Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்! செருக்கை மற!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்! செருக்கை மற!!

செய்! அல்லாவிடின் செத்துமடி!!

இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக்

களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு!

தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை.

தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான்

ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா?

மக்கள் வாழ்வும். மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்து

பிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம்

ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது.

புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்?

எங்களை நோக்கி இக்கேள்வி புூதாகரமாக

எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா?

போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் புூமியின்

வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும்

கோரப்பிடிக்குள் தந்திரமாகத் திணித்து, தங்கள் காலடியில் போட்டு

மிதிக்கலாம் என்று கனவு காணுகிறது.

எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் பொருளாதாரம் தடையாக இருக்கிறதென

உலகமெல்லாம் கையேந்தி, தம் தரப்பை வலுப்படுத்தி,

இன்னும் எம்மை நலியவைத்து நாடாள நினைக்கிறது.

போர் உபகரணங்களாலும், இராணுவ அணிகளாலும்

கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் பலப்படுத்தப்பட்டுக்

கொண்டிருக்கும் வேளைகளை அறிந்திருந்தும் சுதந்திரகாலம்

பற்றிய சுகமான கனவுகளோடு புலம்பெயர் நாடுகளில்

அமுக்கவேளைகளை அமைதி நாட்களாக காட்சிப்படுத்திய

மாயவலைக்குள் மயக்கத்தில் கிடந்து, இப்போது இடியோசை கேட்டு

நடுங்கிப் பேதலித்து நாளைநோக்கி நகரும் திராணியற்று

விக்கித்து நிற்பதால் ஏதும் மாறிவிடப்போவதில்லை.

வன்னிப் பெருநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரச கட்டமைப்பு

தமிழீழம் எங்கும் விரிவுபடுத்தி நிலைப்படுத்தக்கூடிய உடல், உள வளங்கள்

தமிழீழ மக்களிடம் நிறையவே இருக்கிறது.

ஆனால் பொருளாதார வளம் அவர்களை ஏளனப்படுத்தி நகைக்கிறது.

உதவுவதற்கு யாருமில்லாத இத்தகைய காலப்பகுதியில்

புலம் பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக

நான் என்றும், எனது ராசாங்கம் என்றும் தங்களுக்காக

தனியே ஒரு குழு என்ற சிறு வட்டத்திற்குள் தத்தம்

விவேகங்களைத் தொலைத்து விட்டு திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

என்னை முன்நிறுத்தி மதிப்புத் தா! எல்லாம் செய்கிறேன்.

என்பது போன்ற எண்ணங்களும், வாதங்களும் இன்றைய காலகட்டத்தில் வேண்டாதவை.

நான், நீ எவருமே பெரிதல்ல,

நாம் என்ற எங்கள் இணைப்புத்தான் பெரியது.

தாயகத்தை மனதில் புூசிக்கிற எவருமே தனக்கு என்ற குறுகிய வட்டத்திற்குள் நிற்கமாட்டார்கள்.

பெற்றவள் புண்பட்டு இற்றுக்கொண்டிருக்க

உற்றிருக்கும் பிள்ளைகட்குள் பேதங்கள் எழாது.

பாசத்துடிப்பு கைகளை இணைத்து

அன்னையைக் காக்கும் வலிமையாய் மாறும்.

செய்! பின்னர் செய்தேன், செய்தேனென்று செருக்கடையாதே!

இன்னும் நீ செய்ய வேண்டியவை அளப்பெரியன.

தேசத்தின் தேவை விசாலமானது. ஒருவரால், இருவரால் புூர்த்தி

செய்யக்கூடியதல்ல. எல்லோரும் இணைந்து நிரவவேண்டிய பள்ளம்.

எனக்கும், உனக்கும் போட்டி என்பதை இன்றோடு விட்டுவிடுவோம்.

நான் உனக்கும், நீ எனக்கும் தோழர்கள் ஆவோம். இறுக இணைக்கும்

எங்கள் கரங்களால் தேசத்திற்கு வலிமை சேர்ப்போம்.

செய்! செருக்கை மற!!

இதை உனக்கும் எனக்கும் உரிய வேதமாக மாற்றுவோம்!

நில்!

நீயும், நானும் குறுகிய வட்டத்திற்குள் மறுபடியுமா?

புரியவில்லையா?

செய்! செருக்கை மற!

இது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் வேதமாகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளே!

உங்கள் கருத்துக்களையும் இங்கே தாருங்கள்.

வல்வை சகாறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பான்மையான சாதாரண மக்களின் தாயக உணர்வு உயர்வானது. ஆனால் இங்கே முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் ஒருசிலர் இதயசுத்தியுடன் நடப்பதுபோல் நடிக்கிறார்கள் என்று அண்மையில் ஒருவர் எனக்குக் கூறினார். இவர்களை யார் மாற்றுவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார்! லண்டனைப் பொறுத்தவரையில் கனக்க கவலைப் பட வேண்டாம்!! இந்தப் பூசாரிகள் மாறியே தீர வேண்டும்! இல்லையேல் மாற்றுவோம்!!!

இந்தப் பூசாரிகள் இங்கு செய்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!!! பல காலங்களாக தேசியத்துக்கு ஒன்றுமே செய்யாமல், ஆட்களை ஆட்கள் மாறிக் குழி பறித்தும், காலை வாரியும், ஒதுக்கியும், ... எல்லாம் செய்தார்கள். இனியும் இவற்றிற்கு இடம் கொடுக்க வேண்டுமா???????? நிச்சயம் முடிபு வேண்டும்!!!

SEDOT பிரித்தானியா கிளையும் அவசர நிதியுதவி கேட்டிருக்கிறது. தற்போதை நிலமைகளால் இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவி தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமது சொந்த முயற்சியில்

http://nitharsanam.com/?art=18485

ஆனாலும் நம்மவரின்...பதவியைத் தா செய்கிறேன் ..எண்ட கொள்கையை மாத்த முடியாது பாருங்கோ...

நான் நிறைய அனுபவத்தில் பார்த்தவை......!

அதைவிட அட்வைஸ் அடுத்தவனுக்கு தன்னல்ல எண்டு தானே கனபேர் நடக்கினம்..

கருத்தைச் சொல்லச் சொல்லுவீங்க...

நாங்க ஏதேனும் சூடாக் கேள்வி கேட்டா......

உங்களுகளுக்கு என்று கொஞ்சப்பேர் யாழிற்குள் உலவுகினம்

போட்டு காய் காயென்று காய்வினம்....

உண்மையை எடுத்துச் சொன்னா ஏற்கமாட்டினம்...

கனடாத்தமிழரில எனக்குத் தனியான காழ்ப்புணர்ச்சி என்று

ஊளையிடுவினம் அட போங்க....

இலட்சக் கணக்கில தமிழர் இருந்தும்.....

தடை போட்டவையை நிற்க வைச்சுக் கேள்வி கேட்கமுடியேல்லையே...

நிற்க வைத்துக் கேள்வி கேட்கும் ஆதிவாசி

போட்டி பொறாமையைக் கைவிட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக

நமது தேசத்தை வலிமையானது ஆக்கலாம். ஆனால் என்னதான் செய்தாலும் பதவிக்காகத்

தான் செய்கிறார்களே. அந்த வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டம் என்று நிக்கிறார்களே?

அவர்களை என்ன செய்வது?????

கருத்தைச் சொல்லச் சொல்லுவீங்க...நாங்க ஏதேனும் சூடாக் கேள்வி கேட்டா......

உங்களுகளுக்கு என்று கொஞ்சப்பேர் யாழிற்குள் உலவுகினம்

போட்டு காய் காயென்று காய்வினம்....உண்மையை எடுத்துச் சொன்னா ஏற்கமாட்டினம்...

கனடாத்தமிழரில எனக்குத் தனியான காழ்ப்புணர்ச்சி என்று

ஊளையிடுவினம் அட போங்க....இலட்சக் கணக்கில தமிழர் இருந்தும்.....தடை போட்டவையை நிற்க வைச்சுக் கேள்வி கேட்கமுடியேல்லையே...நிற்க வைத்துக் கேள்வி கேட்கும் ஆதிவாசி

ஆதிவாசி உங்கள் கோவங்கள் நியாயமானதாக இருந்தாலும் நீங்கள் கனடாக்காரரைப் பற்றிச் சொன்ன கருத்து சற்று முரணாக இருந்ததே அதுதான் எல்லோரும் உங்களிடம் சற்று கடுமையாக பதில் சொல்லி விட்டார்கள் போல. :cry: ஏன் நீங்கள் கருத்துச் சொல்லும் போது புலம் பெயர்ந்தோர் என்று சொல்லாமல் கனடாக்காரர் என்று மட்டும் விழித்துச் சொல்லிறியள்.??? :roll: :?

போட்டி, பொறாமை வளர்வதற்கு உறுதுணையா நிற்கிறது ஆருங்கோ?

அவனவனை பெரீய்ய ஆட்களாத் தலையில தூக்கிக் கொண்டாடுறது ஆருங்கோ?

ஒவ்வொருத்தனையும் நிற்க வச்சுக் கேள்வி கேட்காம முதுகு

சொரிகிறது ஆருங்கோ...?

குற்றப் பத்திரிகையுடன் ஆதிவாசி

ஆதிவாசி உங்கள் கோவங்கள் நியாயமானதாக இருந்தாலும் நீங்கள் கனடாக்காரரைப் பற்றிச் சொன்ன கருத்து சற்று முரணாக இருந்ததே அதுதான் எல்லோரும் உங்களிடம் சற்று கடுமையாக பதில் சொல்லி விட்டார்கள் போல. :cry: ஏன் நீங்கள் கருத்துச் சொல்லும் போது புலம் பெயர்ந்தோர் என்று சொல்லாமல் கனடாக்காரர் என்று மட்டும் விழித்துச் சொல்லிறியள்.??? :roll: :?

இரசிகையக்கா ஆதிவாசியும் கனடாதானுங்கோ....

ஊமைக்கோட்டானுகளா எல்லாரும் பேசப்பயப்பிடுறாங்களுங்கோ...

மக்கள் சக்தியை காட்டத்தெரியாமல்.....

ஆளாளுக்கு நமக்கேன்?.........(ரொம்பச் சிந்திக்கிறாங்கோ)

சீ.......

சிதறுதேங்காயைப் போல......

:evil: :evil: :evil:

ஆதிவாசி

போட்டி, பொறாமை வளர்வதற்கு உறுதுணையா நிற்கிறது ஆருங்கோ?

அவனவனை பெரீய்ய ஆட்களாத் தலையில தூக்கிக் கொண்டாடுறது ஆருங்கோ?

ஒவ்வொருத்தனையும் நிற்க வச்சுக் கேள்வி கேட்காம முதுகு

சொரிகிறது ஆருங்கோ...?குற்றப் பத்திரிகையுடன் ஆதிவாசி

இப்படியே குற்றப் பத்திரைகை படிப்பதில் நின்றால் உருப்பட்ட மாதிரித்தான்.ஆதிவாசி இந்தப் பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம் என்று சிந்தியுங்கோ. நானும் நீங்களும் மட்டும் சிந்திச்சு பிரியோசனம் இல்லை., எல்லாரும் சிந்திக்க வேண்டும். :evil:

இரசிகையக்கா ஆதிவாசியும் கனடாதானுங்கோ....

ஊமைக்கோட்டானுகளா எல்லாரும் பேசப்பயப்பிடுறாங்களுங்கோ...

மக்கள் சக்தியை காட்டத்தெரியாமல்.....

ஆளாளுக்கு நமக்கேன்?.........(ரொம்பச் சிந்திக்கிறாங்கோ)

சீ.......

சிதறுதேங்காயைப் போல......

:evil: :evil: :evil:

ஆதிவாசி

ஓ சரி தம்பி/தங்கை :roll:

பேசப்பயப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது ஆதிவாசி. பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த தடைச்சட்டம் போட்டால் பிறகு கொஞ்சம் குழப்பம்தான் இருந்தாலும் தங்கள் பணியைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். :!:

போட்டி பொறாமையைக் கைவிட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக

நமது தேசத்தை வலிமையானது ஆக்கலாம். ஆனால் என்னதான் செய்தாலும் பதவிக்காகத்

தான் செய்கிறார்களே. அந்த வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டம் என்று நிக்கிறார்களே?

அவர்களை என்ன செய்வது?????

நீங்கள் சொல்வது மிகச்சரி ரசிகை...

ஓ சரி தம்பி/தங்கை :roll:

பேசப்பயப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது ஆதிவாசி. பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த தடைச்சட்டம் போட்டால் பிறகு கொஞ்சம் குழப்பம்தான் இருந்தாலும் தங்கள் பணியைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். :!:

என்ன செய்யிறாங்க?.......

களியாட்ட விழாக்கள், இன்னிசை இரவுகள், சினிமாக்கலக்கல்கள்

தேவைதானா?

இன்று ஈழத்தமிழினம் எத்தகைய சூழலில் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது?...

கனடாவில் தடைச்சட்டம் என்று சொல்லும்போது அச்சட்டத்தை

நியாயமற்றது என்று நிரூபிக்க இங்குள்ள 3 இலட்சம் தமிழ்மக்களால் முடியவில்லையா?

அல்லது அவரவர் தங்கள் வாழ்வை மட்டுமே சிந்தித்து தாயக உறவுகளின்

துயர்களை தங்களுக்குச் சாதகமாக்கிக் குளிர் காய்கிறார்களா?

தாயகத்தின் வலியில் தம்வாழ்வை வளர்த்தவர்கள் (உணர்வுள்ள

மக்கள் மன்னிக்க) தமிழினத்தின் அவலம் சொல்ல மறப்பது ஏன்?

உணர்வுூட்ட, எழுச்சிப்படுத்த பிரத்தியேகமாக ஊடகங்கள் இயங்க

வேண்டுமா?

உயிர்வதையில் தாய் துடித்துக் கிடக்கப் பிள்ளைகளுக்கு

'உதவு உதவு" என்று உடுக்கடித்துத்தான் உசுப்பவேணுமோ?

தாய் வேறு.... தாயகம் வேறு...... என்று

உயர்திணை, அஃறிணைப்படுத்தி பார்க்கிற நிலைதானே..

கனடாவில் மலிவா இருக்கிறது...

அம்மா வாயில் புூட்டும், சகோதரன் கையில் விலங்கும்

பார்த்தும் சும்மா நிற்கிற அழகு

ஆகா புலம்பெயர் பிள்ளைக்கு அழகோ அழகு.... சே அழுக்கு...

இந்த இலட்சணத்தில இவர்கள் தமிழர்....

சுரணை கெட்டதுகள்...

இதற்குள் இன்னுமொன்று சொல்ல வேணும்......

இங்கு நிறையப் பெண்கள் சின்னத்திரையைப் பார்த்து

கவலைப்படுகினமாம்..... அதில ஹீரோயின் எவ்வளவு கஸ்ரப்படுகிறா....

போய் தாயகத்தைப் பாருங்கோ இராசாத்திமாரே!

எத்தனை தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தாலே குடும்பத்

தலைவர்களை இழந்து தத்தம் குடும்பங்களைச் சுமக்க நாட்கூலிகளா

வேலை செய்து சீவனம் நடத்துகிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டம், சுமைகள்,

வரண்டுபோன மகிழ்ச்சி அதைக் கேட்டு எப்போதாவது அழுதிருக்கிறீர்களா?

இன்னும் முடிக்கேல்லை களைச்சுப்போனன்..

மீண்டும் வருவேன்

ஆதிவாசி

ஆதிவாசி களைச்சிட்டாராம். சுடசுட ஒரு Coffee கொடுங்கோ. மீண்டும் தொடரட்டும் :evil:

ஆதிவாசி களைச்சிட்டாராம். சுடசுட ஒரு Coffee கொடுங்கோ. மீண்டும் தொடரட்டும் :evil:

என்ன லொள்ளா?

ஓடிப் போ... வெண்ணிலா!

இப்ப இரசிக்கிற மூட்டில் ஆதிவாசி இல்லை...

கோபத்தில்...... கனலுகிற வேளையில.......

முடிஞ்சா..... தண்மையை விட்டு தணலை ஏந்து பெண்ணே!

கனலும் ஆதிவாசி

ம்ம் அந்த மூன்று லட்சம் தமிழர்களில் நீரும் ஓரு சுரணை கெட்டவர் என்பதை மறந்து விடாதையும்.

அது சரி ஏன் வல்வைசாகறா தொடங்கும் கவிதையில் மட்டும் வந்து உமது புலம்பலை தொடர்கின்றீர். இப்படி புலம்பி புலம்பி தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

இனியென்றாலும் மற்றவர்களை பார்த்து புலம்பமால் ஒன்று சேர்ந்து உரும்படியான ஒரு விசயத்தை செய்ய முயற்சி செய்யும்.

நீர் இங்கு அதுவும் யாழ் களத்தில் வந்து புலம்புவது அர்த்தமற்றது.

யாழ்களத்திற்கு வருபவர்கள் கொஞ்சமேனும் தாயக உணர்வுடன் இருப்பவர்கள் தான் வருகின்றார்கள்.

உமது புலம்பலை கனடாவில் மலிந்து கிடக்கும் இலவச பத்திரிக்கையிலோ அல்லது வானொலியிலோ

புலம்பினால் அதைக்கேட்டு என்றாலும் தாயக உணர்வு அற்று கிடக்கும் ஒருவர் என்றாலும் திருந்துவதற்கு வாய்ப்புண்டு.

உமக்கு என்ன? கனடா காட்டில் இருக்கின்றீர். ஆனால் நாம் இன்று வேலைக்கு போனால் தான் நாளைக்கு இருக்க

கூட சிறு இடம் இருக்கும். அத்தகைய துன்பங்களில் இருந்து கொண்டும் எம் உறவுகளுக்காக எம்மால் முடிந்த

சிறு உதவிகளை என்றாலும் செய்கின்றோம்.

ஆமா இந்த கனடா நாட்டு தடையால் நம்ம தலைவர் என்ன சோர்ந்த போய்விட்டார்? எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகத்தெறிய நம் தலைவருக்கு திறமையுண்டு.

ஆ என்றாவுடன் சினிமாவை உதராணம் கொண்டு வந்து விடுவீர்கள். உம்மை சுற்றி இருப்பவர்களை பார்த்து சும்மா சும்மா புலம்புவதை விட்டு கொஞ்சம் வெளியில் வந்தும் பாரும். நீர் எழுதும் கருத்துக்களை பார்க்கவே நீர் எப்படியான மனநிலையில் இருக்கின்றீர் என்று புரியுது. முதலில் ஒருவரை மிருக்கங்கள் மாதிரி உச்சரிப்பதை நிறுத்தும். மனிதரை மனிதராக பார்த்து கதையும். உமது புலம்பலை கேட்டு யாருமே வீறு கொண்டு எழும்ப போவதில்லை. எமக்குள் இருக்கும் தாயக உணர்வை கேவலப்படுத்தமால் உமது வேலையை நீர் பாரும் :twisted:

என்ன லொள்ளா?

ஓடிப் போ... வெண்ணிலா!

இப்ப இரசிக்கிற மூட்டில் ஆதிவாசி இல்லை...

கோபத்தில்...... கனலுகிற வேளையில.......

முடிஞ்சா..... தண்மையை விட்டு தணலை ஏந்து பெண்ணே!

கனலும் ஆதிவாசி

உமது தணலால் யாருக்குமே எந்த ஆபத்தும் இல்லை. அது உம்மை அழிக்கமால் பார்த்த கொள்ளும். :evil:

என்னைவிட எல்லாரும் நன்றாக புலம்புகின்றீர்கள்!!!

உமது தணலால் யாருக்குமே எந்த ஆபத்தும் இல்லை. அது உம்மை அழிக்கமால் பார்த்த கொள்ளும்.

வாங்கம்மா எங்கேடா உங்களைக் காணேல்லை என்று பார்த்தன்

அதென்ன... கனடாவில் இருக்கும் உண்ர்ச்சியில்லா மாந்தரையும்

அவர்களின் செயற்பாடுகளையும் எடுத்துச் சுட்டிக்காட்ட வந்தா....

நந்திமாதிரி வந்து குதிக்கிறீங்க......

இலவசப் பத்திரிகைகள், சில வானொலிகள் எல்லாத்திற்கும்

வரிசையாப் பாட்டு இருக்கு இராசாத்தி...

அவசரப்பட மாட்டன்..... ஒரே மூச்சில எல்லாத்தையும் போட்டு உடைக்கிறதா உத்தேசம் இல்லை .

முடிஞ்சா...............

ஆதிவாசி

வாங்கம்மா எங்கேடா உங்களைக் காணேல்லை என்று பார்த்தன்

அதென்ன... கனடாவில் இருக்கும் உண்ர்ச்சியில்லா மாந்தரையும்

அவர்களின் செயற்பாடுகளையும் எடுத்துச் சுட்டிக்காட்ட வந்தா....

நந்திமாதிரி வந்து குதிக்கிறீங்க......

இலவசப் பத்திரிகைகள், சில வானொலிகள் எல்லாத்திற்கும்

வரிசையாப் பாட்டு இருக்கு இராசாத்தி...

அவசரப்பட மாட்டன்..... ஒரே மூச்சில எல்லாத்தையும் போட்டு உடைக்கிறதா உத்தேசம் இல்லை .

முடிஞ்சா...............

ஆதிவாசி

ஆதிவாசி அவர்களே! நீங்கள் ஒருவரை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. கனடாவில் இருக்கும் அத்தனை தமிழ் மக்களும் சூரணை கெட்டவர்கள் என்றா தோரணையில் தான் உங்கள் முதல் கருத்து இருந்தது.

இலவசப்பத்திரிக்கைள் சில வானொலிகள் எல்லோரையும் வைத்து பாட்டு என்ன படக்கதையே எழுதுங்கள். நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் கனடாவில் இருக்கின்றா எல்லா தழிழர்களையும் குற்றம் சாட்டதீர்கள். :twisted:

றியல் ரமா வா இது :roll:

என்னாச்சு? - நீங்க இவ்ளோ கோவமா பேசி பார்ததே இல்ல - அதுதான்! 8)

றியல் ரமா வா இது :roll:

என்னாச்சு? - நீங்க இவ்ளோ கோவமா பேசி பார்ததே இல்ல - அதுதான்! 8)

ம்ம் சிலரின் வீண் வம்புக்காக வைக்கப்படும் கருத்துக்கள் மற்றவர்களை எவ்வாறு மாத்துகின்றது என்று இப்ப தான் புரிகின்றது வர்ணன்.

மற்றும்படி ஒன்றும் இல்லை :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.