, தமிழீழம் பற்றி சிறிது பேசினேன், எதையும் அவர் காதில் வாங்கியதாக தெரியவில்லை, “இவ்வளவு நடந்த்து எதுவும் எங்களுக்கு தெரியலையே, எந்த மீடியாவிலையும் வரலையே? “ ன்னார்.

நான் சொன்னேன் ‘இல்லைங்க எந்த மீடியாவும் எங்களுக்கு சப்போர்ட்டா வரலை”.. கொஞ்ச நேரம் யோசிச்சவர் பிறகு சொன்னார், “ எல்லாஞ்சரிங்க, நாங்க மதிக்கிற தலைவரோட குழந்தைக்கு இந்த மாதிரி நடந்திருந்தா இன்னேரம் ஆந்திரா பத்தி எறிஞ்சிட்டு இருக்கும்… ஈழமெல்லாம் விடுங்க, இதுக்கு நாலு சாத்து சாத்தி இருந்தா எல்லாமே கிடைக்குமில்ல. மீடியா வந்து நின்னுருக்குமுல்ல.. எதுவும் செய்யாம எப்படிங்க நடக்கும்.. . குழந்தையை கொன்னவன விட்டு வச்சுட்டு, போராட்டம் கீராட்டம்னு சொல்றீங்களே ..ஒரு கடைய திறக்க வுட்டுறக்க மாட்டோம், எங்க ஊர்ல…. இலங்கை தூதரகமெல்லாம் வேற ஊருக்கு அனுப்பி இருப்போம். ராஜபக்சே அடுத்து திருப்பது வரட்டும் இருக்கு ”ன்னு கோபமாகச் சொன்னார்..

வேறொரு வங்காளி நண்பர் சொன்னார், “ it look sad man, he looks like my son, he is of his age too.. horrible, I cudnt forget the innocent eyes” .

நாம் தமிழனா இருந்து என்ன சாதிச்சோம்னு கேட்காம கேட்டாங்க.. அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு நமக்கு யோக்கியதை இருக்கிறதா எனத் தெரிய்வில்லை.

”வீதிக்கு வராமல் விதிகள் மாறாது” என மற்றவருக்கு அட்வைஸ் செய்வோம். ஆளுக்கு ஒரு “லைக்”, “ஒரு ஷேர்” பண்ணி முடிஞ்சா ’இரண்டு வரி’ எழுதி நமது அரசியல் கடமையை நிறைவேற்றுவோம்.

- Thirumurugan Gandhi

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்தா? கை நாட்டா?

 

 

இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது- புளொட் தலைவர் சித்தார்த்தன்
Posted on March 21, 2012

31.gifஅமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகளுக்கு இடமே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை இந்தியாவிடம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை முன்வைத்தது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நிறுவியதோடு, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதனை நிறைவேற்றுமாறே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்பிரேரணை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் உரிமைகளோடு வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டு காங்கிரஸ் உட்பட திராவிட கட்சிகள் முக்கிய பங்களிப்பையும், அழுத்தத்தையும் கொடுத்தன. இவர்களின் தீவிரமான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இனி இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலேயே பந்து உள்ளது. எனவே, பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தின் நேரடியான தலையீடுகளை இலங்கை அரசாங்கத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் என புளொட் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

http://plote.co.uk/?p=1380

 

 

 
உங்கடை ஆள் திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

574902_10200608325708856_1011181602_n.jp

ராஜபக்சே-வைவிட, அமெரிக்காவைவிட, இந்தியாவைவிட, பாகிஸ்தானைவிட, சீனாவைவிட, யாரெல்லாம் இலங்கைக்கு ஆதரவாக உள்ளார்களோ அவர்களைவிட ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தானவர்கள் தமிழக அரசியல்(வியாதிகள்)வாதிகள். வேறு எந்த இனமும் இப்படியானதொரு கொடுமையை சந்தித்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு. எரிமலையாய் வெடித்திருப்பார்கள். பேருந்து ஓடியிருக்காது. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். எதிரி பயந்திருப்பான். ஆனால் எம் தமிழினத்திற்கு...

ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு நாட்களில் இலங்கை தூதரகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களாம். ஒன்றாக சேரமாட்டார்கள். உன் இடத்தில், உன் மாநிலத்தில் உள்ள தூதரகத்தையே தமிழர்களால் ஆட்டமுடியவில்லை பிறகு என்ன நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு உரிமையை வாங்கி தந்துவிடுவீர்கள்.

"இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்" படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து அமெரிக்க தூதரகத்தை மூடிய அவர்கள் போராட்டம் எங்கே...தமிழினத்திற்கு போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு கோசம் போடுவதும், கொடிகளை எரிப்பதும், நாடகம் நடத்தும் தமிழக அரசியல் கட்சிகள் எங்கே? இன்றுவரை இலங்கை தூதரகத்தையே மூடமுடியாமல் தடுமாறும் தமிழினம் எங்கே?...

பெரியாரின், அண்ணாவின் மண்ணில் தமிழன் ஏன், யாருக்கு அடிமையாகி போனான். குடும்பத்திற்கு, கட்சிக்கு, தலைவனுக்கு, ஜாதிக்கு, சினிமா நடிகனுக்கு, நடிகைக்கும்...

ஏன் இந்த இழிநிலை...

 

தமிழ் இனத்தின் புதல்வர்களை நிர்வாணமாய் கிடத்தியதை பார்த்தபின்பும் சூடு, சொரனையே இல்லாத இந்த தமிழினம்...

சினிமா என்றால் ஓடுகிறான்...

கிரிக்கெட் என்றால் ஓடுகிறான்...

இனம் என்றால் மொழி என்றால் என்னவென்றே தெரியாமல் தடுமாறுகிறான்...

அரசியல் கட்சிகளும், நடிகர்களும், ஊடங்களும் தமிழனை மழுங்கடித்து, மயக்கி வைத்துள்ளார்கள்...

இதுவரை தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு நடிகனும் வாயே திறக்கவில்லை...

 

திராவிடம் பேசும் தமிழ் தலைவர்களே...(உங்கள் கூற்றுப்படி தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் திராவிடன்தானே)...எங்கே ஒருத்தரும் குரல் கொடுக்கவில்லை ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு...

கருணாநிதியும், செயலலிதாவும், வைகோவும், ராமதாசும், திருமாவளவனும், விசயகாந்தும், காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும்...இன்றுவரை ஒன்றுசேரவே முடியவில்லை என்றால் என்ன நீங்கள் தமிழ் என்றும், தமிழ் சமுதாயத்திற்கு உழைக்கிறேன், பாடுபடுகிறேன் என்றும் நாடகம் நடத்திக்கொண்டு உள்ளீர்கள்...பேசாமல் உங்கள் பதவியையும், சொத்தையும் மட்டுமே பார்த்துகொண்டு போங்கள்...

- - முகநூல்

553235_423583507728241_1238500106_n.jpg

இந்திய காங்கிரெஸ் அரசு இலங்கைக்கு அளித்து வரும் தொடர் ஆதரவை நிறுத்தக்கோரியும், இலங்கை ஓர் இனப்படுகொலை செய்த நாடு என்று அறிவித்து , ஈழத்தில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தொடர் முழக்க போராட்டத்தை சென்னை , அருகே உள்ள பல்லாவரத்தில் வருகிற மார்ச் 03 ஞாயற்று கிழமை காலை ஒன்பது (9) மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகினைப்பாளரான செந்தமிழ் சீமான் .

 

 

அதற்க்கான வேலைகளை கட்சிப் போராளிகள் சிலர் இரவில் சுவரொட்டி மற்றும் பதாகைகளை வீதி ஓரம் கட்டினர் . சமிபத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வைத்த பதாகைகள் வீதி ஓரம் அடைத்து கிடக்கின்றன .அதற்கிடையே இவர்கள் தங்களது பதாகைகளை வைத்து கட்டியவண்ணம் முன்னோக்கி சென்று வண்ணம் இருந்துள்ளனர் .

 

பல பதாகைகளை வைத்த பிறகு ஓர் கண்ணோட்டமாக திரும்பி பார்க்க சென்றுள்ளனர் நாம் தமிழர் கட்சி போராளிகள் . இவர்கள் பதாகைகளை முன்னே வைத்து வைத்து செல்ல ..பின்னே வந்த சில மாமாக்கள் அனைத்து ஈழ படங்களையும் , பாலச்சந்திரனின் பதாகைகளையும் கிழித்தெறிந்து விட்டு , கட்டிய கொம்புகளை உடைத்தேரிந்துருகின்றனர் . அதன் அருகிலே இருந்த எந்த ஓர் ஜெயலலிதா படமும் , ஸ்டாலின் படத்திலும் அந்த காவல் துறையினரின் மூச்சு காற்று கூட படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

 

இன்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இதுவரை தேர்தலை சந்தித்தது இல்லை , தற்போதே தொடங்கிய கட்சியும் கூட , பொருளாதார அடிப்படியில் இந்த கட்சி ஆரமப் நிலையில் கூட இல்லை . அனைத்து கூட்டங்களும் , போராட்டங்களும் பொது மக்களிடம் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடம் பிச்சை எடுத்துதான் தான் நடத்தி வருகிறது நாம் தமிழர் கட்சி என்பது அரசியல் துறையில் அனைவரும் அறிந்த உண்மை .

இத்தறுவாயில் சாதி மதம் கடந்து , அரசியல் கட்சிகள் வேற்றுமை பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்தது போராடவேண்டிய கட்டாயம் இருக்கும் தருவாயில் , சென்னை காவல் துறை அதிகாரிகளில் சிலர் செய்த இந்த விடயம் அனைவரையும் அதிர்ச்சியிலும் , கோபத்தையும் ஆளாக்கி உள்ளது .

 

உலகத்திலே ஈழ இனப்படுகொலை படங்களை பார்க்கும் ஓர் மனிதன் ,அவன் தமிழனோ அல்லது வேற்று ஒருவனோ அதை பார்த்த வண்ணமே கண்ணீர் வடிப்பான் .ஏன் சில திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கூட ஓர் நடிப்பாக கண்ணீர் வடித்திருப்பார் . எப்படி தான் எந்த படங்களை பார்த்த அந்த காவல் துறை அதிகாரிக்கு மனம் வந்து சிதைத்தார் என்றே தெரியவில்லை. அத்தகைய மனம் கொண்ட காவல் அதிகாரியை நாம் கண்டித்தே ஆகவேண்டும், நாம் ஓர் தமிழன் என்ற உணர்விருந்தால் .

குறிப்பு : இதில் மிகவும் ஆத்திரமடைந்த அப்பகுதி நாம் தமிழர் மண்டல தலைவர் அந்த காவல் துறை வண்டியை தேடிச்சென்று , சரமாரியாக திட்டியுள்ளார் , இதனின் சீற்றம் வருகிற நாம் தமிழ் கூட்டத்தில் தெரியும் என்று எச்செரிக்கையும் செய்து திரும்பி இருக்கிறார் .

 

சில காவல் அதிகாரிகள் செய்த இந்த கொடுஞ்ச் செயல் ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினரையும் கலங்க படுத்திவிட்டது . இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை செய்த அந்த காவல் துறை அதிகாரிக்கு நம் கண்டனத்தை தெரிவிப்போம் .

 

- முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.